திங்கள், 26 ஆகஸ்ட், 2019

சுய மருத்துவ பரிசோதனை-இ.சி.ஜி சுய பரிசோதனைகள்-ஈ

12-மின் கடத்திகளுடைய இசிஜி கருவிகள்  
இன்று சந்தையில் பலவிதங்களில் 12,6,3,அல்லது 1மின்முனைகள்  கொண்ட விதம் விதமான கையடக்க இசிஜி கருவிகள் கிடைக்கின்றன 
இந்த கையடக்க கருவிகளை கொண்டு நாமே வீட்டில் இருந்தபடியே சுயமாக இசிஜி எடுத்து பரிசோதித்து கொள்ளலாம் 
முதலில் நாம்  சில அடிப்படைகளை தெரிந்து கொள்ளவேண்டும் 
இசிஜியில் உள்ள மின்முனைகளின் வகைகள் அவற்றின் தன்மை பயன் ஆகிய அடிப்படைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் 
பிறகு அந்த மின்முனைகளை  எப்படி உடலில் பொருத்துவது என்ற அடிப்படையையும் சேர்த்து ஒவ்வொன்றாக பார்க்கலாம் 
கீழே உள்ள கார்டூனில் மின்முனைகள் எவ்வாறு பொருத்தப்பட்டிருக்கிறது என்று கவனிக்கவும்.
படம்-1
படம்-1 ஐ நோக்கவும் அதில் aVL,aVR மற்றும் aVF என 3 ஒருமுனை மின்கடத்திகள் முறையே இடது மற்றும் வலது மணிக்கட்டுகளில் உள்ளங்கைகளுக்கு  நேர் கீழேயும் இடது பாதத்தின் மணிக்கட்டின் மேலும் பொருத்தப்பட்டுள்ளன  
வலது கால் பாத மணிக்கட்டில் பொருத்தப்பட்டுள்ள ஒருமுனை மின்கடத்தி வெறும் எர்த் தொடர்பு ஆகும் எனவே அதை கணக்கில் எடுக்க வேண்டாம்.
இப்பொது aVF,aVL மற்றும் aVR இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று ஒரு முக்கோணமாக (பார்க்க படம்-1) பச்சை கோடுகள் ஆக மின் ஓட்டத்தால் இணைக்கப்பட்டு இருப்பதை கவனிக்கவும்.இதற்கு Einthoven's முக்கோணம் என்று பெயர்.
இந்த முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கத்தின் நடுவிலும் இரு முனை (bipolar)மின்கடத்திகள் மறைந்துள்ளன.
அவை முறையே ,
I -இது aVR  மற்றும் aVL மின்கடத்திகளின் தகவல்களை பெற்று இதயத்தை நோக்கும் .அதனால்தான் இதற்கு (bipolar) இருமுனை மின்கடத்தி  என்று பெயர் 
அதே போல் மற்ற இரு (bipolar) இருமுனை மின்கடத்திகளான II மற்றும் III,முறையே  aVR - aVF;aVL -aVF  இலிருந்து பகுதி பகுதியாக தகவல்களை பெற்று இதயத்தை நோக்கி செலுத்தும்.
ஒருமுனை மின்கடத்திகளும் தங்களுக்குள் முக்கோணமாக இணைந்தாலும் அவையும் தனியாக மின் அலைகளை இதயத்தை நோக்கி செலுத்துகின்றன.இந்த ஆறு மின்கடத்திகளும் வெவ்வேறு கோணங்களிலிருந்து இதயத்தை நோக்குவதால் இவற்றிற்கு மூட்டு மின் முனைகள் (LIMB ELECTRODES) என்று பெயர்.
இவை போக மேலும் ஆறு மார்பு மின்முனைகள் கீழ்கண்டவாறு பொருத்தப்பட்டு உள்ளன.
படம்-2
V-1:-இது மேலிருந்து கீழே 4-5 விலாஎலும்புகளுக்கிடையில் நடு மார்பு எலும்பின் வலது புறமாக ஒட்ட பட்டு இருக்கும் 
V-2:-இது V-1 நேர் பக்கவாட்டில் நடு மார்பு எலும்புக்கு இடது புறமாக பொருத்தப்பட்டு இருக்கும் 
V-3:-இதை V-2 க்கு நேர்கீழே இதயத்தின் வலது மேலறையின் வலது ஓரத்தில் பொருத்த  வேண்டும்.
V-4:இது V3-யின் பக்கவாட்டில் (படம்-2) பொருத்த வேண்டும்.பொருத்தும் போது V-3 யிலிருந்து V-2வும் V-4-ம் சம இடைவெளியில் அமையவேண்டும்.(பார்க்க படம்-2)
V-5:-இதை V-4 கு நேர் இடது பக்கவாட்டில் அக்குளின் கீழ் இடது ஓரத்தில் (இடது முன் அச்சு வரி அல்லது Anterior Left Axillary Line)யில் பொருத்த வேண்டும் -பார்க்க படம் -2
V-6:-இதை V-5-ன் நேர்க்கவாட்டில் நடு அச்சு வரியில்)பொருத்தவேண்டும் -பார்க்க படம் -2.
மேல் கண்டவாறு மின்முனைகளை பொருத்திய பின் அவை எவ்வாறு இதயத்தை பல கோணங்களில் இருந்தும் நோக்குகின்றன என்பதை கீழ் கண்ட படம்-3 விளக்கும்.
படம்-3


மேலிருந்து (Anterior View )aVR,I மற்றும் aVL ஆகிய மின் முனைகளும் 
பக்கவாட்டிலிருந்து II,III, இவையும்,கீழிருந்து aVF -ம் இதயத்தை நோக்குகின்றன 
மார்பு மின் முனைகள் ஆறும் இதயத்தை தொட்டு சுற்றிலும் நோக்குகின்றன.
சில கலைச்சொற்கள் :-
Terminology:-
Electrodes-----Electrical conductor or receiver
Lead         ---- The electrical potential difference                              between two electrodes
aVR------Augmented Voltage Right


aVL ------Augmented Voltage Left
aVF ------Augmented Voltage Foot


 

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

சுய மருத்துவ பரிசோதனை-இ.சி.ஜி சுய பரிசோதனைகள் -இ

இசிஜியில் இதயத்தின் அச்சு 

அடிப்படையில் நம் இதயம் அதன் செயல்பாடுகள் அதன் தசைகளினூடே கடத்தப்படும் மின் அதிர்வுகள் அனைத்தும் இடது கீழ்புறத்தை நோக்கியே இருக்கிறது.இதையே இதயத்தின் கோணம் அல்லது அச்சு என்பர் 
சாதாரணமாக இதயத்தின் அச்சு  -30 டிகிரியில் இருந்து +90 டிகிரி வரை கால் வட்ட அளவு இடது கீழ் பக்கம் சரிந்து இருக்கிறது.
இதயத்தின் 90% தசை இதயத்தின் கீழறைகளினால் ஆனது.இதயத்தின் கீழறைகளின் துடிப்பு இசிஜியில் QRS-கூட்டமைப்பாக பதிவாகிறது என்பதையும் நாம் விளக்கினோம் 
எனவே மொத்தத்தில் QRS-ன் அச்சு -30 டிகிரி இலிருந்து +90 டிகிரி கோணத்தில் இருந்தாலே ஏறக்குறைய மொத்த  இதயமும் நார்மலாக இருக்கிறது என்று விளங்கிக்கொள்ளலாம் 
இதயத்தின் அச்சு பற்றி கீழ்கண்ட படத்தின் மூலம் விளக்கலாம் (பார்க்க படம்-1)
படம்-1
மேல் கண்ட படத்தில் மஞ்சள் நிற ப்பகுதிதான் இதயத்தின் நார்மல் QRS-அச்சு ஆகும் 
இந்த அச்சு -30 டு -90 என்று மேல்புறம் புரண்டு இருந்தால் அதற்கு இடது அணுகல் விலகல் (LEFT ACCESS DEVIATION-LAD) என்று மருத்துவம் கூறும்.அதற்கு அர்த்தம் இடது கீழறையில் வீக்கம் அல்லது அடைப்பு மற்றும் அதைப்போன்ற பிரச்சினைகள் ஏதோ உள்ளதென்று புரிந்து கொள்ளலாம் கொள்ளலாம்.
அதே போல் இந்த அச்சு +90 டிகிரி யிலிருந்து +180 டிகிரியை நோக்கி சரிந்தால் அது வலது கோண அணுகல் விலகல் (RIGHT ACCESS DEVIATION-RAD) எனப்படும்(படம்-1).இந்த நிலையில் இதயத்தின் வலது கீழறைகளில் வீக்கம் ,அடைப்பு போன்ற ஏதோ பிரச்சினைகள் இருக்கிறது என்று கொள்ளலாம்.
மேலும் இதயத்தின் அச்சு +180 யிலிருந்த்து -90 வரை சரிந்தால் அது மிகவும் கடுமையான (EXTREME) பாதிப்பை உணர்த்தும் (பார்க்க படம்-1)
மேலே படம்-1-இல் மின் கடத்தி II பாதுகாப்பான கோணத்தில் அமைந்திருப்பதை காணலாம் 
எனவேதான் இசிஜியில் இந்த மின் கடத்தி மூலம் பதியப்பட்ட பதிவுகள் தனியாக கீழ் வரிசையில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும்.
இதில் எல்லாம் நார்மலாக இருக்கும் பட்சத்தில் எல்லாம் ஓரளவு சரி என்றே கொள்ளலாம்.மற்ற மின் கடத்திகளின் பதிவுகள் பற்றி விபரமாக நாம் பிறகு பார்க்கலாம்.
எனவே மொத்தத்தில் படம் -1இல் உள்ளபடி நார்மல் அச்சில் இருக்கும் மின் கடத்திகள் I,II,மற்றும் aVF ஆகிய பதிவுகளில் QRS-கூட்டமைப்பு நார்மலாக பாசிட்டிவ் ஆக மேலெழுந்து இருந்தால் நம் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம் 
கோளாறுகள் :-
படம்-1-இல் கண்டபடி aVL மின்கடத்தி -30 to -90 பகுதியில் இருக்கிறது.எனவே இசிஜியில் aVL -பதிவுகளில் QRS பாசிட்டிவ் ஆகவும் aVF -ல் நெகட்டிவ் (கீழிறங்கி)ஆகவும் இருந்தால் நம் இதயத்தின் இடது கீழ் அறைகளில் அடைப்போ அல்லது வீக்கமோ இருக்கிறது என்று பொருள்-(LAD)
படம் -1 இல் கண்டபடி மின்கடத்திகள் 
III,aVR ஆகியவை வலது சரிவிலும் கடுமை (EXTREME) சரிவிலும் இருப்பதால் இந்த மின் கடத்திகளின் பதிவில் QRS பாசிட்டிவ் ஆகவும் மற்ற மின்கடத்திகளின் பதிவில் கீழ் நோக்கி நெகட்டிவ் ஆகவும் இருந்தால் நம் இதயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம் 

இசிஜியின் அமைப்பு 

படம்-2
மேலே உள்ள படம்-2 இல் காட்டப்பட்டிருப்பது போல்தான் உங்கள் இசிஜி பாகம் பாகமாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் 
12 பாகங்களாக ஒவ்வொரு மின் கடத்திக்கும் தனித்தனியாக பாகங்கள் பிரித்து வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது 
கீழே தனியாக மின்கடத்தி II க்கு ஒரு வரிசையும் ,மின்கடத்தி V-1 க்கு ஒரு வரிசையும் எடுத்து தரப்பட்டிருக்கும் 

மின்கடத்திகளின் விபரங்கள் :-

1.) I-இருமுனை(BIPOLAR ) மின்கடத்தியின் பதிவு 
2).IIs -இருமுனை (BIPOLAR) மின்கடத்தியின் பதிவு 
3) III-இருமுனை(BIPOLAR) மின்கடத்தியின் பதிவு 
4) aVR -ஒருமுனை(UNIPOLAR ) மின்கடத்தியின் பதிவு 
5).aVL -ஒருமுனை (UNIPOLAR )மின் கடத்தியின் பதிவு 
6).aVF -ஒருமுனை (UNIPOLAR) மின் கடத்தியின் பதிவு 
மற்ற ஆறுவரிசைகளிலும் தலா ஒவ்வொன்றாக V1,V2,V3,V4,V5,V6 என்ற மார்பு மின்கடத்திகளின் (CHEST ELECTRODES) பதிவுகள் 
                                      தொடர்கிறது ...(in ஈ )

சனி, 24 ஆகஸ்ட், 2019

சுய மருத்துவ பரிசோதனை-இ.சி.ஜி சுய பரிசோதனைகள் -ஆ


இசிஜி கோளாறுகள் 


நம்முடைய இசிஜியில் 4 வரிசைகள் இருக்கும்.இவற்றில் கீழ் வரிசையில் 
II -வரிசை என்று இருக்கும் 
இந்த வரிசை பதிவுகள், இசிஜி எடுக்கும் போது நம் மார்பில் இதயப்பகுதியில் நெஞ்சு எலும்புக்கு இடது புறமாக இதயத்தின் வலது கீழறைக்கு மிக நெருக்கமாக ஒட்டப்பட்ட II -மின்கடத்தியின் பதிவுகள்  ஆகும்.இந்த வரிசை இசிஜியின் மிக துல்லியமான பகுதியாகும்..இசிஜி எடுக்கும்போது மொத்தம் 10 மின் கடத்திகள் நம் உடம்புடன் பொருத்துவார்கள் அவற்றையெல்லாம் மிக விளக்கமாக பின் வரும்பதிவுகளில் நாம் பார்க்க இருக்கிறோம்.
இப்போதைக்கு மின் கடத்தி II -இன் பதிவுகள் பற்றி மட்டும் பார்க்கலாம் 
இது மட்டும் தனியாக கீழ் வரிசையில் இருக்கும்.இதற்கு சைனஸ் ரிதம் வரிசை என்றும் சொல்வர் .
பெரும்பாலும் இந்த ஒரு மின்கடத்தியின் பதிவை வைத்தே நாம் இசிஜியின் 75% தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
படம்-1
மேலேயுள்ள படம் -1 -ல் சாதாரண சைனஸ் ரிதம் மற்றும் கோளாறுள்ள துடிப்புகள் பதியப்பட்டு உள்ளது 
1.நார்மல் சைனஸ் ரிதம் :-
இதில் இதயத்துடிப்பு நார்மல் ஆக இருக்கிறது 
இதில் P-அலை நார்மல்.(
R-R-இடைவெளி சமம் ஆக இருக்கிறது 
R-அலையின் உயரம் நார்மல் (< ஓர் = டு 20மிமீ or 4 LS )
QRS-கூட்டமைப்பு நார்மல் (0.08 to 1sec or 2 to 2.5 sec)
QRS-ன் உயரம் நார்மலாக 20மிமீ அல்லது 4LS வரை இருக்கலாம். இதை 2mV என்றும் சொல்லலாம்.
Q-T இடைவெளி 2LS அல்லது 4வினாடிகளுக்குள் இருக்கவேண்டும் 
S-T இடைவெளி X-கோட்டில் பொருந்தி இருக்கவேண்டும்.நீளம் 2ss குள் இருக்கவேண்டும் 
2.சைனஸ் குறை துடிப்பு :-(படம் -1)
இதை மருத்துவர் மொழியில் Sinus Bradycardia என்பர் .(பார்க்க படம்-1)
இந்த நிலையில் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 50க்கு குறைவாகவே இருக்கும் 
R-R இடைவெளி நீண்டு இருக்கும் 
ஆனால் மற்ற அளவீடுகள் நார்மலாக இருந்தால் இந்த நிலை தற்காலிகமானதே அஞ்சவேண்டியதில்லை.தூங்கி எழும்பிய நிலை மற்றும் எந்த வேலையோ விளையாட்டிலோ ஈடுபடாமல் சோம்பி உட்கார்ந்து இருப்பது போன்றவற்றால் இந்த நிலை ஏற்பட்டு இருக்கலாம்.
3.சைனஸ் மிகைத்துடிப்பு (படம் -1):-இதை மருத்துவர் மொழியில் SINUS TACHYCARDIA என்பர் 
இதில் இதயத்துடிப்பு  130 bpm க்கு மேலே இருக்கும் .
இதில் R-R இடைவெளி மிகவும் குறுகி இருக்கும் 
மற்ற அளவீடுகள் நார்மலாக இருக்கும் நிலையில் அஞ்ச வேண்டியதில்லை.அதிக வேலை,தூக்கமின்மை,ஸ்போர்ட்ஸ் போன்றவற்றால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் 

நோய் நிலைகளில் இசிஜி :-


படம்-2
1.மேலறைகள் குறுநடுக்கம் (படம்-2)
இதை மருத்துவமொழியில் ATRIAL FIBRILLATION என்பர்.
இந்த நிலை மிகவும் ஆபத்தானது 
படம்-2 ஐ கவனிக்கவும் அதில் மேலே முதலில் பதியப்பட்ட இசிஜி இந்த நோய் பாதிப்பை காட்டுகிறது.
P -அலை இல்லை 
QRS-கூட்டமைப்பு ஒழுங்கற்று இருக்கிறது.
நோய் அறிகுறிகள் :-
1.படபடப்பு ,எரிச்சல் ,அசெளகரியம் ,நெஞ்சு இடிப்பு 
2.களைப்பு ,பலவீனம் 
3.தலைவலி 
4.நெஞ்சு வலி,நெஞ்சு இறுக்கம் 
2.மேலறைகள் படபடப்பு (படம்-2):-
இதற்கு மருத்துவ மொழியில் ATRIAL FLUTTER என்பர் .
இந்த நோயாளியின் இசிஜியில் பல P-அலைகள் இருக்கும் (பார்க்க படம்-2)
இதனுடைய அறிகுறிகளும் முன் சொன்ன A-FIB ஐ போன்றே இருக்கும் ஆனால் கடுமை இருக்காது 
3.A -V-அடைப்பு (படம்-2):-இந்த நிலையில் மின் அலைகள்  மேலறைகளில் இருந்து கீழ் அறைகளுக்கு பரவ முடியாமல் இடையில் A-V முடிச்சில் அடைபட்டுவிடும்.
(இதயத்தின் முடிச்சுகள் மற்றும் அவற்றின் வேலைகள் பற்றி நாம் விபரமாக பின்னால் பார்க்கலாம்
I,II,மற்றும் III-நிலை என்று மூன்று நிலைகளில் இது ஏற்படும்
இதன் இசிஜி நிலையை படத்தில் கனவும் 
இதில் முக்கியம் கவனிக்கவேண்டியது P - R -இடைவெளி மிகவும் நீளமாகி இருக்கும்.காரணம் மேல் அறைகளில் இருந்து கீழறைகள் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு இழந்து கொண்டு வருவதை காட்டுகிறது 
முறிய நிலையில் இதயத்துடிப்பு நின்றுவிடலாம்.
அறிகுறிகள் :-
1.இதயத்துடிப்பு பலகீனம் அடைதல் 
2.தலை சுற்றல் 
3.மயக்கம் 
4.நெஞ்சு வலி 
படம்-3
4.கீழறைகள் மிகைத்துடிப்பு (படம் -3):-
இதற்கு மருத்துவ மொழியில் VENTRICULAR TACHYCARDIA என்பர்.
கீழறைகளின் துடிப்பு வேகம் நிமிடத்திற்கு 130 க்கு மேல் இருக்கும் அந்த வேகத்தில் மேலறைகளின் துடிப்பு இசிஜியில் பதியாமல் போகும் 
படம் -3 இல் முதல் இசிஜியை கவனியுங்கள்.அதில் P-அலைகள் இல்லை.QRS-கூட்டமைப்பு zig-zag வடிவத்தில் தாறுமாறாக இருக்கிறது.
T -அலையும் இல்லை.எனவே இதுவும் ஒரு ஆபத்தான நிலைதான்.இதில் இரத்தம் நிறைவாக இதயத்தில் நிரம்பாவோ தங்கவோ செய்யாது.
அறிகுறிகள் :-
1.கழுத்து பிடிப்பு,இறுக்கம் 
2.படபடப்பு 
3.குமட்டல் ,வாந்தி 
4.தலைவலி 
5.தலை சுற்றல் 
5.கீழறைகள் குறுந்துடிப்பு :-(படம் -3)
இதற்கு மருத்துவ மொழியில் VENTRICULAR FIBRILLATION என்பர்.இதுவும் மிகைத்தடிப்பு வகைதான் என்றாலும் இதில் மேலறைகள் ஒழுங்கற்ற முறையில் வேகமாக துடிக்கும் (படம்-3 இல் மூன்றாவது இசிஜியை கவனிக்க)
இது மிக மிக ஆபத்தான நிலை 
அறிகுறிகள் மேலே உள்ள மாதிரியே.
6.மாரடைப்பு :-(படம்-3)
இதை மருத்துவ மொழியில் MYOCARDIAL INFARCTION என்பர் (படம்-3)
குறுகிய கால மாரடைப்பில் இசிஜியின் நிலை எப்படி இருக்கும் என்பதை கீழே பாப்போம்.பார்க்க படம்-3-ன் இறுதி இசிஜியை.
உயர்ந்த T-அலைகள்;
பிறகு தாழும் T -அலைகள் 
உயர்ந்த S -T-இடைவெளி ;
தாழ்நிலை Q -அலைகள் 
அறிகுறிகள் :-
1.பிழியும் கடுமையான மார் வலி 
2.வியர்வை 
3.வாந்தி 
4.ஷாக்,இரத்த அழுத்தம் குறைதல் 
5.உடல் வெளிறுதல் 
6.பீதி ,நாடித்துடிப்பு குறைதல் 
7.ஒழுங்கற்ற இதயத்துடிப்பு 

                                         தொடர்கிறது  in இ 


வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

சுய மருத்துவ பரிசோதனை-இ.சி.ஜி சுய பரிசோதனைகள் -அ

இ ஸி ஜி -சில அடிப்படைகள் 

முதலில் இ சி ஜி என்றால் என்ன வென்று பார்க்கலாம் .
E.C.G என்றால் Electro-Cardio-Gram ஆகும் 
இதை EKG என்றும் கூறுவார்கள் அதாவது ஜெர்மன் மொழியில் இதயத்திற்கு kardio என்பர் எனவே C க்கு பதில் K.
இசிஜி என்பது நம் இதயத்தின் தசைகளில் கடத்தப்படும் மின் அதிர்வுகளை ஒரு கிராப் தாளில் கோடு அலைகளாக பதிவு செய்தல் ஆகும் 
இந்த கோடு அலைகளின் ஏற்படும் மாற்றங்களை கொண்டு இதயத்தில் ஏற்படும் பல கோளாறுகளை அறிய முடியும் 
எல்லா இசிஜி கிராபிகளுமே அதற்கென்று வடிவமைக்கப்பட்ட இசிஜி கிராப் பேப்பர்களிலேயே பதியப்படுகின்றன.
படம் -1
மேலே உள்ள படம்-1-ல் காண்பதுதான் இசிஜி கிராப் பேப்பரின் அமைப்பு ஆகும் 
இந்த இசிஜி பேப்பரை உற்று கவனியுங்கள்.அதில் பெரிதும் சிறிதுமாக சதுரங்கள் அமைந்திருப்பதை பார்ப்பீர்கள்.
ஒரு சிறிய சதுரத்தின்  நீளமும் அகலமும் 1மி மீ ஆகும்.
இதே போல் ஐந்து சிறிய சதுர நீளமும் அகலமும் கொண்டது ஒரு பெரிய சதுரம்.எனவே ஒரு பெரிய சதுரத்தின் நீளமும் உயரமும் 5மிமீ ஆகும்.(பார்க்க படம்-1)
இதில் X -கோடு (X-Axis) கீழேயுள்ள படுக்கை கோடு ஆகும் அதற்கு நேர் செங்குத்தாக நிற்பது Y-கோடு (Y-Axis)ஆகும்.
X-கோடு வினாடிகளில் காலத்தையும் 
Y-கோடு மில்லி வோல்ட்டுகளில் மின் அதிர்வுகளையும் பதிவு செய்யும்.
சாதாரணமாக இ சி ஜி மிஷின் ஒரு நொடியில் 25 மி மீ வீதம் பேப்பரை நகர்த்துமாறு செட் செய்யப்பட்டு இருக்கும்.
இந்த விகிதத்தில் கீழ்கண்ட அடிப்படை சமன்பாடுகளை நாம் கணிக்கலாம்:-
                       25 மி மீ     = 1வினாடி 
எனவே 5மி மீ =5/25=0.20விநாடி 
                  1மி மீ =1/25=0.04விநாடி   
எனவே 1பெரிய சதுரம் =0.20விநாடி 
              1 சிறிய சதுரம்  = 0.04வினாடிகளில் பிரிண்டரில் நகரும் . 
இதேபோல் உயரத்தில்    10மிமீ=1mV.அதாவது 10 சிறிய சதுரங்கள்(ss) அல்லது இரண்டு பெரிய சதுரங்கள் (LS) உயரத்தில் 1mV.மின் அதிர்வுகளை கணக்கிடலாம்  
ஆக கிராப் பேப்பரில் மேற்கண்டவாறு பெரிய மற்றும் சிறிய சதுரங்கள் அமைத்திருக்கும்.இவற்றை கொண்டுதான் மின் ஓட்டம் வரையும் அலை கோடுகளை அளவீடு செய்கிறார்கள் 
சாதாரணமாக இசிஜியில் base கோடு ஆக இருப்பது X-கோடு தான்.இதற்கு ஐசோ எலக்ட்ரிக் கோடு என்பர்.இதில் பெரும்பாலும் மின் அதிர்வுகள் பூஜ்யமாகத்தான் இருக்கும்.ஆனால் சில நோய்களின் போது இதில் அதிர்வுகளும் இருக்கும்.இது பற்றி  பிறகு பார்க்கலாம்.இதை அடிப்படையாக கொண்டே இதயத்தின் மின் அதிர்வுகளும் துடிப்புகளும் மேலும் கீழுமாக அலை கோடுகளாக பதிவாகும்.கீழேயுள்ள படம் -2 இல் ஒரு நார்மல் இசிஜி காட்டப்பட்டுள்ளது 

இதற்கு நார்மல் சைனஸ் ரிதம் என்பர் 
நார்மல் சைனஸ் ரிதம் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது 
இந்த சைனஸ் ரிதம் பல பகுதிகளை கொண்டது 
படம்-2 -இல் கண்டபடி ஒரு நார்மல் சைனஸ் ரிதத்தில் P,Q,R,S,T என்று மிக முக்கிய மான ஐந்து பகுதிகள் ஒரு ஒழுங்கு அமைப்பில் இருக்கும் .இந்த ஒழுங்கு அமைப்பு சீர்குலைந்தால் இதயம் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம் 
அமைப்புகள் கீழ் கண்ட வகையில்  இருக்க வேண்டும்:-(படம்-2):-
P-முதல் அலை இதயத்தின் மேல் அறைகள் (ATRIA )சுருங்கும் போது உண்டாவது.P-ஐ தொடர்ந்து ஒரு கோடு Q-வரை நீண்டுள்ளது.இதற்கு P-Q இடைவெளி என்பர்.பிறகு Q-அலை சிறிது கீழ் நோக்கி இறங்கி பிறகு R -அலையாக மேல் நோக்கி கிளம்பி மீண்டும் கீழ் நோக்கி தணிந்து S-அலையாக திரும்பும்.
S -அலை கொஞ்சம் தாழ்ந்து பிறகு மேலெழுந்து சம நிலையில் கோடாக நீண்டு மீண்டும் T-அலையாக சிறிது எழும்பி தணிந்து மீண்டும் நேர்கோடாக அடுத்த துடிப்பின் முதல் கட்டத்திற்கு அதாவது மறு P-அலைக்கு செல்லும்.
இவற்றின் விபரங்களை பாப்போம் 
1.P-அலை :- இது இதயத்தின் மேல் அறைகள் சுருங்குவதால் உண்டாவது -எனவே இந்த அலையின் அமைப்பில் ஒழுங்கற்ற நிலை உண்டானால்,அதற்கு இதயத்தின் மேலறைகளில் எதோ பிரச்சினை என்று கணிக்கலாம் 
2.QRS-கூட்டமைப்பு :-இந்த பகுதிதான் இசிஜி யின் மிக முக்கிய பகுதியாகும்.ஏறக்குறைய இதயத்தின் செயல்பாடுகளில் 80% இதை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம்.இது இதயத்தின் கீழ் அறைகள் சுருங்குவதால் உண்டாவது.இதயத்தின் கீழறைகள்தான் அமைப்பில் பெரியவை.உறுதியான கனமான தசைகளை கொண்டவை.இதயத்தின் கனபரிமாணத்தில் 80% கீழறைகள்தான்.எனவேதான் கீழறைகள் சுருங்கும்போது ஏற்படும் QRS கிராப்பில் மிக உயரமாகவும் தெளிவாகவும் இருக்கும்.(பார்க்க படம்-2).இந்த கூட்டமைப்பில்தான் மேலறைகள் விரிவதும் ஏற்படுகிறது.
T-அலை:-இதுதான் ஒரு இதயத்துடிப்பின் கடைசி பகுதி இது கீழறைகள் மீண்டும் விரிவதால் ஏற்படுவது.எனவே மேற்கூறிய Q,R,S,T பகுதிகளில் காணப்படும் ஒழுங்கீனம் இதயத்தின் கீழ் அறைகளில் ஏற்படும் வியாதிகளை அறிவிக்கும்.இதுதான் அடிப்படை.இனி விரிவாக பாப்போம்.
இதில் மேல் கூறியபடி 
1.P-Q அல்லது P-R இடைவெளி;
2.QRS-கூட்டமைப்பு -இடைவெளி -உயரம் 
3.Q-T-இடைவெளி ;
4.S-T-இடைவெளி 
5.T-P-இடைவெளி 
6.P-அலையின் அமைப்பு,அகலம் மற்றும் உயரம் 
6.T-அலையின் உயரம் ,அகலம் 
7.R-R அலைகளின் இடைவெளி 
8.சிலநேரங்களில் T-அலையை தொடர்ந்து உண்டாகும் U-அலையின் தோற்றம் இவை அனைத்தும் மிக மிக முக்கியமாகும் (பார்க்க படம்-2)
அளவீடுகள்:-
1.P-R இடைவெளி=0.12 to 0.20 seconds (3to5 சிறிய சதுரங்கள்)
2.QRS கூட்டமைப்பின் உயரம்:-இது நார்மலாக 25மி.மீ  யிலிருந்து 30மி மீ வரை இருக்கலாம் 
3.QRS-கூட்டமைப்பின் அகலம்:-0.12வினாடிகள் (secs) அல்லது 3 சிறிய சதுரங்கள்(ss) அல்லது 3மிமீ வரை இருக்கலாம் 
Q-T இடைவெளி:-11 சிறிய சதுரங்களுக்குள்  (11மிமீ )வரை இருக்கவேண்டும் 
P-அலையின் அகலமும் உயரமும்:
அகலம் :120ms or 3mm  (ms-milliseconds)
உயரம் :2.5mm 
மேலே கண்ட அளவீடுகளில் மிமீ சிறிய சதுரங்கள் ஆகியவற்றை நீங்கள் வினாடிகளாக கூட மாற்றிக்கொள்ளலாம்.ஆனால் அது முக்கியமில்லை.

இதய மற்றும் நாடிதுடிப்புகளை அறியும் முறைகள் :-

பொதுவாக இசிஜியில் R-அலைகள் மிக முக்கியமானவைஒவ்வொரு நாடிதுடிப்பின் 90% இதில்தான் அடங்கி இருக்கிறது எனவே 1 நிமி அல்லது 60 வினாடிகளில் எதனை R-அலைகள் இருக்கின்றன என கணக்கிட்டால் இதயம் நிமிடத்தில் எதனை முறை துடிக்கிறது என்று அறியலாம் 
இதற்கு 2 வழிமுறைகள் இருக்கின்றன.
இவற்றை செய்வதற்கு முன் முதலில் நம் இசிஜியின் R-R இடைவெளிகள் சமமாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் 
1.பெரிய சதுர (LS )அளவீடு முறை:
1வினாடி                        =25 மிமீ 
60 வினாடிகள்             =25*60=1500மிமீ 
1மிமீ                               = 1ss 
1500மிமீ                         = 1500 ss 
5ss                                    =1 LS 
1500 ss               =1500/5 = 300 LS 
எனவே இசிஜியில் எதாவது ஒரு அடுத்தடுத்துள்ள R-R இடைவெளியில் எத்தனை LS (பெரிய சதுரங்கள்)இருக்கின்றன என்பதை கொண்டு 300 ஐ வகுத்து விட்டால் வரும் ஈவுதான் உங்களது இதய மற்றும் நாடி துடிப்பு ஆகும்.உதாரணமாக இரண்டு அடு த்தடுத்துள்ள R-R இடைவெளியில் 4 LS கள் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம் 
இதய அல்லது நாடித்துடிப்பு (HR or Pulse )       =300/4  =75 bpm ஆகும் 
(bpm means beats per minute) 
ஆறு வினாடி அளவீடு முறை :-
இந்த முறையில் ஒரு நன்மை உண்டு.
இசிஜியில் ஒழுங்கு இல்லையென்றாலும் இந்த முறையில் நாடித்துடிப்பை அறிய முடியும் 
இந்த முறையில் ஆறு வினாடிகளில் எத்தனை R-அலைகள் வருகிறதோ அதை 10-ஆல் பெருக்கி வரும் ஈவுதான் உங்கள் நாடி துடிப்பு 
1 வினாடி                             =25மிமீ 
6 வினாடிகள்         25*6    = 150மிமீ 
150 மிமீ =150 ss =150/5       = 30 LS 
30 பெரிய சதுரங்களுக்கிடையில் எத்தனை R வருகிறதோ அதனை 10 ஆல் பெருக்க வரும் ஈவுதான் உங்கள் நாடி துடிப்பு 
உகாரணமாக 30 LS இடையில் ஏழு R-அலைகள் இருக்கின்றன என்று வைப்போம் 
இதய அல்லது நாடி துடிப்பு =7*10=70bpm
Normal HR =60 to 100 bpm 
மேல்கண்ட அடிப்படைகளை மட்டும் தெரிந்து கொண்டு நீங்கள் இசிஜி யை ஆய்வு செய்தால் உங்கள் இசிஜி யின் இறுதியில் II -என்று ஒரு வரிசை இருக்கும்.இதற்கு சைனஸ் ரிதம் வரிசை என்று பெயர்
அந்த வரிசை இசிஜியை மட்டும் இப்பொது ஆராயவும் 
மற்றவற்றை பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம் 
                                                -தொடருகிறது .....(in ஆ )






சனி, 3 ஆகஸ்ட், 2019

உங்கள் ஆரோக்கியம் -வீட்டில் மருத்துவ பரிசோதனை ரத்தக்கொதிப்பு அளவீடு-1

மின்னணு ரத்த அழுத்த மானிகள் 



வீட்டிலேயே உங்கள் ஆரோக்கியத்தை பரிசோதிக்க முதலில் இரத்த அழுத்தம்  ஒரு பிரதான பரிசோதனை ஆகும்.ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்தில் நொடிக்கொருமுறை நம் இரத்த அழுத்தம் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும்.

சூழ்நிலை தாக்கம்,உணர்ச்சிகள்,மற்றும் நோய்கள் போன்றவையே இதற்கு முக்கிய காரணிகளாகும்.
இரத்த அழுத்தத்தை நாமே நம் வீட்டில் உட்கார்ந்து பரிசோதிப்பதற்கு வசதியாக பல உபகரணங்கள் இப்போது சந்தைக்கு வந்துள்ளன.அவற்றில் மின்னணு உபகாரணகள் சாதா உபகரணங்கள் என்று வகை வகையாக மார்க்கட்டில் குவிந்துள்ளன 
அவற்றில் மின்னணு இரத்த அழுத்த மானிகள்,விவரங்கள்,உபயோகிக்கும் முறைகள் பற்றி மட்டும்  இங்கு பாப்போம்.
முதலில் இரத்த அழுத்தம் என்றால் என்ன வென்று சுருக்கமாக நாம் பார்க்கலாம் 
நம் உடல் ஆரோக்கியமாக இயங்க இரத்த ஓட்டம் மிகவும் இன்றியமையாதது ஆகும்.
நம் இதயம் நம் இரத்தத்தை உள்வாங்கி பிறகு வெளியேற்றி நம் உடல் முழுவதும் இரத்தத்தை ஓடவிடும் ஒரு பம்பிங்க் நிலயமாகவே ஓய்வில்லாமல் இயங்குகிறது.

இதயம் பற்றி சுருக்கமாக பார்க்கலாம் 

மேலே உள்ள படத்தின் சில விளக்கங்கள் :-
1.R-Atrium =வலது மேல் அறை 
2.L -Atrium =இடது மேல் அறை 
3.R-Ventricle =வலது கீழ்  அறை 
4.L-Ventricle =இடது கீழ் அறை 
5.The Aorta  =மகா தமனி 
6.The Pulmonary Artery =நுரையீரல் தமனி 
7.Pulmonary Vein =நுரையீரல் சிரை 
8.The Bicuspid or Mitral Valve =ஈரிதழ் வால்வ் (இடது மேல் மற்றும் கீழ் அறைகள் )
9.தி Tricuspid Valve =மூவிதழ் வால்வ்  (வலது மேல் கீழ் அறைகளுக்கு இடையில் )

மேலே இரண்டு கீழே இரண்டு என்று மொத்தம் நான்கு அறைகளை கொண்டது நம் இதயம்.
மேல் அறைகளுக்கு ஏட்ரியம் என்று கீழ் அறைகளுக்கு வென்ட்ரிக்கிள்கள் என்றும் மருத்துவம் கூறும்.இதில் இதயம் (மேல் அறைகள் சுருங்கி கீழ் அறைகள்)விரியும் போது  lub என்ற ஒலியுடன் விரியும் இந்த நிலையில் இதயத்தின் கீழ் அறைகளான வென்ட்ரிகில்கள் விரிந்த நிலையில் மேல் அறைகள் சுருங்கும்.இந்த நிலையில் இடது வென்ட்ரிகிளில்  சுத்தீகரிக்கப்பட்ட இரத்தம் நுரையீரல் சிறையின் மூலமாக இடது ஏட்ரியம் வந்து அங்கிருந்து வந்து நிறைக்கும்.அதே நேரம் வலது வென்ட்ரிகிளில் வலது ஏட்ரியமிலிருந்து அசுத்த இரத்தம் வந்து நிறைக்கும்.இதற்கு PRELOAD என்பர்.இதுதான் கீழ் நிலை இரத்த அழுத்தம் (DIASTOLE )எனப்படும் 
இதன் பிறகு கீழ் அறைகள் இரண்டும் dup என்ற சப்தத்துடன் சுருங்கும் இந்தநிலையில் இடது வென்ட்ரிகிளில் இருந்து சுத்த இரத்தம் மஹாதமனியில் (THE AORTIC TRUNK) எதிர் அழுத்தத்துடன் வேகமாக பாயும்.வலது வென்ட்ரிகிளிலிருந்து அசுத்த இரத்தம் நுரையீரல் தமணிக்குள் வேகமாக பாயும் .இது AFTERLOAD என்ற நிலை.இந்த நிலையில் இரத்த குழாய்களில் ஏற்படும் அழுத்தம் மேல்நிலை இரத்த அழுத்தம் (SYSTOLE)ஆகும்.இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையே ஏற்படும் துடிப்புகள் தமனி குழாய்களில் மிக தெளிவாக தெரியும்.இதுவே நாடி துடிப்பு (PULSE) ஆகும். 
இவற்றை நாம் வீட்டிலிருந்தே அளவீடு செய்யும் கருவிகள்தான் இரத்த அழுத்த மானிகள் (SPYGMOMANOMETERS)இவற்றில் மின் அணு மானிகளை பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம் 
இவை oscillometric முறையில் நம் இரத்தத்தை அளவீடு செய்பவை 
OSCILLOMETRY என்பது நம் உடலில்  
மணிக்கட்டு,விரல்கள் அல்லது முழங்கை இவற்றில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சுற்று பட்டையை (CUFF) சுற்றி இறுக்கி இரத்த ஓட்டத்தை அந்த இடத்தில் தடுத்து பிறகு மீண்டும் ஓடவிட்டு அந்த இடத்தில் தமனியில் சுவர்களில் ஏற்படும் துடிப்பை (OSCILLATION)கொண்டு ஒரு டிஜிட்டல் திரையில் அளவீடு செய்வது ஆகும்.
இதில் நாடிதுடிப்பையும் அறியலாம்.

ரத்த அழுத்த அளவீடு செய்முறை:-

1.முதலில் காற்றோட்டமான ஒரு அறையை தேர்ந்தெடுக்கவும்.
2.காலையில் தூங்கி விழித்தவுடன் எடுக்கப்படும் காலை ரத்த அழுத்தம் (MORNING PRESSURE)மிகவும் முக்கியமானது 
3.முதலில் ஒரு நாற்காலியில் தளர்ந்து (RELAXED)வசதியாக சாய்ந்து உட்காரவும் 
4.எதிரே உள்ள மேஜையின் உயரம் உங்கள் நெஞ்சுக்கு சிறிது கீழே உங்கள் கைகளை மேஜையின் மீது ஊன்றும் பொது அதன் முழங்கை நரம்பு உங்கள் இதயத்திற்கு நேராக இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள் 
5.அழுத்த மானியை மேஜையில் வைத்து கொள்ளுங்கள்.
6.இடது கை பழக்கமுள்ளவர் வலது கையிலும் மற்றவர் இடது கையிலும் பரிசோதனை நடத்த வேண்டும்.
7.அழுத்த மானியை அதன் பேக்கிங்கிலிருந்து வெளியே எடுக்கவும்.பிரஷர் அளவிடும் சுற்று பட்டையின் முனையை அதன் plug இல் செருகவும்
8.ஸ்டெதஸ்க்கோப்பின் குப்பியை முழங்கையின் பக்கவாட்டில் அதாவது உங்கள் இதயம் இருக்கும் பக்கத்தில் அதன் ஒரே நேர் கோட்டில்  வைத்து பட்டையை முழங்கையில் ஓரளவு இறுக்கமாக இருக்கும் படி சுற்றி ஒட்டவும்.
நம் ஒரு ஆட்காட்டி விரலை உள்ள செருகும்படி இறுக்கம் இருந்தால் போதுமானது.
9.வசதியாக தளர்வாக ஒரு ஐந்து நிமிடம் ஓய்வாக இருக்கவும் 
10.உங்களது கருவி  தானியங்கி கருவியாகவோ அல்லது பகுதி தானியங்கி கருவியாகவோ இருக்கலாம்.
11.இந்த பரிசோதனை செய்வதற்குமுன் ஒருமுறை ஆஸ்பத்திரியில் ஒரு டாக்டரின் மூலம் மெர்குரி அழுத்த மானியின் மூலம் ஒரு முறை உங்கள் மேலழுத்தம் (SYSTOLE) மற்றும் கீழழுத்தம் (DIASTOLE) ஆகியவற்றை BASIC ஆக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.அதுதான் உங்களது அடிப்படை அளவுகள்.அவற்றை வைத்துக்கொண்டுதான் நீங்கள் ஒவ்வொரு நாளும் சுயமாக பரிசோதனைகள் செய்யவேண்டும்.
12.பிறகு உங்கள் கைகளை மேஜையில் ஊன்றி ஸ்டெதஸ்கோப்பின் குப்பி உங்கள் இதயத்தின் அருகில் அதன் சம உயரத்தில் இருக்கும் நிலையில் INFLATE பட்டனை அழுத்துங்கள்.உங்கள் Basic Systole அளவுக்கு கொஞ்சம் மேலே வரும்படி செட்டிங் செய்யவும்.அந்த அளவு வந்தவுடன் ஆட்டோமாட்டிக் காக DEFLATE ஆகும் அசையாமல் உட்கார்ந்து இருக்கவும் பிறகு மானியில் கீழ்கண்டவாறு அளவுகள் வரும் 
SYSTOLE -மேல் நிலை அழுத்தம் 
DIASTOLE -கீழ் நிலை அழுத்தம் 
PULSE       -நாடித்துடிப்பு 
திருப்பி திருப்பி குறைந்த பட்சம் 10 நிமிடம் இடைவெளிகளில் 3 to 5 தடவை பரிசோதிக்கவும் 
முடிவுகளை மூன்று விதமாக தெரிந்து கொள்ளுங்கள் 

உதாரணம் 

120/80;130/85;130/85;140/90;130/85
மேல்கண்ட ஐந்து பரிசோதனை முடிவுகளை கீழ்கண்டவாறு தெளிவாக்கலாம் 
Mode :-அதிக எண்ணிக்கையில் கிடைத்த முடிவு -130/85
Median :-மத்தியில் கிடைத்த முடிவுகளின் சராசரி -130/85
Mean :- மொத்த சராசரி -130/85
சாதாரணமாக ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய அளவுகள் :-
1.மேல் நிலை அழுத்தம் (SYSTOLIC):-120 mm of Hg.
2.கீழ்நிலை அழுத்தம்      (DIASTOLIC):-80 mm of Hg.
3.நாடித்துடிப்பு       67 டு 74

பரிசோதனை செய்ய ஆகுமான நேரங்கள் :-

1.காலையில் கண்விழித்து ஒரு மணி நேரம் கழித்து  வெறும் வயிற்றில் .
2.இரவில் படுக்கைக்கு போக ஒரு மணி நேரத்திற்கு முன்.
3.ஸ்போர்ட்ஸ் அல்லது நடை பயிற்சி எடுப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு.
4.பயிற்சி எடுத்த பின் ஒரு மணி நேரம் கழித்து.

பரிசோதனை செய்ய கூடாத நேரங்கள் 

1.குளித்த உடன் 
3.சாப்பிட்டவுடன் 



\

திங்கள், 1 ஜூலை, 2019

வெற்று நீரிழிவு -DIABETES INSIPIDUS (DI)

வெற்று சிறுநீரிழிவு டயாபடீஸ் இன்சிபிடஸ்



நீரிழிவு என்றாலே நமக்கெல்லாம் பெரும்பாலும் தெரிந்தது சர்க்கரை நீரிழிவு நோய் பற்றித்தான் 
ஆனால் நாம் இங்கே பார்க்கப்போவது அதற்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு நீரிழிவு நோய் ஆகும் 
இதில் வெறும் நீர்சத்து மட்டுமே சிறு நீரில் வெளியேறிக்கொண்டு இருக்கும் 
எப்படி இன்சுலின் குறைபாடு சர்க்கரை நீரிழிவிற்கு காரணமோ அது மாதிரி இந்த நீரிழிவிற்கு வாஸோப்ரஸின் (Vasopressin ) எனப்படும் ஹார்மோன் குறைபாடே காரணமாகும் 
நம் சிறுநீரகம் சிறுநீர் உற்பத்தியாகி வெளியேறும் நிலையில் கிட்டத்தட்ட 90% நீர்ச்சத்தை மீண்டும் உறிஞ்சி ரத்தத்தில் சேர்த்துவிடும் இதற்கு காரணம் நம் மூளைதான் 
நம் உடலின் நீர்ச்சத்தை சமன்பாட்டுடன் நிர்வகிப்பதில் மூளைக்கு பெரும்பங்கு உண்டு இல்லை என்றால் நம் உடல் நீர்ச்சத்து முழுவதும் வெளியேறி மரணம் சம்பவித்துவிடும் 
மூளை இதை எப்படி செய்கிறது என்பதை சுருக்கமாக பாப்போம் 
நம் மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போ  தலாமஸ் என்ற ஒரு சுரப்பி இருக்கிறது.இதில் இருந்துதான் வாஸோப்ரஸின் (Vasopressin) என்றோரு ஹார்மோன் உற்பத்தியாகிறது இதற்கு ஆன்டி டையூரட்டிக் ஹார்மோன் (Anti Diuretic Hormone) என்றும் சுருக்கமாக A.D.H. என்றும் கூறுவார்கள் .இது இரத்தத்தில் நீர்ச்சத்தை அதிகரித்து இரத்த அழுத்தம் குறையாமல் பார்த்துக்கொள்ளும் அதனால்தான்தான் இதற்கு வாஸோப்ரஸின் என்று பெயர்.
இந்த ஹார்மோன் ஹைபோதலாமஸில் உற்பத்தியாகி கீழ்நிலை பிட்யூட்டரியில் (Posterior Pituitary) சேகரிக்கப்பட்டு மூளையின் தூண்டுதலால் அங்கிருந்து வெளியாகி சிறுநீரகத்திற்கு நீரை திரும்ப உறிஞ்சும்படி கட்டளை இடுகிறது.
இந்த அமைப்பில் கோளாறு ஏற்படும் பட்சத்தில் Diabetes Insipidus எனப்படும் வெற்று சிறுநீரிழிவு என்ற கொடிய நிலை ஏற்படும்.
வெற்று சிறுநீரிழிவு என்ற இந்த நோய் மிகவும் அரியது என்றாலும் இது மிகவும் ஆபத்தானது ஆகும் .
இந்த நோய் ஆரம்பநிலையில் பெரும்பாலும் எந்தவித அறிகுறிகளையும் காட்டாது.எல்லாம் நார்மலாகவே இருக்கும் பிறகு நாட்பட நாட்பட அடிக்கடி சிறு நீர் கழிவதும் கடுமையான தாகம் களைப்பு என்று படிப்படியாக இதன் அறிகுறிகள் ஆரம்பமாகும்.நோய் முற்றிய நிலையில் இது ஆளை படுக்கையில் முடக்கிவிடும்.குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை சிறுநீர் பிரியும் 
லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்தாலும் தாகம் தீராது.உடலிலிருந்து வெறும் நீர் மட்டும் வெளியேறுவதால் நீரில் கரையக்கூடிய தாதுக்கள் குறிப்பாக சோடியம் உடலிலேயே தங்கி சோடியம் மிகைப்பாட்டின் தாக்கங்களை உண்டாக்கும் 

நோய் வகைகளும் காரணிகளும் :-

A .மத்திய நரம்பு மண்டல வெற்று நீரிழிவு (CENTRAL DI ):-இது பிட்யூட்டரியிலிருந்து அதாவது மூளையிலிருந்து வாஸோப்ரஸின் சரியாக சுரக்காமல் இருப்பது.இதற்கு கீழ்கண்ட காரணிகளை வகைப்படுத்தலாம்.
1.தலையில் அடிபடுதல் இதனால் ஹைப்போதலாமஸ் பிட்யூட்டரி போன்ற உறுப்புகள் சேதமடைதல் 
2.மரபு அணுக்கள் கோளாறு 
3.தலை மற்றும் மூளைப்பகுதியில் ஏற்படும் புற்று நோய் கட்டிகள் 
4.தலையில் அறுவைசிகிச்சை 

B .சிறுநீரக கோளாறு (NEPHROGENIC DI):-இந்தவகையில் மூளையிலிருந்து வாஸோப்ரஸின் மூலம் மூளை கட்டளை இட்டாலும் சிறுநீரகம் அதை பொருட்படுத்தாமல் இருப்பது.

இதற்கு காரணம் ,
1.சிறுநீரக கோளாறு 
2.சிறுநீரக கற்கள் 
3.உயர் இரத்த அழுத்தம் (High B.P.)
4.தாழ்வுநிலை இரத்த அழுத்தம் (Low B.P.)
5.சர்க்கரை நோய் (Hyperglycemia)

C.அதிக நீர்ச்சத்து எடுப்பதால் வருவது (Dipsogenic DI):-இந்த வகை நீரிழிவு மிகவும் அலாதியானது இதில் வாஸோப்ரஸின் சுரப்பு ஒழுங்காகவே இருக்கும்.சிறுநீரகத்தில் குறிப்பிட்டு எந்த பாதிப்பும் இருக்காது இருப்பினும் சிறுநீரகம் மூளையின் கட்டளையை புறக்கணிக்கும் இதற்கு காரணம் தேவையில்லாமல் நீண்ட காலங்களுக்கு அளவு மீறி நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்வது அதிலும் குறிப்பாக மது பானங்கள் குளிர் பானங்கள் என்று ப்ரீயாக கிடைக்கிறதே என்று சகட்டு மேனிக்கு பீப்பாய் பீப்பாயாக வயிற்றுக்குள் பானங்களை பாய்ச்சுவது இதனால் சிறுநீரகம் பாதிப்படைவதோடு இதுமாதிரி வெற்று நீரிழிவிற்கும் வழிவகுக்கும் அதனால்  உண்ணுங்கள் அளவோடு பருகுங்கள் அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சு 

D.கர்ப்பகால  DI (GESTAGENIC DI):-

இந்த வகை நோய் கர்ப்ப காலத்தில் மட்டும் இருக்கும் பிரசவத்திற்கு பிறகு தானாகவே நோய் நீங்கிவிடும் ஆனால் மீண்டும் அடுத்த கர்ப்ப காலத்தில் வரலாம் இது அவ்வளவு கடுமையாக இருக்காது.

நோய் அறிகுறிகள் (பொது)

1.ஒருநாளைக்கு மூன்று லிட்டர் வரை வெறும் தண்ணீரே சிறுநீராக வெளியேறும் அதில் நிறம் மணம் சுவை இருக்காது 
2.அடிக்கடி கட்டுப்பாடில்லாமல் சிறுநீர் வெளியேறும் 
3.அடங்காத தாகம் 
4.வாய் வறட்சி 
5.களைப்பு பலஹீனம் 
6.தாழ்வுநிலை ரத்த அழுத்தம் (Low Pressure) மற்றும் இதயம் செயலிழப்பு(Heart Failure)
7.தோல் வறட்சி 
8.மலச்சிக்கல் 

பரிசோதனைகள் :-

1.சிறுநீர் பரிசோதனை 
2.ரத்தத்தில் சோடியம் அளவு 
3.ADH பரிசோதனை (இரத்தத்தில் )

சிகிச்சைகள் :-

இந்த நோய்க்கு நிவாரணம் இல்லை ஆனாலும்  கீழ்கண்ட சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்தலாம் 
1.Desmopressin
2.Vasopressin 
மேலே கண்ட மருந்துகள் மூக்கில் உறியக் கூடிய ஸ்ப்ரே ஆக கிடைக்கின்றன 
மருத்துவ மேற்பார்வையில் அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம் 


  


வியாழன், 27 ஜூன், 2019

சோடியம் மிகைபாடு -ஹைப்பர் நேற்றிமியா

உடலில் சோடியம் மிகைப்பாடு


நம் உடலின் சோடியம் அளவு சாதாரணமாக 130mEq  முதல் 140 mEq வரை இருக்கலாம் இந்த அளவீட்டிற்கு மேல் இருந்தால் அது சோடியம் மிகைப்பாடு அல்லது Hypernatremia என்னும் நோய்க்குறி ஆகும் 
இதுபற்றி விபரமாக நாம் பார்க்கலாம் 
நம் உடலின் ஒவ்வொரு பாகமும் இயங்குவதற்கோ அல்லது இயக்குவதற்கோ சோடியம் இன்றியமையாதது என்றுநாம் இதற்கு முந்திய  பதிவுகளில்  பார்த்தோம்.மீண்டும் அதை நாம் விவரிக்க போவது இல்லை 
சோடியம் மிகைப்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றி மட்டுமே பார்க்கலாம் 

காரணிகள் :-

1.இன்ட்ரா க்ரேனியல்  ப்ரெஷர் எனப்படும் கொடூர தலைவலி  அல்லது உடல் நீர் கட்டுகள் அல்லது வீக்கங்கள் மற்றும் கிளாக்கோமா என்ற கண் அழுத்த நோய்  இவற்றிற்காக பயனாகும் சில வகை சிறுநீர் இளக்கிகள் (OSMOTIC DIURETICS )அதாவது இந்த வகை சிறுநீர் இளக்கிகள்   சிறுநீரில் அதிக அளவு நைட்ரோஜன் கழிவுகள் மற்றும் சர்க்கரையை  நீருடன் வெளியேற்றி சோடியம்  போன்ற உப்புக்களை மீண்டும் இரத்தத்திலேயே சேர்த்துவிடும் இதனால் இரத்தத்தில் சோடிய அளவு கூடிவிடும் (உம்)Mannitol & Isosorbide 
2.வீரிய ஸ்டெராய்டு மருந்துகள் (Male Sex Hormones,Anabolic Steroids)
3.கருத்தடை மருந்துகள் (Female Sexhormones and Progestins) 
4.அட்ரினல் இயக்கு நீர் ஸ்டெராய்டு (Adreno Cortico Tropic Hormone)
5.Glucocorticoids இந்த வகையில் ஏராளமான ஸ்டெராய்டுகள் இருக்கின்றன 
ஆஸ்துமாவிற்காக மூக்கிலோ அல்லது வாயிலோ உறியப்படும் சில வகை ஸ்பிரேக்களில் பயனாகும் Fluticasone,Beclomethasone,Budesonide ஆகியவையும் வீக்கம் தோல் சிவத்தல் அரிப்பு போன்றவற்றிக்கு மாத்திரையாகவோ அல்லது களிம்பு மற்றும் க்ரீம்களாகவோ பயன்படும் Betamethasone,Dexamethasone Triamcinolone,Prednisolone Methylprednisolone போன்றவையும் இயற்கையில்  சுரக்கும் Cortisol,Hydrocortisone ஆகியவையும் இவ்வகையை சேர்ந்தவையாகும் 
நினைவிருக்கட்டும் ஆஸ்த்மா மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு glucocorticoids தவிர்க்க முடியாதவை ஆகும்.
 மேல் கண்ட அனைத்து மருந்துகளும் ரத்தத்தில் சோடியம் அளவை அதிகரிக்க செய்யும் 
6.வெற்று நீரிழிவு நோய் (DIABETES INSIPIDUS )இந்த நோய் ரத்தத்திலும் உடல் நீரிலும் சோடியம் அளவை அதிகரிக்க செய்வதுடன் மிக ஆபத்தானதும் கூட இதுபற்றி நாம் பின்னர் ஒரு பதிவில் தனியாக காணலாம்.

சோடியம்  அதிகம் உள்ள உணவுகள் :-

1.இறால் மீன்கள் (Shrimps)
2.ரெடிமேட் புட்டிங்குகள் (Instant Puddings)
3.காட்டேஜ் சீஸ் (Cottage Cheese)
4.சலாடுகள் (Salads)
5.பீஸ்சா (Pizzas)
6.உப்பு (Table Salt)
மேல் கண்ட உணவுகளை நீங்கள் சோடியம் மிகை நோய் உள்ளவராக இருந்தால் தவிர்த்து கொள்வது நல்லது 

அறிகுறிகள் :-

1.நீங்கள் வெற்று நீரிழிவு நோயாளியாக இருந்தால் முக்கியமாக சோம்பல் (Lethargy),மற்றும் மனக்குழப்பம் இவை ஏற்படும் காரணம் இவை மூளையில் ஒரு பகுதி சிதைவதால் ஏற்படுவதாகும்.இது பற்றி நாம் விபரமாக அடுத்து வரும் தனிப்பதிவில் வெற்று நீரிழிவு என்ற தலைப்பில் பாப்போம்.
2.உப்பு ஆர்வம்,அதாவது அதிக உப்பு சாப்பிடுவதில் நாட்டம் இம்மாதிரி தகிப்பு ஏற்பட்டாலே நம் உடம்பில் சோடியம் அளவு மீறி இருக்கிறது என்று அர்த்தம்.
3.மிகுந்த தாகம் எவ்வளவு நீர் அருந்தினாலும் திருப்தி இருக்காது 
4.அடிக்கடி நீர் பிரிதல் 
5.வீக்கம் 
6.தலைவலிகள் 
7.பசித்தாலும் உணவு உள்ளே இறங்காது கொஞ்சம் சாப்பிட்டாலும் போதும் என்றாகிவிடும் 

பரிசோதனைகள் :-

1.இரத்தம் 
2.சிறுநீர் 

மருத்துவம் :-

1.குறுகிய கால நோய்க்கு (Acute cases )5% க்ளுகோஸ் கரைசலை சிரைக்குழாயில் ட்ரிப் மூலம் மெதுவாக செலுத்துவது.கவனம் வேகமாக செலுத்தினால் மூளை பாதிக்கப்படும் 
2.நாட்பட்ட நோய்க்கு 0.045% சோடியம் குளோரைடை சிரை குழாயில் செலுத்துவது 
மேல் கண்ட சிகிச்சைகளை டாக்டரின் மேற்பார்வையில் ஆஸ்பத்திரியில் எடுத்துக்கொள்ளவேண்டும் 







ஞாயிறு, 23 ஜூன், 2019

சோடியம் குறைபாடு -ஹைபோ நேற்றெமியா

சோடியம் குறைபாடு -ஒரு பார்வை



நம் உடம்பில் ரத்தத்திலும் செல்  மற்றும் செல் இடை திரவங்களிலும் நம் உடல் இயக்கத்திற்கான அநேக தாது உப்புகள் சேர்ந்து இருக்கின்றன இவை பெரும்பாலும் அயனிகளாகவே இருக்கின்றன.அவற்றில் ஒன்றுதான் சோடியம் அயனி.
சோடியம் மிக மெலிதான எளிதில் துண்டுபடக்கூடிய ஒரு உலோகமாகும் இது மிக வீரியமிக்க காரவகை வேதி கூட்டு பொருட்களை உண்டாக வல்லது (Basic Metal )
உதாரணம் சோடியம் ஹைட்ராக்ஸைடு (NaOH)இது ஒரு வீரியமிக்க காரமாகும் 
அதே சமயம் நம் உடம்பில் சோடியம் பெரும்பாலும் 
சோடியம் குளோரைடு மற்றும் சோடியம் பைகார்போனேட் உப்புக்களாகவுமே இருக்கிறது 
இந்த உப்புகள் கூட்டு பொருட்களாக இருந்தாலும் அவை எலெக்ட்ரானிக் கூட்டுக்களாக இருப்பதால் அந்த கூட்டு மிகவும் பலகீனமானதே எனவே அவை நேரத்திற்கு தகுந்தாற்போல் இடத்திற்கு தகுந்த மாதிரி சில சமயம் கூட்டு பொருட்களாகவும் சில சமயம் தனித்தனி அயனிகளாகவும் இருக்கும் 
இதை கீழ்கண்டவாறு வேதி சமன்பாடுகள் மூலம் விளங்கலாம் 
Na+  + Cl- >reversible< NaCl (sodium chloride)
Na+  + HCO3->reversible< NaHCO3(sod.bicarbonate)
 உடம்பின் மொத்த சோடியம் அளவு 130mEq -140mEq வரை  இருக்கலாம்.இந்த வரையறைக்கு கீழே போனால் அதாவது 120mEq க்கு கீழே இறங்கினால் சோடியம் குறைபாடு அதாவது Hyponatremia என்ற நிலை உண்டாகும்.
சோடியம் நம் உடம்பில் பெரும்பாலும் செல் இடை திரவத்தில்தான் (intercellular fluid) மிகுந்து இருக்கும் 
சோடியம் நம் உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதது 
நம் உடலின் ஒருபகுதியை இயக்கவேண்டும் என்றால் உதாரணமாக நாம் கைகளை அசைக்க வேண்டும் என்றால் அந்த பகுதியிலுள்ள நரம்பு மண்டலம்  நிலைக்கு வரவேண்டும் இந்த நிலைக்கு action potential என்பர் இந்த நிலைக்கு வர சோடியம் அயனிகள் நரம்பு செல்களுக்குள் பாயும் அதே அளவு பொட்டாசியும் வெளியேறும் இருபுறமும் இருக்கும் குளோரைடு அயனிகள் அவற்றை ஈரத்து கொள்ளும்.இதை கீழ்கண்ட வரைவு மூலம் விளங்கலாம் 
Note that sodium enters the intracellular and depolarize the electrical shift to cause an action potential for excitation.
சோடியம் நம் உடல் அசைவுகளுக்கு மிகவும் அவசியமாதலால் அதன் குறைபாடு கீழ்கண்ட விளைவுகளை உண்டாக்கும் :-

அறிகுறிகள் :-

1.களைப்பு 
2.குமட்டல் ,தலை சுற்றல் 
3.வாந்தி 
4.தலைவலி 
5.எரிச்சல் மனா உளைச்சல் 
6.தசை வலி வீக்கம் 
7.வலிப்பு மற்றும் கோமா நிலை 

காரணிகள் :-

கீழ்கண்ட காரணிகளை வகைப்படுத்தலாம் 
1.சிறுநீர் இளக்கிகள் (Diuretics,like thiazide மற்றும் loop diuretics )
2.மனஉளைச்சல் மருந்துகள் (Anti Depressants )
3.வலி நிவாரணிகள் 
4.CHF எனப்படும் இதய செயற்பாடு தோல்வியடைதல் 
5.கல்லீரல் செயல் குறைபாடு 
6.SHAH (SYNDROME OF HIGH SECRETION OF ANTI DIURETIC HORMONE )எனப்படும் உயர் சுரப்பு ஆன்டி டையூரெடிக் ஹார்மோன் இது சிறுநீரகம் அதிக நீர்ச்சத்தை உடலுக்குள் உறிஞ்சி இழுத்துவிட்டு உடல் சோடியம் அளவை நீர்க்க செய்துவிடும் 
7.நாட்பட்ட வயிற்றுப்போக்கு வாந்தி மற்றும் அதிக வியர்வை வெளியேற்றம் ஆகிவையும் உடல் சோடியம் அதிகாகமாக இழப்பதற்கு காரணமாகும் 
8.அதே நேரம் அளவுமீறி திரவ  குடிப்பதும் உடல் சோடிய சத்தை  நீர்க்க செய்துவிடும் 
9.அட்ரீனல் செயல்பாடு குறைவு (அடிசனின் நோய்)
இந்த நிலையில் அல்டோஸ்ட்டிரான் என்ற ஹோர்மோன் கோளாறினாலும் உடல் சோடியம் நிலை பாதிக்கப்படும் 
10.தைராய்டு குறைபாடு 
11.அதிக அளவு amphetamin போன்ற தூக்கத்தை கெடுக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வது 

Diagnosis (நோய் அறிதல் ):-

1.ரத்த பரிசோதனை 
2.சிறுநீர் பரிசோதனை 

மருத்துவம் :-

1.சிறுநீர் இலக்கிகள் சாப்பிடுபவர்கள் டாக்டரின் ஆலோசனை பெற்று அதன் டோஸ் மாற்றம் சேது கொள்ளலாம் அவர்கள் திரவ உணவு எடுப்பதிலும் டாக்டர் ஆலோசனை பெற்று அளவை குறைத்துக்கொள்ளலாம் 
2.சோடியம் IV ட்ரிப் களை  டாக்டர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம் 
A HALF NORMAL SALINE DRIP (0.45% Sodium chloride)
3.அவசர நிலை இல்லை என்றால் உப்பு நீர் திரவம் எடுத்துக்கொள்ளலாம் 
ஓன்று முக்கியம் சோடியம் அளவை மெது மெதுவாகத்தான் உயர்த்தவேண்டுமே வேண்டுமே தவிர மொத்தமாக ஏற்றினால் அது மூளை மண்டலத்தை பாதிப்படைய செய்துவிடும் 

கேன்சர் மார்க்கர் :-

சோடியம் அளவு குறைபாடு சில சமயம் கீழ்கண்ட புற்று நோய்களின் மார்க்கர் ஆகும் 
1.நுரையீரல் புற்று 
2.கல்லீரல் புற்று 
3.மூளை புற்று 
4.கணைய புற்று 
5.சிறு நீராக புற்று 
6.உணவு குழாய் புற்று 
7.தொண்டை புற்று 
8.ஹாட்கின்  அல்லாத லிம்போமா 


திங்கள், 13 மே, 2019

போதை வஸ்துக்களை விட்டால் வரும் நன்மைகள்

 போதையை விட்டால் 10 நன்மைகள் 


போதை வஸ்துக்களான ஆல்கஹால் கஞ்சா அபின் போன்ற வஸ்துக்களை தவிர்த்தால் குறைந்தது பத்து நன்மைகளாவது நமக்கு கிட்டும் அவை :-
1.தினமும் ஆல்கஹால் குடிப்பது ஆரோக்கியம் என்று கருதுவது  ஒரு பேதைமை 
ஒரு ட்ரின்க் ஒருநாளைக்கு என்று கருதினால் கூட அத்துடன் நின்றுவிடாது தொடரக்கூடும் 
ஆனால் இதை தவிர்ப்பதால் 
1.நம் இதயத்துடிப்பு ஆரோக்கியமாக இருக்கும் இரத்த அழுத்தம் நேர்த்தியாக இருக்கும் 
2.கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் 
3.மூளையும் நரம்பு மண்டலங்களும் பாதுகாப்பாக இருக்கும் 
4.ஜீரண மண்டலம் வலுப்பெறும் 
5.தூக்கமின்மை ஒழுங்கற்ற தூக்கம் இவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும் 
6.சமூக உறவுகள் சுமுகமாக இருக்கும் 
7.விபத்துகளுக்கு ஆளாகாமல் தவிர்த்துக்கொள்ளலாம் 
8.உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.காரணம் ஒரு கிளாஸ் பீரில் 150 கலோரியும் ஒரு கிளாஸ் ஒயினில் 130 கலோரியும் இருக்கிறது அது மட்டுமல்லாமல் ஆல்கஹால் பசியை தூண்டிவிட்டு இன்னும் அதிக கலோரிகளை விழுங்க வைக்கும் 
9.புற்று நோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் 
10.குடும்ப உறவுகள் மற்றும் கணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவுகள் சீராகும் 

வியாழன், 25 ஏப்ரல், 2019

ரத்தத்தில் உயர் நிலை பொட்டாசியம்

இரத்தத்தில் உயர் நிலை  பொட்டாசியம்     

  

        பொட்டாசியம் என்பது காரத்தன்மை நிறைந்த எளிதில் உடையக்கூடிய ஒரு மெது உலோகமாகும் 
இந்த வகையில் சோடியத்திற்கு அடுத்த நிலையில் இது இருக்கிறது வேதியியலில் பொட்டாசியம் மற்ற மூலகங்களுடன்  கூடும்போது தனது அணுவிலிருந்து ஒரு மின்துகளை (ELECTRON) இழந்து நேர்மின் அயனி ஆகிறது இதன் இரசாயன வலு எண்(VALENCY) ஒன்று ஆகும்.எனவே இதன் ஒவ்வொரு அயனியும் தன தலையில் ஒரே ஒரு நேர்மின் அடையாளத்தை சுமந்து கொண்டு இருக்கும்.இதன் அர்த்தம் இந்த அயனிக்குள்  ஒரு புரோட்டான் (நேர் மின் துகள்) மிகையாக இருக்கிறது அதனை எதிர்கொள்ள ஒரே ஒரு எலெக்ட்ரான்(எதிர் மின் துகள் )தேவை என்பதாகும் 
பொட்டாசியம் அயனியின் அமைப்பு கீழே தரப்பட்டு இருக்கிறது 
   

நமது உடலில் பொட்டாசியம் பெரும்பாலும் க்ளோரைடு அல்லது பைகார்போனேட் உப்புக்களாகவே இருக்கிறது 
நமது திசு செல்களுக்குள் இருக்கும் திரவம் பெரும்பாலும் நேர் மின்  பொட்டாசியம் அயனிகளை கொண்டிருக்கும் அதேவேளை செல்களுக்கு வெளியே அல்லது இடையே உள்ள திரவத்தில் பெரும்பாலும் நேர் மின்  சோடியம் அயனிகள் நிறைந்திருக்கும் 
இரண்டு திரவங்களிலும் எதிர் மின் துகள் கொண்ட  குளோரைடு அயனிகள்  ஏற்ற தாழ்வுகளுடன் இருக்கும் 
இப்பொது ஒரு செல் துடிப்பு அடைய வேண்டுமென்றால் முதலில் அது முனைவு நீக்கம் (DEPOLARIZATION)அடைய வேண்டும் 
ஒரு செல்லை மின் முனைவு நீக்குவதில் சோடியம் மிக வீரியம் கொண்டது ஆகும்  .மிகவும் பலஹீனமானது குளோரைடு அயனி ஆகும் 
இதை கீழ்கண்டவாறு  உணரலாம் 

Na+  > > Ca++ >> K+ >>> Cl--

          Na+  ---- sodium ion
       Ca++ --- Calcium ion
       K+   ---- Potassium ion
       Cl--   = = Chloride ion
எனவே மேலேயுள்ள வரிசைப்படி நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் ஒரு செல் உசுப்பப்பட அல்லது துடிக்கவேண்டுமென்றால் சோடியம் அதற்குள் பாய வேண்டும் அதே அளவு பொட்டாசியம் வெளியேற வேண்டும் 
இப்பொது செல் துடித்து செயல்படும் செயல் பாடு முடிந்து அது நிதானம் அடையும் போது மீண்டும் மின் முனைவு   ஆக்கம் (REPOLARIZATION) நடைபெறும் இப்பொது மீண்டும் இடம் மாறிய அயனிகள் மீண்டும் பழைய நிலைகளுக்கு திரும்பும்.மேல் கூறிய கோட்பாட்டிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது ஒரு தசை இயங்கவேண்டும் என்றால் அதன் திசுமண்டலத்திலுள்ள செல்களுக்குள் சோடியம் பாய வேண்டும் பொட்டாசியம் நீங்க வேண்டும் எனவே சோடியம் ஒரு உந்து (EXCITATORY ) அயனி ஆகும் பொட்டாசியம் ஒரு தடுக்கும் (INHIBITORY) அயனி ஆகும் 
 இதுதான் ஒரு பொதுவான கோட்பாடு இதையே எல்லா தானியங்கி அல்லது நாம் இயக்கும்  தசைகளும் பின்பற்றுகின்றன 
இப்பொது நாம் தலைப்பிற்கு வருவோம் 
நம் இரத்தத்தில் பொட்டாசியம்   அளவு பொதுவாக 3 இலிருந்து 5 மில்லி மோல்  இருந்தால்  போதும் 
இதுவே 7 மில்லி மோலுக்கு  மேல் அதிகரித்தால் அந்த நிலைக்கு உயர்   நிலை பொட்டாசியம் என்பர் இதை  மருத்துவ மொழியில் HYPERKALEMIA என்பர் 
பொதுவாக இதன் ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரியாது முற்றிய நிலையில்தான் இது கீழ்கண்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும் 

அறிகுறிகள் :-

1.தசை பலஹீனம் 
2.களைப்பு 
3.குமட்டல்  வாந்தி 
4.சதை பிடிப்பு ,வலி 
5.மூச்சு திணறல் 
6.ஒழுங்கற்ற இதய துடிப்பு 
7.நெஞ்சு வலி 
காரணிகள் :-
1.நாட்பட்ட சிறுநீரக கோளாறு (ESKD )
2. கட்டுப்படுத்தப்படாத உயர்  சர்க்கரை நிலை(HYPERGLYCEMIA ) ,நீரிழிவு 
3.கீழ்கண்ட சிலவகை மருத்துகள் :-
A .வலி மருந்துகள் 
B.ட்ரிமேதோப்ரிம் (சல்பா  ஆண்டிபயாடிக்)
C.கேன்சர் மருந்துகள் (சைக்ளோஸ்போரின்)
D.ரத்த கொதிப்பு மருந்துகள்:- (--PRIL மருந்துகள்  ,--lol மருந்துகள் )
E.அமிலோடிப்பின், நிபிடிப்பின்,வெரப்பாமில் டில்டியாஜிம்  போன்ற கால்சியம் அயனி அடைப்பான் மருந்துகள் 
F.சக்சினில்கோலின் 
G.ஹெப்பாரின் 
H.டிகாக்சின் 
I .மன்னிட்டால் 
4.சிறுநீரக கோளாறு 
5.உடலில் ஏற்படும் காயங்கள் 
6.ஆல்டோஸ்ட்டிரோன் ஹார்மோன் குறைபாடு 

பொட்டாசியம்  அதிகம் உள்ள பண்டங்கள் :-

1.சர்க்கரை வள்ளி கிழங்கு 
2.டின்னில் அடைக்கப்பட்ட தக்காளி பண்டங்கள் 
3.உருளைக்கிழங்கு 
4.புரதங்கள் :-பீன்ஸ்,கொடுவா மற்றும் டூனா மீன்கள்
5.தோலுரிக்கப்படாத ,காய்கறிகள் பழங்கள் 
6.தயிர் 
7.காரட் ஜூஸ் 
8.உலர்த்திய பிளம் (PRUNE)  மற்றும் அதன் ஜூஸ் 
9. உலர்த்திய ஆப்ரிகாட் மற்றும் பீச் பழம்   
10. பீட் ரூட்டின் பசும் இலைகள் 

பரிசோதனைகள் :-

1.முதலில் டாக்டர் சிறுநீரகத்தை பரிசோதிப்பார் 
2. இதய பரிசோதனைகள் 
3.நீர்ச்சத்தின்  அளவு    பரிசோதனைகள் 

சிகிச்சை முறை :-

1.இறுதிக்கட்ட சிறுநீரக நோயாளிகள் (ESKD) டயாலிசிஸ் செய்துகொள்வது அவசியம் 
2.குறுகிய சிறுநீரக நோயாளிகளுக்கு கீழ்கண்ட சிகிச்சைகள் அளிக்கலாம் :-
a)கால்சியம் ஊசி (IV )
b)இன்சுலின் ஊசி (IV)10 யூனிட் அதை தொடர்ந்து 25கிராம் க்ளுகோஸ் IV ஊசி 
c)albuteral இது ஒரு ஆஸ்துமா மருந்து ஆகும் .சிலருக்கு இதை உபயோகிக்கலாம் 
                
   



அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...