அமைதி பூங்காவா?கொலை பூமியா?
எனக்கு தெரிந்த தலைப்புகளை கொடுத்து விட்டேன்.இனி நீங்களே பொருத்தமான தலைப்பாக முடிவு செய்து கொள்ளுங்கள்.
சமீபத்தில் பட்டப்பகலில் நெல்லையில் போலீஸ் வேனை வழி மறித்து போலீசின் கண்களில் மிளகாய் போடி தூவி கைதியை பலவந்தமாக கீழே இறக்கி அதே இடத்தில் வெட்டி சாய்த்திருக்கிறது ஒரு கொலை வெறி பிடித்த கும்பல்.பழி தீர்க்கும் பயங்கர தொடர்கதையின் ஒரு அத்தியாயம்.பழி தீர்த்தல் என்றாலே அது தொடரும்தானே.இன்னும் எத்தனை அத்தியாயங்கள் தொடரப்போகின்றனவோ.
சுவாதி என்ற இளம்பெண் காலைபொழுது உதிக்கும் வேளையில் பலரும் கூடும் ரயில் நிலையத்தில் பலர் முன்னிலையில் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார்.
நந்தினி என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி அவள் வயிற்றில் சிசுவை சுமந்திருக்கும் வேளையில் தன்னை கல்யாணம் பண்ணிகொள் என்று அவள் கோரிய ஒரே குற்றத்திற்காக அவளை கடத்தி கோரமாக கொன்று வயிறில் இருந்த சிசுவையும் பிறப்பு உறுப்பை பிளேடால் அறுத்து கிழித்து வெளியே எடுத்து சிதைத்தான் ஒரு மாபாதகன்.
தொடர்ந்து ஹாசினி என்ற சிறுமியின் கொலை.
இதெல்லாம் ஒரு பெரிய சீரியலின் அன்கொன்றும் இன்கொன்றுமாக பொறுக்கி எடுத்த சம்பவங்கள்.எங்கே நடந்தது என கேட்காதீர்கள்.எல்லாம் நம் அமைதி பூங்காவாம் நம் தமிழகத்தில்தான்.
ஆம் ஒரு காலத்தில் அதாவது அறுபதுகளில் அதற்கு முன்னும் தமிழகம் அமைதி பூங்காவாகத்தான் இருந்தது பத்திரிகைகளை புரட்டினால் அதில் கொலை மற்றும் வன்முறை சம்பவங்கள் காணப்படுவது மிகவும் அரிது.
ஆதித்தனாரின் தினத்தந்தி மற்றும் மலை முரசு பத்திரிகைகள் சிசுக்களாக இருந்த காலம் அது.அவற்றிற்கு நிருபர்கள் என்று யாரும் கிடையாது கேட்டதை காணாமலேயே கவர்ச்சிகரமான தலைப்பில் செய்திகள் போடுவார்கள் அவற்றில் பெரும்பாலும் வதந்திகளாகத்தான் இருக்கும்.
அன்று சினிமா என்று வருபவை பெரும்பாலும் நளினமான படங்களாகவே இருக்கும் எம் ஜி ஆரின் சண்டைப்படங்களில் கூட வன்முறை என்பது மிதமாகத்தான் இருக்கும்
பாசமலர்,என்று அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே மணந்த பாசத்தை மையமாக கொண்டு வெளிவந்தது.
பாவமன்னிப்பு பணத்திமிர் பிடித்த ஒருவன் தன் திமிர் முற்றிய போய் யாரென்று தெரியாத நிலையில் மத வெறி பிடித்துப்போய் முஸ்லிமாக வளர்க்கப்பட்ட சிறுவயதில் காணாமல் போன தன் சொந்த மகனையே தீயிட்டு பொசுக்கும் நிலையில் உண்மை வெளிப்பட பதறிப்போய் தானே தீயில் விழுந்து கருகி தன மகனை காப்பாற்றி பாவமன்னிப்பு தேடும் ஒரு அருமையான படம்
பாகப்பிரிவினை.தீயவரின் சொல் கேட்டால் ஒற்றுமை குலைந்து வேற்றுமை தோன்றும்,தீமை விளையும் என்ற அருமையான கருத்தை சொன்ன படம்
இப்படி அழகான படங்கள் வந்த காலம் அது.
கைகொடுத்த தெய்வம் ,ஒரு பெண் உலகம் புரியாதவளாக இருந்தால் அவள் என்னென்ன தீமைகளை சந்திக்க நேரிடும் என்று மிக அழகாக சித்தரித்த படம்.
சில ஆங்கிலப்படங்கள் வன்முறைகளுடன் வந்தாலும் அவை சென்னை போன்ற பெரு நகரங்களில் சில நாட்கள் அல்லது ஒரு சில வாரங்கள் மட்டுமே ஓடும் பிறகு மக்களால் மறக்கப்படும்
ஆங்கில படங்களில் கூட வன்முறைகளை சினிமாவில் காண்பதால் மனோநிலை எப்படி பாதிக்கப்படுகிறது என்று விளக்கி சில படங்கள் வந்தன அவற்றில் ஓன்று BLIND TERROR அல்லது SEE NO EVIL என்ற படம் த்ரில் ஆக எடுத்திருந்தார்கள் ஆனால் ஒரு காட்சி கூட வன்முறையாக இருக்காது
அதே போல் SILENCE OF THE LAMBS என்ற படம் ஒரு மன நோயாளியை பற்றியது.வன் முறை காட்சிகள் கிடையாது.
ஆனால் இன்று கிராபிக்ஸ் என்ற கலி முற்றிய பிறகு வரும் தமிழ் படங்களில் வன் முறை காட்சிகள் ஆங்கிலப்படத்தையும் மிஞ்சுபவைகளாக உள்ளன.இவற்றிற்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் சீரியல்களிலும் வன்முறை காட்சிகள் கொடிகட்டி பறக்கின்றன.
டிவி மூலம் இவை அத்தனையும் வீடுகள் வரை வந்து விட்டன.பார்க்கிறவர்களில் எத்தனை பேர் எத்தனை மனோபாவங்களுடன் பார்க்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் எந்த கவலையும் கிடையாது படம் எடுப்பவர்களுக்கு.வெறும் சண்டை காட்சிகள் வீரச்செயல்கள் இவை பரவாயில்லை
ஆனால் வன்முறைகளுக்கு வித்திடுவது நூதன முறையில் அவற்றை செயல் படுத்துவது என்று கிராபிக்ஸ் முறையில் தத்த்ரூபமாக காட்டுகிறார்கள் ஒரு படம் ஓட வேண்டும் என்பதற்காகவே அசிங்கமான கவர்ச்சி காட்சிகள்,இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் கொலைவெறியை தூண்டும் வன்முறைக்காட்சிகள் என்று ஏதாவதொன்றை வைத்துவிடுகிறார்கள்.
விஸ்வரூபம் படத்தில் ஒரு பெண்ணை கழுத்தை அறுப்பது போன்று ஒரு காட்சி
அந்த நாட்களில் ஆல்பிரட் ஹிட்சாக் என்பவர் மர்மமும் வன்முறைகளும் நிறைந்த படங்களை எடுப்பதில் பெயர் பெற்றவர் அவர் எடுத்த சைக்கோ என்ற படத்தில் பாத் ரூமில் நிர்வாண நிலையில் ஒரு பெண் ஒரு மர்ம உருவத்தால் கத்தியால் குத்தப்படுவது போல காட்சி வரும் இதற்காகவே அந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது இது போல் பிளடி மூன் என்றோரு ஜெர்மன் படத்தில் காட்சிக்கு காட்சி கொலைகள் இதை பிரிட்டன் தடை செய்தது .இப்படி ஏராளமான மேற்கத்திய படங்கள் இருப்பினும் இவற்றை மேல்தட்டு மக்கள்தான் பார்ப்பார்கள்.அதுவும் சில வாரங்களில் அவை தியேட்டரை விட்டு போய்விடும்.அது அவர்களது சீரழிந்த நாகரீகம்.இப்போது அவற்றையும் மிஞ்சும் விதத்தில் தமிழில் படங்களும் சீரியல்களும் வருகின்றன.
தமிழ்நாடு எதில் முன்னேறுகிறதோ இல்லையோ இந்த கேடு கெட்ட சினிமாத்தொழிலில் பாலிவுட்டையும் ஹாலிவுட்டையும் மிஞ்சி நிற்கிறது என்றால் அது தான் வேதனை
மற்ற மாநிலங்களில் சினிமாவை சினிமாவாக பார்க்கிறார்கள்.ஆனால் இங்கே சினிமாவை நிஜம் என்று நம்பியே பார்க்கிறார்கள்.அதனால்தான் சினிமா ஹீரோக்கள் இங்கே தெய்வமாக கும்பிடப்படுகிறார்கள்.அவர்களுக்கு ஒரு ரசிகர் மன்றம் பட்டங்கள் சை.வெட்கமாக இல்லையா.
சினிமாவில் அட்டை கத்தி வீசிய எம்ஜியார் இங்கு பாரத ரத்னாவாம் அப்படி அவர் நாட்டிற்கு என்ன தியாகம் செய்தார்.சுதந்திரத்திற்காக போராடினாரா?
சினிமாவால் சீரழிந்தவர்கள் என்றால் அது தமிழர்கள்தான் என்றால் மிகை இல்லை
அந்த நாளில் தன் சகோதரியின் குடும்பத்தையே கொலை செய்து வீட்டின் ஒரு அறையில் பூட்டிவைத்த ஜெயக்குமார் என்பவன் போலீசிடம் சிக்கிய போது அவன் கூறியது நூறாவது நாள் என்ற திரைப்படத்தை பார்த்துத்தான் தனக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றியதாக கூறினான்.காரணம் படத்தை அவன் நிஜம் என்ற எண்ணத்தில் பார்த்தது.
எம்ஜியார் வீரப்பாவுடனும் நம்பியாருடனும் சண்டை இட்டு ஜெயிக்கும் போது அவர் இவர்களுக்கு உண்மையான ஆபத்பாந்தவனாக தென்பட்டார்.
சினிமாவில்தான் அவர் ஹீரோ என்றில்லாமல் நிஜமாகவே அவரை ஹீரோவாக பார்த்தனர் சந்தர்ப்பத்தை நன்றாக பயன் படுத்திக்கொண்ட எம்ஜியார் மக்களுக்கு நன்றாக மூளை சலவை செய்து கட்சி ஆரம்பித்து முத ல்வராகவே ஆனார்.இது இங்கு மட்டும்தான் சாத்தியம்.
அடுத்து ஜெயலலிதா.ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை மூலம் சினிமாவுக்கு வந்தார்.தமிழில் வெளிவந்த முதல் அடல்ட்ஸ் ஒன்லி படம் படம் பெயிலியர்.
பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜியார் மூலம் ஜெயலலிதா பிரபலத்தின் உச்சிக்கு போனார்.
பிறகு அதே எம்ஜியார் மூலம் அரசியலுக்கும் வந்தார்.
தமிழ்நாடு ஆச்சே இங்கு எல்லாமே சாத்தியம் அந்த அளவுக்கு இங்கு சினிமா படித்தவர் பாமரர் என்று எல்லோரையும் மடையர்கள் ஆக்கி வைத்திருந்தது
ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்கமாட்டார் தனக்கு இப்படி ஒரு பதவியும் புகழும் கிடைக்கும் என்று எம்ஜியாரின் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா முதல்வரானார்.
ஆனால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி எம்ஜியாரினால் உண்டானதல்ல சசிகலா & நடராசன் கம்பெனி என்ற ஒரு மாபியா கும்பலின் சூத்திரத்தில்தான் அது கிடைத்தது என்று ஜெயலலிதா உணர்ந்தார்.எம்ஜியாரின் மறைவுக்கு பின் இந்த கும்பலுடன் தன்னை நெருக்கமாக்கிக்கொண்டார்.தன அழிவை தானே தேடிக்கொண்டார்.இனி வன்முறை சினிமாவுக்கு இந்த கும்பல்தான் திரைக்கதை அமைத்து கொடுக்கவேண்டும் என்னும் அளவுக்கு சதித்திட்டத்தை கன கச்சிதமாக செயல் படுத்துவதில் சூத்திரதாரிகள் என்று இன்றுவரை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் இவர்கள்.
முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் கூட சினிமாவில் வருவது மாதிரி இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
அந்த மர்மம் எப்போது நீங்கும் என்றும் தெரியவில்லை
இன்னும் கொஞ்ச மாதங்களில் மக்களும் பழையபடி காசு வாங்கி ஓட்டு போடும் மனோநிலைக்கு திரும்பிவிடுவார்கள்
இனியாவது மக்கள் திருந்த வேண்டும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக