நீரிழிவு நோயாளி தேன் சாப்பிடும் அளவு
அது பற்றி விரிவாக பார்ப்பது இக் கட்டுரையின் நோக்கமல்ல.அதை ராயல் ஜெல்லி என்ற தலைப்பின் கீழ் பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த கட்டுரையில் தேனை பற்றிய பொது விவரங்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றி மட்டும் பார்க்கலாம்
தேன் ஒரு கெட்டியான வழுவழுப்பான தன்மை கொண்ட பழுப்பு நிற திரவமாக
Apis mellifera என்ற தேனீக்களால் தேன் கூடுகளில் சுரக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது.
தேனை சேகரிப்பதற்காக ஒரு வேலையாள் தேனீ தன் கூட்டிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் வரை பிரயாணிக்கிறது.
வழியில் மலர்களினால் அது கவரப்படும் போது மலரின் சூலகங்களில் இருந்து அது மதுவை உறிஞ்சுகிறது.அத்துடன் மலரின் மகரந்தங்களும் ஒட்டிக்கொள்கின்றன.இந்த மகரந்தங்கள் மலர் மது தேனாக மாறும்பொழுது அதற்கு புரதச்சத்தை அளிக்கின்றன. ஒரு தேனீ தன் வாழ்நாளில் ஒரு தேக்கரண்டியில் (5மில்லி) பன்னிரண்டில் ஒரு பங்குத்தேனை கொண்டுவந்து தேனடையில் சேமிக்கிறது.
உண்ணப்படும் மலர் மது தேனீயின் வயிற்றின் ஒரு பகுதியில் உணவாக செரிமானம் அடைகிறது இன்னொரு பகுதியில் தேனாக மாறுகிறது
தேனீ மலர் மதுவெடுத்து கூட்டுக்கு திரும்ப தொடங்கும்பொழுதே அதன் வயிற்றில் மதுவை தேனாக மாற்றும் தொழில் நுட்பம் ஆரம்பமாகிறது.
அதாவது அதனுடன் ஏராளமான பொருட்கள் அதாவது நொதிகள்,வைட்டமின்கள்,தாது உப்புகள் ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் (ANTIOXIDANTS),போன்றவை சேர்க்கப்பட்டு ஏறக்குறைய 18% நீர்ச்சத்தில் 80% பொருட்கள் அற்புதமாக கரைக்கப்பட்டு ஒரு அதிசய அடர் கரைசலாக அது மாறுகிறது.
இந்த அடர் கரைசல் வேலையாள் தேனீயின் வாய் மூலமாக கூட்டு தேனீயின் வாய்க்கு மாற்றப்பட்டு தேனடையில் வைக்கப்படுகிறது. கூட்டுத் தேனீயானது தன் சிறகை தேனின் மீது விசிறி போல் விசிறி தேன் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி 18% ஆக இருக்கும் நீர்ச்சத்தை 36%அதிகரிக்கச்செய்கிறது .பிறகு அந்த தேனுக்கு மேல் மெழுகை பூசி மேலும் காற்று உட்புக முடியாமல் அடைத்து விடுகிறது.
தேனை நீரிழிவு நோயாளி கையாளும் முறை :-
(சுத்தீகரிக்கப்படாத கச்சா தேன்)
100 கிராம் தேன் :-
மொத்த சர்க்கரை பொருள் =80கி (80%)
பழ சர்க்கரை (FRUCTOSE) =40கி
க்ளூகோஸ் (GLUCOSE) =35கி
சுக்ரோஸ் (SUCROSE) =5கி
க்ளுகோஸ் (சுக்ரோஸிலிருந்து)=3கி
மொத்த க்ளூகோஸ் (n) 35+3 =38 கி
GI (தேன்) =55
எனவே தேனின் GL (100gm) =[nxGI]/100
=[38x55]/100 =20.9❌ 100gm தேனின் GL =20.9
ஃ 40gm தேனின் GL = [20.9/100]x40=9✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி சுத்தமான கச்சா தேனை ஒருநாளைக்கு 40கிராம் வரை சாப்பிடலாம்.
அதாவது ஒரு மேஜை கரண்டி (10மில்லி)வீதம் ஒரு நாளைக்கு நான்கு முறை சாப்பிடலாம்
தேன் மூன்று வகைகளாக கடைகளில் கிடைக்கிறது.
கச்சா தேன் வடிகட்டப்படாத 100% சுத்தமான தேன்.இதில் மலர் மகரந்தம் மேலும் தேன் பாகு அழுக்குகள் போல் மிதக்கும்.இதில் இயற்கை பழச்சர்க்கரையும் க்ளுகோஸும் (NATURAL FRUCTOSE & GLUCOSE)சேர்ந்து மொத்தம் 80% இருக்கும்.கரும்பு சர்க்கரை(SUCROSE) 5% இருக்கும்.இவைகளுடன் வைட்டமின்கள்,தாது உப்புகள்,அமினோஅமிலங்கள் நொதிகள் என்று ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கும்.நீர்ச்சத்து 35% இருக்கும்.தேனை திறந்து வைத்தால் அது காற்றிலிருந்து நீரை உறிந்து நீர்த்து போகும்.இந்த வகை தேனின் GI மதிப்பு 35-55 வரை இருக்கும்..எனவே ஒரு நீரிழிவு நோயாளி இதை அளவுடன் (40கிராம்) தினசரி சாப்பிடலாம்.
வடிகட்டப்பட்ட கலப்படத்தேன்
இந்த வகை தேனில் பழச்சர்க்கரை அதிகம் கலக்கப்பட்ட (HIGH FRUCTOSE CORN SYRUP)கார்ன் சிரப் மற்றும் க்ளூகோஸ் அல்லது இரண்டில் ஏதோ ஒன்று சேர்த்திருப்பார்கள்.இது தெளிவான வெளிறிய நிறத்தில் இருக்கும்.அதிக இனிப்பு இருக்கும்.இதிலிருந்து தேன் பாகை(MOLASSES) வடிகட்டி நீக்கி இருப்பார்கள்.அதோடு ஏராளமான சத்துக்களும் நீங்கி இருக்கும்.இது நீரிழிவு நோயாளிக்கு நல்லதல்ல.
பாஸ்டியுரைஸ் பண்ணப்பட்ட தேன்
இதை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.இருப்பினும் ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு கொடுக்கக்கூடாது.
இது கச்சா தேனாக இருந்தால் இதில் சத்துக்கள் குறைவாக இருக்கும்
மற்ற தேனாக இருந்தால் அதில் சத்துக்களே இருக்காது.
பொதுவாக தேனில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் (A,D,E & K) என்று எதுவும் கிடையாது.
தேனை கடைகளில் வாங்கும் போது அதன் தோற்றத்தை கவனிக்கவும்.
அதன் லேபிளில் உள்ள சத்துக்கள் அட்டவணையை கவனிக்கவும்.மொத்த சர்க்கரை அளவு 70-80%வரை இருக்கிறதா என்று கவனிக்கவும்.80%மேலிருந்தால் அதில் வெளிசர்க்கரைகளை (ADDED SUGARS) சேர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.
புரதங்கள் வைட்டமின்கள் தாது உப்புகள் நொதிகள் இவை எதுவுமே அட்டவணையில் குறிக்கப்படவில்லை என்றால் அந்த தேன் சுத்தமான தேன் அல்ல என்று அர்த்தம்.
பொதுவாக தேனை சூடான பானங்களில் கலக்கும் போது 130டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் சூடு போகக்கூடாது.72டிகிரி செல்ஸியஸ்க்கு மேல் (130 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் ) சூடாக்கும்போது பொதுவாக பெரும்பாலான நுண்கிருமிகள் அதில் இறந்துவிடலாம்.ஆனால் முக்கியமான நொதிகளும் சிதைந்து விடலாம்.தேனின்.அதிக அமிலத்தன்மை உள்ள எந்த பொருளையும் பாஸ்டியுரைஸ் செய்யும் பொழுது 130 டிகிரிக்கு பாரன்ஹீட்டுக்கு கீழ் சூடாக்கினால் போதும்.தேன் அதிக அமிலத்தன்மை உடையது.எனவே அதை உயர் வெப்பங்களில் அதிக நேரம் சூடாக்கத்தேவையில்லை. மேலும் தேனை நேரடியாக நெருப்பில் வைத்து சூடாக்காமல் நீரிலோ அல்லது நீராவியிலோ வைத்து சூடாக்க வேண்டும்.
பாஸ்டியுரைஸ் செய்யப்பட்ட தேன் நல்லதுதான் ஆனால் கச்சா தேனாக இருக்கவேண்டும்.
தேனை கொண்டு சில சிகிச்சைகள்
1.உடற்கொழுப்பை கரைக்க :-
இளம் சூட்டில் வெந்நீர் (40degC) =1கப்
சுத்தமான தேன் =2டீஸ்பூன்
கலந்து காலையில் வெறும் வயிற்றில் தினசரி அருந்தவும்
2.இருமல் & தும்மல்
இளசூடான தேநீர் டிகாக்க்ஷன் =1கப்
சுத்தமான தேன் =1டேபிள்ஸ்பூன்
லெமன் ஜூஸ் =2 ,, ,,
இஞ்சி சாறு =2 ,, ,,
கலந்து தினமும் இரவு படுக்கும் போது அருந்தவும்
தோல் அரிப்பு,வெடிப்பு காயம் மற்றும் பரு போன்றவற்றிற்கும் தேனை பயன்படுத்தலாம்.காரணம் தேனிலிருக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஒரு கிருமி நாசினி ஆகும்.
தேனை தோல் ஈரப்பத்திற்காகவும் (Skin moisturizer) பயன்படுத்தலாம்.
தேன் ஒரு சிறந்த நுண்ணுயிர் எதிர்ப்பான் (Antibacterial) ஆகும்.
இதை உணவுப்பாதுகாப்பானாகவும் (Preservative) ஆகவும் பயன்படுத்தலாம்.
தேனின் குறைபாடுகள்
1.எல்லா பொருட்களிலுமே நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும் இது இயற்கையின் விதி.எந்த ஒரு பொருளையும் கணக்காக பயன்படுத்தினால் அதில் நன்மைகள் உண்டு. கணக்குக்கு மீறினால் அதில் தீமைகளும் உண்டு.தேனும் அதற்கு விதி விலக்கல்ல.
சுத்தமான கச்சா தேனை 1 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. காரணம் அதில் க்ளஸ்டரிடியம் போடூலினம் (C.Botulinum) என்ற கிருமி அசுத்தமாக இருக்கலாம் .இது 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்திவிடாது எனினும் 1 வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளை கீழ் கண்டவாறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம் :-
1.மலச்சிக்கல் (முதல் அறிகுறி)
2.அழ முடியாமல் பலவீனம் அடைதல் .பரிதவித்தல்
3.சதை பலவீனம் (தவழ முடியாமை)
4.கட்டுப்படுத்தமுடியாமல் தலை ஆடுதல்
5.எரிச்சல்,கோபம்,நிலை கொள்ளாமை
6.அதிக எச்சில் அல்லது கோழை வடிதல் (Drooling)
7.கண் மேல் இமை கீழ்நோக்கி கவிழ்தல் (Drooping Eye lids)
2.பதப்படுத்தப்பட்ட (Artificially Processed) தேனிலிருந்து அதன் பாகுத்தன்மையை (Molasses)வடிகட்டி நீக்கிவிடுவார்கள்.அதோடு அந்த தேனின் மற்ற நன்மைகளும்,வைட்டமின்கள் தாதுக்கள்,நொதிகள் புரதங்கள்,பைட்டோகெமிக்கல்கள் இவை எல்லாமே அதோடு நீங்கிவிடும்.மேலும் கார்ன் சிரப் போன்ற கூடுதல் சர்க்கரை வகைகளை சேர்ப்பார்கள்.அசல் தேனை விட இது தெளியாகவும் அழகாகவும் சுவையாகவும் இருந்தாலும் இதில் தேனின் பலன் கிடையாது.
சாதாரணமாக பதப்படுத்தாத தேனில் 21கிராமுக்கு 17கிராம் மொத்த சர்க்கரை இருக்கும்.அதாவது 80%.இதற்கு கூடுதலாக இருந்தால் அந்த தேன் பதப்படுத்தப்பட்டதாகும்.
3.தேன் தோல் மற்றும் தலை மயிருக்கு ஈரப்பதம் தருவதில் மிகவும் சிறந்தது ஆனால் தேனை தலையில் தடவிக்கொண்டு வெய்யில் படும்படி நின்றால் தலை முடி நரைத்துவிடும்.காரணம் தேனிலிருக்கும் க்ளூகோஸ் ஆக்சிடேஸ் என்ற நொதி க்ளூகோஸை ஹைட்ரஜன் பெராக்சைடாக மாற்றுவதால் இந்த விளைவு ஏற்படும்.
எனவே தேனை பயன்படுத்த தெரிந்த முறையில் பயன்படுத்தினால் அதில் நன்மை நிச்சயம் உண்டு .
👪
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக