புதன், 22 ஆகஸ்ட், 2018

அன்னமிட்ட வீட்டில் கன்னமிட்ட கதை

கேரளாவின் இந்த சோகம் இந்தியாவின் ஒருமைப்பாட்டு நிலைக்கு சில பாடங்களை தந்திருக்கிறது
கேரளாவின் இந்த நிலைக்கு இனம் மதம் மொழி பிராந்தியம் அத்தனையையும் தாண்டி அனைத்து மாநிலங்களும் போட்டி போட்டுகொண்டு உதவிக்கரம் நீட்டுகின்றன
ஆம் வேற்றுமையிலும் ஒற்றுமை இனம் வேறு மொழி வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதர்களே என்ற மெய்சிலிற்கவைக்கும் பாடங்கள் அழகான பாடம்
ஆனாலும் இந்த பாடத்தை கேரளத்தில் உள்ள சிலர் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டார்கள் பாப்போம்
அடுத்தவரின் உதவி மிகவும் கேரளாவுக்கு தேவைப்படும் இந்த நேரத்தில் இன்னமும் அவர்கள் தங்களது இன மொழி   பிராந்திய துவேஷங்களை  விட்டுக்கொடுக்கவில்லை என்பது போல் தான் தெரிகிறது
குறிப்பாக அண்டை மாநிலமான தமிழகம் அரசாங்க ரீதியாக 10 கோடி ரூபாயை தந்ததோடு அதன் மக்களும் தங்கள் சகோதர மலையாளிகள் படும் அவஸ்தைகளை ஊடகங்கள் மூலம் அறிந்து பணமாகவும் உணவுகளாகவும் உடைகளாகவும் மருந்துகளாகவும் தனிப்பட்ட முறையில் லாரிகளில் வேன்களிலும் கண்டைனர்களிலும் அனுப்பி வைக்கும் காட்சிகளை காணும் போது தமிழரின் இந்த ஈகை இரக்க குணம் கண்டு ஒவ்வொரு தமிழனும் பெருமை பட வேண்டும்  
இந்த நிலையிலும் இன்று பக்ரீத் பெருநாளும் அதுவுமா கேரளாவிலிருந்து கன்னியாகுமரிக்கு இரவில் வந்த ஒரு லாரியில் நிறைய கோழி கழிவுகளை வழமை போல் தமிழ்நாட்டை குப்பை தொட்டியாக எண்ணி கொட்டுவந்த நிலையில் பொது மக்கள் மூலம் தகவலறிந்த போலீசார் மடக்கி பிடித்திருக்கின்றனர் 
இது மட்டுமல்ல இடுக்கி அணை நிரம்பி வழிந்து முற்றிலும் திறந்து விடப்பட்டு இடுக்கி மாவட்டம் முழுதும் வெள்ளக்காடான நிலையில் முல்லை பெரியார் அணை யில் தேங்கியுள்ள 142 அடி நீர் எங்களை பயமுறுத்துகிறது எனவே அதை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று ரசூல் ராய் என்பவர்  சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு வேண்டாத அரசியல் செய்திருக்கிறார் இதையே கேரளா முதல்வரும் தமிழக முதல்வருக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்
இவர்களுக்கு மன சாட்சி மட்டுமல்ல முல்லைப்பெரியாறு அணையை திறந்துவிட்டால் அந்த நீரும் ஏற்கனவே வெள்ளக்காடாக மிதக்கும் இடுக்கியை நோக்கித்தானே பாயும் என்ற சிற்றறிவு கூட இல்லையே
அன்னமிட்ட வீட்டில் கன்னமிட்ட கதை தானே இது
 

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

கீழ்ப்பாக்கமும் தமிழகமும்

இந்த மாநில அரசியலில் ஓரளவு மாநில அக்கறையுடன் இருப்பவர்கள் என்று பார்த்தால் அது திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி இந்த நாலு கட்சிகளையும் தவிர்த்து மற்ற கட்சிகளில்தான் இருக்கிறார்கள் போல் தெரிகிறது
அவர்களின் தினசரி அறிக்கைகள் தொலை காட்சி பேட்டிகள் தன்னிலை விளக்கங்களை கேட்கும் போதும் பார்க்கும் போதும் அப்படிதான் தோன்றுகிறது அதில் உண்மை இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்
ஆனால் நிச்சயமாக மேலே குறிப்பிட்ட அந்த நாலு கட்சிகளுக்கும் ஆட்சியையும் அதிகாரத்தையும் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தை தவிர சுத்தமாக மாநில அக்கறை என்பது கிஞ்சிற்றும் கிடையாது
ஒரு பக்கம் திமுகவும் அதிமுகவும் கூட்டு களவாணிகள் என்றால் மறு பக்கம் காங்கிரசும் பிஜேபியும் கூட்டு களவாணிகள்
இவர்கள் தங்களுக்குள் திட்டுவதும் சண்டை போடுவதும் ஏதோ ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் Professional-Agreement-
மற்றபடி நான் அடிப்பதை போல் அடிப்பேன் நீ அழுவதைபோல் அழு கொஞ்சம் உனக்கு கொஞ்சம் எனக்கு என்ற அடிப்படைதான்
பிஜேபிக்காரன் மசூதியை உடைதான் காங்கிரஸ்காரன் அதை கட்டி தரவே இல்லை
அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சி செய்தார்கள் ஏரிகள் குளங்கள் என்று சமமாகவே பங்கு போட்டார்கள் கட்டுமானங்களும் அடுக்கு மாடிகளும் கட்டினார்கள் ஆனால் செப்பனிடவில்லை தூர்வாரவில்லை
மெரினா பீச்சை தங்கள் தலைவர்களின் நினைவிடங்களுக்காக பங்கு போட்டுக்கொண்டார்கள்
ஸ்டெரிலைட்டை நீதான் கொண்டு வந்தாய் இல்லை நீதான் என்று சிண்டைபிடித்து கொண்டார்கள் கடைசியில் இரண்டு பேரும் சேர்ந்துதான் என்ற உண்மை வெளியாயிற்று
ஸ்டெரிலைட்டுக்கு ஜெயலலிதா என்றால் கூடன்குளத்திற்கு ஒரு கருணாநிதி
குடி என்ற பிள்ளையை திமுகதான் பெற்றது என்றால் அதை வளர்த்து ஆளாக்கி டாஸ்மாக்கில் குடிவைத்தது அதிமுகத்தானே
இப்படித்தான் போகிறது அந்த நாலு களவாணிகளின் சேட்டைகளும்
ஆகவே தமிழர்களே 1967-இல் ஒரு நாற்பது வருட நல்லாட்சிக்கே சலிப்படைந்த நீங்கள் இந்த ஐம்பது வருட திராவிட ஆட்சியில் சலிப்படையாதது ஏன்?
அன்று காமராஜரோ பக்தவச்சலமோ உங்கள் நலன்களையும் செல்வங்களையும் கொள்ளை அடிக்கவில்லை ஆனால் நீங்கள் சலிப்படைந்தீர்கள் 
ஆனால் இன்று இந்த திராவிட ஆட்சியில் மணல் கொள்ளை மட்டுமல்ல ஒட்டு மொத்த மாநிலமே கொள்ளை போகிறது ஆனால் நீங்கள் சலிப்படையவில்லையே ஏன்?
கீழ்ப்பாக்கத்தில் இருப்பது ஒரு மெண்டல் ஹாஸ்ப்பிட்டால்தான் மொத்த மாநில மக்களையும் அங்கு கொண்டு பொய் அடைப்பது கஷ்டமே

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

நுரையீரல் புற்று ,அறிகுறிகள் காரணிகள் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை

நுரையீரல் புற்று 

 

நுரையீரல் புற்று நோய்க்கு பல காரணிகள் இருந்தாலும் புகைபிடித்தல்தான் முக்கிய காரணியாக இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் 40%பேர் இந்நோயால் உயிரிழக்கிறார்கள் என்று தெரிகிறது 
புகையிலையை புகைக்காமல் வேறுவகையில் பயன்படுத்துவது கூட பரவாயில்லை காரணம் புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் நேரடியாக புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை 
உதாரணமாக புகையிலையை வாயில் போட்டு மெல்லுதல் புகைப்பழக்கத்தை விட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவது இல்லை 
ஆனால் புகைக்கும் பொழுது எரியும் புகையிலையில் உள்ள நிக்கோட்டின் எரிந்து  NNK (NICOTIN DRIVED NITROSAMINE -KETONE) என்ற கொடிய புற்று நோய் ஊக்கியாக (CARCINOGEN) ஆக மாறுகிறது.இப்பொருள் நேரடியாக நுரையீரல் காற்றறை செல்களுக்கும் புகுந்து செல் அணு உட்கருவில் உள்ள DNA -ஐ தாக்கி அந்த செல்லை புற்றுநோய் செல் ஆக மாற்றுகிறது
புற்று நோய்களிலேயே புராஸ்டேட் புற்று மற்றும் நுரையீரல் புற்று இரண்டும் தான் உடனே மற்ற  இடங்களுக்கு பரவாமல் (METASTATIC) அவகாசம் எடுத்துக்கொள்ளும் தன்மையுடையவை 
அதற்குள் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது நலம் 

மேலேயுள்ள நிக்கோட்டின் மூலக்கூறு அமைப்பில் ஐகோண வடிவை கவனியுங்கள் அதற்க்கு பைரோலிடின் வளையம் என்று பெயர்.நிகோடின் தீயில் பொசுங்கும் போது இந்த வளையம் உடைந்து கீழ்கண்ட மூலக்கூறு வடிவத்தை பெறுகிறது
இந்த கூட்டு பொருள்தான் கேன்சரை உண்டாக்கும் NNK என்பது
இது சிகரெட்டில் என்றில்லை நிகோடின் இருக்கும் எந்த பொருள் ஆனாலும் இந்த ரசாயன மாற்றங்கள் தீயினால் ஏற்படுகின்றன
மேலும் சிகரெட் புகையில் 75% NNK இருக்கிறது சிகரெட் புகைப்பவரை விட அவர் எதிரில் அமர்ந்திருப்பவரைத்தான் அதிகம் பாதிக்கிறது காரணம் சிகரெட் புகை பெரும்பாலும் புகைப்பவரின் வாய்க்குள்தான் போகிறது பிறகு அவர் அதை வேகமாக ஊதி வெளியேற்றும் போது எதிரே இருப்பவரின் மூக்கிற்குள் சுவாசமாக கலந்து உள்ளே போகிறது .
NNK நம் உடலுக்குள் வந்தவுடன் ஈரல் அதை வீரியப்படுத்துகிறது

நுரையீரல் புற்று 

மேலேயுள்ள படத்தில் கறுத்து இருக்கும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட உறுப்பு ஆகும்

வகைகள் :-

1.பெரிய செல் நுரையீரல் கார்ஸினோமா இதை NON SMALL CELL LUNG CARCINOMA அல்லது SQUAMOUS CELL LUNG CARCINOMA என்றும் அழைப்பர் 
இது அவ்வளவு வேகமானது அல்ல என்றாலும் பாதிக்கப்பட்ட நுரையீரலில் வீரியமாக வேதனை உண்டாக்கும் .இது ஓரிடத்திலேயே நீண்டகாலம் நிலைத்திருப்பதால் இதை சிகிச்சை மூலமோ அல்லது சர்ஜரி மூலமோ சுலபமாக குணப்படுத்தலாம்.மேலும் பெரும்பாலும் இந்த நோயே தாக்குகிறது 
2.சிறிய செல் நுரையீரல் கார்ஸினோமா இதை மருத்துவத்துறையினர் SMALL CELL LUNG CARCINOMA என்பர் 
இது வீரியமாக மற்ற இடங்களுக்கும் பரவக்கூடியது என்றாலும் இது மிகவும்  அசாதாரணமாகவே உண்டாகிறது இது வேகமாக பரவக்கூடியது எனவே இதன் சிகிச்சையும் கடினமானது 
3.நுரையீரல் கார்சினாய்டு டியூமர் (LUNG CARCINOID TUMOR இது மிக மிக அசாதாரணமானது எனினும் மிகவும் ஆபத்தானது இதன் சிகிச்சையும் மிகவும் கடினமானது.இது நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளை தாக்கக்கூடியது 

அறிகுறிகள் 

ஆரம்பகட்ட அறிகுறிகள் பெரும்பாலும் தெரிவதில்லை 
நோய் முற்றிய பிறகு கீழ்காணும் சில அறிகுறிகள் தென்படலாம் 
1.குரல் கடினமாதல் 
2.களைப்பு 
3.பலவீனம் 
4.அடிக்கடி சளிபிடித்தல் 
5.சிகிச்சைக்கு மட்டுப்படாத தொடர் இருமல் 
6.இருமும்போது சளியுடன் இரத்தம் வருதல் 
7.வழியும் கட்டி சளியும் கூடிய இருமல் இதனால் விழுங்குவது கடினமாகும் 
8.மூச்சு திணறல் 
9.நோய் எலும்பை தாக்கும் போது எலும்பு வலி 
10எடை குறைதல் 

காரணிகள் 

1.நீண்ட நேர புகை சுவாசம் 
2.அடிக்கடி புகைத்தல் 
3.ரேடான் போன்ற கதிர்வீச்சுகள் 
4.நோய் எதிர்ப்பு சக்தி குறையும் சூழ்நிலைகள் (உம்):எய்ட்ஸ் நோய்,நோய் தொற்றுகள்,நீண்ட கால ஸ்டெராய்ட் உபயோகம் 

சிக்கல்கள் 

1.சளி அடைப்பு 
2.நிணநீர் ஓட்டத்துடன் நோய் எலும்பு மூளை போன்ற இடங்களுக்கும் பரவுதல் 
3.வாய் தோற்று,நா வறட்சி,வாய் புண்கள் 
4.ஜீரண மண்டல கோளாறுகள்,வயிற்று போக்கு,மலச்சிக்கல் 

நோய் நிலைகள் 

0-1-நிலை :- இந்த நிலையில் கேன்சர் உண்டாகி இருக்காது.ஆனால் DNA ஆரம்பகட்ட பாதிப்புக்கு தயாராக்கப்பட்டு இருக்கும் சிறு சிறு பொடுகு போன்ற டியூமர்கள் நுரையீரல் காற்றறைகளில் உண்டாக துவங்கும்.அறிகுறிகள் அப்போதைக்கப்போது உண்டாகி மறையும் தொண்டை புகைச்சல் 
1-ஆம் நிலை :- DNA பாதிக்கப்பட துவங்கும் டியூமர்கள் வளர துவங்கி ஆரம்பகட்ட புற்று ஆக மரத்துவங்கும் ஆனாலும் பரவும் நிலையில் இல்லை 
2-ஆம் நிலை :-டியூமர்கள் இன்னும் பெரிதாக தெளிவாக மாறி புற்று நோய் உறுதிப்படும் ஆனாலும் பரவும் நிலையில் இல்லை தொண்டை புகைச்சல் சளியுடன் அதிகரித்து இருக்கும் 
3-ஆம் நிலை :-டியூமர்கள் இன்னும் பெரிதாகி பரவும் நிலைக்கு வரும் ஆனால் நிணநீர் முடிச்சுகளை தொட்டிருக்காது 
4-நாலாம் நிலை :-இப்போது டியூமர்கள் நிணநீர் முடிச்சுகளை அடைத்து நிணநீர் ஓட்டத்தில் கலந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவத்துவங்கும் இதற்கு மருத்துவ பாஷையில் மெட்டஸ்டேஸிஸ் (METASTASIS ) என்பர் 
ஆரம்ப கட்டத்திலேயே எலும்பு ஜீரண மண்டலம் மூளை பகுதிகள் பாதிப்படைய துவங்கும் 

சிகிச்சைகள் :

1.நுரையீரல் புற்று ஆரம்ப கட்டமாக வெறும் தொண்டை புகைச்சல் இருமல் சளி இவற்றை தவிர வேறெதுவும் அறிகுறிகள் காட்டாது சங்கிலி தொடராக புகை பிடிப்பவர்கள் இத்தகைய அறிகுறிகள் தென் பட்டால் உடனே தகுந்த ENT நிபுணரிடம் போய்  பூரண பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும் 
2.புகையிலை பழக்கத்தை நிறுத்த வேண்டும் 
3.பொதுவாக ஆரம்பகட்டத்தில் நுரையீரல் புற்றை கண்டுபிடிக்க சரியான பரிசோதனை முறைகள் இல்லை என்றாலும் ஓரளவு கணிக்க முடியும் 
இருமல் சளி போன்ற அறிகுறிகளுக்கு கீமோதெராப்பி மற்றும் ஆன்டிபயோட்டிக்குகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுக்கவேண்டும் 
4.பெரிய செல் கார்சினோமா (NON SMALL CELL LUNG CARCINOMA )இதை ஓரளவு சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம் ஏனென்றால் இது உடனே மற்ற பகுதிகளுக்கு குறிப்பாக மூளைக்கு பரவாது 
5.சிகிச்சைகள் பொதுவாக அடிப்படையாக DNA நூல்கள் ஒழுங்கற்று பின்னப்படாமல் தடுப்பதே ஆகும்.இதை சத்தியமாக செல் குரோமோசோம்களில் உள்ள ஒரு விசேஷ ஜீன் புரோடீனை முடக்குவதே ஆகும் இதற்கு ஆங்கிலத்தில் INHIBITION OF ABNORMAL FUSION PROTEIN என்பர் 
இந்த ஜீன் புரதம் தான் NNK யினால் தூண்டப்பட்டு DNA ஐ தாக்கும் இந்த முறைக்கு மருத்துவத்துறையில் ALK GENE REARRANGEMENTS என்பர் 
கீழ்காணும் மூன்று மருந்துகள் இந்த வகையில் பயனாகின்றன 
1.Crizotinib (Xalkori )
2.Ceritinib (Zykadia )
3.Alcetinib (Alecehsa )
அடைப்பு குறிகளில் கொடுக்கப்பட்டிருப்பது அவற்றின் வர்த்தக பெயர்களாக்கு 
இம்மருந்துகளை தகுந்த டாக்டரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுடன் எடுத்துக்கொள்ளலாம்

 




ஞாயிறு, 22 ஜூலை, 2018

நிமோனியா

நிமோனியா-குறிப்புகள் 

நிமோனியா என்பது நுரையீரலில் உள்ள காற்று அறைகளில் (Alveoli) ஏற்படும் அழற்சி மற்றும் எரிதல் (Inflammation) நோய் ஆகும் 
இது சாதாரண அழற்சியினாலோ அல்லது கிருமி தொற்றினாலோ ஏற்படும் 
இதில் எரிந்து சிவத்தல் (Inflammation )கண்டிப்பாக இருக்கும் 
எரிந்து சிவத்தல் இல்லாமல் வெறும் கிருமித்தொற்று மட்டுமே இருக்குமானால் அது சுவாச குழாய் தொற்று (Bronchitis )ஆகும் 
நாட்பட்ட சுவாசக்குழாய் தொற்று நிமோனியா அல்லது புற்று நோயாக மாற வாய்ப்புண்டு 
நிமோனியா எந்த வயதிலும் யாருக்கும் வரும் என்றாலும் கீழ்கண்ட நபர்களுக்கு அது வரும் வாய்ப்பு அதிகம் 
1.ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 
2.65-வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 
3.எய்ட்ஸ் வியாதியுள்ளவர்கள் 
4.ஆஸ்பெஸ்ட்டாஸ் போன்ற நச்சு ரசாயன தொழிலாளிகள் 
5.ஆஸ்பத்திரியில் வெகுநேரம் வென்டிடேட்டர்,இன்ஹேலர் போன்ற கருவிகளின் பயன்பாட்டில் இருக்கும் நோயாளிகள்
6.அதிக ஸ்டெராய்டு பயன்பாடு 
7.மது பழக்கம் 
8.புகைபிடித்தல் 
10.கஞ்சா அபின் பழக்கம் 
11..நீண்ட கால படுக்கை 
12.ஆஸ்த்மா,சர்க்கரை மற்றும் இதய நோய்கள்
நிமோனியா மூன்று வித கிருமிகளால் ஏற்படும் அவை முறையே,பாக்டீரியா,வைரஸ்,மற்றும் காளான்கள் 
இதில் பாக்டீரியாவினால் ஏற்படும் நிமோனியா மிகவும் கொடூரமாகவும் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறக்கூடியதாகவும் இருக்கும் 
வைரஸ் மூலம் வரும் நிமோனியா அவ்வளவு கடுமையாக இருக்காது இதற்கு ஆன்டிபயாட்டிக்ஸ் கூடாது பத்தியம் இருகால் போதும் தானாகவே குணமாகிவிடும் 

காளான்Fungus)தொற்றினால் ஏற்படும் நிமோனியா பெரும்பாலும் எய்ட்ஸ் போன்ற நோய் எதிர்ப்புத்தன்மை குறையும் நோயாளிகளுக்கு உண்டாகும் 
பெரும்பாலும் எய்ட்ஸ் நோயின் ஆரம்ப அறிகுறியே நிமோனியாவாகத்தான் இருக்கும் 

அறிகுறிகள் 

1.காற்று பைகளில் சீழ் உண்டாவதால் சளிக்கட்டி மூச்சு விட இயலாமை 
2.காய்ச்சல் 
3.தலைவலி 
3.சளியினால் பசியின்மை 
4.இருமல் 
5.எடை குறைதல் 
6.தளர்வு 
7.சோர்வு 
8.கெட்டி சளி 
9.நெஞ்சு வலி  
10.வைரஸ் நிமோனியாவில் இளைப்பு மற்றும் காய்ச்சல் இருக்கும் 
11.பாக்டீரியா நிமோனியாவில் காய்ச்சலுடன் இளைப்பு ,அதிக வியர்வை உதடு மற்றும் நக கண்கள் நீளம் பாரித்து போதல் மற்றும் மன குழப்பம் ஆகியவை இருக்கும்
 Pneumocystis jirovecii இது நிமோனியாவை உண்டாக்கும் ஒருவகை  காளான் ஆகும் இது பெரும் பாலும் எய்ட்ஸ் போன்ற உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் நச்சு மற்றும் சுத்தமில்லா  சூழலில் புழங்குபவர்களுக்கு தொற்றி கொள்ளும் மற்றபடி இது ஆரோக்கிய சூழலில் இருப்பவர்களுக்கு தொற்றாது எனவே எய்ட்ஸ் நோயாளிகளுடன் பழகுபவர்களுக்கு இந்த காளான் தொற்று எளிதில் ஏற்படாது

சிகிச்சைகள் 

1.பாக்டீரியா நிமோனியாவிற்கு மருத்துவ ஆலோசனை படி ஆன்டிபயாட்டிக்குகள் எடுத்துக்கொள்ளவேண்டும் 
2.வைரஸ் நிமோனியாவிற்கு கண்டிப்பாக ஆன்டிபயாட்டிக்குகள் எடுக்க கூடாது

 

வியாழன், 5 ஜூலை, 2018

இரும்பு சத்து

உணவிலிருந்து இரும்பு சத்தை அதிகம் பெறுவது எப்படி ?

இரும்பு சத்து உடம்புக்கு மிகவும் இன்றியமையாதது என்பது நம் அனைவருக்கும் தெரியும் 
இரும்பு சத்து இரத்தத்தை விருத்தி செய்ய உதவுகிறது 
இரும்பு சத்து  குறைவுப்பாட்டால் இரத்தத்தில்  சோகை உண்டாகும் 
இரத்த சோகை உடம்பில் பல நோய்கள் வர வழி வகுத்துவிடும் 
இரும்பு சத்து வேண்டும் என்பதற்காக இரும்பை நாம் உணவாக கொள்ள முடியாது 
இரும்பு சத்து மாத்திரைகள் டானிக்குகள் ஊசிமருந்துகள் என்று எல்லாவற்றிலும் பக்க விளைவுகள் உண்டு 
அவற்றை டாக்டரின் ஆலோசனை இன்றி எடுத்துக்கொள்ள கூடாது 
ஆனால் இறைவன் அற்புதமாக தன்  கருணையினால் நாம் சாப்பிடும் அன்றாட சாதாரண உணவு வகைகளில் கூட இரும்பு சத்தை சரிவிகிதத்தில் பொதிந்து வைத்திருக்கிறான்
அவற்றை முறையாக பயன் படுத்துவதன் மூலம் நாம் இரும்புச்சத்தை எவ்வித குறைவும் இன்றி பெறலாம் 
முதலில் ஒன்றை தெரிந்து கொள்வோம் 
நம் உடலில் சுமார் 65 சதவீத இரும்பு சத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் என்ற புரதத்தில் உள்ளது 
ஹீம் என்ற இரும்பின் கூட்டு பொருளும் குளோபின் என்ற புரதமும் சேர்ந்து உருவாகும் பொருள்தான் ஹீமோகுளோபின் 
இதில் இருக்கும் இரும்பு கூட்டு பொருளான ஹீம் தான் இரத்தத்திற்கு அபாரமான செந்நிறத்தை தருகிறது.இரத்தத்தின் சிவப்பணுக்களுக்கு  நிறமே ஹீம்தான் கொடுக்கிறது
இரும்பு சத்து எவ்வளவு குறைவாக உள்ளதோ அவ்வளவு இரத்தம் வெளிறி இருக்கும் இதனால் இரும்பு சத்து குறைபாட்டினால் தோலும் வெளிறி இருக்கும் இதை வைத்து அனீமியாவை கண்டறியலாம் 

இரும்பு சத்தின் வகைகள் 

பொதுவாக உணவு மூலம் கிடைக்கும் இரும்பு சத்தை இருவகைகளாக பிரிக்கலாம் அவை :-

1.ஹீம் இரும்பு சத்து  

மிருகங்களின் சிவப்பு இறைச்சி (Red Meat) வகை உணவிலும் பறவை மற்றும் மீன் இறைச்சி (White Meat)வகையிலும் காணப்படுகிறது தாவர உணவில் இது முற்றிலும் கிடையாது 
ஹீம் இரும்பு சத்தை உடல்  வெகு எளிதில் உட்கொண்டு தன்மையமாக்கிவிடும் .இதனால் அசைவ உணவு பிரியர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு வேறு இடையூறுகள் ஏதும் இல்லாத பட்சத்தில் பொதுவாக ஏற்படுவது இல்லை

2.நான் ஹீம் இரும்பு சத்து 

அசைவ உணவில் ஹீம் இரும்பும் நான் ஹீம் இரும்பும் சேர்ந்து இருந்தாலும் காய் கறி  உணவில் நான் ஹீம் இரும்பு சத்து மட்டுமே உள்ளது நான் ஹீம் இரும்பு சத்தை உடல் மிக எளிதாக உட்கொள்ளாது இதனால் சைவ உணவு பிரியர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் 
இவர்கள் டாக்டரின் ஆலோசனையுடன் மாத்திரை டானிக்குகளை எடுத்துக்கொள்ளலாம் 

இரும்பு சத்து ஊக்கிகள் 

பொதுவாக உடம்பு உணவிலிருந்து இரும்பு சத்தை உறிய ஊக்கப்படுத்தும் சில பொருட்களை பார்க்கலாம் 

1.வைட்டமின் சி  

உணவு சாப்பிட்ட உடன்  எலுமிச்சை ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுவதால் அதிலுள்ள வைட்டமின் சி உணவுமூலம் கிடைக்கும் இரும்பு சத்தை உடல் எளிதாக பயன்படுத்துவதை ஊக்க படுத்தும் 

2.பைடேட்டு உப்புகள் 

இவைசாதாரணமாக உடல் இரும்பு சத்தை  உறிவதை  குறைக்கும் என்றாலும் இவற்றை தண்ணீரில் ஊறவைத்தோ நொதிக்க செய்தோ சாப்பிட்ட பிறகு எடுத்து கொண்டால்  இவை இரும்புசத்து உடலில் சேர்வதை ஊக்கப்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது 
பைடேட்டு உப்புகள் சோயா வாதுமை வால்நட்டுகள் முந்திரி போன்ற பருப்பு வகைகளில் அதிகம் இருக்கிறது 
மேலும் துத்தநாகம்,தாமிரம் மாங்கனீசு போன்ற உலோக சத்துக்களும் மிக சிறிய அளவில் Trace Elements சேர்த்துக்கொண்டால் உடல் இரும்பு சத்தை எளிதில் உட்கொள்ள எதுவாக இருக்கும் 
கடைகளில் வாங்கும் இரும்பு சத்து டானிக்குகள் மற்றும் மாத்திரைகளில் இந்த Trace Elements சேர்க்கப்பட்டிருக்கும் 
நாம் சாப்பிடும் சைவ மற்றும் அசைவ உணவுகளிலும் பழங்களிலும் இந்த Trace Elemens இருக்கின்றன 
துத்தநாகம் பிரேசில் ஓட்ஸ்,oyester,முட்டை ஆகியவற்றிலும்,தாமிரம் மாமிசம்,வெண்ணெய்,வேர்க்கடலை போன்ற உணவுகளிலும்,மாங்கனீசு ஓட்ஸிலும் இருக்கின்றன.

தேநீர் கூடாது 

சாப்பிட்டவுடன் ஒரு மணி நேரத்திற்குள்ளாக தேநீர் போன்ற பானங்களை தவிர்ப்பது  நன்று ஏனென்றால் அவற்றில் இருக்கும் டானின் என்ற பொருள் உணவிலிருந்து உடல் இரும்பு சத்தை எடுப்பதை தடுப்பதாக ஆய்வு கூறுகிறது 
தேநீரை பொறுத்தவரை அது பெரும்பாலும் நான் ஹீம் இரும்பு சத்து உறியப்படுவதைத்தான் தடுக்கிறது 
மேலும் தேநீர் ஏற்கனவே இரும்பு சத்து குறைபாடு உடையவர்களை அதிகம் பாதிக்கிறது

இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் 

1.ஈரல் 
2.மண்ணீரல் 
3.எலும்பு மஜ்ஜை 
4.சிவப்பு இறைச்சி (ஆடு மாடு மிருகங்கள் )
5.வெள்ளை இறைச்சி (பறவைகள் ,மீன்கள் )
6.உலர்ந்த அத்திப்பழம் 
7.பேரீச்சை 
8.முந்திரி,வாதுமை 
9.முட்டை 
10.பச்சை காய்கறி மற்றும் கீரை வகைகள் 

RDA -தினசரி இரும்பு சத்தின் தேவை :-

1.பெண்கள் (வயது 19 -50)   =18 மி கி 
2.ஆண்கள் (வயது 19 -50)   = 8 மி.கி 
3.கர்ப்பிணி பெண்கள்         = 27 மி கி 
4.பாலூட்டும் பெண்கள்      = 9 மி கி
மேலேயுள்ள தகவல் National  Institute Health  (NIH) இன் சிபாரிசின்படி தரப்பட்டது 

இரும்பு சத்து குறைபாடு சோகையின் அறிகுறிகள் 

1.களைப்பு 
2.சோர்வு 
3.வெளிறிய தோல் 
4.முடி உதிர்தல் 
5.உடல் அரிப்பு எரிச்சல் 
6.பலவீனம் 
7.தூசி கல் மண் இவற்றை தின்ன ஆர்வம் 
8.கால் ஓய்வின்மை 

9.நகம் உடைதல் வளைதல்


வியாழன், 28 ஜூன், 2018

சிந்திப்போம் செயல்படுவோம்

தமிழ்நாடு -நேற்றும் இன்றும்


தமிழ் நாடு நேற்று இன்று நாளை என்று பிரித்து பாப்போம்
இந்தியா சுதந்திரம் அடைந்து குடியராசாகிய பின்
நான்கு மாகாணங்களாக இருந்த அது பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டது
1967 வரை ஒன்றாக இருந்த காங்கிரஸ் மதராஸ் மாநிலத்தை ஆண்டது
மதராசுக்கு பல பெருமைகள் உண்டு
வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நவீன நகரம்
புனித ஜார்ஜ் கோட்டை அகழிகளால் சூழப்பட்டு அமைக்க பட்ட ஒரு பெருமை மிக்க அமைப்பு
இந்தியாவின் முதல் மாநகராட்சி என்ற பெருமையும் லண்டனுக்கு பிறகு வெள்ளையர் சாம்ராஜ்யத்தின் இரண்டாவது மாநகராட்சி என்ற பெருமையும் மதராஸுக்கே உண்டு
உலகின் இரண்டாவது நீளமான அழகிய மெரினா கடற்கரை உள்ள நகரம் மதராஸ்
ஆக்ஸ்போர்ட் ,கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கு அடுத்து உலகின் மூன்றாவது என்று போற்றத்தக்க மதராஸ் யுனிவர்சிட்டி என்று போற்றப்பட்ட காலம் மாண்புமிகு சதாசிவ முதலியார் வைஸ் சென்சலராக இருந்து உண்ணத்தமிக்க முதலியார் யுனிவர்சிட்டி என்று வெளிநாட்டவர் வியந்து போற்றும் அளவிற்கு மதராஸ் யுனிவர்சிட்டி திகழ்ந்த பொற்காலம் என்றால் அது 1967 க்கு முன்
இன்றும் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவு மிக பரந்த இடப்பரப்பில் உன்னதமான பிரிட்டிஷ் கட்டிடக்கலையின் பிரமாதத்திற்கு சான்றாக பிரமிப்பூட்டும்படியாக அமைந்து இருப்பதுதான் மதராஸ் உயர்நீதி மன்றம்
இங்கு இன்னமும் இரண்டாவது உலகப்போரின்போது ஜெர்மனியின் எம்டன் கப்பல் போட்ட குண்டின் அடையாளம் இருக்கிறது
இந்தியாவிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் மஹாராஷ்டிரா பஞ்சாபி மாநிலங்களுக்கு அடுத்த நிலையில் இருந்த பெருமை சென்னை மாநிலத்திற்கு உண்டு அதாவது 1967 க்கு முன்
பாரம்பரியம் கலாச்சாரம் கல்வி அமைதி இது அத்தனையிலும் சிறந்து விளங்கிய மாநிலம்தான் இது
இந்தியாவின் அமைதி பூங்கா
தொழில் தொடங்குவதற்கு அருமையானதொரு மாநிலம் என்று பலராலும் போற்றப்பட்ட மதராஸ் மாநிலம் 1967 க்கு பின் கொஞ்சன்கொஞ்சமாக சிதைந்து சின்னாபின்னமாகி இன்று அலங்கோலத்திலும் அலங்கோலமாக எங்கும் அரசியல் எதிலும் அரசியல் அராஜகம் போராட்டம் அரசிற்கும் மக்களுக்கும் இடையே எந்த ஒரு புரிந்துணர்வும் இல்லாத ஒரு நிலை ஊழல்,விலைவாசி ஏற்றம் என்று ஐயோ தலை சுற்றுகிறது
பின்னி தொழிற்சாலை மூடப்பட்டதால் ஆரம்பித்து
ஸ்டாண்டார்ட் கார்க்கம்பெனி
பிறகு நோக்கியா
பிறகு ஹூண்டாய் என்று ஒவ்வொன்றாக இழுத்து மூடப்பட்டதே ஏன்
யார் மீது பழியை போடுவது
என்னை பொறுத்தவரை மக்களின் மீதுதான்
1967 இல் ஆட்சியை மாற்றி திராவிடம் என்ற குறுகிய வட்டத்திற்குள் தங்களை சுருக்கிக்கொண்டார்களே அந்த தலை முறை மீதுதான்
நான் திராவிடத்திற்கு எதிரானவன் அல்ல
அது கலாச்சாரம் ஆனால் அதை அரசியலாக்கியதும் அதற்கு மக்கள் துணை போனதும் தான் 1967 இல் மக்கள் செய்த தவறு
திமுக ஒரு நல்ல ஒரு எதிர்கட்சியாகவே கடைசிவரை இருந்திருக்கலாம்
காங்கிரஸையே ஆளவிட்டு  மாநிலம் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகுவதை தடுத்திருக்கலாம்
மேதை  டர்.அண்ணா அவர்கள் ஒரு பேரறிஞர்.நாவன்மை மிக்கவர் மிகச்சிறந்த எழுத்தர் சாமர்த்தியமும் சாதுர்யமும் மிக்கவர் தமிழின் மீதும் தமிழகத்தின் மீதும் மிகுந்த பற்று உடையவர் இதில் எதிலும் சந்தேகமில்லை
ஆனால் ஏட்டில் அறிவு என்பது வேறு ஆட்சி அனுபவம் என்பது வேறு என்று திமுக 1967 மார்ச்சில் ஆட்சியில் அமர்ந்த உடனேயே திரு அண்ணா அவர்கள் உணர்ந்திருக்கிறார்
ஒரு மிகப்படிக்காத காமராஜருக்கு இருந்த அனுபவ ஞானம் கூட தனக்கு இல்லையே என்று அவர் உணர்ந்திருப்பார்
ஏனென்றால்  காமராஜை பார்த்து கருப்பிட்டி விலை என்னாச்சு என்று ஏளனம் பேசிய அவரால் ஆட்சிக்கு வந்த வுடன் கருப்பிட்டி விலை மாத்திரம் அல்ல படி அரிசி விலையை கூட ஒரு ரூபாய் அளவிற்கு கொண்டு வர முடியவில்லை
மக்களை ஏமாற்றிவிட்டோமோ என்ற மன உளைச்சல் கூட அந்த நல்ல மனிதருக்கு ஏற்பட்டிருக்கலாம்
அது மட்டுமல்ல
தனக்கு பிறகு என்னவாகுமோ என்று கூட அவர் அஞ்சி இருக்கலாம்
காரணம் அவருக்கு கீழே உள்ளவர்களின் நாணயத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்க வாய்ப்பில்லை
காரணம் பொய் சொல்லி பழக்கப்பட்டவர்கள்
மக்களும் பொய்யையும்  சினிமாவையும் உண்மை என்று நம்மபதலைப்பட்டு விட்டார்களே
ஐயோ எல்லாம் மோசம் போய்விடுமே என்று அவர் எண்ணி இருக்கலாம்
அவர் மரணித்து விட்டார்
அண்ணாவின் மரணத்திற்கு பின் தமிழகம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள துவங்கியது
காவிரி பிரச்சினை முல்லைபெரியார் பிரச்சினை என்று ஒவ்வொரு பிரச்சினைகளாக தலை தூக்க ஆரம்பித்தன
திமுக பல துண்டுகளாக உடைந்து நொறுங்கியதுதான் அது ஆட்சியை கைப்பற்றியதன் பலன்
காங்கிரசை வளர்ப்பதற்கோ மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கோ டெல்லியும் சரி இங்குள்ள காங்கிரஸ்காரர்களும் சரி முனைப்பு காட்டவில்லை
விளைவு தமிழகத்தின் தலை எழுத்து திமுக அ இ.அ தி முக என்று குறுகிய திராவிட வட்டத்திற்குள் சுழல துவங்கியது
அரசியல் என்பது புனிதமானது என்பது போய் பெரும் சூதாட்டக்களம் ஆகியது
மக்களும் ஓட்டிற்கு துட்டு,இலவசங்களுக்கு மயங்கி களமிறங்கி சூதாட தலைப்பட்டுவிட்டனர்
விளைவு மாநிலம் மதிப்பிழந்து
வளங்கள் சூறையாடப்படுகின்றன
பக்கத்துக்கு மாநிலங்களின் கழிவுகளை கொட்ட பயன்படும் குப்பை தொட்டியாக தமிழகம் ஆகிவிட்டது
ஆறுகள் தூர் வரப்படவில்லை
ஆற்று மணல் வரம்பு மீறி கொள்ளை போகிறது
அரசியல் மற்றும் ஆளும் வர்க்கத்திற்கோ மக்களுக்கோ எந்தவிதத்திலும் மாநில அக்கறை என்பது கிஞ்சிற்றும் இல்லாமலேயே போய்விட்டது
விளைவு பக்கத்து மாநிலங்களுக்கு இங்கிருந்து சரக்குகள் ஏற்றிக்கொண்டு போகும் சரக்கு லாரிகள் சரக்குகளை அங்கு இறக்கிவிட்டு அதிக வாடகை கிடைக்கிறது என்பதற்காக அங்கிருந்து அவர்கள் ஏற்றிவிடும் கழிவுகளையும் குப்பைகளையும் இங்கே கொண்டு வந்து தன் சொந்த மாநிலம் என்றுகூட பாராமல் திருட்டுத்தனமாக  கொட்டிவிட்டு  போகிறார்கள்
இவர்களை என்னவென்பது
யாராவது பக்கத்துக்கு வீட்டுக்குப்பைகளை அவர்கள் அதிக பணம் கொடுத்தார்கள்  என்பதற்காக வாரி கொண்டுவந்து தன வீட்டில் கொட்டுவார்களா?
வீடுவரை உள்ள அக்கறை (self or house interest) இந்த தமிழர்களிடம் ஏன் மாநில (state) அளவுக்கு விரிவடைய வில்லை
இத்தனைக்கும் தமிழர்கள் சிறந்த கல்வி அறிவுடையவர்கள் உழைப்பாளிகள் பிறகு என் அவர்களிடம் மாநில அக்கறை இல்லை ஏன் இந்த நிலை
இதை மாநில அக்கறை இன்மை என்பதா  அல்லது பரந்த மனப்பான்மை என்பதா?
எப்படிப்பார்த்தாலும் இந்த அணுகுமுறை இந்த சூழ்நிலையில் அறிவுடைமை இல்லை
காரணம் இன்றைய இந்தியாவில் மாநிலங்களின் கூட்டாட்சி என்றிருந்தாலும் மாநிலங்களிடையே  சுயநலமும் போட்டி மனப்பான்மையும் தான் அதிகமாக இருக்கிறது
கர்நாடகா காவிரியில் தனக்கே உரிமை என்கிறது
கேரளா ஆறுகளை கடலில் பொய் விடுவேன் தவிர விவசாயத்திற்கு திருப்ப மாட்டேன் என்கிறது
ஆந்திரா பாலாற்றில் தடுப்பணை கட்டி  கொண்டு நீர் தரமாட்டேன் என்கிறார்கள்
சேர சோழ பாண்டிய சாம்ராஜ்ஜியங்கள் மாதிரி தமிழகம் இன்று தனி நாடாக இல்லை
பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு ஏக இந்தியா என்ற கூட்டாட்சி தத்துவத்தில் விரும்பியோ விரும்பாமலோ நாம் சிக்கிக்கொண்டோம்
இந்த நிலையில் நாம் திராவிட மாயையில் இருக்கிறோம்
தனித்தமிழ்நாடு என்ற குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறோம்
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தை அவர்கள் மதிப்பதில்லை
காரணம் நம்முடைய இந்த குறுகிய அணுகுமுறைதான்
எனவே இனியாவது தூர நோக்குடன் சிந்திப்போம் செயல் படுவோம்








புதன், 21 பிப்ரவரி, 2018

காவிரியும் அரசியலும்

     அரசியல் என்பது புனிதமானது.இறுதி தூதர் முஹம்மது நபி (இறைவனின் சாந்தியும் சமாதானமும் அவர் மீது உண்டாகட்டும் ) அவர்கள் ஒரு ஆன்மீக வாதியாக மட்டுமில்லாமல் ஒரு அரசியல்வாதியாகவும் ஆட்சி தலைவராகவும் இருந்தார்.ஏனென்றால் ஆன்மிகம் மனிதனை நெறி படுத்துவதற்கு தேவை என்றால் அரசியல் அவன் வாழ்வதற்கு தேவை என்பதை அவர் உணர்ந்து செயல்பட்டார்.அரசியலையும் ஆன்மீகத்தையும் அவர் ஒருநாணயத்தின் இரு பக்கமாகவே  கண்டார்
ஒரு நேர்மையான அரசாங்கத்தை அவர் உருவாக்கினார்.அவரை தொடர்ந்து வந்த ஹஜ்ரத் அபூபக்கர்(இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான்),ஹஜ்ரத் உமர் (இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான் )ஹஜ்ரத் உஸ்மான் (இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான்),ஹஜ்ரத் அலி (இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டான்)ஆகிய நான்கு கலீபாக்களும் நெறி பிறழாத நல்லாட்சியை மக்களுக்கு வழங்கினார்கள்.ஜாதி மத வேறுபாடின்றி எல்லோரும் நல்லாட்சியை அனுபவித்தார்கள்
மக்களின் உயிர் உடைமைகள் பாதுகாக்கப்பட்டன
அவர்களது உரிமைகள் மதிக்கப்பட்டன
குறிப்பாக பெண்களின் உரிமைகள் பேணப்பட்டு அவர்கள் அச்சமின்றி வாழ்வது உறுதி செய்யப்பட்டது
இவர்களது ஆட்சியை நமது தேச பிதா காந்திஜி அவர்களே சிலாகித்தார்கள்
கலீபா உமரின் ஆட்சி போன்று ஒரு ஆட்சி இந்தியாவில் மலர வேண்டும் என்று அவர் விரும்பினார்
ஆனால் அவரது விருப்பம் நிறைவேறியதா?
அந்த மனிதருள் மாணிக்கம் அற்பத்தனமாக கொல்லப்பட்டாரே அப்போதே அவர் விருப்பத்தோடு அவரையும் தீயிலிட்டு பொசுக்கிவிட்டார்கள்
இன்று பொசுங்கிய ஜநாயகம்தான் நம்மை கருவறுக்கிறது
இந்த ஜனநாயகத்தில் பெயரளவில்தான் ஜனங்கள் நாயகர்களாக இருக்கிறார்கள் மற்றபடி அமைச்சர்களுக்கும் அதிகார்வர்க்கத்திற்கும்  பொறுப்பற்ற முறையில் அதிகாரங்களை வாரி இறைத்திருக்கிறது நமது அரசியல் நிர்ணய சட்டம்.இந்த அபத்த சட்டத்தை உண்டாக்குவதில் எப்படித்தான் அம்பேத்கார் போன்ற மேதைகளும் பங்கேற்றார்களோ தெரியவில்லை
மக்களுக்கு பாதுகாப்பு இல்லை அரசாங்கம் வரி என்ற பெயரில் மக்களை எப்படி எப்படியெல்லாமோ பயமுறுத்தி வகை வகையாக பிடுங்கிக்கொள்கிறது ஆனால் ஒவ்வொரு முறையும் நிதி பற்றாக்குறையையே காரணம் காட்டி மேலும் மேலும் கட்டண உயர்வு கூடுதல் வரி என்று மக்களை வதைக்கிறார்கள்.அரசே மக்களிடம் வியாபாரம் நடத்துகிறது கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள் அதை அதிகார வர்க்கம் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.பிறகு மீண்டும் கொள்ளை மீண்டும் பங்கீடு இப்படி தொடர்கதை இதற்கு பெயர் அரசியலா அல்லது சூதாட்டமா
மக்கள் நீதி மன்றங்களை நாடினால் பெரும் சம்பளங்களில் திளைத்துவீட்ட கோடீஸ்வர நீதிபதி கூட்டம் சாமானிய மக்களின் பிரச்சினைகளை பொருட்படுத்துவதே இல்லை தங்களின் பதவியிலும் பணத்திலும் குறியாக இருந்து அநியாயம் செய்யும் அரசிற்கு சார்பாகவே ஒன்று தீர்ப்பளிப்பார்கள் அல்லது கேஸை இழுத்தடித்தது நீர்த்து போக செய்துவிடுவார்கள்
எங்கும் ஊழல் எதிலும் ஊழல் மேல் மட்ட சிபாரிசுகள் இதில் சாமானியன் எப்படி வாழ்வது
நஷ்டப்பட்டவன் தன்  உரிமைகளுக்காக காவல் நிலையத்தில் போய்  காவல் தேடினால் அங்கும் ஊழல் பயமுறுத்தல்கள்கள்.என்ன செய்வது சரி தன்  உரிமைகளுக்காக போராட்டம் நடத்தினால் ஒருபுறம் போராட்டம் நடத்துங்கள் என்று நம்மை தூண்டி விடும் நம் அரசியல் சட்டம் மறுபுறம் போலீசை தூண்டி விட்டு போங்கள் போய்  தடியடி நடத்துங்கள் கண்ணீர்குண்டு வீசுங்கள் முடிந்தால் போலி என்கவுண்டர் மூலம் நாலு பேரை காவு வாங்குங்கள் என்கிறது இதுதான் ஜன நாயகமா.சரி மீண்டும் கோர்ட்டுக்கு போகவும் என்கிறார்கள் அங்கெ போனால்  ஆயிரம் முறை அல்லது முடிவற்ற கேஸ் ஒத்திவைப்புகள்
உதாரணம் காவிரி பிரச்சினை பாபர் மஸ்ஜித் பிரச்சினை
நீதிமன்றங்களுக்கு நியாயம் எது அநியாயம் எது என்று அப்பட்டமாகவே தெரிந்தாலும் தீர்ப்புகளை தருவதில்லை காரணம் அநியாயக்கார அதிகாரவர்கத்திற்கு பயம்
காவிரி பிரச்சினையில் நியாயம் எது என்று நீதிபதிகளுக்கு தெரியும் ஆனாலும் அவர்கள் நியாயத்தின் பக்கம் தீர்ப்பு தர தயங்குகிறார்கள் காரணம் தரங்கெட்ட அரசியல்
பாபரி மஸ்ஜித் விவகாரத்திலும் அதே கதைதான்
ஒருவேளை நியாயமான தீர்ப்பு வந்தாலும் அதை பார்லிமென்டில் சட்டம் போட்டு தடுத்து விடுகிறார்கள்
இந்த கேடுகெட்ட அரசியல் தாக்கங்களினால் நீதிமன்றங்களில்  குற்றவாளி தப்பிவிடுகிறான் நிரபராதி தண்டிக்கப்படுகிறான்
எனவே போலீசிடம் போகவும் பயமாக இருக்கிறது
நீதிமன்றங்களை நாடவும் தயக்கமாக இருக்கிறது
ஒரு நீதிபதி நியாயமாக நடக்க விரும்ப கூடாது என்பது எழுதப்படாத விதி
உதாரணம் சிபிஐ கோர்ட் நீதிபதி லோயாவின் மர்ம முடிவு
மாநிலத்தில் ஒரு கட்சி மத்தியில் வேறு கட்சி என்று ஆட்சி அமையும் பொழுது மாநிலத்தில் ஆளும் கட்சி மத்தியில் ஆளும் கட்சிக்கு மாநில  உரிமைகளை தொலைத்து விட்டு ஜால்றா போடவேண்டும்.எங்கே தன் ஆட்சி கலைக்கப்பட்டுவிடுமோ தன் பதவி பறிபோய்விடுமோ என்று பயத்துடன் தன் மக்களின் உரிமைகளையும் மாநில நலனையும் மத்திய அரசுக்கு அடகுவைத்து விடவேண்டும் 
நம்முடைய நீதி மன்றங்களும் எப்படி அரசியல் உள்நோக்குடன் செயல்படுகின்றன என்பதற்கு இந்த காவிரி நீர்பங்கீடு குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்திருக்கும் இறுதி தீர்ப்பு ஒரு உதாரணம்.நீதி தேவனே மயங்கி விழும் அளவிற்கு ஒரு அபத்தமான மோசமான அநியாயமான ஒரவஞ்சனையான தீர்ப்பு இதை நான் ஒரு தமிழகத்த்தை சேர்ந்தவன் என்பதற்காக சொல்லவில்லை.தீர்ப்பளித்த நீதிபதிகள் எவரும்கூட தமிழகத்தை சேர்ந்தவர்களாக இல்லாமல் இருக்கட்டும்.ஆனால் தேசிய  ஜனநாயக கண்ணோட்டத்தில் அவர்கள் இந்தியர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள்  தமிழ் நாட்டையும் இந்தியாவின் ஒரு பகுதி என்ற ரீதியில் தீர்ப்பை தரவில்லை.பேசாமல் வெளிப்படையாகவே தமிழகம் காவிரியை ஒட்டுமொத்தமாக மறந்துவிடவேண்டும் என்று கூறி இருக்கலாம் ஏனென்றால் தீர்ப்பின் உள்நோக்கமே அதுதான்.ஆனால் ரொம்ப புத்திசாலித்தனமாக தமிழகத்திற்கு சில சாதகங்களை உண்டாக்கி இருப்பது மாதிரி தீர்ப்பில் ஒரு தோற்றத்தை உருவாக்கி ஏமாற்றி இருக்கிறார்கள்.
உதாரணமாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு  ஆகியவற்றை ஏற்படுத்தி தரவேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை.இதை சுப்ரீம் கோர்ட் தன்  தீர்ப்பில் ஏற்றுக்கொண்டு ஆறு வாரங்களுக்குள் (FEBRUARY 10 2018 இலிருந்து )அதை அமைக்கவேண்டும் என்று மத்திய அரசிற்கு கெடு விதித்து விட்டு மிக புத்திசாலித்தனமாக வாரியம்(BOARD) என்ற சரியான வார்த்தைக்கு பதில் திட்டம் (SCHEME )என்ற வார்த்தையை போட்டு குழப்பி நம்மை ஏய்த்து இருக்கிறார்கள்
இது மட்டுமல்ல காவிரி யாருக்கும் சொந்தமில்லை அது தேசிய சொத்து என்று தீர்ப்பில் சொல்லிவிட்டு ஏற்கனவே தீர்ப்பாயத்தில் தமிழகத்திற்கு தரப்பட்ட ஆண்டின்  ஒட்டு மொத்த நீர் அளவான 192 TMC யிலிருந்து 14.5 TMCஐ 
குறைத்து அதை கர்நாடகாவிற்கு வழங்கி தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இதற்கு அவர்கள் கூறியுள்ள காரணம் எந்த ஒரு உண்மை தேசியவாதியையும் கொதிப்படைய வைக்கும் அதாவது காவிரியின் தமிழக எல்லையில் சுமார் 20TMC நீர்வளம் இருப்பதை தீர்ப்பாயம் கணக்கில் கொள்ளவில்லை அதையும் நாம் கணக்கில் கொண்டால் அதுவும் இதுவும் tally ஆகிவிட்டது எனவே தமிழகம் அதில் 10 TMC வரை எடுத்துக்கொள்ளலாம் என்று காரணம் சொல்லி இருக்கிறார்கள் . ஆனால் ஒன்றை வசதியாக மறந்து விட்டார்கள்.வழக்கு கர்நாடகாவிலிருந்து எவ்வளவு நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்பதற்கு தானே தவிர தமிழகத்தின் நிலத்தடிநீர் பற்றியதல்ல அப்படியானால் கர்நாடக எல்லையிலும் நிலத்தடி நீர் இருக்குமே அதை ஏன் கணக்கில் கொள்ளவில்ல.
இந்த தீர்ப்பை கொஞ்சமும் சிந்திக்காமல் நாம் வரவேற்பது நம் தலையில் நாமே மலத்தை அள்ளி  போட்டுக்கொள்வதற்கு சமம் 
இதில் நமக்கு சாதகமாக எதுவுமே இல்லை .நம்மை ஏமாற்றிவிட்டார்கள்
இந்த தீர்ப்பின் ஒரே ஒரு அம்சத்தை அதாவது தமிழகத்திற்கு தரவேண்டிய நீரின் அளவை குறைப்பதைமட்டுமே கர்நாடகம் ஏற்றுக்கொள்ளும் இருந்தாலும் அதிலும் அவர்கள் குளறுபடி செய்வது தொடரும் அதற்கு மத்திய அரசும் துணை போகும.அதுதான் தேசியம் அதுதான் ஜனநாயகம் இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால் இப்படி ஒரு அநியாயம் நடக்கும் பட்சத்தில் பாதிக்கப்படக்கூடியது தமிழகம்தான் ஆனால் இதை எதிர்த்து எந்த கோர்ட்டிலும் மேல்முறையீடும் செய்ய முடியாது ஏனென்றால் தீர்ப்பில் அப்படித்தான் இருக்கிறது
அது மட்டுமல்ல 15 வருடம் வரை இந்த தீர்ப்பு அமலில் இருக்கும் அதுவரை தமிழகம் கருநாடகத்தையோ அல்லது மத்திய அரசையோ எதிர்த்து ஒரு மயிரையும் பிடுங்க முடியாது
சரி 15 வருடத்திற்கு பிறகு இந்த பிரச்சினையின் முடிவு என்ன ?தெரியாது தீர்ப்பில் எதுவும் சொல்லப்படவேயில்லை
ஆனால் 15 வருடங்களுக்கு பிறகு காவிரி தமிழகத்திற்கு தேவைப்படாது.அதை கர்நாடகமே முழுவதும் பயன்படுத்திக்கொள்ளட்டும்
ஏனென்றால் அதற்குள் தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோல் கிணறுகள்,எண்ணெய் குழாய் பாதிப்புகள்,ஹெலோஜன் திட்டம் நியூட்ரினோ திட்டம் என்று செயல்படுத்தி விவசாயத்தை பாழ்படுத்தி அந்த மண்ணை மலடாக்கி இனி காவிரிக்கு அங்கு அவசியம் இருக்காது என்ற நிலையை உருவாக்கிவிடுவோம் என்பது அந்த தீர்ப்பில் எழுதப்படாத வரிகள்
இது அப்பட்டமான பாசிசமா? அல்லது தேசியமா ?
இனி நம்மவர்கள் இதை எப்படி அணுகினார்கள் என்று பார்க்கவேண்டாம் ஏனென்றால் அது கன்றாவி மேலும் முடிந்து போன கதை.காவிரியை நமது மக்களின் மெத்தனமும் முன் சென்ற ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறைகளும்தான் இவ்வளவு பூதாகரமான பிரச்சினையாக ஆக்கிவைத்தது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை
இனி என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம்
வருகிற FEB 23 2018 ஆம் தேதி காவிரி சம்பந்தமாக ஒரு அணைத்து கட்சி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இது எந்த அளவு பயன்தரும் என்று தெரியவில்லை
காரணம் திமுகவும் அதிமுகவும் எக்காலத்திலும் மாநில நன்மையை கருதி ஒருத்தருக்கொருவர் மனம்விட்டு கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுமில்லை விட்டுக்கொடுத்ததுமில்லை
அதனால் அவர்கள் குறுகிய நோக்கில் பலனைந்திருப்பார்களே தவிர தொலை நோக்கில் அவர்கள் எந்த பலனும் அடைந்ததில்லை அதில் அவர்களுக்கு அறிவுமில்லை அக்கறையுமில்லை
தொலை நோக்கு நன்மை என்பது மாநில உரிமைகளுடன் தங்களையும் முன்னேற்றி கொள்வது இதை மற்ற மாநிலங்களில் செய்கிறார்கள்
ஆனால் இந்த அறிவுஜீவிகளோ மாநில உரிமை மாநில நலன் என்பதெல்லாம் பின்னே முதலில் நான் என் ஆட்சி பதவி சுகங்கள் எனக்கு மட்டுமுள்ள  பொருளாதாரம் என் வீடு வாசல் இதற்காகத்தான் நான் அரசியலுக்கே வந்தேன் என்ற ரீதியில் செயல்பட்டு எல்லாவற்றையும் குட்டிச்சுவர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்
குட்டிச்சுவர்களுக்கு நடுவே என்ன செல்வசுகங்களில் மிதந்தாலும் அது உண்மையில் சுகம் அல்ல என்ற அறிவு கூட இங்கு ஆள்பவர்களிடம் இல்லை
அமெரிக்காவை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டு அதை ஆள்பவர்கள் மட்டும் தனித்தீவாக சுகப்படமுடியுமா.முடியாது எனவே அவர்கள் தன் நலனுடன் நாட்டு நலனையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இதுதான் உலகின் எல்லா பகுதிகளிலும் ஏன் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கூட இப்படித்தான்.
பக்கத்திலிருக்கும் கேரளாவை பாப்போம்
அவர்கள் கூறுகிறார்கள் நாங்கள் சினிமா தியேட்டர்களில் போய் முதல்வர்களை தேர்ந்தெடுக்கமாட்டோம் என்று எவ்வளவு எதார்த்தம் அவர்கள் சினிமாவை சினிமாவாகத்தான் பார்ப்பார்கள் அதில்வரும் ஹீரோக்களை ஹீரோ வொர்ஷிப் பண்ணுவதில்லை ஏனென்றால் மாநில நலன்
ஆந்திராவை பாருங்கள் ஒரு ஐந்து வருடம்தான் நடிகர் NTR இடம் ஆட்சியை தந்தார்கள் அதன் பிறகு கழட்டி விட்டார்கள் காரணம் மாநில நலன்
கர்நாடகாவை பாருங்கள் அங்கு ராஜ்குமார் இருந்தவரை அவர்தான் பெரிய ஹீரோ அதற்காக அவரை முதல்வராக்கினார்களா இல்லை காரணம் அதனால் மாநிலத்திற்கு என்ன நன்மை என்ற தொலை நோக்கு
சினிமா என்பது பொழுதுபோக்கு
ஆனால் அரசியல் நம் வாழ்வாதாரம்
அதில் சினிமா என்ற மாயையை புகுத்தலாமா கூடாது
ஆனால் அதில் நாம் தவறு செய்தோம் அதை அனுபவிக்கிறோம்
இப்போது இந்த சர்வகட்சி கூட்டத்தில் திமுக ஒத்துபோனாலும் அதிமுக ஒத்து வருமா என்பது சந்தேகம்தான்.
இந்த சந்தேகத்தையும்தாண்டி எல்லோரும் ஒத்த கருத்துக்கு வந்தால் அது நன்மைதான் ஆனால் அது அதிசயம்
முதலில் கூட்டம் தொடங்கும் முன்  முதல்வர் பழனிசாமி ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும் மற்ற கட்சிகள் அதிருப்தி அடைவது மாதிரி எந்த ஒரு கருத்தையும் தான்தோன்றித்தனமாக அவர் திணிக்க முயலக்கூடாது.ஒரு புத்திசாலி முதலில் மற்றவர்களை பேசவிட்டுதான் தான் பேசுவான் என்பது நினைவிருக்கட்டும்.திரு பழனிசாமி ஆட்சிக்கு முதல்வராக இருக்கலாம் ஆனாலும் மந்திரிதான் மன்னரல்ல என்பது கவனமிருக்கட்டும்
அத்தனை கட்சிகளும் தங்கள் உள்கருத்து வேறுபாடுகளை களைந்து மாநில நன்மை ஒன்றையே பிரதானமாக கொண்டு நல்ல முறையில் ஆலோசித்து ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம்






வியாழன், 25 ஜனவரி, 2018

எங்கே ஜனநாயகம்

எங்கே ஜனநாயகம்

அதிமுகவின் அரிய முத்தாய்ப்பு சாதனையாக போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு 780 கோடி ரூபாய் பொங்கல் பரிசாக ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுவிட்டது.ஆனால் கஜானாவில் பணம் இல்லை அதை இலவசங்கள் எம்ஜியார் நூற்றாண்டுவிழா மஹாபலிபுரம் ரிசார்ட்டில் அடைபட்டு போட கூத்துக்ள்,MLA களின் சம்பள உயர்வு மற்றும் இதர செலவுகள் என்று மாநிலத்தின் அத்தியவசிய  நலன்களுக்காக செலவு பண்ணி தீர்ந்த்துபோய்விட்டது
எனவே இருக்கவே இருக்கிறது அட்சைய பாத்திரம் அதாவது மக்களின் பை அது எவ்வளவு அள்ளினாலும் தாங்கும் சும்மா ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூத்தடிப்பார்கள் எதிர்க்கட்சிகளும் தூண்டி விடுவார்கள் கொஞ்ச நாள் அப்படிதான் இருக்கும் பிறகு வேறு வழியின்றி அமைதியாகி விடுவார்கள் எனவே உயர்த்து கட்டணத்தை அதுவும் அதிரடியாக இரவோடு இரவாக வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியாகி சனிக்கிழமை கட்டண உயர்வு அமல் படுத்தப்படுகிறது
இதையெல்லாம் பார்த்து இந்த  மக்களின் மீது அனுதாபப்படுவதா அல்லது ஆளும் வர்க்கத்தின் மீது கோபப்படுவதா அல்லது இரண்டுதரப்பினரையும் பார்த்து சிரிப்பதா அல்லது காறித்துப்புவதா என்றால் நான்காவதைத்தான் செய்யத்தோன்றுகிறது
ஆம் நம் மீது நாமே காறித்துப்பிக்கொள்ள வேண்டியதுதான்
இப்படிப்பட்ட ஆட்சியாளர்களை அவர்கள்தரும் இலவசங்களுக்கும் ரூபாய் நோட்டுகளுக்கும் ஆசைப்பட்டு அருமந்த ஓட்டு உரிமையை குறுகிய கண்ணோட்டத்துடன் விற்று தேர்ந்தெடுத்ததுதான் காரணம்
இந்த போக்குவரத்து மந்திரி திரு விஜயபாஸ்கரின் திமிருக்கு நாம்தான் நம்பிக்கை கொடுக்கிறோம்
எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் செய்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்.ஏனென்றால் கஜானா காலி .பாத்திரத்தில் பண்டம் இல்லை போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தே ஆக வேணும் எனவே இப்போதைக்கு இந்த உயர்வு தவிர இந்த அரசிற்கு வேறு வழி பற்றி சிந்திக்க தெரியவில்லை அல்லது மனம் இல்லை
ஒரு நல்ல அரசிற்கு எப்போதும் மக்கள் நலனே பிரதானமாக இருக்கும்
ஆனால் இப்போதைய ஆட்சியாளர்களும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லை சமய சந்தர்ப்பங்களினால் பதவிக்கு வந்தவர்கள்
எவ்வளவுதான் தண்ணீர் ஊற்றினாலும் ஓட்டை பானை நிறையாது
அது மாதிரிதான் போக்குவரத்து துறையும்
அது சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்பதற்கு பெரிய ஆய்வு எல்லாம் தேவை இல்லை அதன் ஓட்டை உடைசல் பஸ்களே சாட்சி
மழை நேரங்களில் அந்த பஸ்களில் பயணம் செய்தாலே போதும் உட்காருவதற்கு ஒழுகலில் நனைந்த இருக்கைகள் நிற்பதற்கும் முடியாமல் எங்கும் ஓட்டைகளும் ஒழுகலும் .இத்தனைக்கும் சேரும் இடமும் வழியும் ஒன்றாக இருந்தாலும் தனியார் பஸ்ஸை விட  கட்டணம் அதிகம்
பெயருக்கு SFS என்றும் சொகுசு பஸ் என்றும் ஓட்டை உடைசல் டப்பாகளை பஸ்கள் என்ற பெயரில் ஓட்டி பகல் கொள்ளை அடிப்பு இதுமாதிரி இந்தியாவில் எந்த மாநிலத்திலும்  கிடையாது
கர்நாடகா ஆந்திரா கேரளா என்று எல்லா இடங்களிலும் நல்ல தரமான நிலையிலேயே பஸ்கள் ஓட்டப்படுகின்றன அதற்கு ஏற்றாற்போல் கட்டணங்களும் இருக்கின்றன
ஆனால் இங்கு பஸ்களின் தரத்தை உயர்த்தாமல் கட்டணங்களை மட்டும் சகட்டு மேனிக்கு உயர்த்துகிறார்கள்
போன முறை ஜெயலலிதா இரண்டு ரூபாய் கட்டணத்தை ஐந்து ரூபாய் மற்றும் ஏழு ரூபாயாக கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் உயர்த்தினார் இப்போது அவரை தொடர்ந்து வந்தவர்கள் ஏழு ரூபாயை பத்து மற்றும் பதினைந்து ரூபாயாக உயர்த்துகிறார்கள்
இதற்க்கு மக்களின் மெத்தனமும் காரணம்
அன்றே இந்த ஆர்ப்பாட்டங்களை செய்திருக்க வேண்டும்
தமிழ்நாடு தம் உரிமைகளை பேணுவதில் அல்லது தமிழர்கள் தன்  நியாயமான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அல்லது தன்  உரிமைகளை கேட்பதில் மற்ற மாநிலங்களை விட பின்தங்கியே இருக்கிறார்கள்
உதாரணமாக எழுபதுகளில் கல்கத்தாவில் ஓடும் டிராம் வண்டிகளில் முதல் வகுப்புவகுப்பு கட்டணம் 25 பைசா இரண்டாம் வகுப்பு கட்டணம் 20 பைசா.டிராம் போக்குவரத்துதான் இன்னமும் அங்கு பிரதான போக்குவரத்து இருப்பினும் அது நஷ்டத்திலேயே இயங்கி வந்தது எனவே அரசு அதன் கட்டணங்களை 5 பைசா உயர்த்துவது என அறிவித்தது உடனே ஆர்ப்பாட்டம் வெடித்தது டிராம்கள் மறிக்கப்பட்டன எனவே புத்திசாலியான அரசு உடனே உயர்வை வாபஸ் பெற்றது வாகனங்கள் சேதப்படாமல் தப்பின.இந்த உதாரணம் இப்போதைய நிலையில்  சற்று வித்தியாசமானதாக இருந்தாலும் மக்களின் விழிப்புணர்வு எவ்வளவு தூரம் உடனடியாக இருந்தது என்பதற்காகவே கூறினேன் வெறும் 5 பைசாவுக்கு அவர்கள் உடனடியாக காட்டிய விழிப்புணர்வு அவர்களை இதுமாதிரி துயரங்களில் இருந்து இப்போதும் காக்கிறது
ஒருமுறை சென்னை வந்த அப்போதைய பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் இனிமேல் மத்திய அரசின் நிர்வாக பழுவை குறைக்க யூனியன் பிரதேசங்களை அந்தந்த மாநிலங்களுடன் இணைக்கலாம் என்று நிருபர்களுக்கு வெறும் பேட்டிதான் கொடுத்தார் புதுச்சேரியில் உடனே கலவரம் வெடித்தது திரு மொரார்ஜி அவர்கள் அந்த திட்டத்தை கைவிட்டார்
இப்படி பல மாநிலங்களை சொல்லலாம் ஆனால் இங்கே தேவை இல்லாத விஷயங்களுக்கெல்லாம் கூப்பாடு போடுவதும் ஆர்ப்பாட்டம் பண்ணுவதுமாக நம் சக்திகளை நாம் வீணடித்துவிட்டோம் இப்போது தேவைக்கு போராட சக்தியில்லை
ஜல்லிக்கட்டுக்கும்  இந்தி எதிர்ப்புக்கும் காட்டிய வீரியத்தை இப்போது பார்க்க முடியவில்லையே ஏன்?
இப்போது போராடுவதும் போலீஸ் தடியடியால் கலைந்து போவதுமாகத்தானே இருக்கிறது
அன்று இந்தி எதிர்ப்பின் தீவிரத்திலும் ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற வீரியத்தில் தேவையில்லாமல் காயப்பட்டோமே பல உயிர்களையும் ஏதோ சுதந்திர போராட்ட தியாகிகளை போல் பலிகொடுத்தோமே என்ன பிரயோஜனம்?
ஜல்லிக்கட்டு வந்தது ஆறுகளில் நீர் வந்ததா ?பசுமை வந்ததா?ராக்கட் தளம் வந்ததா?காவிரி முல்லை பெரியார் பாலாறு என்று பிரச்சினைகள் தீர்ந்தனவா?
மாறாக இந்தி தடை இன்றி வந்தது .பண மதிப்பிழப்பு  என்ற துயரம் வந்தது.GST என்ற நெருக்கடி வந்தது இப்போது நியாயமில்லா பஸ் கட்டண உயர்வும் வந்து சேர்ந்திருக்கிறது
இதற்கெல்லாம் காரணம் ?
மக்களுக்கு தன் தேவைகள் தன் உரிமைகள் எவை என்று இன்னும் தெரியவில்லை
எதற்கு போராட வேண்டுமோ அதில் போராடுவதில்லை
எதற்கு தேவை இல்லையோ அதற்கு போராடி தனது மரியாதை கெளரவம்,சக்தி அத்தனையையும் விரயமாக்குகிறார்கள் குறிப்பாக தமிழகத்தில்
அதனால்தான் இப்போது காலம் கடந்து போராடும்போது அதற்கு எந்த மதிப்பும் இல்லை
அன்று ஜெயலலிதா Rs 2/-லிருந்து சகட்டு மேனிக்கு Rs7/-க்கு உயர்த்தினாரே அப்போது கொதித்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது
ஓட்டுக்கு பணம் தருகின்றோம் என்னும்போது அவர்களை புறக்கணித்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது
சினிமாக்காரர்களையும் வீரவசனகர்த்தாக்களையும் தமிழ், திராவிடம் என்று பேசி இந்தி எதிர்ப்புக்கு தூண்டி விட்டார்களே அவர்களையும்  அன்றே அலட்சியப்படுத்தி இருந்தால் இன்று தமிழ்நாடு ஜொலித்துக்கொண்டிருக்கும்
ஜனநாயகம் வெறும் கேலிக்கூத்து
இதில் ஜனங்களின் உணர்வுகளுக்கு மதிப்பில்லை
அதிகார வர்க்கம் மக்களை ஆட்டுவிக்கிறது
இந்த பஸ் கட்டணம் அநியாயமானது
ஏழை எளிய மக்களை வதைக்கக்கூடியது
யாரிடம் நீதி கேட்பது கோர்டிடம் தானே
ஆனால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜட்ஜ் திருமதி இந்திரா பானர்ஜி இது சம்பந்தமாக போடப்பட்ட ஒரு வழக்கிற்கு அளித்த தீர்ப்பின் விசித்திரத்தை பாருங்கள் "பஸ் கட்டண உயர்வு நியாயமற்றதுதான்.இருப்பினும் இது அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது எனவே கோர்ட் இதில் தலையிடமுடியாது"என்று கை விரித்துவிட்டார்"
இதை விட கொடுமை என்ன இருக்கிறது
வன்முறையும் தீவிர வாதமும் தலைதூக்க இதுபோன்ற தீர்ப்புகளே காரணம்
மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு மக்களின் சிரமங்களை கோர்ட் கூட தீர்க்க முன்வருவதில்லை என்றால் எங்கே ஜனநாயகம்?

 

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

அழிவு நெருங்குகிறது

அழிவு நெருங்குகிறது


ஆண்டாள் பற்றி ஒரு பெரிய சர்ச்சை இப்போது கிளப்பிவிடப்பட்டிருக்கிறது கவிஞர் வைர முத்து தினமணி ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் பற்றி  ஒரு சர்ச்சை குரிய  கருத்தை பதிவு செய்த்துவிட்டார்.இது சம்பந்தமாக சங்க் பரிவார்கள் வைரஃமுத்துவின் மீதும் தினமணி ஆசிரியர் மீதும் வழக்கு பதிவு செய்ததுடன் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் மிக மோசமான எதிர் கோஷங்களும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் பத்திரிகைகள் மூலமாகவும் கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்
இதில் முன்னணியில் இருப்பவர் பிஜேபியை சேர்ந்த எச்.ராஜா இவர் வைர முத்துவின் மீது ஒற்றை படையில் திட்டி அறிக்கைகள் வெளியிடுகிறார் பேட்டியும் கொடுக்கிறார் வழக்கமாக முஸ்லிம்களையும் இவர் சீண்ட தயங்கவில்லை ஆனால் பிராமணரான திரு ஞாநி அவர்கள் இது பற்றி எவ்வளவு யதார்த்தமாக தன்  நிலைப்பாட்டை பதிவு செய்திருக்கிறார் என்பதே மேல்கண்ட வீடியோ
அருமையான ஒவ்வொருவரும் காண வேண்டிய பதிவு.இந்த பதிவிற்கு பிறகு அவர் உயிருடன் இல்லை என்பது ஒரு சோகம்
இந்த சர்ச்சையின் மூலம் ஒரு விஷயம் என்னவென்றால் ஆண்டாளை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் தெரிந்து கொண்டதுதான்
இத்தனைக்கும் திரு வைரமுத்து பெருந்தன்மையுடன் மன்னிப்பும் கேட்டு கொண்டார்
இப்போது விஷயம் என்ன வென்றால் ஆண்டாள் ஒரு தேவதாசி அல்லது தேவடியாள் குலப்பெண்மணி என்று ஒரு ஆங்கில நூலை மேற்கோள் காட்டி திரு வைரமுத்து பேசியதுதான்
இப்பொழுது நாம் கேட்பது மேற்கண்ட வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளா எச்.ராஜா பதில் சொல்லட்டும்
ஆம் என்றால் களங்கம் இல்லாத இந்த வார்த்தைகளை கெட்ட வார்த்தைகள் ஆக்கியது யார்?சந்தேகமே இல்லாமல் கோயில் பூஜாரிகளும்,தர்மகர்த்தாக்களும் கோயில் நிர்வாகிகளும்தான்
இறை சேவைக்காக தங்களை அர்பணித்துக்கொண்ட இளம் பெண்களை ஏய்த்து அவர்களை தங்கள் சுகபோகத்த்திற்காக  பயன்படுத்த்திக்கொண்டது அவர்கள்தான் மற்றபடி ஆதிகாலங்களில் இப்படி இறை சேவைக்காக ஆண்களும் பெண்களும்  தங்களை அர்ப்பணித்து கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் புனிதர்களாகவே கருதப்பட்டனர்
இப்படி ஒரு நிலையில் இருந்தவர்கள்தான் ஏசு அவர்களின் தாயார் புனித மேரி அவர்கள் அவர்களின் மீது யூதர்கள் களங்கம் கற்பிக்க முயன்றனர் ஆனால் இறைவன் அவற்றை மறுத்து வேதங்களில் அவர்களை புனிதவதி என்றே கூறுகிறான் என் தாய் களங்கமற்றவள் நான் அற்புதமாகவே என் தாயின் கருவறையில் உருவானேன் நான் தேவனின் தூதனாக இருக்கிறேன் என்று அன்று பிறந்த பச்சிளம் பாலகனாக புனித ஏசு இருக்கும் பொழுதே அவரை இறைவன் பேச வைத்தான் இந்த அற்புத செய்தி முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆனால் கூறப்பட்டிருக்கிறது
எனவே தேவதாசிகளும் தேவடியாள்களும் புனிதர்களாகவே ஆதி காலங்களில் இருந்திருக்கின்றனர்.அந்த வார்த்தைகளும் தவறான அர்த்தங்களை தரவில்லை
ஆண்டாள் தேவதாசி குலத்தில் பிறந்த நிலையில் குழந்தையாக பெரியாழ்வாரால் தத்தெடுக்கப்பட்டார் என்பது உண்மையானால் அக்கால கட்டங்களில் கல்யாணமாகி குழந்தை பெற்றெடுத்த நிலையில் கூட சில பெண்கள் தங்களை இறை பணிகளுக்காக அர்ப்பணித்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது
இது ஒருபுறமிருக்க மேற்கண்ட வீடியோவில் திரு ஞாநி அவர்கள் ஆண்டாள் என்பதே பெரியாழ்வாரால் கற்பனையாக புனையப்பட்ட ஒரு பெயர்தான் என்றும் அந்த பெயரில் அவரே திருப்பாவை போன்ற பாடல்களை புனைந்தார் என்றும் திரு இராஜாஜி அவர்களின் ஒரு குறிப்பை மேற்கோள்காட்டுகிறார்
இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த ஆண்டாள் சர்ச்சையை கிளப்பிவிட்டவர்கள் வெறும் உரலைத்தான் இடிக்கிறார்கள் என்பது தெளிவு
இதை கிளப்புபவர்கள் அனைவரும் தமிழகத்தின் நலனில் அக்கறை இல்லாதவர்கள்.எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்ப்பவர்கள்
 துட்டுக்கொடுத்தது ஓட்டு வாங்கி ஆட்சியை பிடித்தவர்கள் ஆட்சி என்ற பெயரில் அராஜகத்தை பஸ் கட்டணங்களை சகட்டு மேனிக்கு உயர்த்தி அரங்கேற்றிவிட்டார்கள்
இன்னொரு பக்கம் காவிரியில் கர்நாடகமும் மத்திய அரசும் செய்யும் துரோகம்
வேறொருபக்கம் முல்லை பெரியாறில் கேரளம் செய்யும் அக்கிரமம்
தமிழகத்திற்கு வரும் பெரும் பெரும் தொழிற்சாலைகளை எல்லாம் வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடும் கொடுமை காரணம் கமிஷன்
மீத்தேன் திட்டம் ஹைடிரோகார்பன் திட்டம் விளை நிலங்களில் வாயுக்குழாய்களை பதித்தல் .
இதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது ஒன்றும் இல்லாததற்கு சர்ச்சை
சாரி தமிழ் நாடு
உனக்கு அழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது
 

சனி, 30 டிசம்பர், 2017

A VIDEO MYSTERY

ஒரு வீடியோ மர்மம் 

Seyed1951                        
ஜெயலலிதா பற்றிய ஒரு வீடியோவை டிடிவி தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல்  என்பவர் வெளியிட்டார்.வெறும் இருபது வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில் ஆஸ்பத்திகிரியில் இருந்த போது ஜெயலலிதா உயிருடன்தான் இருந்தார்.ஜூஸ்  குடித்தார் என்பது போல் வீடியோ காட்சி இருந்தது 
இந்த வீடியோ வெளியாகி பலரின் விமரிசனத்த்திற்கும் கண்டனங்களுக்கும் காரணமாகியது என்னவோ உண்மைதான்.வெளியிட்டவர்கள் நோக்கங்களில் அதுவும் ஒன்று.இந்தவகையில் அவர்கள் எதிர்பார்த்தது நடந்தாலும் அவர்கள் எதிர்பாராததும் நடந்தது அது ஜெயலலிதாவின் ஆஸ்பத்திரி மரணத்தின் மர்மம் பற்றிய சந்தேகத்தை அந்த வீடியோ மேலும் ஊர்ஜிதப்படுத்துகிற மாதிரி பல விமர்சனங்களும் எழுந்ததுதான்.இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை 
இந்த விமர்சனங்களை நீர்த்துப்போக செய்ய அவர்கள் ஒரு நாடகத்தை இப்போது அரங்கேற்றுகிறார்கள் 
அதாவது இந்த வீடியோவை  வெற்றிவேலின்  கையில் நான் கொடுக்கவில்லை அதை வெளியிடவும் நான் சொல்லவில்லை என்று தினகரன் அடிக்கும் பல்டி நாடகம் நம்பர் ஒன்று 
தன்னை கொலைகாரி என்று தூற்றும் போது கூட சசிகலா அதை வெளியிடவில்லை தினகரன் எப்படி வெளியிடலாம் என்று அதே குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணபிரியா தினகரனுக்கு எதிராக கிளம்பி இருப்பது நாடகம் நம்பர் இரண்டு 
சசிகலா வீடியோ வெளியீட்டில் அதிருப்தியடைய அவரை சமாதானப்படுத்த தினகரன் பெங்களூர் சென்றது நாடகம் நம்பர் மூன்று.இதில் ஆர்கே நகர் தொகுதியில் தினகரனின் அபார வெற்றியினால் சசிகலா மகிழ்ச்சியடைந்ததது எடப்பாடி ஆட்சி கவிழ வேண்டும் என்று சசிகலா மெளன விரதம் இருப்பது எல்லாம் வேறு விஷயம் அதெல்லாம் தான் ஆடவில்லை என்றாலும் சதை ஆடும் என்பார்களே அது மாதிரி.தானியங்கி.Autunomic 
இப்படியெல்லாம் உட்பூசல் நாடகமாடி வீடியோ விலுள்ள பெரும் அபத்தங்களை மறைக்க நினைக்கிறார்கள் 
எனினும் அந்த வீடியோவின் அமைப்பு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது மாதிரி ஒரு கெட்ட நோக்கம் ஒரு விபரீதம் நடக்கவிருப்பதை சொல்லாமல் சொல்கிறது 
ஜெயலலிதாவை பிணமாகத்தான் ஆஸ்பத்திரியில் நாங்கள் அட்மிட் செய்தோம் என்று எங்கள் மீது அநியாயமாக பழி போட்டார்கள் இப்போது பார்த்தீங்களா பார்த்தீங்களா அம்மா ஆஸ்பத்திரியில் உயிரோடு இருந்து ஜூஸ் குடிப்பதை எனவே நாங்கள் அவரை ஒன்றும் செய்யவில்லை அதாவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை 
சரி இப்போது வீடியோவை ஆராய்வோம் 
இந்த வீடியோ அப்போல்லோவில்தான் எடுக்கப்பட்டதா? இது பற்றி அப்போல்லோ நிர்வாகம் கப்சிப் 
எனவே இந்த வீடியோ அப்பல்லோ நிர்வாகத்தின் அனுமதியுடன் எடுக்கப்படவில்லை 
இந்த வீடியோவில் ஜூஸ் குடிக்கும் அம்மா ஒரு ஒப்புக்கு கூட கேமராவுக்கு முகம் திருப்பவில்லை எனவே இது அம்மாவின் கவனத்திலும் எடுக்கப்படவில்லை.
ஒரு எதிர்பாராத தருணத்தில் வெறும் இருபது வினாடிகளில் அவர் ஜூஸ் குடிக்கும்போது ஏதோ  ஒரு கெட்ட காரியம் அரங்கேற்றத்தின் முத்தாய்ப்பாக இது எடுத்து முடிக்கப்பட்டு இருக்கிறது 
இதன் பிறகு வந்த நாட்களில் நடந்தவை என்ன என்ற கேள்வியைத்தான் இந்த வீடியோ அழுத்தமாக எழுப்புகிறது 
ஒரு பேச்சுக்கு இந்த வீடியோ ஜெயலலிதாவின் அந்த 75 நாட்கள் அப்பல்லோ மர்ம வாசத்தில் எதோ ஒரு இருபது வினாடிகளில் எடுக்கப்பட்டதென்றே வைத்துக்கொள்வோம் .இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது 
ஜெயலலிதாவை அட்மிட் செய்யும் போதிலிருந்து அந்த வீடியோவை எடுத்து முடியும்வரை உயிருடன் இருந்தார் இல்லை இல்லை உயிருடன் வைக்கப்பட்டார் என்று மட்டும் தெரிகிறது அதன் பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பது ஒரு கேள்வி 
அடுத்து செப்டெம்பர் 21,2016 வரை நன்றாக இருந்தவர் பொது காரியங்களில் பங்கேற்றவர் திடீரென்று செப்டெம்பர் 22,2016 இரவு வீடியோவில் கண்டமாதிரி  எப்படி நிலைகுலைத்தார் என்பதும் ஒரு கேள்வி 
சொல்லிவைத்த மாதிரி ஜெயலலிதாவின் வீட்டிலும் ஆஸ்பத்திரியிலும் அந்த 75 நாளும் சிசிடிவி கேமராக்கள் வேலைசெய்யவில்லையே ஏன் என்பது அடுத்த கேள்வி 
வெறும் ஏதோ ஒரு இருபது வினாடி வீடியோ எடுத்தவர்கள் உண்மையிலேயே அம்மாவின் மீதும் அவரை தேர்ந்தெடுத்த மக்களின் மீதும் அக்கறை பட்டிருந்தால் அந்த 75 நாட்களும் ஒவ்வொருநாளாக புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுத்து வெளியிட்டு இருக்கலாமே ஏன் செய்யவில்லை என்பது அடுத்த கேள்வி இப்படி பல கேள்விகள் 
எனவே இந்த வீடியோ அவர்களுக்கு எதிராகவே இருக்கிறது 
எட்டு நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்

திங்கள், 18 டிசம்பர், 2017

பய உணர்வும் செரிமானமும்

பய உணர்வும் செரிமானமும் 

நம்முடைய சில உணர்ச்சிகள் உதாரணமாக,பயம்,அதிர்ச்சி,பீதி,போன்ற உணர்வுகள் கூட நம்முடைய ஜீரணமண்டலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.உதாரணமாக இந்த உணர்வுகளின்போது நம் இரத்தத்தில் அட்ரீனலின் சுரப்பு அதிகரிக்கிறது நமது தானியங்கி நரம்புகளின் முனையிலிருந்து ஜீரண மண்டல திசுக்களுக்கு நாரெட்ரீனலின் என்ற பொருள் சுரப்பு அதிகரிக்கும் 
இதன் விளைவு குடல் தசைகள் தளரும் குடலின் அசைவுகள் தளரும் வாயில் அதிக பசை தன்மையுள்ள உமிழ்நீர் சுரக்கும் ஜீரணமண்டலத்தை உட்சுவரில் படர்ந்திருக்கும் ம்யூஸின் என்ற பசை மேலும் கெட்டியாகும் 
இதனால் மலச்சிக்கல் உண்டாகும் உணவு சத்துக்கள் மற்றும் மருந்துகள் சரியாக வயிற்றிலும் குடலிலும் உறிஞ்சப்படாது Seyed1951

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...