திங்கள், 14 ஜூன், 2021

மனக்கோளாறுகள்-1.வெறித்தனமான பிடிவாத சிந்தனை கோளாறு (OCD)

பிடிவாத சிந்தனை சுழற்சிக் கோளாறு (OCD)

(மறுப்பு: - இந்த தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, இது மருத்துவ சிகிச்சைக்காக அல்ல.)
Fig-1



வீட்டை சரியாகப்பூட்டி இருக்கிறோமா என்று ஒன்றுக்கு பத்து முறை திரும்பத்திரும்ப வந்து பூட்டை இழுத்து பார்ப்பவரா நீங்கள்?
வீட்டை பூட்டி விட்டு புறப்படும் போது திரும்பத்திரும்ப வந்து வீட்டை திறந்து உள்ளே பெட்டியையும் பீரோவையும் சரியாகத்தான் பூட்டி இருக்கிறோமா என்று திருப்பித்திருப்பி செக் செய்பவரா நீங்கள் ?
அளவு மீறி தேவை இல்லாமல் கைகளை கழுவி சுத்தம் செய்பவரா நீங்கள்?
உரையாடலின்போது தேவை இல்லாமல் ஒரே வாசகத்தை திரும்பதிரும்பக்கூறுபவரா நீங்கள்?
தேவையில்லாமல் அளவு மீறி காரியங்களில் ஒழுக்கத்தை பேணுபவரா நீங்கள் ?
அப்படியானால் உங்களுக்கு OCD என்ற இந்த சிந்தனை சுழற்சி நோய் இருக்கலாம். இந்த மனநோய் 
உங்களை வெறுப்புக்கு ஆளாக்கி விடும். விரக்தியின் எல்லைக்கே கொண்டு போய் தோல்வி மனப்பான்மையிலும் தற்கொலை உணர்விலும்  விட்டுவிடும்.
ஒ.சி.டி.யால் பாதிக்கப்பட்ட பலர் தங்கள் செயல்கள் நியாயமற்றவை என்பதை அறிந்திருக்கிறார்கள், ஆனால் ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்ய வேண்டும் என்ற வெறியை அவர்கள் புறக்கணிக்க முயற்சிக்கும்போது, ​​அவர்கள் கட்டாயத்திற்குத் தள்ளும் வரை அவர்களின் கவலை அதிகரிக்கும்.
அதாவது வெறித்தனமான பிடிவாத சிந்தனை கோளாறு என்பது வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டங்களிலும் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் அவற்றினால் நமக்கு ஏற்படும் அனுபங்கள் ஆகியவை  சிறிது சிறிதாக நம் எண்ணங்களில் புகுந்து குழப்பி ஒரு நோயாக உருவெடுக்கும் நிலை ஆகும். இதை மருத்துவ மொழியில் Obsessive-Compulsive Disorder (OCD) என்பர்.
இதை இப்படியும் விளங்கலாம். அதாவது இதில் ஒரு நபர் சில எண்ணங்களை மீண்டும் மீண்டும் ("ஆவேசங்கள்" -obsession) எண்ண தோன்றவோ அல்லது சில நடைமுறைகளை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய அவசியத்தையோ  உணர்கிறார் ("கட்டாயங்கள்"-compulsion). இந்த பிடிவாத எண்ணங்களும் உணர்வுகளும்  அவருக்கு பெரும் துன்பத்தை உருவாக்கும் அல்லது அவரது செய்ய வேண்டிய மிக அவசியமான காரியங்களிலிருந்து அவரை மறக்கடிக்க செய்து அந்த   செயல்பாட்டை புறக்கணிக்க வைத்துவிடும். . 
உதாரணமாக திரும்பத்திரும்ப கைகழுவுதல் பொருட்களை திரும்பத்திரும்ப எண்ணுதல், பெட்டி பூட்டப்பட்டிருக்கிறதா என்று திரும்பத்திரும்ப போய் சரிபார்த்தல் ஆகிய செயல்களில் சில சமயம் அவர் ரயிலை கோட்டை விட்டுவிடுவார். முக்கியமான காரியத்தை மறந்துவிடுவார். அரிதாக இந்த நிலை அவரை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு போய் தற்கொலைக்கு கூட தயாராக்கிவிடும்.
இந்த நோய் பெரியவர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட ஏற்படும்.
சுருக்கமாக  இதில் மக்கள் மீண்டும் மீண்டும், தேவையற்ற எண்ணங்கள், யோசனைகள் அல்லது உணர்வுகள் (ஆவேசங்கள்) கொண்டிருக்கிறார்கள், அவை மீண்டும் மீண்டும் ஏதாவது செய்யத் தூண்டுகின்றன (நிர்பந்தங்கள்).
தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, அமெரிக்காவில் மட்டும் வயது வந்தோரின் 1% ஐ ஒ.சி.டி பாதிக்கிறது. ஒ.சி.டி பாகுபாடு காட்டாது மற்றும் இனம், பாலினம் அல்லது வயது ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் யாரையும் பாதிக்கலாம். இது ஒரு நபரின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் தாக்கங்களைக் கொண்டுள்ளது மற்றும் அவர்களின் உணர்ச்சி ஆரோக்கியம், கல்வி, தொழில் மற்றும் அவர்களின் சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையையும் கூட பாதிக்கக்கூடும், ஏனெனில் அவர்களின் ஆவேசங்கள் பல மணிநேர வெற்றுச் சடங்கு செயல்களுக்கு வழிவகுக்கும், இதனால் அவர்கள் மற்ற விஷயங்களைச் செய்வதை விட்டும்  தடுக்கப்படுவார்கள்..
வகைகள் :-
1.அழுக்கு மற்றும் அதை கழுவுதல் 
2.தற்செயலான தீங்கு பற்றிய சந்தேகம் & அதை சரிபார்ப்பு
3.சரியான OCD - சமச்சீர்மை, ஏற்பாடு மற்றும் எண்ணுதல்.
4.ஏற்றுக்கொள்ள முடியாத தடை எண்ணங்கள் மற்றும் மன சடங்குகள்.
5.மன மாசுபாடு. 6.பதுக்கல்
7.வதந்திகள்.
8.ஊடுருவும் எண்ணங்கள்
அறிகுறிகள் :
 OCD யின் அறிகுறிகளை கீழ்கண்டவாறும் வகைப்படுத்தலாம்.
- தனது நடத்தைகள் பகுத்தறிவற்றவை  என்பதை ஒருவர் உணர்ந்தாலும், அந்த  நடத்தைகள் அல்லது எண்ணங்களைக் கட்டுப்படுத்த இயலாமை
இத்தகைய நடத்தைகள் மற்றும் எண்ணங்களுக்காக ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணிநேரம் அவர் வீணாக செலவிடுவார் 
-பதட்டத்திலிருந்து குறுகிய கால நிவாரணம் பெற சில சடங்குகளைச் செய்வார்  (விருப்பத்திற்கும் திருப்திக்கும் மாறாக)
மோட்டார் நடுக்கங்கள் (Motor Tics) அல்லது திடீர் மீண்டும் மீண்டும் இயக்கங்கள் (எ.கா.) கண் சிமிட்டுதல், தோள்பட்டை சுருட்டுதல், முகம் சுறுசுறுப்பு, தோள்பட்டை அல்லது தலை குலுக்கல், முனகல், முணுமுணுப்பு.
அறிகுறிகள் காலப்போக்கில் குறையலாம் அல்லது மோசமடையக்கூடும். சில ஒ.சி.டியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கோளாறுகளைத் தூண்டும் பொருள்கள் அல்லது சூழ்நிலைகளிலிருந்து தள்ளி இருக்க  விரும்புகிறார்கள். மற்றவர்கள் தங்களை அமைதியாக வைத்திருக்க மருந்துகள், ஆல்கஹால் அல்லது இரண்டையும் தேர்வு செய்கிறார்கள்
காரணிகள் :-
1. கொடுமையாகவும்,பாரபட்சத்துடன் அநீதமாகவும் நடத்தப்படும் குழந்தைகள், இளைய மற்றும் முதிய தலைமுறையினர்.
3.அடிக்கடி மனஉளைச்சல்கள் மனச்சோர்வுகளுக்கு ஆளாவது.
4.மரபணுக்கோளாறுள்ள ஒரே மாதிரி உருவத்தில் பிறந்த இரட்டையர்கள்.
5.திரும்பத்திரும்ப பயப்படும்படியான சூழ்நிலைக்கு ஆளாக்குதல்.
 ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த டேவிட் எல். பால்ஸ் மற்றும் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையின் மனநல மற்றும் நரம்பியல் வளர்ச்சி மரபணு ஆராய்ச்சி படி ஒ.சி.டி.யால் பாதிக்கப்படுபவர்களின் உடனடி குடும்ப உறுப்பினர்கள் இதே கோளாறு உருவாகும் அபாயம் அதிகம்.
ஒ.சி.டி ஒரு உயிரியல் கோளாறு:-
படம்-2A


ஒ.சி.டி மற்றும் தொடர்புடைய கோளாறுகள் பற்றிய ஆய்வுகள், ஒ.சி.டி மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில்  சேதம் ஏற்படுவதால்தான் உண்டாவதாக கூறுகின்றன. அந்த பகுதி  பாசல் கேங்க்லியா (Basal Ganglia) என்று அழைக்கப்படுகிறது.(படம்-2)
பாசல் கேங்க்லியாவுடன் தொடர்பு கொள்ளும் இரண்டு மூளை கட்டமைப்புகள் ஒ.சி.டி நோயாளிகளுக்கு மிகவும் சுறுசுறுப்பாக உள்ளன. இந்த இரண்டு கட்டமைப்புகளும் ஆர்பிட்டோஃப்ரன்டல் கார்டெக்ஸ் (ORBITOFRONTAL CORTEX-OFC) மற்றும் முன்புற சிங்குலேட் கைரஸ் (ANTERIOR CINGULATE GYRUS-ACG) என அழைக்கப்படுகின்றன. (படம்-2B)
படம்-2B


சிகிச்சைகள்.-
1.அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை:-
பயமற்ற சூழ்நிலையை உருவாக்குவது.
நோயாளியிடம் அன்பாக நம்பிக்கை ஏற்படும்படியாக நடந்துகொள்வது.
அதன் மூலம் அவர் மனதில் ஏற்படும் ஆவேசமான  பயமூட்டும் எண்ணங்களை போக்குவது, இறுதியாக பிடிவாதமான திரும்பத்திரும்ப செயல்படத்தூண்டும் எண்ணங்களை மாற்றுவது. இந்த சிகிச்சை ஒரே நாளில் செய்யக்கூடியது அல்ல. பல நாட்கள் பல மாதங்கள் ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் மருந்து மாத்திரைகளை விட இதுவே மிகவும் சிறந்த சிகிச்சை ஆகும். பின் விளைவுகள் இல்லாதது. டாக்டரின் உதவி தேவை இல்லை.

ஆபத்தான மருந்து மாத்திரை சிகிச்சைகள்.

ஆங்கில சிகிச்சை முறையில் இந்த நிலைக்கு மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் செரட்டோனின் என்ற ஹார்மோன் பற்றாக்குறையே இதற்கு காரணம் என்பர். எனவே சைக்கியாட்ரிஸ்ட்டிடம் இந்த நோய்க்கு சிகிச்சை என்று போனால் SSRI (SEROTONIN SPECIFIC REUPTAKE INHIBITORS) என்ற மனசோர்வு மருந்துகளைத்தந்து நம்மை நிரந்தர நடமாடும் நோயாளிகளாக மாற்றி விடுவர்.
SSRI-மருந்துகளும் அவற்றின் பின்விளைவுகளும் :-
இவை எல்லாமே தொடர்ந்து சாப்பிடப்படும் பொழுது மத்திய நரம்புமண்டலத்தையும் மூளையையும் சிதைக்கின்றன . அதுமட்டுமில்லாமல்  தானியங்கி நரம்பு மண்டலத்தையும்  கீழ்கண்டவாறு பெரும் பாதிப்புகளுக்கு ஆளாக்குகின்றன.
2.ஆல்பா அட்ரீனெர்ஜிக் அழுத்த உயர்வு (புராஸ்டேட் பிரச்சினை உள்ளவர்கள் கவனம்)
3.இதயத்துடிப்பு அதிகரித்தல் 
4.ஒழுங்கற்ற இதயத்துடிப்பு.
SSRI பற்றி விரிவாக தொடர்ந்து அடுத்த பதிவில் தொடர்ந்து காணலாம் 
 அடுத்த பதிவை தொடர்ந்து காண இங்கு ↓க்ளிக் செய்யவும்.                       அடுத்த பதிவு SSRI -   தொடரும்.....
 

வியாழன், 3 ஜூன், 2021

ஆக்சிஜனும் கொரோனாவும் ---இரத்தத்தில் ஆக்சிஜன் குறைதல் அல்லது ஹைப்பாக்சியா

(பொறுப்பு துறப்பு : - இந்த தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, இது மருத்துவ சிகிச்சைக்காக அல்ல.)

ஆக்சிஜனும் ஆரோக்கியமும்-

 ஹேப்பி ஹைப்பாக்சியா 

படம்-1
இரண்டு வகையாக தலைப்புகளை கொடுத்திருந்தாலும் ஆக்சிஜனின் ஒரு பொதுவான புரிதல் உணர்வையும்  மக்களுக்கு புரிய வைக்கவேண்டும் என்பதும் இந்த கட்டுரையின் ஒரு நோக்கம் ஆகும். 
ஆக்சிஜனை தமிழில் பிராண வாயு என்பார்கள். அது இல்லை என்றால் பிராணன் போய்விடும்.
ஒரே ஒரு தடவை ஒட்டகம் போல் தண்ணீர் குடித்த பின் மேலும் நீர் அருந்தாமல் ஒரு சில நாட்கள் வாழ்ந்துவிடலாம். 
ஒரே ஒரு தடவை வயிறு முட்ட தின்றுவிட்டு மேற்கொண்டு 
உணவில்லாமல் ஒரு சில மாதங்கள் கூட பட்டினியோடு வாழ்ந்து விடலாம்.
ஆனால் என்னதான் மூக்கு முட்ட நுரையீரல் நிறைய காற்றுடன் ஆக்சிஜனை இழுத்து விட்டாலும் மறுமுறை இழுத்து விடுவதற்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் ஒரு சில மணித்துளிகள் கூட யாராலும் உயிர்வாழ முடியாது. 
மனிதனுக்கு மட்டுமல்ல பாக்டீரியா பூஞ்சை என்று இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆக்சிஜன் இன்றியமையாதது. ஆனால் வைரஸிற்கு ஆக்சிஜன் தேவையில்லை. ஏனென்றால் அது ஒரு உயிருள்ள அமைப்பு அல்ல. 
காற்றில் ஆக்சிஜனின் அளவு ஐந்தில் ஒரு பங்குதான் இருக்கிறது. மீதியில் மூன்று பங்கு நைட்ரஜனும், மேலும் மிச்சமுள்ள ஒரு பங்கில் கார்பன்டைஆக்ஸைடு,ஹைட்ரஜன்,ஹீலியம், ஆர்கான்,கிரிப்டான்,நியான்,ஸெனான் போன்ற வாயுத்தொகுப்புகளும் அடங்கி இருக்கின்றன. 
இந்த சூத்திரம் எல்லாம் அறிந்த உயிர்-ரஸாயனவியல் (Biochemistry) வல்லுனனான இறைவன் நம் பாதுகாப்பை முன்னிறுத்தி அமைத்த காற்று சூத்திரம் (AIR FORMULA) ஆகும் .(படம்-1) 
திருக்குர்ஆன் ((55:7,8,9) வசனங்களில் இந்த சமன்பாட்டை  சீர்குலைக்காதீர்கள் என்று மனிதனுக்கு இறைவன் எச்சரிக்கை செய்கிறான். 
ஆக்சிஜன் ஒரு வேதிப்பொருள்:
ஆக்சிஜனை ஒரு பெளதீக மற்றும் வேதிப்பொருளாக மிகச்சுருக்கமாக பார்க்கலாம்.
ஆக்சிஜன் ஒரு கனமான வாயு. இதன் மூலக்கூறு எடை (MW)-32gm/mole 
ஆக்சிஜனின் மூலக்கூறு சூத்திரம்(MF)-                    
படம்-2
MF-மூலக்கூறு சூத்திரம் 
MW -மூலக்கூறு எடை 



காற்றிலுள்ள ஆக்சிஜன், இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் ஒரு மின்னணு இணைப்பு மூலமாக இணைக்கப்பட்ட ஒரே மூலக்கூறுவாகவே இருக்கிறது (படம்-2). இந்த இணைப்பு சில சாதகமான சூழ்நிலைகளில் உடையலாம். அப்போது ஆக்சிஜன் வீறுகொண்டு கிரியை புரியும். உதாரணமாக. ஹைட்ரஜனை ஆக்சிஜனில் எரிய விட்டால் ஆக்சிஜன் அதனுடன் கிரியை புரிந்து தண்ணீரை உண்டாக்கும்.(படம்-3A )
படம்-3A 

ஆக்சிஜன் எரியும் பொருளை தூண்டிவிடும் ஆனால் தான் எரியாது. அதனால் தான் காற்று மண்டலத்தில் இறைவன் ஆக்சிஜனை ஒரு பங்காகவும் நைட்ரஜனை மூன்று பங்காகவும் வைத்திருக்கிறான். இல்லை என்றால் 98.4 பாரன்ஹீட் வெப்ப நிலை கொண்ட நாம் அனைவருமே ஆக்சிஜனில் எரிந்து சாம்பலாகிவிடுவோம்.
நைட்ரஜன் ஒரு மந்த வாயுவாக இருப்பதால்தான் வீரியமுள்ள ஆக்சிஜனை அது மட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. 
நைட்ரஜனுடன் ஆக்சிஜன் கிரியை புரிதல்:
படம் 3-B 
நைட்ரஜனும் ஆக்சிஜனும் பொதுவாக சாதாரண நிலையில் கிரியை புரிவதில்லை. ஆனால் தொழிற்சாலை குறிப்பாக நிலக்கரி சுரங்களிலிருந்து வெளிப்படும் அசுத்த வாயுக்களால் அதிகரிக்கும் கடும் வெப்ப நிலையில் நைட்ரஜன் ஆக்சிஜனுடன் கிரியை புரிந்து கொடிய நைட்ரஜன் ட்ரை  ஆக்ஸைடு அதிகம் வெளிப்பட்டு இரசாயன புகை  மூட்டத்தை (Photochemical Smog) உண்டாக்கும். இதே நிலையில் மின்னல் மழை உண்டாகுமானால் அதிக அமில குணமுள்ள மழை (Acid Rain) பெய்யும்.
ஆனால் தொழிற்சாலைகள் இல்லாத சுகாதாரமான சீதோஷ்ண நிலையில் மின்னலினால் சிறிதளவே நைட்ரிக் அமிலம் உண்டாவதால் தீங்கற்ற மழை பெய்யும்.(படம் 3-B). அது நிலத்தையும் வளப்படுத்தும்.
ஆக்சிஜனை உடல் எப்படி பயன்படுத்தி கொள்கிறது 
இதை அறிவதற்கு முன் நம் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை பற்றியும் அது பொதிந்துள்ள சிவப்பு அணுக்களைப்பற்றியும் சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இரத்தத்தின் உண்மையான வடிவம் பிளாஸ்மா என்ற மஞ்சள் நிற திரவமாகும். இதில் கரையும் பொருளும் உண்டு கரையாமல் மிதக்கும் பொருட்களும் உண்டு. அவ்வாறு மிதக்கும் பொருட்களில் ஒன்றுதான் சிவப்பு அணுக்கள் ஆகும். லக்ஷக்கணக்கில் பிளாஸ்மாவில் மிதக்கும் இந்த சிவப்பு அணுக்கள்தான் இரத்தத்திற்கு நிறம் தருகிறது. இவற்றின் மூலமாகத்தான் உடல் ஆக்சிஜனை பலவாறு பயன் படுத்திக்கொள்கிறது. இவற்றில் பொதிந்துள்ள ஹீமோகுளோபின் என்ற புரதத்தின் மூலமாகத்தான் இரத்தம் ஆக்சிஜனை சுமந்து சென்று நம் உடலின் ஒவ்வொரு செல்களுக்கும் பரிமாறி உயிரூட்டுகிறது. (படம்-4)
படம்-4
ஹீமோகுளோபின் ஆக்சிஜனேற்றம் அடைந்த பிறகு சிவப்பாக மாறுகிறது. அது ஆக்சிஜனை விட்டு விட்டு கார்பன்டைஆக்ஸைடை எடுத்த பிறகு நீலமாக மாறுகிறது. எனவே அசுத்த இரத்தத்தின் நிறம் நீலமாக இருக்கிறது.
காற்றில் 21% ஆக்சிஜன் இருக்கிறது. மீதியில் 75% க்கு மேல் நைட்ரஜனும் மிச்சம் இருப்பதில் மற்ற வாயுக்களும் இருக்கின்றன.
சுத்தமான 100% ஆக்சிஜனை நம்மால் சுவாசிக்க முடியாது. அப்படி சுவாசித்தால் அது நம்முடைய நுரையீரல் காற்று பைகளை எரித்து விடும். மேலும் ஆக்சிஜன் சுவாசத்தை மட்டுப்படுத்தும் வாயுவாகும்.
எனவேதான் மெடிக்கல் ஆக்சிஜன்களை பலமாதிரி சதவீத தொகுப்பில் தயாரிக்கிறார்கள். அவை பின்வருமாறு:
1.ஆக்சிஜன் 99.5% +கார்பன்டைஆக்ஸைடு 300 ppm (0.03%)  
2.ஆக்சிஜன் 95% + கார்பன்டைஆக்ஸைடு 5%  
3.ஆக்சிஜன் 60%+நைட்ரஜன் 40%) +>0.03%கார்பன்டைஆக்ஸைடு 
மேலே கூறிய மெடிக்கல் ஆக்சிஜன் எதிலுமே 100% ஆக்சிஜன் இல்லை. ஆனால் எல்லாவற்றிலும் கார்பன்டைஆக்ஸைடு இருக்கிறது. காரணம் கார்பன்டைஆக்ஸைடு ஒரு சுவாசஊக்கி ஆகும்.
கார்பன்டை ஆக்ஸைடு மூச்சு காற்றிலிருந்து நுரையீரலுக்கும், இரத்தத்திலிருந்து திசுக்களுக்கும் ஆக்சிஜன் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது.
99.5%, மற்றும் 95% ஆக்சிஜனைக்கூட மிகவும் கவனமாகவே பயன்படுத்துவார்கள். காரணம் இவற்றில் நைட்ரஜன் இல்லை.
உள்ளிழுக்கப்பட்ட ஆக்ஸிஜன் மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்கு உள்மூச்சு  காற்றோடு கொண்டு செல்லப்படுகிறது. காற்று பைகளில் ஈர்க்கப்பட்ட காற்று/இரத்தம் இவற்றில் இருக்கும் பகுதி வாயு அழுத்த வேறுபாட்டின் (Partial Pressure) காரணமாக ஆக்ஸிஜன் உறிஞ்சப்படுகிறது. காற்றுப்பைகளில் உறிஞ்சப்பட்ட ஆக்சிஜன் காற்றுப்பை தந்துகி இரத்தக்குழாய்களில் கார்பன்டைஆக்ஸைடுடன் அதே பகுதி வாயு அழுத்த வேறுபாட்டினால் வாயு பரிமாற்றம் அடைகிறது. இப்படி ஆக்சிஜன் ஏற்றப்பட்ட (OXYGENATED)  சுத்த இரத்தம் நுரையீரல் சிரை  வழியாக இதயத்தின் இடது வெண்டிரிக்கிளை அடைந்து அங்கிருந்து பெருந்தமனி மூலம் உடல் திசுக்களுக்கு அனுப்பப்படுகிறது.(படம்-4)
உவகை ஹைப்பாக்சியா (HAPPY HYPOXIA)  அல்லது உவகை ஹைப்பாக்சீமியா (HAPPY HYPOXEMIA)  :-
கோவிட் -19 நோயாளிகளின் இறுதிக்கட்ட அறிகுறிகளில் இதுவும் ஒன்று. வினோதமான நிலை. ஆபத்தான நிலை.
சாதாரணமாக இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 95% -99% வரை இருக்கலாம். இந்த அளவு சில நோய் நிலைகளில் 40% க்கு கீழே இறங்கினால் நோயாளிக்கு மயக்கம் ஏற்படும். இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோயாளி மரணம் அடையலாம். மூச்சு திணறலும் ஏற்படும்.
ஆனால் கோவிட்-19 நோயாளிக்கு இந்த அளவு ஆக்சிஜன் இரத்தத்தில் குறைந்தாலும்,மயக்கம் மூச்சு திணறல் போன்ற வெளி அறிகுறிகள் எதுவும் பெரும்பாலான நோயாளிகளுக்கு உடனே  ஏற்படுவதில்லை. அவர் மகிழ்ச்சியாகவே இருப்பார். அதனால்தான் இதற்கு இந்தப்பெயர்.
மகிழ்ச்சியான ஹைபோக்ஸியா அத்தகைய வெளிப்படையான வெளிப்புற அறிகுறிகளைத் தூண்டாது. இதன் விளைவாக, ஆரம்ப கட்டங்களில்
COVID-19 நோயாளி, வெளியில், சரியாகவும் “மகிழ்ச்சியாகவும்” இருப்பதாகத் தெரியும்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் ஆக்ஸிஜன் அளவு ஏன் குறைகிறது?
நுரையீரலில் உள்ள சிறிய இரத்த நாளங்களின் சிக்கலான வலையமைப்பில் நிகழும் உறைதலினால் ஏற்படும் சிறு சிறு கட்டிகள், மேலும் பரவலான உறைதல்கள் ஆகியவைதான் , பெரும்பான்மையான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களால், மகிழ்ச்சியான ஹைபோக்ஸியாவின் முதன்மைக் காரணிகளாகக் கருதப்படுகிறது.
இதன் பின்னணியில் உள்ள காரணி, உடலில் ஏற்படும் அழற்சி எதிர்விளைவாகும் (Inflammatory Reaction), இது பெரும்பாலும் SARS-CoV-2 நோய்த்தொற்றால் தூண்டப்பட்டு, அதன் பின்னர் ஏற்படும் COVID-19 இன் தொடக்கமாகும். இது செல்லுலார் புரதத்தைத் தூண்டுகிறது. ஆரம்பகட்டத்தில் இந்த அறிகுறி மறைந்து இருந்தாலும் இறுதிக்கட்டத்தில் இதுவே நோயாளியின் மரணத்திற்கும் காரணி ஆகிறது.
COVID-19 அறிகுறிகளை  நீண்ட பட்டியலிடலாம். அதில் மிகவும்  சமீபத்தியது ‘மகிழ்ச்சியான ஹைபோக்ஸியா’, அதாவது இரத்தத்தில் மிகக் குறைந்த அளவு ஆக்ஸிஜன் இருந்தாலும் நோயாளி எந்த அறிகுறிகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார். இது  உலகெங்கிலும் உள்ள மருத்துவ வல்லுநர்களை குழப்பமடைய வைத்திருக்கிறது.
அதாவது கோவிட் தொற்று இருந்தும் அறிகுறியே இல்லாதவர் கூட தங்கள் ஆக்சிஜன் அளவை ஆக்சிமீட்டர் மூலமாக தெரிந்து கொள்ளவேண்டும் என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. காரணம் அறிகுறிகளை வெளியே காட்டாத மகிழ்ச்சி ஹைப்பாக்சியா இருக்கலாம்.

அறிகுறியற்ற அல்லது COVID-19 இன் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான ஹைபோக்ஸியாவை எவ்வாறு அடையாளம் காண்பது?:-

1.ஆக்சிமீட்டர் மூலம் 
2.உதடுகள் நீலம்பாரித்தல் 
3.அசல் நிறத்தில் இருந்து சிவப்பு / ஊதா தோற்றத்திற்கு தோல் நிறமாற்றம் ஏற்படுகிறது. 
4.கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யாவிட்டாலும் அல்லது சூடான சுற்றுப்புறத்திலும் கூட தொடர்ந்து வியர்த்தல் 
முடிவாக மகிழ்ச்சியான ஹைபோக்ஸியாவின் இந்த எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனிப்பது ஒரு மருத்துவமனை அமைப்பில் உடனடி சிகிச்சையை உறுதிசெய்கிறது, இதன் மூலம் நுரையீரல் திறன் மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் சாதாரண சுவாசத்தை மீட்டெடுப்பது மற்றும் COVID-19 இலிருந்து மீட்க உதவுகிறது.



புதன், 26 மே, 2021

மருந்துகளும் பக்கவிளைவுகளும்

மருந்துகளும் பக்கவிளைவுகளும்


  

அனைத்து மருந்துகளுமே  தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மருந்துகளில் டாக்டர் சீட்டு மருந்துகள் , கவுண்டர்களில் நேரடியாக கிடைக்கும் மருந்துகள்  மற்றும் மேலதிக  மருந்துகள் (மூலிகை தயாரிப்புகள் மற்றும் வைட்டமின்கள்) ஆகியவை அடங்கும்.
மருந்துகளின் லேபிளில்  உள்ள பார்முலா  பொருட்கள் ஒன்றோடு ஒன்று ‘மோதலாம்’. எனவே, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை உட்கொள்வது பக்கவிளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
பக்க விளைவுகள் உள்ளிட்ட மருந்துகளின் பிரச்சினைகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 230,000 ஆஸ்திரேலியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான பக்க விளைவுகளை நிர்வகிக்க முடியும், சில மிகவும் தீவிரமானவை மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தக்கூடும்.
உங்கள் மருந்துகளை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது உங்கள் நலன்களுக்கு உகந்ததாகும். 

டாக்டர் சீட்டு மருந்துகள் 

பொதுவாகவே எந்த ஒரு மருந்தும் டாக்டரின் பரிந்துரையின் பேரிலேயே வாங்க வேண்டும். சுய மருத்துவம் என்பது மிகவும் ஆபத்தானது. அதிலும் ஆல்கஹால் பயன்படுத்துபவர்கள் எந்த ஒரு மருந்தும் சுயமாக சாப்பிடக்கூடாது. ஏனென்றால் சில ஆண்டிபையாட்டிக்குகள் ஆல்கஹாலுடன் தேவையற்ற பக்க விளைவுகளை உண்டாக்கும் 
விட்டமின்கள் மூலிகை மருந்துகள் உட்பட உணவுகள் மூலமன்றி கடை மருந்துகளாக கிடைக்கக்கூடிய அத்தனையுமே நச்சுக்கள் ஆகும். இரசாயணிகள் ஆகும். 
கீழ்கண்ட மருந்துகளை கண்டிப்பாக டாக்டர் சீட்டு இல்லாமல்  சாப்பிடக்கூடாது.
1.ஆன்டிபயாட்டிக்குகள் (நுண்ணுயிர் எதிர்ப்பிகள்)
உதாரணமாக, சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) மக்கள் தொகையில் ஐந்து சதவீதம் பேருக்கு  ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. தோல் தடிப்புகள் ஒரு பொதுவான எதிர்வினை. ஆனால், எதிர்வினை, மருந்து அல்லது நோயால் ஏற்படுகிறதா என்று சொல்வது எப்போதும் எளிதல்ல.
மேலும் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அவைகளுக்கு இடையிலும் மற்ற மருந்துகளுடனும் இடை எதிர்வினைகளை (Drug Interactions) ஏற்படுத்தும். 
உதாரணமாக தொண்டை கரகரப்பு, கபம் இருமல் என்று வந்துவிட்டாலே 
அஜித்ரோமைசின் (Azithromycin) என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி டாக்டர் பரிந்துரையில்லாமலே சாப்பிடுவது இப்போது சர்வசாதாரணம் ஆகிவிட்டது. இந்த அஜித்ரோமைசின் இதய நோய்க்கு சாப்பிடக்கூடிய டிகாக்சின் (Digoxin) என்ற மருந்துடன் வேண்டாத இடைவினைகளை ஏற்படுத்தும். அதாவது இதய செயலிழப்பு ஏற்படலாம்.
பொட்டாசியம், மெக்னீசியம் குறைபாடு உடையவர்களும் C.Difficile என்ற  தொற்றினால் உண்டாகும் கடும் வயிற்றுப்போக்கு உடையவர்களும்  கண்டிப்பாக டாக்டரின் பரிந்துரை இல்லாமல் அஜித்ரோமைசினை எடுக்கக்கூடாது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அதிலும் குறிப்பாக எரித்ரோமைசின் அல்லது கிளாரித்ரோமைசின்   எடுப்பவர்கள் பொதுவாகவே கீழ்கண்ட அலர்ஜி மருந்துகளை தவிர்த்துக்கொள்வது நல்லது.
1.டெர்பினாடின் (Terfenadine) 
2.அஸ்டமிஜோல் (Astemizole) 
3.கீட்டக்கோணஜோல் (Ketazole) 
காரணம் இந்த கூட்டு இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இன்னும் பொதுவாக சிப்ரோபிளெக்சாசின் (Ciprofloxacin) ஒபிளெக்சாசின் (Ofloxacin) போன்ற அத்தனை பிளேக்சாசின் (Fluoroquinolones) மருந்துகளை டாக்டரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடவேண்டாம். உங்கள் சிறுநீரகங்களை அவை பாதிக்கும். ஸ்படிகசிறுநீர் (Crystalluria) வெளியாகும்.  கீழ்கண்ட மருந்துகளையும்  அவற்றுடன் சாப்பிடாதீர்கள்.
1.ஆஸ்த்மா மருந்தான தியோபில்லின் (Theophylline)
2.மிகுயூரிகமிலம் மற்றும் கவ்ட் என்னும் மூட்டு வலிக்கு பயன்படுத்தப்படும் புரோபைனாசிட் (Probenecid) என்னும் மருந்து.
3.நீரிழிவு மருந்தான கிளிப்பின்க்ளாமைடு (Glibenclamide)
4.ஆஸ்பிரின் (Aspirin),டைக்லோபினாக்  (Diclofenac),அஸெக்ளோபெனாக் (Aceclofenac), புரூபென் (Brufen),மற்றும் நெப்ரோக்ஸன் (Naproxen) போன்ற NSAID வலிமருந்துகள் 

தூக்க மாத்திரைகள்-இடை எதிர்வினைகள் (Drug Interactions with Sleeping Aids):

தூக்க மாத்திரைகளை சர்வசாதாரணமாக விட்டமின் மாத்திரை மாதிரி மக்கள் இப்போது வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். எத்தனை ஆண்டுகள் பழைய டாக்டர் சீட்டாக இருந்தாலும் பரவாயில்லை. அதை காட்டினால் போதும். அது இல்லை என்றாலும் பரவயில்லை.பார்மசி கெளண்டர்களில் கிடைக்கிறது.
ஆல்ப்ரஜோலாம் (Alprazolam) தூக்க மாத்திரை சாப்பிடுபவர்களின் கவனத்திற்கு. அவர்கள் கீழ்கண்ட மருந்துகளை உடன் எடுப்பவர்களாக இருந்தால் பயங்கர மருந்துகள் இடைஎதிர்வினைகளுக்கு (Drugs Interactions) ஆளாக நேரிடும்.
1.வலிப்பு நோய்க்கு சாப்பிடக்கூடிய கார்ப்பமஜாபின் (Carbamazepin)
2.அல்சர் நோய்க்கு சாப்பிடக்கூடிய சிமெட்டிடின் (Cimetidine)
3.நுண்ணுயிர் எதிர்ப்பான் -கிளாரித்ரோமைசின் (Clarithromycin)
4.எரித்ரோமைசின் 
5.பப்ளிமாஸ் (Grapefruit) மற்றும் அதன் சாறு.
6.ஆல்கஹால் மற்றும் ஹெராயின் 
7.எல்லா மனநோய் மருந்துகளும் 
பொதுவாகவே ஆல்ப்ரஜோலாம் (Alprazolam) குளோனஜப்பம் (Clonazepam) மற்றும் டையாசப்பம் (Diazepam) போன்ற எந்த ஒரு ....அஜப்பம்  (Benzodiazepines) மருந்துகள் சாப்பிடும் பொழுதும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் இவர்களுக்கு 
1.கோண அடைப்பு கிளாக்கோமா (Closed-Angle Glaucoma) என்ற கண் அழுத்த நோய் வரும்.
2.மூச்சு திணறல் ஏற்படும்.
3.வலிப்பு நோய் 
4.கல்லீரல்/சிறுநீரக பாதிப்பு 
5.மனச்சோர்வு,தற்கொலை எண்ணங்கள் உண்டாகும்.
6.தூக்க மருந்துகளுடன் டைப்பன்ஹைட்ராமின் (Diphenhydramine) கோடீன் பாஸ்பேட் (Codeine Phosphate) கலந்த இருமல் டானிக்குகளை அருந்தக்கூடாது. இந்த கூட்டு மூச்சு திணறல் (Respiratory Depression), ஆக்சிஜன் குறைவு (hypoxia) என்று தொடர்ந்து இறுதியில் மரணத்தை உண்டாக்கும்.
பப்ளிமாஸ் (Grapefruit):-
இந்த பழம் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய சத்துள்ள பழம். இதில் வைட்டமின்-C  நிறைய இருக்கிறது.மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதில் சர்க்கரை மிகவும் குறைவு. இன்சுலின் திசு உபயோகத்தை ஊக்கப்படுத்தும். கலோரிகள் மிகவும் குறைவு.
ஆனாலும் இந்த பழம் பெரும்பாலான மருந்துகளுடன் சாப்பிடும் பொழுது எதிர்வினைகளை உண்டாகும்.
இந்த பழத்தை சாப்பிடும் பொழுது எதிர்வினை உண்டாக்கும் மருந்துகள்:-
1.கொலஸ்ட்ரால் மருந்துகளான சிம்வாஸ்டேட்டின் (Simvastatin) மற்றும் அடார்வோஸ்டேட்டின் (Atarvostatin). 
2.இதய நோய் மருந்தான நிபிடிப்பின் (Nifidipin)
3.உடல் உறுப்புகளை மாற்றும்  போது அந்த உறுப்பை உடல் நிராகரிக்காமல் இருக்க தரப்படும் சைக்ளோஸ்போரின் (Cyclosporin)
4.தூக்க மருந்துகள் குறிப்பாக பஸ்பிரோன் (Buspiron)
5.சில ஸ்ட்டீராய்டுகள் குறிப்பாக குடல் புண் , ஆஸ்துமா,நோயாளிகள் பயன்படுத்தும் புடானோசைடு (Budanoside)
6.இதய நோய்க்கு (ஒழுங்கற்ற இதய துடிப்புக்கு) தரக்கூடிய அமியொடரோன் (Amiodarone) என்ற மருந்து. மேலே கண்ட மருந்துகளை பப்ளிமாஸ் சரியாக வளர்சிதை மாற்றம் அடையவிடாமல் செய்துவிடும். எனவே அந்த மருந்துகள் உடலில் அதிக அளவு தேங்கி பெரும் தீங்கு செய்ய நேரிடும்.
7.பெக்ஸோபினாடின் (Fexofenadine) என்ற அலர்ஜி மருந்து. இந்த மருந்தை சரியான அளவு சாப்பிட்டாலும் பப்ளிமாஸ் பழம் இதை குடல் சரியாக உறிய விடாமல் செய்துவிடும்.
எனவே மேலே கண்ட மருந்துகளை பப்ளிமாஸ் அல்லது அதன் சாற்றுடன் சாப்பிட்டால் பிரச்சினைகள் வரும்.
 



வெள்ளி, 21 மே, 2021

வைரஸ்களில் மரபணு மாற்றம் -தடுப்பூசி பற்றி விளக்கம்

 கோவிட்-19-இல் இயல்பு மாறாமலே மரபணு மாற்றம்

(பொறுப்பு துறப்பு :-இந்த தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள் கல்வி  நோக்கங்களுக்காக மட்டுமே அன்றி மருத்துவ சிகிச்சைக்கு  உரியதல்ல. தனித்துவமான தனிப்பட்ட தேவைகள் காரணமாக, வாசகரின் நிலைமைக்கான தகவலின் தகுதியை தீர்மானிக்க வாசகர் தங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.) 

படம்-1

மேலே கண்ட தலைப்பு சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே விளக்கமில்லாமல் தரப்பட்டிருக்கிறது உண்மைதான். அதாவது இயல்பு என்பது என்ன  என்பதை புரியும்படி விளக்கவேண்டும்.
பொதுவாக எந்த ஒரு உயிரினமும் சூழ்நிலை தனக்கு எதிராக மாறும்போது ஒன்று அதை தவிர்த்து கொள்ளும் அல்லது அதற்கு ஏற்றாற்போல் தன்னில் ஒரு மாற்றம் ஏற்படுத்திக்கொண்டு அதை எதிர் கொள்ளும்.
அதுவே நுண்ணுயிர்களிலும் வைரஸ்களிலும் நிகழும் போது அதற்கு மரபணு மாற்றங்கள் (GENETIC MUTATIONS) என்று பெயர்.
இந்த மாற்றங்கள் சூழ்நிலை கடுமையாகும் போது வீரியமுள்ளதாகவும் சூழ்நிலை எளிதாகும் போது எளிதானதாகவும் அமையும்.
வைரஸ்களில் இன்ப்ளூயன்ஸா
படம்-2

வைரஸ் மிகவேகமாக மரபணு மாற்றத்துடன் தன் இயல்புகளையும் மாற்றிக்கொள்ளும் தன்மையுடையது. அதனால்தான் அதற்கு நிலையான ஒரே தடுப்பூசியை உண்டாக்க முடியவில்லை. சீசனுக்கு தகுந்த மாதிரியும் அதன் இயல்பு மாற்றங்களுக்கு ஏற்ற மாதிரியும்  இன்ப்ளூயன்சா தடுப்பூசியை புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
வைரஸின் இயல்பு மாற்றங்கள் இருவகைப்படும்.
1.காப்பு மூலம் (ANTIGENIC DRIFT) சறுக்கல் 
2.காப்பு மூலம் (ANTIGENIC SHIFT) மாற்றம் 
இந்த இரண்டு இயல்பு மாற்றங்களுமே ஒன்று அதை கடும் வீரியமுள்ளதாக்கும் அல்லது பலஹீனமானதாகவும் மாற்றும்.
இதில் Drift எனப்படும் சறுக்கல் மிக முக்கியமானது. Shift எனப்படும் மாற்றம் மிக அரிதாகத்தான் நடைபெறுகிறது. அதிலும் இந்த புதிய கொரோனா வைரஸில் அப்படிப்பட்ட மாற்றம் நிகழ வாய்ப்பில்லை.(விளக்கம் பெற தொடர்ந்து படிக்கவும்)
Drift எனப்படும் சறுக்கல் புதிய கொரோனாவிலும் (Novel Corona) நிகழ்கிறது. ஆனால் கால தாமதமாக நிகழ்கிறது. கரணம் வேறு எந்த வைரசுக்குமே இல்லாத ஒரு விசேஷ குணம் இதற்கு இருக்கிறது. அதாவது அது மனித செல்களுக்குள் பல்கி பெருகும் போது நிறுத்தி நிதானமாக பிழை திருத்தம் (Proof Reading) செய்துதான் தன்னுடைய மரபு அணுக்களை பிரதி எடுக்கிறது. எனவே அதற்கு காலதாமதம் எடுத்துக்கொள்கிறது. இது தடுப்பூசி துறைக்கு ஒரு நன்மையாகும். காரணம் ஒரே  தடுப்பூசியையே திரும்ப திரும்ப எத்தனை அலைகள் வந்தாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். தடுப்பூசி சூத்திரத்தை புதுப்பிக்கத்தேவை இல்லை.
(விளக்கம் கீழே)

1.காப்பு மூலம் சறுக்கல்அல்லது பிறழ்வு (ANTIGENIC DRIFT):-
படம் -3

ஒரு வைரஸ் தன்னை  நகலெடுக்கும்போது, ​​அதன் மரபணுக்கள் சீரற்ற “நகலெடுக்கும் பிழைகளுக்கு ” (அதாவது மரபணு மாற்றஙளுக்கு) உட்படுகின்றன. காலப்போக்கில், இந்த மரபணு நகலெடுக்கும் பிழைகள், வைரஸின் பிற மாற்றங்களுக்கிடையில், வைரஸின் மேற்பரப்பு புரதங்கள் அல்லது ஆன்டிஜென்களில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
ஆனால் நமது நோயெதிர்ப்பு அமைப்போ (ANTIBODIES)  இந்த ஆன்டிஜென்களை வைத்து  வைரஸை அடையாளம் கண்டு போராட பயன்படுத்துகிறது. எனவே, நமது நோயெதிர்ப்பு மண்டலத்தைத் ஏய்ப்பதற்கு ஒரு வைரஸ் தனது ஆன்டிஜென்களை மாற்றினால் என்ன ஆகும்? (படம்-2 மேலே)
இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களில், மரபணு மாற்றங்கள் குவிந்து அதன் ஆன்டிஜென்களை “சறுக்கல்” ஆக்குகின்றன - அதாவது பிறழ்ந்த (Drifted) ஆன்டிஜனைக் கொண்ட வைரஸின் மேற்பரப்பு அசல் வைரஸை விட வித்தியாசமாக தெரிகிறது.
இன்ப்ளூயன்ஸா வைரஸ் மரபணு சறுக்கலில் (Antigenic Drift) நகரும் போது வைரஸின் பழைய நிலைகளுக்கு (STRAINS) எதிரான தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி புதிய திசையில் மரபணு மாறிய இன்ப்ளூயன்சா வைரஸிற்கு எதிராக வேலை செய்யாது. ஏற்கனவே பழைய இன்ப்ளூயன்சா தடுப்பூசி போட்ட எவரும் இந்த புதிய வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.
எனவே இன்ப்ளூயன்சா தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படவேண்டும்.
இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று காப்பு மூல சறுக்கல் (ANTIGENIC DRIFT) ஆகும் .
இந்த மரபணு பிறழ்வுகள் பெரும்பாலும் வைரஸை பலவீனமாக்குவதாகவே இருப்பதால் உண்மையில் சில பிறழ்வுகள் வைரஸை குறைவான தொற்று நோயாகவும் மாற்றக்கூடும். 
இயற்கையான அல்லது தடுப்பூசி மூலம் வெளியேறும் நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்க வைரஸ்கள் எவ்வாறு மாறுகின்றன என்பது பற்றிய நமது அறிவின் பெரும்பகுதி இன்ஃப்ளூயன்ஸா வைரஸைக் கவனிப்பதிலிருந்தும், தொடர்ந்து இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளைப் புதுப்பிப்பதிலிருந்தும் தெரிய வருகிறது. இந்த உதாரணத்தின் மூலம் 
கொரோனா வைரஸ்கள் மற்றும் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் (INFLUENZA) வைரஸ்களுக்கு இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகளின் ஒப்பீடு, கோவிட்-19 தடுப்பூசிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.

இது SARS-CoV-2 உடன் கூட நடக்குமா?
படம்-4

SARS-CoV-2 இன் மரபணு பரிணாமம் குறித்து இதுவரை ஆய்வு செய்ததில் , மற்ற ஆர்.என்.ஏ வைரஸ்களுடன் ஒப்பிடும்போது இந்த கோவிட்-19 வைரஸ் ஒப்பீட்டளவில் மெதுவாகவே  உருமாறும் என்று தெரிகிறது.
இதற்கு காரணம் மரபணு பிறழ்தலின் போது உருவாகும் நகல்களை பிழை திருத்தும் (Proof Reading) திறன்  இந்த வைரஸிற்கு இருப்பதால்தான் இந்த தாமதமான உருமாற்றம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்களாம் (படம்-4). இது போன்ற திறன் இதுவரை வேறு எந்த RNA வைரசுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்று அவர்களே ஒப்புதல் வாக்குமூலமும் கொடுக்கிறார்கள். அப்படியானால் இந்த புதிய வைரஸ் ஆய்வு கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதா? அதில் சந்தேகமே இல்லை. எனவேதான் எத்தனை உருமாற்றங்களுடன் வந்தாலும் பரவாயில்லை, எத்தனை அலைகள் வீசினாலும் பரவாயில்லை தயாரிக்கப்பட்ட பழைய தடுப்பூசியே எல்லா அலைவரிசைகளுக்கும் பொருந்தும் என்று இவர்கள் கூசாமல் கூறி தடுப்பூசி வியாபாரம் செய்கிறார்கள். SARS-CoV-2 க்கான பிறழ்வு ஒப்பீட்டளவில் மெதுவாக இருப்பதால் சோதனையில் மற்றும் விற்பனையில்  இருக்கும் ,அனைத்து  SARS-CoV-2 தடுப்பூசிகளும்  நீண்ட காலத்திற்கு பாதுகாப்பை வழங்கும் என்று நம்புகிறோம். என்கிறார்கள்.
இவர்களே திட்டமிட்டு உருவாக்கிய வைரஸாக இருப்பதால்தான் அது எப்படி உருமாறும் எப்போது உருமாறும் என்பதை எல்லாம் துல்லியமாக கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். அது எந்த வேகத்தில் உருமாற வேண்டும் என்பதையும் அதன் மரபணுவில்  பதிந்து இருக்கிறார்கள். அப்போதுதான் இவர்கள் தயாரித்து வைத்திருக்கும் தடுப்பூசியை நிதானமாக விற்று தீர்க்க முடியும். அதனால்தான் வைரஸின் மரபணு மாற்றத்திலும் நிதானத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் போலும். இதற்கு மேலும் கூடுதலாக அவர்கள் தரும் ஒப்புதல் வாக்குமூலத்தை பாருங்கள்.
"SARS-CoV-2 பிறழ்வாக இருந்தாலும், இதுவரை, இது காப்பு மூல நகர்வு (ANTIGENIC DRIFT) கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும், SARS-CoV-2 என்பது மனிதர்களுக்குப் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்னும் பல இந்த வைரஸ் பற்றி  அறியப்படாதவை உள்ளன, மேலும் SARS-CoV-2 வைரஸ் குறித்த நமது புரிதல் தொடர்ந்து வளர்ந்து வருகிறது"
படம்-5
Novel Corona Vaccine Hypothesis

காப்பு மூல நகர்வு (ANTIGENIC DRIFT) வேகமாக இல்லை என்பதும் ஒரு தவறான கணிப்பாக போகலாம். இவர்கள் சொல்வதைப்போல உருமாற்றம் அவ்வளவு மெதுவாக இல்லை 2019 இல் ஆரம்பித்த முதல் அலை 2021 முடிவதற்குள் மூன்றாவது அலையாக உருவெடுத்து பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது.
சில விஞ்ஞான கற்பனை (ScFi) திரைப்படங்களில் வருவதுபோல் விஞ்ஞானிகளாலேயே உருவாக்கப்பட்ட சில பூதங்கள் அந்த விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டையும்  மீறி வெளியேறி எல்லாவற்றையும் அழித்து நாசம் செய்வதுபோல் ஆகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

2.காப்புமூல மாற்றம் (ANTIGENIC SHIFT)- -(COVID-19 வைரஸ் Vs இன்ப்ளூயன்ஸா வைரஸ்) :-
படம்-6

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் ஆன்டிஜெனிக் மாற்றத்திற்கு ANTIGENIC SHIFT) உட்படுகின்றன, இது வைரஸின் ஆன்டிஜென்களில் ஏற்படும் திடீர், பெரிய மாற்றமாகும், இது ஆன்டிஜெனிக் சறுக்கலைக் (ANTIGENIC DRIFT) காட்டிலும் குறைவாகவே நிகழ்கிறது.

இது இரண்டு வெவ்வேறு, ஆனால் தொடர்புடைய, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் விகாரங்கள் (STRAINS)  ஒரே நேரத்தில் ஒரு ஹோஸ்ட் செல்லை  பாதிக்கும்போது நிகழ்கிறது. இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மரபணுக்கள் ஆர்.என்.ஏவின் 8 தனித்தனி துண்டுகளால் (“மரபணு பிரிவுகள்” என அழைக்கப்படுகின்றன) உருவாகின்றன, சில சமயங்களில் இந்த வைரஸ்கள் இனச்சேர்க்கை போல் ஒன்றோடு ஒன்று இணைந்து மறுசீரமைப்பை உருவாக்கலாம். இந்த  மறுசீரமைப்பின் போது, ​​இரண்டு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களின் மரபணு பிரிவுகளும்  ஒன்றிணைந்து ஒரு புதிய  இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் புதிய விகாரத்தை (NEW STRAIN) உருவாக்கலாம்.(படம்-6 மேலே)
ஒரு காப்பு மூல (ANTIGENIC SHIFT) மாற்றம் நிகழும்போது, ​​இதன் விளைவாக வரும் புதிய வைரஸுக்கு எதிராக பெரும்பாலானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவோ அல்லது இல்லாமலோ போய்விடும்   ஆன்டிஜெனிக் மாற்றத்தின் (ANTIGENIC SHIFT) விளைவாக வெளிவரும் வைரஸ்கள் தான் பெரும்பாலும் தொற்றுநோயை (PANDEMIC) ஏற்படுத்துகின்றன.
ஆனால் கொரோனா வைரஸ்கள் இன்ப்ளூயன்ஸா வைரசைப் போல்  பிரிக்கப்பட்ட மரபணுக்களைக் கொண்டிருக்கவில்லை. எனவே இதில்  மறுசீரமைப்பு (REASSORTMENT) செய்ய முடியாது.
 கொரோனா வைரஸ் மரபணு பிரிவுகளில்லாத மிக நீண்ட ஒற்றை,  ஆர்.என்.ஏவால் ஆனது. இருப்பினும், இரண்டு கொரோனா வைரஸ்கள் ஒரே செல்லை பாதிக்கும்போது, ​​அவை  ஒன்றிணைய முடியும், இது மறுசீரமைப்பை விட வேறுபட்டது. மறுசீரமைப்பில், ஒரு புதிய ஒற்றை ஆர்.என்.ஏ மரபணு இரண்டு "பெற்றோர்" கொரோனா வைரஸ் மரபணுக்களின் துண்டுகளிலிருந்து ஒன்றாக இணைக்கப்படும். இது கிட்டத்தட்ட ஒரு ஆணும் பெண்ணும் கலந்து புதிய ஒரு குழந்தையை பெற்றெடுப்பதுமாதிரி. ஆனால்  கொரோனாவில் இதுமாதிரி மறுசீரமைப்பைப் போல எதுவும் இல்லை.  ஆனால் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ்கள் இயற்கையில் இணைந்ததாக நம்புகிறார்கள். (பார்க்க மேலே படம்-6)
இங்கு இனச்சேர்க்கை இல்லை. மறுசீரமைப்பு இல்லை. இணைவு மட்டும்தான் இருக்கிறது. எனவே மாற்றம் (SHIFT) இல்லை. ஆனால் தொற்று வீரியம் (PANDEMIC POWER) மட்டும் எப்படி வந்தது.?

கோவிட் -19 -பற்றிய புரியாத புதிர்கள்  

1.இந்த வைரஸ் மிக மிக மெதுவாகத்தான் காப்பு மூல பிறழ்வு அடைகிறது (Slow antigenic drift)
2.காப்பு மூல மற்றம் என்பது இந்த வைரஸில் இல்லை (No antigenic shift ). ஆனால் எப்படி அலை அலையாக உருமாறி வருகிறது.?
3.புதிய வைரஸ் (Novel virus) என்கிறீர்கள். அப்படியானால் இது தானே உருவாக்கியதா? அல்லது உருவாக்கப்பட்டதா ?
4.தடுப்பூசிகள் போட்டும் கட்டுப்படவில்லையே. மூன்றாவது அலை வருகிறதே ஏன்?
5.RNA நகல்களை சரிபார்த்தல் (Proof Reading) செய்வதற்கான திறன் இந்த புதிய கொரனவைரஸிற்கு மட்டுமே இருக்கிறது வேறு எந்த RNA வைரசுக்கு இல்லை என்றால் இந்த வைரஸ் எங்கிருந்து?, எப்போது ? எப்படி வந்தது.? இதற்கு விஞ்ஞானிகள் பதில் தரவேண்டும்?




திங்கள், 10 மே, 2021

கொரோனா-திட்டமிடப்பட்ட சதி?

தொற்றுநோய் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் ஒரு நோக்கமும் இருக்கலாம்?

(பொறுப்பு துறப்பு :-இந்த கட்டுரையில் தரப்படும் தரவுகளுக்கு நாம் பொறுப்பல்ல )

இந்த கட்டுரை 30-09-2020 இல் ஜேம்ஸ் ஃபெட்ஜெர் என்பவரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை அடிப்டையாகக்கொண்டது.

இவர் அமெரிக்காவின் பிரபலமான ஓர் எதிர்மறை கருத்தாளராவார்
இவருடைய கருத்துக்களில் மிகையும் இருக்கலாம் குறையும் இருக்கலாம். ஆனால் தர்க்க ரீதியாக சில யதார்த்தங்களும் இருக்கலாம்.)

சான்று

ஜெர்மனியில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு "மருத்துவத் தகவல்கள் (Doctors For Informations )" என்ற தலைப்புடன் கூட்டப்பட்ட ஒரு தேசிய பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஒரு அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டது. கோவிட் -19 என்பது மக்களை பீதியடைய வைக்க திட்டமிட்டு மருந்து கம்பெனி மாபியாக்களால் உருவாக்கப்பட்ட ஒரு விபரீத விளையாட்டு என்று அந்த அறிக்கை கூறியது.
மேலும் இது ஒரு உலகளாவிய ஊழல். மோசடி. மேலும் மருத்துவத்துறையே ஒரு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம் என்றும் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்கள்.
இது போல உண்மையை கூறும் மருத்துவர்கள் (Doctors For Truth) என்ற 600 பேர் அடங்கிய ஸ்பானிய மருத்துவக்குழு இதே போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையின் சாரம், "கோவிட்-19 என்பது அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பொய்யான தொற்று நோய். இது சுகாதாரத்தை சாக்காக (Sanitary Excuse) வைத்து உலக அளவில் திணிக்கப்பட்ட ஒரு சர்வாதிகாரமாகும். தயவு செய்து மருத்துவர்களும், ஊடகங்களும் அரசியல் துறையும் சத்தியத்தை பரப்புவதன் மூலம் இந்த மோசமான செயலுக்கு முடிவு கட்டுங்கள் என்று நாங்கள் வேண்டுகிறோம் என்று அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
இதே மருத்துவக்குழு குளோரோகுயின் ஹையிட்றாக்சி குளோரோகுயின் PCR டெஸ்ட் போன்ற பயன்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தும் குறை கண்டும் இருக்கிறார்கள். அந்த விமர்சனங்கள் சரியாகவே நிரூபணம் ஆகி இருக்கின்றன. இப்போது எந்த டாக்டரும் குளோரோகுயின் போன்ற மருந்துகளை கொரோனாவுக்கு பயன்படுத்தவில்லை. PCR பரிசோதனை குழாயை மூக்கில் தவறுதலாகப்பிரயோகித்ததால் சிலருக்கு மூளை நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
ஏன் அல்லது எந்த ஆதாரங்களை வைத்து இந்த ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் மருத்துவக்குழு இவ்வாறு இந்த கோவிட்-19 இல்லுமினாட்டி மருந்து தயாரிப்பு கம்பெனிகளின் திட்டமிட்ட சதி என்று கூறுகிறார்கள்?
அவர்கள் அறிந்து நாம் அறியாதவைகள்தான் அப்படி என்னென்ன?

அவர்கள் அறிந்து தரும் ஆதாரங்கள்.
படம்-1

2015-ல் அதாவது கோவிட்-19 தொற்று ஆரம்பிக்க நான்கு வருடங்களுக்கு முன்பே 'கோவிட்-19 க்கான பரிசோதனை முறை (System and Method for Testing for COVID-19) என்ற பெயரில் ரிச்சர்ட் ரோத்ஷீல்டு (Richard Rothschild) என்பவர் அன்றைய டச்சு அரசிடமிருந்து ஒரு காப்புரிமையை பெற்றார். (மேலே படம்-1)
இதை தொடர்ந்து 2017, மற்றும் 2018 களில் மில்லியன்கணக்கில் விற்கப்பட்ட கோவிட்-19 பரிசோதனை கிட்டுகள் பற்றிய விபரமும் 'உலக ஒருங்கிணைந்த வர்த்தக தீர்வு என்ற அமைப்பின் (World Integrated Trade Solution-WITS) மூலம் இப்போது கசிய ஆரம்பித்து இருக்கிறது. (கீழே படம்-2)
படம்-2


இந்த குழப்பமான விபரம் சமூக ஊடகங்களில் வைரலாகியதால் திகைத்துப்போன WITS அமைப்பு அவசர அவசரமாக தனது விலைப் பட்டியலில் இருந்த கோவிட்-19 என்ற வாசகத்தை திருத்தி பொதுவாக மருத்துவ பரிசோதனை கிட் என்று மாற்றியது. இது உலக வர்த்தக விதிக்கு முரணானது. ஏனென்றால் ஒரு பொருளுக்கு இன்வாய்ஸ் போடும்போது அதன் விபரம் தெளிவாக இருக்கவேண்டும் என்பது உலக வர்த்தக விதி. இதை WITS அப்பட்டமாக மீறியது. ஆனாலும் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதிலுள்ள Code 300215 என்ற குறியீட்டை மட்டும் மாற்ற மறந்து விட்டார்கள். அந்த குறியீடு கோவிட்-19 குறிக்கும் குறியீடு ஆகும்.
2017 -லேயே அதாவது கோவிட்-19 ஆரம்பிக்க 2 வருடங்களுக்கு முன்பே யு.எஸ்,ஐரோப்பிய கூட்டமைப்பு(E.U),சீனா போன்ற உலக நாடுகளுக்கு இடையில் கோவிட்-19 பரிசோதனை கிட்டுகள் ஏற்றுமதியாக தொடங்கிவிட்டன.
படம்-3

உலகவங்கியின் ஆவணங்களின் படி (மேலே படம்-3)இந்த கோவிட்-19 திட்டமானது 2025 வரை தொடரும் என்ற திகைப்பூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கிடையில் எத்தனை அலைகள் உருவாகுமோ தெரியவில்லை.

முன்னறிவிப்புகள் (PREDICTIONS )

1.டாக்டர் அந்தோணி பாஸி (Dr.Antony Fausci):-

இவர் அமெரிக்காவின் பிரபலமான தொற்றுநோயியல் நிபுணர் ஆவார்.இவருடைய ஆலோசனையின் பெயரில்தான் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை பல முடிவுகளை எடுக்கிறது. அதில் ஒன்று ரெம்டெசிவிர் என்ற வைரஸ் எதிர்ப்பானை கோவிட்-19 க்கு தற்காலிக அவசர நிலை சிகிச்சைக்கு கொடுக்க அனுமதி (EUA ) வழங்கியது.
இவர் 2015-ல் வூஹானிலுள்ள வைரஸ் ஆய்வு கூடத்திற்கு சுமார் 4 மில்லியன் யுஎஸ் டாலர் வழங்கியதாகவும் இது அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தெரியும் என்றும் ஜேம்ஸ் ஃபெட்ஜெர் தன் கட்டுரை யில் குறிப்பிடுகிறார்.
மேலும் அவர் டாக்டர் பாஸி பற்றி கூறும்போது 2017 லேயே அவருக்கு இப்படி உலகளாவிய தொற்று  சீனாவில் அதுவும் வூஹானிலிருந்து பரவும் என்று தெரியும் என்றும் அவர் அதை 2017-ல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறுகிறார். அவருக்கு எப்படி தொற்று தொடங்குவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே தெரியும் என்ற கேள்வியையும் இவர் முன்வைக்கிறார்.

2.பில் கேட்ஸ் & மெலிண்டா கேட்ஸ் :-

2018 இல் பில் கேட்ஸ் உலகளாவிய தொற்று நோய் ஒன்று வரப்போவதாகவும் அது சுமார் 30 மில்லியன் மக்களை அழிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் பகிரங்கமாக அறிவித்தார். இது அடுத்த சகாப்தத்தில் நிகழவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் பொறியியல் நுட்பத்துடன் ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்ட (Lab Engineered) இந்த வைரஸ் மனித குலத்திற்கே ஒரு அச்சுறுத்தல் என்றும் வரும் ஆண்டுகளில் மனித குலத்தை தாக்கும் என்றும் உறுதியளித்தார்.
இவ்வாறு அவர்கள் மக்களை மிகையாக அச்சுறுத்த காரணம் மனிதாபிமான அடிப்படையில் அல்ல வியாபார நோக்குடன் தான் ஃபெட்ஜர் வாதிடுகிறார்.
ஏனென்றால் பில் கேட்ஸ் ஒரு மிகப்பெரும் வேக்சின் விற்பனையாளர் ஆவார். மிகப்பெரும் வேக்சின் தயாரிப்பு நிறுவனங்களில் அவர் டீலர் ஆக இருக்கிறார். என்றும் ஜேம்ஸ் ஃபெட்ஜெர் தன் கட்டுரை யில் குறிப்பிடுகிறார்.
பில் கேட்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் "வரும் ஆண்டுகளில் உலகளாவிய ஆரோக்கியத்தில் மிகச்சிறந்த வாங்கும் பொருளாக எது இருக்கும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தப்பொருள்-தடுப்பூசி -VACCINE" என்று குறிப்பிடுகிறார்.(படம்-4 கீழே)
படம்-4


3.உலகளாவிய தயார் நிலை  கண்காணிப்பு குழு (GPMB):-

செப்டம்பர் 2019 இல் அதாவது தொற்று  ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே The Global Preparedness Monitoring Board-GPMB  என்ற இந்த அமைப்பு உலகம் மிகப்பெரியதோர் ஆபத்தை எதிர்கொள்ளவிருப்பதாக முன்னறிவிப்பு செய்தது.
(கீழே படம்-5)
படம்-5

உலக சுகாதார நிறுவனமும் இது பற்றி அறிந்தே இருந்தது என்று அந்த ரிப்போர்ட் மேலும் கூறுகிறது 
ஜேம்ஸ் ஃபெட்ஜெரின் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை எல்லாம் ஆதாரமற்றவை வேண்டுமென்றே புனையப்பட்டவை என்று ராய்ட்டர்  செய்திக்குழுமத்தின் FACT CHECK என்ற ஒரு வலைய தளம் கட்டுரை வெளியிட்டுள்ளது.

புதன், 5 மே, 2021

கோவிட் -19 க்கு ரெம்டெசிவிர் முழுமையான சிகிச்சை அளிக்கிறதா?

 கொரோனா ஆபத்தானதா?
Miss COVID-19


கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் ஒரு வைரஸ் அல்லது வைரஸ் குடும்பம் இருக்கத்தான் செய்கிறது  என்பது மிகவும் வெளிப்படையான  உண்மை .நிச்சயமாக இது ஒரு தொற்று  நோயை உண்டாக்கும் ஒரு வைரஸ் குடும்பத்தை சேர்ந்ததுதான். சிலருக்கு இது மரணத்தையும் உண்டாக்கலாம். அது அவருடைய வயது, உடல் சக்தி மற்றும் அவருக்கு இருக்கும் பிற உடல் உபாதைகளைப் பொறுத்தது.
ஆனால் இந்த வைரஸ் ஊரை ஒடுக்கிவைக்குமளவுக்கு அவ்வளவு பயங்கரமானதா? இதை விட வேறு கொடிய நோய்களும் இல்லையா? இதற்கு முன்னர் இந்தியாவிலோ அல்லது உலகத்திலோ வைரஸ் தாக்குதல்கள் எதுவும் நடக்கவில்லையா?
டெங்கு காய்ச்சல் பல உயிர்களைக் கொன்றது.
பன்றிக் காய்ச்சல் பல உயிர்களைக் கொன்றது.
கொடிய ஸ்பானிஷ் காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் இன்றும் உள்ளது மற்றும் தொடர்ந்து மக்களைக் கொன்று வருகிறது.
ஆனால் இந்த கொரோனா வைரஸிற்கு  மட்டும் ஏன் இப்படி பல கட்டுப்பாடுகள்?
இன்று உலக சுகாதார அமைப்பு (WHO) இதை ஒரு ஹீரோவாக தூக்கிப்பிடிக்கிறது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் இது ஒரு வி.ஐ.பியாக மதிக்கப்படுகிறது . ஏனென்றால் 
இந்திய பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி மக்களை சரியாக இரவு 9.09 மணிக்குபால்கனிகளில் நின்று விளக்குகளை ஏற்றி, மணிகள் ஒலிக்கவும், கைதட்டவும் சொன்னபோது ஒவ்வொரு விவேகமான மக்களின் ஆறாவது அறிவும் விக்கித்து நின்றது.மார்ச் 2020 இல் அரங்கேற்றப்பட்ட கொரோனா நாடகத்தின் முதல் கட்டங்களில் நடிக்கப்பட்ட முதல் காட்சி இது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த நேரத்தில் விவேகமுள்ளவர்கள் உடனடியாக அந்த நாடகத்தின் துர்நாற்றத்தை உணர்ந்தார்கள். நிச்சயமாக இது இல்லுமினாட்டி மருந்து மாபியாக்களின் நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நாடகம் என்பதை ஒரு சிலர் உணராமல் இல்லை. ஆனால் உலகம் ஏமாந்தது. நான் ஒரு வைரஸ்தானே,நான் என்ன பேயா பூதமா என்று கொரோனா திகைத்தது.
இந்த நாடகத்திற்குள் தானும் ஒரு பாத்திரமாக உலக சுகாதார அமைப்பும் ஒளிந்து கொண்டிருக்கிறதா என்ற சந்தேகமும் வலுக்கிறது. இந்த நோய்க்கு WHO சூட்டிய பெயரைப் பாருங்கள்.
2019-இல் ஏதோ உலக வைரஸ் அழகிப்போட்டியில் முதல் பரிசு பெற்ற  அழகிக்கு சூட்டப்பட்ட பட்டம் மாதிரி கோவிட் -19. உலகில் எந்தவொரு நோய்க்கும் இதுபோன்ற அதிசயமான பெயர் தரப்பட்டு இருந்ததா?
பின்னே என்னதான் நடக்கிறது? இதில் பெரிய மர்மம் ஒன்றும் இருக்கிறது. 
இந்த மருந்து மாஃபியாக்கள் மக்களின் ஆரோக்கியத்தில் சூதாட்டம் செய்கின்றன. COVID-19 என்பது அவர்களின் கடும் பண தாகத்தை பூர்த்தி செய்வதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த விளையாட்டின் பெயர். இது ஒரு சூதாட்ட நாடக விளையாட்டு.
இனி இந்த விளையாட்டின் தொடராக கொரோனா முதல் அலை இரண்டாவது அலை மூன்றாவது அலை என்று  சமுத்திரத்தில் தோன்றும் எண்ணிக்கையில் அடங்காத அலைகளாக கொரோனா உருவெடுத்து படிப்படியாக முன்னேறி உச்சத்தை தொடும் போது நாமும் செத்து அதுவும் செத்து உலகம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆனால் நாடகம் தொடரும். மாஃபியாக்களின் தாகமும் தீராது. இந்த கபட நாடகத்தின் மூலம் அவர்கள் ஓர்  உண்மையை மறைக்கப்பார்க்கிறார்கள்.
அந்த உண்மை சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணி போல் இப்போது வெளியாகிவிட்டது.
உண்மை என்னவென்றால், அலோபதி மருந்தியலில் சரியான மருந்தும்  சரியான சிகிச்சையும் இந்த நோய்க்கு இல்லை என்பதே.
அனைத்தும் சோதனை மற்றும் பிழை (Trial & Error) சிகிச்சைகள். சிகிச்சையின் முடிவில் நோயாளி உயிர்வாழ்வார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, அதற்காக எதுவும் உறுதியாகவும்  இல்லை. ஆனால் சிகிச்சையின் விலை மட்டும் பல லட்சம் மதிப்புடையது.
தான்சானியா போன்ற சில நாடுகள் தங்களது இயற்கை வைத்தியம் மூலம் COVID-19 வைரஸை முற்றிலுமாக ஒழித்ததாகக் கூறுகின்றன .
இந்தியாவுடன் ஒப்பிடும்போது தான்சானியா மருத்துவம் அல்லது பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேறிய நாடு அல்ல. ஆனால் இந்த நோயை நாங்கள் ஒழித்துவிட்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அங்கு முகமூடி இல்லை. வாய்ப்பூட்டு இல்லை. மருத்துவமனைகளில் எந்தவிதமான மோதல்களும் இல்லை, சடலங்களும் அங்கே குவிந்து கிடக்கவில்லை.
ஏனென்றால் அந்த நாடு மருந்து உற்பத்தி மாபியாக்களின் வலையில் விழவில்லை. அங்குள்ள ஆட்சியாளர்கள் நேர்மையானவர்கள், தங்கள் மக்களை நேசிக்கிறார்கள். அவர்கள் நம்ம  ஆட்சியாளர்களைப் போன்ற மருந்து நிறுவனங்களின் வணிக கூட்டாளிகள் அல்ல. தான்சானியா COVID-19 துயரங்களை இயற்கை வைத்தியம் மூலம் தீர்த்தது. (இந்த கட்டுரை எழுதப்படும் போது உயிருடன் ஆரோக்கியமாக இருந்த தான்சானியா அதிபர் திடீரென்று மர்மமான முறையில் இறந்தார் )
ஆனால் இங்கே என்ன நடக்கிறது.?
உலக சுகாதார அமைப்பு சொல்கிறார்கள் அமெரிக்க அதிபர் பாராட்டுகிறார் டாக்டர்களும் நல்ல மருந்துகள் என்று சிபாரிசு செய்கிறார்கள் என்று நம்ம நாட்டு மக்கள் என்ற செம்மறி கூட்டம் பார்மசிகளுக்கு போய் டாக்டரின் சீட்டோ பரிந்துரையோ கூட இல்லாமல் பார்மசி கெளண்டரிலேயே  குளோரோகுயின் அஜித்ரோமைசின் ஹைடிராக்சிகுளோரோகுயின் என்று மளிகை பொருள் வாங்குவது மாதிரி கட்டுக்கட்டாக வாங்கிக்கொண்டு போய் தின்றார்கள். இதுதான் அலோபதியின் ஆரம்பகட்ட கொரோனா முயற்சி/பிழை (Trial/Error) மருத்துவம். இங்கு மட்டுமல்ல உலக முழுக்க. 
நுண்ணுயிர் எதிர்ப்பான்களை (Antibiotics) வைரஸ் நோய்களுக்கு தரக்கூடாது என்ற மருத்துவ விதிகள் கூட காற்றில் பறக்கவிடப்பட்டன. ஏன் கொடுத்தால் என்னாகும். வேறு ஒன்றும் ஆகாது. அழிப்பதற்கு சரியான நுண்ணுயிர் (பாக்டீரியா) கிடைக்காமல் போய் இந்த நுண்ணுயிர் எதிர்ப்பான்கள் உங்கள் உடல் செல்களை சிதைக்கலாம். இரத்த அணுக்களை சிதைக்கலாம். குளோரோகுயின் கண்ணின் விழித்திரையை தாக்கலாம் உங்கள் இதயத்தையும் தாக்கலாம். இத்தனை பக்க விளைவுகளையும்  உங்களுக்கு தந்து அந்த மருந்து தயாரிப்பு மாபியாக்கள் தங்கள் கிட்டங்கிகளில் தேங்கிக்கிடந்த அந்த ஸ்டாக்குகளை விற்று தீர்ந்துவிட்டன. பார்மசிகளும் தங்களுக்கு அடித்த யோகத்தில் ஒரு கை  பார்த்துவிட்டன.
மற்றொரு மருத்துவர், டெக்ஸாமெதாசோனை மிகவும் மலிவான மருந்தாகப் பயன்படுத்தலாம், இது மூச்சுக்குழாயில் உள்ள சளி அடைப்பை நீக்குகிறது என்று டெக்ஸாமெத்தசோனுக்கு ஒரு பெரும் விளம்பரம் கொடுத்தார். மக்கள் என்ற செம்மறியாட்டுக்கூட்டம் அதில் போய் விழுந்தது. உடனே பார்மசிகள் டெக்ஸ்சாமெத்தசோனை பெரிய அளவில் கொள்முதல் செய்து விற்று லாபம் பார்த்தன. கார்டிகோஸ்டெராய்டுகளை தொற்று நோய்களுக்கு கவனமாக தரவேண்டும் என்ற பொது விதியும் இங்கு காற்றில் பறக்கடப்பட்டன.
ஆனால் மருத்துவர்கள் எந்த அடிப்படையும் இல்லாமல் இந்த மருந்துகளை பரிந்துரைத்தனர். ஏன்? இந்த மருத்துவர்களின் பேராசை காரணமாகவே மருந்து நிறுவனங்களின் லஞ்சம் அதிகரித்துள்ளது.
இந்த அலப்பரைகளால் என்ன நடந்தது.
மலேரியாவுக்கு தரவேண்டிய குளோரோகுயினை கொரோனாவுக்கு விற்று தீர்த்தத்தால் மலேரியாநோயாளிக்கு மருந்து கிடைக்கவில்லை.
ஆஸ்துமாவுக்கு தரவேண்டிய டெக்ஸ்சாமேதாஸோனை கொரோனாவுக்கு விற்று தீர்த்தத்தால் ஆஸ்துமா நோயாளிக்கு மருந்து கிடைக்கவில்லை. யார் எக்கேடு கெட்டால் என்ன என்னுடைய ஸ்டாக் விற்று தீர வேண்டும் என்பதே மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை மாபியாக்களின் நிலை.
இன்னும் இந்த குளறுபடி மருத்துவத்தால் வைரஸும் மறு உரு வெடுத்து 2-ஆவது அலையாக வந்திருக்கிறது என்பாதை விட  கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதே சரி.
வெறும் இஞ்சிகஷாயத்தில் குணப்படும் இந்த வைரஸை அப்படியெல்லாம் செய்து சுகப்பட விடாமல் இப்படி குளறுபடி மருத்துவத்தின் மூலம் உருமாற்றிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது தானோ இந்த இல்லுமினாட்டிகளின் விருப்பம்?

ரெம்டெசிவிர் 
நரகவாசலை நாடும் செம்மறி ஆடுகள் 

இப்பொது அவர்களுக்கு கிடைத்திருக்கும் அட்சய பாத்திரம் ரெம்டெசிவிர். இது ஒரு உயிர் காக்கும் மருந்து என்கிறார்கள்  ஆனால் தெளிவான விளக்கம் இல்லை. இந்த மருந்து GILEAD SCIENCE என்ற பிரபல அமெரிக்க கம்பெனியால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இது ஒரு வைரஸ் எதிர்ப்பான் (Antiviral) ஆகும். இருக்கட்டும். ஆனால் இது கோவிட்-19 நோயை முற்றிலுமாக குணப்படுத்துகிறதா? கொரோனா வைரஸை முற்றிலும் அழித்து விடுகிறதா? இந்த கேள்விகளுக்கு இல்லவே இல்லை என்பதுதான் கசப்பான பதில். அதுதான் கசப்பான உண்மையும் கூட.
தூண்டில் மீன்கள் 

இந்த மருந்து முதலில் எபோலா, H.I.V. போன்ற வைரஸ்களை வெல்வதற்காக தயாரிக்கப்பட்டது. ஆனால் அவற்றில் அது படு தோல்வி அடைந்தது.
என்ன செய்வது கிட்டங்கிகளில் ஸ்டாக் தேங்கிவிட்டதே. எப்படியும் விற்று தீர்க்கவேண்டும். அமெரிக்க FDA இடம் மண்டியிட்டது GILEAD. என்ன மாயமோ 2020-இல் FDA இந்த மருந்திற்கு அவசர கால உபயோக அனுமதியை (EUA)  கொடுத்தது.
ஏற்கனவே குளோரோகுயினுக்கும் இதுமாதிரி ஓர் அனுமதியை கொடுத்து தலையில் குட்டு வாங்கியது FDA. அது வேறு கதை.
தீவிர சிகிச்சையில் கடுமையான சுவாசப்பாதை தடுப்பால் Respiratory Distress) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்று EUA கூறியது.
ஏனென்றால் இது மருத்துவமனையில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையை இரண்டு முதல் மூன்று நாட்கள் குறைக்கிறது. சளியின் தீவிரத்தை சிறிது குறைக்கிறது. ஒட்டுமொத்தமாக 31% நன்மை அளிக்கிறது என்று அமெரிக்காவின் வைரஸ் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் FAUCI கூறுகிறார்.
இந்த மருந்தை சிபாரிசு செய்யும் சிகாகோ பல்கலைக்கழக மருத்துவப்பள்ளி தற்போது இந்த மருந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இது ஒரு முழுமையான சிகிச்சையாக கருதப்படக்கூடாது என்றும் கூறுகிறது.
ஏப்ரல் இறுதிக்குள் கடுமையான COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட 21 பேர் பரிசோதிக்கப்படுவார்கள் என்று கிலியட் தெரிவித்துள்ளது. இந்த மருந்தின் முழு ஆய்வறிக்கை மே 2020 இறுதிக்குள் வெளியிடப்படும் என்று இந்த மருந்தை தயாரித்த கிலியட் நிறுவனம் கூறுகிறது.
உண்மை என்னவென்றால், அலோபதி மருந்தியலில் COVID-19 க்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருந்து எதுவும் தற்போது இல்லை.
ஆகவே எதையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் செம்மறி ஆடுகளைப் போல அலைய வேண்டாம்.
உங்களுக்கு உங்கள் பணம் மற்றும் பொருள் வீணாகிறது.
ஆனால் உண்மையான நன்மை ரெம்டேசிவிர் மற்றும் அதன் தயாரிப்பாளருக்கு ஆதரவாக சென்றுள்ளது.
கறுப்புச் சந்தையில் இந்த மருந்தின் விலை தங்கத்தின் விலையை நெருங்குகிறது. அதன் உற்பத்தி நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு 25% உயர்ந்துள்ளது.
இது காகம் மற்றும் நரியின் கதை போன்றது. எப்படியோ நரி (மருந்து கம்பெனி) தந்திரத்தால் காகத்திடமிருந்து வடையை ஏமாற்றி  பறிக்க நினைக்கிறது..
காகம் (மக்கள்)வீணாக ஏமாறக்கூடாது.

என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது?

.நீங்கள் ஒரு COVID-19 அறிகுறியை உணர்ந்தால் பீதி அடைய வேண்டாம்.
உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருங்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு முறையாவது நீராவி உள்ளிழுக்க வேண்டும். இன்ஹேலர் இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம். ஒரு வீட்டு கிண்ணத்தைப் பயன்படுத்தி தண்ணீரைக் கொதிக்க வைத்து நீராவியை உள்ளிழுக்கவும்.
.இஞ்சியை நசுக்கி, தலைவலிக்கு தலையில் தேய்க்கவும்.
உங்களுக்கு காய்ச்சல் இருந்தால், இஞ்சி சாற்றில் தேன் மற்றும் மிளகு தூள் கலக்கலாம்.
.நீரிழிவு நோய், பிபி மற்றும் இதய நோய்கள் போன்ற கொமொர்பிடிட்டிகள் இருந்தால் மட்டுமே, ஒரு நல்ல மருத்துவரிடம் செல்லுங்கள்.










அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...