செவ்வாய், 23 மார்ச், 2021

தூக்க மருந்துகள்-பெண் கர்ப்ப சிதைவுகள்

கர்ப்ப கோளாறுகளை உண்டாக்கும் ஆல்ப்ரஜோலாம் போன்ற தூக்க மருந்துகள் 
படம்-1

ஆல்ப்ரஜோலாம் (Alprazolam) -இன்றைக்கு டாக்டர்கள் அதிகமாக தூக்கத்திற்கு எழுதிக்கொடுக்கும் மருந்துகளில் ஒன்று. இது ஒரு பென்ஜோடையஜாப்பின் (Benzodiazepine)  என்ற வகையை சேர்ந்த தூக்க மருந்தாகும். இந்த வகையை சேர்ந்த  கீழே பட்டியலிடப்பட்ட மற்ற மருந்துகள்:-
1. டையஜிப்பம் (Diazepam)-1 டு 3நாட்கள் 
2.குளோர்டையசப்பாக்ஸைடு -(Chlordiazepoxide)-1 டு 3 நாட்கள் 
3.டெமஸிப்பம் -Temazepam -10 டு 20 மணி நேரம் 
4.லொராஜிப்பம் -Lorazepam -   -do -
5.ஆக்ஸஜிப்பம் -Oxazepam -  2 டு 8 மணித்துளிகள் 
6.குளோனஜிப்பம் -Clonazepam - -do -
7.மிடஜோலம் - Midazolam -2 டு -8 மணித்துளிகள் 
8.டிரையஜோலாம் -Triazolam -2 டு 8 மணித்துளிகள் 
மேல் குறிப்பிடப்பட்டவைகளில் ஆல்ப்ரஜோலமும் 10 டு 20 மணிநேரம் தூக்கத்தை தரக்கூடியதாகும்.
இந்த தூக்க மாத்திரை ஆண் பெண் என்ற பேதமில்லாமல் வயது வரம்புமில்லாமல் எவ்வித முன்னெச்சரிக்கை வழிகாட்டுதலுமில்லாமல் டாக்டர்களால் அதிகம் எழுதிதரப்படுகிறது. நம் ஊரில் 75 சதவீதத்திற்குமேல்பட்டவர்கள்  ஆண் பெண் என்ற பாலின வேற்றுமை இல்லாமல் வயது வித்தியாசமுமில்லாமல் டாக்டர்களின் இந்த பொறுப்பற்ற தன்மையினால் இந்த தூக்க மாத்திரைக்கு அடிமைப்பட்டு உருக்குலைந்து கிடக்கின்றனர்.
பென்ஜோடையஜாப்பின் (Benzodiazepine)  வகை தூக்க மாத்திரைகள் குறிப்பாக ஆல்ப்ரஜோலாம் பெண்களின் கர்ப்ப உறுப்புகளில் கோளாறுகளை உண்டாக்குவதாக கண்டிருக்கிறார்கள் 

கர்ப்பக்குழாய் பிரசவம் -ECTOPIC PREGNANCY:-
படம்-2
கர்ப்பக்குழாய் பிரசவம் 
மேலே படம்-2 இல் காட்டப்பட்டுள்ளது பிரசவத்தின் ஒரு அசாதாரண நிலை ஆகும். ஆபத்தான நிலையும் கூட. அதாவது விந்தணுவுடன் கூடி கருத்தரித்த நிலையில் கருமுட்டையானது கர்ப்பப்பைக்குள் நுழைய முடியாமல் கருக்குழாயிலேயே குழந்தையாக வளரத்துவங்குவது. இந்த நிலை கருத்தரித்த நிலையில் நீண்ட காலம் ஆல்ப்ரஜோலம் தூக்க மாத்திரையை  உபயோகிக்கும் கர்ப்பிணிக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்ப கோளாறுகள்-DEFECTIVE CONCEPTIONS :-

டாக்டர்கள் பென்ஜோடையஜாப்பின் (Benzodiazepine)  பற்றி சொல்லும் போது கர்ப்ப காலங்களில் ஆல்ப்ரஜோலத்தை விட டையாசிப்பம் பாதுகாப்பானது. ஆனால் அது பாலூட்டும் நிலையில் நல்லதல்ல என்பர். மேலும் கர்ப்ப நிலையிலும் பாலூட்டும் நிலையிலும் குளோர்டையசப்பாக்ஸைடு (லிப்ரியம்) மிக பாதுகாப்பானது என்பர்.
ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். அதாவது அலோபதி மருத்துவத்தில் பாதுகாப்பானது என்ற வார்த்தை அதன் அசல் அகராதி அர்த்தத்தில் சொல்லப்படுவதில்லை. பாதுகாப்பானது என்றால் குறைந்தபட்ச பின்விளைவுகளை கொண்டது என்று அர்த்தம்.
குறைந்த பட்சம் என்ற அளவீடும்  சரியான அர்த்தத்திலும் வராது. நிலையான அர்த்தமும் தராது. இதுதான் அலோபதி.
பென்ஜோடையஜாப்பின் (Benzodiazepine) தூக்க மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்ளத்தால் ஏற்படும் கர்ப்பக்கோளாறுகள் ஏராளம்.
அவற்றில் சில,
1.ஒழுங்கற்ற பிளவுபட்ட உதடுகளுடன் பிறக்கும் குழந்தை.
2.குழந்தைக்கு தூக்க மருந்து பழக்கம் ஏற்படுவது.

தூக்கமருந்தும் பெண் மலட்டுத்தன்மையும் :-

எல்லா தூக்க மருந்துகளுக்கும் கோலினெர்ஜிக் எதிர்ப்பு சக்தி உண்டு.
இதனால் நாட்பட்ட தூக்க மருந்து உபயோகிக்கும் திருமணமாகி குழந்தை பேற்றை எதிர்பார்க்கும் பெண்களுக்கு மலட்டு தன்மை உண்டாகலாம்.
காரணம் இவர்களின் இனப்பெருக்க உறுப்புகளின் இயக்கங்களில் மந்த நிலை உண்டாகும். இதனால் யோனியின் வழியாக உள்ளே நுழையும் விந்தணு கருக்குழாயில் காத்திருக்கும் பெண் கரு முட்டையை எட்ட முடியாமல் போகலாம். 
எனவே தூக்க மாத்திரைகளை கையாள்பவர்கள் கவனமாக இருக்கவும்.
முதலில் தூக்க மருந்துகள் நோய் நிவாரணிகள் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவும்.
அவை உங்களுக்கு தூங்குவது போன்று ஒரு வித மயக்கத்தை தந்து உங்கள் நரம்புகளை சிதைத்து உங்களை நிரந்தர நோயாளிகளாக்கும் நச்சுக்கள் என்பதை புரிந்து கொள்ளவும் 


சனி, 20 பிப்ரவரி, 2021

மனவெறி தணிப்பான்கள் - மருத்துவ விழிப்புணர்வு

 மனவெறி தணிப்பான்கள்-ஜாக்கிரதை  

(BEWARE OF ANTI-PSYCHOTICS)

ஏற்கனவே இதுபற்றி இதே பிளாக்கரில் பொதுப்படையாக வேறு ஒரு பதிவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் பெரும்பாலும் மக்களுக்கு மருந்துகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் மீண்டும் மீண்டும் மனநோய் மருந்துகள் பற்றிய மேல்விவரங்களை இங்கு நாம் பதிவிடுகிறோம்.
பொதுவாக மன நோய் என்று ஒன்று கிடையாது. அதை நாம்தான் வீணாக கவலை பட்டு உண்டாக்கிக்கொள்கிறோம். கவலை என்பது ஒரு சோதனைதான். ஒன்று தீர்ந்தால் இன்னொன்று தானாகவே முளைத்துவிடும். 
ஒரு பழைய பாடல் "பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூமுடித்தேன் -மன்னாதி மன்னனைப்போல் மாளிகையில் வாழுகிறேன்-சொன்னாலும் வெட்கமடா....
பாய்விரித்துப்படுப்பவனும் வாய் திறந்து தூங்குகிறான் -பஞ்சணையில் நான்படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை -சொன்னாலும் வெட்கமடா....."ஆம் மேலே கண்ட பாடல் வரிகள் மனிதன் எதிலுமே திருப்தி அடைவதில்லை. இருக்கும் போது இல்லாதவனைப்பார்த்து ஏங்குகிறான். இல்லாதபோது இருப்பவனை பார்த்து ஏங்குகிறான். இதுதான் மனிதனின் மனநிலை.
இன்னொரு பாடல் 
"இல்லை இல்லை என்பவர்க்கு கவலை இல்லை-ஆனால் இருந்தும் இல்லை என்பவர்க்கு அமைதி இல்லை"
மேலே கண்ட பாடல் வரிகள் மனிதனின் பேராசையை உணர்த்துகிறது. எவ்வளவுதான் செல்வம் சேர்ந்தாலும் அது காணவில்லை. இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற அந்த பேராசையால் தன ஆரோக்கியத்தை மறந்து குடும்பத்தை மறந்து ஆலாய் பறக்கிறான். நிம்மதியை தொலைக்கிறான். கடைசியில் தூக்கத்தை இழந்து மன ஆரோக்கியத்தை இழந்து மனவெறிக்கு ஆளாகி டாக்டரிடம் தஞ்சமடைகிறான். இனி தூக்க மாத்திரை, சைக்கோ மருந்துகள் என்று அவற்றிற்கு அடிமையாகி தன் ஆயுளை மிக வேகமாக தொலைக்கிறான். 
தூக்க மாத்திரைகள் பற்றி நாம் ஏற்கனவே இந்த பிளாக்கரில் பதிவிட்டு இருக்கிறோம்.
எனவே இங்கு மனவெறி மருந்துகள் பற்றி மட்டும் ஒரு எச்சரிக்கை பதிவிடப்பட்டு இருக்கிறது.

மனவெறி (PSYCHOSIS):-

நம் மனோநிலையின் எண்ண ஓட்டங்களுக்கேற்ப நமது மூளை நரம்பு ஹார்மோன்களில்  நரம்பை தூண்டும் ஹார்மோன்கள் நரம்பை முடக்கும் ஹார்மோன்கள் என்று மாற்றி மாற்றி ஓடவிடுகிறது. மனம் அமைதி பெரும்பொழுது மூளை இந்த ஹார்மோன்களின் ஓட்டங்களை தானாகவே சரி செய்துவிடுகிறது. 
மனம் பதட்ட நிலையில் இருக்கும் பொழுதும்,வெறி பிடித்த நிலையில் இருக்கும் பொழுதும் சரி மூளை கீழ்கண்ட நரம்பு தூண்டி ஹார்மோன்களை ஓடவிடுகிறது. அவை,
1.நார்-அட்ரீனலின் (நார்-எபிநெப்ரின்)
2.டோப்பமின் 
3.அசிடைல்கோலின் 
4.குளூட்டாமிக் அமிலம் 
5.அஸ்பார்ட்டிக் அமிலம் 
மேற்கூறியவற்றில் டோப்பமின் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது.
காரணம் டோப்பமின்தான்,ஞாபகசக்தி, சிந்திக்கும் ஆற்றல்,நோக்கத்திற்கேற்ப உடல் உறுப்புகளை அசைத்தல், அறிவாற்றல்,பேச்சு மூச்சு என்று பல நிலைகளுக்கும் காரணியான ஹார்மோன் ஆகும்.
அதே வேளை சில பதட்டமான எல்லை மீறிய விரும்பத்தகாத சூழல்களுக்கு மூளை ஆளாகும் போது டோப்பமின் ஆளுமையும் எல்லை மீறுகிறது. இப்போதுதான் மனதில் நிலை தடுமாறிய வெறித்தனமான எண்ணங்கள் உருவாகக்கூடும். விபரீதமான காரியங்களில் மனம் ஈடுபட முற்படும்.
இந்த நிலையில்தான் சைக்கியாட்ரிஸ்டுகளிடம் போகிறார்கள். அவர் என்ன செய்வார்? தூக்க மாத்திரையும், மனவெறி தணிக்கும் மாத்திரைகளையும்தான் தருவார். படுக்கையிலிருக்க கூடிய வயோதிகர்கள் மதியில்லாத நிலையில் தரும் தொல்லைகளை சகிக்க முடியாமல் இந்த மருந்துகளை தந்து அவர்களை தூங்க வைக்கிறார்கள். ஆனால் நடமாடக்கூடிய நல்ல நிலையில் இருப்பவர்களும் இந்த மருந்துகளுக்கு அடிமைப்பட்டு தங்கள் உடலையும் மூளையையும் சிதைத்துக்கொண்டு இருக்கிறார்களே என்பதுதான் வேதனை.
இந்த மருந்துகளை தின்றுதான் டோப்பமினை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மனக்கட்டுப்பாடு ,நல்ல சூழ்நிலைகள் பொழுது போக்குகளில் ஆட்படுத்தல்,பொறுமை,சகிப்புத்தன்மை, மென்மையான உடற்பயிற்சிகள், சுற்றுலா என்று மனதை மாற்றக்கூடிய நல்ல செயல்களின்மூலம் கூட நம்முடைய ஹார்மோன்களின் சுரப்புகளை சீர்செய்ய முடியும்.
விரும்பத்தகாத  சூழல்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். தவிர்க்க முடியவில்லை என்றால் கடவுளின்மீது பாரத்தை போட்டு பொறுமையுடன் சகித்துக்கொள்ளுங்கள். சகிப்பு தரும் கஷ்டத்திற்கு பிறகு நிச்சயம் ஒரு சுகம் இருக்கிறது என்பது இறை வாக்கு.
நீங்கள் சாப்பிடும் மனவெறி தணிப்பான்கள் எப்படியெல்லாம் உங்கள் மூளையை தாக்குகின்றன என்பதை கீழ்கண்ட சில படங்களின் மூலம் விளக்கலாம்.
படம்-1-பெருமூளையின் அடிப்பகுதி-டோப்பமின் உருவாகுமிடங்கள் 
படத்தை இன்னும் தெளிவாக்க அதன் மீது க்ளிக் செய்யவும் 

மேலே காட்டப்பட்டுள்ள படத்தில்  சப்ஸ்டென்ஷியா நிக்ரா மற்றும் டெக்மெண்டல் கரு  என்ற பகுதிகளிலிருந்துதான் டோப்பமின் உற்பத்தியாகிறது.(படம்-1)
படம்-2-டோப்பமின் பெருமூளையில் பயணிக்கும் 4வழிகள் 
படத்தை தெளிவாகக்காண அதன் மீது க்ளிக் செய்யவும் 

நமது பெருமூளை மண்டலத்தில் அடிப்பகுதியில் இருக்கும் அடித்தள நரம்புத் தொகுதி மிக முக்கியமானதாகும் (படம் -1,2). இதை பேசல் கேங்கிலியா (Basal Ganglia) என்பர். இந்த பகுதியில் தான் நம் மனோநிலையின்  பெரும்பாலான செயல்பாடுகள் அடங்கியிருக்கின்றன. இங்கிருந்துதான் டோப்பமின் வெளியாகி மூளையில் நான்கு நிலைகளில் பாய்கிறது .
படம்-3
படத்தை தெளிவாகக்காண அதன் மீது க்ளிக் செய்யவும்.

மேலே படம் -3 இல் காட்டியபடி மனவெறி தணிப்பான்கள் டோப்பமினை அதன் ஏற்பிகளில் சேரவிடாமல் தடுத்து மனோநிலையை சீராக்குகின்றன. ஆனால் இதை தொடர்ந்து நீண்ட நாட்கள் சாப்பிடும் பொழுது மனோநிலையை மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன 

மனோநிலை பாதிப்பு :-
படம்-4
தெளிவாகப்பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யவும் 
தூக்கமின்மை, மனவெறி, மனச்சோர்வு உட்பட அனைத்து விதமான மன நோய்களுக்காகவும் நீங்கள் எடுக்கும் மருந்துகளும் மருத்துவமும் எவ்வளவு போலியானவை உண்மைக்கு புறம்பானவை என்பதை விளக்கத்தான் மேலே உள்ள படம்-4 இங்கு பதியப்பட்டு இருக்கிறது.

ஆம் தூக்கம் வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக நீங்கள் சாப்பிடும் தூக்க மாத்திரை உங்களை மீண்டும் தூக்கமின்மையிலும், தொடர்ந்து பரபரப்பு நிலையிலும் இறுதியில் மனவெறியிலும் கொண்டுபோய் விடுகிறது.
பிறகு டாக்டரிடம் போய் மனவெறிக்கு மருந்து சாப்பிடுகிறீர்கள். அதுவும் நீண்ட காலம் எடுக்கும் போது உங்களை அசதி, மயக்கம், மனச்சோர்வு என்ற நிலைகளுக்கு  கொண்டு போய் தள்ளுகிறது.
மீண்டும் டாக்டரிடம் போய் மனச்சோர்வுக்கு மாத்திரை எழுதி வாங்கி வந்து நீண்ட நாட்களுக்கு உபயோகிக்கும் போது அது மீண்டும் உங்களை மனவெறிக்கும் தூக்கமின்மைக்கு கொண்டு போய் விடுகிறது. (படம்-4). இப்போது எண்ணிப்பாருங்கள் இதில் எங்கே உண்மையான நிவாரணம் இருக்கிறது?
உங்களை நிரந்தர நோயாளியாக்குவதுதான் இந்த சைக்கோ மருந்துகள்.

உடல் பாதிப்புகள் :-

சைக்கோ மருந்துகள் மனதை மட்டுமல்ல உடலையும் பாதிக்கக்கூடியவை ஆகும். அவை கீழ்கண்ட உடல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
2.இதய மற்றும் இரத்த அழுத்த சீர்கேடு 
3.கல்லீரல் பாதிப்பு.
5.மூளை நரம்பு மண்டல பாதிப்பு.
6.வளர்சிதை மாற்றங்களில் சீர்கேடு -நீரிழிவு.

செவ்வாய், 12 ஜனவரி, 2021

கோலினெர்ஜிக் எதிர்ப்பான்கள் -ஜாக்கிரதை

 கோலினெர்ஜிக் நரம்புமண்டல அடைப்பான்கள்-பின் விளைவுகள்   
மனித நரம்பு மண்டலம் 
(HUMAN N.S)     

அசிடைல்கோலின், இது நம் உடலின் மொத்த நரம்பு மண்டலத்தில் 75% பகுதியை ஆட்டிப்படைக்கும் ஒரு நரம்பு தகவல் கடத்தி இயக்குநீர் (Neuro Transmitter Hormone) ஆகும். இதன் தாக்கம் தடுக்கப்பட்டாலும் பிரச்சினைதான்  தூண்டப்பட்டாலும் பிரச்சினைதான் . இங்கு நாம் இதன் தாக்கங்களை தடுப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை பற்றி மட்டுமே சுருக்கமாக ஆனால் தெளிவாக பார்ப்போம். 
பொதுவாகவே அசிடைல்கோலின் என்ற நரம்பு கடத்தி நீரை (Neurotransmitter Hormone) அதன் ஏற்பிகளில் (Receptors) சேரவிடாமல் அடைக்கும் எந்த ஒரு மருந்தும் கோலினெர்ஜிக் எதிர்ப்பான் வகையில் சேரும் . எனினும் நாம் இங்கு தானியங்கி நரம்பு மண்டல (Autonomic Nervous System) தொகுப்பின் ஒரு கிளையான கோலினர்ஜிக் நரம்பு மண்டலத்தின் (Cholinergic Autonomic Nervous System) பின்பகுதியின் (Postganglionic) இறுதியில் சுரக்கும் அசிடைல்கோலினை அதன் மஸ்காரின் வகை ஏற்பிகளில் (Muscarinic Receptors) சேரவிடாமல் அடைக்கும் மருந்துகளைப்பற்றி மட்டுமே பார்ப்போம். ஏனெனில் இந்த மஸ்காரின் ஏற்பிகள் குறிப்பிட்ட இலக்குகளாக உள்ள உறுப்புகளில் அமைந்திருப்பதால் இந்த மருந்துகளின் தாக்கங்கள் அந்த உறுப்புகளின் இயக்கங்களை வெகுவாக பாதிக்கும். இதை சுருக்கமாக கோலினெர்ஜிக் எதிர்ப்பு விளைவுகள் (Anticholinergic Effects) என்றும் கூறலாம் 

பாகம் -1

கீழேயுள்ள படம்-1 இல் கோலினெர்ஜிக் தானியங்கி நரம்பு மண்டலம் எந்தெந்த உறுப்புகளுக்கெல்லாம் பரவி இருக்கிறது என்பதை காணலாம் 
படம் -1

கோலினெர்ஜிக் நரம்பு மண்டலத்தின் முண்டு பிற்பகுதி நரம்புகள்  (Postganglionic neurons) 
உடலின் பல பாகங்களுக்கும் பரவி இருந்தாலும் முக்கியமான பகுதிகள், கண், இதயம், நுரையீரல் மண்டலம், வாய் மற்றும் ஜீரண மண்டலம், சிறுநீர் மற்றும் பாலுறுப்பு மண்டலம், மற்றும்  
இதில் வியர்வை மண்டலமும் அடங்கும்.  (படம் -1).
இந்த நரம்பு மண்டலங்களின் இறுதியில் சுரக்கும் அசிடைல்கோலின் என்ற நரம்பு செய்திகடத்தியின் ஏற்பிகள் அந்தந்த உறுப்புகளிலேயே அமைந்துள்ளது. அதற்கு மஸ்காரினிக் ஏற்பிகள் என்று பெயர்.(படம் -1)
அசிட்டைல்கோலின் தனது மஸ்காரின் ஏற்பிகள் மூலம் எப்படி அதன் இலக்கு உறுப்புகளில் தாக்கங்கள் ஏற்படுத்துகின்றது என்று பார்க்கலாம்.
1.கண்:-
படம்-1அ 

மேலே படம்-1இல் காட்டியபடி கண்ணின் மஸ்காரின் ஏற்பியை தாக்கும் அசிடைல்கோலின் கீழ்கண்ட விளைவுகளை கண்களில் ஏற்படுத்துகிறது .
1.கண்ணின் சீலியா தசைகளை குறுக்குகிறது 
2.கண்ணின் கருவிழியை குறுக்கி விழித்திரையில் விழும் பிம்பத்தை சரிசெய்து தெளிவாக்குகிறது 
3.கண்ணீரை சுரக்கவைப்பதன் மூலம் கண்ணின் ஈரப்பதத்தை உறுதி செய்கிறது 

2.இதயம் :- 
படம் 1ஆ 
இதயத்தின் மஸ்காரின் ஏற்பியை தாக்கும் அசிடைல்கோலின் இதயத்திலும் இரத்த அழுத்தத்திலும் பின் வரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
1.இதயத்துடிப்பு நிதானப்படுத்தல் 
2.இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் சீராக இருத்தல் 

3.சுவாசமண்டலம் 
படம்-1இ 
நுரையீரல் மற்றும் சுவாசபகுதியிலிருக்கும் மஸ்காரின் ஏற்பிகளை அசிடைல்கோலின் தாக்குவதன் மூலம் கீழ்கண்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது 
1.நுரையீரலிலிருந்து தொண்டை மற்றும் மூக்கு வரை உள்ள பகுதிகளின் சுரப்புகளை சீர்படுத்தி அவற்றின் ஈரப்பதங்களை நிலைப்படுத்துகிறது 
2.சுவாசக்குழாய்கள் விரிவடைந்து சுவாசகுழாய் மற்றும் காற்றுப்பைகளின் அழுத்தம் (Alveolar Pressure) நிலைகுலைந்துவிடாமல் சீர் செய்கிறது. அதாவது சுவாசக்குழாய்கள் விரிவடையாமல் பார்த்துக்கொள்கிறது.

4.ஜீரண மண்டலம் 
படம்-1ஈ 

படம்-1ஈ ஈ 
வயிற்றின் கீழ்பகுதியிலும் குதத்தின் கீழ் வாயிலும் வளையம் போல் சுற்றி இருக்கும் ஸ்பீன்க்டர் (Sphincter Muscle) சதையை விரிய வைத்தும், குடலின் அசைவுகளை அதிகரித்தும் கழிவுகள் தடையில்லாமல் வெளியேற அசிடைல்கோலினின் மஸ்காரின் தாக்கம் உதவுகிறது.(பார்க்க படம்-1ஈ & படம் 1-ஈ ஈ )

5.சிறுநீர் & பாலுறுப்பு-ஆண் & பெண் 
படம் 1உ 

அசிடைல்கோலினின் சிறுநீர் மற்றும் ஆண் பாலுறுப்புகளின் மீது ஏற்படும் மஸ்காரின் விளைவுகள் பின்வருமாறு:-
1.சிறுநீர் பை சுருங்குதல் 
2.சிறுநீர்ப்பையின் கீழ்வாயிலுள்ள வளைய தசை விரிவடைந்து சிறுநீர் வெளியேற உதவுதல் 
3.ஆணுறுப்பு விறைத்தல் (Erection)
பெண் பால் உறுப்புகளின் மீது அசிடைல்கோலினின் மஸ்காரின் தாக்கம்  இல்லை. 
எனினும் பொதுவாக உடல் முழுவதும் கோலினெர்ஜிக் அட்ரீனர்ஜிக் நரம்புத்தாக்கங்கள் ஒரு சமன்பாட்டிலேயே இருக்கின்றன. கோலினர்ஜிக் எதிர்ப்பான்களை பெண்கள் அளவு மீறி பயன்படுத்தும் போது இந்த சமன்பாடு சீர்குலைந்து பெண்பாலுறுப்புகளான சினை, கர்ப்பப்பை போன்ற உறுப்புகள் அசாதாரண நிலையில் இயங்கலாம். உதாரணமாக கர்ப்பிணியின் கர்ப்பப்பை கோலினர்ஜிக் எதிர்ப்பான்களால் அதிக அட்ரீனர்ஜிக் தாக்குதலுக்கு ஆளாகி சுருங்கி கருச்சிதைவையோ அல்லது குறைப்பிரசவத்தையோ உண்டாகலாம்.

6.தோல் &வியர்வை சுரப்பிகள் 
படம்-1ஊ 


பாகம் -2-பின் விளைவுகள் 

இனி கோலினெர்ஜிக் மஸ்காரினிக் எதிர்ப்பான்கள் மூலம் அசிடைல்கொலினின் மஸ்காரின் தாக்கங்களை முடக்குவதால் ஏற்படும் விளைவுகளை பார்க்கலாம். இதில் எவரும்  மேலே பாகம் -1-இல் விவரிக்கப்பட்ட மஸ்காரின் விளைவுகளுக்கு எதிர்விளைவுகள்தான் உண்டாகும் என்று சுலபமாக கணிக்கலாம். இதை கீழே உள்ள படம்-2இல் காணலாம்.
படம்-2

மேலே படம்-2 இல் மஸ்காரின் தாக்கத்தை முடக்கினால் என்னென்ன எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதை மேல் கீழ் அம்புக்குறிகள் (↑ ↓) இட்டு காட்டி இருப்பதால் இதை மேற்கொண்டு விவரிக்கத்தேவை இல்லை.
எனினும் சுருக்கமாக கோலினர்ஜிக் எதிர்ப்பான்களால் ஏற்படும் பாதிப்புகளை  கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்:-
1.கண் வறட்சி.,தெளிவற்ற பார்வை 
2.இதயத்துடிப்பு அதிகரித்தல் 
3.இரத்த அழுத்தம் உயருதல் 
4.சுவாசமண்டலத்தில் விரிவு மற்றும் வறட்சி. மூச்சு திணறல் .
5.வாய் வறட்சி 
6.மலச்சிக்கல் 
7.சிறுநீர் அடைப்பு 
8.ஆண்மைக் குறைவு 
9.வியர்வை வெளியேற முடியாமல் உடல் உஷ்ணம் அதிகரிப்பு 
10.மூளைக்கு  இரத்த ஓட்டம் குறைவதால் தலை சுற்று,மயக்கம்,சோர்வு, மாயத்தோற்றங்கள் ஏற்படும்.
நாம் அன்றாடம் உபயோகிக்கும் எத்தனையோ மருந்துகளில் இத்தகைய கோலினர்ஜிக் எதிர்ப்பு தன்மைகள் உள்ளன. அவற்றில் டாக்டர் சீட்டில் கிடைக்கும் மருந்துகளும் அடங்கும்.
அலர்ஜி இருமல் டானிக்குகளை உபயோகிக்கும் போது கவனம். அவற்றில் இருக்கும் டைப்பன்ஹைட்ராமின் ஹைட்ரொக்ளோரைடு, குளோர்பெபெனிரமின் மாலியேட் போன்றவை கோலினர்ஜிக் எதிர்ப்பான்களாகும். இன்னும் செட்ரிஜின் (செட்ஜின்),லீவோசெட்ரிஜின், மான்டிலுகாஸ்ட் போன்ற அலர்ஜி மற்றும் ஆஸ்துமா மருந்துகளிலும் கோலினர்ஜிக் எதிர்ப்பு  இருக்கிறது. பொதுவாக அலர்ஜி மருந்துகள், தூக்க மருந்துகள், ட்ரிப்டோமர் போன்ற சைகோட்டிக் மருந்துகளும் அனைத்திலும் கோலினர்ஜிக் எதிர்ப்பு சக்தி உண்டு.
தூக்க மாத்திரைகளை ரெகுலராக விழுங்கினால்தான் எனக்கு தூக்கமே வருகிறது என்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை நீங்கள் தூங்கும் இந்த தூக்கம் ஆரோக்கியமான தூக்கமல்ல. இப்படி மாத்திரை போட்டு தூங்குவதைவிட நீங்கள் தூங்காமலே ஆரோக்கியமாக இருக்கலாம்.ஏனென்றால் இந்த கெட்ட தூக்கம் உங்கள் உறுப்புகளையும் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து கொண்டிருக்கிறது. உங்களை வாழ்க்கையின் எல்லைக்கே கொண்டுபோய்க்கொண்டு இருக்கிறது. அவை அனைத்துமே கோலினெர்ஜிக் எதிர்ப்பான்களாகும். உங்கள் நரம்பு மண்டலம் சிதைந்து சின்னாபின்னமாகிப்போகும். கை நடுங்கி கண் மறையும் காலம் வெகு சீக்கிரம் வந்து சேரும்.
குழைந்தைகள் அழுது தொல்லை தருகிறது என்பதற்காக வயிற்றுவலி, அல்லது இருமலுக்கு தரும் சொட்டுமருந்துகளை கொடுத்து தூங்கவைக்கிறார்கள்.இது எவ்வளவு பெரிய கொடுமை. ஏனென்றால் அவை அனைத்துமே கோலினர்ஜிக் முடக்கிகளாகும்.
அல்சர் மாத்திரைகளான ரானிட்டிடின் (Ranitidine), இரத்தம் நீர்க்கும் மருந்தான வார்பாரின் (Warfarin), நீரிளக்கி மருந்துகளான லாசிக்ஸ் (Lasix or Furosamide), ஹைட்ரொக்ளோரோ தையசாய்டு (Hydrochlorothiazide or Esidrex) போன்றவை மிகக்கடுமையான கோலினர்ஜிக் எதிர்ப்பான்களாகும்.இவற்றை வழமையாக எடுப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஓய்வு எடுக்கவேண்டும். டிரைவிங், கட்டுமான பணிகள் சமையல் போன்ற ரிஸ்க்கான காரியங்களில் உடனே ஈடுபடக்கூடாது.
டாக்டர்கள் உடல் வலிகளுக்கும் வலிப்புகளுக்கும்  அடிக்கடி எழுதிக்கொடுக்கும் மருந்துகள் பிரிகாபாலின் (Pregabalin or Lyrica), காபாபென்டின் (Gabapentin or Neurontin) ஆகியவை. இவை தாராளமாக பார்மசி கவுண்டர்களில் மிட்டாய் போல் கிடைக்கிறது. இவற்றை காபா தூண்டி (Gabaergic) மருந்து என்பார்கள். இவை அனைத்தும் கோலினெர்ஜிக் எதிர்ப்பு மருந்துகளாகும். அடிக்கடி இதை உபயோகித்தல் காக்காய் வலிப்பில் கொண்டுபோய் விடும், ஜாக்கிரதை. இன்னும் அதிகம் போனால் உங்கள் மூச்சையும் நிறுத்திவிடும், கவனம்.   
நாம் அன்றாடம் உபயோகிக்கும் கோலினர்ஜிக் எதிர்ப்புமருந்துகளின் குறைந்தபட்ச எண்ணிக்கையை கீழ்கண்டவாறு மூன்று அட்டவணைகளாக இடலாம்.
அட்டவணை-1


அட்டவணை-2


அட்டவணை-3

TABLE


ஞாயிறு, 20 டிசம்பர், 2020

நுண்ணுயிர் எதிர்ப்பான் மருந்துகள் துஷ்பிரயோகம் -ANTIBIOTIC ABUSES

ஆண்டிபையாட்டிக் மருந்துகள் -ஜாக்கிரதை 

 நுண்ணுயிர் எதிர்ப்பான்கள் அல்லது ஆண்டிபையாட்டிக் மருந்துகள் மிகவும் அற்புதமான மருந்துகளாகும். இவை கண்டுபிடிக்கப்பட்ட பின் மலேரியா டைபாய்டு போன்ற கொடிய தொற்று நோய்கள் இப்பொது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டன. இந்த தொற்று நோய்களில் பெரும்பாலானவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றனவே ஒழிய பெரும்பாலும் காணாமலே போய்விட்டன.
ஆனாலும் புதிது புதிதாக அதே தொற்று நோய்கள் வேறு வடிவங்களில் வருகின்றன.இதற்கு தலையான காரணம் ஆண்டிபையாட்டிக்குகள் என்ற இந்த பாக்டீரியா எதிர்ப்பான்களை மக்கள் நல்ல டாக்டர்களின் வழிகாட்டுதல்களின்றி சுயமாக தான்தோன்றித்தனமாக பயன்படுத்துதல் ஆகும். இவர்கள் ஆண்டிபையாட்டிக்குகளை சரியான அளவுடன் எடுத்துக்கொள்வதில்லை. ஒன்றிரண்டு சாப்பிட்டதும் நோய் தலைமறைவானவுடன் குணமாகிவிட்டதென்று தவறாக புரிந்து கொண்டு தொடர்ந்து சாப்பிடாமல் விட்டுவிடுகிறார்கள் . அதிர்ஷ்டவசமாக எல்லா பாக்டீரியாக்களும் இல்லாவிட்டாலும் பெரும்பாலான பேக்டீரியாக்கள் இப்படி செய்வதால் கொஞ்சகாலத்திற்கு பிறகு குறிப்பாக முதுமையிலோ அல்லது உடல் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுதோ அரைகுறையாக சாப்பிட்ட அந்த ஆண்டிபையாட்டிக்கை பாக்டீரியாக்கள் சரி செய்து வேறு வடிவத்தில் வீறு கொண்டு கிளம்பும்.
அதே மாதிரி ஒரே ஆன்டிபயாட்டிக்கை நினைத்த பொழுதெல்லாம் திரும்பத்திரும்ப சாப்பிடுவதாலும் Antibiotic Resistance என்ற நிலை ஏற்படும்.இந்நிலையில் அந்த பாக்டீரியாவை அழிக்க முடியாமல் அந்த ஆண்டிபையாட்டிக் செயலற்றுப்போய்விடும்.
உதாரணமாக சிப்ரோபிளெக்சாசின் (Ciprofloxacin) போன்ற 4-fluoroquinolone மருந்துகளை சர்வசாதாரணமாக சின்னச்சின்ன குறிப்பாக குறுகிய கால ஜலதோஷம்,இருமல் (Acute bronchitis), நடுக் காதுவலி (Otitis media),சாப்பிடுவதால், மற்ற ஆபத்தான நோய்கிருமிகள் அதாவது தோலில் தடிப்புகள் காய்ச்சல் நிமோனியா போன்றவற்றை உண்டாக்கும் MRSA Methicillin Resistant Staphylococcus Aureus) கிருமி , சிறுநீர் தொற்றை உண்டாக்கும் ஈ-கோலை (E-Coli),நிமோனியாவை உண்டாக்கும் கிருமிகள் இவை அனைத்தும் பிற்காலத்தில் வீறு கொண்டு கிளம்புவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.இவை அசாதாரணமானவைதான்  என்றாலும் கவனம் தேவை. பொதுவாக சிப்ரோ போன்ற மருந்துகள் தசை நார்களை பாதிக்கும் இயல்புடையவை.
சிப்ரோப்ளெக்ஸாஸின் போன்ற மருந்துகள் பாக்டீரியா செல்களை மட்டுமே தாக்கும் என்றில்லை ,தவறாக தான்தோன்றித்தனமாக உபயோகிக்கும் பட்சத்தில் எந்த ஒரு ஆண்டிபையாட்டிக்கும் மனித செல்களையும் தாக்கும்.
உதாரணமாக டைபாய்டுக்கு பயன்படுத்தப்பட்ட குளோரோமைசின் சிலருக்கு சிவப்பணுக்களை சிதைத்து  இரத்த சோகையை (Aplastic Anemia)உண்டாக்கி இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக சில கண் சொட்டு மருந்துகளை தவிர்த்து வேறு எதிலும் இது இப்போது பயன்பாட்டில் இல்லை.
ஆண்டிபையாட்டிக் துஷ்பிரயோகம் 

1.டாக்டர் சீட்டு இல்லாமல் உபயோகித்தல் :-
பாமரர்கள் என்றில்லாமல் படித்தவர்கள் கூட இதை செய்கிறார்கள். எப்போதோ வேறு சூழ்நிலையில் அல்லது வேறு யாருக்கோ எதற்கோ டாக்டரால் பரிந்துரைக்கப்பட்டு நோயை குணமாகிய ஒரு ஆண்டிபையாட்டிக் பெயரை தெரிந்து வைத்துக்கொண்டு பார்மசியில் வந்து எனக்கு இன்ன ஆண்டிபையாட்டிக் வேண்டும் அதுவும் ஒரு நாலைந்து தந்தால் போதும் என்று வாங்கி உபயோகிக்கிறார் . இப்படி சாப்பிடுவதால் அந்த நோய்கிருமிக்கு மேலும் வலுவூட்டுகிறார் என்றே சொல்லலாம். நோய் அப்போதைக்கு குணமானாலும் பின்னொரு கால கட்டத்தில் அது வீறு கொண்டு எழலாம்.
சிலர் வைரஸ் தொற்றினால் உண்டாகும் மிதமான ஜலதோஷம் இருமல் போன்றவற்றுக்கும் ஆன்டிபயோட்டிக்குகளை பயன்படுத்துகிறார்கள். இந்த தவறை சில நேரம் டாக்டர்களும் வைரஸ் தொற்றை பாக்டீரியா என்று தவறாக கணித்து சீட்டு எழுதிக்கொடுக்கிறார்கள். சரியாக ரத்தப்பரிசோதனை கூட செய்வதில்லை. ஏன் இந்த கொரோனா தொற்றில் குளோரோகுயினையும் அஜித்ரோமைசினையும் பரிந்துரைத்த கொடுமையையும் நாம் கண்டோமே.
 2. வீட்டில் மீதமிருக்கும் ஆண்டிபையாட்டிக்குகளை உபயோகித்தல்:-
வீட்டில் மற்றவர்கள் உபயோகித்து மீதமிருக்கும் மருந்தை தான் உபயோகிப்பது மிகப்பெரும் கேட்டை விளைவிக்கும் .
3.வேறு தொற்று நோய்க்கு உபயோகித்த பழைய டாக்டர் சீட்டை எல்லா நேரங்களிலும் உபயோகித்தல்:-
டாக்டர் ஒரு சமயத்தில் வேறு ஒரு தோற்று நோய்க்காக ஒரு மருந்தை பரிந்துரைத்திருப்பார் . அதையே எல்லா நேரங்களிலும் பயன்படுத்துவது மிகப்பெரும் கெடுதல் ஆகும் .
4.அடிக்கடி கண்ட மேனிக்கு ஆண்டிபையாட்டிக்குகளை பயன்படுத்துதல்:-
இதனால் ஆன்டிபையாட்டிக் எதிர்ப்புசக்தி பாக்டீரியாவுக்கு இன்னும் கூடுவதோடு உடல் தன் இயல்பு எதிர்ப்பு சக்தியை இழக்கத்துவங்கும்
5.டாக்டர்களின் கூடுதல் மற்றும் குருட்டு பரிந்துரைப்புகள்:-
சில டாக்டர்கள் குருட்டாம்போக்கில் சில கணிப்புகள் மூலம் தற்காலிகமாக ஓர் ஆண்டிபையோட்டிக்கை முதலில் பரிந்துரை செய்து சீட்டு தருவார். அதேசமயம் ரத்த பரிசோதனைக்கும்  பரிந்துரைப்பார். பரிசோதனை முடிவுகள் வருவதற்கு சில நாட்கள் ஆகலாம்.அதுவரை நோயாளி டாக்டரின் கணிப்பு ஆன்டிபயாட்டிக்கை சாப்பிட வேண்டியது இருக்கும். பிறகு பரிசோதனை முடிவு கணிப்புக்கு மாற்றமாக வந்தால் உடனே மருந்தை மாற்றி வேறொரு சீட்டு தருவார். இதற்கு பெயர் ஓவர் பிரிஸ்க்ரிப்ஷன் (Over Prescription)  என்பர் . இது டாக்டரின் தவறான பொறுப்பற்ற அணுகுமுறையையே காட்டுகிறது.
இந்த நேரங்களில் அந்த கணிப்பு டாக்டர் சீட்டை உபயோகிக்காதீர்கள். அதோடு பரிசோதனை முடிவுகளை கொண்டு வேறு ஒரு நல்ல டாக்டரிடம் போங்கள்.
வீரிய தொற்று (Superinfection):-
இது போன்ற தொற்றுகள் பொதுவாக சுத்தமாக சுகாதாரமாக பராமரிக்கப்படாத ஆஸ்பத்திரிகளில் அல்லது தாய் சேய் நல விடுதிகள், சுகாதாரமாக பராமரிக்கப்படாத தீவிர சிகிச்சை வார்டுகள், பிரசவ வார்டுகள் போன்ற இடங்களில் நீண்ட நாட்கள் தங்குவது, சுயமாக ஆண்டிபையாட்டிக் மருத்துவம் எடுத்துக்கொள்வது இவற்றினால் ஏற்படும்.
ஆஸ்பத்திரிகளில் நீண்ட நாட்கள் தங்கி ஒரு கிருமி தொற்றுக்கு  ஆண்டிபையாட்டிக் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பொழுது அங்கு பதுங்கி இருக்கும் இன்னொரு கிருமிக்கு அந்த ஆண்டிபையாட்டிக்கை எதிர்க்கும் சக்தி வீரியமாகி அது இரண்டாது தொற்றாக மாறும் வாய்ப்புகள் உண்டு.இதற்கு அடுத்த தொற்று (Secondary Infections) அல்லது வீரிய தொற்று (Superinfections) என்பர்.
உதாரணங்கள்:-
1.தோலில் புண்களையும் முற்றிய நிலையில் நிமோனியாவையும் உண்டாக்கும் MRSA என்ற கிருமி. இதற்கு மெதிசில்லின் எதிர்ப்பு ஸ்டாபிலோகாக்கஸ் ஏரியஸ் (Methicillin Resistant Staphylococcus Aureus) என்று பெயர்.
இது நீண்ட நாள் நோயாளியுடன் ஆஸ்பத்திரியில் தங்கும் ஆரோக்கியமானவருக்கும் தொற்றக்கூடும். இந்த கிருமி சாதாரணமாக மேதிசில்லின் போன்ற பெனிஸிலின் வகை ஆண்டிபையாட்டிக்குகளால் குணப்படுத்தப்படக்கூடிய  ஸ்டெபைலோகாக்கஸ் ஏரியஸ் வகையை சேர்ந்ததாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் மெதிசில்லின் போன்ற பெனிசிலின் வகை ஆண்டிபையாட்டிக்குகளை தொடர்ந்து அதிகமாக இதற்கு பயன்படுத்தியதால் மரபு மாற்றம் அடைந்த இந்த S.Aureus இப்பொது மேதிசில்லின்  போன்ற மருந்துகளை எதிர்க்கும் சக்தி பெற்று MRSA வாக மாறிவிட்டது. இது ஆஸ்பத்திரி போன்ற சுகாதாரநிலையங்களில் அதிகமாக காணப்படுகிறது. இப்போது தெரிகிறதா ஆண்டிபையாட்டிக்குகளை நாம் எவ்வளவு கவனமாக கையாளவேண்டும் என்று.
உதாரணம் -2:-
குடலில் சேதங்களை உண்டாக்கும் குளோஸ்ட்ரிடியம் டிஃபிஸில் (Clostridium difficile or C.diff ) என்ற மருத்துவமனை கிருமி. இதுவும் சுகாதாரமில்லாத மருத்துவமனைகளில் நீண்டநாள் தங்கும் எவருக்கும் இது தொற்றும்.
பொதுவாக இது சிப்ரோஃப்ளக்ஸஸின் (Ciprofloxacin) போன்ற ஆண்டிபையாட்டிக்குகளை தொடர்ந்து அல்லது மனம் போன போக்கில் எடுத்துக்கொள்வதாலும் வருகிறது .
இப்படி ஒரு ஆண்டிபையோட்டிக்கை சாப்பிடுவதால் வரும் இந்த கிருமிகளை ஒழிக்க வான்கோமைசின் (Vancomycin),மெட்ரோனிடஜோல் (Metronidazole) போன்ற வேறு ஆண்டிபையாட்டிக்குகளை பயன்படுத்த வேண்டுமாம்.
பிறகு அந்த ஆண்டிபையாட்டிக்குகளால் உண்டாகப்போகும் அடுத்த மரபு மாற்ற கிருமியை ஒழிக்க கார்போரேட்டுகள் இனி வேறு புதிய ஆண்டிபையாட்டிக்குகளை சந்தைக்கு கொண்டுவருவார்கள். இனி அதை பயன்படுத்தவேண்டும்.இப்போது புரிகிறதா அன்டிபையாட்டிக் சூதாட்டம் என்றால் என்னவென்று. இது ஆண்டிபையாட்டிக்குகள் என்று மட்டுமல்ல. வைட்டமின் மாத்திரை டானிக்குகளிலிருந்து , இருமல் டானிக்,பிரிபயாட்டிக்,ப்ரோபயாடிக் என்று எல்லாமே இப்படித்தான்.
ஆன்டிபயாடிக் நச்சுத்தன்மை பாதிப்புகள்:
1.கல்லீரல் 
எந்த ஒரு மருந்தும் கல்லீரலில்தான் வளர்சிதை மாற்றங்கள் அடைகின்றன.அதற்கு ஆன்டிபயாட்டிக்குகளும் விதிவிலக்கு அல்ல. அவ்வாறு வளர்சிதை மாற்றம் அடையும் பொழுது, கல்லீரலில்  திசுக்கள் சேதம்,பித்த நீர் கட்டிகள் போன்ற பின்விளைவுகளை உண்டாக்குகின்றன 
சிறுநீரக பாதிப்பு:-
அமினோகிளைக்கோஸைடு வகையை சேர்ந்த ஜென்டமைசின் (Gentamicin), டோப்ரமைசின் (Tobramycin), ஸ்ட்ரெப்டோமைசின் (Streptomycin), அமிகஸின் (Amikacin) போன்ற ஆண்டிபையாட்டிக்குகளும் காணாமைசின் (Kanamycin), நியோமைசின் (Neomycin) ,பாலிமிக்சின் (Polymyxin), ஆம்போடெரிஸின்-B (Amphotericin-B) போன்ற அன்டிபையாட்டிக்குகளும் கவனமில்லாமல் பயன்படுத்தினால் சிறுநீரகங்களை பாதிக்கக்கூடும்.
அதிகம் அமாக்சிசிலினை(Amoxicillin) எடுத்துக்கொள்வதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுநீர் படிகங்களாக (Crystalluria) மாறி வலியுடன்  வெளியேறும்.
3.ஜீரணமண்டலம் :-
பெரும்பாலான ஆன்டிபயாட்டிக்குகள் ஜீரணமண்டலத்திலுள்ள நன்மை பயக்கும் நல்ல ஜீரண நுண்ணுயிர் தொகுப்பை (digestive bacterial flora) அழித்து வயிற்றுப்போக்கு, அஜீரணம், வயிற்று வலி போன்ற உபாதைகளை உண்டாக்கும். இதை தவிர்த்துக்கொள்ள வாழைப்பழம்,பெர்ரி பழங்கள், பீன்ஸ் ,பயறு வகைகள்,முந்திரி,நிலக்கடலை போன்ற பருப்பு வகைகள் ஆகியவற்றை மருந்து சாப்பிடும் முன்னும் பின்னும் எடுத்துக்கொள்ளுங்கள்.இயற்கையாக கிடைக்கும் இந்த துணை உணவுகளை விட்டுவிட்டு பார்மசிகளில் போய் ஆன்டிபயோட்டிக்குகளின் பக்கவிளைவுகளை தவிர்ப்பதற்கென்று அவர்களின் கடை ரேக்குகளில் அலங்காரமாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் பிரிபயாட்டிக்குகள் மற்றும் ப்ரோபயாட்டிக்குகள் மருந்துகளை வாங்கி மீண்டும் அவர்கள் வலையில் விழாதீர்கள். அதெல்லாம் வெறும் கண்துடைப்புகள் மட்டுமல்ல வியாபார சூதாட்டம். இயற்கையில் கிடைக்கும் பழங்கள் பருப்புகளை விட அவை ஒன்றும் உயர்ந்தவை அல்ல.
4.கணையம்:-
ஹெலிகோபேக்டர் பைலோரி (H .Pylori) போன்ற தொற்றுக்காக  பயன்படுத்தப்படும் டெட்ராசைக்ளின் (Tetracyclines) மெட்ரோனிடஜோல் (Metronidazole) போன்றவை கவனக்குறைவாக பயன்படுத்தப்படும் பட்சத்தில் கணைய பாதிப்புகளை (Pancreatitis) உண்டாக்குவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .
5.இதயம் மற்றும் இரத்த ஓட்டம் :-
அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் அமாக்சிசில்லின் (Amoxicillin) போன்ற ஆன்டிபயோட்டிக்குகள் உங்கள் ரத்த அழுத்தத்தில் லேசான மாற்றங்களை உண்டாக்குவதாக கண்டிருக்கிறார்கள்.
பெரும்பாலான ஆன்டிபயோட்டிக்குகள்  தவறாக பயன்படுத்தப்படும் போது ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள் (Arrhythmias), இதய துடிப்பு அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம் போன்ற பின்விளைவுகளை உண்டாக்குகின்றன.
அமாக்சிசிலினை (Amoxicillin) ரத்தமிளக்கிகளான ஆஸ்பிரின் (Aspirin), க்ளோபிடோக்ரெல் (Clopidogrel) மற்றும் வார்ஃபாரின் (Warfarin) போன்றவற்றுடன் சாப்பிடாதீர்கள்.
ஆன்டிபயோட்டிக்குகளால் உண்டாகும்
பொதுவான பக்கவிளைவுகள்:-
1.குமட்டல், வாந்தி 
2.அஜீரணம் 
3.வயிற்று வலி,வயிற்று உப்புசம் ,
4.பெண் பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் நீர் வடிதல் 
5.தலைவலி 
6.உடலரிப்பு 
7.கறுத்த,வீங்கிய தும்புகள் முளைத்த நாக்கு 
அமாக்சிசிலினை ,C.difficile கிருமியால் ஏற்படும் வயிற்று போக்கு ,எப்ஸ்டீன்-பார் (Epstein -Barr )என்ற வைரஸ் தொற்று, மற்றும் கல்லீரல் கோளாறு உள்ளவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.




சனி, 5 டிசம்பர், 2020

கஞ்சாவை பற்றிய சில குறிப்புகள்

 கஞ்சாவை தெரிந்துகொள்ளுங்கள

வேறுபெயர்கள் :-மரிஜுவானா ,ஹஷீஷ் 

கலைப்பெயர் :கன்னாபிஸ் சட்டைவா 
                               கன்னாபீஸ்  இண்டிகா 
கிடைப்பது :- மொட்டுக்கள் ,பிசின்கள் 
உபயோகம் :-வாய்வழியாகவும் சாப்பிடலாம். போதையும் பாதிப்புகளும் தாமதமாகவே கிடைக்கும். ஆனால் கடுமையாக இருக்கும் 
மூக்கு அல்லது தொன்டை வழியாக புகைக்கலாம். பாதிப்பு உடனடியாக இருக்கும். போதையும் உடனடியாக ஏறும். ஆனால் இலேசாகவே இருக்கும் 
கஞ்சாவின் மருந்துகளும் மருத்துவ குணங்களும்  :-
கஞ்சாவில் அடங்கி இருக்கும் முக்கிய மருந்துகள் நான்கு. அவை, 
1.△9-டெட்ராஹைடிரோகன்னாபினால் (△9-tetrahydrocannabinol -THC)
2.கன்னாபினால் -Cannabinol (CBN)
3.கன்னாபிடயோல் -Cannabidiol (CBD)
4.ட்ரொனோபினால் -Dronobinol-செயற்கை THC
மேல் கண்ட பொருட்களை ஆல்கலாய்டுகள் (ALKALOIDS) அல்லது கன்னாபினாய்டுகள் (CANNABINOIDS) என்பார்கள் .காரணம் இவை காரத்தன்மையும் (ALKALINITY )இல்லாமல், அமிலத்தன்மையும் (ACIDITY) இல்லாமல் இரண்டுங்கெட்டான் நிலையிலுள்ள ஆல்கஹால்களாகும். 
மருத்துவ குணங்கள் :-
1.வலிநிவாரணி (CBN, CBD)
கண்ணபிஸ் ஆல்கலாய்டுகளை சாப்பிடுவதால் உடல் வலிகளுக்காக வலிநிவாரண மருந்துகள் சாப்பிடுபவர்கள் அந்த மருந்து அளவுகளை குறைத்துக்கொள்ளலாம் .
2.புற்றுநோயாளிகள் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பசியை தூண்டுதல் 
3.புற்றுநோய் செல்களை அழித்தல்(ஆய்வில்)
C.sativa வில் அதிகம் CBN -ம் CBD-ம் உள்ளன.எனவே இது அதிகம் போதை தராது.ஆனால் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். 
C.Indica வில் அதிகம் THC இருப்பதால் இது அதிகம் நரம்பு மண்டலத்தையும் மூளையையும் பாதிக்கும். அதிகம் போதையையும், கிரக்கத்தையும்  கொடுக்கும்.
இந்த மருந்துகள் கஞ்சா பிசினில் அடர்த்தியாக இருக்கின்றன.
பாதிப்புகள் -மூளை 
1.மயக்கம்,கிரக்கம் 
2.சாத்தியமில்லாத கற்பனைகள் 
3.மனநிலை பாதிப்பு 
4.ஞாபக சக்தி குறைதல்.
To study in English click  here






கஞ்சா போதைப்பொருள் இல்லையாம் - செய்தி புதுப்பிப்பு

கஞ்சா அடிக்கலாம் வாங்க 


செய்தி :-டிசம்பர் -4. 2020 தேதியிட்ட பிசினஸ் டுடே இதழில் வந்த ஒரு செய்தி.
பூனை முகம் காட்டும் புலி النمر ذو وجه القطةಬೆಕ್ಕಿನ ಮುಖದ ಹುಲಿപൂച്ച മുഖമുള്ള കടുവبلی کا سامنا والا شیر







கனாபிஸ் என்று சொல்லப்படக்கூடிய கஞ்சா அல்லது மரிஜுவானா என்ற செடி போதை பொருளா இல்லையா என்று ஐ.நா வின் போதை பொருள் பிரிவான போதை பொருள் கமிஷன் (UN COMMISSION ON NARCOTIC DRUGS-C.N.D)
உலக சுகாதார அமைப்பின் (W.H.O.) பரிந்துரையின்படி கடந்த புதன்கிழமை (02-12-20) அன்று ஓட்டெடுப்புக்கு விட்டதில் இந்தியா, யு.எஸ். மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட 27 நாடுகள் கஞ்சாவை.1961-ல் உருவாக்கப்பட்ட  ஆபத்தான மருந்துகள் (Schedule-IV ) பட்டியலிலிருந்து எடுத்துவிட ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. ரஷியா ,பாகிஸ்தான், சீனா உட்பட 25 நாடுகளே எதிர்த்து வாக்களித்த நிலையில் தீர்மானம் கஞ்சாவுக்கு ஆதரவாக நிறைவேறியது. ஆக இனி கஞ்சாவும் கஞ்சா பிசினும் அபின் ஹெராயின் போல கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளாக கருதப்படாது.
இந்தியாவும் இதை ஆதரித்து இருப்பதால் இந்தியா தனது NDPS (Narcotic Drugs and Psychotropic Substances-1985) அதாவது 1985 இல் இந்தியாவில் இயற்றப்பட்டு நடைமுறையில் இருக்கும் 
போதை மருந்துகள் மற்றும் மனப்பாதிப்புகளை உண்டாக்கும் மருந்துகள் என்ற பட்டியலிலிருந்து கஞ்சாவை விடுவிக்கலாம். இந்த ஓட்டெடுப்பின் முடிவின்படி 
 WHO வின் ஆலோசனையுடன்  கஞ்சாவும் கஞ்சா பிசினும் இனி மிக கொடிய ஆபத்தான மருந்துகள் என்ற பிரிவிலிருந்து (Schedule-IV) மிக இலேசான ஆபத்துள்ள பொருட்கள் (Shedule-I) என்ற பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே அவை இன்னும் போதை பொருட்கள்தான். ஆயினும் மிக இலேசான போதை தரக்கூடிய இலாகிரிப் பொருளாக கருதப்படுமாம். நல்ல வேடிக்கை.
கண்ணெதிரே பற்றி எரியும் நெருப்பையும் வெறும் மாயத்தோற்றம் என்று சொல்ல வருகிறார்களா இவர்கள் ?.மலத்தில் கெட்ட நாற்றமுடைய மலம் எது நாய் மலமா அல்லது மனித மலமா என்ற அடுத்து ஓர் ஆய்வு நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை .
கொரோனா என்ற ஒரு மாயப்பிசாசினால் உலகப்பொருளாதாரமே சீரழிந்து போய் நிற்கிறது .மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள் . இந்த நிலையில் ,
 உலக சுகாதார நிறுவனம் இந்த வாக்கெடுப்புக்கான அவசியம் பற்றி சொன்ன விளக்கம்தான் வேடிக்கையானது.
அதாவது கடந்த 59 வருடங்களாக கஞ்சாவை மிக ஆபத்தான பொருள் என்று வகைப்படுத்தி அதன் மருத்துவ குணம் பற்றிய ஆய்வுகளை முடக்கிவிட்டார்கள் என்பதுதான்.
 ஆய்வுகள் மேற்கொள்வதற்கு போதை தரக்கூடிய ஒரு பொருளின் மீதுள்ள சமூக கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய தேவை என்ன?என்பதை அவர்கள்தான் சொல்லவேண்டும்..
எல்லாப்பொருட்களிலும் நன்மையையும் தீமையும் கலந்தே இருக்கிறது.
கஞ்சாவில் சில நல்ல மருத்துவ குணங்கள் இருக்கலாம். அனாலும் அது சமூகத்தில் இளைய தலைமுறையினரால் துஷ்பிரயோகம் பண்ணப்படுகிறதே. தெரியவில்லையா?கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் கஞ்சா போதைக்கு அடிமையானவர்களை அது ஊக்கப்படுத்துவதுபோல் ஆகாதா?
அப்படியானால் அபினிலும் சிலநன்மைகள் இருக்கின்றன.அதற்காக அதையும் மிக எளிதாக சந்தையில் கிடைக்கும்படி செய்துவிடுவீர்களா?
உங்கள் விஞ்ஞான ஆய்வு அறிவின் நோக்கங்களின்  எல்லைதான் என்ன?
போதை என்பது மனிதனை கெடுக்கும். சமூகத்தை சீரழிக்கும். அதில் கடுமையானது இலேசானது என்று வேறுபாடுகாட்டி என்ன சொல்ல வருகிறீர்கள்? மேலும் நீங்கள் இலேசானது என்று சந்தைக்குள்  விட்டிருக்கும் புகையிலையும் பீடி சிகரெட் போன்ற பொருட்களும் எவ்வளவு கொடூரமாக மனிதனின் ஆரோக்கியத்தையும் அவனது பொருளாதாரத்தையும் சீரழித்துக்கொண்டிருக்கின்றன என்பதை கொஞ்சமாவது சிந்திக்கவும்.
இத்தனைக்கும் புகையிலையில் இருக்கும் நிக்கோட்டினுக்கு எந்த மருத்துவ குணமும் கிடையாது. புகைப்பது உடலுக்கு கேடு-அதிகாரப்பூர்வ எச்சரிக்கை  (SMOKING IS INJURIOUS TO HEALTH-STATUTORY WARNING) என்ற வெற்று எச்சரிக்கையுடன் பீடியையும் சிகரெட்டையும் சந்தையில் உலவ விட்டமாதிரி இனி கஞ்சாவுக்கும் லேபிள் போட்டு உலவ விடப்போகிறீர்களா?
இந்த படத்திற்கு விளக்கம் தேவையில்லை 

ஏற்கனவே குடி அரக்கனை திறந்துவிட்டு வருவாய் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஆளும் மாநில அரசுகள் இனி இந்த புகை அரக்கனையும் உலவ விடும் அந்த கெட்ட காலம் இந்தியாவில் மிக சமீபித்து விட்டது.
ஒவொரு குடும்பத்திலும் பெண்கள் கானான்மார்களை குடிகாரர்களாய் கண்டது போக இனி தங்கள் ஆண் பிள்ளைகளையும் புகை போக்கிகளாக காணும் கேடு நெருங்கிவிட்டது .
இதில் இந்தியா ஆதரித்து ஓட்டளித்திருப்பது மிகவும்  கவலைக்குரியது.  இனி மளிகைக்கடையில் இஞ்சி வெள்ளைப்பூண்டு வாங்குவது மாதிரி கஞ்சாவையும்  வாங்கிக்கொள்ளலாம் போலும்.
கஞ்சாவை பற்றிய சில குறிப்புகள்:-  இங்கே க்ளிக்குங்கள் 




வியாழன், 22 அக்டோபர், 2020

உயிரணுக்களில் புரதம் தயாரித்தல்-கார்ட்டூன் உவமேயம்-2

 மனித (யூகேரியோட் ) செல்களில் புரதம் தயாரித்தல் 


மேலே உள்ள படத்தில் கண்டவாறு உவமையாக மனித செல்கள் உட்பட யூகேரியோட் செல்கள் அனைத்திலும் புரதம் தயாரிக்கப்படுகிறது 
முதலில் Transcription என்ற நகலெடுப்பு  ஒரு முழு சமையல் புத்தகத்திலிருந்து ஏதோ ஒரு பகுதியை காபி எடுத்து சமையல் செய்ய பயன்படுத்துவது மாதிரி கருவுக்குள் தொடங்குகிறது. அந்த முழு சமையல் புத்தகமும் குரோமோசோமில் புதைந்து கிடக்கும் முழு DNA சங்கிலியாகும். அதில் தேவையான ஏதோ ஒரு பகுதி என்பது புரதம் தயாரிக்கும் தகவலை கொண்ட அந்த குறிப்பிட்ட ஜீன் ஆகும்.
இந்த ஜீனை mRNA  வாக காப்பி எடுக்கும் மெஷின்தான் DNA சார்பு RNA பாலிமரேஸ் (RNAP) ஆகும். 
காபி எடுக்கப்பட்ட ஒழுங்கற்ற mRNA வை சரிபார்த்து ஒழுங்காக்கி கருவை விட்டு வெளியே அனுப்புவது snRNA வாகும். இத்துடன் நகலெடுப்பு முடிந்தது 
இனி Translation என்ற மொழிபெயர்ப்பு. இது கருவுக்கு வெளியே சைட்டோபிளாசத்தில் நடைபெறும்.
mRNA யில் உள்ள ரெசிபியின் அடிப்படையில் tRNA க்கள் ஒவ்வொன்றாக ஒவ்வொரு அமினோ அமிலங்களையும் கொண்டு அந்த ரிபோசோம் என்ற அடுப்பில் வைத்து சமைத்து புரதமாக வெளியாக்குகிறது 

உயிரணுக்களில் புரதம் தயாரித்தல்-கார்ட்டூன் உவமேயம்-1

1.பாக்டீரியா (புரோகேரியோட்டுகள் )


 


பாக்டீரியா செல்களில் புரதம் எவ்வாறு தயாராகிறது   என்பதை மேலே உள்ள  கார்ட்டூன்  படத்தை  உவமையாக கொண்டு கீழ்கண்டவாறு விளக்கலாம் 
Transcription என்ற காப்பி எடுத்தலை ஒரு சமையல் புத்தகத்தின் அசல் பிரதியின் தேவையான ஏதோ ஒரு பகுதியை மட்டும் ஒரு காப்பி எடுக்கும் இயந்திரத்தில் வைத்து காப்பி எடுத்தலுக்கு உவமையாகக் கொள்ளலாம் 
படத்தில் கட்டப்பட்டதுபோல் அசல் சமையல் புத்தகம் மொத்த DNA ஆகும். அதில்  குறிப்பிட்ட பகுதி என்பது புரதம் தயாரிக்க தேவையான தகவல்கள் அடங்கிய DNA சங்கிலியின் அந்த குறிப்பிட்ட ஜீன் பகுதியாகும்.
அதை காப்பி எடுக்கும் கருவிதான் DNA சார்புள்ள RNA பாலிமரேஸ் (RNAP ) என்ற நொதியாகும். எடுக்கப்படும் காப்பி mRNA ஆகும்.
இனி எடுக்கப்பட்ட mRNA  காப்பியை மொழிபெயர்த்து அதிலுள்ள ரெஸிபிக்கு ஏற்ற மாதிரி வித விதமாக அமினோ அமிலங்களை ரிபோசோம் என்ற அடுப்புக்கு கொண்டு வர பயன்படும் விதவிதமான கரண்டிகள் தான் tRNA க்களாகும்.
முடிவாக புரதம் ரிபோசோமில் தயாரிக்கப்படுகிறது 



செவ்வாய், 20 அக்டோபர், 2020

உடலுக்குத் தேவையான மிக முக்கிய அமினோ அமிலங்கள் -மூலக்கூறு உயிரியல் -3-4

 உடலால் தயாரிக்க முடியாத மிக அவசியமான  அமினோ அமிலங்கள் 

எல்லா உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்கும்,உயிரோட்டத்திற்கும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் மிக இன்றியமையாதது புரதம் ஆகும். மனிதனாகவோ  (யூகேரியோட்), பாக்டீரியாவாகவோ  (புரோகேரியோட்)  அல்லது வைரஸாகவோ எதுவாக   இருந்தாலும்  அனைத்து உயிரினங்களின் செல் வளர்ச்சிக்கும் மிக அத்தியாவசியமானது புரதச்சத்து ஆகும்.
இந்த புரதங்களை உயிரினங்களின் செல்கள்தான் தயாரிக்கின்றன. இந்த புரதங்களை தயாரிப்பதற்கான அடிப்படை மூலக்கூறுகள் அமினோ அமிலங்கள் ஆகும். பெரும்பாலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களின் செல்களும் புரதங்கள் தயாரிக்க 20 மிக முக்கிய அமினோ அமிலங்களை பயன்படுத்துகின்றன. அவற்றில் 11 அமினோ அமிலங்களை நம் உடல் செல்களே தயாரித்துக்கொள்கின்றன. ஆனால் மீதி 9 அமினோ அமிலங்களை உடலால் தயாரிக்க முடியாது. அது வெளியிலிருந்து உணவாகவோ அல்லது மருந்தாகவோதான் உடலுக்கு தரப்படவேண்டும். அந்த அமினோ அமிலங்களும் அவை கிடைக்கப்பெறும் உணவு வகைகளையும் கீழே காணலாம் 
பொதுவாகவே புரதச்சத்து அதிகமுள்ள அசைவ உணவுகளான ஆடு,மாடு மீன்,முட்டை பால் பருப்பு வகைகள் அனைத்திலும் அமினோ அமிலங்கள் அபரிமிதமாக கிடைக்கின்றன 
1.லைஸின் :- இது உடலுக்கு சக்தியும் வலிமையும் தரக்கூடிய L-கார்னிட்டின் மற்றும் இன்சுலின் ஆகிய புரதங்களை  தயாரிக்க பயன்படுகிறது. மேலும் லைஸின் இன்சுலினை உடல் பயன்படுத்தும் திறனை அதிகரிக்கிறது. 
லைஸின் அதிகமுள்ள உணவு பண்டங்கள்:-
1.ஆடு,மாடு,& கோழி 
2.பார்மேசன் சீஸ் கட்டி 
3.காட் & சால்மன் மீன்கள் 
4. முட்டைகள் 
5.சோயா மொச்சை &சோயா தயிர் (Tofu)
6.ஸ்பிருலினா என்ற பச்சை பாசி 
7.வெந்தயம்.
2.லியூஸின் :-லியூசின் மெலிந்த உடல் 
 வாகு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.உடல் புரத உற்பத்தியை தூண்டி உடல் சதை போடுவதை ஊக்குவிக்கும். சதை கரைவதை தடுக்கும் 
லியூஸின் அதிகமுள்ள பொருட்கள் 
1.மோர்,தயிர் 
2.சோயா மொச்சை 
3.வேர் கடலை 
4.சணல் விதைகள் 
5.மாட்டிறைச்சி 
6.சால்மன் மீன்கள் 
7.முளை கோதுமை 
8.வாதுமை பருப்பு 
9.சுட்ட அல்லது பொரித்த கோழியின் தொடை 
3.ஐஸோலியூஸின் :- 
ஐஸோலியூஸின் புரத தயாரிப்புக்கு துணை போவது மட்டுமல்லாமல் புரத மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.
1.மாட்டிறைச்சி 
2.கன்றுக்குட்டி இறைச்சி 
3.ஆட்டிறைச்சி 
4.கோழி இறைச்சி 
5.முளை கோதுமை 
6.பருப்பு 
7.விதைகள் 
8.பேக்கரி ஈஸ்ட் 
4.மெதியோனின் 
மெத்தியோனின் புரத தாயாரிப்புக்கு உதவுவதுடன் பாராசிட்டமால் மிகுதியினால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
1.நறுக்கி பொடிக்கப்பட்ட வான்கோழி இறைச்சி 
2.மாட்டிறைச்சி 
3.டூனா மீன் (மாசி மீன் ,சூறை மீன் )
4.சோயா தயிர் (Tofu)
5.பால் 
6.பிரேசில் நட்ஸ் 
7.பெரிய வெள்ளை பீன்ஸ் 
5.பீனைல் அலனின் :-
இது புரத உற்பத்திக்கு மட்டுமில்லாம மூளையின் செல்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் மூலக்கூறுகள் உற்பத்தியிலும் பங்கெடுக்கிறது. மேலும் வலி ,தோல் நோய்கள் மனஉளைச்சல் இவற்றிலும் பரிகாரமளிக்கிறது 
1.பால் 
2.முட்டை 
3.சீஸ் 
4.நட்ஸ் 
5.கோழி 
6.பீன்ஸ் 
7.மீன் 
6.த்ரெயோனின் :-
இந்த அமினோ அமிலம் புரதம் தயாரிப்பதற்கு பயன்படுவதுடன் தண்டுவட பாதிப்புடன் கூடிய வலிப்பு (spinal spasticity), தண்டுவட மரப்பு(Multiple sclerosis), தண்டுவட சுருக்கத்தால் பாதங்களில் உண்டாகும் வாதம் (spinal  paraparesis), பக்கவாதம் (amyotropic lateral sclerosis) போன்ற நரம்பியல் கோளாறுகளுக்கும் பயன்படுகிறது 
1.பாலாடைக்  கட்டி  
2.கோழி இறைச்சி 
3.மீன் 
4.பயறுகள் 
5.சோயா மொச்சை 
6.நட்ஸ் 
7.ட்ரிப்டோ ஃபேன் :-
புரத தயாரிப்பில் பங்கெடுப்பதுடன் மூளை செல்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்குகந்த மூலக் கூறுகளையும் தயாரிக்க பயன்படுகிறது.
1.சாக்கலேட் 
2.ஓட்ஸ் 
3.உலர்ந்த பேரீத்தம்பழம் 
4.பால்,யோகர்ட் ,பாலாடைக் கட்டி 
5.மாட்டிறைச்சி,ஆட்டிறைச்சி,
6.முட்டை மற்றும்  கோழி 
7.மீன் 
8.எள் & பட்டாணி 
9.வாதுமை & நிலக்கடலை 
10சூரியகாந்தி விதை, பூசணி விதை, மரக்கோதுமை 
8.ஹிஸ்ட்டிடின்:-
இது புரத தயாரிப்பில் பயன்படுத்துடன், வாதம், ஒவ்வாமை, அல்சர் , சோகை, சிறுநீரகக்கோளாறு ஆகியவற்றிலும் பயன் ஆகிறது 
1.கோழி & பறவை இறைச்சி 
2.முழு கோதுமை 
9.வேலின்:-
இந்த அமினோஅமிலமும் புரத தயாரிப்பில் பயன்படுவதுடன் சதை வளர்ச்சி,தசை புதுப்பித்தல், உடல் வலிமை ஆகிய நன்மைகளுக்கும் பயன் ஆகிறது 
1.சோயாமொச்சை 
2.சீஸ் கட்டி 
3.நிலக்கடலை 
4.காளான் 
5.இறைச்சி வகை 



திங்கள், 19 அக்டோபர், 2020

புரோகேரியோட்டுகளில் தொடர் புரதம் தயாரித்தல் -மூலக்கூறு உயிரியல் -3-3

 இணைந்து செயல்படும்  RNAP & ரிபோசோம் நொதிகள் 

படம் -1
மேலே படம்-1  உள்ளது போல் சில பாக்டீரியா செல்களில் அபரிமிதமாக புரத உற்பத்தி வேகமாகவும் நில்லாமலும் நடைபெறும்.
படத்தில் உள்ளது போல் DNA இழைகளில் உள்ள பல ஜீன்களையும் ஒரே நேரத்தில் பல RNAP கள் mRNA-க்களை காப்பி எடுத்து அனுப்ப உடனேயே ரிபோசோம்கள் அவற்றில் அமர்ந்து மொழிபெயர்த்து புரதங்களை தயாரிக்கின்றன.
அதே நேரம் ஸ்டாப் கோடோன்களையும் பொருட்படுத்துவதில்லை.பாக்டீரியா செல்களில் இருக்கும் சில புரதங்கள் இதற்கு துணை புரிகின்றன.
மனித செல்கள் உட்பட யூகேரியோடிக் செல்களில் இது சாத்தியமில்லை.
கீழ் காணும் அட்டவணையில் யூகேரியோடிக் செல்களுக்கும் ப்ரோகேரியோடிக் செல்களுக்கும் புரதம் தயாரிப்பதில் உள்ள வேறுபாடுகளை பட்டியலிடலாம் 




நுண்ணுயிர் அணுக்களில் புரதம் தயாராதல் -மூலக்கூறு உயிரியல் -3-2

 TRANSLATION என்ற mRNA காப்பியை மொழிபெயர்த்து  புரதம் தயாரித்தல் 

படம்-1-அ 

mRNA மொழிபெயர்ப்புக்கு கீழ்கண்ட சாதனங்கள் தேவை 
படம்-1-ஆ 
1.தொடக்க முன்னேற்பாடு -Translation Preinitiation:-
இந்தநிலையில் tRNA சார்ஜ் செய்யப்படவேண்டும். அனைத்து உயிரினங்களுக்கும் புரதம் தயாரிக்க குறைந்த பட்சம் 20 அமினோ அமிலங்கள் தேவை.இவற்றில்  உயிரினங்கள் சிலவற்றை தாங்களே தயாரிக்கின்றன. சிலவற்றை வெளியிலிருந்தும் பெற்றுக்கொள்கின்றன.இதுபற்றி நாம் பிறிதொரு பதிவில் விரிவாகப்பார்க்கலாம்.
20 அமிலங்களுக்கும் பிரத்தியோகமான தனித்தனியான tRNA க்களை செல்கள் உற்பத்தி செய்கின்றன. இந்த tRNA கள் குறிப்பிட்ட அமினோ அமிலங்களை கொண்டு எப்படி சார்ஜ் ஆகிறது என்பதை கீழ்கண்டவாறு விளங்கலாம்.
படம்-2

படி -1:- அமினோ அமிலம் + அடினோசின் திரி பாஸ்பேட் (ATP)➡️அமினோ அமிலம் AMP (அடினோசின் மோனோ பாஸ்பேட் +பைரோபாஸ்பேட் 
படி -2:- அமினோஅமிலம்AMP +tRNA ➡️அமினோ அசைல்tRNA +AMP -(படம்-2)
2.மொழிபெயர்ப்பு தொடக்கம் (Translation Initiation):-
மீண்டும் ஒரு முறை நினைவுறுவோம் ,அதாவது பாக்டீரியா போன்ற ப்ரோகேரியோடிக் செல்களில் கரு,உட்கரு போன்ற அமைப்புகள் எதுவும் இல்லாததால் புரதம் தயாரித்தல் போன்ற மத்திய நிலைநிறுத்தப்பட்ட கோட்பாடு சம்பந்தப்பட்ட அனைத்தும் சைட்டோபிளாசத்திலேயே நடைபெறும்.
எனவே காப்பியெடுத்தல் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் பொழுதே mRNA, RNAP+DNA கூட்டமைப்பிலிருந்து வெளியாகிக்கொண்டு இருக்கும் பொழுதே காப்பி எடுத்தல் நிறைவாக நிலைக்கு (Transcription Termination) வரும் முன்பே இந்த புரதம் தயாரிப்பு தொடங்கப்படலாம்.இதுபற்றி  பார்க்க இங்கு க்ளிக்  செய்யவும் 
படம்-3-அ 


 துவக்க நிலை இருவகையாக பிரிக்கப்படும்.அவை இரண்டும் 30S, 50S என்ற ரிபோசோமின் இருவகைகளை அடிப்படையாக கொண்டது.
ப்ரோக்கரியோடிக் செல்களில் ரிபோசோம்கள் 30S யூனிட் தனியாகவும் 50S யூனிட் தனியாகவும் பிரிந்த நிலையிலேயே இருக்கும்.
1.30S யூனிட் துவக்க நிலை 
மொழிபெயர்ப்பு துவக்கம் 30S யூனிட்டிலிருந்துதான் ஆரம்பமாகிறது 
இதுதான் மிகமுக்கியமான பகுதியும் கூட. மேலே படம் 3-அ இல் கண்டபடி 30S யூனிட்டில் மூன்று அமைப்புகள் E, P, மற்றும் A என்று. இவற்றின் E பகுதியின் கீழ் ரிபோசோமின் 16ஆவது rRNA யில் U-C-C-U-C என்று ஒரு நியூக்ளியோட்டைடு வரிசை (Sequence) இருக்கிறது. இதற்கு ஷைன் டல்கர்னோ(Shine Dalgarno Seq) வரிசை என்று பெயர். இதற்கு பாந்தமாக  (Complimentary)  A-G-G-A-G நியூக்ளியோடைடு வரிசை வெளியிலிருக்கும் mRNA யில் இருக்கும்.இந்த இரண்டும் ஒன்றை ஒன்று ஈர்ப்பதால் mRNA ரிபோசோம் 30S க்குள் புகுந்து கொள்ளும். கிட்டத்தட்ட ஆக்டொபஸ் சிறிய மீன்களை ஈர்த்துக்கொள்வது மாதிரி ரிபோசோம் mRNA யை ஈர்த்துக்கொள்ளும் (படம் 3அ)
மொழிபெயர்ப்பு துவக்க நிலை மூன்று காரணிகளை கொண்டது.அவை 
1.துவக்க நிலை காரணி -3(IF-3)
2துவக்கநிலை காரணி -1 (IF -1)
3.துவக்க நிலை காரணி-2(IF -2)
ரிபோசோம் 30S இல் மூன்று நிலைகள் இருக்கின்றன. அவை E, P, A ஆகும். A என்பது நுழைவு வாயில். P என்பது புரதம் உருவாகும் நிலை. E என்பது வெளியேறும் வாயில்.
முதலில் IF3, E-வாயிலை அடைத்து கொள்ளும்.
பிறகு IF-1 மற்றும் IF-2 இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து A-வாயிலை அடைத்துக்கொள்ளும்.
இப்போது P-வாயில் மட்டுமே திறந்து இருக்கும்.
படம் -3-ஆ 

 இப்போது பார்மைல் மெத்தியோனின் (formylmethionine) என்ற அமினோ அமிலத்தால் சார்ஜ் செய்யப்பட்ட tRNA நேரடியாக P- நிலையில் புகுந்து மொழிபெயர்ப்பை துவங்குகிறது.(படம் 3-ஆ)
mRNA மெத்தியோனின் துவக்க கோடன் AUG 💢 UAC-tRNA எதிர் கோடன் (படம் -3-ஆ)
படம்-3-இ

பிறகு IF-3 அங்கிருந்து அகன்று E அடைப்பை நீக்குகிறது.இத்துடன் துவக்க நிலையின் 30S யூனிட் நிலை நிறைவுறுகிறது.
50S கூட்டு துவக்க நிலை :-
 IF-3 அகன்றவுடன் ரிபோசோமின் பெரிய பகுதியான 50S யூனிட் 30S யூனிட்டின் மீது பொருந்தி அமர்கிறது. உடனேயே IF-1,மற்றும் IF-2 உம் அகன்று வெளியேறி A-பகுதியும் திறக்கிறது. இத்துடன் 70S யூனிட் துவக்க நிலையும் முடிவுற்று அடுத்து நீட்டல் நிலை ஆரம்பமாகிறது.(பார்க்க மேலே படம்-3-இ)
3.மொழிபெயர்ப்பு நீட்டல் நிலை (Translation Elongation)
படம் -4

நீட்டல் நிலையின் காரணிகள் மூன்று ஆகும். அவை,
1.EF -1-Tu 
2.EF -2-Ts 
3.EF -G
இந்த மூன்றுமே GTP என்ற குவானோஸின் திரி பாஸ்பேட்டில் இருந்து சக்தி பெருபவை.
முதல் காரணி Tu புதிதாக அமினோ அமிலத்தைக்கொண்டு சார்ஜ் ஆன இரண்டாவது tRNA யை கொண்டு வந்து ரிபோசோமின் A நிலையில் நிறுத்தும் (படம் -4-அ ) அப்போது ரிபோசோமிலிருக்கும் பெப்டிடைல் ட்ரான்ஸ்பரேஸ் (Peptidyltransferase) என்ற நொதி ஏற்கனவே P -பகுதியில் tRNA யின் தலையிலுள்ள அமினோ அமிலத்தை A பகுதியில் புதிதாக நுழைந்து இருக்கும் tRNA யின் தலையிலுள்ள அமினோ அமிலத்துடன் ஒரு ஒற்றை பிணைப்பை (Single Bond) ஏற்படுத்தும்.(படம்-4-அ ) 
படம் -4-அ

பிறகு EF -Tu,GTP யிலிருந்து சக்தி பெற்று GDP யாக மாறி திரும்பும் பார்க்க படம்-4-ஆ )
படம் 4-ஆ 
இதற்கு பிறகு மீண்டும் EF-Tu வுக்கு  GTP சக்தியூட்டி அடுத்த tRNA யை கொண்டு போக தயாராக்குவது EF -Ts ஆகும்.
படம்-4-இ 
பிறகு நீட்டல் காரணி (EF -3-G) வந்து A-பகுதியை அதில் புதிதாக அமர்ந்திருக்கும் tRNA  யுடன் மேல் நோக்கி (3' டு 5') தள்ளும். இப்படி தள்ளும் பொழுது ரிபோசோம் கூட்டமைப்பு (70S) படம்-4- இ யில் இருப்பதைப்போல் mRNA யின் ஒரு கோடன் (மூன்று நியூக்ளியோட்டைடுகள்) கீழ் நோக்கி (5'-3') முன்னேறும்.இப்போது A-பகுதியிலுள்ள tRNA தன தலையில் இரண்டு அமினோ அமிலங்களை சுமந்தவாறு P-பகுதிக்கு வரும். பகுதியில் நின்ற பழைய tRNA காலியான நிலையில் E-பகுதிக்கு தள்ளப்படும். இப்போது தலையில் இரண்டு அமினோ அமிலங்களுடன் P-நிலையில் இருக்கும் tRNA தன்  காலின் கீழ் இருக்கும் mRNA  கோடானை  தன்  பாதத்திலிருக்கும் எதிர் கோடானுடன் பொருத்தி மொழி பெயர்க்கும். இந்தக்காட்சிகள் தொடர்ந்து mRNA -யில் ஸ்டாப் கோடோன்  எட்டும் வரை நடைபெறும். சில நேரங்களில் தொடர்ந்து ஸ்டாப் கோடோனிலும் நிறுத்தப்படாமலும் சூழ்நிலைகளை அனுசரித்து மொழிபெயர்ப்பு நடந்து கொண்டே இருக்கும் அதுவும் ஒரே mRNA வை ஒரே நேரத்தில் அது உருவாகி  வெளியாகிக்கொண்டிருக்கும்போதே ஒன்றுக்கு மேற்பட்ட பல ரிபோசோம்கள் அதை ஒரே நேரத்தில் மொழிபெயர்க்க துவங்கும்.இதற்கு பெயர் coupled & continued  transcription and translation என்பார்கள்.இது போன்று மனித செல்கள் உட்பட எந்த eukariyotic செல்களிலும் சாத்தியம் இல்லை. பாக்டீரியா போன்ற புரோகேரியோடிக் செல்களில் மட்டுமே இது சாத்தியமாகும்.
3.மொழிபெயர்ப்பு நிறைவுறுதல் (Translation Termination)
படம்-5

குறைந்த பட்சம் 22 அமினோ அமிலங்களாவது பின்னப்படும் வரை மொழிபெயர்ப்பு நீட்டல் நடந்துகொண்டே இருக்கும். அதன் பிறகு நிறைவுறுதல் அரங்கேறும் 
புரோக்கேரியோடிக்  செல்களில் நிறைவுறுதல் நிலை மூன்று காரணிகளை கொண்டு நடைபெறும்.
அவை,
1.RF-1-UAA, UAG
2.RF-2-UAA ,UGA 
3.RF-3-RRF -Ribosome Releasing Factor)
இவற்றை TF என்றும் சொல்லலாம். ஆனால் RF (Releasing Factors) என்றே சொல்வது பொருந்தும்.
 E-coli பாக்டீரியாவை பொறுத்தவரை அதன் RF-1 அல்லது RF-2 இரண்டில் ஏதோ ஒன்று சூழ்நிலைக்கு ஏற்றவாறு சின்ஹா காரியத்தை செய்யும்.உகாரணமாக mRNA  வின் ஸ்டாப் கோடனாக UGA வந்தால் மொழிபெயர்ப்பை நிறுத்துவதற்கு RF-2 வரும்.ஏனென்றால் அதில்தான் UGA க்கு எதிர் கோடோன் (ACU) இருக்கிறது.மற்ற ஸ்டாப் கோடன்களை (UAA ,UAG) வாசிக்க இரண்டில் எதோ ஒரு RF போதும்.
இப்போது mRNA யின் இறுதியில் UAA என்ற ஸ்டாப் கோடோன் வருகிறது என்று கொள்வோம்.இந்த ஸ்டாப் கோடனுக்கென்று அமினோஅமிலம் எதுவும் இல்லாத நிலையில் RF-1 வந்து ரிபோசோமின் A பகுதிக்குள் புகுந்த்து அங்கு தன் பாதத்தின் கீழ் இருக்கும் ஸ்டாப் கோடானை (UAA) தன் பாதத்திலுள்ள எதிர்கோடானை(AUU) கொண்டு மொழிபெயர்க்கும்.இந்த மொழிபெயர்ப்பின் விளைவுதான் நிறைவுறுதல் என்ற Termination.(படம்-5)
RF-1-ல் மேலே கை போன்று நீய்க்கொண்டிருக்கக்கூடிய அந்த டொமைன் (களம்) P-பகுதியில் இருக்கக்கூடிய tRNA யின் தலையில் சங்கிலி தொடராக ஒட்டிக்கொண்டு இருக்கும் அந்த பெப்டைடுகளை மொத்தமாக துண்டாக்கி வெளியேற்றிவிடும்.(படம்-5-2).
படம் 5-3

அப்படி வெளியேறிய அந்த பெப்டைடு சங்கிலி பாலி பெப்டைடுகளாக இறுகிவிடும்.(படம்-5-3)
இதன் பிறகு நிகழ்ச்சிகள் கீழ்கண்ட படங்களில் உள்ளாறு சங்கிலித்தொடர் போல் நடைபெறும்.
படம் 5-3,4

RFs-3 ரிபோசோம் 50S யூனிட்டுக்குள் வந்து A பகுதியில் இருக்கும் RF-1 ஐ வெளியேற்றி அதனுடன் தானும் வெளியேறிவிடும் (படம் -5-4)
படம்-5-5-6

இத்துடன் P மற்றும் E பகுதியிலிருக்கும் tRNA  க்களும் ரிபோசோம் கூட்டைவிட்டு வெளியேற (படம்-5-5-6) IF-3 வந்து ரிபோசோம் கூட்டை 50S,30S என்று இரு கூறுகளாக பழைய நிலைக்கு பிரித்து விடும் (படம்-5-7)
படம்-5-7-8

இறுகிய பெப்டைடு சங்கிலியும் மேலும் இறுகி ஒரு முழு புரத மூலக்கூறுவாக மாறிவிடும் (படம்-5-7).



அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...