செவ்வாய், 29 அக்டோபர், 2019

மருந்துகளால் உங்கள் இசிஜியில் ஏற்படும் பாதிப்புகள் -2

டிகாக்சின்(DIGOXIN)



சிலருக்கு இதயம் பலவீனமாக இயல்புக்கு குறைவாக துடிக்கும் இவர்களது இதயத்துடிப்பு சில நேரங்களில் நிமிடத்திற்கு 30கும் குறைவாக இருக்கலாம் 
இதற்கு நெருக்கடி நிலை இதய செயலிழப்பு அல்லது இரத்த குழாய் அடைப்பு நிலை இதய செயலிழப்பு அல்லது பொதுவாக இதய செயலிழப்பு என்பர்.இதை மருத்துவ மொழியில் CONGESTIVE HEART FAILURE (CHF) என்பர்.இது பற்றி இங்கு ஒரு சிறு குறிப்பு மட்டுமே பாப்போம் விளக்கமாக காண இங்கு கிளிக் செய்யவும் 
இதய தசைகளுக்கு இரத்தம் சரியாக கிடைக்கவில்லை என்றால் அவை பலவீனம் அடையும்.
இதற்கு பல காரணிகள் உண்டு.
அதில் முக்கியமாக இதய தசைகளுக்கு இரத்த ஓட்டம் தரும் கரோனரி தமனி வலை பின்னலில் ஏற்படும் அடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகிய காரணங்களினால் இதய தசைகள் பலவீனமடைந்து இதயம் சரியாக சுருங்கி விரியாது இதனால் இரத்தத்தை அது சரியாக வாங்கி அனுப்பாது இதுதான் இதய செயல் இழப்பிற்கு ஒரு காரணமாகும்
டிஜிட்டாலிஸ் பர்புரியா (D.Purpurea) அல்லது டிஜிட்டலிஸ்  லேனடா  (D.Lanata) என்பது ஐரோப்பாவின் வெப்ப மண்டல தாவரமாகும்.இதன் பூக்கள் ஊதா அல்லது வெண்ணிறத்தில் நரியின் கையுறை வடிவத்தில் இருக்கும் இதனால் இதன் வர்த்தக பெயர் foxglove என்பர்.இந்த செடியின்  இலைகளிலிருந்து  எடுக்கப்படும் glycosides என்ற வகை மருந்துகள் இதய நோய்களுக்கு நிவாரணமளிக்கின்றன.எனவே இவற்றிற்கு D.Cardiac Glycosides என்ற மருத்துவப்பெயரும் உண்டு.இவை Digitoxin,Digoxin,மற்றும் Ouabain என்று மூன்று வகைப்படும்.இவற்றில் Digoxin அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் தாக்கம் இசிஜியில் எப்படி தெரிகிறது என்பதை மட்டும் பாப்போம் மற்றவகைகளும் ஒரே மாதிரி தாக்கம் ஏற்படுத்துபவையாகவே இருக்கும் 
படம் 1

மேலே படம் 1 இல் ஒரு நார்மல் இதய துடிப்பு காட்டப்பட்டுள்ளது .இதில் P,Q,R,S,மற்றும் T-அலைகள் ஒழுங்காக இருக்கின்றன.இது எவ்வாறு Digoxin ஆல் மாறுபடுகிறது என்பதை பார்க்கலாம் 
படம் 2

மேலே படம் 2இல் மின்முனை II இன் பதிவை கவனிக்கவும்.அதில் ST -பகுதி தாழ்ந்து இருப்பதை  சிவப்பு வட்டங்கள் இட்டு காட்டப்பட்டு உள்ளது.நாம் ஏற்கனவே கண்டது போல் ST பகுதி தாழ்ந்து இருந்தால் அது ஆஞ்சைனா (மார்வலி)யின் அடையாளமாகும்.எனவே அளவு மீறிய டிகாக்ஸின் பயன்பாடு மார்வலியில் கொண்டு போய்விடும் என்பது தெளிவாகிறது 

டிகாக்ஸின் பக்கவிளைவுகள் 
1.களைப்பு ,சோர்வு,அசதி 
2.பார்வை மங்கல் 
3.மார்வலி 
4.குமட்டல்,வாந்தி.
5.ஜீரண கோளாறு 
6.தலை சுற்றல் 
7.மனப்பிராந்தி 

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

மருந்துகளால் உங்கள் இசிஜியில் ஏற்படும் பாதிப்புகள் -1

A .அமிட்ரிப்ட்டலின் (Amitriptyline)

இந்த மருந்து பெரும்பாலும் மருத்துவர்களால் மனசோர்வு (Mental Depression) நிலையை கட்டுப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்படுகிறது 
 பார்மசியில் ட்ரிப்டோமர் (Tryptomer),ட்ரிபிடிசால்(Tryptizol or Tryptozol ),அபீட்ரிப் (Abitrip),அம்பிவால் (Ambival),அமிக்கலோர்(Amichlor),அமிக்கான்(Amicon),அமிரைஸ்(Amirise),அமிட்(Amit),அமிட்டோன் (Amitone) இப்படி பல பெயர்களில் இந்த மருந்து கிடைக்கிறது 
சுருக்கமாக இதன் குணம் மத்திய நரம்புமண்டலத்தில் நார் அட்ரீனலின் என்ற ஹார்மோனை  அதிகப்படுத்தி நரம்பு மண்டலத்தை தூண்டிவிட்டு மன உற்சாகத்தை ஏற்படுத்தும்.
இதன் பக்கவிளைவுகள் ஏராளம் 
இதனை ஒத்த மருந்துகளை பொதுவாக திரிசைக்ளிக் மனச் சோர்வு  மருந்துகள் (Tricyclic Antidepressants) என்பர்.அவைஅமக்சாப்பின்(Amoxapine),டெசிபிராமின்(Desipramine),டாக்ஸாப்பின் (Doxepin),இமிப்பிராமின் (Imipramine),என இன்னும் பல மருந்துகள் இந்த வகையில் இருக்கின்றன 
நாம் இங்கு காணப்போவது இந்த வகை மருந்துகள் குறிப்பாக அமிட்ரிப்ட்டலின் நம் இதயத்தில் எந்த வகை தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை இசிஜியில் எப்படி அடையாளம் காண்பது என்பதே.

படம் 1
மேலே படம் ஒன்றில் ஒரு நார்மல் சைனஸ் ரிதம் (நார்மல் இதயத்துடிப்பு)
காட்டப்பட்டு உள்ளது.அதில் P,Q,R,S,மற்றும் T -அலைகள் தெளிவாக உள்ளன.
படம் 2
மேலே படம் 2-ல் அமிட்ரிப்ட்டலின் அதிகப்படியாக எடுத்துக்கொண்ட ஒருவரின் இசிஜி காட்டப்பட்டுள்ளது.படம் 1-உடன் படம் 2-ஐ ஒப்பிட்டுப்பார்த்தால் இசிஜி அலைகள் படம் 2-இல் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை கீழ் கண்டவாறு உணரலாம்.
1.Q-T-இடைவெளி நீண்டு இருத்தல் 
2.T-அலை உயர்ந்து இருப்பதால் S-T-பாகம் உயர்ந்து இருத்தல் .
3.QRS-கூட்டமைப்பு அகண்டு இருத்தல் 
P -அலை QRS-குள் மறைந்து இருக்கிறது.
இந்த விவரங்களிலிருந்து கீழ்கண்ட பாதிப்புகளை மேலே எண்களிட்டு குறிப்பிட்டதற்கு ஒப்ப கணிக்கலாம் 

1.இதயத்தின் கீழறைகள் சுருங்கி விரிவதில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வது  
2.இதயத்தின் கீழறைகள் சரியாக விரியவில்லை 
3.இதயத்தின் கீழறைகள் சரியாக சுருங்கவில்லை மற்றும் மேலறைகளும் கீழறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இயங்குகின்றன.
இதற்கு ஒழுங்கற்ற துடிப்பு என்பர்.மருத்துவ மொழியில் 'Arrhythmia' என்பர்.இதை சரியாக கவனிக்கவில்லை என்றால் ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும் 

டாக்ஸாப்பின் (DOXEPIN)

படம் 3
மேலே படம் 3-ல் டாக்ஸாப்பின் என்ற மற்றொரு மனஉளைச்சல் நிவாரணி இதயத்தின் மீது உண்டாக்கும் தாக்குதல் ஆகும்.இது மருந்து கடைகளில் Sinequan மற்றும் Adapin என்ற வர்த்தக பெயர்களில் கிடைக்கிறது.       
மேலே படம் 3 இல் 
1.S-T-உயர்ந்திருக்கிறது 

2.QRS-அகண்டு இருக்கிறது 

3.P-ஐ காணவில்லை 

எனவே இதிலும் ஒழுங்கற்ற இதயத்துடிப்புகள் Arrhythmia மேலே அமிட்ரிப்ட்டிலின் ஏற்படுத்தும்  பாதிப்புகளுடன் ஒத்து இருக்கிறது.                      

                                                      




வெள்ளி, 11 அக்டோபர், 2019

இசிஜியில் அன்ஜைனா(மார்வலி)வை கண்டறிவது

இசிஜியில் மார்வலி (ANGINA PECTORIS)
மார்வலி அல்லது அன்ஜைனா பெக்டோரிஸ் (Angina Pectoris) என்பது ஒரு நோய் அல்ல.ஆனால் ஒரு கோளாறின் அறிகுறியாக இருக்கலாம்.
(சொல்லியல் (Terminology )-Angina -வலி ;Pectoris -மார்பு )
படம் 1A 

NORMAL RHYTHM
படம் 1B 
பொதுவாக நம் இதயம் இரத்தத்தை உள்வாங்கி சுத்தீகரித்து உடலின் பல பாகங்களிலுள்ள திசுக்களுக்கும்  தமனிகள் (Arteries) மூலம்  அனுப்புகிறது.அதே போல தன்னுடைய திசுக்களுக்கும் கொரோனரி தமனிகள் (Coronary Arteries)
என்ற விசேஷ ரத்த குழாய்கள் மூலம்  அனுப்புகிறது.
இதன் மூலம் இதயத்தின் எல்லா பகுதிகளும் பிராணவாயு போஷாக்கு (OXYGEN ) பெறுகின்றன.இதயம் நலமுடன் இயங்குகிறது 
ஆனால் இரத்த கட்டிகள்,கொலஸ்ட்ரால் கட்டிகள்,காற்று குமிழ்கள் அல்லது ரத்தக்குழாய்களின் உள்பகுதியில் புண் அல்லது வீக்கம் (Atherosclerosis) இவற்றின் மூலம் கொரோனரி தமனி வலை பின்னலின் (Coronary Artery Network)ஏதோ ஒருபகுதியில் இரத்த ஓட்டம் தடைபட்டால் இதயத்தின் அந்த பகுதியில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் அந்த பகுதியில் உள்ள சதை கறுக்க தொடங்கும்.இதற்கு இஸ்கீமியா அல்லது புரையோடுதல் (Ischemia) என்பர் ஆரம்ப கட்டத்தில் இது மிதமாகவே இருக்கும் இந்த கட்டத்தில் இதற்கு நிலையான (Stable Angina)அல்லது மிதமான அன்ஜைனா என்பர்.இந்நிலையில் பளு தூக்கும் போது,உடற்பயிற்சியின் போது,அல்லது அலுவலக வேலை,வீட்டு வேலை இவற்றில் ஈடுபடும்போது நெஞ்சில் இறுக்கம் அல்லது வலி இருக்கும்.ஆனால் ஓய்வு எடுத்துக்கொண்டால் அந்த வலி போய்  விடும். மீன்டும் வேலைகளில் ஈடுபடும்போது அதே அளவு வலி மீண்டும் வரும்.
இதை கவனிக்காமல் விட்டால் இந்த நிலை முற்றி நிலையற்ற அன்ஜைனாவாக (Unstable Angina)வாக மாறும்.இதுவே இறுதியில் மாரடைப்பாக (Myocardial Infarction -M.I.)ஆக மாறும்.
எனவே ஆஞ்சைனா பெக்ட்டோரிஸ் என்பது வரவிருக்கும் மாரடைப்பின் அறிகுறியாகும்.  மேலே படம் -2 இல் நார்மல் இதயத்துடிப்பை மாதிரி வரைபடமாக காட்டப்பட்டுள்ளது அதேபோல் படம் 1இல் அன்ஜைனாவின்போது போது இந்த நார்மல் ரிதம் இசிஜியில் எப்படி மாறுகிறது என்று காட்டப்பட்டுள்ளது.
அதாவது இசிஜியின் ST-பகுதி மிக முக்கியமானது.இதில்தான் இதயத்தின் கீழறைகள் (Ventricles)சுருங்கிய நிலையில் விரிவடைய எடுத்துக்கொள்ளும் நேரம் விரிவடையும் விசையின் அளவு ஆகியவை அடங்கி இருக்கிறது.இசிஜியில் இதில் ஏற்படும் மாற்றங்கள் நிச்சயம் இதயத்தில் கோளாறு இருக்கிறது என்பதை அறிவிக்கும்.
ST -பகுதி உயர்ந்திருந்தால் மாரடைப்பு உடனே வரப்போகிறது என்று அர்த்தம் அது தாழ்ந்திருந்தால் அன்ஜைனாவிற்கு பிறகு அது வரப்போகிறது என்று அர்த்தம்.
இனி மாதிரி இசிஜிகளில் அன்ஜைனாவை எப்படி அடையாளமிடுவது என்று காணலாம்.

படம் 2A
<
Stable Angina 
படம் 2B



மேலேயுள்ள இரண்டு படங்களிலும் நிலையான அல்லது மிதமான அன்ஜைனாவின் போது எடுக்கப்பட்ட இசிஜி கட்டப்பட்டு உள்ளன.படம் 2B யில் ஒரு நோயாளியின் இசிஜி மாதிரி கட்டப்பட்டுள்ளது .இதில் மின் முனை II -ன் பதிவில் மற்றும் மின்முனைகள் V2 மற்றும் V3 ஆகியவற்றின் பதிவுகளிலும் ST -பகுதி தாழ்ந்திருப்பதை காணலாம்.


                                            படம் 3
மேலே படம் 3 இல் ஒரு நோயாளியின் நிலையற்ற அன்ஜைனா வின் போது எடுக்கப்பட்ட  இசிஜி காட்ட ப்பட்டுள்ளது .இதிலும் மின்முனைகள் II மற்றும் V3 ஆகியவற்றின் பதிவுகளில் ST -பாகம் உயர்ந்திருப்பதை காணமுடிகிறது.
எனவே அன்ஜைனா அது நிலையானதோ அல்லது நிலையற்றதோ இரண்டிலுமே ST பாகம் உயர்ந்து இருக்கும் என்பது தெளிவு.
இசிஜியில் மின்முனைகள் II ,V3,V4,மற்றும் V6 ஆகியவை இதை தெளிவாக காட்டும் ஏனென்றால் இவை இதயத்தை சரியான கோணத்திலிருந்து பார்க்கின்றன 
இதயத்தின் பெரும்பாலான கோளாறுகள் இதயத்தின் இடது கீழ் கோணத்திலிருந்துதான்  உண்டாகின்றன.

புதன், 9 அக்டோபர், 2019

மாரடைப்பை இசிஜியில் கண்டறியும் பயிற்சி -1

இசிஜியில் மாரடைப்பு -1

இதயத்தில் ஏற்படும் எந்த கோளாறும் பொதுவாக மாரடைப்பில் கொண்டு போய் விடலாம்.மாரடைப்பு வரப்போவதை முன்கூட்டியே இசிஜியின் மூலம் அறிந்து கொள்ளவும் முடியும்.சாதாரண நிலையில் ஒருமனிதனின் இதயத்துடிப்பு கீழ்கண்டவாறு இருக்கும் (படம்-1)
படம்-1
மேலே படம்-1 கண்டபடி P,Q,R,S, மற்றும் T அலைகள் தெளிவாக இருக்கின்றன.இது இதயத்தின் நார்மல் ரிதம் ஆகும் 

பொதுவாக மாரடைப்பு வரப்போவது என்பது இதயத்தின் கீழ் அறைகளில் ஏற்படும் நோய் நிலைகளே காரணமாகும் 



படம் 2

மேலே படம் 2  மாரடைப்பின் போது இசிஜி யில் ஏற்படும் மாற்றம் என்ன என்று ஒரு மாதிரிக்காக காட்டப்பட்டுள்ளது.இது கைகளினால் மாதிரிக்காக வரைந்த படம்.இதில் மாரடைப்பின் போது ST -பகுதி X -axis ஐ விட்டு மேலே உயர்ந்திருப்பதை காணலாம்.இதுதான் பெரும்பாலும் மாரடைப்பின் போதோ அல்லது  அதற்கு முன்போ இசிஜியின் பொது அமைப்பு.இதை வைத்துதான் நாம்  ஒருவரின் இசிஜியை ஆராய வேண்டும்.
படம் 3A 
படம் 3B 

மேலே படம் -3A மற்றும் 3B ஆகிய இரு படங்களிலும்  காட்டியுள்ளது கீழ் முனை மாரடைப்பு (Posterior Myocardial Infarction) ஆகும்.இது இதயத்தின் கீழ்  அறைகளின் கீழ் நடுப்பகுதியில்(Inter Ventricular Septum -IVR) உண்டாகும் மின் அடைப்புகளால் உண்டாவது.இதை இசிஜியில்  இதயத்தை இடது கீழிருந்து நோக்கும் மின் முனைகள் Lead-II,III,aVF ,V4 ஆகியவற்றின் பதிவுகளில் தெளிவாக அறியலாம் அதாவது பொதுவாக ST பகுதி படுகோட்டை(X-axis) விட்டு உயர்ந்து இருக்கும். (பார்க்க படம் 2).இதே போல் மேல் நிலை மாரடைப்பை இசிஜியின் மின்முனைகளான I,V1,V2 மற்றும் aVF -ன் பதிவுகளில் காணப்படும் உயர்ந்த ST பகுதியை வைத்து கணிக்கலாம்.காரணம் அந்த மின் முனைகள் இதயத்தை மேலிருந்து நோக்குகின்றன.
படம் 4
மேலே படம் -4 காட்டியுள்ளது வலது பக்க HIS-கொத்து கிளை மின் அடைப்பினால் உண்டாகும் மாரடைப்பு.இதை மருத்துவ மொழியில் MI DUE TO RBBB என்பர்.நம் இதயத்தில் கீழ் அறைகளின் இரு பக்க வாட்டிலும் HIS கொத்தின் கிளைகள் வலது இடது என்று இரு பக்கமும் கிளை விட்டு படர்ந்து இருக்கும்.HIS-கொத்து மேலே AV-முடிச்சிலிருந்து மின் அலைகளை வாங்கி தன் இருக்க கிளைக்கும் படர விடும்.இப்போது சில காரணங்களுக்காக வலது புறம் மின் அலை பரவாமல் தடுக்கப்பட்டால் வலது புற கீழறை சுருங்கி விரிவதில் தாமதம் ஏற்படும் இதனால் இசிஜி யில் மாற்றம் ஏற்படும் அதுதான் படம் 4-ல் காட்டப்பட்டு உள்ளது.
மின் முனைகள்  II,V1,V2 மற்றும் V3 ஆகிய பதிவுகளில் ST -பகுதி உயர்ந்து இருப்பதை சிவப்பு வட்டமிட்டு அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.
இதே போல் இடது HIS-கிளையிலும் மின் அடைப்பு  ஏற்படலாம்.இது மருத்துவமொழியில் MI Due to LBBB என்பர்.இதை இசிஜியில் இடது கோணத்திலிருந்து இதயத்தை நோக்கும் மின்முனைகளான II ,aVL,V4,V5,V6 ஆகிய பதிவுகளில் ST -பகுதி உயர்ந்திருப்பதை வைத்து கணிக்கலாம். இரண்டுமே ஆரம்பகட்டத்தில் அறிகுறிகள் காட்டாது.ஆனால் இதயத்தில் வயது முதிர்வினாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகள் உண்டாகும் போது இந்த மின் அடைப்புகள் மாரடைப்பு போன்ற தீவிர விளைவுகளை உண்டாக்கும்.

பொதுவாக மாரடைப்பில்  இசிஜியின்  தோற்றம் :-

விளம்பரம் 
POPPEY M3 SMART BAND FITNESS TRACKER WATCH. Price : INR.425/=(offer )
.போன் வசதி உண்டு.
.பிரத்தியோக App (Veryfit2.0 from Playstore) மூலம் ஆண்டிராய்டு போன்களுக்கு SMS அனுப்பலாம்
.இதில் பொருந்தியுள்ள water proof பட்டியில் ப்ளூ டூத்,B.P.sensor,activity recorder,sleep monitor,calorie burn indicator,ஆகிய வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.
.இதில் உங்கள் இதயத்துடிப்பை அளவீடு செய்யலாம் 
.உங்கள் இயக்க ங்களை கணிப்பீடு செய்யலாம் (Activity Tracker)
.நடை அளவீடு (Steps Counter)
.இரத்தக்கொதிப்பு அளவீடு (B.P.Measurements)
.LED தொடுதிரை 
படம் 5
 


 மேலேயுள்ள படம் 5 இல் பொதுவாக மாரடைப்பின் இசிஜி அடையாளம் காட்டப்பட்டுள்ளது .காரணங்கள் வித்தியாசமாக இருந்தாலும் இசிஜியில் Lead -II பதிவில்  ST -பாகம் உயர்ந்திருந்தாலே அதை மாராடைப்பின் அறிகுறி என்றே கொள்ளவேண்டும்  (பார்க்க படம்-2) 
 விளம்பரம்  (ULTRACET PLASTIC PORTABLE BLENDER CUP)
Price:(OFFER):INR.506/=
Original Price:INR.999/=X
You Save    INR.493/=(49%)
USB வசதியுடன் வந்துள்ள புதிய மாடல் கையடக்க கப் பிளண்டர் 

இதை   ஆபீசில் வீட்டில் எந்த இடத்திலும் நேரத்திலும் பயன்படுத்திக்கொள்ளலாம் 
கையடக்கமானது.
உங்கள் கைப்பையில் கச்சிதமாக பொருந்திக்கொள்ளும் 

                                        தொடரும் .....

புதன், 18 செப்டம்பர், 2019

இசிஜி பயிற்சிகள் -ஏ -நெஞ்சு படபடப்புகள் (நோய் நிலை -PALPITATIONS)

நோய் நிலையில் நெஞ்சு படபடப்பின் இசிஜி மாதிரிகளை படிப்பிக்கும் பயிற்சிகள் 

ஒழுங்கற்ற இதய துடிப்புகள் :(CARDIAC ARRHYHMIAS)
1.மேலறை குறுந்துடிப்புகள் 
இதை மருத்துவ மொழியில் ATRIAL FIBRILLATION என்பர்.                                        
கீழே படம் -1 இல் ஒரு நார்மல் ரிதம் காட்டப்பட்டு உள்ளது .
படம்-1

இந்த நார்மல் சைனஸ் ரிதமில் உள்ள P,Q,R,S, மற்றும் T அலைகளை நன்றாக மனதில் கொள்ளுங்கள்.இதை அடிப்படையாக வைத்துதான் இனி நோய் நிலையில் எடுக்கப்பட்ட இசிஜிகளின் மாதிரிகளை புரிந்து கொள்ளும் பயிற்சிகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 
படம்-2
1.மேலறை குறுந்துடிப்புகள் (Atrial Fibrillation)
மேலே உள்ள இசிஜி மாதிரியில் (படம்-2)  lead -II பதிவுகளை பார்க்கவும்.அதில் P-அலைகள் இல்லை.இன்னும் உற்று நோக்கும் பொது P-அலைகளுக்கு பதில் நெளிவுகளாக அலைகள் இருக்கின்றன இவற்றை F-அலைகள் என்று கூட சொல்லலாம்.நாம் ஏற்கனவே முன் பதிவுகளில் P-அலை என்பது நோயற்ற  இதயத்தின் மேலறைகள் சுருங்குவதால் ஏற்படுவது என்று அறிந்தோம்.ஆனால் P-அலை நார்மலாக இல்லாமல் நெளிவுகளாக இருப்பதால் இதை மேலறைகள் குறுந்துடிப்பு (Atrial Fibrillation) என்பர்.இதில் R -R இடைவெளி நீண்டும் குறுகியும் இருக்கும் சில இடங்களில் 3LS அளவிலும் சில இடங்களில் 2LS அளவிலும் இருக்கும் எனவே நாடித்துடிப்பை கீழ் கண்டவாறு கணக்கிடலாம்.
     HR (நாடித்துடிப்பு )=300 x 2/2+3=600/5
                                                              =100 bpm 
இந்த அளவு 100 என்ற ரீதியிலும் இருக்கலாம்.
6 செகண்ட் முறையில் 6 செகண்டுகளில் (30LS) 11 R-அலைகள் இருப்பதால் HR =11 X 10 =110 bpm ஆகும்.
இதில் lead -I இல் எதுவுமே சரியாக பதிவாகவில்லை ஏனென்றால் இதுதான் இதயத்தை 90 டிகிரியில் இருந்து நோக்குகிறது இது மேலறைகளை சரியான கோணத்தில் நோக்குவதால் இதில் எதுவுமே சரியாக பதிவாகவில்லை ஏனென்றால் மேலறைகள் சரியாக சுருங்கி விரியவில்லை 
மேலும் அலைகள் ஒழுங்கற்றும் அடிக்கோட்டிற்கு மேலும் கீழுமாக இருக்கின்றன.மேலறைகள் சரியாக சுருங்கிவிரியாததால் இரத்தம் சரியாக வெளியேறாமல் தங்கும் இதனால் பொடி பொடி உறைவுகளாக (Clots)மாறி மூளை மற்றும் நுரையீரல் ரத்த குழாய்களில் அடைப்புகள் உண்டாகி மூச்சு திணறல் மற்றும்  ஸ்ட்ரோக் ஆகியவை ஏற்படலாம்

அறிகுறிகள் :-

1.நெஞ்சு வேகமாக படபடத்தல் 
2.பலஹீனம்,அசதி,சோர்வு  
3.உடற்பயிற்சி செய்ய இயலாமை 
4.தலைவலி 
5.மூச்சு திணறல் 
6.மயக்கம் 
7.நெஞ்சு வலி 

காரணிகள் :-

1.உயர் இரத்த அழுத்தம் 
2.மாரடைப்பு 
3.கரோனரி தமனியில் கோளாறு 
4.இதய வால்வுகளில் கோளாறு 
5.பிறவியிலேயே இதயம் பழுதாகி இருத்தல் 
5.தைராய்டு மிகைபாடு 
6.வளர்சிதை மாற்றங்களில் கோளாறு (Metabolic Imbalances)
7.அதிக காபி,ஆல்கஹால்,மற்றும்  புகைப்பழக்கம் 
5.தாது உப்புகள் ஏற்ற தாழ்வுகள் 
(உம்)பொட்டாசியம்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் குறைபாடு 
சோடியம் மிகைபாடு -மொத்தத்தில் இறுதிக்கட்ட சிறுநீரக கோளாறு)
இந்த காரணிகள் பெரும்பாலும் கீழே நாம் விவரித்திருக்கும் இதய மேலறை படபடப்பிற்கும்(Atrial Flutter) பொருந்தும்.எனினும் மேலறை குறுந்துடிப்பு ,மேலறை படபடப்பைவிட கடுமையானதாக இருக்கும் . 



                                 படம்-3
2.மேலறை படபடப்பு :-(ATRIAL FLUTTER )
மேலே படம் 3 இல் காட்டப்பட்டிருக்கும் மாதிரி இசிஜி சிறிது வித்தியாசமானது .இதிலும் P -அலைகள் இல்லை .F-அலைகள் இருக்கின்றன.அதே சமயம் R-R-இடைவெளி மிக நீண்டு 8LS வரை இருப்பதால் இதில் நாடிதுடிப்பின்(HR) அளவு 
     300/8 =ஏறக்குறைய 40 bpm ஆக இருப்பதால் இந்த நிலை Bradycardia ஆகும்.இந்த இசிஜியின் நோய் நிலை ஒருவித நெஞ்சு படபடப்பை(Palpitations)  குறிக்கும்.இதற்கு மருத்துவ மொழியில் மேலறை படபடப்பு  (Atrial Flutter )என்பர். இதில் முக்கியமாக ரிதம் ஒழுங்காக அடிபிறழாமல் இருக்கும்.
மேலறை படபடப்பில்  மின்னோட்டமானது SA முடிச்சிலிருந்து கீழிறங்கி வழமைபோல் AV முடிச்சிற்கு போகாமல் மீண்டும் மேலேயே வட்டமடிக்க துவங்கும்.இதனால் மேலறைகள் வேகமாக துடிக்கும் கீழறைகள் அதற்கு ஈடாக துடிக்காமல் சம்பந்தமில்லாமல் துடிக்கும்.இதில் மேலறைகள் வேகமாகவும் (Tachycardia )
கீழறைகள் மெதுவாகவும் (Bradycardia) துடிக்கும் 

அறிகுறிகள்:-

1.இதயம் படபடத்தல்,பந்தய குதிரைபோல் படுவேகமாக படபடத்தல் 

2.வேகமான நாடித்துடிப்பு 
3.மூச்சு திணறல் 
4.உடற்பயிற்சி மற்றும் ஓட்டம் போன்ற செயல்களில் இயலாமை 
5.நெஞ்சு வலி,இறுக்கம்,கனம் 
6.தலை சுற்றல்,தலை வலி ,மயக்கம் 
காரணிகள் :-

1.இரத்த அழுத்தம் 
2.இதயம் செயலிழப்பு 
3.பிறவி இதய கோளாறுகள் 
4.கரோனரி தமனிகளில் அடைப்பு 
5.ஈரிதழ் வால்வு கோளாறுகள் 
6.இதய தசைகள் பலவீனமடைதல் 
7.இரத்த குழாய்கள் தடித்தல் .-தொடரும் 

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

இசிஜி அரிச்சுவடி -எ-மாதிரி இசிஜியை எப்படி படிப்பது ?பயிற்சிகள் -1

மாதிரி இசிஜி ரிப்போர்ட்களை நாமே படிக்கும் முறைகள் 

இனி நாம் நமது சொந்த கையடக்க இசிஜி கருவியை பயன்படுத்தி நம் இசிஜியை விரல் தொடுகையில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக கருவியில் எடுக்கப்படும் இசிஜி கீழ்கண்டவாறு இருக்கும்
படம்-1
அதற்கு முன் சில அடிப்படை உண்மைகளை தெரிந்து கொள்வோம் 
படம் 2
மேலே உள்ள படம் 2 இல் ஒரு இசிஜி ரிதமில் இருக்கும் பகுதிகள் மற்றும் அலை இடைவெளிகள் கோடிட்டு கட்டங்களாக குறிக்கப்பட்டுள்ளன 
மிக முக்கியமான பகுதிகள் மூன்று.அவை 
1.PR-பகுதி -இது P-அலை முடியும் இடத்திலிருந்து Q-அலை ஆரம்பிக்கும் இடம் வரை.இதன் நீளம் 0.12 -0.20 வினாடிகள்   இருக்கவேண்டும்.அதாவது 3 to 4 சிறிய சதுரங்கள் வரை இருக்கலாம்.
QRS-கூட்டமைப்பு :-இது Q-அலையின் ஆரம்பத்திலிருந்து R-அலையில் உயர்ந்து S-அலையில் முடியும்.இந்த கூட்டமைப்பு இதயத்தின் கீழ் அறைகள் சுருங்குவது என்று நாம் ஏற்கனவே பார்த்தோம்.இதன் அகலம் 0.12 வினாடிகளுக்கு கீழே இருக்க வேண்டும்.அதாவது 3 சிறிய சதுரங்கள் வரை இருக்கலாம்.அதற்கு மேல் இருந்தால் இதயத்தின் கீழறைகள் கட்டுக்கோப்பில் இல்லை என்று அர்த்தம்.இதயத்தின் மின்கடத்தலில் வலது அல்லது இடது புறத்தில் அடைப்பு இருக்கலாம்.
QRS-ன் உயரம் 2.5 to 3 mV வரை (மின் முனைகள் I,II,or aVF)இருக்கலாம்.அல்லது 1mV (சிறிய மார்பு மின்முனைகள் V5 ,V6) இருக்கலாம்.Y-கோட்டில் 1mV  என்பது உயரத்தில் 1 சிறிய சதுரம் ஆகும்.
ST -பகுதி :-இந்த பகுதியும்  இசிஜியின் மிக முக்கிய பகுதியாகும் இதன் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்  மாரடைப்பு மற்றும் மார் வலி ஆகியவற்றின் அறிகுறிகளாகும்.

                               FIG-3

மேலேயுள்ள படம் 3 இல் உள்ளபடி இந்த ST -பகுதி  உயர்ந்து இருந்தால் அது மாரடைப்பின் அடையாளம்.தாழ்ந்து இருந்தால் அது மார்வலியை குறிப்பதாகும்
சாதாரணமாக இதன் நீளம் 5 டு 150 மில்லி வினாடிகள் ஆகும். 
PR -இடைவெளி:-இதுவும் ஒரு முக்கியமான இசிஜியின் அங்கமாகும்.
இதன் நீளம் 0.12 To 0.20 வினாடிகள்  வரை இருக்கலாம் அதாவது 3 சிறிய சதுரங்களில் இருந்து 4 சிறிய சதுரங்கள் வரை இருக்கலாம்.
இதன் அளவு அதிகமாக இருந்தால் அது மின் கடத்தலில் தடை இருக்கிறது என்று அர்த்தம்.இது குறைவாக இருந்தால் மின்கடத்தல் அளவு மீறி இருக்கிறதென்று அர்த்தம்.இதற்கு மருத்துவ மொழியில்  Wolff Parkinson White Syndrome or Lown-Ganong-Levine Syndrome.என்பர்.இந்த நிலைகள் பற்றி பின்னால் வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.
QT-இடைவெளி :-இதுவும் மிக முக்கியமான இசிஜி யின் அங்கமாகும்.திருத்தப்பட்ட QTc இடைவெளியை கீழ்கண்ட சூத்திரத்தில் கணக்கிடலாம்.
QTc =                   

QTc=QT interval corrected
RR=The interval between two R-waves

ss-small squire
LS- Large Squire






இதன் சரகம் (RANGE) 0.38 to 0.42 வரை இருக்கலாம்.அதாவது 9.5 to 10.3 சிறிய சதுரங்கள் வரை இருக்கலாம்.இந்த அளவு அதிகமானால் அது மார் படபடப்பின் அடையாளமாகும்.

இசிஜி பயிற்சிகள் 
படம் 4A 

படம் 4-A யில் ஒரு நார்மல் இசிஜி ரிப்போர்ட் மாதிரி கப்பட்டுள்ளது.இதை கீழ்கண்டவாறு நாம் பரிசோதிக்கலாம்:
முதலில் இடது கோணத்தில் இருந்து இதயத்தை நோக்கும் மின் முனைகளான II ,V5,மற்றும் V6 ஆகியவற்றின் பதிவுகளில் அலைகள் பாசிட்டிவ் ஆகவும் P,Q,R,Sமற்றும் T அலைகள்,பகுதிகள் மற்றும் இடைவெளிகள் ஆகியவை தெளிவாகவும் இருக்கின்றன இதயத்தை நேர் 90 டிகிரியில் இடது மேலிருந்து நோக்கும் மின் முனை I யிலும் பாசிட்டிவ் ஆகவே இருக்கிறது இந்த பதிவுகள் அனைத்தும் படம்-2 இல் கட்டப்பட்ட மாதிரிக்கு ஒத்து இருக்கிறது.
அதே சமயம் இதயத்தின் மின் இயக்க கோணத்திற்கு (NORMAL AXIS )க்கு எதிர் திசையில் வலது கோடியிலிருந்து நோக்கும் மின் முனை aVR,மேலிருந்து நோக்கும் V1 மற்றும் V2 ஆகியவற்றிலும் அலைகள் நெகடிவ் ஆக பதிந்து இருப்பதால் இது ஒரு நார்மல் இசிஜி ஆகும்.இதயம் மிக ஆரோக்கியமாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.இதில் நம்முடைய நாடி துடிப்பையும் கணக்கிடலாம்.மின் முனை I அல்லது மின் முனை II பதிவில் ஏதாவது இரண்டு அடுத்தடுத்துள்ள R -அலைகளுக்கிடையே உள்ள பெரிய சதுரங்களை (LS) எண்ணுங்கள் 
அவை இந்த இசிஜி யில் 5 சதுரங்கள் ஆகும் 
ஆகவே  HR (நாடித்துடிப்பு)=300/5=60 bpm 
மற்றொரு முறைப்படி 30 LS களுக்கிடையே 6 R-அலைகள் இருக்கின்றன 
எனவே HR      = 6 * 10=60 bpm 
படம் 4A ஐ இன்னும் தெளிவாக வேறு அமைப்பிலும் காட்டலாம்.கீழே படம் 4-B -ஐ பாருங்கள்.
படம் 4B
மேலே உள்ள படம் 4-B வேறு ஒரு மாதிரி இசிஜி ரிப்போர்ட் ஆகும். .முதலில் நாம் ஒரு இசிஜி ரிப்போர்ட்டை பரிசோதிக்கும் பொது அதில் இருவழி மின் முனை II பதிவுகளை 
பார்க்கவேண்டும்.ஏனென்றால் அதுதான் இதயத்தை சரியான இடது கோணத்தில் இருந்து கவனிக்கிறது 
பிறகு மற்ற இடது கோண மின் முனைகளான I,V5 மற்றும் V6 ஐ பார்க்கலாம்.இவை அனைத்துமே பாசிட்டிவ் ஆக அலைகள் தெளிவாக இருக்கும் பட்சத்தில் இசிஜி நார்மல் ஆக இருக்கிறது எனலாம் 
சில நேரங்களில் மின் முனை aVF பாசிட்டிவ் ஆகவும் aVL -ல் நெகடிவ் ஆகவும் இருக்கும்.சிலசமயம் aVF இல் நெகடிவ்  ஆகவும் aVL -ல் பாசிட்டிவ் ஆகவும் இருக்கலாம் இதுவும் நார்மல்தான் எனினும் இது பற்றி பின் வரும் பதிவுகளில் விளக்கமாக பார்க்கலாம் 
வலது கோண மின் முனையான   aVR ,இல் அலைகள் நெகடிவ் ஆக பதிவாகி இருக்கிறது 
எனவே இது நார்மல் இசிஜி ஆகும் 

நோயாளியின் இசிஜி மாதிரிகள் 

1.மாரடைப்பு -கீழ்நிலை மின் தடையால் மாரடைப்பு :-
படம் -5A 
படம் 5 B
மேலே உள்ள இரு படங்களிலும் உள்ள இசிஜி மாதிரிகள் கீழ் சுவர் மின் தடையால் ஏற்பட்ட மாரடைப்பு நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்டது 
இதயத்தை கீழிருந்து நோக்கும் மின் முனைகளான III,II மற்றும் aVF இன் பதிவுகளை நோக்கினால் போதும் 
அதில் ST -பகுதி கீழ் தள கோட்டை (ஐசோஎலக்ட்ரிக் கோடு) விட்டு மேலே உயர்ந்திருப்பதால் இது மாரடைப்பு ஆகும்.இதற்கு மருத்துவ மொழியில் Posterior Wall Conduction Block என்பர்.
மேல்நிலை மின்தடை மாரடைப்பு 
படம் 6

மேலேயுள்ள இசிஜி வேறு ஒரு விதமான மாரடைப்பை காட்டுகிறது இதில் இதயத்தை மேல் பகுதியில் இருந்து கவனிக்கும் மின் முனைகள் I,V2 to V6 அனைத்திலும் ST -பகுதி உயர்ந்திருக்கிறது.
இதயத்தை கீழிருந்து நோக்கும் aVF ,III மற்றும் II ஆகிய முனைகளின் பதிவுகளில் ST பகுதி கீழிறங்கியும் இருப்பதால் இது மேல் சுவர் மின்தடை மாரடைப்பை உணர்த்துகிறது.இதற்கு மருத்துவ மொழியில் Anterior Wall Conduction Block என்பர்.
நெஞ்சு படபடப்பு -1
படம் 7A 


படம் 7B

மேலேயுள்ள இரன்டு இசிஜி களும் நெஞ்சு படபப்பு நோயாளியிடம் எடுத்தது 
நெஞ்சு படபடப்பில் பலவகை உண்டு 
இது சாதா நெஞ்சு படபடப்புதான் மற்றவற்றை விளக்கமாக பின் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.இதில் முக்கியம் கவனிக்க வேண்டியது நாடிதுடிப்புதான் நாடித்துடிப்பு 100 க்கு மேல் இருப்பதால் இது Palpitation எனப்படும் நெஞ்சு படபடப்பு ஆகும் இதில் ஆபத்தானதும் உண்டு அவற்றை பிறகு பார்க்கலாம் 
இதன் காரணிகள் ,
1.மிகு தைராய்டு (Hyperthyroidism)
2.இடது பக்க மேல் கீழ் அறைகளுக்கு இடையில் உள்ள ஈரிதழ் வால்வ் கோளாறு (Mitral Valve Prolapse ) 4.பயம் 
6.மன உளைச்சல்          தொடரும் ....

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

இசிஜி அரிச்சுவடி -ஊ -




        இசிஜி புற,இயல்பு மற்றும் நோய்க்குறி இயல்

;இசிஜியை அடையாளமிட்ட பிறகு அதன் அலைகளின் அமைப்பு,தோற்றம் அவற்றின் இயல்பு இவற்றை கொண்டு அவை உணர்த்தும் நோய்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம் 
நாம் இசிஜியை ஆய்வு செய்யும் முன் அந்த இசிஜியின் அதன் செல்லுபடியை (VALIDITY) அல்லது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் .அதாவது அந்த இசிஜி எடுக்கப்பட்டவிதம்,இசிஜி கருவியின் நம்பகத்தன்மை,மின் முனைகள் சரியாக பொறுத்தப்பட்டனவா போன்றவற்றை உறுதி செய்யவேண்டும். இது மிகவும் எளிமையானது.       

படம்-1
படம்-1 இல் சாதாரண ஒரு நார்மல் சைனஸ் ரிதம் இரண்டு மின் முனைகளில் பதிவானதை குறிப்பிடுகிறது.அவை முறையே மின் முனை -II ,மற்றும் aVR ஆகும் .மின் முனை-II இதயத்தின் கீழ் அறைகளை கீழிருந்து நோக்குவதாலும் இதயத்தின் நார்மல் கோணத்தில்(NORMAL AXIS-30To +90) மின் ஓட்டத்தின் நார்மல் அச்சுவின் கோணத்தில் இருப்பதாலும் இதில் இசிஜியின் பதிவுகள் மேலெழுந்த நிலையில் பாசிட்டிவ் ஆக இருக்கிறது. aVR மின் முனை வலது புறமிருந்து இதயத்தை நோக்குவதால் அதன் பதிவு எதிரிடையாக கண்ணாடியில் விழும் பிம்பத்தைப்போல் இருக்கிறது (பார்க்க படம்-1).இதேபோல் நார்மல் சைனஸ் ரிதம் aVF ,V5,V6 போன்றவற்றிலும் பாசிட்டிவ் ஆகவே இருக்கும்.காரணம் aVF இதயத்தை நார்மல் கோணத்தில் மேலிருந்தும் ,V5,V6 ஆகியவை இதயத்தின் இடதுபுறமிருந்தும் நோக்குகின்றன.
இப்படி இல்லாமல் aVR இல் ரிதம் பாசிட்டிவ் ஆக பதிவாகி மற்ற மின் முனைகளில் ரிதம் நெகட்டிவ் ஆக கீழ் நோக்கியும் பதிவாகி இருந்தால் அதற்கு இரண்டு காரணங்களை குறிப்பிடலாம்.
1.மின் முனைகள் மாற்றி பொருத்தப்பட்டு இருக்கலாம் 
2.Dextrocardia (இதயத்தின் கோணம் வலது பக்கம்)புரண்டு இருக்கலாம்.Dextrocardia என்ற நிலை இதயத்தின் வலது புறம் ஏதோ பிரச்சினை என்பதை குறிக்கும் 
அப்படி இல்லை என்றால் முதல் காரணமாகத்தான் இருக்கும்.முதல் காரணம் என்றால் அந்த இசிஜி செல்லுபடி ஆகாது(INVALID ).திரும்பவும் எடுக்கவேண்டும்.
P-அலையின் தோற்றம் ,இயல்பு ,நோய்க்குறி :-
படம்-2
படம்-2 இல் காட்டியபடி P -அலை நான்கு விதமாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகளில் இருக்கலாம்.
முதலில் P-அலையை பற்றி தெரிந்து கொள்வோம்.இதயத்தின் மேல் அறைகள் (ATRIA) சுருங்குவதால் இசிஜியில் ஏற்படும் பாசிட்டிவ் அதிர்வுதான் P -அலை என்பது நாம் முன்பே அறிந்ததுதான்.எனவே இதன் தோற்றத்தில் ஏற்படும் மாறுதல்கள் இதயத்தின் மேலறைகளில் ஏற்படும் நோய்களை குறிக்கும் என்பது தெளிவாகும்.மேலே படம்-1 இல் முதலாவது உள்ள P -அலை நார்மல் ஆகும்.அடிகோட்டிலிருந்து உயரே 2.5மிமீ உயரமும் அதே அளவு அகலமும் கொண்ட ஒரு அரை வட்டமாகும்.இது மின் முனை -II -இல் பதியப்பட்டதாகும்.
2-ஆவது P-அலை மேலே கூம்பு வடிவ முனையை கொண்டிருக்கிறது.இந்த அமைப்பில் இருந்தால் அதன் அர்த்தம் இதயத்தின் வலது மேல் அறையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது எனவே அது சரியாக சுருங்க முடியவில்லை என்று அர்த்தம்.எனவே இதயத்தின் இடது பக்கமும் மின் அலைகள் பரவ முடியாமல் இடது அறையும் சரியாக சுருங்காமல் இப்படி கூம்பு வடிவ P-அலையை உண்டாக்கி இருக்கின்றன.
3-வது P-அலை M-வடிவத்திலோ அல்லது ஒட்டகத்தின் முதுகு வடிவிலோ இருக்கிறது இதற்கு அர்த்தம் இதயத்தின் இடது மேல் அறை வீங்கி இருக்கிறது என்று பொருள்.இப்படி அறைகள் வீ ங்குவதற்கு பொதுவாக அதன் கீழ்நோக்கி திறக்கும் வால்வுகள் (ஈரிதழ் மற்றும் மூவிதழ்) சரியாக வேலை செய்யாமல் இருப்பதே காரணம்  ஆகும் 
3-ஆவது P-அலை மறைந்து இருக்கிறது உற்று நோக்கினால் சிறு சிறு துடிப்புகளாக இருக்கலாம்.இதை F-அலை என்றும் கூறலாம் 
இந்த நிலை மேலறை குறுந்துடிப்பு  (ATRIAL FIBRILLATION)என்ற மிக ஆபத்தான நிலை ஆகும்.
4-ஆவது உள்ள படத்தில் QRS-க்கு முன்பு பல P-அலைகள் இருக்கும்.இந்நிலைக்கு மேலறை படபடப்பு என்பர்(ATRIAL FLUTTER).இதில் மேலறையின் துடிப்புகள் வேகமாக இருக்கும்  இருக்கும்.கீழறைகளின் துடிப்பு அதற்கேற்றமாதிரி இருக்காது.  
QRS-கூட்டமைப்பு -தோற்றம் இயல்பு நோய் குறி  :-
நாம் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் அறிந்த மாதிரி QRS-கூட்டமைப்பு இதயத்தின் கீழ் அறைகள் சுருங்குவதால் உண்டாவது ஆகும்.எனவே QRS-இல் ஏற்படும் மாற்றங்கள் குளறுபடிகள் அனைத்தும் இதயத்தின் கீழ் அறைகளில் ஏற்படும் நோய் குறிகள் ஆகும்.
படம் -3

 மேலே படம்-3 இல் உள்ள இசிஜி முறையே மின்முனைகள் V1,V6 ஆகியவற்றின் பதிவுகள் ஆகும்.மின்முனை--V1 நடு மார்பு எலும்பின் 4 ஆவது 5ஆவது விலா எலும்புகளுக்கிடையில் வலது புறமிருந்து இதயத்தின் கீழறைகளின் நடுப்பகுதியை நோக்கிக்கொண்டு இருக்கும் இதயத்தின் மின் ஓட்டம் நார்மலாக வலமிருந்து இடமாக இந்த மின்முனைக்கு எதிர்திசையில் இருப்பதால் இந்த மின்முனை நெகட்டிவ் அலைகளை பதிவுசெய்யும்.ஆனால் அசாதாரண நிலையில் மின்னோட்டம் இடமிருந்து வலமாக இருந்தால் இது பாசிட்டிவ் ஆக அலைகளை பதிவு செய்யும் 
இதே போல் V-6 மின்முனை இடது கோடியில் அக்குள் பகுதியிலிருந்து இதயத்தின் கீழறைகளை நோக்குவதால் V1 ன் பதிவுகளுக்கு எதிராகவே அலைகளை பதிவு இருக்கும் . இதைத்தான் மேலேயுள்ள படம்-3 இல் காண்கிறீர்கள்.
முதலாவது பதிவு நார்மல் QRS ஆகும்.
இது V1-ல் நெகட்டிவ் ஆகவும் V-6-ல் பாசிட்டிவ் ஆகவும் இருக்கிறது 
2-ல் வலது பக்க HIS கொத்து கிளையில் மின்கடத்தல்  அடைப்பை காட்டுகிறது .இதற்கு மருத்துவ மொழியில் (RIGHT BUNDLE BRANCH BLOCK-RBBB).இந்நோயில் வலது பக்க கீழறை  நேரடியாக மின் கடத்தல் கிடைக்காமல் மெதுவாகவே இயங்கும்.
3ஆவதில் இடது கீழறை தாமதமாக இயங்குவது பதிவு ஆகி இருக்கிறது.இந்நோய் நிலைக்கு இடது His கொத்து கிளை அடைப்பு என்பர்.மருத்துவ மொழியில் (LEFT BUNDLE BRANCH BLOCK -LBBB)என்பர்.
இந்த இரண்டு நிலைகளும் ஆபத்தானவை ஆகும்.சரியாக கவனிக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.(பார்க்க படம் -3)
மாரடைப்பில் -QRS-ன் தோற்றம்:-
படம்-4-A 
                                      

படம்-4-B
 மேலே உள்ள இரண்டு படங்களில் படம் -4A நார்மல் இதய துடிப்பை பதிந்து இருக்கிறது 
ஆனால் படம்-4-B மாரடைப்பின் போது இதயத்தின் துடிப்பை காட்டுகிறது 
படம்-4-B யில் Q-அலை மிகவும் தாழ்ந்து இருப்பதையும் ST பகுதி உயர்ந்திருப்பதையும் அறியவும்.T -அலை அடிகோட்டிலிருந்து (ISOELECTRIC LINE) விலகி மேலே எழுந்திருக்கிறது.R-அலை குறைந்த உயரத்துடன் இருப்பதாய் காணவும்.
அதாவது நார்மலாகஇரண்டு கீழ் அறைகளையும் பிரிக்கும் சுவரில் (INTERVENTRICULAR SEPTUM) முதலில் மின்னோட்டம் சிறிது பலகீனமாக இடமிருந்து வலமாக பாயும் அப்பொழுது மின் முனை-II ல்  Q-அலை சிறிது தாழ்ந்து பதிவாகும் . பிறகு  உடனே மின்னோட்டம் எதிர்திசையில் அதாவது வலமிருந்து இடமாக உயர் mV யில் பாயும்.இதுவே R-அலை ஆகும்.(படம்-4-A)
ஆனால் மாரடைப்பின் போது மின்னோட்டம் இடமிருந்து வலமாக மிகு mV யில் பாயும்.மீண்டும் இடது நோக்கி பகீனமாகவே ஓடும்.விளைவு Q -அலை நீண்டு பெரிதாக தணிக்கிறது.R-அலை குறைந்த அளவே உயர்கிறது இதனால் S-அலையும் சரியாக தணியாது இடது கீழறை சரியாக சுருங்கி விரியாது எனவேதான் உயர்ந்த நிலையில் T-அலை இருக்கிறது.இசிஜியில் இந்த நிலை நீடித்தால் அது மாரடைப்பின் அறிகுறி என்று அர்த்தம்.(படம் -4-B) 
கீழறைகளின் மிகு துடிப்பில் QRS-ன் தோற்றம்  :-
இதை மருத்துவ மொழியில் Ventricular Tachycardia (VT )என்பர்.இதுவும் மிகவும் ஆபத்தான நிலையே.இதில் இசிஜி எப்படி இருக்கும் என்பதை கீழே படம் 5-ல் பாருங்கள்.
படம்-5
VENTRICULAR TACHYCARDIA



மேலே படம்-5 இல்  9 மின்முனைகளின் பதிவுகள் காட்டப்பட்டுள்ளன.உங்கள் இசிஜியில் 12 மின் முனை பதிவுகள் இருக்கும் அவற்றில் மிக முக்கியமானவை மின் முனை-II,V1-V6 பதிவுகள் ஆகும் இட நெருக்கடி கருதி V4 to V-6 ஐ பதிய முடியவில்லை.இருப்பினும் V3 யினுடைய பதிவு அவற்றை ஒத்திருக்கலாம்.பொதுவாக இந்த நோய் நிலையில் QRS ஒழுங்கற்ற நிலையில் மிகவும் அகண்டு(
P-அலைகளுக்கும் QRS கும் தொடர்பு இருக்காது.
TORSE DE POINTS :-
மேலே கண்ட VT யின் முற்றிய நிலை TORSE DE POINTS ஆகும்.
படம்-6

VT ஐ சரியாக கவனிக்கவில்லை என்றால் இசிஜி மேலே உள்ள படத்தில் இருப்பது மாதிரி ஒரு ஒழுங்கற்ற நிலைக்கு போகும் கீழறைகள் சுருங்கி விரிவது தாமதமாகும்.இதை மேலே உள்ள படத்தில் Q-T இடைவெளி நீண்டு இருப்பதின் மூலம் நாம் புரியலாம்.இந்த இடைவெளி காலதாமதம் 500 மில்லி செகண்டுக்கும் அதிகமாக போகும்.அதாவது  
1வினாடி                        =25 மிமீ 
1000மில்லி வினாடிகள் =1விநாடி                                                              =25மிமீ 
500 மில்லி வினாடிகள் =12.5மிமீ 
                                               =12.5ss 
நார்மல் அளவு (9 to 11 ss )
TERMINOLOGY :ss =small squire =1mm 
                              LS =Large Squire =5mm 
மேலும் இந்த நோய் நிலையில் QRS தாறுமாறாக மேலும் கீழும் அலைபாய்ந்துகொண்டு இருக்கும் (படம்-6)
இதை கவனிக்கவில்லை என்றால் இது முற்றி கீழ்கண்ட V-Fib என்ற ஆபத்தான கீழறை குறுந்துடிப்பு (FIBRILLATION) நிலைக்கு போகும்.அதை தொடர்ந்து மரணம் நிச்சயம்.
இதய கீழறை குறுத்துடிப்புகள் -V.Fib :-
படம்-7-A
படம் -7-B

மேலே உள்ள படத்தை உற்று கவனியுங்கள்.நாம் மேலே இதற்கு முன் விளக்கிய கீழறை மிகு துடிப்பு (VT) மற்றும்  TORSE DE POINTS ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு ஆபத்தான ஒரு நோய் நிலையை நீங்கள் உணரலாம்.
VT யிலும் TORSE DE POINTS யிலும் இசிஜியில் ஓரளவு ஒழுங்கு நிலை random ஆக மாறி மாறி இருக்கும் 
ஆனால் V-Fib -இல் முற்றிலும் ஒழுங்கற்ற நிலையே இருக்கும் (படம்-7).இந்நோய் நிலை வந்த பிறகு இதயம் நின்று விடும் மரணம் சம்பவிக்கும் எனவே இது ஒரு அவசர நிலை ஆகும் .                      தொடரும் ....


செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

சுய மருத்துவ பரிசோதனை-இ.சி.ஜி சுய பரிசோதனைகள்-உ

இசிஜி அலைகளை அடையாளம் காண்பது எப்படி?
இசிஜி கல்வியில் இது ஒரு மிக முக்கியமான ஒரு அம்சமாகும் 
இசிஜியின் நார்மல் சைனஸ் துடிப்பில் உள்ள அலைகளை P,Q,R,S, மற்றும் T-ஐ நம்மால் சுலபமாக அடையாளமிட முடியும்.காரணம் அவை தெளிவாக அதில் பதிந்து இருக்கும். 
ஆனால் ஒரு நோயாளியின் இசிஜி நார்மலாக இருக்காது.பெரும்பாலும் அதில் நார்மல் சைனஸ் துடிப்பு இருக்காது.அதில் அலைகள் குளறுபடியாக இருக்கும்.சில அலைகள் மறைந்தும் இருக்கும் 
எனவே தவறாக நாம் அலைகளை அடையாளமிட்டால் நோய்களையும் தவறாக கணித்து தவறான சிகிச்சைக்கு வழிவகுத்துவிடும். 
எனவே இசிஜி அலைகளை அடையாளமிட்டு அறிந்து கொள்ளவேண்டும்.இதற்கு மருத்துவ மொழியில் NOMENCLATURE of ECG என்பர் .
P -அலையை அடையாளம் காணல் 
படம்-1


மேலே உள்ள படத்தில் நான்கு விதமான P-அலைகள் கட்டப்பட்டு உள்ளன
மேலே உள்ள படம் -1 -ல் முதலாவது உள்ள P -அலை தான் சாதாரண நார்மல் சைனஸ் துடிப்பில் உள்ள P -அலை ஆகும்.மற்றவை அனைத்தும் நோய் உள்ள நிலையில் வரும் P-அலைகளாகும்.எனவே இப்படி உருமாறி குளறுபடியில் தோன்றும் P-அலைகளை எப்படி அடையாளம் காண்பது ?

முதலில் நாம் ஒரு கோட்பாட்டை தெரிந்த்துக்கொள்வோம்.இதற்கு ECG NOMENCLATURE என்று பெயரிடலாம்.அதற்கு முன் மூன்று விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.அவை 1.அலை விலகலின் இயல்பு -நேர் அல்லது எதிர் (NATURE OF THE WAVE DEFLECTION-Positive or negative)
2.அலையின் அளவு (SIZE)
3.அலை நிலைப்பாடு (POSITION)
இந்த கோட்பாட்டின்படி ஒரு இசிஜி யில் முதலில் தோன்றும் அலை P-அலை ஆகும்.அதை தொடர்ந்து வருவது QRS-கூட்டமைப்பாகும்.அதை தொடர்ந்து இறுதியாக வருவது T -அலை ஆகும்.
ஒரு நோய் உள்ளவரின் P-அலைகள் (படம்-1-1)-ல் காட்டியபடி ஒரு கூம்பு போன்ற அமைப்புடன் வரலாம்.
அடுத்து படம்-1-2-ல் காட்டியபடி M -வடிவத்தில் வரலாம் .
படம்-1-3-ல் காட்டியபடி P-அலை மறைந்து இருக்கலாம்.இதை உற்று நோக்கினால் இது நேர்கோடாக இல்லாமல் சிறு சிறு குறு (Fibrillatory) அலைகளாக இருக்கலாம் .இதற்கு F-அலைகள் என்று பெயர். 

QRS-கூட்டமைப்பைஅடையாளமிடுவது 

இசிஜியில் மிக முக்கியமான அங்கம் இந்த கூட்டமைப்பாகும்.
இந்த கூட்டமைப்பில் மூன்று தனித்தனி அலைகள் இருக்கின்றன.அவை Q,R மற்றும் S ஆகியவை.இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி இயல்பு உண்டு.அவற்றை தெரிந்து கொண்டால்தான் அவற்றை நாம் சுலபமாக அடையாளம் காண முடியும் .
இந்த Q- அலை,QRS- கூட்டமைப்புக்குள் R-அலைக்கு முன்பாக கீழ்நோக்கி வளையும் எதிர்மறை விலகல்(Negative Deflection) ஆகும்.இந்த அலை ஒருபொழுதும் நேரலை விலகலுக்கு(Positive Deflection) 
எழும்பாது.நிலைப்பாட்டின்படி இது எப்போதும் QRS-ல் R-அலைக்கு முன்பாகவே வரும் அல்லது மறைந்தும் போகும் 
அளவின்படி இது சிறிதாகவும்(q-அலை)இருக்கலாம் அல்லது பெரிதாகவும்(Q-அலை)இருக்கலாம்.ஒன்றுக்கு மேற்பட்டும் இருக்கலாம்(q,q',q'',Q,Q',Q'').

படம்-2-A
படம்-2-A ஐ நோக்கவும் .இது ஒரு நார்மல் சைனஸ் துடிப்பு ஆகும் இதில் Q-அலையை நாம் சுலபமாக அடையாளமிடலாம்.அதாவது R-அலைக்குமுன் QRS-கூட்டமைப்பிற்குள் இறங்கி ஏறக்கூடிய(NEGATIVE DEFLECTION) அலை. 
அடுத்து R-அலை.இதன் விலகல் எப்போதும் மேல் நோக்கியே அதாவது நேர் அலை விலகல் (POSITIVE DEFLECTION) ஆகத்தான் இருக்கும் 
இதன் நிலைப்பாடு இது எப்பொழுதும் Q-அலை இருந்தால் அதை தொடர்ந்தோ,Q-அலை இல்லை என்றால் S-அலைக்கு முன்பாகவோ தோன்றும்.
இதிலும் பெரிதும் உண்டு சிறிதும் உண்டு(R,r);ஒன்றும் உண்டு.ஒன்றுக்கு மேல்பட்டும் உண்டு (R,R'R'',r,r',r'')
படம் -2-B
மேலே உள்ள படத்தை கவனமாக ஆய்வு செய்யவும்.உற்று பாருங்கள்.இரண்டு r-அலைகள் (மேல்நோக்கிய பாசிட்டிவ் சிறிய அலைகள் )இருக்கின்றன ஆனால் அவற்றிற்கு முன் எந்த எதிர் அலை விலகல்களும் (நெகட்டிவ் அலைகள் ) இல்லை.எனவே இதில் Q-அலைகள் இல்லை.
மேலும் S-அலையை நோக்குங்கள் 
R-அலையை தொடர்ந்து ஒரு கீழிறங்கும் நெகட்டிவ் விலகல் S-அலையின் சரியான நிலைப்பாடு.
அதன் அளவு பெரிதாக இருப்பதால் S.
படம்-2-C 
மேலே உள்ள படத்திலும் Q-அலை இல்லை 
நிலைப்பாடு,அளவு மற்றும் விலகல் இந்த மூன்றின் அடிப்படையிலும் மேலேயுள்ள இசிஜியில் இரண்டு R-அலைகளும் இரண்டு S-அலைகளும் இருக்கின்றன.
அடுத்தது T-அலை.இதுதான் நிலைப்பாட்டின்படி இசிஜியின் இறுதி அலையாகும்.இது இதயத்தின் கீழ் அறைகள் விரிவதால் உண்டாவது.இதன் பிறகு அடுத்த துடிப்பு வரை மின் கடத்தல் எதுவும் இருக்காது.எனவே T-P இடைவெளிதான் சரியான ISOELECTRIC LINE ஆகும் 
மேலே உள்ள படத்தின் படி T-அலை தான் இறுதி அலை ஆகும் இது S-அலைக்கு பின் சிறிது இடைவெளிவிட்டு வரும் 
                                 தொடர்கிறது .....

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...