ஞாயிறு, 23 ஜூன், 2019

சோடியம் குறைபாடு -ஹைபோ நேற்றெமியா

சோடியம் குறைபாடு -ஒரு பார்வை



நம் உடம்பில் ரத்தத்திலும் செல்  மற்றும் செல் இடை திரவங்களிலும் நம் உடல் இயக்கத்திற்கான அநேக தாது உப்புகள் சேர்ந்து இருக்கின்றன இவை பெரும்பாலும் அயனிகளாகவே இருக்கின்றன.அவற்றில் ஒன்றுதான் சோடியம் அயனி.
சோடியம் மிக மெலிதான எளிதில் துண்டுபடக்கூடிய ஒரு உலோகமாகும் இது மிக வீரியமிக்க காரவகை வேதி கூட்டு பொருட்களை உண்டாக வல்லது (Basic Metal )
உதாரணம் சோடியம் ஹைட்ராக்ஸைடு (NaOH)இது ஒரு வீரியமிக்க காரமாகும் 
அதே சமயம் நம் உடம்பில் சோடியம் பெரும்பாலும் 
சோடியம் குளோரைடு மற்றும் சோடியம் பைகார்போனேட் உப்புக்களாகவுமே இருக்கிறது 
இந்த உப்புகள் கூட்டு பொருட்களாக இருந்தாலும் அவை எலெக்ட்ரானிக் கூட்டுக்களாக இருப்பதால் அந்த கூட்டு மிகவும் பலகீனமானதே எனவே அவை நேரத்திற்கு தகுந்தாற்போல் இடத்திற்கு தகுந்த மாதிரி சில சமயம் கூட்டு பொருட்களாகவும் சில சமயம் தனித்தனி அயனிகளாகவும் இருக்கும் 
இதை கீழ்கண்டவாறு வேதி சமன்பாடுகள் மூலம் விளங்கலாம் 
Na+  + Cl- >reversible< NaCl (sodium chloride)
Na+  + HCO3->reversible< NaHCO3(sod.bicarbonate)
 உடம்பின் மொத்த சோடியம் அளவு 130mEq -140mEq வரை  இருக்கலாம்.இந்த வரையறைக்கு கீழே போனால் அதாவது 120mEq க்கு கீழே இறங்கினால் சோடியம் குறைபாடு அதாவது Hyponatremia என்ற நிலை உண்டாகும்.
சோடியம் நம் உடம்பில் பெரும்பாலும் செல் இடை திரவத்தில்தான் (intercellular fluid) மிகுந்து இருக்கும் 
சோடியம் நம் உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதது 
நம் உடலின் ஒருபகுதியை இயக்கவேண்டும் என்றால் உதாரணமாக நாம் கைகளை அசைக்க வேண்டும் என்றால் அந்த பகுதியிலுள்ள நரம்பு மண்டலம்  நிலைக்கு வரவேண்டும் இந்த நிலைக்கு action potential என்பர் இந்த நிலைக்கு வர சோடியம் அயனிகள் நரம்பு செல்களுக்குள் பாயும் அதே அளவு பொட்டாசியும் வெளியேறும் இருபுறமும் இருக்கும் குளோரைடு அயனிகள் அவற்றை ஈரத்து கொள்ளும்.இதை கீழ்கண்ட வரைவு மூலம் விளங்கலாம் 
Note that sodium enters the intracellular and depolarize the electrical shift to cause an action potential for excitation.
சோடியம் நம் உடல் அசைவுகளுக்கு மிகவும் அவசியமாதலால் அதன் குறைபாடு கீழ்கண்ட விளைவுகளை உண்டாக்கும் :-

அறிகுறிகள் :-

1.களைப்பு 
2.குமட்டல் ,தலை சுற்றல் 
3.வாந்தி 
4.தலைவலி 
5.எரிச்சல் மனா உளைச்சல் 
6.தசை வலி வீக்கம் 
7.வலிப்பு மற்றும் கோமா நிலை 

காரணிகள் :-

கீழ்கண்ட காரணிகளை வகைப்படுத்தலாம் 
1.சிறுநீர் இளக்கிகள் (Diuretics,like thiazide மற்றும் loop diuretics )
2.மனஉளைச்சல் மருந்துகள் (Anti Depressants )
3.வலி நிவாரணிகள் 
4.CHF எனப்படும் இதய செயற்பாடு தோல்வியடைதல் 
5.கல்லீரல் செயல் குறைபாடு 
6.SHAH (SYNDROME OF HIGH SECRETION OF ANTI DIURETIC HORMONE )எனப்படும் உயர் சுரப்பு ஆன்டி டையூரெடிக் ஹார்மோன் இது சிறுநீரகம் அதிக நீர்ச்சத்தை உடலுக்குள் உறிஞ்சி இழுத்துவிட்டு உடல் சோடியம் அளவை நீர்க்க செய்துவிடும் 
7.நாட்பட்ட வயிற்றுப்போக்கு வாந்தி மற்றும் அதிக வியர்வை வெளியேற்றம் ஆகிவையும் உடல் சோடியம் அதிகாகமாக இழப்பதற்கு காரணமாகும் 
8.அதே நேரம் அளவுமீறி திரவ  குடிப்பதும் உடல் சோடிய சத்தை  நீர்க்க செய்துவிடும் 
9.அட்ரீனல் செயல்பாடு குறைவு (அடிசனின் நோய்)
இந்த நிலையில் அல்டோஸ்ட்டிரான் என்ற ஹோர்மோன் கோளாறினாலும் உடல் சோடியம் நிலை பாதிக்கப்படும் 
10.தைராய்டு குறைபாடு 
11.அதிக அளவு amphetamin போன்ற தூக்கத்தை கெடுக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வது 

Diagnosis (நோய் அறிதல் ):-

1.ரத்த பரிசோதனை 
2.சிறுநீர் பரிசோதனை 

மருத்துவம் :-

1.சிறுநீர் இலக்கிகள் சாப்பிடுபவர்கள் டாக்டரின் ஆலோசனை பெற்று அதன் டோஸ் மாற்றம் சேது கொள்ளலாம் அவர்கள் திரவ உணவு எடுப்பதிலும் டாக்டர் ஆலோசனை பெற்று அளவை குறைத்துக்கொள்ளலாம் 
2.சோடியம் IV ட்ரிப் களை  டாக்டர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம் 
A HALF NORMAL SALINE DRIP (0.45% Sodium chloride)
3.அவசர நிலை இல்லை என்றால் உப்பு நீர் திரவம் எடுத்துக்கொள்ளலாம் 
ஓன்று முக்கியம் சோடியம் அளவை மெது மெதுவாகத்தான் உயர்த்தவேண்டுமே வேண்டுமே தவிர மொத்தமாக ஏற்றினால் அது மூளை மண்டலத்தை பாதிப்படைய செய்துவிடும் 

கேன்சர் மார்க்கர் :-

சோடியம் அளவு குறைபாடு சில சமயம் கீழ்கண்ட புற்று நோய்களின் மார்க்கர் ஆகும் 
1.நுரையீரல் புற்று 
2.கல்லீரல் புற்று 
3.மூளை புற்று 
4.கணைய புற்று 
5.சிறு நீராக புற்று 
6.உணவு குழாய் புற்று 
7.தொண்டை புற்று 
8.ஹாட்கின்  அல்லாத லிம்போமா 


கருத்துகள் இல்லை:

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...