இ ஸி ஜி -சில அடிப்படைகள்
முதலில் இ சி ஜி என்றால் என்ன வென்று பார்க்கலாம் .
E.C.G என்றால் Electro-Cardio-Gram ஆகும்
இதை EKG என்றும் கூறுவார்கள் அதாவது ஜெர்மன் மொழியில் இதயத்திற்கு kardio என்பர் எனவே C க்கு பதில் K.
இசிஜி என்பது நம் இதயத்தின் தசைகளில் கடத்தப்படும் மின் அதிர்வுகளை ஒரு கிராப் தாளில் கோடு அலைகளாக பதிவு செய்தல் ஆகும்
இந்த கோடு அலைகளின் ஏற்படும் மாற்றங்களை கொண்டு இதயத்தில் ஏற்படும் பல கோளாறுகளை அறிய முடியும்
எல்லா இசிஜி கிராபிகளுமே அதற்கென்று வடிவமைக்கப்பட்ட இசிஜி கிராப் பேப்பர்களிலேயே பதியப்படுகின்றன.
![]() |
படம் -1 |
மேலே உள்ள படம்-1-ல் காண்பதுதான் இசிஜி கிராப் பேப்பரின் அமைப்பு ஆகும்
இந்த இசிஜி பேப்பரை உற்று கவனியுங்கள்.அதில் பெரிதும் சிறிதுமாக சதுரங்கள் அமைந்திருப்பதை பார்ப்பீர்கள்.
ஒரு சிறிய சதுரத்தின் நீளமும் அகலமும் 1மி மீ ஆகும்.
இதே போல் ஐந்து சிறிய சதுர நீளமும் அகலமும் கொண்டது ஒரு பெரிய சதுரம்.எனவே ஒரு பெரிய சதுரத்தின் நீளமும் உயரமும் 5மிமீ ஆகும்.(பார்க்க படம்-1)

இதில் X -கோடு (X-Axis) கீழேயுள்ள படுக்கை கோடு ஆகும் அதற்கு நேர் செங்குத்தாக நிற்பது Y-கோடு (Y-Axis)ஆகும்.
X-கோடு வினாடிகளில் காலத்தையும்
Y-கோடு மில்லி வோல்ட்டுகளில் மின் அதிர்வுகளையும் பதிவு செய்யும்.
சாதாரணமாக இ சி ஜி மிஷின் ஒரு நொடியில் 25 மி மீ வீதம் பேப்பரை நகர்த்துமாறு செட் செய்யப்பட்டு இருக்கும்.
இந்த விகிதத்தில் கீழ்கண்ட அடிப்படை சமன்பாடுகளை நாம் கணிக்கலாம்:-
25 மி மீ = 1வினாடி
எனவே 5மி மீ =5/25=0.20விநாடி
1மி மீ =1/25=0.04விநாடி
எனவே 1பெரிய சதுரம் =0.20விநாடி
1 சிறிய சதுரம் = 0.04வினாடிகளில் பிரிண்டரில் நகரும் .
இதேபோல் உயரத்தில் 10மிமீ=1mV.அதாவது 10 சிறிய சதுரங்கள்(ss) அல்லது இரண்டு பெரிய சதுரங்கள் (LS) உயரத்தில் 1mV.மின் அதிர்வுகளை கணக்கிடலாம்
ஆக கிராப் பேப்பரில் மேற்கண்டவாறு பெரிய மற்றும் சிறிய சதுரங்கள் அமைத்திருக்கும்.இவற்றை கொண்டுதான் மின் ஓட்டம் வரையும் அலை கோடுகளை அளவீடு செய்கிறார்கள்
சாதாரணமாக இசிஜியில் base கோடு ஆக இருப்பது X-கோடு தான்.இதற்கு ஐசோ எலக்ட்ரிக் கோடு என்பர்.இதில் பெரும்பாலும் மின் அதிர்வுகள் பூஜ்யமாகத்தான் இருக்கும்.ஆனால் சில நோய்களின் போது இதில் அதிர்வுகளும் இருக்கும்.இது பற்றி பிறகு பார்க்கலாம்.இதை அடிப்படையாக கொண்டே இதயத்தின் மின் அதிர்வுகளும் துடிப்புகளும் மேலும் கீழுமாக அலை கோடுகளாக பதிவாகும்.கீழேயுள்ள படம் -2 இல் ஒரு நார்மல் இசிஜி காட்டப்பட்டுள்ளது
இதற்கு நார்மல் சைனஸ் ரிதம் என்பர்
நார்மல் சைனஸ் ரிதம் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது
இந்த சைனஸ் ரிதம் பல பகுதிகளை கொண்டது
படம்-2 -இல் கண்டபடி ஒரு நார்மல் சைனஸ் ரிதத்தில் P,Q,R,S,T என்று மிக முக்கிய மான ஐந்து பகுதிகள் ஒரு ஒழுங்கு அமைப்பில் இருக்கும் .இந்த ஒழுங்கு அமைப்பு சீர்குலைந்தால் இதயம் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம்
அமைப்புகள் கீழ் கண்ட வகையில் இருக்க வேண்டும்:-(படம்-2):-
P-முதல் அலை இதயத்தின் மேல் அறைகள் (ATRIA )சுருங்கும் போது உண்டாவது.P-ஐ தொடர்ந்து ஒரு கோடு Q-வரை நீண்டுள்ளது.இதற்கு P-Q இடைவெளி என்பர்.பிறகு Q-அலை சிறிது கீழ் நோக்கி இறங்கி பிறகு R -அலையாக மேல் நோக்கி கிளம்பி மீண்டும் கீழ் நோக்கி தணிந்து S-அலையாக திரும்பும்.
S -அலை கொஞ்சம் தாழ்ந்து பிறகு மேலெழுந்து சம நிலையில் கோடாக நீண்டு மீண்டும் T-அலையாக சிறிது எழும்பி தணிந்து மீண்டும் நேர்கோடாக அடுத்த துடிப்பின் முதல் கட்டத்திற்கு அதாவது மறு P-அலைக்கு செல்லும்.
இவற்றின் விபரங்களை பாப்போம்
1.P-அலை :- இது இதயத்தின் மேல் அறைகள் சுருங்குவதால் உண்டாவது -எனவே இந்த அலையின் அமைப்பில் ஒழுங்கற்ற நிலை உண்டானால்,அதற்கு இதயத்தின் மேலறைகளில் எதோ பிரச்சினை என்று கணிக்கலாம்
2.QRS-கூட்டமைப்பு :-இந்த பகுதிதான் இசிஜி யின் மிக முக்கிய பகுதியாகும்.ஏறக்குறைய இதயத்தின் செயல்பாடுகளில் 80% இதை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம்.இது இதயத்தின் கீழ் அறைகள் சுருங்குவதால் உண்டாவது.இதயத்தின் கீழறைகள்தான் அமைப்பில் பெரியவை.உறுதியான கனமான தசைகளை கொண்டவை.இதயத்தின் கனபரிமாணத்தில் 80% கீழறைகள்தான்.எனவேதான் கீழறைகள் சுருங்கும்போது ஏற்படும் QRS கிராப்பில் மிக உயரமாகவும் தெளிவாகவும் இருக்கும்.(பார்க்க படம்-2).இந்த கூட்டமைப்பில்தான் மேலறைகள் விரிவதும் ஏற்படுகிறது.
T-அலை:-இதுதான் ஒரு இதயத்துடிப்பின் கடைசி பகுதி இது கீழறைகள் மீண்டும் விரிவதால் ஏற்படுவது.எனவே மேற்கூறிய Q,R,S,T பகுதிகளில் காணப்படும் ஒழுங்கீனம் இதயத்தின் கீழ் அறைகளில் ஏற்படும் வியாதிகளை அறிவிக்கும்.இதுதான் அடிப்படை.இனி விரிவாக பாப்போம்.
இதில் மேல் கூறியபடி
1.P-Q அல்லது P-R இடைவெளி;
2.QRS-கூட்டமைப்பு -இடைவெளி -உயரம்
3.Q-T-இடைவெளி ;
4.S-T-இடைவெளி
5.T-P-இடைவெளி
6.P-அலையின் அமைப்பு,அகலம் மற்றும் உயரம்
6.T-அலையின் உயரம் ,அகலம்
7.R-R அலைகளின் இடைவெளி
8.சிலநேரங்களில் T-அலையை தொடர்ந்து உண்டாகும் U-அலையின் தோற்றம் இவை அனைத்தும் மிக மிக முக்கியமாகும் (பார்க்க படம்-2)
அளவீடுகள்:-
1.P-R இடைவெளி=0.12 to 0.20 seconds (3to5 சிறிய சதுரங்கள்)
2.QRS கூட்டமைப்பின் உயரம்:-இது நார்மலாக 25மி.மீ யிலிருந்து 30மி மீ வரை இருக்கலாம்
3.QRS-கூட்டமைப்பின் அகலம்:-0.12வினாடிகள் (secs) அல்லது 3 சிறிய சதுரங்கள்(ss) அல்லது 3மிமீ வரை இருக்கலாம்
Q-T இடைவெளி:-11 சிறிய சதுரங்களுக்குள் (11மிமீ )வரை இருக்கவேண்டும்
P-அலையின் அகலமும் உயரமும்:
அகலம் :120ms or 3mm (ms-milliseconds)
உயரம் :2.5mm
மேலே கண்ட அளவீடுகளில் மிமீ சிறிய சதுரங்கள் ஆகியவற்றை நீங்கள் வினாடிகளாக கூட மாற்றிக்கொள்ளலாம்.ஆனால் அது முக்கியமில்லை.

இதய மற்றும் நாடிதுடிப்புகளை அறியும் முறைகள் :-
பொதுவாக இசிஜியில் R-அலைகள் மிக முக்கியமானவைஒவ்வொரு நாடிதுடிப்பின் 90% இதில்தான் அடங்கி இருக்கிறது எனவே 1 நிமி அல்லது 60 வினாடிகளில் எதனை R-அலைகள் இருக்கின்றன என கணக்கிட்டால் இதயம் நிமிடத்தில் எதனை முறை துடிக்கிறது என்று அறியலாம்
இதற்கு 2 வழிமுறைகள் இருக்கின்றன.
இவற்றை செய்வதற்கு முன் முதலில் நம் இசிஜியின் R-R இடைவெளிகள் சமமாக இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்
1.பெரிய சதுர (LS )அளவீடு முறை:
1வினாடி =25 மிமீ
60 வினாடிகள் =25*60=1500மிமீ
1மிமீ = 1ss
1500மிமீ = 1500 ss
5ss =1 LS
1500 ss =1500/5 = 300 LS
எனவே இசிஜியில் எதாவது ஒரு அடுத்தடுத்துள்ள R-R இடைவெளியில் எத்தனை LS (பெரிய சதுரங்கள்)இருக்கின்றன என்பதை கொண்டு 300 ஐ வகுத்து விட்டால் வரும் ஈவுதான் உங்களது இதய மற்றும் நாடி துடிப்பு ஆகும்.உதாரணமாக இரண்டு அடு த்தடுத்துள்ள R-R இடைவெளியில் 4 LS கள் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம்
இதய அல்லது நாடித்துடிப்பு (HR or Pulse ) =300/4 =75 bpm ஆகும்
(bpm means beats per minute)
ஆறு வினாடி அளவீடு முறை :-
இந்த முறையில் ஒரு நன்மை உண்டு.
இசிஜியில் ஒழுங்கு இல்லையென்றாலும் இந்த முறையில் நாடித்துடிப்பை அறிய முடியும்
இந்த முறையில் ஆறு வினாடிகளில் எத்தனை R-அலைகள் வருகிறதோ அதை 10-ஆல் பெருக்கி வரும் ஈவுதான் உங்கள் நாடி துடிப்பு
1 வினாடி =25மிமீ
6 வினாடிகள் 25*6 = 150மிமீ
150 மிமீ =150 ss =150/5 = 30 LS
30 பெரிய சதுரங்களுக்கிடையில் எத்தனை R வருகிறதோ அதனை 10 ஆல் பெருக்க வரும் ஈவுதான் உங்கள் நாடி துடிப்பு
உகாரணமாக 30 LS இடையில் ஏழு R-அலைகள் இருக்கின்றன என்று வைப்போம்
இதய அல்லது நாடி துடிப்பு =7*10=70bpm
Normal HR =60 to 100 bpm
மேல்கண்ட அடிப்படைகளை மட்டும் தெரிந்து கொண்டு நீங்கள் இசிஜி யை ஆய்வு செய்தால் உங்கள் இசிஜி யின் இறுதியில் II -என்று ஒரு வரிசை இருக்கும்.இதற்கு சைனஸ் ரிதம் வரிசை என்று பெயர்
அந்த வரிசை இசிஜியை மட்டும் இப்பொது ஆராயவும்
மற்றவற்றை பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்
-தொடருகிறது .....(in ஆ )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக