நீரிழிவு நோயாளிகள்உணவு தானியங்களை கையாளும் முறைகள்
பழங்களை தொடர்ந்து நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை குறியீட்டு எண் (GLYCEMIC INDEX-GI) மற்றும் சர்க்கரை ஏற்று திறன்(GLYCEMIC LOAD-GL) ஆகியவற்றை பயன்படுத்தி சர்க்கரை சத்து உயர்ந்துள்ள (HIGH GI) உணவு தானியங்களை (FOOD GRAINS)எப்படி எந்த அளவு சாப்பிடலாம் என்று இங்கே பார்க்கலாம்.
GI-ன் வரம்புகள் :-
GI -77க்கு மேல் -அதிகம்
GI - (77-55) -நடுத்தரம் GI -55க்கு கீழ் -பாதுகாப்பு <55 nbsp="" span="">55>
GL -ன் வரம்புகள்
GL - 20க்கு மேல் (>20) -அதிகம்
GL - 20-10 -நடுத்தரம்
GL -10க்கு கீழ் (<10 10="" nbsp="" span="">10>
உணவு தானியங்களை பொறுத்தவரை பெரும்பாலும் அவற்றை நாம் பழங்களை போல் அப்படியே உண்பதில்லை
அவற்றை நாம் பலவாறு பயன்படுத்துகிறோம்.அதாவது பச்சையாக, முழுதாக, உடைத்து, மாவாக்கி,வேகவைத்து, குழம்பு வைத்து, வறுத்து, பொரித்து பட்டைதீட்டி புழுங்க வைத்து இப்படி பலவாறாக நாம் அவற்றை பயன்படுத்துகிறோம். அதே போல அவற்றின் வகைகள் உதாரணமாக கருத்தரிசி, வெள்ளரிசி,பழுப்பரிசி,சிவப்பரிசி என்று அரிசியிலேயே பல வகைகள் இருக்கின்றன.இவை ஒவ்வொன்றும் வேறு வேறு மாவுச்சத்து நார்ச்சத்து மற்றும் சர்க்கரை குறியீட்டு எண்களை கொண்டதாக இருக்கும்
அவை அனைத்தும் கூகுள் தேடுதலில் கிடைக்கும்
உதாரணமாக பார்லியை எடுத்துக்கொண்டால் கீழ்கண்டவாறு அதன் வகைகள் கிடைக்கின்றன.
For cooked barley the GI =35-low(<55 55="" i="">55>
For cracked barley the GI =50-low(<55 55="" i="">55> For barley flakes the GI =60-med(55-77)
அதற்கு தகுந்த மாதிரி நாம் சர்க்கரை ஏற்று திறனை (GL) கணக்கீடு செய்யவேண்டும்.
கீழே நாம் மேலிட்டாற்போல் GL கணக்கீடுகளை எப்படி செய்யவேண்டும் என்று சில உதாரணங்களுடன் விளக்கி இருக்கிறோம்.
கருத்தரிசி (100gm):-
மொத்த மாவுச்சத்து =34gm
நார்ச்சத்து =01gm
மீதி மாவுச்சத்து(n) 34-01 =33gm
GI =50
GL= [n x GI]/100 =[33 x 50]/100 =16.5(>10)❌
100gm க்கு GL அளவு =16.5
ஃ60gm க்கு [16.5/100]x60 =9.6✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி 60கிராம் வரை கருத்தரிசி சாப்பிடலாம்.
வெள்ளரிசி (100gm நீண்டது,சமைத்தது):-
மொத்த மாவுச்சத்து =28gm
நார்ச்சத்து =0.4gm
மீதி மாவுச்சத்து (n) 28-0.4 =27.6gm
GI =89
GL =[n x GI]/100= [27.6x89]/100 =25❌
100gm க்கு GL அளவு =25gm
ஃ 40gm க்கு [25/100]x40 =10✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி 40கிராம் வரை வெள்ளரிசி சாதம் சாப்பிடலாம்
பழுப்பரிசி (100gm):-
மொத்த மாவுச்சத்து =23gm
நார்ச்சத்து =1.8gm
மீதி மாவுச்சத்து (n) 23-1.8 =21.2gm
GI =68
GL =[n x GI]/100=[21.2x68]/100 =14.42❌
100gm க்கு GL அளவு =14.42
ஃ70gm க்கு [14.42/100]x70 ≃10✓ முழு கோதுமை மணிகள் (50gm) மொத்த மாவுச்சத்து =44gm நார்ச்சத்து =7gm மீதி மாவுச்சத்து(n) 44-07 =37gm GI =30 GL=[n x GI]/100=[37 x 30]/100=11.01(>10)❌ 50கிராமுக்கு GL அளவு =11.01 ஃ45 கிராமுக்கு [11.01/50]x45 =10(=10)✔️ எனவேஒரு நீரிழிவு நோயாளி 45கிராம் வரை முழு கோதுமை மணிகளை சாப்பிடலாம் காம்புடன் கூடிய இனிப்பு சோளம் (150gm):- மொத்த மாவுச்சத்து =41gm நார்ச்சத்து =4gm மீதி மாவுச்சத்து (n) 41-4 =37gm GI =60gm GL =[nxGI]/100=[37x60]/100 =22.2(>10) 150 கிராமுக்கு GL அளவு =22.2❌ ஃ70கிராமுக்கு [22.2/150]x70 =10.3✔️ எனவே ஒரு நீரிழிவு நோயாளி இனிப்பூட்டப்பட்ட காம்பு சோளத்தை ஒரு நாளைக்கு 70கிராம் வரை பாதுகாப்பாக சாப்பிடலாம் பார்லி மணிகள் (100கிராம்):- மொத்த மாவுச்சத்து =77.7gm நார்ச்சத்து =15.6gm மீதி மாவுச்சத்து (n) 77.7-16.6 =62.1 GI =28 GL=[nxGI]/100 =[62.1x28]/100 =17=(>10) 100கிராமுக்கு GL அளவு =17❌ ஃ55கிராமுக்கு [17/100]x55 =9.35(<10 10="" color="#00ff00" font="">✔️10>
எனவே ஒரு நீரிழிவு காரர் பார்லிமணிகளை 55கிராம் வரை ஒருநாளைக்கு பாதுகாப்பாக சாப்பிடலாம் உமி நீக்கப்பட்ட முழு பார்லி (100gm): மொத்த மாவுச்சத்து =73.5gm நார்ச்சத்து =17.3gm மீதி மாவுப்பொருள்(n)=73.5-17.3= 56.2gm GI =22 GL=[nxGI]/100=[56.2x22]/100 =12.4❌ 100கிராமுக்கு GL அளவு =12.5 ஃ78கிராமுக்கு [12.5/100]x78 =9.7(<10 color="#00ff00" font="">✔️10> கேழ்வரகு (ராகி -100gm):- மொத்த மாவுச்சத்து =30gm நார்ச்சத்து =1.7gm மீதி மாவுச்சத்து(n) =30-1.7 =28.3gm GI =100 GL =[nxGI]/100=[28.3x100]/100 =28.3 100கிராமுக்கு GL மதிப்பு =28.3(>10)❌ ஃ30கிராமுக்கு=[28.3/100]x30≃9(<10 color="#00ff00" font="">✔️10> எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினசரி ராகியை 30கிராம் வரை சாப்பிடலாம். ஆனால் ராகியில் பல வகைகள் இருக்கின்றன அவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி GI இருப்பதால் அவற்றை கூகுள் தேடுதலில் நாமே தெரிந்துகொண்டு அதற்கான GL மதிப்பையும் சாப்பிடும் வரம்புகளை கணக்கிடலாம். பொதுவாக பழங்களை போல் அல்லாமல் உணவு தானியங்களை பெரும்பாலும் நாம் பச்சையாக அல்லது அப்படியே சாப்பிடுவதில்லை.மாறாக அவற்றை நாம் பல செயல்முறைகளுக்கு உள்ளாக்குகிறோம்.எனவே அவற்றிக்கு ஏற்றாற்போல் அளவீடுகளை கூகுள் தேடுதலில் சென்று குறித்துக்கொண்டு பிறகு அவற்றின் GL மதிப்புகளை நாமே கணக்கிட்டு அவற்றை தினசரி சாப்பிடும் வரம்புகளை கணக்கிடலாம் 1.GI ,GL பற்றிய தெளிவு பெற இங்கே க்ளிக் செய்யவும் 2.சில பண்டங்களின் GI மற்றும் GL அட்டவணைக்கு இங்கு க்ளிக் செய்யவும்
இனிப்புகள் என்றாலே நீரிழிவு நோயாளிகள் தயங்குவது இயல்பு. மாம்பழம், வாழைப்பழம்,சப்போட்டா பழம் மற்றும் இனிப்பு பண்டங்களான ஹல்வா, ஜிலேபி லட்டு போன்றவைகளை அவர்கள் ஆதங்கத்துடன் ஒதுக்கிவிடுவார்கள்
இனி அவ்வாறு ஒதுக்க வேண்டியதில்லை.
நவீன நீரிழிவு மருத்துவம் எந்த இனிப்பு பொருளையும் ஒரு அளவுக்குள் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம் என்று கூறுகிறது. அந்த அளவுகளை கணக்கிடுவதற்கு சில அளவுகோல்களையும் அதன் அடிப்படையில் சில சூத்திரங்களையும் நவீன நீரிழிவு இயல் நமக்கு வகுத்து தந்திருப்பது ஒரு மிகப்பெரும் அனுகூலமாகும். அந்த பகுதி அல்லது அந்த அளவை யை எடை போடுவதற்கு நாம் ஒரு சூத்திரத்தை தெரிந்துகொள்வோம். அந்த சூத்திரத்தை பயன்படுத்த கீழ்கண்ட சில அளவுருக்கள் (PARAMETERS) தேவை.
1.அந்த இனிப்பின் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள பகுதியில் மொத்த மாவு சத்தின் அளவு (Total Carbohydrates)(கூகுளில் தேடவும்) 2.நார்ச்சத்த்தின் அளவு -FIBERS -கூகுளில் தேடவும் 3.சர்க்கரை குறியீட்டு எண் (GI) -கூகுளில் தேடவும் கணக்கீடுகள் :- கிடைக்கும் மாவு சத்து=மொத்த மாவு சத்து - நார்ச்சத்து ; சர்க்கரை குறியீட்டு எண் =GI சர்க்கரை ஏற்றும் திறன்(GL) சூத்திரம்:- GL = (n x GI)/100 [ n= கிடைக்கும் மாவுச்சத்து ] சர்க்கரை ஏற்றும் திறன் அளவுகோல் 10 க்கு கீழ் - பாதுகாப்பு 10-20 - நடுநிலை 20க்கு மேல் -தீமை எனவே எந்த ஒரு இனிப்பாக இருந்தாலும் அதன் ஒரு குறிப்பிட்ட பகுதியின் சர்க்கரை ஏற்றும் திறனை(GL) கணக்கிட்டு அது பத்துக்குள் இருக்கும் பட்சத்தில் அந்த பகுதி வரை அந்த இனிப்பை உண்ணலாம். ஒருவேளை நீங்கள் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொண்ட பகுதி இனிப்பின் GL பத்துக்கு மேல் இருந்தால் அந்த பகுதி இனிப்பை மேலும் குறைத்து GL பத்துக்குள் அமையும்படியாக செய்து அந்த பகுதி அளவு வரை அந்த இனிப்பை நீங்கள் சாப்பிடலாம். இதை கீழே உள்ள 15 உதாரணங்கள் மூலம் விளங்கலாம். [நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு கட்டுப்பாடு அளவுக்குள் இனிப்பு சாப்பிடுவதால் அவர்களது இன்சுலின் சுரப்பு நிவர்த்தி அடையும் வாய்ப்புகள் உண்டு.]
1.மாம்பழம் (170 gm ):-
மொத்த மாவு பொருள் -28gm
நார்ச்சத்து -6gm
மீதி மாவுப்பொருள் =28-6 =22gm
GI =56
GL (170gm)மாம்பழத்திற்கு :-
GL =(n x GI)/100 =(22 x 56)/100=12.32❌
12.32 GL க்கு பரிமாறும் அளவு =170gm
∴10 GL க்கு [170/12.32] x 10=138gm✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி ஒரு நாளைக்கு 100-138gm க்குள் மாம்பழத்தை பாதுகாப்பாக சாப்பிடலாம்.
2.தர்ப்பூசணி (120gm):-
மொத்த மாவுப்பொருள் =8gm
நார்ச்சத்து = 0.4gm
மீதி மாவுப்பொருள் 8-0.4 =7.6gm
GI =72 GL (120gm) [nxGI]/100=[7.6x72]/100=5.5✔️ எனவே 100-200gm வரை சாப்பிடலாம் 3.வாழைப்பழம் (100gm)
மொத்த மாவுப்பொருள் =23gm
நார்ச்சத்து =2.6gm
கிடைக்கும் மாவுப்பொருள்-n]
(23 - 2.6) ] ≈ 20 approx
Glycemic Index- GI =62
Glycemic Load-GL=(nxGI)/100 }
=(20 x 62)/100} = 12.40 ❌ 12.4 க்கு பரிமாறும் அளவு=100 gm
GL 10 க்கு ,, =(100/12.6) x 10
≈ 80 gm✅
எனவே ஒரு நீரிழிவு நோயாளி ஒரு நாளைக்கு 80 gm வரை வாழைப்பழம் சாப்பிடலாம்.
4.பேரிச்சை (100gm):-
100gm பேரீச்சையில் மொத்த மாவு சத்து =100gm
நார்ச்சத்து =0gm
கிடைக்கும் மாவுச்சத்து 100-0 =100gm
GI (சர்க்கரை குறியீட்டு எண்) =42
GL (சர்க்கரை ஏற்று திறன்/100gm)
(nxGI)/100 = (100x42)/100 =42❌
GL 42க்கு பரிமாறும் அளவு =100gm
ஃ GL 10க்கு ,, (100/42)x 10= 23gm✓ எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 23gm வரை சாப்பிடலாம்
5.திராட்சை (100gm):-
மொத்தமாவுப்பொருள் =17gm
நார்ச்சத்து =01gm
கிடைக்கும் மாவுப்பொருள்17-01 = 16gm
GI = 59gm
GL (100 கிராமுக்கு) (nxGI)/100]
= (16 x 59)/100 ] = 9.44✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 100gm வரை சாப்பிடலாம்
6.கிசுமிசு (100gm):-
மொத்த மாவுப்பொருள் =79gm
நார்ச்சத்து =3.7gm
கிடைக்கும் மாவுப்பொருள்]
n =79-3.7] =75.3gm
GI =64
GL = (75.3x64)/100 = 48.2❌ GL 48.2க்கு பரிமாறும் அளவு =100gm
ஃ GL 10க்கு ,, [100/48.2]x10=20gm✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி நார்ச்சத்து இல்லாததால் இரண்டு நாளைக்கு ஒரு முறை 20gm கிசுமிசு (உலர் திராட்சை) எடுத்துக்கொள்ளலாம் 7.பலா (165gm) மொத்த மாவுப்பொருள் =38gm நார்ச்சத்து =2.5gm கிடைக்கும் மாவுப்பொருள்(n)] 38-2.5 ] =35.5gm GI =75 GL (165gm க்கு)=(nxGI)/100=(35.5x75)/100 =26.6❌ GL 26.6க்கு பரிமாறும் அளவு =165gm ஃGL 10 க்கு ,, [165/26.6]/10 =62gm✔️ எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 60gm பலாப்பழம் சாப்பிடலாம். 8.சப்போட்டா பழம் (100gm):- மொத்த மாவுப்பொருள் =20gm நார்ச்சத்து =5gm கிடைக்கும் மாவுப்பொருள்20-5 =15gm(n) GI =57 GL (100gm) (nx57)/100=(15x57)/100 =8.55✔
9.சீத்தாப்பழம் (100gm):- மொத்த மாவுப்பொருள் =26gm நார்ச்சத்து =05gm மீதி மாவுப்பொருள் 26-5 =21gm GI =54 GL (100gm) =(nxGI)/100 =[21x54]/100 =11.3❌ ஃ GL (85gm) =[11.3/100]x85 =9.6✔️ எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 85gm வரை சாப்பிடலாம். 10.மாதுளை (100gm):- மொத்த மாவுப்பொருள் =19gm நார்ச்சத்து =04gm கிடைக்கும் மாவுப்பொருள்19-04=15gm GI =53 GL (100gm) =[nxGI]/100=[15x53]/100=7.95✔️ தினமும் 100gm வரை சாப்பிடலாம். 11.கொய்யா (100gm) மொத்த மாவுப்பொருள் =14gm நார்ச்சத்து = 5gm மீதி மாவுப்பொருள் (n) 14-5 =09gm GI =65 GL (100gm) =[nxGI]/100 =[9x65]/100 =5.85✔️ தினமும் 100-150gm வரை சாப்பிடலாம் 12.பப்பாளி (100gm):- மொத்த மாவுப்பொருள் =11gm நார்ச்சத்து =02gm மீதி மாவுச்சத்து (n) 11-02 =09gm GI =60 GL (100gm) [nxGI]/100=[09x60]/100=5.4✔️ தினமும் 100-200gm வரை சாப்பிடலாம் 13.ஆரஞ்சு (100gm):- மொத்த மாவுச்சத்து =12gm நார்ச்சத்து =2.5gm மீதி மாவுச்சத்து (n) 12-2.5 =09.5gm GI =40 GL (100gm) =[nxGI]/100=[9.5x40]/100 =3.8✔️ தினமும் 100-150gm வரை சாப்பிடலாம் 14.எலுமிச்சை (100gm):- மொத்த மாவுச்சத்து =09gm நார்ச்சத்து =2.5gm மீதி மாவுச்சத்து (n) 09-2.5 =6.5gm GI =20 GL (100gm) =[nxGI]/100 =[6.5x20]/100=1.3✔️ தினமும் 800gm வரை சாப்பிடலாம் 15.நாவற்பழம் (100gm):- மொத்த மாவுச்சத்து =14gm நார்ச்சத்து =01gm மீதி மாவுச்சத்து (n) 14-01 =13gm GI = 25 GL (100gm) =[nxGI]/100 =[13x25]/100 =3.25✔️ தினமும் 100-300gm வரை சாப்பிடலாம் தொகுப்பு (SUMMARY ):-மேலேயுள்ள கணக்கீடுகள் மூலம் நமக்கு சில உண்மைகள் விளங்கும்.நார்ச்சத்து என்பது ஒரு மாவுப்பொருளாக இருந்தாலும் அது சீக்கிரம் ஜீரணம் ஆகாது.மேலும் அது குடலில் உறிஞ்சப்படாதுஎனவே தான் இதை நாம் GL கணக்கீட்டின் போது மொத்த மாவுச்சத்திலிருந்து கழித்து விடுகிறோம்.மேலும் ஒரு இனிப்பில் எவ்வளவுக்கு எவ்வளவு நார்ச்சத்து இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது நன்மை பயக்கும்.காரணம் இந்த நார்ச்சத்து குடலின் மூலம் சர்க்கரை உடனுக்குடன் உறியப்படுவதை தடுத்து இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனுக்குடன் திடீரென்று உயராமல் பாதுகாக்கிறது. அதேபோல் எந்த இனிப்பு பண்டத்தையும் அதன் சர்க்கரை ஏற்றும் திறன் (GL)பத்துக்குள் இருப்பது போன்ற ஒரு அளவீட்டுடன் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை திடீரென்று உயர்வது கட்டுப்படுத்தப்படும். இன்னும் ஒருபொருளின் சர்க்கரை குறியீட்டு எண் (GI)அதிகம் இருந்தாலும் அதன் ஒரு பகுதியை சர்க்கரை ஏற்றும் திறன் பத்துக்குள் இருப்பது மாதிரி குறைத்து சாப்பிடலாம். [உ-ம்] மாம்பழம்,தர்பூசணி,பேரீச்சை,சப்போட்டா போன்றவை
கோவிட் 19 தொற்றினால் இதயம் மற்றும் இரத்த அழுத்த பாதிப்புகள்
படம்-1
கோவிட் 19 நோய் தொற்று சுவாச பகுதியை மட்டுமல்லாமல் நம் உடலின் மற்ற பகுதிகளையும் தாக்க வல்லது.நம் உடலில் உள்ள சில வசதிகள்தான் அதற்கு காரணம்.அதில் முக்கியமானது இந்த வைரஸ் நம் உடல் செல்களை தாக்குவதற்கு பயன்படுத்தி கொள்ளும் ACE 2 என்ற ஏற்பி தான்.
இந்த ஏற்பி நம் உடலின் பல அமைப்புகளிலும் பரந்து இருக்கிறது இந்த ஏற்பி எங்கெங்கெல்லாம் பரவி இருக்கிறதோ அங்கங்கெல்லாம் இந்த வைரஸும் தாக்கும்.
முதன் முதலாக தாக்கப்படுவது நம் சுவாசப்பகுதிதான்.அதிலும் தொண்டைக்கு கீழுள்ள சுவாசப்பகுதிதான்.அங்குதான் இந்த ACE 2 ஏற்பி அடர்த்தியாக உள்ளது.உதாரணமாக தொண்டை அதற்கு கீழுள்ள தொண்டை குழாய் நுரையீரல் காற்றறைகள் ஆகியவற்றின் EPITHELIAL LAYERS எனப்படும் மேலடுக்கு சுவர்களின் ஒவ்வொரு செல்களிலும் இந்த ஏற்பிகள் மிக தெளிவாக தம்மை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றன.எனவே இந்த பகுதியை இந்த புதிய கொரோனா வைரஸ் மிக எளிதாக தாக்கி சேதப்படுத்துகிறது.
இதற்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பது நம்முடைய இதய மற்றும் இரத்த குழாய் பகுதிகள்.
இதயத்தின் தசைகளில் இருக்கும் மையோசைட்டுகள்,இரத்தக்குழாய்கள் மற்றும் தந்துகிகளின் ENDOTHELIUM எனப்படும் உட் சுவர்கள், ஆகியவற்றில் வெளிப்படையாக மற்றும் தெளிவாக பொதியப்பட்டிருக்கும் இந்த ACE 2 ஏற்பிகள் வைரசை அங்கும் வந்து தாக்குவதற்கு வசதி பண்ணி கொடுக்கின்றன.
உலக அளவில் ஆஸ்பத்திரியில் இந்த வைரஸால் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் 80% பேர் இதய மற்றும் இரத்த அழுத்த நோயாளிகள்தான்.அதிலும் 40%உயர் இரத்த அழுத்தம்,36%உடல் பருமன்,12% மற்ற இதய கோளாறுகள் மீதி உள்ளது சர்க்கரை நோயாளிகள்.
இது தவிர வயதான பலகீனமான எதிர்ப்பு சக்தி குறைத்த ஆண் பெண்களை இது கடுமையாக பாதிக்கிறது.பெண்களில் மாதவிடாய் நின்ற அல்லது ஏதோ சில காரணங்களுக்காக சினைகள் நீக்கப்பட்ட (OVARIECTOMY)பெண்களை மட்டுமே இது கடுமையாக தாக்குகிறது.அது ஏன் என்பதை இந்த கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை இது கடுமையாக பாதிப்பதில்லை.இதன் காரணங்கள் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை.
20 யிலிருந்து 40% வரை ஆஸ்பத்திரியில் கோவிட் 19 நோய்க்காக சேர்க்கப்பட்ட இதய நோயாளிகளுக்கு நெஞ்சு வலி,இதய செயலிழப்பு ஒழுங்கற்ற இதய துடிப்புகள் மற்றும் மாரடைப்பு போன்ற அறிகுறிகள் இருந்தன.
50 வயதிற்கு உட்பட்ட எதிர்ப்பு சக்தி உள்ள இளைஞர்கள் யுவதிகள் ஆகியோருக்கு சாதாரண ஜலதோஷம் மெல்லிய காய்ச்சல் அல்லது தலைவலி இவற்றுடன் இது குணமாகிவிடும்.
ஆனால் அதே சமயம் எதிர்ப்பு சக்தி இல்லாத வயதான பலகீனமானவர்களுக்கு இந்த நோய் தொற்று கடுமையான பின்விளைவுகளை அதாவது அவர்களுக்கு இதற்கு முன் இல்லாத உயர் இரத்த அழுத்தம்,இதய கோளாறு நீரிழிவு நரம்பு கோளாறுகளை உண்டாக்கிவிடலாம்.அதுபற்றி நாம் இப்பொது பார்க்கலாம். முதலில் நம் உடல் இரத்த அழுத்தத்தை எப்படி சீராக வைக்கிறது என்று பார்க்கலாம். RAAAS மற்றும் AAAA அமைப்புகள்
படம் -2
நம் உடலில் இதற்காக இரண்டு அமைப்புகள் இருக்கின்றன .முதலாவது இரத்த அழுத்தத்தை உயத்துவதற்கு ஒரு அமைப்பு.அதற்கு RAAAS (Renin-Angiotensin-II-Aldosterone-Anti-Diuretic-Hormone System) ஆகும்.இதை இன்னும் சுருக்கமாக RAS என்றும் அழைக்கலாம்.காரணம் அதிலுள்ள ஆன்ஜியோடென்ஸின்-II மற்ற இரண்டு A-A க்கும் காரணமாக அமைகிறது. இரண்டாவது இரத்த அழுத்தத்தை தணிப்பதற்கு என்று ஒரு அமைப்பு அதற்கு AAAA(ACE2-Angiotensin1-7-Angiotensin1-9-ATR2)என்று பெயர். (பார்க்க படம்-2) RAAAS:- நம்முடைய இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்வதில் சிறுநீரகத்திற்கும் கல்லீரலுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு.ஏனென்றால் இரண்டுமே இரத்தத்தை சுத்தீகரிக்கின்றன. சிறுநீரகம் இரத்தத்திலுள்ள நீரை அதன் சத்துக்களுடன் முதல் நிலையில் அதன் வடிப்பான்கள் (NEPHRONS) மூலம் வடிக்கும் பொழுதே அந்த நெப்ரான்களின் தலைப்பகுதியில் இருக்கக்கூடிய சில செல்கள் (JUXTAGLOMERULAR APPARATUS) இரத்த அளவும் அழுத்தமும் குறையவிருப்பதை உணர்ந்துரெனின் என்ற புரத ஹார்மோனை சுரக்கிறது. இந்த ரெனின் கல்லீரலிலிருந்து சுரக்கப்படும் ஆன்ஜியோடென்சினோஜன் என்ற புரதத்தை ஆன்ஜியோடென்ஸின்-I என்ற புரத ஹார்மோனாக மாற்றுகிறது.இதை ACE 1 என்ற என்ஜைம் ஆன்ஜியோடென்ஸின்-II ஆக மாற்றுகிறது.இதுதான் RAAAS அமைப்பினுடைய முக்கிய ஹார்மோன். ஆன்ஜியோடென்ஸின்-II ஹார்மோன் அதன் ஏற்பி (ATR -1)யில் கிரியை செய்து கீழ்கண்ட விளைவுகளை உண்டாக்குகிறது:- 1.முதலில் இரத்த குழாய்களை குறுக்குகிறது -இரத்த அழுத்தம் உயர்வு 2.அட்ரீனல் சுரப்பியின் கார்ட்டக்ஸ் பகுதியில் இருந்து ஆல்டோஸ்டீரோன் என்ற ஹார்மோனை சுரக்க வைக்கிறது. 3.ஆல்டோஸ்ட்டிரோன் சிறுநீரக வடிப்பானின்(NEPHRON) வால் பகுதியில் உள்ள distal tubule (DCT) பகுதியில் சோடியத்தையும் நீரையும் மீண்டும் உறிஞ்சி இரத்தத்தில் சேர்க்கிறது.இதற்கு பகரமாக 2%பொட்டாசியம் வெளியேறுகிறது.2% பொட்டாசியம் வெளியேறும் அளவுவரைதான் ஆல்டோஸ்டீரோன் வேலை செய்யும்.மீதமுள்ள நீர் DCT ஐ தாண்டி சிறுநீர் சேகரிப்பு குழாய்க்கு சென்றுவிடும். 4.உடனே ஆஞ்சியோடென்ஸின்-II மூளை பகுதியில் உள்ள கீழ் பிட்டியூட்டரியை தூண்டி சிறுநீர் அடர் இயக்குநீர் (ANTIDIURETIC HORMONE-ADH ) என்ற ஹார்மோனை சுரக்க வைக்கிறது. 5.இந்த ADH சிறுநீர் சேகரிப்பு குழாயை நீரை மட்டும் உறிஞ்சி மீண்டும் இரத்தத்தில் சேர்க்கும்படி பணிக்கிறது.ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய ஒரு லிட்டர் அளவு சிறுநீரக வடிகுழாய்களில் வடிக்கப்படும் வடிநீர் இறுதியில் இரண்டு அல்லது மூன்று மில்லி லிட்டர் அளவே சிறுநீராக மாறி சிறுநீர்ப்பையை அடைகிறது.இவ்வாறு நம் இரத்தத்தின் நீர் சத்து முழுவதும் வெளியேறி விடாமலும் இரத்தத்தின் அளவும் அதனால் இரத்த அழுத்தமும் குறைந்துவிடாமலும் பாதுகாப்பது இந்த RAAAS அமைப்பே ஆகும். இதற்கு எதிராக செயல்படும் அமைப்புதான் AAAA ஆகும்.இதன் முக்கிய என்ஜைம் ACE 2 ஆகும் (பார்க்க படம் -2.). இந்த ACE 2 ஆஞ்சியோடென்ஸின்-II ஐ ஆஞ்சியோடென்ஸின் 1-7 ஆகவும் ஆஞ்சியோடென்ஸின் -I ஐ ஆஞ்சியோடென்ஸின்-1-9 ஆகவும் மாற்றுகிறது. அதே போல் ஆன்ஜியோடென்ஸின்-II ,ATR-2 இல் கிரியை செய்து இரத்தக்குழாய்களை விரிவடைய செய்கிறது.எனவே இந்த அமைப்பில் இருக்கக்கூடிய நான்கு AAAA களும் இரத்த குழாயை விரிவடைய செய்து அதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைகின்றன. இனி இந்த கோவிட் -19 வைரஸிற்கும் இந்த அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு என்பதை பார்க்கலாம். இந்த புதிய கொரோன வைரஸ்-19 நம் உடலில் உள்ள செல்களை ACE 2 ஏற்பி மூலமாகவே தாக்குகிறது என்பதை நாம் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம். ACE 2 ஏற்பிகளை இந்த வைரஸ் அதிகமாக பயற்படுத்துவதால் இந்த ACE2 ஏற்பிகள், உடல் தேவைக்கு பயன்படமுடியாமல் தட்டுப்பாடாகிவிடுகிறது. இதனால் நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி இரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடிய AAAA அமைப்பு பலஹீனமாகி விடுகிறது.அதன் எதிரணி அமைப்பு (RAAAS) பலம் பெற்று இரத்த அழுத்தத்தை உயர்த்திவிடுகிறது. இரத்த அழுத்தம் அபரிமிதமாக உயர்வதால் இதயத்தின் சுமை அதிகமாகி இதய செயலிழப்பு ஏற்படலாம். வீக்கத்தை உண்டாக்கும் சுரப்புகளான சைடோகைன்கள் (cytokines),கிரியாட்டின் கைனேஸ் போன்றவை அதிகமாக சுரந்து நிமோனியா,நுரையீரல் இரத்த ஓட்டத்தில் சிறு சிறு இரத்த கட்டிகள் (PULMONARY EMBOLISM),மூளைக்கு இரத்த ஓட்டம் தடைப்படல்,வயிற்று போக்கு ஆகியவை ஏற்படலாம். எனவே இறுதியாக இந்த கோவிட்-19 வியாதி இதய மற்றும் இரத்த ஓட்டம் ஆகியவற்றை பாதிப்பதால் இந்த மாதிரி பாதிப்பு உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன.விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
யுத்தம் என்றாலே அது குண்டு வெடிப்புகளிலும் ஆயுதங்களிலும் பீரங்கி முழக்கங்களிலும் ஓசைகளிலும் விமான இரைச்சல்களிலும் சீறும் ராக்கட்டுகளிலும் தான் தன் பரிணாமத்தை காட்டும் என்று இது நாள் வரை இருந்து வந்த நம் அறிவை வேறு ஒரு புது கோணத்திலும் யுத்தம் என்பது பரிணமிக்க கூடும் என்ற உண்மை நிலைகுலைய வைத்திருக்கிறது.
ஆம் அதுதான் விஷக்கிருமிகளை ஆயுதங்களாக பயன்படுத்தி போரிடும் உயிரியல் யுத்தம் என்ற ஒரு பரிணாமம்
ஆயுதங்களை வைத்து ஆடும் போர் மேடையில் யாருக்கும் யாருக்கும் போட்டி யார் யாரை தாக்குகிறார்கள் யாருக்கு ஜெயம் யாருக்கு தோல்வி என்பதெல்லாம் தெளிவாக தெரிந்து விடும்
ஆனால் நுண் விஷ கிருமிகளை ஆயுதமாக்கி விளையாடும் யுத்த மேடையில் யார் யாரை தாக்குகிறார்கள்,யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி,போர் எங்கே ஆரம்பித்தது எப்போது ஆரம்பித்தது யார் ஆரம்பித்தார்கள்,எங்கே எப்போது எவ்விதம் முடியும் என்பதெல்லாம் கண்ணுக்கும் புலப்படாது அறிவுக்கும் எட்டாது.இதை யுத்தம் என்பதை விட கண்மூடித்தனமான அழிவு என்றே கூறலாம்
ஏனென்றால் நிராயுதபாணிகள் இயலாதவர்கள் இவர்களை எல்லாம் தாக்கக்கூடாது என்ற தர்மங்கள் எல்லாம் இந்த யுத்தத்தில் செல்லாது.
இந்த கட்டுரையில் இப்படி ஒரு யுத்தத்தை சீனா ஆரம்பித்து இருக்கிறதா என்பதை சில செய்திகள் மற்றும் சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஐந்து யூக கோட்பாடுகள் (HYPOTHESES ) வரையப்பட்டு இருக்கின்றன .அவை வெறும் யூகங்கள் தானே தவிர அவை நிரூபணமான நிதர்சனங்கள் அல்ல.இவை பின்னப்பட்டதாகவும் இருக்கலாம் அல்லது உண்மையாகவும் இருக்கலாம் .ஆண்டவனுக்கே வெளிச்சம்.
யூக கோட்பாடு 1:-வைரஸின் தோற்றம்
RNA அமைப்பு
சீனாவின் மீதுசந்தேகம் என்ற மேகம் சூழ்வதற்கு வைரல் விஞ்ஞான அடிப்படையும் ஒரு காரணமாகும்
மேலே உள்ள படத்தை காணுங்கள் அதில் ஒரு RNA யின் அமைப்பு தரப்பட்டு இருக்கிறது
பெரும்பாலும் எந்த ஒரு உயிரினத்திற்கும் அதன் மரபணுவாக ஒரு RNA அல்லது ஒரு DNA என்று ஒன்று இருக்கும்.
இந்த புதிய கொரோனா வைரஸின் மரபணு ஒரு RNA வகையை சேர்ந்தது .
இந்த RNA பட்டை (Ribbon) பல நெளிவுகளாக இருக்கும் .ஒவ்வொரு நெளிவிற்குள்ளும் நான்கு நியூக்ளிக் அமிலங்கள் முறையே யுராஸில்,சைட்டோசின்,அடெனின் மற்றும் குஆனின் என்று பொதியப்பட்டு இருக்கும் (பார்க்க மேலே படம்-சிகப்பு,பச்சை வெளிர் நீலம் ,ஊதா என்று நாலு குச்சிகள் )
இந்த ஒரு நெளிவும் அதனுள் பொதியப்பட்டுள்ள கரு அமிலங்களும் சேர்ந்து ஒரு நியூக்ளியோட்டைடு ஆகும்.எனவே ஒரு RNA யின் நீளம் அதில் எத்தனை நியூக்ளியோடைடுகள் இருக்கிறதோ அதை வைத்து அளக்கப்படும்.
சாதாரணமாக ஒரு RNA யில் 3000 அளவு அதிகபட்சமாக நியூக்ளியோடைடுகள் இருக்கலாம் (அதாவது 3000 நெளிவுகள் வரை இருக்கலாம் )1000 நியூக்ளியோடைடுகளுக்கு ஒரு kilo base (kb) என்பார்கள் வைரஸ் விஞ்ஞானிகள்.எனவே ஒரு RNA 1 முதல் 3 அல்லது 5 kb வரை நீண்டோ அல்லது சுருண்டோ இருக்கலாம்.இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். மெகாவைரஸின் DNA நீளம் 130 kb வைரஸ் உலகிலேயே மிகவும் பிரம்மாண்டமான வைரஸ் இதுதான் ஆனால் இந்த வைரஸ் அமீபாக்களை மட்டுமே தாக்கும் அதுவும் இது ஒரு DNA வைரஸ் ஆகும் ஆனால் இந்த புதிய சீனத்து வைரஸ் 2002 இல் சீனாவிலிருந்து பரவிய SARS Co V (-1)ஐ ஒத்த RNA வைரஸ் ஆகவும் அதை விட பெரிதாகவும் இருப்பதன் மர்மம் தான் புரியவில்லை.இந்த இரண்டு வைரஸ் களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை இரண்டின் RNA அளவுகளும் ≈30 kb இரண்டின் விட்டங்களும் ≈100 nm அதாவது ஒரு பாக்டீரியாவை விட கொஞ்சம் சிறிது . இதை ஏன் சைனாவிலுள்ள ஆய்வுகூடம் உருவாக்கி இருக்க கூடாது என்பதுதான் வாதம் அதைத்தான் இனி வரும் யூகங்களில் காணலாம்.
யூகம் -2-சீனாவின் உயிரியல் போர் ஒத்திகையா ?
யாங்கிங் ஈ ,29 வயதான சீனர் .இவரை அமெரிக்க போலீஸ் கைது செய்தது.இவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் விசா மோசடி வெளிநாட்டிற்கு ஏஜெண்டாக செயல்பட்டது ஆகியவை இப்போது இவர் சீனாவில் இருக்கிறார் .
இதற்கு முன்பு 10-12-2019-ல் பாஸ்டன் நகரின் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சாவோசிங் செங் என்ற 30 வயதான ஒரு சீன ஆய்வாளர் 21நுண்ணுயிர் ஆய்வு திரவ குப்பிகளை சீனாவுக்கு கொண்டுபோகும் நிலையில் கையும் களவுமாக பிடிபட்டார்.இன்னமும் யு.எஸ்.சிறையில் இருக்கிறார். அடுத்து
டாக்டர் சார்லஸ் லீபர். 60 வயதான இவர் தலை சிறந்த ஓர் அமெரிக்க நானோ நுண்ணுயிரியல் ஆய்வாளர்.2008-இலிருந்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் லீபர் ஆய்வுக்குழுவின் தலைமை ஆய்வாளர் பொறுப்பில் இருந்தார்.இவர் நானோ விஞ்ஞானத்தில் (NANO SCIENCE) மிகவும் தேர்ச்சி பெற்றவர்.இவருக்கு இவருடைய ஆய்வுகளுக்காக அமெரிக்க தேசீய சுகாதார நிறுவனம்(NIH) மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை ஆகியவை இணைந்து மாதம் 15 மில்லியன் யு எஸ் டாலர்களை சன்மானமாக அளித்தன.
இந்த சன்மானங்களை பெறுபவர் வேறு எந்த நாட்டிற்கும் எவ்விதத்திலும் சேவை செய்பவராக இருக்க கூடாது.ஆனால் பின்னாளில் லீபர் சில உண்மைகளை மறைத்து இந்த சன்மானங்களை பெற்றது தெரிய வந்தது.
அதாவது இந்த சன்மானங்களை பெரும் நிலையிலேயே லீபர் 2018-19 களிலிருந்து சீனாவில் வூஹான் தொழில்நுட்ப பல்கலைக்கழத்துடன் (WUHAN UNIVERSITY OF TECHNOLOGY) இணைந்த,ஆயிரம் திறமைகள் திட்டம் (THOUSAND TALENT PLAN) என்ற மூன்று வருட திட்டத்தின் கீழ் செயல்படுவது தெரியவந்தது.இதற்கு அவர் பெற்ற சன்மானங்கள் மாதம் U.S.$ 50000/-சம்பளம்,சீனாவில் தங்குவதற்கு ஆகும் செலவுக்காக 1,000,000 சீன யுவான்கள் ,மற்றும் வூஹானில் ஒரு ஆய்வுக்கூடம் உண்டாக்க தேவையான செலவுகளுக்காக 1.5 மில்லியன் யு எஸ் டாலர் என்று எக்கச்சக்கம்.இந்த திட்டத்தின் படி ஒவொரு வருடமும் ஒன்பது மாதங்கள் அவர் சீனாவின் வூஹானில் தங்கி பணிபுரிந்திருக்கிறார் .இந்த உண்மைகள் தெரிய வந்தவுடன் இவற்றை மறைத்ததற்காக 20-01-2020 இல் அவர் கைது செய்யப்படுகிறார்.இப்போது இவர் யு.எஸ் சட்டத்தின் பிடியில்.
இதற்கு முன்பே கனடாவில் கனடிய தேசிய நுண்ணியிரியல் ஆய்வு கூடத்தில் இருந்து மிஸஸ் சிங்குவோகியூ (Mrs.Xiangguo Qiu)என்பவரின் தலைமையின் கீழ் பணிசெய்து கொண்டிருந்த பத்து சீன ஆய்வாளர்கள் பயங்கர நுண்ணுயிரிகளை சீனாவுக்கு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதாயினர் .இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் மிஸஸ் சிங்குவோ கியூ வின் கணவர் சீனாவில் உயிரியல் ஆயுதங்கள் (BIO WEAPONS) சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
1999 களில் சீனாவின் மக்கள் விடுதலை படை என்ற அமைப்பு
கட்டுப்பாடற்ற போர் (Unrestricted Warfare)
என்ற புத்தகத்தை வெளியிட்டது.இதை சீனியர்கர்னல் கியாவோ லியாங் (Sr.Col.Qiao Liang),சீனியர் கர்னல் வாங் சியாங் சுய் (Sr.Col.Wang Xiang sui) என்ற இரு ராணுவ அதிகாரிகள் எழுதி இருந்தனர்.
இந்த நூல் தான் சீன அரசுக்கு உயிரியல் யுத்தம் (Biological Warfare) பற்றிய ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
அந்த புத்தகத்தில் அவர்கள் எழுதி இருந்தனர் "கீழை நாடுகள் அணு ஆயுதங்கள் உயிரியல் ஆயுதங்கள் கண்ணி வெடிகள் போன்றவற்றை வைத்திருக்க கூடாது என்பது மேற்கு நாடுகளின் சதி ஆகும்.சீனா இந்த கட்டுப்பாடுகளை தாண்டினால்தான் மேற்கு நாடுகளை தன் காலடியில் விழவைக்க முடியும்" என்ற வெறித்தனம் அதில் இருந்தது.
அந்த புத்தகம் மேலும் கூறியது "இனி எதிர்காலத்தில் யுத்தம் என்பது ஆயுதங்களால் இருக்காது அறிவுபூர்வமாகத்தான் இருக்கும் மேலும் யுத்தம் என்பது கண்மறைவாகவே இருக்கும் " என்று .
இதே போல் 2010 இல் சீன செய்தி ஸ்தாபனமான சின்ஹுஆ (XINHUA) ஒத்த கருத்துள்ள வேறு ஒரு புத்தகத்தை வெளியிட்டது. 2015-சீன ராணுவம் வெளியிட்ட ஒருபுத்தகத்தில் வெளிப்படையாகவே "ஒவொரு சீன ராணுவ அதிகாரியும் நுண்ணுயிரியல்(Microbiology) பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் "என்ற குறிப்பு இருந்தது. இவற்றை எல்லாம் தாண்டி ஒரு படி மேலே போய் சீனாவின் தேசிய ராணுவ பல்கலைக்கழகம் (Chinese National Military University) ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தது.அதன் பெயர் புதிய போர் தீவு (New Island of War)இந்த புத்தகம் தான் சைனாவின் ஒரு கோர முகத்தை வெளிப்டுத்தியது. அந்த புத்தகத்தில் சீனா எதிர் காலத்தில் ஒரு வைரஸை உண்டாக்க வேண்டும்.அது வழி வரையறுக்கப்பட்ட ஏவுகணை (Guided Missile) போல ஒரு குறிப்பிட்ட நாட்டை ஒரு குறிப்பிட்ட இனத்தை மட்டும் தாக்கி அழிப்பது மாதிரி இருக்கவேண்டும் என்று அந்த புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
யூக கோட்பாடு-3(வைரஸ் ஒழுக்கல் கோட்பாடு :-
இந்த கோர வைரஸ் எங்கிருந்து பரவியதோ அந்த வூஹானில் இருப்பதுதான் வூஹான் வைரஸ் விஞ்ஞான பயிலகம் (Wuhan Institute Of Virology).சீனாவிலேயே இந்த வகையில் இது ஒன்றுதான் உள்ளது.நாலு அடுக்கு பாதுகாப்பு பெற்றது.இதோடு இணைந்து இன்னும் இரண்டு ஆய்வு கூடங்களும் அதனுடன் ஒட்டி இருக்கின்றன .அவை 1.வூஹான் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (W.C.D.C&P)
2.தேசீய ஆய்வு கூட பாதுகாப்பு ஆய்வுகூடம் (N.L.S.L.)
இந்தமூன்றுமே ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை .
அதாவது W.I.V யில் வைராலஜிஸ்டுகள் புதிய கொடூரமான வைரஸ்களை உருவாக்கி ஆய்வு செய்வர்
மற்ற இரு ஆய்வு கூடங்களும் தடுப்பு மருந்துகளையும் உபகரணங்களையும் தயாரிப்பர்
அதாவது கம்பியூட்டரில் ஆன்டி வைரஸ் மென்பொருள் உண்டாக்கும் கம்பெனி தானே வைரஸ்களை உருவாக்கி பரவவிட்டு பிறகு அதை அழிப்பதற்கு ஆன்டி வைரஸ் மென்பொருளையும் உருவாக்கி சந்தையில் விற்பனைக்கு விடுவது மாதிரி
தெற்கு சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரு விஞ்ஞானிகள் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்ஷேவ் (GUANGZHOU) இலிருந்து இரு திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டனர்.
அது 2002-இல் எப்படி பெய்ஜிங்கின் ஒரு ஆய்வகத்திலிருந்து SARS Co V வைரஸ் லீக் ஆகி குவாங்டாங் மாகாணத்தை முதலில் தாக்கி பிறகு உலகெங்கும் பரவியதோ அதே போல்தான் நிச்சயமாக இந்த புதிய SARS Co V -2 வைரஸும் வூஹானின் W.I.V. இலிருந்து பரவி இருக்க வேண்டும் என்பது.மேலும் அவர்கள் கூறியது அந்த இன்ஸ்டிடியூட் நாலு அடுக்கு பாதுகாப்பு பெற்றிருந்தாலும் முறையாக பாதுகாப்பு அங்கு கடைபிடிக்கப்படவில்லை என்பது.
அதோடு அங்கு அளவுக்கு அதிகமாக பறவைகளும் விலங்குகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கின்றன.சுமார் 650 கும் மேலே வெளவால்கள் மட்டும் அங்கு ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் அங்குள்ள சில விஞ்ஞானிகள் ஆய்விற்கு பயன்படுத்தப்பட்ட விலங்குகளை அருகிலுள்ள ஹுனான் கடல் உணவு மார்க்கட்டில் விற்று மில்லியன்கணக்கில் சம்பாதித்து இருக்கின்றனர்.இப்போது இந்த இரு விஞ்ஞானிகளும் உயிருடன் உள்ளனரா என்பது தெரியவில்லை.
இதே கருத்தை 22-02-2020 தேதியிட்ட நியூ யார்க் போஸ்ட் பத்திரிகையில் ஸ்டிவன் மோக்ஷர் என்பவர் குறிப்பிட்டு இருந்தார்
பல யு எஸ் விஞ்ஞானிகள் சீனாவின் W.I.V. யில் பின்பற்றப்படும் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து இருந்தனர்
ஆனால் சீன அரசோ கண்ணை மூடிக்கொண்டு இருந்தது . ஜனவரி 20, 2020 வரை மெத்தனமாகவே இருந்தது .
எச்சரிக்கை செய்த தன் சொந்த நாட்டு விஞ்ஞானிகளை கூட வாயை அடைத்துவிட்டது .
அதே நியூயார்க் போஸ்ட் பத்திரிகையில் அதே மோஷர் இன்னொன்றையும் குறிப்பிட்டு இருந்தார்.
21-02-2020 இல் சீன அதிபர் க்ஸி ஜின்பிங் அவசர அவசரமாக கேபினெட்டை கூட்டி நாடு முழுதுமுள்ள உயிரியல் ஆய்வு கூடங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஆணை ஒன்றை பிறப்பித்தார்.
இந்த ஆணை மறுநாள் 22-02-2020 அன்று சீன விஞ்ஞான ஆய்வுகூட அமைச்சகம் மூலம் நாட்டின் அனைத்து ஆய்வு கூடங்களுக்கும் அனுப்பப்பட்டது.உலகமே கோவிட்-19 இல் பரிதவித்துக்கொண்டு இருக்க எந்த நாடும் ஆய்வு கூடம் பற்றி சிந்திக்காத நிலையில் சீன அதிபரின் இந்த நடவடிக்கை பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
23-02-2020 மெயில் ஆன் லைன் தன் வலை தளத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சீனாவின் W.I.V. யின் பாதுகாப்பு பற்றி எச்சரித்ததை வெளியிட்டது .
ஆனால் சீனா அதை பொருட்படுத்தவில்லை. மார்ச் 22,2020 தேதியிட்ட நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட எப்படி அது வெளிப்பட்டது (HOW IT GOT OUT) என்ற ஒரு கட்டுரையில் ஜனவரி 1,2020 முதல் வூஹான் புது வருட கொண்டாட்டத்தின் போதும் அதன் பிறகும் லக்ஷக்கணக்கான மக்கள் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் வூஹான் நகருக்குள் வருவதும் வெளியேறுவதுமாக இருந்திருக்கின்றனர்.20-01-20 இல் தான் சீனா நோய் தொற்றை ஒப்புக்கொண்டது.23-01-2020 இல் ஹூபாய் மாகாணத்தில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது.லாக் டவுனுக்கு முன் ஹுபையை விட்டு வெளியேறியவர் சீனாவுக்குள் பரவி விட்டனர்
லாக் டவுனுக்கு பிறகும் 26-01-2020 வரை சீனா உள்நாட்டு வெளிநாட்டு விமான போக்குவரத்தை லாக் டவுன் செய்யவில்லை.எனவே லாக் டவுனுக்கு முன்னும் பின்னும் கிட்டத்தட்ட 70,00,000 மக்கள் வூஹானிலிருந்து வெளியேறியதாக அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.
யூக கோட்பாடு -4-வியாபார நோக்கு ?
இதுவும் ஒரு யூகம் தான் இந்த யூகத்திற்கும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி சீனா வெளியிடும் சில மிகைப்படுத்தும் அறிக்கைகள் தான் காரணம்
நாங்கள் இதை கட்டுப்படுத்தி விட்டோம்.வூஹானில் இப்போது எந்த தொற்றும் இல்லை நாடும் நகரமும் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டன.வர்த்தக ஸ்தலங்கள் சகஜமாகி விட்டன.பங்கு சந்தை நிலவரம் உயர்ந்திருக்கிறது சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் மேம்பட்டு இருக்கிறது.எந்த நாட்டிற்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கோவிட் -19 நோய் சம்பந்தமான மருந்துகள் மருத்துவ பரிசோதனை கிட்டுகள் உபகரணங்களை நாங்கள் ஏற்றுமதி செய்ய முடியும். செய்கிறோம் என்ற அவர்களது புள்ளி விவரங்கள் நம்மை மலைக்க வைக்கின்றன.எவ்வளவு வேண்டுமானாலும் அளவற்ற நிலையில் சீனா மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னமேயே அது திட்டமிட்டதா என்பது மர்மம் ஆகவே இருக்கிறது. யூக கோட்பாடு 5-சீன உளவு ஜனவரி 20,2020 இல் தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் கிரி வலம் வரும் பாதையில் ஒரு குகை.அதற்குள் மனித வாடையை உணர்ந்த பக்தர்கள் அதற்குள் போக எத்தனிக்க அதனுள் பதுங்கி இருந்த ஒரு சீனர் உள்ளாடையுடன் திடீயென்று வெளிப்பட்டு பக்தர்களின் கைகளில் சிக்காமல் தப்பி ஓட பக்தர்களுடன் வனத்துறையும் சேர்ந்து அவரை விரட்டி பிடித்தனர்.அவரிடம் விசாரித்ததில் தான் சீனாவில் பெய்ஜிங் நகரை சேர்ந்தவர் என்றும்,ஆன்மீக சுற்றுலாவுக்காக இங்கு வந்ததாகவும்
,லாட்ஜில் தங்க இடம் கிடைக்கவில்லை என்பதனால் இந்த குகையை தேர்ந்தெடுத்ததாகவும் கூறினார்.தன் பெயரை யாங் ரூய் என கூறினார்.மூன்று நாட்களில் திரும்ப நினைத்ததாகவும் ஆனால் சீனாவில் லாக் டவுன் ஆனதால் இங்கேயே தங்கி விட்டதாகவும் கூறினார்.இன்று அவர் போலீஸ் பாதுகாப்பில் இருந்தாலும் இவரது வருகை இன்னும் மர்மமாகவே இருக்கிறது
6.சீனாவின் அலட்சியம் -டாக்டர் லீ -யூக கோட்பாடு
டாக்டர் லீ வேனிலியாங் வூஹான் அரசு மத்திய பண் முக ஆஸ்பத்திரியின் கண் சிகிச்சை பிரிவின் முக்கிய மருத்துவர்.இவர் தன்னுடைய சமூக வலை தளத்தில் ஒரு முக்கிய செய்தியை தனது மருத்துவர் குழுவுக்கு பதிவிட்டு இருந்தார்.அதில் தன்னிடம் கண் சிகிச்சை பெற வந்த நான்கு நோயாளிகளுக்கு 2002 இல் குவாங்டாங்கில் பரவிய சார்ஸ் வைரஸை போல் ஒரு தொற்று இருந்ததை உணர்ந்ததாகவும் அது சார்ஸ் -ஐ விட வித்தியாசமாகவும் வீரியமுள்ளதாகவும் இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார் .ஒரு வாரம் கழித்து அவர் வீடுதேடி வந்த போலீஸ் அவரிடம் தேவையற்ற வீண் வதந்திகளை பரப்பி மக்களை பீதி அடைய வைக்க முயற்சித்த குற்றத்திற்காக கைது செய்கிறோம் என்று கூறி அவரை காவல் நிலையம் கொண்டு சென்றனர்
காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் ஏற்கனவே அச்சிட்டு தயாரித்து வைக்கப்பட்டு இருந்த ஒரு தன்னிலை விளக்க கடிதத்தில் அவரது கையெழுத்தையும் அவரது முத்திரையையும் வாங்கி வீட்டுக்கு அனுப்பினார். பத்து நாட்கள் கழித்து அவரது க்ளினிக்கிற்கு கிளாக்கோமா என்ற ஒரு கண் நோய்க்காக சிகிச்சை பெற வந்த ஒரு பெண் நோயாளி மூலம் அவர் எந்த கிருமியை குறித்து அனைவரையும் எச்சரிக்கை செய்ய விரும்பினாரோ அதே கிருமியினால் தாக்கப்பட்டார்.அவர் குடும்பத்திலும் அது பரவியது. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன லீ தான் இறுதி கட்டத்தில் இருப்பதை உணர்ந்தார்.தனது நெருங்கிய நண்பர்கள் மூலம் காவல் துறை தன்னிடம் நடந்து கொண்ட விதம் அவர்கள் வற்புறுத்தியதால் தான் ஒப்பமிட்டு கொடுத்த அந்த தன் நிலை விளக்க கடிதத்தின் நகல் ஆகியவற்றை சமூக ஊடகங்கள் மூலம் மக்களறிய வெளிப்படுத்தினார்.பிறகு டாக்டர் லீ இறந்தார் .நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் உட்பட மக்கள் கொதித்தனர்.அரசையும் காவல்துறையையும் கண்டித்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் விமர்சனகளும் கண்டனங்களும் குவிந்தன.அரசும் காவல் துறையும் மக்களிடம் மன்னிப்பு கேட்டன.ஆனால் காலம் கடந்து விட்டது.டாக்டர் லீ இறந்து விட்டார்.அவரது நேர்மை இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து கொடுத்துவிட்டது.இன்றைக்கு டாக்டர் லீ சீனாவில் ஒரு பிதா மகன்.
முடிவுரை
இந்த கட்டுரையின் நோக்கம் ஒரு நாட்டின் மீது பழி போடவேண்டும் என்பதல்ல.ஆனால் நெஞ்சத்தை நெருடுவது போல் அங்கு தவறுகளும் அரசின் அலட்சிய போக்கும் நிறைந்து இருக்கின்றன.அதே சமயம் இந்த கட்டுரையில் குறிப்பிட்ட சில தகவல்கள் மிகையாகவும் இருக்கின்றன.உதாரணமாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் தகவல்.லாக் டவுனுக்கு முன்னும் பின்னும் வூஹானிலிருந்து சுமார் எழுபது லக்ஷம் பேர் வெளியேறினர் என்பது.வூஹானின் மொத்த மக்கள் தொகை ஒருகோடிக்கு மேல் இருக்கலாம்.ஆனாலும் அந்த தகவல் மிகையாகவே தெரிகிறது.
நீதி:-
உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளிலும் உள்ள நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்களை கண்காணிக்க ஐ.நா ஒரு விசேஷ துறையை ஏற்படுத்த வேண்டும்.
நாட்பட்ட சிறுநீரக கோளாறு(CKD)&இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு(ESKD)
படம் 1
இந்த பதிவில் நாட்பட்ட அல்லது நீண்டகால சிறுநீரக கோளாறு பற்றி பார்க்கலாம். நாட்பட்ட சிறுநீரக கோளாறு குறுகிய கால கோளாறு போல் இல்லாமல் சிறுநீரகம் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக செயலிழப்பது.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முதன்மையான இரு காரணங்கள் 1.நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம் 2.நாட்பட்ட சர்க்கரை மிகு நோய் (சர்க்கரை நீரிழிவு அல்லது ஹைப்பர் கிளைசீமியா-Hyperglycemia) உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக இரத்த ஓட்டத்தை குறைத்து அதனால் சிறுநீரகம் நலிவடைந்து கோளாறுகளுக்கு ஆளாகும் உயர் சர்க்கரை நிலையில் சிறுநீரகத்தின் நெப்ரான்கள் (சிறுநீரக சுத்தீகரிப்பான்கள்)சேதமடைந்து இத்தகைய கொடிய நோயை உண்டாக்கும் மற்றபடி குறுகிய கால சிறுநீரக கோளாறை (AKD) உண்டாக்கும் அனைத்து காரணிகளும் இந்த நாட்பட்ட சிறுநீரக கோளாறுக்கும் (CKD) பொருந்தும்.
நாட்பட்ட சிறுநீரக கோளாறின் நிலைகள் :-
1.சாதாரண நிலை:இதில் சிறுநீரகத்தின் கழிவு நீக்கும் திறன் சாதாரண நிலையிலிருந்து அதி சாதாரண நிலைவரை இருக்கும்.இதை தொழில் நுட்ப மருத்துவ மொழியில் GFR-100 மில்லி/நிமிடத்திற்கு(மி/நி) என்று அளவீடு செய்யலாம்.
2.மித நிலை :-GFR- 60 to 99 மி/நி
3.இடை நிலை A :- GFR:49 to 59 மி/நி
இடைநிலை B :- GFR :35 to 49 மி /நி
4.கடுமை நிலை :-GFR :19 to 29 மி/நி
5.இறுதி நிலை :- GFR :19க்கு கீழ் <19 19="" font="" nbsp="">19>
முதல் இரண்டு நிலைகளிலும் நாம் உடனேயே காலத்துடன் சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் இந்த கோளாறை சரிசெய்ய முடியும்.ஆனால் இந்த இரு நிலைகளிலும் நோய் எந்த அறிகுறியும் காட்டாது.எனவே சிகிச்சையிலிருந்து தவறலாம்
மூன்றாவது நான்காவது நிலைகளுக்கு நோய் கடந்துவிட்டால் மீள்வது கடினம்.ஏனெனில் அந்த நிலைகளில் சிறுநீரகம் ஏறக்குறைய 50%க்கு மேல் தன் ஆரோக்கியத்தை இழந்திருக்கும்.
அறிகுறிகள் :-
CKD ஐ பொறுத்தவரை AKD போன்றே அறிகுறிகள் இருந்தாலும் அவை சிறிது சிறிதாகத்தான் வெளிப்பட துவங்கும்
1.குமட்டல் வாந்தி பசி இன்மை ஜீரண கோளாறு
2.பலவீனம் மன குழப்பம்
3.களைப்பு, சோர்வு
4.ஆரம்பத்தில் அடிக்கடி சிறுநீர் கழியும் பிறகு படிப்படியாக அது குறைந்து விடும்
5.சிறுநீரில் நுரை மற்றும் இரத்தம்
6.இதயத்தை சுற்றி நீர் காட்டுவதால் நெஞ்சு வலி மற்றும் இறுக்கம்
7.நுரையீரலில் நீர் காட்டுவதால் மூச்சு முட்டுதல்
8.நீர் இரத்தத்தில் தேங்குவதால் இரத்த அழுத்தம் உயர்தல்
9.தூக்கமின்மை
10.யூரிக் அமிலம் யூரியா மற்றும் பாஸ்பரஸ் கழிவுகள் உடலில் தேங்குவதால் தோலில் அரிப்பு உண்டாகுதல்.தோல் கறுத்தல்,படை சிரங்கு போல் செதில் செதிலாக தோல் மாறுதல்
11.சதை வலி சுளுக்கு .
மேல் கண்ட அறிகுறிகள் அது சிறுநீரக கோளாறுதான் என்றில்லாவிட்டாலும்
தீர பரிசோதித்துக்கொள்வது நல்லது.
காரணிகள் :-
1.சர்க்கரை நோய் (நாட்பட்ட)
2.நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம்
3.சிறுநீரக குழாய்களில் தொற்று (Tubule Infections)
4.சிறுநீரக வடிகட்டிகளில் தொற்று (Glomerulonephritis)
5.முன் சிறுநீர் சேமிப்பு குழாயில் கோளாறு.இதனால் சிறுநீர் மீண்டும் சிறுநீரகத்தை நோக்கி திரும்பி பாய்தல் (Vesicoureteral Reflux)
6.சிறுநீரக கட்டிகள் (Renal cysts)
7.சிறுநீர் பின் குழாயில் அழுத்தம் மற்றும் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் (Pressure in urethra & enlarged prostate)
8.நாட்பட்ட சிறுநீரக தொற்று நோய்கள்
இடர் காரணிகள் :-
1.முதுமை
2.புகைப்பழக்கம்
3.ஆல்கஹால் மற்றும் போதை வஸ்துக்கள்
4.உடல் பருமன் (Obesity)
5.கவனிக்கப்படாத இதய மற்றும் இரத்தக்குழாய் கோளாறுகள் (உயர் இரத்த அழுத்தம்)
6.கவனிக்கப்படாத நாட்பட்ட சர்க்கரை நோய்
7.பாரம்பரிய சிறுநீரக கோளாறுகள்
சிக்கல்கள் (பழுதுகள்):-
பெரும்பாலும் கீழ்கண்ட பழுதுகள் இறுதிக்கட்ட சிறுநீரக கோளாறின் அறிகுறியாகும்
படம்-2
சிறுநீரக்கோளாறுகள் பொதுவாகவே உடலின் அனைத்து பாகங்களையும் தாக்க கூடியதாகும்.காரணம் ,
1.பொட்டாசியம் அளவு இரத்தத்தில் அதிகரித்தல் (இதய பாதிப்புகள் )
2.இரத்தத்தில் பாஸ்பரஸின் அளவு அதிகரித்தல் (தோல் பிரச்சினைகள் )
3.இரத்தத்தில் கால்ஷியம் அளவு அதிகரித்தல் (சிறுநீரக கல் ,எலும்பு பலஹீனம் மற்றும் இருதய கோளாறுகள்)
4.நீர் தேங்குதல் (நுரையீரல் மற்றும் இருதய வீக்கமுயற் இரத்த அழுத்தம் )
5.இரத்த சோகை 6.பாலுணர்வு குறைபாடுகள்.தாம்பத்திய உறவில் நாட்டமின்மை 7.மூளை மற்றும் மத்திய நரம்புமண்டல பாதிப்புகள்.மன நலம் குன்றுதல் 8.நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ,உடல் பல வித தொற்று நோய்களுக்கு ஆளாதல் 9.இதய மேலுறை தொற்று நோய்-Pericarditis. இதனால் பெரிகார்டிய பையில் நீர் தேங்கி இதயம் வீங்குதல் (படம் 2)
CKD யில் இரத்த சோகை கோட்பாடு(Anemia Concept) எரித்ரோபோய்டின்-Erythropoietin (EPO):-
படம்-3
சிறுநீரகம் கழிவு உறுப்பாக மட்டும் செயல்படாமல் நம் உடலில் இரத்த சிவப்பணுக்கள் சீராக இருக்க உதவும் எரித்ரோபோய்டின் என்ற ஹார்மோனையும் உற்பத்திசெய்கிறது.இந்த வகையில் இது ஒரு நாளமில்லா சுரப்பியாக செயல்படுகிறது. படம் 3-இல் இது கீழ்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளது:-
1.சிறுநீரகத்திலிருந்து EPO வெளியாகிறது
2.நேரடியாக இரத்த ஓட்டத்துடன் கலந்து எலும்பு மஜ்ஜைக்கு உத்தரவிடுகிறது
3.எலும்பு மஜ்ஜை உத்தரவுப்படி சிவப்பணுக்களை இரத்த ஓட்டத்திற்குள் வெளியாக்குகிறது .
குழந்தை பருவத்தில் EPO 100% கல்லீரலிலிருந்து உற்பத்தியானாலும் வயது ஆக ஆக இந்த நிலை மாறி சிறுநீரகமே 90% EPO வை தயாரித்து இரத்தத்தில் வெளியிடுகிறது.எனவே வயதான காலத்தில் கல்லீரலின் EPO உற்பத்தி 10% கீழேயே இருக்கும்
எனவேதான் இறுதி கட்ட சிறுநீரக செயலிழப்பில் EPO குறைபாட்டினால் சோகை மிக வேகமாக உண்டாகும். எரித்ரோபொயட்டின் அல்லது EPO கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் இருப்போருக்கும் குளிர் பிரதேசத்தில் வசிப்போருக்கும் அதிக அளவில் சுரக்கப்படும்.காரணம் இங்கு காற்று வெளியில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருக்கும் எனவே இரத்தத்திற்கு அதிக அளவு சிவப்பணுக்கள் தேவைப்படும்
பரிசோதனைகள் :-
1.EPO அளவு :சாதாரணமாக இதன் அளவு 4 டு 40 IU /L இருக்கவேண்டும்
2.இறுதி நிலை கோளாறை (ESKD )உறுதிப்படுத்த 24 மணிநேர சிறுநீர் பரிசோதனை அவசியம்
3.கிரியாட்டினின் பரிசோதனை -இரத்தத்தில் இதன் அளவு சாதாரணமாக 0.7 டு 1.2 வரை இருக்கலாம்
4.KIM பரிசோதனை
மேலே கூறிய அனைத்து பரிசோதனைகளையும் விட குறுகிய கால மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய்களை இந்த பரிசோதனையின் மூலம் மிக துல்லியமாக அறிய முடியும்.
KIM என்பது நோய்ப்பட்ட சிறுநீரக முன் சுருள் குழாயின் (PCT)உள்பகுதி தோலில் இருந்து உதிர்ந்து சிறுநீரில் வெளியாகும் மூலக்கூறு ஆகும் இது ஒரு புரத வகையை சேர்ந்தது
இது சிறுநீரில் வெளிப்பட்டால் சிறுநீரகம் பழுதடைந்து இருப்பதாக அர்த்தம்
நுண் ஆல்புமின் யூரியா பரிசோதனை :
இதுவும் ஓரளவு சிறுநீரக கோளாறை அறிய உதவும்.ஆல்புமின் என்பது இரத்தத்தில் இருக்கும் புரதமாகும் இது சாதாரணமாக சிறுநீரில் வெளியேறாது.ஆனால் சிறுநீரகத்தில் கோளாறோ அல்லது கிருமி தொற்றோ இருந்தால் இது சிறுநீரில் வெளியேறும்
KIM மற்றும் நுண் அல்புமின்யூரியா பரிசோதனைகள் 24 மணி நேர சிறுநீர் பரிசோதனையில் தெரியவரும்
எரித்ரோபோய்டின் சிகிச்சை
இந்த வகை ஊசிகள் சிறுநீரக கோளாறின் போது ஏற்படும் சோகை நோயை சரி செய்ய நோயாளிக்கு தர வேண்டும்
நோயாளி டயாலிசிஸ் செய்தாலுமோ அல்லது இல்லாவிட்டாலுமோ வாரம் மூன்று முறையாவது தர வேண்டும்.
டோஸ்களை டாக்டரே நிர்ணயிப்பார்
ஹீமோகுளோபின் அளவு இரத்தத்தில் டெசிலிட்டருக்கு 10 கிராமுக்கு கீழே இரங்கத்துவங்கும் போதே சிகிச்சையை ஆரம்பித்துவிடவேண்டும்
அதன் பிறகு டோஸை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்ளலாம்
டோஸேஜ் அளவு :- 50 டு 100 யூனிட்ஸ் /கிலோ கிராம்
ரூட் :ஊசி மூலம் சிரையிலோ (Intra venus) அல்லது தோலுக்கு ஒட்டிய சதைப்பகுதியிலோ(subcutaneous) செலுத்தலாம்.
ஹீமோடயாலிசிஸ் மற்றும் பெரிடோனியல் டயாலிசிஸ் பற்றி விரிவாக தனித்தனியான பதிவுகளில் பார்க்கலாம்
குறுகிய கால சிறுநீரக செயலிழப்பு என்பது மிகவும் கொடிய நிலை ஆகும் .இந்த நிலையில் திடீரென்று சிறிது நாட்களில் ஏன் சில மணித்துளிகளில் சிறுநீரகம் தன் செயல்பாட்டை இழந்துவிடும் .இரத்தம் சுத்தீகரிக்கபடாமல் அதன் கழிவுகள் அனைத்தும் உடலில் தேங்கி குறுகிய காலத்தில் உயிருக்கே ஆபத்தான நிலை உருவாவது.
இதை மருத்துவ மொழியில் Acute Kidney Disease or Failure (AKD or AKF) என்பர்.இது நம் உடன்பிறந்தவரோ அல்லது உயிர் காக்கும் தோழனோ இதுவரை நட்போடு இருந்துவிட்டு திடீர் என்று சில நாட்களில் பகையாகிவிடுவது மாதிரி.இந்த AKF திடீரென்று தாக்கக்கூடிய ஒரு கொடிய நிலை எனினும் சில நேரம் அதிர்ஷ்டவசமாக நம் உடல் வேறு எந்த உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால்,இந்த கொடிய நிலை மாறி சிறுநீரகம் மீண்டும் புனர் ஜென்மம் எடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது .
இரத்தத்தில் கிரியாட்டினின் 50%TO 50% க்கு மேல் இருந்தால் இந்த AKD உறுதிப்படும்
மெத்தனால்,எத்தனால் போன்ற ஆல்கஹால் வஸ்துக்கள் கல்லீரலில் உண்டாக்கும் பார்மாலிட்டிஹைடு,அசிட்டால்டிஹைடு போன்ற வீரிய கழிவுகள் கல்லீரலிலிருந்து சிலநேரம் அப்படியே ஒழுகி வந்து சிறுநீரகத்தை தாக்கலாம்
மேலும் அளவு மீறி ஆல்கஹால் எடுத்துக்கொண்டால் இரத்த அழுத்தம் உயர்ந்து சிறுநீரகத்தை தாக்கும் 2.வலி மருந்துகள் இவை சிறுநீரக இரத்தக்குழாய்களை சுருக்கி சிறுநீரகம் இரத்தம் பெறுவதை குறைத்துவிடும்.நம் உடலில் இரத்தம் தாராளமாக பாய்வதற்கு சில உயிரி ஊடகங்கள்(Biological Mediators) உதவுகின்றன.அவற்றில் முக்கியமானவை புரோஸ்டகிளாண்டின்(Prostaglandin) மற்றும் புரோஸ்டசைக்ளின் (Prostacyclin)ஆகியவை.புரோஸ்டகிளான்டின் இரத்தக்குழாய்கள் சுருங்குவதை தடுக்கும்.ப்ரோஸ்டாசைக்ளின் இரத்தம் உறைவதை தடுக்கும்.இவற்றை தயாரிக்க சைக்ளோ ஆக்சிஜெனேஸ் என்ற என்ஜைம் இயங்க வேண்டும்.வலி மருந்துகளான புரூபென்(Brufen or Ibuprofen),ஆஸ்பிரின்Aspirin),நெப்ரோக்சென்(Naproxen or Proxen),இண்டோஸிட் (Indocid or Indomethacin)போன்றவை இந்த என்ஜைம் இயங்குவதை தடுத்துவிடும்.அதனால் தேவையான ப்ரோஸ்டாகிளாண்டின் மற்றும் ப்ரோஸ்டாசைக்ளின் சுரக்காமல் நின்றுவிடும் . 3.நாம் எடுத்துக்கொள்ளும் சில மருந்து மாத்திரைகள் வளர் சிதை மற்றம் அடையும் போது கொடிய நச்சு பொருளாக மாறி சிறுநீரக நெப்ரான்களை சிதைத்து விடலாம் உதாரணம் கதிர்வீச்சு ஸ்கேன் எடுப்பதற்காக கான்ட்ராஸ்ட் மீடியமாக ஊசி மூலம் உடலில் செலுத்தப்படும் சில நிறமிகளில் அசுத்தமாக கலந்திருக்கும் அயோடின். 4.பேதி மருந்தாக தரப்படும் சோடியம் பாஸ்பேட் கலந்த பேதி மருந்துகள்.இவை அதிகப்படியாக எடுக்கும் போது சிறுநீரக நெப்ரான் வடிப்பான்களில் பாஸ்பேட் உப்புகள் படிந்து சேதமுண்டாக்கலாம். 5.சோடியம் மற்றும் கால்சியம் கலந்த வயிற்று அமிலம் குறைப்பான்கள்(Antacids).உதாரணமாக சோடியம் பைகார்போனேட் உப்புகள் அதிகம் சாப்பிட்டால் சிறுநீரகங்களின் மீது அதிக சுமை உண்டாகலாம்.எனவே சிறுநீரகம் பழுதடையலாம் மேலும் கால்சியம் உப்புகள் அதிகம் உபயோகித்தால் அவை சிறுநீரக கற்கள் உண்டாக்கி பாதிப்புகள் ஏற்படுத்தலாம்.இன்னும் கீழ்க்காணும் அட்டவணையில் சில மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளது.அவையும் உடலில் சில சமயம் மாற்றங்கள் அடைந்து அல்லது மாற்றம் அடையாமல் அப்படியே சிறுநீரில் வெளியேறும் போது சிறுநீரகம் சேதம் (AKD)அடைய வாய்ப்புண்டு.
படம்-2(அட்டவணை)
மேலே உள்ள அட்டவணையை நோக்கவும் 1.கோடீன் போன்ற அபின் பொருள் கலந்த இருமல் மருந்துகள் பார்மசிகளில் டாக்டர் சீட் இல்லாமலேயே கிடைக்கின்றன.இவை அதிகம் அல்லது அடிக்கடி உபயோகிக்கப்படும் பொழுது இரத்தத்தில் கோடீன் அதிகம் தேங்குகிறது.கோடீன் சிறுநீரகத்தில் வளர்சிதை மாற்றம் அடைந்து மார்பின்,நார்க்கோடீன் மற்றும் கோடீன்-6-பாஸ்பேட் போன்ற வீரிய மிக்க பொருட்களாக சிதைந்து உடம்பில் சிறுநீர் வெளியேறுவதை குறைக்கும்.உடலின் நீர்தேங்கி இரத்த அழுத்தம் உயர்ந்து சிறுநீரகம் பாதிக்கப்படும் இதே போல் ஆண்டிபையாட்டிக்குகள் உதாரணமாக அமினோகிளைக்கோஸைடுகள் உபயோகிக்கும் போது இவை வளர்சிதை மாற்றம் அடையாமல் அப்படியே சிறுநீரகங்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றன.அப்பொழுது நெப்ரான்கள் சேதமடைகின்றன.(பார்க்க படம்-2) கன உலோகங்களான காட்மியம் பாதரசம் போன்றவை அசுத்தங்களாக நம் அன்றாட வாழ்வில் நம் உடம்பிற்குள் போகின்றன.இவை சிறுநீரகத்தின் மீது அதிக ஈர்ப்பு உடையவை.இவை சிறுநீரகத்தை பாதிக்காமல் இருக்க இயற்கையிலேயே சிறுநீரக திசுக்களில் மெட்டாலிதியோனின் என்ற புரதம் இருக்கிறது.இது இந்த கன உலோகங்களை கிரகித்துக்கொள்ளும்.ஆனால் சில நேரங்களில் இந்த கட்டு சிதைந்து உலோகம் ஒழுகி சிறுநீரகத்தை பாதிக்கும்.முக்கியமாக குடிநீர்,உணவுகள் மூலமாக கன உலோக நச்சுக்கள் நம் உடலில் நுழையலாம்.
அறிகுறிகள் :-குறுகிய கால சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் கீழே தரப்பட்டுள்ளன.இவை நீண்ட கால செயலிழப்பிற்கும் பொருந்தும்
1.சிறுநீர் வெளியேறுவது குறைதல்.உடலில் நீர் தேங்கி கணுக்கால் பாதம் கைகள் வீங்குதல்
2.சிறுநீரில் இரத்தம் வருதல்
3.களைப்பு ,சோர்வு
4.தோல் அரிப்பு ,சிதைவு
5.இதய நோய்கள் ,இதயத்தை சுற்றி நீர்கட்டுதல் ,ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள் (Arrhythmias)
6.நுரையீரலில் நீர் தேங்குதல்,மூச்சுத்திணறல்
7.குமட்டல்
8.மனப்பிராந்திகள்
9.வலிப்பு,கோமா
பரிசோதனைகள்
பொதுவாக இரத்தத்தில் கிரியாட்டினின் சிறுநீரக நோய்களை முன்கூட்டியே சரியாக கணிக்க உதவாது
எனவே சிறுநீர் பரிசோதனைகள் குறிப்பாக சிறுநீரில் சிலவகை நுண் புரத மூலக்கூறுகள் தென்படுவதைவைத்து முன்கூட்டியே சிறுநீரக செயலிழப்பை அறிய முடியும்.அந்த புரதங்கள்
1.(Kidney Injury Molecule-1 or KIM-1)
2.N-Acetyl-β-D-glucosaminidase(NAG)
3.Matrix Metallo Proteinase-9(MMP-9)
அடுத்து சிறுநீரில் இந்த புரதங்கள் இருப்பதை உறுதி செய்யும் பட்சத்தில் சிறுநீரகம் பழுதடையப்போவதை முன் கூட்டியே கணிக்கலாம் Continued....