தெரு நாய்கள் -ஒரு சமூக தீமை

கடி நாயின் வெறி
தெருநாய்கள் ரேபிஸ் நோயின் கேரியர்களாக பார்க்கப்படுகின்றன
எல்லா நாய்களுக்கும் ரேபிஸ் இல்லை என்றாலும், எல்லா நாய் கடிகளுக்கும் கண்டிப்பாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் - முந்தைய ஆண்டில் நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படாவிட்டால்.
தெருநாய்கள் கடிக்கும்
ஆச்சரியப்படும் விதமாக, தங்கள் சொந்த செல்லப்பிராணிகளை நேசிக்கும் பலர் உள்ளனர், ஆனால் தெருநாய்கள் மீது மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அவர்களின் காரணங்கள் தெரு நாய்கள், அழுக்கு பிடித்தவை , சிதைந்தவை, நம்ப முடியாதவை என்ற பொதுவான நம்பிக்கைகளில் இருந்து வரலாம். ஒரு நாய் அல்லது நாய் கூட்டம் எப்படி ஒரு குழந்தையை கொடூரமாக தாக்கியது என்பது சமூக ஊடகங்களில் வைரலான கதைகள் இந்த வகையான நடத்தைக்கு ஒரு பெரிய காரணம்.
தெருநாய்கள் தொல்லையா?
தெருநாய்களுக்கு உணவு உண்ணும் உரிமையும், குடிமக்களுக்கு சமூக நாய்களுக்கு உணவளிக்கும் உரிமையும் உள்ளது மற்றும் அது பிறர் மீது தலையிடாதவாறும், பிறருக்கு துன்புறுத்தல் அல்லது தொல்லைகளை ஏற்படுத்தாதவாறும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது (01,ஜூலை 2021)
ஆனால் கோர்ட் தீர்ப்பை பகுதி மட்டும் எடுத்துக்கொண்டு சில நாய்ப்பிரியர்கள் தாங்கள் வீட்டில் வளரும் ஆடு கோழி போன்ற வளர்ப்புப்பிராணிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தெருநாய்களை பழக்கி தங்கள் வீடு இருக்கும் பகுதிகளில் அலைய விடுகிறார்கள். அது அந்த பகுதியில் வசிக்கும் மற்றவர்களுக்கு பெரும் தொல்லையும் கஷ்டமும் கொடுப்பது பற்றி அந்த நாய் பிரியர்கள் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. அந்த வார்டு கெளன்சிலர்களிடம் முறையிட்டால் அவர்களும் லஞ்சத்துக்காகவும் கள்ள ஓட்டுக்காகவும் நாய் பிரியர்களுக்கு சாதகமாகவே இருக்கிறார்கள். இன்னும் அழுத்தமாக கேட்டால் சட்டம் பேசுகிறார்கள். ஆனால் கோர்ட் என்ன சொல்லுகிறது தெருநாய்களை பராமரிப்பது அது மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காத நிலையில்தான் என்கிறது சட்டம். அப்படி அது தொல்லை கொடுக்கும் பட்சத்தில் முனிசிபாலிட்டி அதை பிடித்து அப்புறப்படுத்தவேண்டும் என்பதுதான் அதன் நியதி. ஆனால் பொறுப்பிலுள்ளவர்கள் அதை செய்வதில்லை. எத்தனை முதியவர்கள் குழந்தைகள் இரவு நேரங்களில் வெளியே நடமாட முடியாமலும் தூங்க முடியாமலும் தவிக்கிறார்கள். நிச்சயம் இந்த கௌன்சிலர்கள் அவர்களின் சாபத்தைத்தான் கையேந்தவேண்டும். லஞ்சமும் கள்ளஓட்டும் வாங்கி பணமும் பொருளும் சம்பாதித்து இந்த நிலையற்ற வாழ்வில் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. நிச்சயம் இறைவன் அதில் அருள் இல்லாமல் ஆக்கிவிடுமான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக