ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

சுய மருத்துவ பரிசோதனை-இ.சி.ஜி சுய பரிசோதனைகள் -இ

இசிஜியில் இதயத்தின் அச்சு 

அடிப்படையில் நம் இதயம் அதன் செயல்பாடுகள் அதன் தசைகளினூடே கடத்தப்படும் மின் அதிர்வுகள் அனைத்தும் இடது கீழ்புறத்தை நோக்கியே இருக்கிறது.இதையே இதயத்தின் கோணம் அல்லது அச்சு என்பர் 
சாதாரணமாக இதயத்தின் அச்சு  -30 டிகிரியில் இருந்து +90 டிகிரி வரை கால் வட்ட அளவு இடது கீழ் பக்கம் சரிந்து இருக்கிறது.
இதயத்தின் 90% தசை இதயத்தின் கீழறைகளினால் ஆனது.இதயத்தின் கீழறைகளின் துடிப்பு இசிஜியில் QRS-கூட்டமைப்பாக பதிவாகிறது என்பதையும் நாம் விளக்கினோம் 
எனவே மொத்தத்தில் QRS-ன் அச்சு -30 டிகிரி இலிருந்து +90 டிகிரி கோணத்தில் இருந்தாலே ஏறக்குறைய மொத்த  இதயமும் நார்மலாக இருக்கிறது என்று விளங்கிக்கொள்ளலாம் 
இதயத்தின் அச்சு பற்றி கீழ்கண்ட படத்தின் மூலம் விளக்கலாம் (பார்க்க படம்-1)
படம்-1
மேல் கண்ட படத்தில் மஞ்சள் நிற ப்பகுதிதான் இதயத்தின் நார்மல் QRS-அச்சு ஆகும் 
இந்த அச்சு -30 டு -90 என்று மேல்புறம் புரண்டு இருந்தால் அதற்கு இடது அணுகல் விலகல் (LEFT ACCESS DEVIATION-LAD) என்று மருத்துவம் கூறும்.அதற்கு அர்த்தம் இடது கீழறையில் வீக்கம் அல்லது அடைப்பு மற்றும் அதைப்போன்ற பிரச்சினைகள் ஏதோ உள்ளதென்று புரிந்து கொள்ளலாம் கொள்ளலாம்.
அதே போல் இந்த அச்சு +90 டிகிரி யிலிருந்து +180 டிகிரியை நோக்கி சரிந்தால் அது வலது கோண அணுகல் விலகல் (RIGHT ACCESS DEVIATION-RAD) எனப்படும்(படம்-1).இந்த நிலையில் இதயத்தின் வலது கீழறைகளில் வீக்கம் ,அடைப்பு போன்ற ஏதோ பிரச்சினைகள் இருக்கிறது என்று கொள்ளலாம்.
மேலும் இதயத்தின் அச்சு +180 யிலிருந்த்து -90 வரை சரிந்தால் அது மிகவும் கடுமையான (EXTREME) பாதிப்பை உணர்த்தும் (பார்க்க படம்-1)
மேலே படம்-1-இல் மின் கடத்தி II பாதுகாப்பான கோணத்தில் அமைந்திருப்பதை காணலாம் 
எனவேதான் இசிஜியில் இந்த மின் கடத்தி மூலம் பதியப்பட்ட பதிவுகள் தனியாக கீழ் வரிசையில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும்.
இதில் எல்லாம் நார்மலாக இருக்கும் பட்சத்தில் எல்லாம் ஓரளவு சரி என்றே கொள்ளலாம்.மற்ற மின் கடத்திகளின் பதிவுகள் பற்றி விபரமாக நாம் பிறகு பார்க்கலாம்.
எனவே மொத்தத்தில் படம் -1இல் உள்ளபடி நார்மல் அச்சில் இருக்கும் மின் கடத்திகள் I,II,மற்றும் aVF ஆகிய பதிவுகளில் QRS-கூட்டமைப்பு நார்மலாக பாசிட்டிவ் ஆக மேலெழுந்து இருந்தால் நம் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம் 
கோளாறுகள் :-
படம்-1-இல் கண்டபடி aVL மின்கடத்தி -30 to -90 பகுதியில் இருக்கிறது.எனவே இசிஜியில் aVL -பதிவுகளில் QRS பாசிட்டிவ் ஆகவும் aVF -ல் நெகட்டிவ் (கீழிறங்கி)ஆகவும் இருந்தால் நம் இதயத்தின் இடது கீழ் அறைகளில் அடைப்போ அல்லது வீக்கமோ இருக்கிறது என்று பொருள்-(LAD)
படம் -1 இல் கண்டபடி மின்கடத்திகள் 
III,aVR ஆகியவை வலது சரிவிலும் கடுமை (EXTREME) சரிவிலும் இருப்பதால் இந்த மின் கடத்திகளின் பதிவில் QRS பாசிட்டிவ் ஆகவும் மற்ற மின்கடத்திகளின் பதிவில் கீழ் நோக்கி நெகட்டிவ் ஆகவும் இருந்தால் நம் இதயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம் 

இசிஜியின் அமைப்பு 

படம்-2
மேலே உள்ள படம்-2 இல் காட்டப்பட்டிருப்பது போல்தான் உங்கள் இசிஜி பாகம் பாகமாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் 
12 பாகங்களாக ஒவ்வொரு மின் கடத்திக்கும் தனித்தனியாக பாகங்கள் பிரித்து வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது 
கீழே தனியாக மின்கடத்தி II க்கு ஒரு வரிசையும் ,மின்கடத்தி V-1 க்கு ஒரு வரிசையும் எடுத்து தரப்பட்டிருக்கும் 

மின்கடத்திகளின் விபரங்கள் :-

1.) I-இருமுனை(BIPOLAR ) மின்கடத்தியின் பதிவு 
2).IIs -இருமுனை (BIPOLAR) மின்கடத்தியின் பதிவு 
3) III-இருமுனை(BIPOLAR) மின்கடத்தியின் பதிவு 
4) aVR -ஒருமுனை(UNIPOLAR ) மின்கடத்தியின் பதிவு 
5).aVL -ஒருமுனை (UNIPOLAR )மின் கடத்தியின் பதிவு 
6).aVF -ஒருமுனை (UNIPOLAR) மின் கடத்தியின் பதிவு 
மற்ற ஆறுவரிசைகளிலும் தலா ஒவ்வொன்றாக V1,V2,V3,V4,V5,V6 என்ற மார்பு மின்கடத்திகளின் (CHEST ELECTRODES) பதிவுகள் 
                                      தொடர்கிறது ...(in ஈ )

கருத்துகள் இல்லை:

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...