வியாழன், 27 ஜூன், 2019

சோடியம் மிகைபாடு -ஹைப்பர் நேற்றிமியா

உடலில் சோடியம் மிகைப்பாடு


நம் உடலின் சோடியம் அளவு சாதாரணமாக 130mEq  முதல் 140 mEq வரை இருக்கலாம் இந்த அளவீட்டிற்கு மேல் இருந்தால் அது சோடியம் மிகைப்பாடு அல்லது Hypernatremia என்னும் நோய்க்குறி ஆகும் 
இதுபற்றி விபரமாக நாம் பார்க்கலாம் 
நம் உடலின் ஒவ்வொரு பாகமும் இயங்குவதற்கோ அல்லது இயக்குவதற்கோ சோடியம் இன்றியமையாதது என்றுநாம் இதற்கு முந்திய  பதிவுகளில்  பார்த்தோம்.மீண்டும் அதை நாம் விவரிக்க போவது இல்லை 
சோடியம் மிகைப்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றி மட்டுமே பார்க்கலாம் 

காரணிகள் :-

1.இன்ட்ரா க்ரேனியல்  ப்ரெஷர் எனப்படும் கொடூர தலைவலி  அல்லது உடல் நீர் கட்டுகள் அல்லது வீக்கங்கள் மற்றும் கிளாக்கோமா என்ற கண் அழுத்த நோய்  இவற்றிற்காக பயனாகும் சில வகை சிறுநீர் இளக்கிகள் (OSMOTIC DIURETICS )அதாவது இந்த வகை சிறுநீர் இளக்கிகள்   சிறுநீரில் அதிக அளவு நைட்ரோஜன் கழிவுகள் மற்றும் சர்க்கரையை  நீருடன் வெளியேற்றி சோடியம்  போன்ற உப்புக்களை மீண்டும் இரத்தத்திலேயே சேர்த்துவிடும் இதனால் இரத்தத்தில் சோடிய அளவு கூடிவிடும் (உம்)Mannitol & Isosorbide 
2.வீரிய ஸ்டெராய்டு மருந்துகள் (Male Sex Hormones,Anabolic Steroids)
3.கருத்தடை மருந்துகள் (Female Sexhormones and Progestins) 
4.அட்ரினல் இயக்கு நீர் ஸ்டெராய்டு (Adreno Cortico Tropic Hormone)
5.Glucocorticoids இந்த வகையில் ஏராளமான ஸ்டெராய்டுகள் இருக்கின்றன 
ஆஸ்துமாவிற்காக மூக்கிலோ அல்லது வாயிலோ உறியப்படும் சில வகை ஸ்பிரேக்களில் பயனாகும் Fluticasone,Beclomethasone,Budesonide ஆகியவையும் வீக்கம் தோல் சிவத்தல் அரிப்பு போன்றவற்றிக்கு மாத்திரையாகவோ அல்லது களிம்பு மற்றும் க்ரீம்களாகவோ பயன்படும் Betamethasone,Dexamethasone Triamcinolone,Prednisolone Methylprednisolone போன்றவையும் இயற்கையில்  சுரக்கும் Cortisol,Hydrocortisone ஆகியவையும் இவ்வகையை சேர்ந்தவையாகும் 
நினைவிருக்கட்டும் ஆஸ்த்மா மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு glucocorticoids தவிர்க்க முடியாதவை ஆகும்.
 மேல் கண்ட அனைத்து மருந்துகளும் ரத்தத்தில் சோடியம் அளவை அதிகரிக்க செய்யும் 
6.வெற்று நீரிழிவு நோய் (DIABETES INSIPIDUS )இந்த நோய் ரத்தத்திலும் உடல் நீரிலும் சோடியம் அளவை அதிகரிக்க செய்வதுடன் மிக ஆபத்தானதும் கூட இதுபற்றி நாம் பின்னர் ஒரு பதிவில் தனியாக காணலாம்.

சோடியம்  அதிகம் உள்ள உணவுகள் :-

1.இறால் மீன்கள் (Shrimps)
2.ரெடிமேட் புட்டிங்குகள் (Instant Puddings)
3.காட்டேஜ் சீஸ் (Cottage Cheese)
4.சலாடுகள் (Salads)
5.பீஸ்சா (Pizzas)
6.உப்பு (Table Salt)
மேல் கண்ட உணவுகளை நீங்கள் சோடியம் மிகை நோய் உள்ளவராக இருந்தால் தவிர்த்து கொள்வது நல்லது 

அறிகுறிகள் :-

1.நீங்கள் வெற்று நீரிழிவு நோயாளியாக இருந்தால் முக்கியமாக சோம்பல் (Lethargy),மற்றும் மனக்குழப்பம் இவை ஏற்படும் காரணம் இவை மூளையில் ஒரு பகுதி சிதைவதால் ஏற்படுவதாகும்.இது பற்றி நாம் விபரமாக அடுத்து வரும் தனிப்பதிவில் வெற்று நீரிழிவு என்ற தலைப்பில் பாப்போம்.
2.உப்பு ஆர்வம்,அதாவது அதிக உப்பு சாப்பிடுவதில் நாட்டம் இம்மாதிரி தகிப்பு ஏற்பட்டாலே நம் உடம்பில் சோடியம் அளவு மீறி இருக்கிறது என்று அர்த்தம்.
3.மிகுந்த தாகம் எவ்வளவு நீர் அருந்தினாலும் திருப்தி இருக்காது 
4.அடிக்கடி நீர் பிரிதல் 
5.வீக்கம் 
6.தலைவலிகள் 
7.பசித்தாலும் உணவு உள்ளே இறங்காது கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும் என்றாகிவிடும் 

பரிசோதனைகள் :-

1.இரத்தம் 
2.சிறுநீர் 

மருத்துவம் :-

1.குறுகிய கால நோய்க்கு (Acute cases )5% க்ளுகோஸ் கரைசலை சிரைக்குழாயில் ட்ரிப் மூலம் மெதுவாக செலுத்துவது.கவனம் வேகமாக செலுத்தினால் மூளை பாதிக்கப்படும் 
2.நாட்பட்ட நோய்க்கு 0.045% சோடியம் குளோரைடை சிரை குழாயில் செலுத்துவது 
மேல் கண்ட சிகிச்சைகளை டாக்டரின் மேற்பார்வையில் ஆஸ்பத்திரியில் எடுத்துக்கொள்ளவேண்டும் 







கருத்துகள் இல்லை:

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...