சனி, 30 டிசம்பர், 2017

A VIDEO MYSTERY

ஒரு வீடியோ மர்மம் 

Seyed1951                        
ஜெயலலிதா பற்றிய ஒரு வீடியோவை டிடிவி தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல்  என்பவர் வெளியிட்டார்.வெறும் இருபது வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில் ஆஸ்பத்திகிரியில் இருந்த போது ஜெயலலிதா உயிருடன்தான் இருந்தார்.ஜூஸ்  குடித்தார் என்பது போல் வீடியோ காட்சி இருந்தது 
இந்த வீடியோ வெளியாகி பலரின் விமரிசனத்த்திற்கும் கண்டனங்களுக்கும் காரணமாகியது என்னவோ உண்மைதான்.வெளியிட்டவர்கள் நோக்கங்களில் அதுவும் ஒன்று.இந்தவகையில் அவர்கள் எதிர்பார்த்தது நடந்தாலும் அவர்கள் எதிர்பாராததும் நடந்தது அது ஜெயலலிதாவின் ஆஸ்பத்திரி மரணத்தின் மர்மம் பற்றிய சந்தேகத்தை அந்த வீடியோ மேலும் ஊர்ஜிதப்படுத்துகிற மாதிரி பல விமர்சனங்களும் எழுந்ததுதான்.இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை 
இந்த விமர்சனங்களை நீர்த்துப்போக செய்ய அவர்கள் ஒரு நாடகத்தை இப்போது அரங்கேற்றுகிறார்கள் 
அதாவது இந்த வீடியோவை  வெற்றிவேலின்  கையில் நான் கொடுக்கவில்லை அதை வெளியிடவும் நான் சொல்லவில்லை என்று தினகரன் அடிக்கும் பல்டி நாடகம் நம்பர் ஒன்று 
தன்னை கொலைகாரி என்று தூற்றும் போது கூட சசிகலா அதை வெளியிடவில்லை தினகரன் எப்படி வெளியிடலாம் என்று அதே குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணபிரியா தினகரனுக்கு எதிராக கிளம்பி இருப்பது நாடகம் நம்பர் இரண்டு 
சசிகலா வீடியோ வெளியீட்டில் அதிருப்தியடைய அவரை சமாதானப்படுத்த தினகரன் பெங்களூர் சென்றது நாடகம் நம்பர் மூன்று.இதில் ஆர்கே நகர் தொகுதியில் தினகரனின் அபார வெற்றியினால் சசிகலா மகிழ்ச்சியடைந்ததது எடப்பாடி ஆட்சி கவிழ வேண்டும் என்று சசிகலா மெளன விரதம் இருப்பது எல்லாம் வேறு விஷயம் அதெல்லாம் தான் ஆடவில்லை என்றாலும் சதை ஆடும் என்பார்களே அது மாதிரி.தானியங்கி.Autunomic 
இப்படியெல்லாம் உட்பூசல் நாடகமாடி வீடியோ விலுள்ள பெரும் அபத்தங்களை மறைக்க நினைக்கிறார்கள் 
எனினும் அந்த வீடியோவின் அமைப்பு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது மாதிரி ஒரு கெட்ட நோக்கம் ஒரு விபரீதம் நடக்கவிருப்பதை சொல்லாமல் சொல்கிறது 
ஜெயலலிதாவை பிணமாகத்தான் ஆஸ்பத்திரியில் நாங்கள் அட்மிட் செய்தோம் என்று எங்கள் மீது அநியாயமாக பழி போட்டார்கள் இப்போது பார்த்தீங்களா பார்த்தீங்களா அம்மா ஆஸ்பத்திரியில் உயிரோடு இருந்து ஜூஸ் குடிப்பதை எனவே நாங்கள் அவரை ஒன்றும் செய்யவில்லை அதாவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை 
சரி இப்போது வீடியோவை ஆராய்வோம் 
இந்த வீடியோ அப்போல்லோவில்தான் எடுக்கப்பட்டதா? இது பற்றி அப்போல்லோ நிர்வாகம் கப்சிப் 
எனவே இந்த வீடியோ அப்பல்லோ நிர்வாகத்தின் அனுமதியுடன் எடுக்கப்படவில்லை 
இந்த வீடியோவில் ஜூஸ் குடிக்கும் அம்மா ஒரு ஒப்புக்கு கூட கேமராவுக்கு முகம் திருப்பவில்லை எனவே இது அம்மாவின் கவனத்திலும் எடுக்கப்படவில்லை.
ஒரு எதிர்பாராத தருணத்தில் வெறும் இருபது வினாடிகளில் அவர் ஜூஸ் குடிக்கும்போது ஏதோ  ஒரு கெட்ட காரியம் அரங்கேற்றத்தின் முத்தாய்ப்பாக இது எடுத்து முடிக்கப்பட்டு இருக்கிறது 
இதன் பிறகு வந்த நாட்களில் நடந்தவை என்ன என்ற கேள்வியைத்தான் இந்த வீடியோ அழுத்தமாக எழுப்புகிறது 
ஒரு பேச்சுக்கு இந்த வீடியோ ஜெயலலிதாவின் அந்த 75 நாட்கள் அப்பல்லோ மர்ம வாசத்தில் எதோ ஒரு இருபது வினாடிகளில் எடுக்கப்பட்டதென்றே வைத்துக்கொள்வோம் .இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது 
ஜெயலலிதாவை அட்மிட் செய்யும் போதிலிருந்து அந்த வீடியோவை எடுத்து முடியும்வரை உயிருடன் இருந்தார் இல்லை இல்லை உயிருடன் வைக்கப்பட்டார் என்று மட்டும் தெரிகிறது அதன் பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பது ஒரு கேள்வி 
அடுத்து செப்டெம்பர் 21,2016 வரை நன்றாக இருந்தவர் பொது காரியங்களில் பங்கேற்றவர் திடீரென்று செப்டெம்பர் 22,2016 இரவு வீடியோவில் கண்டமாதிரி  எப்படி நிலைகுலைத்தார் என்பதும் ஒரு கேள்வி 
சொல்லிவைத்த மாதிரி ஜெயலலிதாவின் வீட்டிலும் ஆஸ்பத்திரியிலும் அந்த 75 நாளும் சிசிடிவி கேமராக்கள் வேலைசெய்யவில்லையே ஏன் என்பது அடுத்த கேள்வி 
வெறும் ஏதோ ஒரு இருபது வினாடி வீடியோ எடுத்தவர்கள் உண்மையிலேயே அம்மாவின் மீதும் அவரை தேர்ந்தெடுத்த மக்களின் மீதும் அக்கறை பட்டிருந்தால் அந்த 75 நாட்களும் ஒவ்வொருநாளாக புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுத்து வெளியிட்டு இருக்கலாமே ஏன் செய்யவில்லை என்பது அடுத்த கேள்வி இப்படி பல கேள்விகள் 
எனவே இந்த வீடியோ அவர்களுக்கு எதிராகவே இருக்கிறது 
எட்டு நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்

திங்கள், 18 டிசம்பர், 2017

பய உணர்வும் செரிமானமும்

பய உணர்வும் செரிமானமும் 

நம்முடைய சில உணர்ச்சிகள் உதாரணமாக,பயம்,அதிர்ச்சி,பீதி,போன்ற உணர்வுகள் கூட நம்முடைய ஜீரணமண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.உதாரணமாக இந்த உணர்வுகளின்போது நம் இரத்தத்தில் அட்ரீனலின் சுரப்பு அதிகரிக்கிறது நமது தானியங்கி நரம்புகளின் முனையிலிருந்து ஜீரண மண்டல திசுக்களுக்கு நாரெட்ரீனலின் என்ற பொருள் சுரப்பு அதிகரிக்கும் 
இதன் விளைவு குடல் தசைகள் தளரும் குடலின் அசைவுகள் தளரும் வாயில் அதிக பசை தன்மையுள்ள உமிழ்நீர் சுரக்கும் ஜீரணமண்டலத்தை உட்சுவரில் படர்ந்திருக்கும் ம்யூஸின் என்ற பசை மேலும் கெட்டியாகும் 
இதனால் மலச்சிக்கல் உண்டாகும் உணவு சத்துக்கள் மற்றும் மருந்துகள் சரியாக வயிற்றிலும் குடலிலும் உறிஞ்சப்படாது Seyed1951

செவ்வாய், 12 டிசம்பர், 2017

சில முக்கிய மருத்துவ செய்தி துணுக்குகள்

சில முக்கிய மருத்துவ செய்தி துணுக்குகள் 

1.கேன்சருக்கு warfarin 

இரத்தம் சீராக ஓடுவதற்கும் இரத்தம் அங்கங்கே குழாய்க்குள் அடைத்து கொள்ளாமல் இருப்பதற்கும் பயனாகக்கூடிய WARFARIN இப்போது கேன்சர் செல்களை அழிப்பதற்கும் பயன் ஆகலாம் என்று ஓர் ஆய்வு கூறுகிறது

2.கிரியாட்டினின் 

கிரியாட்டினின் பற்றி ஒரு குறிப்பு.பொதுவாக இது உடலின் நைட்ரோஜன் கழிவுகளில் ஒன்றாகும் கிரியாட்டின் என்ற அமினோஅமிலம் உடலினால் பயன்படுத்தப்பட்ட பிறகு கிரியாட்டினின் என்ற கழிவாக மாறி சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படும் சிறுநீரகத்தின் வேலைத்திறன் கிரியாட்டினின் வெளியேற்றத்திலிருந்து கணிக்கமுடியும் இதற்கு கிரியாட்டினின் கிளியரன்ஸ் என்பர்,இரத்தத்தில் பொதுவாக கிரியாட்டினின் அளவு 1.2 வரை இருக்கலாம் 
ஆனால் இப்போது ஒரு புதிய ஆய்வு கூறுகிறத்து.இரத்தத்தின் கிரியாட்டினின் அளவு அசாதாரண சூழலில் குறைவாக காணப்பட்டால் அதற்கு  வேறு சில பிரச்சினைகள் காரணமாக இருக்கலாமாம் 
உதாரணமாக ஈரல் கோளாறு,தசை பலவீனம் மற்றும் எடை குறைவு காரணமாக இருக்கலாம்.

3.இனிப்பு  பானம் 

வாரத்தில் இரண்டு இனிப்பு பானங்கள் அருந்தினால் போதும் அது உங்கள் இரத்தத்தில் அளவுக்கு மீறி சர்க்கரையை உயர்த்த காரணமாகிவிடும் 

4.டீன் ஏஜ் தாய்மை 

தி ஜர்னல் ஆப் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.அதாவது இளம் வயதிலேயே (teen age )தாய்மை அடைவது இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவார்களாம் 

5.தோல் அரிப்பும் நீரிழிவு நோயும் 

எல்லா தோல் அரிப்புகளும் நீரிழிவின் காரணிகள் இல்லை எனினும் நிச்சயமாக நீரிழிவு நோய் கடுமையான தோல் அரிப்பை உண்டாக்கும் 
காரணம் உயந்த சர்க்கரை அளவு தோல் நரம்புகளை பாதிப்பு அடைய செய்யும் இப்படி செய்யும் போது தோல் அரிப்பு பொருட்களான cytokines அதிக அளவில் சுரந்து தோல் சிவத்தல் மற்றும் அரிப்பு ஆகியவற்றை உண்டாக்கும் 

6.ஆன்டிபயாட்டிக் கேடுகள் 

ஒரு சமீத்திய ஆய்வின்படி ஆண்டிபையாட்டிக்குகள் அதிகமாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறுகிறது.இதனால் கோலிஸ்டின் போன்ற சக்திமிக்க ஆண்டிபையாட்டிக்குகள் கூட வலுவிழந்துவிட்டதாக கூறுகிறார்கள் 

7.சோயா பீன்ஸும் புராஸ்டேட் கேன்சரும் 

ஒரு சமீபத்திய ஆய்வின்படி அதிக அளவு சோயாபீன்ஸ் பயன்படுத்துவதால் புராஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்புகள் அதிகம்.காரணம் அதில் இருக்கும் ஐசோ பிளேவோன்ஸ் என்ற பொருட்கள்தான் காரணம்

8.வேக நடை 

அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வின் படி முதிய வயதுடைய பெண்களின் ஆயுள் வேகமாக நடத்தல் இன்னும் ஓரளவு கடினமான உடற்பயிற்சிகள் மூலம் அதிகரிக்குமாம் 

9.இரத்த ஓட்டமும் ஞாபக சக்தியும் 

வயது முதிர்ந்த நிலையில் இரத்த ஓட்டம் மூளைக்கு செல்வது மெதுவாக்குவதால் ஞாபக சக்தியும் குறைவதாக டென்னஸியிலுள்ள நாஷ்வில் நகரின் வாண்டபில்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது 

10.தூக்கமின்மை 

டஸ்கலுசா நகரின் அலபாமா யூனிவர்சிட்டி மனோதத்துவ புரஃபஸர் கூறுகிறார் தூக்கமின்மையை விட அதுபற்றிய எண்ணம் மிக மோசமாக உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறதாம்

 


வெள்ளி, 17 நவம்பர், 2017

ஆல்கஹால் சில உண்மைகள்

ஆல்கஹால்-சில முக்கிய குறிப்புகள்

ஆல்கஹால் என்றாலே நமக்கு நினைவில் வருவது போதை தரும் பீர் ,பிராந்தி,விஸ்கி,ரம் ,ஜின் என்று மேல்நாட்டு மது வகைகளும் நாட்டு சரக்குகளான சாராயம் கள்ளு இவைகள்தான் ஆம் இவற்றில் இருக்கும் போதை பொருளான ஈதைல் ஆல்கஹால் பற்றி மட்டுமே நாம் இங்கு பார்க்கப்போகிறோம் 
ஆல்கஹாலில் ஆயிரம் வகைகள் இருந்தாலும் பொதுவாக ஈதைல் ஆல்கஹால் மட்டுமே சமூக நிகழ்வுகளிலும் இன்னும் பிற கொண்டாட்டங்களில் புழங்கப்படுகிறது .ஏனென்றால் இது மீத்தைல் ஆல்கஹால் போல் உடனடி விஷம் அல்ல அதோடு இது போதையுடன் சுவையாகவும் இருக்கும் 

மெட்டபாலிசம் 

ஆல்கஹால் அருந்தியவுடன் வயிற்றின் மூலம் 20% அளவு இது இரத்தத்த்தில் உறிஞ்சப்படுகிறது .மீதியில் 80% சிறுகுடல் மூலமாக இரத்தத்தில் உறிஞ்சப்படுகிறது.உடம்பினால் தன்மயமாகாத ஆல்கஹால் உமிழ்நீர் ,சிறுநீர்,மற்றும் வியர்வை மூலம் வெளியேறிவிடும் 
இரத்தத்தில் சேர்ந்த ஆல்கஹால் ஈரலில் தன்மயமாகிறது இந்த ஆக்ஸீகரண  கிரியையில் ஆல்கஹால் அசிடால்டிஹைடு என்ற விஷப்பொருளாக மாறி பிறகு உடனடியாக அசிடால்டிஹைடு மேலும் ஆக்ஸீகரணமாகி  ஆபத்தில்லாத அசிட்டிக் அமிலமாகி பிறகு அசிடேட் உப்புக்களாக சிறு நீரில் வெளியேறிவிடும்
பொதுவாக ஈரல் ஒரு அவுன்ஸ் ஆல்கஹாலை ஒரு மணி நேரத்தில் ஆக்ஸீகரணம் செய்துவிடும் 
ஆல்கஹாலின் போதை அது இரத்தத்தில் இருக்கும் போதும் திசுக்களில் சேரும் போதும் வெளிப்பட்டு விடும் 
ஆல்கஹால் அளவுக்கு அதிகமாக அதாவது  ஒருமணிநேரத்திற்குள் பத்து அவுன்ஸ் ஆல்கஹாலை ஒருவர் மொடாக்குடியாக குடிக்கும் பட்சத்தில் ஈரலின் ஆக்ஸிகரணிக்கும் தன்மை ஒழுங்கரு\ற்று தாறுமாறாக போய்விடும் இதனால் ஆல்கஹால் சரியாக ஈரலில் ஆக்சீகரணம் அடையாமல் உடலில் பல இடங்களில் தேங்கத்தொடங்கும் 
ஆல்கஹாலின் இரத்த அளவீடு BAC எனப்படும் அதாவது BLOOD ALCOHOLIC CONCENTRATION .
ஒருவரின் BAC அளவுக்கு மீறினால் கீழ்கண்ட தீமைகள் ஏற்படும் 
1.தள்ளாட்டம் 
2.நினைவு மாறாட்டம் 
3.உளறல் 
4.குழம்பிய மனநிலை 
5.கவனக்குறைவு 
6.மூச்சு திணறல் 
7.குமட்டல்,வாந்தி 
8.நிலையற்ற தளர்வு 
9.எரிச்சல் 

ஆல்கஹால் ஆக்ஸீகரணத்தில் தாக்கம் உண்டாக்கும் காரணிகள்

வயது 
முதுமை வயதில் ஆல்கஹாலை ஈரல் ஆக்ஸீகரணிக்கும் தன்மை குறையும் இதனால் ஆல்கஹால் ஈரலில் அதிகம் தேங்கும் 
இதற்கு காரணங்கள்  முதிய வயதில் இரத்த ஓட்டம் மெதுவாக இருப்பதாலும் முதியவர்கள் அதிகம் மருந்துகள் எடுத்து கொள்வதாலும்  இருக்கலாம் 
இதனால் உடலில் அதிக ஆல்கஹால் தேங்கும் வாய்ப்பு ஏற்படும் 

பாலினம் 

ஆண்களை விட பெண்களின் உடலில் ஆல்கஹால் அதிகம் தேங்கும் வாய்ப்பு உள்ளது இதன் காரணம் பெண்களின் உடலில் அதிக கொழுப்பு சத்து உள்ளது.இது எல்லா பெண்களுக்கும் பொருந்தாது என்றாலும் பெரும்பாலும் பெண்களின் உடம்பில் அதிகம் கொழுப்பு சத்து உள்ளது இது பெரும்பாலும் அவர்களிடம் அதிகம் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற பெண்மை ஹார்மோனினாலும் இருக்கலாம் 

உணவு   

ஆல்கஹால் வயிற்றின் மூலமாகவும் உறிஞ்சப்படுவதால் வெறும் வயிற்றைவிட உணவு நிறைந்த நிலையில் வயிறு அதனை உறிஞ்சுவதில் தாமதம் அல்லது குறைவு ஏற்படலாம் 

இனம்   

சில கிழக்கு ஆசிய இனங்களில் ஆல்கஹாலை ஆக்ஸீகாரணிக்க வைக்கும் ஹார்மோன்கள் குறைபாடு இருக்கலாம் இதனால் இவர்களுக்கு முகம் வீங்குதல்,குமட்டல்,சோர்வு தலைவலி உயர் இதய துடிப்பு போன்ற கோளாறுகள் ஏற்படலாம் 

பாரம்பரியம் 

ஜீன்களும் சூழ்நிலையும் சிலருக்கு பார்ப்பரியமாகவே ஆல்கஹாலை ஆக்ஸீகணிக்கும் தன்மையில் மாற்றங்கள் ஏற்படலாம் 

உடல் பருமன் 

பருமனான உடலுடையவர்களை விட மெலிந்த உடலுடையவர்கள் ஆல்கஹாலினால் அதிகம் தாக்கப்படுவர் 

ஆல்கஹால் ஆக்ஸீகரணத்தில் தாக்கம் உண்டாக்கும் மருந்துகள்      

1.தூக்க மருந்துகள் --diazepam 
2.மன உளைச்சல் மருத்துகள் --Amitriptyline 
3.ஆண்டிபையாட்டிக்குகள் 
4.அலர்ஜி மருந்துகள் 
5.நீரிழிவு நோய் நிவாரணிகள் 

ஆல்கஹால் உடலில் தங்கும் இடங்களும் நேரங்களும் 

1.இரத்தம் 

இரத்தத்தில் BAC யின் அளவைக்கொண்டு ஆல்கஹால் தங்கும் நேரத்தை அளவிடலாம் 
பொதுவாக இரத்தம் ஆல்கஹாலை ஒரு மணிக்கூறில் 0.015 மில்லி கிராம்  வெளியேற்றுகிறது இதனால் ஒருமனிதரின் இரத்தத்தில் BAC  0.08 மில்லி கிராம்  இருக்கும் பட்சத்தில் அதை வெளியேற்ற இரத்தம் ஆறு மணி நேரம் எடுத்து கொள்ளும்

2.சிறு நீர் 

சில ஆய்வுகளின் படி ஆல்கஹால் சிறு நீரில் 3 முதல் நான்கு நாட்கள் வரை இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது 

3.மயிர்

ஆல்கஹால் கடைசியாக அருந்தியத்திலிருந்து சுமார் மூன்று மாதங்கள் வரை முடியில் அது இருக்கும் என்று சரியான ஹேர் டெஸ்டுகள் மூலம் தெரிய வருகின்றது 

4.மூச்சு 

கடைசி பெக் மது அருந்தியத்திலிருந்து 24 மணி நேரம் வரை ஆல்கஹால் நம் மூச்சு காற்றில் இருக்கும் என்று அடிக்கொருமுறை எடுக்கும் Breathing Tests மூலம் அறியலாம் 

5.முலை பால் 

மது அருந்தியவுடன் ஆல்கஹால் எத்தனை மணி நேரம் இரத்தத்தில் இருக்கிறதோ அவ்வளவு நேரம் அது குழந்தை அருந்தும் முலை பாலிலும் இருக்கும்.இங்கு ஒன்றை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும் இரத்தம் ஆல்கஹாலை முழுவதும் வெளியேற்றிய உடன் முலை பாலிலிருந்தும்  அது வெளியேறிவிடும் . இது அனிச்சை செயல் என்பதால் தன்னிச்சையாக முலை பாலை வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை

உமிழ் நீர் 

கடைசி டோஸ் மது அருந்தியத்திலிருந்து 24 மணி நேரம் உமிழ் நீரில் சிறுக சிறுக ஆல்கஹால் தென்படும் 

நாட்பட்ட பெரும் குடியால் வரும் தீமைகள் 

1.வாய் புற்று 
2.தொண்டை புற்று 
3.முலை புற்று 
4.ஸ்ட்ரோக் 
5.இருதய கோளாறுகள் 
6.மூளை மற்றும் நரம்பு மண்டல கோளாறுகள் 
7.விபத்துகள் 
சுருக்கமாக 
1.ஆல்கஹால் வயிற்றிலிருந்து இரத்தத்திற்குள் உறிஞ்சப்படுகிறது எனவே காலி வயிற்றில் மது அருந்துவது கூடாது 
2.ஆல்கஹால் பெரும்பாலும் ஈரலில்தான் செரிமானம் அடைகிறது ஒரு மணிநேரத்தில் ஈரலால் 30 மில்லி வரை ஆல்கஹாலை எரிக்க முடியும் ஈரல் பாதிப்பு உள்ளவர்கள் கவனம் பகுதி எரிக்க பட்ட நிலையில் ஆல்கஹால் கொடிய விஷமான அசிட்டாலடிஹைடு  ஆக மாறிவிடும் இது உடனே மேலும் எரிக்கப்பட்டு ஆபத்தில்லாத அசிடேட் உப்புக்களாக மாற வில்லை என்றால் பெரும் தீங்கு ஏற்படும் 
3.மதுவின் போதை ஆல்கஹால் இரத்தத்திலும் திசுக்களில் இருக்கும் வரை நீடிக்கும் 
4.மது குடித்ததும் ஆல்கஹால் இரத்தம் வியர்வை,மூச்சு,சிறுநீர் முலைப்பால் இவற்றில் சேர்நது விடும்
    
       
 
  

வியாழன், 7 செப்டம்பர், 2017

 நீலத்திமிங்கலமும் வெள்ளை சுறாவும் 


நீலத்திமிங்கல விளையாட்டு பல சிறுவர்களை வாலிபர்களை  தற்கொலை செய்ய  தூண்டி சாகடித்த ஒரு விபரீத விளையாட்டு.பெரும்பாலும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளையே இது குறி வைக்கிறது.இதை விளையாட்டு என்பதை  விட இதை ஒரு கொலை பொறி என்றே சொல்லலாம்
இன்றைக்கு சமூக ஊடகங்களில் இது  பற்றிய செய்திகள் வராத நாளே கிடையாது 
இந்திய அரசு இதை தடை பண்ணி இருக்கிறது அதாவது ஏட்டளவில் ஏனென்றால் ஆன் லைன் விளையாட்டான இதை அவ்வளவு எளிதாக வலைதளத்தில் தடை பண்ண முடியவில்லை.
மற்ற வீடியோ கேம்களை போல் இது பதிவிறக்கம் செய்யப்படக்கூடிய செயலியாக இல்லை மாறாக இது ஆன் லைனில் வரக்கூடியதாக வித்தியாச வித்தியாசமான லிங்குகளையும் கொண்டிருப்பதால் இதை வலைத்தளத்திலிருந்து நீக்க முடியவில்லை 
ஆனால் இந்த பொறியில் அகப்படாமல் இருக்க வேண்டுமானால் வலைத்தளம் உபயோகிப்பவர்கள் அடிக்கடி வாட்ஸ் ஆப் ,முகநூல் ட்வீட்டர் மெஸ்ஸெஞ்சர்  ஈ மெயில் என்று மூழ்கிக்கிடப்பவர்கள் இந்த சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு அனுப்பப்படும் எந்த ஒரு அனாமதேய லிங்கையும் க்ளிக் செய்யவேண்டாம்  உடனே போலீசுக்கு தெரியப்படுத்துங்கள் பிறகு அதை டெலிட் செய்து விடுங்கள் 
இந்த கோர மரண தூண்டில் 50 நாள் சவால்களை கொண்டது 
ஒருநாளைக்கு ஒரு சவால்.விளையாட்டை துவங்குமுன் உங்கள் போட்டோ உட்பட உங்கள் முழு பயோடேட்டாவையும் கேட்டு பதிந்து கொள்வார்கள்
முதல் நான்கு நாட்கள் உங்களை பொறியில் சிக்க வைக்க மிக சுவாரஸ்யமான அட்வென்ச்சர் டாஸ்குகளை கொடுப்பார்கள் ஒவ்வொருநாளும் விளையாட்டின் நேரம் இரவு ஒரு மணிக்கு மேல்தான் 
நள்ளிரவுக்கு மேல் ஆன்லைனில் பேய் படங்கள் பார்க்க சொல்வார்கள் 
உயரமான இடத்தில் இருந்து த்ரில்லாக செல்பி எடுத்து அனுப்பச்சொல்வார்கள் 
இப்படி ஆரம்பித்து ஐந்தாவது நாள் விபரீதத்தின் துவக்கத்திற்கு வருவார்கள் 
உங்கள்  உடம்பில் ஏதோ ஒரு பகுதியை கத்தியால் கீறி அதை போட்டோ எடுத்து அனுப்பச்சொல்வார்கள் 
மேலும் உங்கள் கைகளில் கத்தியால் கீறி திமிங்கலத்தின் படத்தை வரைந்து படமெடுத்து அனுப்பச்சொல்வார்கள் 
இந்த விபரீத நிலைக்கு பிறகும் நீங்கள் இந்த விளையாட்டை தொடர்வீர்களானால் நீங்கள் ஒரு முட்டாள் தானே 
எனவே அவர்கள் ஐதீகப்படி நீங்கள் இந்த உலகத்திற்கு தேவையற்றவர் 
சாகடிக்கப்பட வேண்டியவர் 
எனவே படியாக உங்களை மூளை சலவை செய்து சாவதற்கு பண்படுத்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க்குகளாக கொடுத்து ஐம்பதாவது நாள் நீங்களே மீளமுடியாத அளவு தற்கொலை வெறி உச்சமடைய உங்களை சாகும்படி ஒரு கடைசி டாஸ்க் அனுப்ப  நீங்களும் செத்துவிடுவீர்கள் 
இதுதான் விளையாட்டு
இப்போது கதைக்கு வருவோம்
அதிசயமாக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த விபரீதத்திற்கு எதிராக தாமாகவே முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்து இந்த விபரீதத்தை விளையாடுவது குற்றம் என்றும் இதுபற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் இதை தடை செய்ய வேண்டும் என்றும் காவல்துறையை பொறுப்பு சாட்டி தீர்ப்பளித்திருக்கிறார்கள் வரவேற்போம்.
அவர்கள் கூறியுள்ள காரணம் ஒருவரது மரணத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணங்களை ஏற்படுத்துவது கொலைக்கு சமம்.அது குற்றமாகும் என்பதுதான்.முற்றிலும் சரி
அப்படியானால் 2016 நவம்பர்மாதம் 8 ஆம் நாள் ஒரே இரவில் திடீரென்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வெறும் ஆறுமணி நேர அவகாசத்திற்குள் பெரும் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்பு நோட்டுகளை ரிசர்வ் பாங்க் மூலமாகக்கூட இல்லாமல் நிதியமைச்சர் வாய் மொழியாகவும் இல்லாமல் நான் பிரதமர் என்ற இறுமாப்பில் தான்தோன்றித்தனமாக செல்லாது என்று அறிவித்து விட்டு மறுநாள் சுகமாக ஜப்பான் பறந்து போனாரே அந்த விளையாட்டில் எத்தனையோ பேர் மாண்டார்களே அப்படியும் தான் செய்தது சரிதான் என்றும் மக்கள் மாண்டது சொற்ப இழப்புதான் அதைவிட பெரிய நன்மை நமக்கு கிடைத்திருக்கிறது என்று சால்ஜாப்பு காட்டுகிறார்களே  இது நீலத்திமிங்கலத்தைவிட கொடுமை இல்லையா ?
நீதிபதிகளே இவரை என்ன செய்யப்போகிறீர்கள் ?
நீலத்திமிங்கலத்தை தடை செய்யலாம் ஆனால் கூட இருந்தே குழிபறிக்கும் இந்த சுறாமீன் விளையாட்டை தடை செய்வீர்களா ?
இந்த சுறாமீன் இப்போது நீட் தேர்வு என்ற பெயரில் மாணவி அனிதாவை போல் இன்னும் எத்தனை இளம் உயிர்களை காவு கொள்ள வேண்டும்?
காவிரியில் இனி தண்ணீர் வராது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் விவசாயிகள் எப்படி போராடினாலும் தமிழ்நாட்டு விவசாயிகளை நான் பார்க்க வரமாட்டேன் என்று மத்தியில் பிரதமரும் மாநில முதல்வரும் பாராமுகமாக இருந்து அவர்களை தற்கொலைக்கு தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும் இந்த வெள்ளை சுறாமீன் விளையாட்டை நீதிமன்றமே உனக்கு சுரணை இருந்தால் தாமாகவே முன்வந்து தட்டி கேட்க வரமாட்டீர்களா?
நெடுவாசலில் மீத்தேன் திட்டம் விவசாய பூமியில் எண்ணெய்  கிணறுகள் தோண்டும் திட்டம் என்று தமிழ்நாட்டையே ஆளும் வர்க்கம் நரகமாக்க விளையாடும் திட்டம் நீலத்திமிங்கலத்தைவிட கொடியது.
ஏ நீதிமன்றங்களே வாருங்கள் தாமாக முன்வந்து கேஸ் ஆடி எங்களை இந்த வெள்ளை சுறாக்களிடம் இருந்து காப்பாற்றுங்கள்
ஆனால் வர மாட்டீர்கள் கரணம் பொருள் ஆசை பதவி ஆசை
உங்களுக்கு நட்டமில்லாத காரியங்களில் தாமாகவே முன்வந்து கேஸ் ஆடி பெருமை பேசுவீர்கள்
மேலிடத்து சம்பந்தமான காரியங்கள் என்றால் முகம் பார்த்து தீர்ப்பு சொல்வீர்கள்
இல்லை கேஸை கிடப்பில் போட்டு இழுத்தடிப்பீர்கள்
ஆமாம் நீலத்திமிங்கலம் உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது
ஆனால் வெள்ளை சுறா மேலிடத்து சம்பந்தம் கொண்டது
புரிந்து கொள்ளுங்கள் மக்களே

திங்கள், 4 செப்டம்பர், 2017

மக்களே சிந்தியுங்கள் 


தமிழ்நாட்டின்எதிர்காலம்கேள்விக்குறியாகிவிட்டது.அதன்வளங்கள்கொள்ளையடிக்கப்படுகின்றன
ஆட்சியாளர்களும் அரசியல் வாதிகளும் மாநில அக்கறைஇல்லை.சுயநலஅரசியலேநடத்துகிறார்கள்.
தமிழக விவசாயிகளும் டெல்லியில் போய் போராட்டம் என்ற பெயரில் நாளுக்கொரு தெருக்கூத்துகள் நடத்தி தங்களையும் மாநிலத்தையும் அசிங்கப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்
 போராட்டம் என்றால்  கருநாடக விவசாயிகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் போதெல்லாம் போராடுகிறார்களே அதுமாதிரி இருக்கவேண்டும் அந்த  உறுதியும் வலிமையையும் நம் விவசாயிகளிடம்  இல்லையா?
அவர்கள் அநியாயத்திற்கு துணை போகிறார்கள் அடுத்தவர் உரிமையை பறிக்க  அவர்கள் காட்டும்   தீவிரம் உரிமைக்காக  போராடுபவரிடம் இல்லையென்றால்  எதை அவர் சாதிப்பார்
நம் விவசாயிகள் டெல்லியில் நடத்தும் தெருக்கூத்து  உண்மையில் அவர்களது பலவீனத்தையும் தன்னம்பிக்கை இல்லாமையையும் தான் வெளிப்படுத்துகிறது இதனால் நமக்கு  காவிரி பிரச்சினையில் மேலும் பின்னடைவுதான் ஏற்படும் எதிர்பார்த்த பலன் கிட்டாது
இவர்கள் டெல்லியில் போடும் கூத்து   அங்குள்ளவர்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்காகத்தான் இருக்கிறது வெட்க  கேடு
இப்போது தமிழக  அரசியலிலும் யார் எப்படி ஆட்சியை பிடிப்பது அல்லது தக்கவைத்துக்கொள்வது என்ற  சூதாடிக்கொண்டு இருக்கிறார்களே தவிர மாநில நலனிலோ மக்கள் நலனிலோ அக்கறை கொள்பவர்களாக இல்லை
இ பி எஸ் ஸும்  ஓபிஎஸ் ஸும் இணையும் போது சசிகலா குடும்பத்தை அரசியலை விட்டே ஒதுக்க வேண்டும் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று நிபந்தனை  போட்ட ஓபிஎஸ் ஆட்சியில் பங்கும் பதவியும்   கிடைத்த பின் அமைதியாகி விட்டார்  தினகரன் (சசிகலா )குரூப்பையும் வளைத்துப்போட குரல்கள் அங்கிருந்தே  வலுக்கின்றன.இப்போது மத்திய அரசின் வியூகத்துடன் தினகரனுடன் சுமூக பேச்சுவார்த்தை துவங்கிவிட்டது அதுவும் கூடிய விரைவில் ஒன்றாகி அதிமுக வலுப்பெற்று விடும் எப்படியாவது திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதுதான் மத்திய அரசு மற்றும் இப்போதைய தமிழக ஆட்சியாளர்களின் நோக்கம் அது நிறைவேறிவிட்டால் மக்களை கை பொம்மைகளாக்கி காசு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் .மற்றபடி ஓபிஎஸ்ஸுக்கோ இ பிஎஸ்ஸுக்கோ மத்திய அரசுக்கோ மாநில நலனில் அக்கறை கிடையாது ஒருவேளை  திமுக வந்தாலும் இதே சமர்த்துதான் காட்டுவார்கள்
 மக்களுக்கு அடுத்து  எந்த  நல்ல ஆட்சியையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது
மக்கள் சிந்தித்தாலன்றி இந்த மாநிலம் உருப்படாது
இப்போது நமக்குள்ள ஒரே வாய்ப்பு இப்படித்தான்
திமுக அதிமுக என்று நமக்கு சலித்து விட்டது மாற்றம் வேண்டும் நிச்சயமாக அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்றியே ஆக வேண்டும்
தேசீய நீரோட்டத்தில் நாம் முழுக்கவோ அல்லது ஓரளவோ இணைய வேண்டும் கம்யூனிஸ்டுகளுக்கு வாய்ப்புத்தரும் அளவுக்கு தமிழர்களின் மூளை பக்குவப்படவில்லை
திமுகவிடம் முழுமையாக கஜானா சாவியை கொடுக்க முடியாது
எனவே திமுக காங்கிரஸ் சம பலமாக உள்ள ஒரு கூட்டாட்சியை தமிழகத்திற்கு தரலாம் அதுதான் சிறந்தது
மக்களே சிந்தியுங்கள்


வியாழன், 27 ஏப்ரல், 2017

விவசாயத்தின் வீழ்ச்சி

நாசமாகிப்போகும் தமிழகம் 

 

  தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டம் 41  நாளில் தொய்ந்து மடிந்து வாபஸ் ஆனது.-செய்தி 
எண்ணி துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவோம் என்பது இழுக்கு
இது வள்ளுவர் வாக்கு.இதை தமிழக விவசாயிகள் மறந்து ஏனோ .டெல்லி வரை சென்று போராட வேண்டியது இருக்கிறதென்றால் அதற்கான சரியான முஸ்தீப்புடன் நீங்கள் செல்ல வில்லை. அள்ளி தெளித்த கோலத்தில்  போராட்டம் என்ற பெயரில் 41 நாட்கள் கூத்து நடத்திவிட்டு ஒரு மாநில முதல்வர் என்ற போர்வையில் பிஜேபியின் பினாமியாக செயல் படும் எடப்பாடி பழனி கொடுத்த குளிர் பணத்தில் மயங்கி போராட்டத்தை வாபஸ் வாங்கி உங்களுக்காக அனுதாபப்பட்ட குரல் கொடுத்த அனைவரின் முகத்திலும் காறித்துப்பி விட்டு வந்து விட்டீர்கள் இங்கே வந்து தமிழக நீர் வளங்களை நாசம் செய்ய தூபம் போட்ட திமுகவின் வலையில் வீழ்ந்து இருக்கிறீர்கள்
உங்கள் இயலாமை புரிகிறது ஆனால் கண் மூடித்தனமாக நீங்கள் செய்யும் இந்த காரியங்களால் மாநிலம் மரியாதை இழந்து நிற்கிறது வளம் பசுமை அத்தனையும் விட்ட மீனும் போய்  பெட்டி மீனும் பறி போன கதை ஆகப்போகிறது
இனி என்ன?தமிழ்நாட்டின் போராட்டங்களுக்கு எதற்கும் இனி மதிப்பு இருக்காது
ஒரு காலத்தில் அறுபதுகளில் தோன்றிய திமுக தமிழக மக்களின் மீது மொழிப்போராட்டம் என்றோரு தேவையற்ற அர்த்தமற்ற போராட்டத்தை திணித்து அவர்களது சக்தியை வீணடித்தது  தமிழரல்லாத கருணாநிதி ஆட்சியை கைப்பற்றினார்.தமிழகத்தின் காவிரி உரிமையை சிதைத்தார்.கருநாடகத்தை சட்ட விரோதமாக மூன்று அணைகளையும் கட்டவிட்டுவிட்டு கட்டி முடியும் வரை காத்திருந்து பிறகு டிரிபியூனல் வேண்டும் என்று  கோர்ட்டில் வழக்கிட்டார்.இதற்கு தமிழக மாடுகள் அவருக்கு கொடுத்த பெயர் சாணக்கியன்.இப்படி அயோக்கியத்தனத்திற்கு பட்டம் கொடுத்து கெளரவிக்கும் தமிழனுக்கு  புத்தியில் அடுத்து வந்த எம்ஜியார் முல்லைப்பெரியாரில் கேரளாவுக்கு சாதகமாக அதன் அளவை குறைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்.தெலுங்கரான கருணாநிதியின் ஆட்சியிலிருந்தே ஆந்திரா பாலாற்றில் பல அணைகளை கட்டிக்கொண்டது
இதெல்லாம் பழைய கதை என்றாலும் சட்ட பூர்வமாக அவற்றை சந்திக்கும் சில வாய்ப்புகள் நமக்கு இருந்தது
ஆனால் இன்று இந்த விவசாயிகள் டெல்லியில் ஆடி முடித்த கூத்துக்களால் இனி கோர்ட்டு கூட நமக்கு முக்கியத்துவம் தருமா என்ற பயம் ஏற்படுகிறத்து
இவர்கள் டெல்லி போராட்டத்தை இப்படி நிர்கதியாக விட்டு வந்ததால் தொடர்ந்து இனி நெடுவாசல் போராட்டமும் நிர்கதியாகிவிடுமே.
பிறகு முல்லை பெரியார் பவானி என்று ஒவ்வொன்றாக நிர்கதியாகி போகும்
நல்ல வேளை ஜெயிலுக்கு சென்ற சசிகலா நாலு வருடங்களில் திரும்பி வரும்போது மொத்த தமிழகமும் ரியல் எஸ்டேட் களம்  ஆகி இருக்கும் பிறகென்ன மக்கள் மண்ணாங்கட்டிகளான பிறகு மாநிலத்தை கூறு போட கசக்குமா என்ன?
விவசாயம் என்பது ஒரு கண்ணியமான தொழில் அதற்காக  போராடிய நீங்கள் உங்களுக்காக உங்களுடன் போராட வந்த அந்த வாட நாட்டு விவசாயிகளையாவது மதித்து இருக்க வேண்டாமா?அவர்கள் எதிரிலேயே கோவணத்தை அவிழ்த்து போட்டு நிர்வாண கூத்து ஆடினீர்களே யார் இதற்க்கு பின்னணி.வெட்கமாக இல்லையா.
சரி 41 ஆவது நாள் எடப்பாடி  சாமி வந்து பேசினார் என்பதற்காக போராட்டத்தை வாபஸ் வாங்கினீர்களே அந்த அளவுக்கு அவர் நம்பத்தகுந்தவரா?அதற்க்கு ஆரம்பத்திலேயே பொன்  ராதா கிருஷ்ணனை நம்பி இருக்கலாமே குறைந்த பட்சம் ஆரோக்கியமும் செலவழித்த சக்தியும் மிஞ்சி இருக்குமே.பொன்  ராதாவுக்கும் எடப்பாடிக்கும் உள்ள வித்தியாசம் ஒருவர் பிஜேபி மற்றவர் பிஜேபியின் பினாமி
பூசாரியிடம் அடைக்கலம் கேட்ட செம்மறியாடுகள்தான் நீங்கள்.
இப்போது எல்லாம் போச்சு அதோடு மானமும் போய்  விட்டது இனி ஜென்மத்திற்கு உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாது
காவிரி முலை பெரியார் என்று ஒவ்வொன்றும் பறி போகப்போகிறது
அதிமுக மட்டுமல்ல தமிழகத்தின் அத்தனை அரசியல் வாதிகளும் துரோகிகள்
எடப்பாடியுடன் நீங்கள் பேசி இருக்கவே கூடாது அவரை விரட்டி இருக்கவேண்டும்
பார்லிமெண்டுக்குள் நுழைந்து மோடியின் சட்டையை பிடித்திருக்க வேண்டும்
கலகம் வந்தால்தான் நியாயம் பிறக்கும்



ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

விவசாயிகள் போராட்டம் -ஒரு பார்வை 

தமிழகம் கடும் வறட்சியில் இருப்பது இது முதல் முறை அல்ல.தொடர் கதைதான்.ஒவ்வொரு முறையும் பருவ மழை ஏமாற்றுவதும்,சரியான நீர் மேலாண்மையும் இல்லாமல் நாம் தண்ணீருக்காக திண்டாடுவது பழம் கதைதான் என்றாலும் இப்போது அது புது உத்வேகம் அடைந்து இருக்கிறது.தாமதம்தான் என்றாலும் வேறு வழியில்லை பரவாயில்லை என்பதற்கு.
இபோது டெல்லி வரை சென்று மத்திய அரசின் கவனத்தை  ஈர்க்க தமிழக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ,நிவாரண தொகைகள் வழங்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகள்இவர்களுக்கு உணவு தங்கும் வசதிகளை டெல்லி தமிழர்கள் ஏற்படுத்தி கொடுக்கின்றனர் என்னும்போது இறைவா அந்த தமிழர்களை நீ மேன்மேலும் வளப்படுத்துவாயாக என்று பிரார்த்திக்க வேண்டும் போல் இருக்கிறது.
அதோடு வட நாட்டு  விவசாயிகளும் நம் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கெடுத்தனர் என்ற செய்தி செந்தமிழ் நாடெனும்  வெற்று குறுகிய ஓசையை விட அதிக தேனமுதத்தை நம் காதில் வாரி இறைத்தது.
ஆம் என்ன செந்தமிழ் நாடு.என்ன திராவிட நாடு இப்படியெல்லாம் வார்த்தை ஜாலங்கள் பேசி கவிதை பாடி தமிழனை மதி மயங்க வைத்தது போதும்.ஒரு திராவிடம் தன்  சகோதர திராவிடனுக்கு தண்ணீர் தர மறுக்கும் போது எங்கோ உள்ள ஒரு டெல்லி விவசாயி தமிழ் பேசும் விவசாயியை மொழி பேதம் பாராமல் இன துவேஷம் பாராட்டாமல் விவசாயி என்ற ரீதியில் தன இனமாகவும் தன சகோதரனாகவும் கருதி கூட அமர்ந்து தானும் போராட்டாத்தில் குதித்தான் இது தான் உண்மையான இனப்பற்று மனித இன பற்று.ஆண்டவனின் படைப்பில் அனைவரும் சமம் என்ற உணர்வு
அதை விட்டு விட்டு அந்த கால சில அறிவு ஜீவிகள் அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழத்தில் டாக்டர் பட்டம் பெற்ற மமதையில்,இங்கே வந்து திராவிடம் பேசி வடக்கு தெற்கு என்று பேதம் காட்டி தமிழகத்தை தேசிய  நீரோட்டத்தில் இருந்து பிரித்து  தானும் கெட்டு தமிழனையும் கெடுத்து தமிழ்நாட்டையும் களிமண் கூழாக ஆக்கி விட்டு அர்த்தமற்ற புகழை பெற்றுக்கொண்டு போய்  சேர்ந்தார்கள்.
இனி அது பற்றி நினைக்க நேரமில்லை.இனி புது உத்வேகம் எடுப்போம் மாநிலத்தை காப்பாற்றுவோம் விவசாயம்தான் மாநிலத்தின் முதுகெலும்பு.விவசாயம் அழிந்தால் தமிழகம் அழியும்
விவசாயிகள் டெல்லியில் நடத்தும் போராட்டத்தின் உறுதிதான் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க போகிறது இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால் இனி எப்போதும் தலை எடுக்க முடியாது உங்கள் போராட்டத்தை நீர்த்துப்போக்க தமிழக துரோகிகளும் மத்திய அரசும் முயற்சிக்கும்
முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்
அர்த்த மற்ற போராட்டங்களால் தமிழகம் மதிப்பிழந்து  விட்டது.போராடுவதும் பிறகு பொய் வாக்குறுதிகளை நம்பி போராட்டத்தை கை விடுவதும் அர்த்தமற்றது எந்த நோக்கத்திற்காக போராடுகிறோமோ அது கை கூடும் வரை ஏது வந்தாலும் உறுதியுடன் நில்லுங்கள்
விவசாயிகளே நீங்கள் ஒரே குடும்பம் உங்களுக்குள் அரசியல் வரக்கூடாது கட்சி பேதம் கூடாது
இதுவரைக்கும் கட்சி பேதத்துடன் நீங்கள் இருந்ததால்தான் உங்கள் எண்ணம் ஈடேறவில்லை
இப்போது நீங்கள் எடுத்திருக்கும் இந்த உறுதியை அப்போதே 1972 இல் கர்நாடகா அநியாயமாக சட்ட விரோதமாக மூன்று அணைகளை கட்டிய போதே நீங்கள் காட்டியிருந்தால் இன்று  தமிழகத்தின் தலை எழுத்தே மாறியிருக்கும்.
உங்கள் போராட்டம் ஒரு டாட்டா மோட்டார் கம்பெனியை எதிர்த்து அன்று மேற்கு  வங்க விவசாயிகள் காட்டிய உறுதி போன்று இருக்க வேண்டும்
பின் வாங்காதீர்கள்
பொன் ராதாகிருஷ்ணன் போன்ற ஆஷாடபூதிகளை  புறம் தள்ளுங்கள்
கடவுள் துணை புரிவார்
டில்லி தமிழ் நெஞ்சங்களே இந்த அப்பாவிகளுக்கு அவர்கள் போராட்ட நோக்கம் நிறைவேறும் வரை ஊண் உடை உறையுள் தந்து உதவுங்கள்
அவர்கள் தங்களுக்காக மட்டும் அல்ல நம் மாநிலத்தின்  மானத்தையும் வாழ்வாதாரத்தையும் காக்கவே போராடுகிறார்கள்.
எந்த அரசியல் காட்சிகளையும் நுழைய விடாதீர்கள்.சமீபத்திய ஆச்சர்யம் இந்த [போராட்டத்திற்கு ராகுல் காந்தி நேரில் வந்து கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்ததுதான்.ஆனால் அவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுவோம் என்று கூறவில்லை மாறாக மோடிக்கு வெறும் எதிர்ப்பு தெரிவித்தார் அவ்வளவுதான்.
அவரால் மனப்பூர்வமாக  விவசாயிகளின் கோரிக்கைக்கு அங்கீகாரம் தர முடியாது.காரணம் ,
நதிகள் இணைப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர் ராகுல்.
கர்நாடக சட்டவிரோதமாக அணைகளை கட்டவிட்டவர் இந்திராகாந்தி
மாநிலப்பிரிவினையின் போது தமிழகத்த்தின் நீர் ஆதார பகுதிகளை மற்ற  மாநிலங்களுக்கு விட்டு கொடுக்கும்படி காமராஜரை நிர்பந்தித்தவர் நேரு.
தன்னிடமிருந்து ஆட்சி பறிபோன நேரத்தில் காமராஜ் பக்தவச்சலம் உட்பட தமிழக காங்கிரஸ் கட்சி மாநிலத்திலத்தில் தன்னை ஸ்திரப்படுத்தி மீண்டும் ஆட்சியில் அமர முயற்சிப்பதை விட்டுவிட்டு டில்லியுடன் கைகோர்த்துக்கொண்டார்கள்
எனவே விவசாயிகளே அரசியலை உங்கள் போராட்டத்திற்குள் நுழையவிடாதீர்கள் உங்களுக்குள்ளும் அரசியல் பேதம் வேண்டாம்
போராடுங்கள்
வெற்றி நிச்சயம்
வாழ்க தமிழகம்

திங்கள், 27 பிப்ரவரி, 2017

சினிமாவால் வந்த சீரழிவு

அமைதி பூங்காவா?கொலை பூமியா?

எனக்கு தெரிந்த தலைப்புகளை கொடுத்து விட்டேன்.இனி நீங்களே பொருத்தமான தலைப்பாக முடிவு செய்து கொள்ளுங்கள்.
சமீபத்தில் பட்டப்பகலில் நெல்லையில் போலீஸ் வேனை வழி மறித்து போலீசின் கண்களில் மிளகாய் போடி தூவி கைதியை பலவந்தமாக கீழே இறக்கி அதே இடத்தில் வெட்டி சாய்த்திருக்கிறது ஒரு கொலை வெறி பிடித்த கும்பல்.பழி தீர்க்கும் பயங்கர தொடர்கதையின் ஒரு அத்தியாயம்.பழி தீர்த்தல் என்றாலே அது தொடரும்தானே.இன்னும் எத்தனை அத்தியாயங்கள் தொடரப்போகின்றனவோ.
சுவாதி என்ற இளம்பெண் காலைபொழுது உதிக்கும் வேளையில் பலரும் கூடும் ரயில் நிலையத்தில் பலர் முன்னிலையில் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார்.
நந்தினி என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி அவள் வயிற்றில் சிசுவை சுமந்திருக்கும் வேளையில் தன்னை கல்யாணம் பண்ணிகொள் என்று அவள் கோரிய ஒரே குற்றத்திற்காக அவளை கடத்தி கோரமாக கொன்று வயிறில் இருந்த சிசுவையும் பிறப்பு உறுப்பை பிளேடால் அறுத்து கிழித்து வெளியே எடுத்து சிதைத்தான் ஒரு மாபாதகன்.
தொடர்ந்து ஹாசினி என்ற சிறுமியின் கொலை.
இதெல்லாம் ஒரு பெரிய சீரியலின் அன்கொன்றும் இன்கொன்றுமாக பொறுக்கி எடுத்த சம்பவங்கள்.எங்கே நடந்தது என கேட்காதீர்கள்.எல்லாம் நம் அமைதி பூங்காவாம் நம் தமிழகத்தில்தான்.
ஆம் ஒரு காலத்தில் அதாவது அறுபதுகளில் அதற்கு முன்னும் தமிழகம் அமைதி பூங்காவாகத்தான் இருந்தது பத்திரிகைகளை புரட்டினால் அதில் கொலை மற்றும் வன்முறை சம்பவங்கள் காணப்படுவது மிகவும் அரிது.
ஆதித்தனாரின் தினத்தந்தி மற்றும் மலை முரசு பத்திரிகைகள் சிசுக்களாக இருந்த காலம் அது.அவற்றிற்கு நிருபர்கள் என்று யாரும் கிடையாது கேட்டதை காணாமலேயே கவர்ச்சிகரமான தலைப்பில் செய்திகள் போடுவார்கள் அவற்றில் பெரும்பாலும் வதந்திகளாகத்தான் இருக்கும்.
அன்று சினிமா என்று வருபவை பெரும்பாலும் நளினமான படங்களாகவே இருக்கும் எம் ஜி ஆரின் சண்டைப்படங்களில் கூட வன்முறை என்பது மிதமாகத்தான் இருக்கும்
பாசமலர்,என்று அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே மணந்த பாசத்தை மையமாக கொண்டு வெளிவந்தது.
பாவமன்னிப்பு பணத்திமிர் பிடித்த ஒருவன் தன் திமிர் முற்றிய போய் யாரென்று தெரியாத நிலையில் மத வெறி பிடித்துப்போய் முஸ்லிமாக வளர்க்கப்பட்ட சிறுவயதில் காணாமல் போன தன் சொந்த மகனையே தீயிட்டு பொசுக்கும் நிலையில் உண்மை வெளிப்பட பதறிப்போய் தானே தீயில் விழுந்து கருகி தன மகனை காப்பாற்றி பாவமன்னிப்பு தேடும் ஒரு அருமையான படம்
பாகப்பிரிவினை.தீயவரின் சொல் கேட்டால் ஒற்றுமை குலைந்து வேற்றுமை தோன்றும்,தீமை விளையும் என்ற அருமையான கருத்தை சொன்ன படம்
இப்படி அழகான படங்கள் வந்த காலம் அது.
கைகொடுத்த தெய்வம் ,ஒரு பெண் உலகம் புரியாதவளாக இருந்தால் அவள் என்னென்ன தீமைகளை சந்திக்க நேரிடும் என்று மிக அழகாக சித்தரித்த படம்.
சில ஆங்கிலப்படங்கள் வன்முறைகளுடன் வந்தாலும் அவை சென்னை போன்ற பெரு நகரங்களில் சில நாட்கள் அல்லது ஒரு சில வாரங்கள் மட்டுமே ஓடும் பிறகு மக்களால் மறக்கப்படும்
ஆங்கில படங்களில் கூட வன்முறைகளை சினிமாவில் காண்பதால் மனோநிலை எப்படி பாதிக்கப்படுகிறது என்று விளக்கி சில படங்கள் வந்தன அவற்றில் ஓன்று BLIND TERROR அல்லது SEE NO EVIL என்ற படம் த்ரில் ஆக எடுத்திருந்தார்கள் ஆனால் ஒரு காட்சி கூட வன்முறையாக இருக்காது
அதே போல் SILENCE OF THE LAMBS என்ற படம் ஒரு மன நோயாளியை பற்றியது.வன் முறை காட்சிகள் கிடையாது.
ஆனால் இன்று கிராபிக்ஸ் என்ற கலி  முற்றிய பிறகு வரும் தமிழ் படங்களில் வன் முறை காட்சிகள் ஆங்கிலப்படத்தையும் மிஞ்சுபவைகளாக உள்ளன.இவற்றிற்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் சீரியல்களிலும் வன்முறை காட்சிகள் கொடிகட்டி பறக்கின்றன.
டிவி மூலம் இவை அத்தனையும் வீடுகள் வரை வந்து விட்டன.பார்க்கிறவர்களில் எத்தனை பேர் எத்தனை மனோபாவங்களுடன் பார்க்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் எந்த கவலையும் கிடையாது படம் எடுப்பவர்களுக்கு.வெறும் சண்டை காட்சிகள் வீரச்செயல்கள் இவை பரவாயில்லை
ஆனால் வன்முறைகளுக்கு வித்திடுவது நூதன முறையில் அவற்றை செயல் படுத்துவது என்று கிராபிக்ஸ் முறையில் தத்த்ரூபமாக காட்டுகிறார்கள் ஒரு படம் ஓட வேண்டும் என்பதற்காகவே அசிங்கமான கவர்ச்சி காட்சிகள்,இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் கொலைவெறியை தூண்டும் வன்முறைக்காட்சிகள் என்று ஏதாவதொன்றை வைத்துவிடுகிறார்கள்.
விஸ்வரூபம் படத்தில் ஒரு பெண்ணை கழுத்தை அறுப்பது போன்று ஒரு காட்சி
அந்த நாட்களில் ஆல்பிரட் ஹிட்சாக் என்பவர் மர்மமும் வன்முறைகளும் நிறைந்த படங்களை எடுப்பதில் பெயர் பெற்றவர் அவர் எடுத்த சைக்கோ என்ற படத்தில் பாத் ரூமில் நிர்வாண நிலையில் ஒரு பெண் ஒரு மர்ம உருவத்தால் கத்தியால் குத்தப்படுவது போல காட்சி வரும் இதற்காகவே அந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது இது போல் பிளடி மூன் என்றோரு ஜெர்மன் படத்தில் காட்சிக்கு காட்சி கொலைகள் இதை பிரிட்டன் தடை செய்தது .இப்படி ஏராளமான மேற்கத்திய படங்கள் இருப்பினும் இவற்றை மேல்தட்டு மக்கள்தான்  பார்ப்பார்கள்.அதுவும் சில வாரங்களில் அவை தியேட்டரை விட்டு போய்விடும்.அது அவர்களது சீரழிந்த நாகரீகம்.இப்போது அவற்றையும் மிஞ்சும் விதத்தில் தமிழில் படங்களும் சீரியல்களும் வருகின்றன.
தமிழ்நாடு எதில்  முன்னேறுகிறதோ இல்லையோ இந்த கேடு கெட்ட சினிமாத்தொழிலில் பாலிவுட்டையும் ஹாலிவுட்டையும் மிஞ்சி நிற்கிறது என்றால் அது தான் வேதனை
மற்ற மாநிலங்களில் சினிமாவை சினிமாவாக பார்க்கிறார்கள்.ஆனால் இங்கே சினிமாவை நிஜம் என்று நம்பியே பார்க்கிறார்கள்.அதனால்தான் சினிமா ஹீரோக்கள் இங்கே தெய்வமாக கும்பிடப்படுகிறார்கள்.அவர்களுக்கு ஒரு ரசிகர் மன்றம் பட்டங்கள் சை.வெட்கமாக இல்லையா.
சினிமாவில் அட்டை கத்தி வீசிய எம்ஜியார் இங்கு பாரத ரத்னாவாம் அப்படி அவர் நாட்டிற்கு என்ன தியாகம் செய்தார்.சுதந்திரத்திற்காக போராடினாரா?
சினிமாவால் சீரழிந்தவர்கள் என்றால் அது தமிழர்கள்தான் என்றால் மிகை இல்லை
அந்த நாளில் தன் சகோதரியின் குடும்பத்தையே கொலை செய்து வீட்டின் ஒரு அறையில் பூட்டிவைத்த ஜெயக்குமார் என்பவன் போலீசிடம் சிக்கிய போது அவன் கூறியது நூறாவது நாள் என்ற திரைப்படத்தை பார்த்துத்தான் தனக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றியதாக கூறினான்.காரணம் படத்தை அவன் நிஜம் என்ற எண்ணத்தில் பார்த்தது.
எம்ஜியார் வீரப்பாவுடனும் நம்பியாருடனும்  சண்டை இட்டு ஜெயிக்கும் போது அவர் இவர்களுக்கு உண்மையான ஆபத்பாந்தவனாக தென்பட்டார்.
சினிமாவில்தான் அவர் ஹீரோ என்றில்லாமல் நிஜமாகவே அவரை ஹீரோவாக பார்த்தனர் சந்தர்ப்பத்தை நன்றாக பயன் படுத்திக்கொண்ட எம்ஜியார் மக்களுக்கு நன்றாக மூளை சலவை செய்து கட்சி ஆரம்பித்து முத ல்வராகவே ஆனார்.இது இங்கு மட்டும்தான் சாத்தியம்.
அடுத்து ஜெயலலிதா.ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை மூலம் சினிமாவுக்கு வந்தார்.தமிழில் வெளிவந்த முதல் அடல்ட்ஸ் ஒன்லி படம் படம் பெயிலியர்.
பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜியார் மூலம் ஜெயலலிதா பிரபலத்தின் உச்சிக்கு போனார்.
பிறகு அதே எம்ஜியார் மூலம் அரசியலுக்கும் வந்தார்.
தமிழ்நாடு ஆச்சே இங்கு எல்லாமே சாத்தியம் அந்த அளவுக்கு இங்கு சினிமா படித்தவர் பாமரர் என்று எல்லோரையும் மடையர்கள் ஆக்கி வைத்திருந்தது
ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்கமாட்டார் தனக்கு இப்படி ஒரு பதவியும் புகழும் கிடைக்கும் என்று எம்ஜியாரின் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா முதல்வரானார்.
ஆனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி எம்ஜியாரினால் உண்டானதல்ல சசிகலா & நடராசன் கம்பெனி என்ற ஒரு மாபியா கும்பலின் சூத்திரத்தில்தான் அது கிடைத்தது என்று ஜெயலலிதா உணர்ந்தார்.எம்ஜியாரின் மறைவுக்கு பின் இந்த கும்பலுடன் தன்னை நெருக்கமாக்கிக்கொண்டார்.தன அழிவை தானே தேடிக்கொண்டார்.இனி வன்முறை சினிமாவுக்கு இந்த கும்பல்தான் திரைக்கதை அமைத்து கொடுக்கவேண்டும் என்னும் அளவுக்கு சதித்திட்டத்தை கன கச்சிதமாக செயல் படுத்துவதில் சூத்திரதாரிகள் என்று இன்றுவரை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்.
முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் கூட சினிமாவில் வருவது மாதிரி இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
அந்த மர்மம் எப்போது நீங்கும் என்றும் தெரியவில்லை
இன்னும் கொஞ்ச மாதங்களில் மக்களும் பழையபடி காசு வாங்கி ஓட்டு போடும் மனோநிலைக்கு திரும்பிவிடுவார்கள்
இனியாவது மக்கள் திருந்த வேண்டும்




புதன், 22 பிப்ரவரி, 2017

அழிவில் தமிழ் நாடு

நரகை நோக்கி 

ஆம் தங்களது அதிமேதாவித்தனத்தாலும் அலட்சியத்தால் தமிழர்கள் நம் தங்கத்தமிழகத்தை நரகப்படுகுழியில் தள்ளிவிட்டு விட்டார்கள்.ஐயோ தமிழகமே இனி உன் சாம்பல் கூட மிஞ்சாது 
ஒருபக்கம் மத்திய அரசின் பாராமுகமும் துவேஷமும்.இன்னொரு புறம் மற்ற மாநிலங்களின் சகோதரத்துவமின்மை,இப்படி தத்தளித்துக்கொண்டு இருக்கும் நிலையில் கூட இருந்தே குழிபறித்து குப்புற தள்ளி விட்ட மாதிரி உள்ளூர் அரசியல் கட்சிகளின் சுயநலமிக்க நயவஞ்சகம் இத்தனையும் தமிழகம் என்ற சொர்க்க பூங்காவை சுடுகாடாக்கி விட்டு நிற்கின்றன.
சசிகலா-நடராசன் மாபியா கும்பல் எப்படியோ ஒரு வழியாக தன்  காரியத்தை சாதித்து கொண்டது.சசிகலா சிறை சென்றாலும்,பன்னீர் செல்வம் பகைத்தாலும் தன்  புத்தி சாதுர்யத்தால் தனது பினாமி எடப்பாடி பழனி சாமி மூலமாக தமிழக ஆட்சியை பிடித்துவிட்டார்.
இனி நடக்கப்போவது வெறும் சூதாட்ட பேரங்களாக இருக்குமே ஒழிய மக்கள் நன்மை என்று ஒன்றும் இருக்காது.
ஜெயலலிதாவின் மறைவு இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது.கோர்ட்டில் இது சம்பந்தமாக டிராபிக் ராமசாமி மற்றும் ஜெயலலிதாவின் பழைய தோழி திருமதி கீதா ஆகியோர் போட்ட வழக்குகள் கிணற்றில் போட்ட பாறாங்கல் மாதிரி கிடப்பில் மவ்னம் சாதிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கு கூட 20 வருடம் இழுத்தடிக்கப்பட்டு முதல் குற்றவாளியின் மரணத்திற்குப்பிறகு தீர்க்கமான முடிவாக இப்போது வந்திருக்கிறது.இது முன்னாலேயே வந்திருந்தால் பல குழப்பங்களில் இருந்து தமிழகம் தப்பி இருக்கும்.
சரி ஆனால் இப்போது ஒரு முன்னாள் முதலமைச்சரின் மரணத்தினுள் பொதிந்திருக்கும் அந்த 75 நாள் மர்மம் விலகுவது எப்போது?
சசிகலா தரப்பினரும் மௌனம் காக்கிறார்கள்.அப்பல்லோ தரப்பினரும் ஒரு கண்துடைப்பு நாடகத்தை பிரஸ் மீட்டிங்க் என்ற பெயரில் நடத்தி விட்டு விஷயத்தை கை கழுவி விட்டார்கள்.
இருட்டினில் நீதி மறைந்திருக்கிறது .அதை வெளிக்கொணர வேண்டிய பொறுப்புள்ள அதிகார வர்க்கமோ மடியில் கனத்தை வைத்துக்கொண்டு அமைதி காக்கிறது.மறைந்திருக்கும் நீதியே உன்னை வெளியாக்குபவர்கள் யார்?
இந்த நாட்டில் பொய்யும் திருட்டும் மிரட்டிக்கொண்டு வெளியே உலா வருகிறது அதை தட்டி கேட்கும் நீதி மான்களோ கை கட்டி உட்கார்ந்திருக்கிறார்கள் ஆக எங்கு பார்த்தாலும் துரோகம்,துவேஷம் bureaucracy .
சமீபத்திய தீர்ப்பில் வரம்பு மீறி சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தமிழக அரசின் கருவூலத்தில் சேர்க்கும் படி நீதி மன்றம் கூறி இருப்பது வரவேற்கத்தக்கதுதான் ஆனால் அதன் முன் பின் செயல் பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று நீதி மன்றம் வரையறுக்கவில்லையே.
தமிழகத்தின் தலையில் ஏறி உட்கார்ந்து இருப்பதோ ஒரு பினாமி அரசு.மன்னார்குடி மாபியா கும்பல் தமிழகத்தையே கபளீகரம் செய்ய போடுகிற திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற தொடங்கியுள்ளன.இந்த நிலையில் அரசின் கருவூலத்தை மட்டும் இந்த மாபியா கும்பல் விட்டுவைக்குமா.
அரசியல் என்பது வெறும் சாக்கடை என்றால் அதில் முங்கி குளிக்கும் அரசியல் சாணக்கியர்கள் வெட்கம் கெட்டவர்கள்.என்ன செய்வது என்று இந்த சாக்கடை குளியல்களை சகிக்கும் மக்கள் விவஸ்தை கெட்டவர்கள்.இதுதான் இன்றைய தமிழ் நாட்டின் நிலை .
இப்போது மத்திய அரசு குழப்பத்தோடு குழப்பமாக மீண்டும் தமிழ்நாட்டின் பசுமையையே சுரண்டி சாகடிக்கும் வேலையை தொடங்கி உள்ளது.
அதுதான் மீத்தேன் திட்டம்.இதை தமிழக விவசாயிகள் கடுமையாக எதிர்த்ததால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதை எதிர்த்து அனுமதிக்க மறுத்தார்.
ஆனால் அவர் மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக திணித்த மத்திய அரசு அவர் மூலம் இதற்க்கு அனுமதி வாங்கிவிட்டது.பன்னீரும் மீத்தேன் என்ற பெயர் தனக்கு அலர்ஜி என்பதால் Hydrocarbon என்று பெயர் மாற்றி கையெழுத்துப்போட்டார்.என்ன செய்ய நம் தலையெழுத்து .தஞ்சை தரணியே பாழாக்கப்போகிறது .
பன்னீரிடம் பேரம் தோற்றதால் சசி மாபியா அவரை குப்புறத்தள்ளி தனக்கு வேண்டிய எடப்பாடி பழனியை முதல்வராக நிறுத்தி எல்லா நியாயம் சட்டம் நெறிகள் அனைத்தையும் உடைத்து எறிந்து வெறும் வாய் ஒட்டு மூலம் தேர்ந்தெடுத்து அவர் பெயரை கவர்னருக்கு சிபாரிசு செய்து உள்ளனர் .இப்போது மத்திய அரசின் பிடியில் தமிழகத்தின் தலையெழுத்து உள்ளது 
ஆளுநர் வித்யாசாகர் மத்திய அரசின் சமிக்ங்கைக்கு காத்திருக்கிறார்.மத்திய அரசு இப்போது தன்னுடன் பேரம் பேச ஆள் தேடுகிறது.பினாமி பழனியா ?,பழைய உறவு பன்னீரா? இல்லை ஸ்டாலினா ?கடவுளே நான் யார் கையில்?-தமிழகத்தின் கதறல்.
மத்திய அரசிற்கு   மற்ற மாநிலங்களில் செயல் படுத்த முடியாத அத்தனை பாதக திட்டங்களையும் திறந்த வெளி கழிவறையான தமிழகத்தில் நிறைவேற்ற ஒரு கை  பொம்மை அரசு வேண்டும் .இதுதான் அவர்களின் பேரம் மற்றபடி ஆட்சி அமைப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் எப்படி வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம் கொள்ளை அடிக்கலாம்.கண்டுகொள்ளப்படாது.ஆனால் எங்கேயாவது இடறினால் ......அதை பின்னால் பார்க்கலாம்.
இந்த பேரத்திற்கு நம் தமிழ்நாட்டு அரசியல் வர்க்கம் மறுக்கும் என்று சொல்ல முடியாது.
இதற்கு பின்னால் காவிரி பிரச்சினை முல்லைப்பெரியாறு பிரச்சினை ஆந்திராவுடன் பாலாறு பிரச்சினை என்று பக்கத்து மாநிலங்களுடன் பிரச்சினைகள்.இந்த பிரச்சினைகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை.காரணம் மக்களிடமும் விழிப்புணர்வு இல்லை ஆண்ட வர்க்கமும் இலவசங்கள்,ஓட்டுக்கு ரூபாய் என்று மக்களை மடையர்களாகவே ஆக்கி வைத்துவிட்டனர்.
என்ன படித்து என்ன செய்ய.மாணவர்கள் கூட இங்கு அரசியல்வாதிகளின் கைகளில்  பொம்மைகளாகிறார்கள்.சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் பெரிய வெற்றி என்று கூறுகிறார்கள்.அது உண்மையில் மத்திய மாநில அரசியல்கிங்கிறர்கள் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை சிதறடிக்க மாணவகண்மணிகளை பொம்மைகளாக்கி ஆடிய ஒரு பொம்மலாட்டம் அது.அது ஒரு வேஸ்ட் .ஜல்லிக்கட்டு கிடைத்ததாம் அதனால் என்ன? அது எவ்வளவு காலத்திற்கு? ஆண்டவனுக்கே வெளிச்சம்.இந்த ஜல்லிக்கட்டினால் மாநிலம் அடையப்போகும் நன்மைகள் என்ன?
மாட்டிற்கு பேசத்தெரிந்தால் தனக்கு நீர் வேண்டும் உணவு வேண்டும் விவசாயம் வேண்டும் என்று தான்  கேட்டிருக்குமே   ஒழிய இப்படி ஜல்லிக்கட்டு ஆட்டம் வேண்டும் என்று கேட்டிருக்காது.ஆனால் மாட்டின் மீது பழியை போட்டு ஒரு அர்த்தமற்ற போராட்டத்திற்கு தூண்டி விட்டு மாணவர்களின் படிப்பையும் கெடுத்து நம் கவனத்தை சிறகடிக்க அரசியல் நயவஞ்சகர்கள் நம் மாநிலத்தின் நமைகளை அற்ப லாபத்திற்காக காட்டிக்கொடுத்துவிட்டார்களே.
இப்போது ஒரு நிரூபணமில்லாத ஒரு செய்தியை ஊடகங்கள் தமிழகத்தின் நலனை கெடுப்பதற்காகவே பரப்புகின்றன.செய்தி வேறு அதன் தலைப்பு வேறாக இருக்கிறது.கீழே பாருங்கள் 

ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.100 கோடி அபராதம் கர்நாடக கருவூலத்துக்கு போகுமாம்
இது தலைப்பு
ஆனால் கீழே செய்தியை பாருங்கள்.

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லாததால் அவரது அபராதத் தொகை எந்த அரசின் கருவூலத்துக்குச் செல்லும் என்பது கேள்வி குறியாக உள்ளது.
கடந்த 1991- 96 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக அன்றைய மதிப்பில் ரூ.66 கோடியை தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த பெங்களூர் தனி நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும், ரூ.100 கோடி அபராதம் விதித்தது. அதேபோல் அவருக்கு உடந்தையாக இருந்த தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதத்தையும் விதித்தது.

Source: tamil.oneindia.com தலைப்பில் உள்ள கருத்து செய்தியில் இல்லை

இப்படி ஊடகங்களே புதுப்பிரச்சினையை கிளப்புவது மாதிரி செய்திகளுக்கு தலைப்பிடுகின்றன.
இது போல்தான் அந்த   நாட்களில் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த மாதிரி மலையாள மனோரமா என்ற பத்திரிக்கை தேவை இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் முல்லை பெரியார் அணை பலகீனமாக உள்ளது என்று ஒரு  கட்டுரையை வெளியிட்டு இடுக்கி பகுதியில் பெரும் பீதியை உண்டாக்கியாது.விளைவு இன்று நாம் அந்த அணையையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்
அன்று டாக்டர் ஷிவாகா மற்றும் போல்ஷ்விக்கர்களின் எழுச்சியினால் ரஷ்யா ஜார் மன்னர்களின் அராஜகத்திலிருந்து விடுபட்டது.
பதினாறாம் லூயியின் அதிகார துஷ்பிரயோகம் பிரஞ்சு புரட்சியாக வெடித்து பிரான்ஸ் காப்பாற்றப்பட்டது.
ஒரு தொழிற் புரட்சி பிரிட்டனை தலை நிமிர்த்தியது
இது போல தமிழகமும் ஒரு புரட்சியை அதுவும் ஒட்டுமொத்த அரசியல் அநாகரீகத்திற்கு எதிராக ஒரு கிளர்ச்சியை சந்திக்காதவரை இது நரகத்தை நோக்கித்தான் போய்க்கொண்டு இருக்கிறது.இது திண்ணம.
ஆனால் அந்தோ இங்குள்ள படித்தவர்களும் மாணவர்களும் கூட அரசியல் சூதாட்டத்தில் பகடைகளாகி அர்த்தமற்ற ஜல்லிக்கட்டு புரட்சியையும் இந்தி எதிர்ப்பு என்றோரு கிளர்ச்சியையும் நடத்திக்கொண்டு தங்களையும் தங்கள் சந்ததிகளையும் பெரும் நஷ்டத்த்திற்கு ஆளாக்கி விட்டார்களே.
இனி தமிழகம் எந்த அரசியல் கட்சியையும் நம்பி பலனில்லை .மாற்றம் மாற்றம் என்று கூறி இரு திமுகவுக்கும் மாறி மாறி ஒட்டு போட்டு எந்த நன்மையையும் எதிர்பார்க்க முடியாது.மற்ற கட்சிகளும் அப்படித்தான் என்ன செய்வீர்கள்
ஒரு நல்ல புரட்சிக்கு தயாராகுங்கள் ஒரு நல்லவனை தேடி கண்டுபிடித்து சுயேட்சையாக அவரை ஆட்சியில் அமர்த்துங்கள்
இல்லை என்றால் தலையில் ஒரு துண்டும் கையில் திருவோடும் ஏந்திக்கொண்டு தமிழகத்தை ஆந்திரா கேரளா கர்நாடகா என்று பிய்த்து கொடுத்துவிட்டு எல்லோரும் காசி யாத்திரை போய் கங்கையில் விழுங்கள்.


  

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

VACCINATION-முக்கிய குறிப்புகள்

தடுப்பூசி -ஆபத்தானதா 


இப்போது சமூக வலைத்தளங்களில் தடுப்பூசி போடாதீர்கள் அவை ஆபத்தானவை அவை மேல்நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று பல தெளிவற்ற புள்ளிவிவரங்களுடன் ஒரு எச்சரிக்கை வலம் வந்து கொண்டு இருக்கிறது.
இது பற்றி நாம் இங்கு சில கருத்துக்களை பார்ப்போம்.
முதலாவது தடுப்பூசிகள் (Vaccination )என்றால் என்ன,அவை எப்படி தயாராகிறது அவற்றில் என்ன இருக்கிறது அவை எந்த நோக்கத்திற்காக தரப்படுகிறது என்று பார்ப்போம்.
அதற்கு முன் தொற்று  வியாதிகளை பற்றி ஒரு சிறு விளக்கத்தை காண்போம்.
நாம் சுவாசிக்கும் காற்றில்,அருந்தும் நீர்பானங்களில்,சுகாதாரமற்ற சூழ்நிலைகள் சரியாக சமைக்கப்படாத அல்லது வேக வைக்கப்படாத உணவு வகைகளில் இவை எல்லாவற்றிலுமே கண்ணுக்கு தெரியாத நுண் உயிரிகள் இருக்கின்றன.
இவை நம் உடம்புக்குள் செல்லும்போது நம் உடம்பு இறைவன் இயற்கையாகவே அதற்க்கு அளித்திருக்கின்ற சில பாதுகாப்பு (IMMUNITY)அம்சங்களை கொண்டு தன்னை பாதுகாத்து கொள்கிறது.இதற்கு குடல் வால் எனப்படும் Appendix கூட துணை புரிவதாக இப்போது கண்டு பிடித்து இருக்கிறார்கள்.குடல் வாலுக்குள் பொதிந்துள்ள சில நல்ல நுண்ணியிரிகள் நம் உடம்பின் நோய்  எதிர்ப்பு  சக்திக்கு வலு ஊட்டுவதாக சமீபத்திய ஓர் ஆய்வு சொல்கிறது.
நோய் கிருமிகளின் விஷத்தன்மை சிலவற்றில் அதன் வெளிப்பகுதியில் சிலவற்றில் அதன் உட்பகுதியில் இருக்கிறது இதற்கு முறையே Exotoxin மற்றும் Endotoxin என்பர்.
பெரும்பாலும் Exotoxin கள் பாக்டீரியாவால் உயிருடன் இருக்கும்போதும் அல்லது இறந்த பிறகும் சுரக்கப்படுபவை.உதாரணம் Clostridium Botulinum என்ற கிருமியால் சுரக்கப்படும் Botulinum toxin,
Corynebacterium Diphtherea வினால் சுரக்கப்படும் கொடிய நோயான டிப்தீரியா விஷம்,மற்றும் 
Clostridium Tetany யினால் சுரக்கப்படும் டெட்டனஸ் விஷம் 
ஆகியவை Exotoxin களுக்கு உதாரணங்கள் ஆகும.இந்த Exotoxin ஐ வெளி விஷம் என்று சொல்லலாம்.இவை கிருமி உடம்பினுள் சென்றவுடன் சுர க்கப்பட்டு விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை 
இன்னொரு வகை உள் விஷம் என்ற Endotoxin கள் ஆகும்.இவை கிருமி உடம்பினுள் சென்ற வுடன் எந்த பாதிப்பும் தராது.ஆனால் கிருமி அழியும் பொது இவை வெளிப்பட்டு கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.இவை சில கிருமிகளின் மேலேயே இருக்கும் எனவே கிருமி உயிருடன் இருக்கும் போதும் வெளிப்படும் இதற்க்கு உதாரணம் Neisseria மற்றும் Haemophilius வகை கிருமிகளாகும்.இந்த Endotoxin கள் வேதி இயலில் சர்க்கரை கொழுப்புகளுடன்(Lipopolysachcharide) இணைந்த O-antigen,களாகும்.
சரி இப்போது தடுப்பூசிக்கு வருவோம் தடுப்பூசிகளில் இருவகை உண்டு ஒன்று Vaccination மற்றது Antiserum .
Vaccination இல் நோய் கிருமிகள் வீரியம் குறைக்கப்பட்ட நிலையில் இருக்கும் இதை உடம்பில் செலுத்தும் போது நம் உடல் இதை வீரியமுள்ள கிருமியாகவே எண்ணி நோய் ஏற்படாமலே எதிர்ப்பு சக்தியை (Antibodies)உடனே ஏற்படுத்திவிடும்.
ஆனால் சிலருக்கு எதிர்ப்பு சக்தி ஏற்படுவதில் சில நாட்கள் தாமதம் ஏற்படலாம் அந்த நிலையில் அவருக்கு Vaccination அளிக்கப்பட்ட  நிலையிலேயே அவர் மீது உண்மையான நோய் கிருமி தாக்குதல் ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு.இதற்காக மருத்துவ உலகம் இவருக்கு Vaccin உடன் Antiserum என்ற மற்றொரு மருந்தையும் கொடுப்பார்கள்.இந்த Antiserum அவருடைய இரத்தத்தில் வெளியிலிருந்து ஏற்படுத்தப்பட்ட எதிர்ப்புசக்தியை (Antibodies) நேரடியாகவே செலுத்தி அந்த மனிதரின் இரத்தம் சுயமாகவே எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் அந்த ஒரு சில நாட்கள் அவரை பாதுகாக்கும் 
முன்பெல்லாம் துருப்பிடித்த ஆணி குத்தி விட்டால் ATS ( Anti Tetanus Serum)என்று போடுவார்கள்.இது உடனடி எதிர்ப்பு சக்தியை இரத்தத்தில் நேரடியாக தரப்பட்டதாக இருந்தாலும் இதன் வீரியம் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் இப்போது Tetanus Toxoid (TT )என்ற Vaccination போடுகிறார்கள்.
இந்த Toxoid கிருமியின் விஷத்தை Formaldehyde(0.5 to 1%)உடனும் lysine (0.005 to 0.25M) உடனும் சேர்த்து சுமார் 24 டு 32 நாட்கள் (6 டு 8pH)  அமிலத்தன்மையில் incubate செய்து தயாரிக்கிறார்கள் .

எட்வார்ட் ஜென்னர் இதை முதன் முதலில் Cow Pox என்ற நோய் பீடித்த பசுவின் சீழில் இருந்து உண்டாக்கியதால் இதற்க்கு Vaccination என்று பெயரிட்டார்.Vacca என்றால் லத்தீன்  மொழியில் பசு.
அவர் காலத்தில் கொடிய நோயாக இருந்தது பெரியம்மை என்ற Small Pox .
ஆனால் இது பசுவிடம் நெருங்கி பால் கறப்பவர்களுக்கு வருவதில்லை.
இதை அவர் வியப்புடன் ஆராய்ந்தார்.இவர்களுக்கு சில நாட்கள் மட்டுமே தாக்கக்கூடிய ஆபத்து இல்லாத மிகவும் எளிய பசு அம்மை நோய் தாக்குவதால் இவர்களது உடம்பு கொடிய பெரியம்மையையே எதிர்க்கக்கூடிய சக்தியை  பெறுவதாக கண்டு பிடித்தார்.
இதை செயலாக்க பசுவின் சீழை தன் வீட்டு வேலையாள் மகனுக்கு செலுத்தினார்.அவனுக்கு அபாரமான பெரியம்மை எதிர்ப்பு சக்தி கிடைத்தது ஜென்னர் சிலரின் விமரிசனங்களுக்கும் ஆளானார்.
ஆனாலும் எட்வார்ட் ஜென்னருக்கு 1821 இல் PHYSICIAN EXTRAORDINARY என்ற பதவி KING GEORGE-IV இனால் தரப்பட்டது.
இருப்பினும் எட்வர்ட் ஜென்னரின் VACCINATION இன்று பல மாற்றங்களுடன் பாதுகாப்பானதாகவே இருக்கிறது.
ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடித்தார்கள் என்பதற்காக அவர்கள் ஒட்டிய விமானத்தை இப்போது நாம் பயன்படுத்த முடியுமா?இப்போது விமானங்கள் புது புது மாற்றங்களுடன் பாதுகாப்பானதாகவே இருப்பது போல் VACCINATION உம் பாதுகாப்பானதாகவே இருக்கிறது.இருப்பினும் ஒரு சில அசம்பாவிதங்கள் நடப்பது உண்மைதான்.
எனவே தடுப்பு ஊசிகளை மிக கவனமாக நம்பிக்கைக்கு உரிய மருத்துவர் மூலம் எடுத்து கொள்ளுங்கள்.இலவசமாக தரப்படுகிறது என்ற நிலையில் கவனமாக இருங்கள்


 

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...