வியாழன், 7 ஜூலை, 2016

A MURDER AT THE STATION-CONTD....

IS RAMKUMAR THE REAL CULPRIT?

At last the Nungambakkam station is breathing normally after witnessing the horror of Swathy's murder scene that happened at one of it's pateform on 24-06-16 Friday morning.
Police arrested a person known as Ramkumar at near Tirunelveli during when he himself disguised as a shepherd by tends and rears sheep. 
When police neared him he ran to his house and locked inside his house and tried to suicide by slashing his throat with blades.This is the police statement from the spot.
After admitted him in a hospital for treatments he recovered slowly.During his recovery he stated to the police that he killed Swathy because of the apprehension due to her vehement refusal of his love and her nasty abuse of his personality.Even after his further health improvement he somewhat described about the incident with some more detail that he attacked Swathy not with the aim of killing her but to slash her mouth which abuses him with a sword like dagger.But the dagger which was found out near the spot do not have any proper finger prints of the culprit.
This is the second statement from the police.
A sharp blood stained sward was found out in the house of Ramkumar during his arrest saga along with a blood stained shirt at his house.A statement from police.Confusion begins to cloud.
Police from the beginning itself gives insisting statements that Ramkumar is the culprit.
Now from the Ramkumar side they try to for get a bail for Ramkumar with an entirely different statement that "Ramkumar in no way connected with the murder it is the Police they purposefully manipulated the stories"
But the police refuses this.
We pray God the Almighty to bring the reality so soon inorder to get the criminal to be punished


 

சனி, 2 ஜூலை, 2016

THE CONCEPT OF GOD IN ISLAM

THE CONCEP OF GOD-ALLAH

Many non Muslims in India confuse themselves with the concept of God or Allah of Islam.They are misinterpreted of the term Allah as Arabic God.They doubt the patriotism of the Muslims and their nationality as how these Muslims worships Allah inspite of numerous indigenous Gods are available in India.
First thing Allah is not an Arabic God.Islam does not believe on Gods for every Nations.Islam is he only religion insists to beleive and see God as God and not through any media.
The Quran says in the chapter 112 (Surah Al Ikhlas-Chapter of Good Faith)"Kul Hu Allahu Ahad-He Allah is present as Unique,One,and Powerful
Allahu Samad-He is free from all needs and Self Subsisting
Lem yelid wa lem Yoolad-He neither beget nor in born
Wal lem yakun lahu kufwan Ahad-Nor is there to Him any equivalent
The above chapter is nothing but the whole essence of Islam in only Five Holy Verses.
Allah is an Arabic word means God in English is not the word deviced by Prophet Mohammed.It was routed from its corrosponding original Hebrew word Eloh.
Islam is not insisting any Muslim to use the word Allah for all times except in a few situations like during Prayers and Calling for Prayers (The Azan) to keep uniformity.
Even Islam insists a Muslim after the prayer finished raise your hands towards Allah and supplicate Him,ask Him,express your wishes,your sorrows,and beg Him with tears any right expectations with full confidence,politeness,and conciouness,at your own mother tongue. 
Islam insists the society give Jumma and Eid Presentations (Quthba) at any choice your language in which you can understand it thorughly. 
Islam has no language barriers. 
Al Quran certifies in all languages exist  before Prophet Mohamed The Holy Books were revelated to various prophets by Allah all over the earth.
Accordingly Islam says all languages are Punith and holy as they are the Gifts of Allah to mankind inorder to express their thoughts.
Allah says in Al Quran in Chapter of Figs(Al Theen)"certainely,and certainely We created the Humen Beings as the most top and handsome creations among all"
Muslims are not offering prayer to the word Allah as it is not God to us as it is made by man to indicate God.
Allah is a word that any body can use disregarding to any religion.
But yet all Muslims in any part of the world they often use this word,because of its uniqueness.
Allah is in masculine gender and cannot be converted into its corresponding feminine gender.
Yet Allah is above all,above our imagination and He is an entity beyond the genders because of the language what we could speak Islam is insisting to call or write Allah always in the upper most genders available in your languages.In all the available languages in the earth 'He' is the uppermost gender followed by 'She' and 'It'.
Hence conclusively Muslims are not praying any seperate god as they beleive strongly as God is one.All praises to him.Prophet Mohammed is His Servant and His last Messenger.
"Ashad An Laayilaaha Illallah,Wa ashad Anna Muhammadan Abdhuhu Wa Rasooluhu."
Seyed1951

வியாழன், 30 ஜூன், 2016

A MURDER AT THE STATION-Continued..

THE REAL LIFE COMEDIANS

Still the police have not yet confirmed and figured out the killer of Swathi the poor victim of the henius murder incidence occured at 6 am in the morning on last Friday the 24 of June 16 at the Nungambakkam Railway Station one of Chennai's busiest place.
But the real life comedians started to earn familiarity by circulating some articles in the social medias.The article which is in Tamil reads as follows
Seyed1951HHere is the translation:-"A Brahmin girl known as Swathi was murdered cruelly by an animal,a Muslim known as Bilal Malik.
But in Tamilnadu no one reacted properly for this.Even the medias,the politicians are all keep their mouth closed.Because the victim was a Brahmin.
But in case if the victim was a non Brahmin,a Dalit then Rahul would rush to scream.The medias would scream for 24 hours.
Dalit Movements would stand with protests.
All the Dravidian political hooligans would dance 
The perverted criminals in the name of religeous organizations(the words in italics are my emphasis),the women wellfare organizations,would sound their voices.
But nothing happened.What to do.Because the victim was a Brahmin.There is no political gains can be earned out of this.
When the society would change its nature of caste differences even among the dead.
Oh God how would you bring change of this nature of Tamil nadu"
But the article was originally seen in the famous cinema and a well educated comedian Mr.Y.G.Mahendran's Facebook Page as we can see it at the upper corner of the article.
After a big storm of voices who witnessed this nasty article in his page,he now comes forward for his own rescue with the so called apolagy which is the real comedy.
He gave the (apolagy?)statement in the media as follows:-"I am so sorry for the article which appeared in my page.If any body hurt out of this I am very sorry for that as I have no intention to hurt  anybody else at any time.
First of all I am not the author of that article and I have not written it.I have not given any permission to anybody else including the Facebook authorities to use my page in any way without my concern.The artice was already on circulation in the medias.Accordingly it came to my sight also and I only shared that in my page as I liked it and I fully agreed with its content."
Now the kitten came out of the hole.Even though he was not the author of that article he agreed that he liked that article and agreed with it but he has no intention of hurting any one else.
Not only in cinema he proved that in real life too he is a comedian but insane.
Mr.Y.G.Mahendran do not intend to live by making cheap politics and by cheating innocent people.There are people among Muslims(by name) and Brahmins (by name)  living according to their own mental sickness to implant poisonous thoughts and enmity among the two brotherly communities,but there are moral people among the Brahmins and Muslims would never harm anybody else.
As being I am a Muslim I hereby say that the criminal whether he is a Muslim or non Muslim should be brought into Justice and if found guilty should be punished with capital punishment without any mercy.
Oh Allah the Just of the Dooms Day you know all I supplicate you bring peace among us,love between us,and solve this crime with truth. 



       words in

திங்கள், 1 பிப்ரவரி, 2016

அற்புதங்கள் ஆன்மீகமாகுமா?

Seyed1951     பாகம் -1

அற்புதங்கள் ,கண் கட்டி வித்தைகள் இன்னும் சில நம்பமுடியாத சங்கதிகள் மூலம்தான் இன்று ஒருமனிதனை ஆண்டனின் அந்தஸ்த்திற்கு உயர்த்துகிறார்கள்.அந்த மனிதன் இறந்து விட்டால் உடனே அவனை பற்றி நம்பமுடியாத கட்டுக்கதைகளை எல்லாம்அவிழ்த்துவிட்டு மக்களை மதி மயக்குகிறார்கள்.மக்களும் பெரும்பாலோர் இந்த வழிகெட்ட ஆன்மீகத்திற்கே மயங்குகிறார்கள் காரணம் போலித்கனத்தில்   இருக்கும்கவர்ச்சியும்,மனமயக்கமுமே காரணம்
வெறும் அற்புதங்களினால்  தான் ஒரு மனிதன் தெய்வ அந்தஸ்து பெறுகிறார் என்றால் ஊரிலுள்ள அத்தனை செப்பிடு வித்தைக்காரர்களும் கடவுள்களாகி விடுவார்கள்.இன்று மனிதனும் தெய்வமாகலாம் என்ற குழப்பமான சங்கராச்சாரியாரின் அத்வைத கோட்பாடு நம்ப முடியாத பல கட்டுக்கதைகளை எல்லாம் ஆன்மீகமாக்கிவிட்டது.புத்தர் அன்பே கடவுள் வேறு கடவுள் இல்லை என்று தனக்கு போதி மரத்தடியில்  ஞானம் இறங்கியதாக கூறி அரண்மனையை துறந்து வெளியேறினார்.இந்துக்களில்  வேத மதத்தில் விரக்தியடைந்த பெரும்பாலோர் அவர் பின்னே போனார்கள்.இதைக்கண்ட ஆதி சங்கரர் இங்கே வாருங்கள் தாய் மதத்திற்கு வாருங்கள் இங்கே வந்தால் எல்லோரும் கடவுளாகலாம்.அவதார புருஷர்களாகலாம் என்று வேத மதத்திற்கு முரணான அத்வைதக்கோட்பாட்டை புகுத்தி உண்மையான இறைவனை மறை பொருளாக்கினார்
இதனால் மக்கள் அற்புதங்களில் மனமயக்கம் அடைந்தனர்.வேதங்கள் இறைவனின் சூத்திரங்கள் மறக்கப்பட்டு மனிதனின் கற்பனைக்கு தோன்றியதை எல்லாம் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் சிலர் எழுதித்தள்ளி மக்களை நம்பவைத்து மடமைக்கு ஆளாக்கினர்.இந்த மடமை இந்தியாவில் இந்துக்களை மட்டுமல்ல உலகிலுள்ள பெரும்பான்மை மதத்தவரான கிறித்துவ முஸ்லிம் யூதம் என்று அத்தனை பேரிடத்திலும் வைரஸ் ஆக பரவி விட்டது.இன்று மூட நம்பிக்கையே மார்க்கமாகி விட்டது
இதை சாதகமாக்கிக்கொண்ட சில CULTS  சாய் மதம்,மெய்வழி மதம் ,பஹாய் மதம்  ,மனு ஜோதி மதம்  இத்யாதி இத்யாதி மதங்கள் என்று உருவாக்கி மக்களை ஏய்க்க துவங்கினர்.
  1. ஆனால் வெறும் அர்த்தமற்ற அற்புதங்களைக்காட்டி மதங்களை பரப்புவதென்பது இறைத் தூதர்களின் செயல் அல்ல.இறைவன் அப்படி அவர்களுக்கு கட்டளை இடவும் இல்லை.எந்த ஒரு இறைத்தூதரும் மேடை போட்டு வித்தை காட்டி விபூதி வரவழைத்து தன்னை விளம்பரப்படுத்தி கொண்டதில்லை இறைத்தூது என்பது ஒரு பிரம்மாண்டமான பாரம் கொண்ட ஒரு பணி.மிகவும்கடினமான ஒரு வேலை.திருக்குர் ஆனில் பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்ட சுமார் 25 இறைத்தூதர்களில் இராஜாக்களாக ஆண்ட புனித சாலமன் (நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம்),புனித ஜோசப் (நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம்),புனித டேவிட் (நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம்)இவர்களைத்தவிர மற்ற அத்தனை  இறைத்தூதர்களும் தாங்கள் யாருக்கு தூதராக அனுப்பப்பட்டோமோ அந்த கோத்திரங்களில் உள்ள மேல்வர்க்கத்தினரால் கடும் சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள் .புனித ஜகரிய்யா (நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம்) அவர் மகன் புனித யோவான் (நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம்) ஆகியோர்  விரட்டி விரட்டி கொல்லப்பட்டார்கள்.பெரும்பாலும் இராஜாக்களான அந்த இறைத்தூதர்களைத்தவிர வேறு எவரும் பெரும் பணக்காரர்களாகவும் வாழ்ந்ததில்லை அதே சமயம் பஞ்சப்பிராரிகளாகவும் வாழ்ந்ததில்லை.வயிற்றுப்பிழைப்புக்கு அவர்கள் வியாபாரிகளாகவும்  அல்லது தொழிலாளிகளாகவும் தான் வாழ்ந்தார்களே தவிர வெறும் வித்தைகள் காட்டி பிழைப்பு நடத்தவில்லை.
இன்னும்  திருக்குர் ஆனில்  இந்த பூமியில் முஹம்மது (ஸல்) அவர்களைத் தவிர அதற்க்கு முன் வாழ்ந்த அத்தனை வெவ்வேறு கோத்திரங்களுக்கும் அவர்கள் மொழியிலேயே வேதத்தையும் அதை போதிக்க அவர்களிலிருந்தே ஒரு தூதரையும் அனுப்பியதாக இறைவன் கூறுகிறான் எனவே ஒவ்வொரு மொழியிலும் வேதங்களும் தூதர்களும் வந்தார்கள்.இவ்வாறு உலகம் முழுவது பல்லாயிரம் தூதர்கள் வந்தாலும் தூது ஒன்றுதான் அது "வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன்தான் நான்  அவன் தூதராக இருக்கிறேன்"என்று ஒவ்வொரு இறைத்தூதர்களும் போதித்தார்கள்.சரி தன்னை இறைத்தூதர் என்று மக்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் அப்போதுதான் இறை நம்பிக்கை முழுமை அடையும் என்று அவர்கள் கூறினது தங்களை விளம்பரப் படுத்திக் கொள்வதற்காகவா?இல்லை.அதிலொரு தத்துவம் உண்டு ஒரு மாணவன் ஒரு பாடத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்றால் முதலில் அதை கற்றுத்தருபவரை தன்  ஆசிரியராக அவன் மனதில் இருத்த வேண்டும்.மற்றபடி எந்த ஒரு இறைத்தூதரும் தன்னுடைய இப்பணிக்காக மக்களிடமிருந்து எந்த கூலியையும் எதிர்பார்த்ததில்லை விளம்பரமும் தேடிக்கொள்ளவில்லை 
மேலும்  இந்தப்பணிக்காக இறைவன் ஒரு மனிதரை எப்படி தேர்ந்தெடுக்கிறான் என்றால் சகிப்புத்தன்மை, மனோதைரியம், நேர்மை நாணயம், வீரம்,காருண்யம் ஆகிய குணங்களைக்கொண்ட நல்ல மனிதர்களில் ஒருவரைத்தான் தன்  தூதராகத்தேர்ந்தேடுக்கிறான்.
புனிதநோவா (St.NOVA) இவரை திருக்குர் ஆனில் நபி நூஹ்(அலை ) என்று சொல்லப்படுகிறது.இவர் ஒரு மீனவ இனத்தை சேர்ந்தவர்.சிறு சிறு படகுகள்,தோணிகள்,மீன் வலை போன்றவை செய்வதில் விற்பன்னர். இவர் தன் ஆயிரம் வருட வாழ்நாளில் கிட்டத்தட்ட 950 வருடங்கள் இறைத்தூதராக பணியாற்றினார்.இவருக்கு வந்த இறைத்தூது."இறைவன் ஒருவனே.அவனை தவிர வேறு யாரும் வணக்கத்திற்கு உரியவர் அல்லர் .நான் நோவா அவனுடைய தூதனாக இருக்கின்றேன்" என்பதுதான் .இத்தனை வருட தூது பணி யிலும் மிக சொர்ப்பமானவர்களையே அவரால்  ஏகத்துவத்திற்கு கொண்டு வர முடிந்தது.மிகவும் சிரமப்பட்டார் கொடுமைகளுக்கு ஆளானார் சொந்த குடும்பமே அவரை பரிகசித்தது.களைப்படைந்தார் சோர்வுற்றார்.இப்போது பொறுமை எல்லை மீறியது இறைவனிடம் பத்துவா செய்தார் அவர்களை அழித்து விடும்படி.அவரும் மனிதர்தானே. ஏக இறைவனின் சக்தியை கொஞ்சமும் லட்சியம் செய்யாத அந்த கேடு கெட்ட சமுதாயத்தை இறைவன் ஒரு பெரும் வெள்ளப் பெருக்கின் மூலம் அழிக்க எண்ணினான்.புனித நோவாவிடம் அவரும் அவரை நம்பியவர்களும் தப்பிப்பதற்காக ஒரு கப்பலை செய்ய உதவினான்.இறுதியாக புனித நோவா  அவர்கள் எச்சரிக்கை விட்டார்கள்.அலட்சியப்படுத்தப்பட்டார்கள்.வானம் கிழிந்து பெரும் மழை இறங்கியது.பூம்யிலிருந்தும் வெள்ளம் சீறி கிளம்பியது மூன்று நாட்கள் இந்த பிரளயம் தொடர்ந்தது தன்  மகனிடம் இப்போதாவது திருந்தி ஏக இறைவனின் வல்லமையை நம்பி வா வந்து கப்பலில் ஏறிக்கொள்  என்றார்கள்.அவன் மமதையுடன் மறுத்தான் அழிந்தான்.இப்பெரும் அற்புதம் சரித்திரப்புகழ் பெற்றது.இது எதற்க்காக? நோவாவிற்கு விளம்பரம் தருவதற்காகவா? நோவா இதன் மூலம்தான் பிரபலம் அடைந்தாரா? உண்மையில் இந்த அற்புதத்திற்க்கும் நோவாவின் சக்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சூழ்நிலையின் நெருக்கடியில் பொறுக்க  முடியாமல் அவர் தவிக்கும்போது இறைவன்தான் இந்த அழிவை அந்த மக்களின் மீது தீர்மானிக்கிறான்.எந்த  நிகழ்வும் இறைவனின் தீர்மனப்படியே அன்றி வேறு எவருடைய தீர்மானப்படியும் அரங்கேறுவதில்லை.
பைபிளில் புனித யோஹன்னா என்றொரு தீர்க்கதரிசி பற்றி சொல்லப்பட்டு உள்ளது.இவரின் பெயர் திருக்குர் ஆனில் நபி யூனுஸ்(அலை ) என்று கூறப்பட்டு உள்ளது .அந்த காலத்து மீடியா என்ற  நாட்டின் தலைநகரான நினேவே என்ற நகருக்கு இறைத்  தூதராக அனுப்பப்பட்டார் .பல ஆண்டுகள் ஏகத்துவ பிரச்சாரம் செய்தார் கடுமையாக உழைத்தார் எண்ணி சொற்ப ஆட்களே இவரை நம்பி வந்தனர் .கடும் எதிர்ப்பு.சிரமங்கள்.இன்னல்கள்.இறுதியில் பொறுமை இழந்தார் பத்துவா செய்தார்.இறைவா இவர்கள் திருந்த மாட்டார்கள் எனவே இவர்களை அழித்துவிடு என்று இறைவனிடம் பத்துவா செய்தார்.இறைவனும் அவரையும் அவரை நம்பிவந்தவர்களையும் அந்த ஊரைவிட்டு வெளியேறும் படி கூறினான் புனித யொஹன்னாவும் தன் நண்பர்களுடன் அந்த மக்களுக்கு இறுதி எச்சரிக்கை விட்டு விட்டு வெளியேறினார்.ஆனால் அந்த மக்கள்  பின்னால் மனம் மாறி தவ்பா செய்தனர் .இறைவன் அவர்கள் தவ்பாவை ஏற்றுக்கொண்டான்.புனித யோஹன்னா ஒரு இறை தூதர் என்றாலும் இறைவன் அவரது பத்துவாவை நிராகரித்துவிட்டான்.அவர் பொறுமை இழந்தவராய் இறைவன் மீது கோபப்பட்டார்.ஏன்?தான் இறைத்தூதர் என்ற நிலையில் அந்த மக்களின் அழிவு பற்றி கூறிய தீர்க்கதரிசனம் நடக்காமல் போய்விட்டதே என்ற ஆதங்கம்தான்.பிறகு  இறைவன் அவரை மீண்டும் நிநேவாவுக்கு திரும்பும்படி ஏவியும் அவர் அதற்கு மாறு செய்தவராய் ஜோப்பா என்ற இடத்திற்குப் போக கப்பலேறினார்.நடுக்கடலில் கடல் கொந்தளித்தது.கப்பல் மேலே போக முடியாமல் தடுமாறியது. அதன் மாலுமி கூரிய அறிவுள்ளவர்.இந்த கப்பலில் நம்முடன் பிரயாணம் செய்கின்ற நம்மில் யாரோ ஒருவர் தன் எஜமானுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர். அவர் யாராக இருந்தாலும் இக்கணமே அவர் இந்த கப்பலை விட்டு வெளியேறட்டும் இல்லை என்றால் கப்பல் மேலே போக முடியாது என்றார்.
மனசாட்சியின் உந்துதலால் புனித யொஹன்னா தானே அந்த துரோகி என வலிய வந்து ஒப்புக்கொண்டார் .இருப்பினும் சீட்டு குலுக்கி போட்டார்கள் அதிலும் அவர் பெயரே வந்தது கொந்தளிக்கும் கடலில் எறியப்பட்டார்.ஒரு பெரிய மீன் அவரை விழுங்கியது மீனின் இருண்ட வயிற்றுக்குள் சிக்கிய அவர் தன் தவறை உணர்ந்து "இறைவா உன்னை தவிர வணக்கத்திற்குரியவர் யாரும் இல்லை .நீ பரிசுத்தமானவன்.நானோ அநியாயக் காரர்களில் ஒருவனாகி விட்டேனே என்று மூன்று இரவுகள் மூன்று பகல்கள் பச்சாதாபத்துடன் கதறினார்.கருணையுள்ள இறைவன் அவர் தவ்பாவை ஏற்றுக்கொண்டான்.பத்திரமாக அவரை கரையேற்றினான் கண்ணியப்படுத்தினான் மீண்டும் அவர் நிநேவாவுக்கே சென்றார் .இதிலிருந்து என்ன தெரிகிறது எந்த  நிகழ்வும் ஆண்டவன்  விருப்பத்திற்குத்தான் நடக்கிறதே தவிர வேறு யாருடைய விருப்பத்தின் பேரிலும் அது நடப்பதில்லை
புனித சாலமன் என்று ஒரு ராஜா இருந்தார் இவரது பெயர் திருக்குரானில் நபி சுலைமான் (அலை) என்று சொல்லப்படும்.பெரும் பெரும் அற்புதங்களுக்கெல்லாம் சொந்தக்காரர் இவர்.இந்த தூதரின் தகப்பனார் புனித தாவீது ராஜாவும் ஒரு இறைத்தூதரே இது மட்டுமல்ல இவர் இறைவனிடம் கேட்ட பிரார்த்தனை இறைவா எனக்கு சில அற்புத அறிவுகளையும் ஆற்றலையும் கொடு என்பது.அதன்படியே இறைவன் இவருக்கு பிசாசுகளை(பூதகணங்கள் ) வசபடுத்திக்கொடுத்தான்.அரபு மொழியில் ஜின் என்றும் ஆங்கிலத்தில் demons என்றும் அழைக்கப்படும் இவை நெருப்பினால் படைக்கப்பட்டவை.அபார ஆற்றலுடையவை மனிதர்களை போன்றே ஆசாபாசங்களுக்கு உட்பட்டவை.இவற்றிற்கும் பிறப்பு இறப்பு ,பசி பாலுணர்ச்சி ஆகியவை உண்டு ஆண் பெண் என இருபாலர் உண்டு.இவற்றில் நல்லவையும் உண்டு கெட்டவையும் உண்டு அறிவீனம் கொண்டவை சாத்தான் இந்த இனத்தை சேர்ந்தவனே.இவை  இறைவனால்  புனித சாலமனுக்கு வசப்படுத்திக்கொடுக்கப்பட்டு இருந்தன அதே போல் காற்றை இறைவன் வசப்படுத்தி கொடுத்தான்.பறவைகள் மிருகங்கள் இவற்றின் மொழியை கற்றுக்கொடுத்தான்.மாயாஜால வித்தை செய்ய எல்லாவசதிகளும் புனித சாலமன் அவர்களுக்கு இருந்தது.ஆனால் அதை வைத்து அவர் வித்தை காட்டி தனக்கு பின்னே கூட்ட ம் சேர்த்தாரா பாபா வேஷம் போட்டாரா?புரியாத கோட்பாடுகளை கூறினாரா.நீ என்னுள் இறைவனைப்பார் நான் உன்னில் இறைவனை பார்க்கிறேன் இந்தா பிடி விபூதி இந்தா பிடி நெக்லஸ் என்று ஆகாயத்திலிருந்து பொருள் வரவழைத்து ,மந்திரத்தில் மாங்காய் பழுக்கவைத்து கவர்ச்சி காட்டினாரா.இல்லை இல்லவே இல்லை பின் என்ன செய்தார் ?தனக்கு தரப்பட்ட அமானுஷ்ய சக்திகளைக்கொண்டு அவர் ஏகத்துவ பிராச்சாரமே செய்தார் அதாவது "வணக்குத்திற்கு உரியவன் கடவுளையன்றி வேறு  யாரும் இல்லை நான் சுலைமான் அவனது அடியானாகவும் தூதனாகவும் இருக்கிறேன்"என்பது  .சூரியனை வணங்கிக்கொண்டிருந்த ஷீபா(ஏமன் ) நாட்டு அரசியின் சிம்மாசனத்தை பிசாசுகளை ஏவிவிட்டு நொடிப்பொழுதில் தன் இடத்திற்கு கொண்டு வந்து அவளை பிரமிக்கவைத்தார்.அவருக்கு வழங்கப்பட்ட ஆற்றலையும் ராஜாங்கத்தையும் கண்டு பிரமித்துப்போன அவள் தன்  அகந்தையை விட்டொழித்து புனித சாலமன் போதித்த ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டாள் ஷீபா நாடே ஏகத்துவத்திர்க்குள் வந்தது.புனித சாலமன் இறுதியாக ஜெரூசலத்தில் இறை ஆலயம் ஒன்றை பிசாசுகளின் ஆற்றலை கொண்டு அவர்களை பணியாட்களாக ஏவி கட்டினார் கட்டிமுடிக்கும் தருவாயில் அவர் மரணம் அடைந்தார்.அவரது மரணத்திற்கு பின் பில்லி சூனியமும் வித்தைகளும் காட்டி பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த யூதர்கள் தங்கள் செயலை நியாயப்படுத்த புனித சாலமன் செய்ததைத்தான் நாங்கள் செய்கிறோம் எனவே இது பாபம் அல்ல என்று தங்கள் புராணங்க ளிலும் இதிகாசங்களிலும் புனித சாலமன் பற்றி பொய் கூறி மக்களை நம்பவைத்தனர்.ஆனால் இறைவன் திருக்குர் ஆனில் (2:102) இதை வன்மையாக மறுக்கிறான் 'சுலைமான் நிச்சயமாக நிராகரிப்பவராக இருக்கவில்லை அவர் சூனியம்  வைப்பவராகவோ அல்லது மந்திரம் ஓதி வித்தை காட்டுபவராகவோ இருக்கவில்லை மாறாக அவர்மீது அவதூறு கூறும் அந்த சாத்தான்கள்தான் இக்கொடிய பாவத்தை செய்பவர்களாக இருந்தனர்  என்று இறைவன் கூறுகிறான் (002:102
எகிப்திய மன்னர் புனித ஜோசப் இவரை திருக்குர் ஆன் நபி யூசுப் (அலை ) என்று கூறும்.இவர் புனித யாகூபின் மகன்.சிறுவயதில் தனது  சகோதரர்களால் மிகவும் சிரமத்திற்கு ஆளானார் இவர் இஸ்ரவேலராக இருந்தாலும் அதிருஷ்டம் அற்புத வடிவில் இவரை தேடி வந்தது.தகப்பனாரின் மிகுந்த பிரியத்திற்கு உரியவராக இவர் இருந்ததால் வேறு தாய்க்கு பிறந்த இவரது ஒன்றுவிட்ட சகோதரர்கள் இவரை தகப்பனிடமிருந்து பிரிப்பதற்காக தந்திரமாக இவரை காட்டிற்கு அழைத்துவந்து அங்குள்ள ஒரு பாழும் கிணற்றில் போட்டுவிட்டு வந்துவிட்டனர் அங்கு வந்த ஒரு வியாபாரக்கூட்டம் இவரை காப்பாற்றி எகிப்திய மன்னனிடம் விற்று விட்டனர் அங்கு இவர் வளர்ந்தார் இவரது அழகும் அறிவும் எல்லோரையும்கவர்ந்தது .அப்போதைய எகிப்திய மன்னர் அப்துல் அஜீஸ் இவரை மிகவும் நேசித்து அரண்மனையில் மிக அந்தஸ்த்தான பணியில் இவரை நியமித்தார்.அவரது மனைவியை இவரது அழகு வசீகரித்தது .ஏதோ வேலை இருப்பதாக கூறி இவரை தந்திரமாக தன் படுக்கை அறைக்கு வரவழைத்தாள்.அவர் வந்ததும் தன் படுக்கை அறையின் கதவுகளை தாழிட்டாள்.அவளது எழில் அவரையும் கவர்ந்தது.சூழ்நிலையும் சந்தர்ப்பமும் எவரையும் குற்றவாளியாகிவிடுமே.தனிமை எங்கும் சுகந்த மணம் ராணியின் மயக்கம் தரும் அழைப்பு.இத்தனையும் இருந்தும் புனித ஜோசப் அவர்கள் இறைவன் இருக்கிறான் என்ற இறை அச்சத்தின் அத்தாட்சியை அற்புதமாக அங்கு கண்டார்கள் ஆண்டவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.இந்த கேட்டிலிருந்து நாம் தப்ப வேண்டும் என்று ஒரு ஞானம் அவரது மனதில் மின்னலென பாய்ந்ததும் அவர் வாசலை நோக்கி ஓடினார் அந்த பெண் அவர் வெளியே சென்றால் நாலுபேருக்கு தெரிந்துவிடும் என்ற பயத்தில் அவரை போக விடாமல் தடுக்க சட்டையை பிடித்து இழுத்தாள் ஆனால் அவர் கதவை திறந்து வெளியே வர சட்டையின் பின்பகுதி கிழிந்தது காவலர்கள் அங்கு வரவும் அந்த பெண் சத்தம் போட்டு தன்னை கெடுப்பதற்காக அவர்தான் என் அறைக்கு வந்தார்.நான் அவரிடமிருந்து தப்புவதற்காக சட்டையை பிடித்து இழுத்தேன் சட்டை கிழிந்து விட்டது என்று அவர் மீது பழியை போட்டாள் அதிர்ச்சியில் புனித ஜோசப் வாயடைத்து நின்று பயத்தில் உறைந்து போனார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் இறைவன் ஞானத்தை அருளினான்.கனவுகளுக்கு பலன் கூறும் அற்புத அறிவையும் கொடுத்தான்.அரசனுக்கு விஷம் வைத்து கொல்ல முயன்ற குற்றத்திற்காக இரண்டு காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அதில் ஒருவன் தன் கனவில்  ஒரு பறவை தன் தலையில் இருந்ததென்றும் அது தன் தலையை பிராண்டி தின்றதென்றும் கனவு கண்டதாக கூறினான்.புனித ஜோசப் நீ மரணதண்டனையை அடைவாய் என்று கூறினார் அது மாதிரியே நடந்தது.இன்னொருவன் திராட்சையை பிழிந்து ரசம் எடுத்ததாக தான் ஒரு கனவு கண்டதாக கூறினான் அதற்க்கு புனித ஜோசப் அவர்கள் நீ விடுதலை ஆவாய் என்றனர் அது போன்றே நடந்தது இதே சமயம் ஏழு  கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்றதாகவும் ஏழு காய்ந்த தானிய கதிர்கள் பசுமையாக மாறியதாகவும் அரசர் அஜீஸ் கனவுகண்டார் புனித ஜோசபின் அறிவை விடுதலை ஆன காவலன் மூலம் அறிந்த அவர் தன தூதுவரை சிறைக்கு அனுப்பி புனித ஜோசப்பை அரண்மனைக்கு அழைத்தார்.ஆனால் தான் குற்றமற்றவன் என நிரூபிக்காதவரை அவர் வர மறுத்தார்.மன்னர் அஜீஸ் அவர்களுக்கும்  அவர் குற்றமற்றவர் தன்  மனைவிதான் பொய் சொல்லுகிறாள் என்ற உள்ளுணர்வு இருந்தது.எனவே மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது விசாரித்த நீதிபதி சம்பவத்தின் போது ஜோசப் அணிந்து இருந்த சட்டையை கொண்டு வரும்படி கூறினார்.மன்னர் ஏன் என்று கேட்டார்.அந்த சட்டை முன் புறம் கிழிந்திருந்தால் உங்கள் மனைவி சொல்வதுதான் உண்மை .ஆனால் அது பின் புறம் கிழிந்திருக்கிறது.அவர் தவறு செய்ய மறுத்து ஓடும்போது உங்கள் மனைவிதான் அவர் சட்டையை பிடித்து இழுத்து இருக்க வேண்டும் எனவே அவர் நிரபராதி என்று தீர்ப்பளித்தார் அஜீஸின் மனைவியும் தன தவறை ஒப்புக்கொண்டாள் .புனித ஜோசப் விடுதலை ஆனார் மன்னரின்  கனவுக்கும் அற்புதமாக விளக்கம் அளித்தார் அதாவது எகிப்தில் ஏழு வருடங்கள் வறட்சி ஏற்ப்படும் பிறகு ஏழு வருடங்கள் வளம் உண்டாகும் இதற்கு பரிகாரமாக அந்த ஏழு வருடம் மக்களின் தேவை போக மீதி தானியங்களை அதன் கதிர்களிலேயே விட்டுவைக்குமாறு கூறினார்.அவர் சொன்ன மாதிரியே நடந்தது அவரது பரிகாரமும் நிவர்த்தி அளித்தது மன்னர் அஜீஸ் அவரை தன வாரிசு ஆக்கினார் .இதிலிருந்து என்ன தெரிகிறது புனித ஜோசப் தன்  அற்புத அறிவை கொண்டு வித்தை காட்டி விளம்பரம் தேடினாரா?இல்லை ஏகத்துவ பிரச்சாரம்தான்  செய்தார் "வணக்கத்திற்கு உரியவன் இறைவனை அன்றி வேறு யாரும் இல்லை நான் ஜோசப் அவனது அடியானாகவும் தூதனாகவும் இருக்கிறேன் "என்ற ஏகத்துவ மந்திரத்தையே பரப்புபவராக இருந்தார்
புனித மோசே இவரை திருக்குர் ஆன் ஹஜ்ரத் நபி மூசா (அலை ) என்று கூறும் .இவர் எகிப்திய சக்கரவர்த்தி இரண்டாம் ராம்சிஸ் என்ற பாரோ மன்னனிடம் காட்டிய அற்புதங்கள் பிரமிக்கத்தக்கவை .கைத்தடியை பாம்பாக்கி பாரோவின் அரசவை சூனியக்காரர்களையே பிரமிக்கவைத்தார்.அவர்கள் நிச்சயமாக இவர் இப்போது நிகழ்த்தியது எங்களை போன்று கண்கட்டி வித்தையல்ல.இது ஏதோ ஒரு அற்புத சக்தியின் உதவியை கொண்டுதான் இவர் செய்கிறார்.புனித மோசஸும் இதில் என்னுடைய சக்தி ஒன்றும் இல்லை அந்த ஏக இறைவனின் அனுமதியை கொண்டே அல்லாது என்னால் இதை செய்யமுடியாது என்று கூறியபடிதான் ஒவ்வொரு அற்புதங்களையும் நிகழ்த்தினார்.இல்லை அற்புதங்கள் நிகழ்ந்தன.இந்த அற்புதங்கள் நிகழ வேண்டிய அவசியம் என்ன
உண்மையில் புனித மோசசுக்கு அற்புதங்கள் நிகழ்த்தும் அறிவு இருந்ததா அல்லது அவரது எண்ணமாவது அப்படி இருந்ததா என்றால் இல்லை
அவரது ஒரே நோக்கம் கொத்தடிமைத்தளையில் வீழ்ந்து கொடுங்கோன் மன்னன் எகிப்திய பாரோ விடம் அடிமைப்பட்டு கிடக்கும் தன் இஸ்ரவேல் மக்களை அவனிடம் இருந்து விடுவித்து விட வேண்டி தூர் சீனா மலை உச்சியில் தனிமையில் இறைவனிடம் பிரார்த்தித்தார் .இறைவனும் பதில் அளித்தான் அந்த காலத்து எகிப்தில் சூனியம் என்ற Blackmagic தான் பிரபலம்.பாரோ மன்னர் அரண்மனையிலேயே அரசவை சூனியக்காரர்கள் பலர் இருந்தனர்.இஸ்ரவேல் மக்களை சூனியத்தை காட்டியே அடக்கி வைத்திருந்தனர்.இறைவன் புனித மோசஸ் அவர்களுக்கு கட்டளை இட்டான் .நீயும் ஆரோனும் என்னுடைய தூதர்களாக பாரோவிடம் செல்லுங்கள் முதலில் நேரடியாக என்னுடைய தூதை சொல்லுங்கள் அதாவது "வணக்கத்திற்கு உரியவன் ஆண்டவனை தவிர வேறு யாரும்  இல்லை நாங்கள் மூசாவும் ,ஹாரூனும் அவனது அடியாராகவும் தூதராகவும் இருக்கின்றோம்.பாரோவாகிய நீ உன்னை படைத்து உனக்கு இத்தனை ஐஸ்வரியங்களையும் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்து.உன் அகந்தையை விட்டுவிட்டு எல்லாம் வல்ல  அந்த ஏக இறைவனையே நீ துதித்தால் நீ இன்னும் நன்மை அடைவாய்.அவனையன்றி ஒரு அணுவும் அசையாது அவனுக்கு நீ அஞ்சிக்கொள் என் மக்களை விடுதலை செய் நான் அவர்களை அழைத்து போகிறேன் என்று அவனிடம் கூறுங்கள் பயம் வேண்டாம் என் கண்காணிப்பில் நீங்கள் இருக்கிறீர்கள் போய் வாருங்கள்"என்று இறைவன் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் கட்டளை இட்டான் .
புனித மோசசும் புனித ஆரோனும் பாரோவிடம் சென்றனர்.இறைவனின் தூதை எடுத்துச் சொன்னார்கள்.அவன் எள்ளி நகைத்து தன்  சூனியக்காரர்களை அழைத்து வித்தை காட்டும்படி பணித்தான்.அவர்கள் கைத்தடிகளை தரையில் போட்டு பாம்புகளாக்கி நெளியவிட்டனர்.இறைவனிடமிருந்து அனுமதி வந்தது .புனித மோசசும் பாரோவிடம் இது நீ தந்த கைத்தடிதான் என் இறைவனின் அனுமதியுடன் இதை நான் தரையில் போடுகிறேன் என்று கூறி தடியை தரையில் போட்டார்.அது ஒரு பெரும் அனகோண்டாவாக மாறி சூநியக்கார்களின் பாம்புகளை எல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டது இதை பார்த்த பாரோ அதிர்ச்சி அடைந்தாலும் தன அகந்தையை விட்டு கொடுக்க வில்லை .ஆனால் அந்த சூனியக்காரர்கள் அதிர்ந்தனர்.நிச்சயம் இது மூசாவினால் செய்யப்பட கண்கட்டி வித்தை அல்ல.இது அவருக்கு பின்னால் உள்ள ஒரு மகத்தான சக்தியின் கைங்கர்யமே அன்றி வேறில்லை என்று எண்ணி அவர்கள் ஒட்டு மொத்தமாக வணக்கத்திற்கு உரியவன் அந்த மகத்தான இறைவன்தான் .அவனை நாங்கள் நம்புகிறோம் இந்த மோசஸ் இறை தூதர் என்று ஒப்புக்கொள்கிறோம் என்று அனைவரும் முஸ்லிம்கள் ஆயினர்.பாரோ அவர்களை கொன்றான்.அவனது அகங்காரம் தீர புனித மோசஸ் நைல் நதியை தன கைத்தடியின் மூலம் பாரோவின் கண் எதிரே இறைவனின் கட்டளைப்படி இரத்தமாக மாற்றினார்.நெருப்பு கற்கள் மழையாக பெயவித்தார்.பாரோ அவரை சாத்தான் என்று பழித்தான்.எனவே இஸ்ரவேலர்களில் தலைச்சன் பிள்ளைகளை கொல்லுமாறு அதுவும் மோசஸின் பிள்ளையில்  இருந்து தொடங்குமாறு ரகசியமாக பாரோ ஆணை இட்டான் இந்த நிலையில் வேறொரு அற்புதம் நிகழ்ந்தது எகிப்தியர்களின் தலைச்சன் பிள்ளைகள் ஒரே இரவில் ஒவ்வொருவராக மடிந்தனர்.இதைகண்ட பரோ பயந்து  தன் பிள்ளையை காப்பாற்ற வேண்டி இஸ்ரவேலர்களுக்கு விடுதலை அளித்து மோசசுடன் வேளியேற உத்தரவிட்டான் அவர்கள் வெளியேறும்போது செங்கடல் குறுக்கிட்டது கடலை எப்படி கடப்பது என்று அவர்கள் கடற்க்கரையிலேயே தாமதித்தனர்.அப்போது பாரோவின் மகன் இறந்தான் இதனால் ஆத்திரமடைத்த பாரோ இஸ்ரவேலர்கள் கடற்கரையில் கடலை தாண்ட முடியாமல் அங்குதான் இருக்கின்றனர் என்பதை அறிந்து அவர்களை கூண்டோடு பிடிக்க பெரும்படையுடன் வந்தான் .மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.ஒருபக்கம் கடல் மறு பக்கம் பாரோவின் படைகள் .புனித மோசஸ் அவர்கள் இறைவன் மீது அபார நம்பிக்கை கொண்டவர்கள் .அவர்கள் மக்களை நோக்கி அஞ்சாதீர்கள் நம்முடன் இறைவன் இருக்கிறான் அவன் நம்மை காப்பாற்றுவான் என்றவாறு இறைவனிடம் கையேந்தி இறைவா எங்க களின் இன்னலை நீக்க நீயே போதுமானவன் எங்களை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று என்று இறைஞ்சினார்கள்.உடனே இரைவனிடமிருந்துசெய்தி  வந்தது உங்கள் கைத்தடியால் மூன்று முறை கடலை  அடியுங்கள் என்று இறைவனின் திரு நாமதத்தை உச்சரித்தவாறே அவர்கள் அவ்வாறு செய்தனர்.கடல் அற்புதமாக பிளந்து வழிவிட்டது.மூசாவும் அவரது மக்களும் வேகமாக கடலை கடந்து அக்கறை சென்றனர்.பின்னால் அவர்களை விரட்டி வந்த பாரோவும் அவன்கூட்டத்தினரும் அதே கடலில் மூழ்கடிக்கப்பட்டனர் தன முடிவை தெரிந்து கொண்ட பாரோ கடைசி நேரத்தில் இறைவா வணக்கத்திற்கு உரியவன் நீயே மூசா உனது தூதர் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றான் ஆனால் இறைவன் மரணத்திற்கு பயந்தே அன்றி மனப்பூர்வமாக அவன் அதை கூறவில்லை என்பதை அறிவான் இருப்பினும் அவன் அதை கூறியதற்காக "உனக்கு மரணம் நிச்சயம் ஆயினும் உன்னுடம்பை நான் இறுதிவரை பாதுகாப்பேன் என்றான் இன்றும் கெய்ரோ மியூசியத்தில் எந்தவித ரசாயனப்பூச்சோ அல்லது mummification ஒ இல்லாமல் அற்புதமாக பாரோ இரண்டாம் ராம்சிஸின் உடல் பாதுகாப்பாக இருக்கிறது. இப்போது இந்த அற்புதங்களை எல்லாம் யார் நடத்தியது இறைவன்தான் நிச்சயமாக புனித மோசசுக்கு தானே அற்புதங்கள் செய்யும் சக்தியுமில்லை அது அவருக்கு அவசியமுமில்லை சூழ்நிலையின் நிர்பந்தம் உண்டாகியதால்தான் இந்த அற்புதங்கள் நிகழ்ந்தன மற்றபடி தேவை இல்லாமல் மக்களின் வீடுதேடிப்போய் கதவை தட்டி இதோ பாருங்கள் என் அற்புதங்களை என்று எந்த இறை தூதரும் இன்றைய பாபாக்கள் பாவாக்கள் ஷேகுமார்களை போல் மோடி வித்தை காட்டவில்லை ....
இனி நபி ஈஸா (அலை ) அவர்களை பற்றி பார்க்கலாம் இவர்களை கிறித்தவர்கள் ஜீசஸ் என்கிறார்கள் இதில் எனக்கு உடன்பாடு இல்லை காரணம் பைபிளில் வரக்கூடிய ஜீசஸ் பற்றி பல முரண் பட்ட தகவல்கள் இருக்கின்றன.ஒரு இறைத்தூதருக்கு இருக்க கூடாத பண்புகளை எல்லாம் அவருக்கு கற்ப்பித்து இருப்பதால்  அந்த வார்த்தையை நபி ஈஸா அவர்களுக்கு நாம் பயன்படுத்தவில்லை.திருக்குர் ஆனில் இவர் பற்றி பல இடங்களில் இறைவன் கூறுகிறான் பெரும்பாலான இடங்களில் இவர் பெயரை அவர் தாய் மரியமின் பெயரோடு சேர்த்து "மரியமின் மகன் ஈஸா "என்றே இறைவன் குறிப்பிடுகிறான்.காரணம் இவர் பிறப்பே அற்புதமானது எந்த வித ஆண் தொடுதலும் இல்லாமல் இவர் தாய் மரியம் (அலை )இவர்களை ஒரே நாளில் அற்புதமாக உண்டாகி பெற்றெடுத்தார்கள் என்பதை உறுதிப்படுத்தவே குர் ஆனின் பல இடங்களில் இவர் பெயரை இவர் தாயுடைய பெயருடன் இணைத்தே இறைவன் குறிப்பிடுகிறான்.இந்த அற்புதம்முழுக்க முழுக்க இறைவனால் நிகழ்த்தப்பட்டது.அது மட்டுமல்ல நபி ஈஸா அவர்கள் பிறந்த போதே தாயின் கையில் தவழ்ந்தவாறு பேசினார்கள் "இறைவனிடம் இருந்து எனக்கு தூது வந்துள்ளது நபி மூஸா அவர்களின் தூதை மெய்ப்பிப்பதற்க்காகவே என் இஸ்ரவேல் மக்களே என்னை இறைவன் உங்களுக்கு தூதராக அனுப்பியுள்ளான் நிச்சயமாக என் தாய் பரிசுத்தமானவள் அவளுக்கு நான் சேவை செய்ய கடமைப்பட்டுள்ளேன்" என்று பேசினார்கள்
இவர்களுக்கு இறைவன் பல அற்புதங்களை அதுவும் மருத்துவ ரீதியாக தடவிக்கொடுத்தே நோய்களை குணப்படுத்தும் அற்புத ஞானத்தை இறைவன் இவருக்கு கொடுத்தான் .காரணம் அந்த கால ஜெரூசலத்தில் தாங்கள்தான் இறைவனால் தேர்ந்தடுக்கப்பட்ட சிறந்த ஞானம் உடையவர்கள் என்று இறுமாந்து இருந்த யூதர்கள் நாசரத்தில் வாழ்ந்த இந்த இறைத்தூதரை மதிக்கவில்லை.இவரையும் இவர் தாயையும் அவதூறு கூறினார் .இறைவன் உச்சகட்டமாக இவருக்கு மரித்தோரை உயிர்ப்பிக்கும் சக்த்தியையும் இவருக்கு கொடுத்தான் ஆனால் இவற்றை கொண்டு அவர் தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை இறைவனின் கண்ணியத்தையும் அவனது மகத்துவத்தையும் ஒவ்வொரு அற்புதங்கள் நிகழ்த்தும் சமயங்களில் போதித்தார்.வணக்கத்திற்கு உரியவன் பிதாவே அன்றி வேறு எவரும் இல்லை நான் ஈஸா அவனது அடியானாகவும் தூதனாகவும் இருக்கிறேன் இஸ்ரவேல் மக்களே எனக்கு இறைவன் புதிதாக எந்த சட்டத்தையோ கோட்பாடுகளையோ தரவில்லை மூஸாவுக்கு கொடுத்த அந்த சட்டங்களையும் கோட்பாடுகளையுமே உறுதிப்படுத்த இறைவன் என்னை உங்களிடம் தூதனாக அனுப்பி இருக்கிறான் எனவே நீங்கள் அதில் உறுதி பட நில்லுங்கள் என்று இயம்பினார் இவர் ஜெரூசலத்தின் புனித சாலமன் அவர்களால் கட்டப்பட்ட கோவிலுக்குள் இறைவனால் அழைக்கப்பட்டு அங்கு வைத்து இவருக்கு இன்ஜில் என்ற மேற்கூறிய இறை செய்தியை இறக்கினான்.இதன் பிறகு இவரை கொல்வதற்கு முயன்றனர்.இறைவன் தன தூதரை அற்புதமாக உயிருடன் தன் பக்கம் உயர்த்தி காப்பாற்றினான்.இவ்வளவு அற்புதங்களை பெற்ற  ஹஜ்ரத் நபி ஈஸா (அலை)அவர்கள் அந்த அதை கொண்டு இறை அந்தஸ்து தேடவில்லை மக்களை மதி மயக்கவில்லை மேடை போட்டு விளம்பரம் தேடவில்லை.
இனி இறுதி தூதராக வந்த நபி முஹம்மது (ஸல்) அவர்களின் அற்புதங்கள் பற்றி பார்க்கலாம்.முதலில் இவர் பிறப்பதற்கு முன்பே இவரது பிறப்பு பற்றி இவரது பெயருடன் முன் வந்த பைபிளிலும் மற்ற வேதங்களிலும் குறிப்பிடப்பட்டது மிகப்பெரும் அற்புதம் ஆகும்.மூல ஹீப்ரூ பைபிளில் சாலமோனின் கவிதைகள்(Songs of Solomon 5:16) என்ற பகுதியில் புனித சாலமன் அவர்களால் இவர் Mehmadim(MHMDIM ) என்று பெயர்குறிப்பிடப்பட்டே சொல்லப்பட்டு இருக்கிறார்.im என்ற அந்த கடைசி வார்த்தை மாண்புமிகு என்ற அர்த்தத்தில் வரும்.ஆனால் இதை அவர்கள் Altogether Lovely என்று ஆங்கிலத்திலும் Muazzi என்று அரபி யிலும் மொழிபெயர்த்து உள்ளனர்.இவர் கல்வி அறிவு இல்லாதவர் கை எழுத்து கூட போடத்தெரியாது.சிறு வயதில் பள்ளிக்கு போகவில்லை.இந்த நிலையில் தனது நாற்பதாவது வயதில் இருந்து  தனக்கு இறைச்செய்தி வருவதாக கூறினார்.இறைவனது கட்டளையின் பெயரில் தன்னை இறைவனின் தூதர் (MESSANGER OF GOD)என்று அறிவித்தார் .மக்காவின் மேல்மட்டத்திலிருந்து அதுவும் குறிப்பாக அவரது சொந்த பெரியப்பா அபூ லஹப் என்பவரிடமிருந்தே  கடும் எதிர்ப்பு கிளம்பியது.அவர் மேல் பிரியமும் பாசமும் கொண்டு அவரை வளர்த்து ஆளாக்கிய அவரது இன்னொரு பெரியப்பா அபு தாலிப் செய்வதறியாது தவித்தார் அவரால் தன சகோதரர் மகனை வெறுக்கவும் முடியவில்லை அதே நேரம் அவரது தூதை ஏற்கவும் முடியவில்லை.எதிர்ப்பும் பரிகாசமும் கிளம்பியது ஒரு மேல் மட்ட கூட்டம் அவரிடம் வந்து முஹம்மதே உன்னை நபி என்று கூற என்ன அடையாளங்கள் (அற்புதங்கள்) காட்டுகிறாய் .நாங்கள் உன்னை நபி என்று நம்ப வேண்டும் என்றால் நீ அற்புதங்கள் காட்டவேண்டும் என்றனர்.நபி அவர்களுக்கு இறைவன் குர் ஆன் பல இடங்களில் குறிப்பாக Al Furqan என்ற அத்தியாயத்தில் இது மாதிரி அற்புதங்ககளை பார்த்து ஆன்மீகத்தை நம்புவேன் எனக்கூறும் போலி ஆன்மீக வாதிகளை பற்றி எச்சரிக்கிறான்.இன்னும் இது மாதிரி அற்புதங்கள் காட்டப்படும் போதும் அவர்கள் நபிமார்களை ஏற்றுக்கொள்ளாமல் பரிகசித்ததையும் அதனால் அவர்கள் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்ட வரலாற்றையும் இறைவன் கூறுகிறான்.ஆத்,தமூத் ,பாரோ,சோதோம் இப்பகுதி மக்களின் சரித்திரங்கள் அனைத்தும் அற்புதங்களை பார்த்தும் நபிமார்களின் சாபக்கேட்டிற்கு ஆளாகி அழிந்த மக்கள் பற்றியதாகும்.
இறைவன் குரானிலேயே திரும்பத்திரும்ப கூறுகிறான் நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள் நிச்சயமாக நானும் உங்களை போன்ற ஒரு மனிதனே.நிச்சயமாக எனக்கு இறை தூது வருகிறது அது நீங்கள் வணங்குவதற்கு உரியவன் ஒரு இறைவனே என்பதுதான் என்று கூறி விட்டு நீங்கள் தள்ளிநில்லுங்கள் .நிச்சயமாக நாம் நம் தூதை நீங்கள் சரியாக எந்தவித முரண்பாடோ அல்லது உங்கள் சொந்த கலவையோ இல்லாமல் அப்படியே அதை வெளிப்படுத்துகிறீர்களா என்பதைத்தான் கவனிக்கிரோமே தவிர எத்தனை பேர் அதை ஏற்றுக்கொண்டார்கள் என்ற கணக்கில் உங்களிடம் எந்த பொறுப்பும் சுமத்தமாட்டோம் என்கிறான்

பாகம் -2

ஆனால் அற்புதங்களை காட்டியே ஆன்மீகத்தை பரப்பிய புட்டபர்த்தி சாய் பாபா அவர்களை பற்றி பார்ப்போம்
இவரது கோட்பாடு என்னவென்று நமக்கு தெரியவில்லை ஆனால் இவர் 'நீ என்னிலே இறைவனை பார் நான் உன்னிலே இறைவனை பார்க்கிறேன்"என்பதாக கூறப்படுகிறது .ஒரு சமயம் இவரை பகவான் என்கின்றனர்.இன்னொரு சமயம் இல்லை இல்லை இவர் இறைத்தூதர் என்கின்றனர்.ஆனால் பகவானுக்கு செய்ய வேண்டிய அத்தனை பூஜை வணக்க வழிபாடுகளையும் இவரது போட்டோவிற்கு செய்கின்றனர் ஒரே குழப்ப மயம்
இவர் பற்றிய சில தகவல்கள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன உதாரணத்திற்கு 1993 இல் இவரது ஆளுகைக்கு உட்பட்ட இவரால் மட்டுமே உள்ளே நுழையக்கூடிய பிரஷாந்தி நிலையத்தில் நடந்த கொலை சம்பவம்
4 சாய் பக்தர்கள் அதில் ஒருவர் பெயர் சுரேஷ் குமார் சாய் பாபாவின் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர் .இவர்கள் சாய் பாபாவை கொலைசெய்ய முயற்சித்த போது பாதுகாப்பிற்காக போலீஸ் இவர்களை சுட்டு கொன்றதாக கேஸ் முடிக்கப்பட்டது இது இப்போது முக்கியம் இல்லை
பகவான் சாய் பாபா மனித ரூபத்தில் இருந்ததால் போலீஸ் பாதுகாப்பு பகவானுக்கு தேவையாக இருந்திருக்கிறது
மனிதனுக்கு ஒரு பிறவிதான் அதன் பிறகு அவனுக்கு மோட்சம் உண்டு ஆனால் செய்வினை மற்றும் தீய கருமங்களினால் அந்த வினை தீரு மட்டும் அவன் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க கூடும் என்றார் ஆனால் இவர் தான் ஷீரடி சாய் பாபாவின் மறு அவதாரம் என்றார் இன்னும் தான் 93 வயது  வரை வாழ்வேன் என்றார்.என் மரணத்திற்கு பிறகு கர்நாடகாவிலுள்ள உடுப்பி அருகில் நான் மீண்டும் பிறப்பேன் என்றார் ஆனால் இவற்றில் எதுவுமே நடைபெறவில்லை இவர் இறக்கும் பொது வயது 84.
சத்திய  சாய் பாபா 1921 இல் அவரது பெற்றோருக்கு அற்புதமாக பிறந்தார் எனப்பட்டது சிறுவயதில் இருந்தே வயதிற்கு  மீறிய அறிவு உடையவராக இருந்திருக்கிறார்.இதனால் இவர் இறைவன் ஆகிவிட முடியுமா எதிர் காலத்தை ஒருவர் கணித்திட்டாலும் கூட ஒருவர் இறைவன் ஆகிவிட முடியாது
இறைவனின் இலக்கணத்தை திருக்குர்ஆன் நன்னம்பிக்கை என்ற அத்தியாயத்தில் ஒரு ஐந்து வரிகளில் மிகவும் அற்ப்புதமாக வரையறுக்கிறது
திரு குரானின் 112 ஆவது அத்தியாயத்தில் இறைவன் தன்னை பற்றி கேட்பவர்களிடம் நபியே நீங்கள் "1.கூறுங்கள் அவன் இறைவன் அஹத் ஆக இருக்கிறான்
2.அவன் தேவைகளுக்கு அப்பாற்பட்டவன் யாரை கொண்டும்  எதைக்கொண்டும் அவனுக்கு எந்த தேவையும் கிடையாது ஆனால் எல்லோருக்கும் எல்லாவற்றிற்கும் அவனை கொண்டு தேவை இருக்கிறது
3.அவன் யாரையும் பெறவும் இல்லை
4.யாராலும் பெறப்படவும் இல்லை
5.அவனுக்கு நிகர் எதுவும் இல்லை "
அஹத் என்ற வார்த்தை அரபியில் வாஹித் என்ற சொல்லிலிருந்து வந்ததாகும்
வாஹித் என்றால் அரபியில் ஓன்று என்பதாகும்
இறைவனை அல்லாஹு வாஹித் என்றும் கூறலாம் அதற்கு இறைவன் ஒருவனே என்ற அர்த்தம் மட்டும்தான்
ஆனால் அல்லாஹு அஹத் என்று இறைவன் இங்கு கூறுவதற்கு காரணம்
அஹத் என்ற சொல்லாடலின் சிறப்புதான் காரணம்
அஹத் என்றால் அரபி சொல் இலக்கணப்படி ஒருவன் ,தனித்தவன் தனியாக எதையும் சாதிக்க கூடியவன் சக்தியுடையவன் வலிமையாக பிடிக்கக்கூடியவன் என்று அர்த்தங்கள் விரிவடையும்
மேலே கண்ட இறை இலக்கணம் சாய் பாபாவுக்கு பொருந்துமா என்றால் இல்லை
சரி அவர் ஒரு இறைத்தூதராக இருந்து அவர் கொண்டுவந்ததாக கூறப்படும் "என்னில் இறைவனை பார் நான் உன்னுள் இறைவனை  பார்க்கிறேன் "என்ற இந்த வாசகம் அவருடைய சொந்த வாசகமே தவிர மூன்றாவது நிலையிலிருந்து வந்தது இல்லை என்று அந்த வாசகங்களின் அமைப்பே கூறும்
பல்லாயிரக்கணக்கான இறைத்தூதர்களின் தூது இறைவன் ஒருவனே வணக்கத்திற்கு உரியவன் இறைவனை அன்றி வேறு யாரும் இல்லை என்றிருக்க  இவரது தூது மட்டும் வேறுமாதிரியாக இருப்பது ஏன் ?
இன்றைக்கும் சத்திய சாய் பத்தர்கள் தங்கள் வீட்டு பூஜை அறைகளில் ஆள் உயர சாய் படங்களை வைத்துக்கொண்டு பூஜை செய்கின்றனர்.காரணம் அவரில் இறைவனை பார்க்கின்றனர் படித்தவர்களும் கூட இதில்விதிவிலக்கு இல்லை 
ஆனால் சாய் பாபாவின் பூஜை அறையில் நம்மில்  எவரின்  படமும் இல்லையே ஏன் ?அவரது ஐதீகப்படியே 
நம்மில் அவர் இறைவனை பார்க்கமாட்டாரா ?
அவர் தினமும் ஒண்ணரை மணி நேரம் தனது பூஜை அறையில் கதவை உள்ளே தாழிட்டுக்கொண்டு பூஜை செய்வார் அந்த நேரம் யாராலும் அவரை சந்திக்க இயலாது 
இப்போது சத்திய சாய் இல்லை மரணித்து விட்டார் 
ஆதியும் அந்தமுமாகிய இறைவனுக்கு மரணமில்லை அவன் நிலையானவன்  நித்திய ஜீவன் (ஹய்யுல் கையூம்) என்பதில் இவர் சத்திய சாய் இறைவன் அல்ல என்ற உண்மை தெளிவாகி விட்டது 
அவரது தீர்க்கதரிசனமும் பொய்த்து விட்டது 
அவர் விபூதி வரவழைத்தது,பரிசு பொருட்கள் வரவழைத்தது அனைத்தும் அர்த்தமற்ற ஆன்மிகம் என்பதே சரி 
அவர் வரவழைத்து கொடுத்த அத்தனை  பொருட்களும் இப்பூலோகத்தில் தயாரிக்கப்பட்டதே தவிர தேவலோகத்து பொருட்கள் அல்ல 
எனவே அவர் காட்டிய எந்த ஒரு  வெற்று அற்புதமும்  ஆன்மீகம் ஆகாது 

பாகம் -3.(தொடரும் )

இந்த வெற்று  ஆன்மீக நம்பிக்கை முஸ்லிம்களிடமும் இருக்கிறது 
இஸ்லாம் இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை
அனைவரும் ஆண்டவனின் அடிமைகளே
இஸ்லாம் கூறும் இறை தூதர்கள் கூட முதலில் தங்களை ஆண்டவனின் அடியார்கள் என்றே அறிமுகப்படுத்திக்கொண்டார்கள் பிறகுதான் தங்களை தூதர்கள் என்று அறிமுகப்படுத்தினார்கள்
வழிபாடுகள் கொண்டாட்டங்கள் அனைத்தும் இறைவனுக்கே தவிர வேறு எவருக்கும் இல்லை என்பது இஸ்லாம் கூறும் நிலைப்பாடு
காணிக்கைகள் பலி இடுதல் அனைத்தும் இறைவணக்கங்கள் ஆகும் என்று இஸ்லாம் போதிக்கிறது
ஒவ்வொரு முஸ்லிமும் தொழுகையின் தொடக்க நிலையில் ஒரு உறுதிமொழி எடுக்கும் வழிமுறையை இஸ்லாம் போதிக்கிறது
அந்த உறுதிமொழி "இந்த அகிலங்களை படைத்தது அதை ஒழுங்கு படுத்தி   என்னையும் இணைவைப்போரில் இல்லாமல் காப்பாற்றிய அந்த இறைவனின் திரு முகத்தை நோக்கி என் முகத்தை திருப்பிக்கொண்டேன்
எனவே நிச்சயமாக என் தொழுகை என் அறுத்து பலியிடும் நேர்ச்சைகள் காணிக்கைகள் என் வாழ்க்கை என் மரணம் அனைத்தும் அகிலங்களையும் ரட்சிக்கும் இறைவனுக்கே
அவனுக்கு இணை இல்லை அவனுக்கே அதிகாரங்கள் அனைத்தும்
நான் அவனுக்கு கட்டுப்பட்டவர்களில் ஒருவனாக இருக்கிறேன் "என்று கூறுகிறது அந்த உறுதி மொழி
ஆனால் இன்று முஸ்லீம் என்று பெயருக்கு கூறிக்கொள்ளும் சிலர் தர்காக்களில் போய் தனி மனித வழிபாடுகளில் மூழ்கிக்கிடக்கிறார்கள்
சமாதிகளை பூப்போட்டு பூஜை செய்கிறார்கள் அங்கு அடைக்கப்பட்டிருக்கும் பெரியாரின் பெயரில் குர்பானி கொடுக்கிறார்கள் பணம் தங்கம் என்று எதையும் அங்கு காணிக்கை செலுத்துகிறார்கள் .இவர்களது தொழுகை உறுதி மொழிக்கும் இவர்களது தர்கா வழிபாடுகளுக்கும் ஏன் இந்த முரண்பாடு
காரணம் இவர்கள் தொழுவார்கள் ஆனால் அதனை புரிந்து தொழுவதில்லை -தொடரும்

வெள்ளி, 22 ஜனவரி, 2016

Seyed1951

ஏகத்துவம் -2:(தனி மனித வழிபாடு )

இஸ்லாம் எந்த வகையிலெல்லாம் ஏகத்துவத்தில் தெளிவாக இருக்கிறதென்பது பற்றி ஓரளவு பார்த்தோம்.தனி மனித வழிபாட்டை இஸ்லாம் அறவே தடை செய்கிறது.வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் பூஜைகளும் புனஸ்காரங்களும் அனைத்தும் ஆண்டவன் வகுத்த வழியில் அவனுக்கு மட்டுமே உரியது அது எந்தெந்த ரீதியிலும் அவனல்லாத எவருக்குமே உரித்தானது அல்ல எவருமே அதற்க்கு தகுதி  பெற மாட்டார்கள் என இஸ்லாம் உறுதியாக கூறுகிறது.
அடிமைத்தனத்தில் ஊறிக்கிடந்த அராபியர்களை அதை விட்டு  விடுவித்த இஸ்லாம் அதே அடிமை தனத்தை வேறொரு கோணத்தில் நிலைநாட்டியது ஆம் அதுதான் அனைவரும் ஆண்டவனின் அடிமைகள். இபாதத் என்றால் அரபுமொழியில் அடிமைத்தனம் என்று பொருள்.மனிதனுக்கு மனிதன் இபாதத் செய்வதை தடுத்த இஸ்லாம் ஆறறிவுள்ள பகுத்து சிந்திக்கும் ஆற்றலுள்ள மனிதனை ஆண்டவனுக்கு இபாதத் செய்யும்படி வலியுறுத்தியது அதுதான் இயல்பும் கூட.ஏனென்றால் பகுத்தறிவற்ற இயற்கையின் உயிருள்ள உயிரற்ற ஏன் நம் ஆன்மாவை தாங்கி நிற்கும் உடலின் ஒவ்வொரு அங்கமும் கூட ஆண்டவனைத்தான் இபாதத் செய்கின்றன.இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் நம் கண்களை எடுத்துகொள்வோம் அதற்க்கு அதன் எஜமான் பார்க்கத்தான் ஏவி இருக்கிறான் எனவே பார்வையை தவிர அது வேறு எந்த வேலையும் செய்யாது.இப்படி ஒவ்வொரு உறுப்பும் தன எஜமானாகிய இறைவனின் கட்டளை படியே துளியும் பிசகாமல் இயங்குகின்றன.
ஆனால் பகுத்தறிவுள்ள மனிதர்களில்தான்  பலர் தன மனோ இச்சைப்படி தவறான ரீதியில் தன அறிவை பகுத்து கொள்கிறார்கள் 
எனவே எல்லோரும் இறைவனுக்கு அடிமை என்ற கோட்பாடு முரட்டு அரேபியர்களிலும் நல்லவர்களை சிந்தித்தவர்களை ஈர்த்தது அதுவரை காபாவின் அடிமை(அப்துல் காபா)வாக இருந்த ஹழ்ரத் அபூபக்கர்(ரழி )அவர்கள்  ஆண்டவனின் அடிமை (அப்துல்லாஹ் ) என்று நபி அவர்களால்  பெயர் மாறினார்கள்.அது போல அப்துஷ்ஷம்ஸ்(சூரியனின் அடிமை )ஆக இருந்த ஹழ்ரத் அபூஹுரைரா(ரழி)அவர்களும்   அப்துல்லா ஆனார்கள் இப்படி பலர் தங்களது இழிந்த அடிமைத்தழைகளை உடைத்தெறிந்து இறைவனின் அடிமைகள் என்ற உயர்ந்த ஸ்தானத்தை அடைந்தார்கள்
இஸ்லாம் மனிதனின் அந்தஸ்து ஆண்டவனின் அடிமை என்பதில்தான் உயருகிறதே அல்லாது பணத்திலோ பதவிகளிலோஅல்லது இன்னொரு பணக்காரனை துதி பாடுவதிலோ  இல்லை என உறுதி படக்கூறுகிறது
அதனால்தான் உயர்ந்த குலத்திலும் அந்தஸ்திலும் பிறந்த முகமது நபி அவர்கள் தன் வாழ்வை எளிமையாகவே அமைத்துக்கொண்டார்கள்.தன்னை இறைவனின் தூதர் என்பதை விட இறைவனின் அடியான் என்பதையே பிராதானப்படுத்தினார்கள்.இன்றும் ஒரு முஸ்லிம் முஹம்மத் என்ற பெயரை சொல்லும்போது கூடவே அப்துஹு (அவர் ஆண்டவனின் அடிமை)வ ரசூலுஹு (மேலும் அவனது தூதர்)என்றுதான் கூறுவான் அப்படித்தான் இஸ்லாமும் பணிக்கிறது .
தனது மரணத்திற்கு பிறகு தன்னை இறைவனின் அந்தஸ்த்திற்கு உயத்திவிடுவார்களோ என்று கவலைப்பட்டார் அவர்.அதை அவர் மரண தருவாயில் வெளிப்படுத்தினார் .என் மரணத்திற்கு பின் என் உடலை பொது அடக்கஸ்தலத்தில் அடக்கவேண்டாம் என்றார்.தன் வீட்டிலேயே அடக்கும் படி கூறினார் தன் அடக்கஸ்தலத்தை தரிசிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் யாரும் மதீனாவிற்கு வர வேண்டாம் என்றார் வேறு காரியங்களுக்காக வந்தால் தன் அடக்கஸ்தலம் வந்து தனக்காக இறைவனை பிரார்த்திக்கும்படி கூறினார் நான் தேவை உடையவனாக இருக்கிறேன் இறைவன் தேவைகளுக்கு அப்பாற்பட்டவன்  எனவே கொண்டாட்டங்களும் வணக்க வழிபாடுகளும் இறைவனுக்கு மட்டுமே என் அடக்கஸ்தலத்தில் அதெல்லாம் கூடாது என்றார்.
தனி மனித வழிபாடுகள் இறைவனை மறக்கடிப்பவை யாராக இருந்தாலும் பெற்றோர்கள்  மகான்கள்,பாபாக்கள்   அல்லது இறைத்தூதர்களாகவே இருந்தாலும் அவர்கள் எல்லோரும் மரியாதைக்கு உரியவர்களேயன்றி வணக்கத்திற்குரியவர்கள் அல்லர் என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது.
ஆனால் இன்று பெரும்பாலோர் மரியாதையையும் வணக்கத்தையும்  ஒன்றாகவே  நினைத்து குழப்பிக்கொள்கிறார்கள் அதனால்தான் ஆன்மிகம் என்ற பெயரில் இன்று அனாச்சாரங்கள் தொடர்கின்றன.முஸ்லிம்களிடத்திலும் தர்கா என்ற பெயரில் இந்த குழப்பத்தினால்தான் அனாச்சாரம் தொடர்கிறது மரியாதைக்கும் வணக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை மனிதப்புனிதரான  முஹம்மது நபியவர்கள் துல்லியமாக தெளிவுபடுத்தினார்கள்.ஒரு சம்பவத்தின் போது தன் வருகைக்காக எழுந்து மரியாதை செலுத்தப்போன தன் தோழர் ஒருவரை அவர் எழுவதற்கு முன்பே தோளில் கைவைத்து உட்காரவைத்துவிட்டு சொன்னார்கள் எனக்காகவும் சரி யாருடைய வருகைக்காகவும் சரி எழுந்து நின்று மரியாதை செய்யவேண்டாம் உட்கார்ந்த நிலையிலேயே என்னுடைய  சலாமுக்கு பதில் கூறி மரியாதை செலுத்துங்கள் ஏனென்றால் எழுந்து நின்று மரியாதை செலுத்துவது என்பது  ஒரு அடிமை தன்  எஜமானுக்கு செய்யும் வணக்கமாகும் அதை ஆண்டவனுக்கு மட்டுமே செலுத்தவேண்டும் என்றார்கள்.
உண்மையில் வணக்கம் என்பது ஒரு விசேஷ மரியாதை ஆகும் அது ஒருதலை பட்சமாக்கும் நாம் யாருக்கு வணக்கம் செலுத்துகிறோமோ அவர் திருப்பி நம்மை வணங்க மாட்டார் என்பது மரபு இது ஒரு அடிமை எஜமானுக்கு
செலுத்துவது இதில் எழுந்து நிற்பது குனிந்து நிற்பது தரையில் குனிந்து தலைவைத்து சாஷ்ட்டாங்கம் செய்வது இரு கையேந்தி பிரார்த்திப்பது இன்னும் சில சைகைகள் உதாரணமாக கைகூப்புவது இப்படி மனதில் வணக்கம் என்ற எண்ணத்துடன் மதவேறுபாடு இல்லாமல் செய்யப்படக்கூடிய அத்தனை அசைவுகளும் வணக்கமாகும் என்றால் அதற்க்கு தகுதி உடையவன் நம்மை படைத்த இறைவனே அன்றி வேறு யாரும் இல்லை என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு.
ஆனால் மரியாதை என்பது கொடுத்து வாங்குவது.அது இருதலை பட்சமாக்கும் ஒருவருக்கு நாம் மரியாதை செலுத்தினால்  அவர் நம்மை திருப்பி மதிப்பவராக இருக்க வேண்டும் நம்மை மதிக்காதவரை நாம் மதிக்க வேண்டியதில்லை அதனால்தான் இஸ்லாம் ஒருவர் நமக்கு சலாம் சொன்னால் அதற்க்கு பதில் கூறுவதை சட்டமாகவே ஆக்கி இருக்கிறது இந்த பிரபஞ்சமும் அதில் உள்ளவைகளும் பெருமைக்குரிய இறைவனின் படைப்புகளாகும் அவை அத்தனையும் மரியாதைக்குரியவையே.பன்றி அசுத்தமான பிராணி.முஸ்லிம்களை  அதனிடமிருந்து விலகி இருக்கும்படி இஸ்லாம் கூறுகிறது அதற்காக அதை அவமதிப்பதற்கோ ,இம்சை செய்வதற்கோ  எவருக்கும் இஸ்லாம் அதிகாரம் தரவில்லை.
பெற்றோர்களை பிள்ளைகள் மதிக்க வேண்டும்  அது போல் பிள்ளைகள் பெற்றோரை மதிக்கவேண்டும் ஆசிரியரை மாணவன் மதிக்கவேண்டு அதுபோல் மாணவனை ஆசிரியர்  மதிக்க வேண்டும் இப்படி ஒருவருக்கொருவர் மதிக்கவேண்டும் என்கிறது இஸ்லாம் ஆனால் அதே நேரத்தில் நம் பெற்றோரோ அல்லது நம் கருத்தை கவர்ந்த பெரியோர்களோ  மரணித்துவிட்டால் என்ன செய்வது எப்படி மரியாதை செலுத்துவது.அதற்கும் இஸ்லாம் அழகான வழிகாட்டுதலை சொல்லுகிறது அது அவர் சொல்லித்தந்த நடை முறைப்படுத்தி சென்ற நல்வழியை நாமும் பின்பற்றி பிறருக்கும் போதிப்பதாகும் இன்னும் அவருக்காக இறைவனை பிரார்த்திப்பதாகும்.

இன்று நம்மில் பலர் இறந்தவர்களுக்கு மரியாதை செய்கிறோம் என்ற பெயரில் அவர்களது அடக்கஸ்தலம் சென்று அவர்களது சமாதிகளை அலங்கரித்து சந்தனம் பூசி சாம்பிராணி போட்டு பூத்தொடுத்து பூஜை செய்கிறார்கள்.முஸ்லிம் அல்லாத சிலர் அவர்களின் உருவங்களை சிலையாக வடித்து பூஜை செய்கிறார்கள் இவை அனைத்துமே அவர்களை அவமானப்படுத்துமே அன்றி வேறில்லை.நாமே நம் எதிரில் நமக்கு இப்படி ஒரு மரியாதை தரப்பட்டால் வெட்கி தலை குனிவோமேயன்றி அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
ஷீரடி சாய் பாபாவை முஸ்லிம் ஹிந்து என்று பாராமல் அனைவரும் சென்று வழிபடுகின்றனர்.ஏன் என்று கேட்டால் ஒரு முஸ்லிம் அவர் ஒரு சூபி என்கிறார்.இந்த அரபு வார்த்தைக்கு பஞ்சு அல்லது கம்பளி என்றே அர்த்தம்.இந்த மகான்கள் ஒரு கம்பளியை தங்கள் மேனியில் போர்த்தி கொண்டிருப்பார்கள்.எனிவே அந்தப்பெயர் மற்றபடி ஆன்மிக ரீதியில் வேறு எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை பிறகு சூபிஸம் என்ற பெயரில் இவர்கள் ஒரு தெளிவற்ற ஆன்மிகத்தை போதித்தார்கள்.கிட்டத்தட்ட அது இந்து மதத்தில் காலடி சங்கராச்சாரியார் பெவ்த்தர்களுக்கு எதிராக இந்து மதத்தில் புகுத்திய அத்வைதத்தை ஒத்திருந்தது.காண்பதெல்லாம் கடவுள்.இதற்கு எல்லாம் மேலே பாஸ்ராவில் கிபி 9-ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சூபி மன்சூர் ஹல்லாஜி நானே கடவுளாக இருக்கிறேன் என்றார்.
ஷிர்டி சாய் பாபாவின் இயற்ப்பெயர் அப்துல் கரீம் இவரது போதனைகள், எல்லாமே அழிந்து போகும் அவற்றில்  ஆசை கொள்ளாதே உன் அனைத்தையும் அந்த சர்குருவிற்க்கே முர்ஷித் )அர்ப்பணம் செய் என்றார்.மேலும் எல்லோருக்கும் ஒரே கடவுள் என்றார் எப்போதும் அல்லாஹ் மாலிக் என்றார் இவர் வசித்த வீட்டை துவாரகமாயி என்ற பெயரில் மஸ்ஜித் ஆக கருதி இஸ்லாமிய தொழுகைகளை நடத்தினார்.இப்படித்தான் இவர் பற்றி எழுதி இருக்கிறார்கள்.ஆனால் இவரது உருவ அமைப்பு இவரை சிலை வைத்து பூஜை செய்வது விபூதி பட்டையுடன் காணப்படுவது "என்னில் இறைவனை பார் உன்னில் நான் இறைவனை பார்க்கிறேன் "என்ற கோட்பாடு இவை அனைத்தும் ஒரே குழப்பமாகவே இருக்கின்றன இருந்தாலும் இவருக்கு சிலைவைத்தும் உருவப்படங்கள் வைத்தும் கடவுளுக்கு செய்ய வேண்டிய அத்தனை பூஜை புனஸ்காரங்களும் ஷீரடியில் மட்டுமல்ல உலகம் முழுக்க சாய் பக்த்தர்கள் படித்தவர் படிக்காதவர் என அனைவரும் செய்கின்றனர்.அந்த பூஜை நிகழ்ச்சியில் சாய் பாபாவின் sab ka maalik eki hai(அனைவருக்கும் இறைவன் ஒருவன்தான்),Allah Malik!Allah Malik!!இறைவனே என் எஜமான்! இறைவனே என் எஜமான்!!)என்ற போதனைகள் எல்லாம் பூஜை தீபத்தில் சாம்பலாக்கப்படுகின்றன.அப்துல் கரீம் என்ற சாய் பாபாவின் பெயர் கூட இறைவனின் அடிமை என்றே பொருள் படும் இதை சாய் பாபா பக்தர்கள் சிந்திக்க வேண்டும்.அரை நிர்வாண பக்கிரி போன்ற அவரது உருவம் கூட இது அவர்தானா என்று ஐயுற வைக்கிறது துவாரகமாய் இல் இறைவனை ஐந்து  நேரம் தொழக்கூடிய அப்துல் கரீம் மாதிரி அது இல்லை.படைத்த இறைவனை விட்டு விட்டு அவனது அடிமையை வணங்குவது என்ன அறிவுடைமை? இறைவனை பார்க்க முடியவில்லை அதனால்தான் பாபாவில் அவனை காண்கிறோம் எனவே அவரை பூஜிக்கிறோம் என்பவர்களிடம் ஒரு கேள்வி அப்படியானால் பாபா துவாரக மாயயில் எதைப்பார்த்து வணங்கினார்.யாரை பார்த்து வணங்கினார்.?
 புட்டபர்த்தி சாய்பாபா! இவரின் இயற்பெயர் சத்திய நாராயண ராஜு பிறப்பு 1926ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி   தன்னை ஷிர்டி சாய் பாபாவின் மறுபிறவி  என்றார்.சாய் என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் ஏழை என்றாலும் பன்ஜார மொழியில் மகான் என்ற அர்த்தம் வரும் எது எப்படியோ   இவரது பிரஷாந்தி பவனும் யஜூர் மண்டபமும் பொன்னும் பொருளும் உருளக்கூடிய  சொர்க்க பூமியாகத்தான் இருக்கிறது.இவர்  காரிலும் விமானத்திலுமே பறந்த  ஒரு பரம ஏழை.இவர் காட்டிய வித்தைகள் ஒரு கண்கட்டி   வித்தைகள் போல் இருந்தாலும் படித்தவன் முதல் பாமரன் வரை இவரின்  கண்கட்டி வித்தைகளில் மயங்கி இவரில் இறைவனை   பார்க்கின்றனர்.தங்களின் வீடுகளில் இவருக்கென்று ஒரு பூஜை அறை  அதில் 15 அடி உயரத்தில் இவரது படத்தை வைத்து பூஜிக்கின்றனர்.
ஒரு சாய் பக்தர்,என் நண்பர் ஏன் என் உடன்பிறவா சகோதரர் என்றும் கூட சொல்லலாம்.அந்த அளவு என் மீது பிரியமும் அன்பும் பாராட்டியவர்.பலருக்கும் உதவி செய்யக்கூடிய நல்ல மனசு உள்ளவர்.அபுதாபியில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்.ஒரு சந்தர்ப்பத்தின் போ து அவரிடம் கேட்டேன் சாய்பாபா  யார், இறைவனா? என்று.இல்லை இல்லை  இறைவன் இல்லை என்றார். பின்னே ஏன் அவர் உருவத்தை தொழுகிறீர்கள் ?என்றேன்  கொஞ்சம் தயங்கி இறைவனின் தூதர் என்றார்.நான் மீண்டும் கேட்டேன்.அவர் கொண்டுவந்த இறை தூது என்ன?என்று மீண்டும் சிறிது தயங்கி  அது ...நீ என்னில் இறைவனை பார் நான் உன்னில் இறைவனை பார்க்கிறேன் என்பது. என்றார்.பிறகு அவருடன் இருந்த இன்னொரு சாய் பக்தர் ஷிர்டி சாய் பாபா எப்போதும் அல்லா மாலிக் என்றே கூறுவார் என்றார்.நான் உடனே இருங்கள் இருங்கள் புட்ட பர்த்தி சாய் பாபா அதை ஆமோதித்தாரா?என்றேன்.மவுனம் தான் பதில் .இதற்க்கு பிறகு அந்த விவாதம் தொடர நேரமும் சந்தர்ப்பமும் இடமளிக்கவில்லை .ஆனால் அவர் கொடுத்த இந்த தகவலை வைத்து  தன் சொந்த காரியங்களில் தான் முழு கவனத்தையும் செலுத்திய அவர் ஆன்மிகத்தில் எவ்வளவு கவனக்குறைவாக இருந்திருக்கிறார் என்பது விளங்குகிறது
முதலாவது சாய் பாவில் இறைவனைக்காண கோடி பக்தர்கள் அவரை அவர் உருவத்தை பூஜை செய்கிறார்கள் ஆனால் அதே சாய் பாபா இவர்களை ஒரு போதும்பூஜை பண்ண வில்லை மாறாக அவர் தனிமையில் பிரஷாந்தி மண்டபத்தில் கதவை தாழிட்டுக்கொண்டு தனிமையைத்தான் பூஜை பண்ணினார்.ஆக அவரே அவருக்கு வந்த "உன்னில் இறைவனை நான் காண்கிறேன் என்னில் இறைவனை நீ பார்"என்ற இறை தூதை சரியாக பின்பற்றவில்லை.அவர் கடவுளாகவோ தெய்வ அந்தஸ்தோ பெற்ற வராகத்தான் சாய் பக்தர்கள் அவரை பூஜிக்கிறார்கள் .இன்னமும் பூஜிக்கிறார்கள்.அவரை இறைவனின் அவதாரமாகவே கருதுவதாக கூறுகிறார்கள்.இதில் படித்தவர்களும் வல்லுனர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது ஏன் இவர்கள் தங்கள் சொந்த காரியங்களில் தங்கள் துறை சார்ந்த ஆய்வுகளில் பொருளாதார வரவு செலவுகளில் கொடுக்கல் வாங்கல்களில் குடும்ப காரியங்களில் எல்லாம் மிகவும் கவனமாகவும் கண்கொத்தி பாம்பாகவும் இருக்க கூடிய இந்த படித்தவர்கள் பணக்காரர்கள் ஏன் இந்த அர்த்தமற்ற  வெறும் கவர்ச்சியும்  வெறும் வித்தை ஜாலங்களும் கொண்ட அநாச்சாரத்தில் மயங்குகிறார்கள் என்றால் மற்ற சொந்த காரியங்களில் லாப நஷ்டம் இருக்கிறது எனவே அது வேறு ஆனால் இதில் விளம்பரம் இருக்கிறது எனவே இது வேறு.
அவர்கள் பெரும் பணக்காரர்கள் உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் இவர்கள்தான்  சாய் பக்தர்கள்.சாய் பாபாதான் எங்களின் ஆத்மா வழிகாட்டி பாபாவை நாங்கள் சரணடைந்தோம் பாபா ஸ்தூல உடலைவிட்டு நீங்கி ஆன்ம உலகுக்கு  ஏகினாலும் அவர் இறக்கவில்லை.இறப்பு அவருக்கு கிடையாது என்று இவர்கள் தங்களை தாங்களே வெறும் விளம்பரத்திற்காக கூறி ஏமாற்றி கொள்ளும் அதே நேரம் இவர்களது உத்தியோகம் குடும்பம் வியாபார கொடுக்கல் வாங்கல்கள் இன்னும் இத்யாதி  இத்யாதி சொந்த  காரியங்களில் இழப்போ நஷ்ட்டமோ ஏற்ப்படும் வகையில் எதோ ஒரு கட்டளையை பாபா நேரிலோ அல்லது கனவிலோ வந்து இட்டால் போதும் பதுங்கி கொள்வார்கள்.இரண்டு  சாய்பாபாகளும் இப்போது   இல்லை.இருந்த போது அவரகளை இறைவனாக கருதவில்லை அவர்களில் இறைவனை காண்பதாக கூறிய சாய் பக்தர்கள் இப்போது அவர்கள் இறந்த பிறகு  அவர்களையே  இறைவனாக(பகவானாகவே)கும்பிடுகின்றனர்.எனவே இது ஒரு முறண்பட்ட நிலை. குழப்பம்.
புட்டபர்த்தி சாய்பாபா பக்தர்கள்   மில்லியன் பில்லியன் கணக்கில் காணிக்கைகளை பணமாகவும் பொருளாகவும் கொண்டுபோய் பாபாவின் காலடியில் கொட்டினார்கள்.உலக  பொன்னாசை,பொருளாசை மண்ணாசை பெண்ணாசை இன்னும் இத்யாதி ஆசைகளை துறந்து விடுமாறு பக்தர்களுக்கு போதித்த பாபா பெருந்தன்மையுடன் காணிக்கைகளை பெற்றுக்கொண்டார் பதிலுக்கு விபூதி,கடிகாரம்,மோதிரம்,நெக்லஸ் இவற்றை அற்புதமாக வரவழைத்து பக்தர்களுக்கு பரிசளித்தார் ஆசைகளை துறந்த பக்தர்களும் பரவசத்துடன் அவற்றை பெற்று  கண்களில் ஒற்றிக்கொண்டனர் பாபா அற்புதமாக வரவழைத்த பரிசல்லவா அது ஆயிரம் பில்லியன்களுக்கும் மேலானது.பில்லியன்களில் இருந்து சில மில்லியன்களை செலவுபண்ணி சில நல்ல காரியங்களையும் பாபா செய்தார் ஆனால் பெரும்பகுதியை தனக்கென்று யஜூர் மண்டபத்தில் தக்க வைத்துக்கொண்டது அவர் இறந்த பிறகு அம்பலமாயிற்று
இதில் ஒவ்வொரு சாய்பாபா பூஜைகளும் மிகவும் பிரம்மாண்டமாக உருக்கமான பாடல்களுடன் தடா புடலாக இருக்கும் ஆனால் படைத்த இறைவனை பற்றி கிஞ்சிற்றும் எண்ணம் இருக்காது.பகவான் சாய் பாபா அவர் வாழ்ந்த நாளில் அப்படி என்ன இறைத்தன்மையை காட்டினார் கண் கட்டி வித்தைகள் போல சில அர்ப்புதன்களை காட்டிவிட்டால் பகவான் ஆகிவிட முடியுமா.அவர் வாழ்நாளில் ஒரு கொசு ஈயை கூட அவர் படைத்திருப்பாரா?உண்பது, உடுத்துவது, உறங்குவது,கழிப்பது என்று குறைந்த பட்ச தேவைகளாவது இல்லாதிருந்திருப்பாரா?சொல்லப்போனால் மற்றவர்களை விட இன்னும் அதிக பொருளா சையுள்ளவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.அவரது யஜூர் மண்டபமும் அதில் அவர் சேமித்த பொருளாதாரமுமே சான்று.இறைவனை பற்றி  இஸ்லாம் என்ன சொல்கிறதென்று பாருங்கள் "1.நபியே சொல்லுங்கள்,அவன் இறைவன் அஹத் ஆக இருக்கின்றான்(அஹத் என்ற இந்த வார்த்தைக்கு ஒருவன்,தனித்தவன்,தனியாக எதையும் செய்ய வல்லவன்,பிடிக்கக்கூடியவன்);2.இறைவன் தேவைகளுக்கு அப்பாற்பட்டவன் (அண்ட சராசரங்கள் எல்லாம் அவனுக்கே சொந்தம்.எனவே அவன் எதைக் கொண்டும் யாரைக்கொண்டும் எந்தத்தேவையும் அற்றவன்.ஆனால் எல்லோருக்கும் அவன் தேவை);3.அவன் யாரையும் பெறவில்லை;4.யாராலும் பெறப்படவும் இல்லை;5.எதுவுமே அவனுக்கு நிகரானது அல்ல (அத்தியாயம் -112-அல் இக்லாஸ் -நன்னம்பிக்கை -அல் குர் ஆன் ) உண்மையில் சாய் பாபா போன்ற தனி மனிதர்களை வழிபடுகிறவர்கள் சிந்தி க்கவேண்டும் நீங்கள் வழிபடு பாபா மேலே குர் ஆன் கூறும் இலக்கணத்திற்கு உட்பட்டவர்தானாஎன்று 
 (முற்றும்)
அடுத்த தலைப்பு அற்புதங்கள் ஆன்மீகமாகுமா?
இன்ஷா அல்லாஹ் மேற்கூறிய தலைப்பில் மீண்டும் தொடர்வோம்

வெள்ளி, 1 நவம்பர், 2013

ஏகத்துவம்

 உலகிலுள்ள மதங்கள் பல அவற்றில் முக்கியமானவை இஸ்லாமும் கிறித்தவமும்.இன்னும்பிராந்தியமதங்களான ---------------------------------------------- ---- ஹிந்து,பெளத்தம்,ஜைனம்,ஜோராஷ்ட்ரம்.இதில் இஸ்லாம் தவிர மற்ற மதங்களில் உள்ள கடவுள் கோட்பாடுகள் தெளிவற்றவை.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லை என்பதுமட்டுமல்ல கடவுள் என்றால் இந்த அகிலத்துக்கேல்லாம் பொதுவானவர் இந்த அண்ட சராசரங்களையும் படைத்து ஆட்கொண்டவர் என்பதில் எவருக்குமே கருத்து வேறுபாடு இல்லை ஆனால்இவர்களின்   வினோதமான கடவுள் கோட்பாடுகளை கீழே படியுங்கள்.
 கிறித்தவ மதத்தை எடுத்து கொண்டால் ஒருகாலத்தில் பாலஸ்தீனில் மனிதராக வாழ்ந்த ஜீசஸ்தான் கடவுள் என்கிறார்கள்.ஆனால் அவரோ தான் படைத்த இந்த அகிலத்தில் பாலஸ்தீனத்திற்கு அப்பால் எங்குமே போனதுமில்லை.கண்டதுமில்லை.எல்லாம் அறிந்தவர் கடவுள் ஆனால் ஜீசசோ சிரிய மொழி தவிர வேறுதுவும் அறிந்திருக்கவில்லை.
ஹிந்து மதத்திலுள்ள வேத புராணங்களில் எங்குமே அந்த பெயரில் ஒரு மதம் இருந்ததாக சான்றுகள் இல்லை.இருப்பினும் அதன் முக்கிய பிரிவுகள் மூன்று,மூன்று தனித்தனி கடவுளர்களை நாயகர்களாகக் கொண்டவை.பிரம்ம மதம்.பிரம்மாவை கடவுளாக கொண்டது.பிரம்மா நான்கு முகங்களை கொண்டவர்.படைப்பதற்கு மட்டுமே சக்தி பெற்றவர்.பிரம்மலோகம் இவரது இருப்பிடம்.
அடுத்து வைஷ்ணவம்.மகாவிஷ்ணு இதன் கடவுள்.நீல மேக நிறம் பாம்பு படுக்கை.வைகுண்டம் இருப்பிடம் லக்ஷ்மி இவரது துணை.காக்கும் சக்தி மட்டுமே இவருக்கு சொந்தம்.
அடுத்து சைவம்.புலித்தோல் ஆடை.சிவந்த மேனி.மூன்று கண்கள்.பரமசிவன் இதன் நாயகன்.பார்வதி துணைவி.கைலாசம் இருப்பிடம்.எதையும் அழித்து துடைத்து தூய்மைபடுத்துவது இவரது வேலை.
இதில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையில்   யார் கடவுள் உயர்ந்தவர் என்ற சர்ச்சை உலக பிரசித்தம்.
ஹிந்து வேதமாகிய ரிக் வேதமும் சில உபநிஷதுகளும் ஒரு இறைவன்தான் அவன் தான் விஷ்ணு என்றழைக்கப்படும்.ஆனால் அறிவுள்ளவர்கள் அவனை பல ரூபங்களில் தொழுவர்.என்கிறது.பல ரூபங்கள் என்றால் சிவன் சக்தி பிரம்மா சரஸ்வதி,இப்படி ஆண்களாகவும் பெண்களாகவும் அவர் விதம் விதமாக தொழப்படுவார் என்பது எப்படி அறிவுடைமை ஆகும் என்று தெரியவில்லை.
இப்படியே ஹிந்து வேதங்களில் ஒரு தெளிவற்ற தன்மையை பார்க்கும் போது அதில் மனித கையாடல்கள் இருப்பது தெளிவாகிறது.வேதங்கள் அதன் அசல் மொழியான வேத மொழியிலிருந்து பிராகிருத மொழிக்கும் பிறகு சம்ஸ்கிருத மொழிக்கும் மொழி மாற்றம் செய்யப்படும் போது இந்த கையாடல் நடந்திருக்க கூடும்.

 மேலும் கடவுள் வேறு கிடையாது அன்பே கடவுள் என்று போதித்த புத்தரையே கடவுளாக்கி வழிபடுகின்றனர்பெளத்தர்கள் .
ஜைன மதத்தினர் மகாவீரரையும்,ஜோராஷ்ட்ரியர்கள்(மஜூசிகள்)நெருப்பையும் கும்பிடுகின்றனர்.யூதர்கள் எஸ்ராவை தெய்வ  குமாரன் என்கின்றனர்.
ஆனால் இவை எல்லாவற்றிலிருந்தும் வேறு பட்டு இறைவனை இறைவனாகவே காட்டுகின்ற ஒரே மதம் இஸ்லாம்தான்.தனி மனிதனுக்கோ,அல்லது வேறு எந்த உயிருள்ள அல்லது உயிரற்ற பொருட்களுக்கோ வழிபாடு என்பது இஸ்லாத்தில் இல்லை.இறைவனை ஒப்பற்றவன்(ஒப்பிலியப்பன்)என்றும் ,ஏகன்(ஒன்றே குலம் ஒருவனே தேவன்) என்றும்,கற்பனைக்கு அப்பாற்ப்பட்டவன்,எல்லாவற்றையும் கற்பனா சக்தி உட்பட அனைத்தையும் கடந்து நிற்ப்பவன்(கடவுள்)என்றும்   போதிக்க கூடிய ஒரே மார்க்கம் இவ்வுலகில் இஸ்லாம்தான்.
இந்தியாவில் உள்ள இந்து மக்கள் பெரும்பாலும் முஸ்லிம்களை அரேபிய கடவுளான அல்லாஹ்வை கும்பிடுகிரார்களே.ஏன் இந்தியாவில் இத்தனை கடவுள்கள் இருக்க இவர்களுக்கு அரேபிய கடவுள்தான் வேண்டுமா என்றெல்லாம் தவறாக போதிக்க படுகிறார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல.அல்லாஹ் என்ற சொல் அரபு மொழியில் இருந்தாலும் அந்த சொல் தரும் பொருள் இறைவன் என்பது மட்டுமே அன்றி ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது பொருளையோ குறிப்பது அல்ல.இந்த சொல்லை மத வித்தியாசம் இல்லாமல் அரப் கிறிஸ்தவர்களும் ஜீசசுக்கு பயன்படுத்துகிறார்கள்.ஒரு ஹிந்து அரபு மொழியை தாய் மொழியாக கொண்டிருந்தால் அவர்கூட பரமசிவனையோ அல்லது மகாவிஷ்ணுவையோ அல்லாஹ் என்றுதான் அழைக்க முடியும் ஏனென்றால் அரபு மொழியில் கடவுள்  என்ற அர்த்தத்தில் வரும் ஒரே வார்த்தை அல்லாஹ்தான்.அதுதான் அந்த வார்த்தையின் தனிச்சிறப்பு.இன்னும் சிறப்புகள் உள்ளன.அவற்றை பார்ப்போம்.
 இந்த அல்லாஹ் என்ற வார்த்தையை பன்மை படுத்த முடியாது.மேலும் இதை பெண்பாலாகவும் மாற்ற முடியாது.அப்படிஎன்றால் இறைவன் ஆண் என்று அறியப்படவில்லை.ஒப்பற்ற அவன் ஆண் பெண் என்ற இனங்களை எல்லாம் கடந்தவன் என்றாலும் அழைப்புக்காக அவன் ஆண் பால் குறியீட்டிலேயே அழைக்கபடுகிறான்.அதுவே பொருத்தமும் ஆகும் என்பதால் ஏகத்துவத்திற்கு இந்த அல்லாஹ் என்ற சொல் கன கச்சிதமாக பொருந்துகிறது.அதனால்தான் இந்த அகில உலகிலும் உள்ள முஸ்லிம்கள் பெரும்பாலும் எந்த மொழியினராயினும் அவர்கள் இறைவனை அல்லாஹ் என்றே அழைக்கின்றனர்.மற்றபடி இஸ்லாம் தொழுகையில் தவிர மற்ற நேரங்களில் இறைவனை அல்லாஹ் என்றுதான் அழைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை
உங்கள் இறைவனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எந்த மொழியில் வேண்டுமானாலும் அழகிய அர்த்தங்கள் தரக்கூடிய இணைவைப்பு கலவாத பேரை கொண்டு கூப்பிடலாம் என்பதே இஸ்லாம்.
ஒரு ஹிந்து வினவலாம் அப்படியானால்,தமிழில் தூயவன் என்றும் அரபியில் சுப்ஹான் என்றும் அர்த்தம் தருவதுதான் சிவன் என்பது.
தமிழில் பாதுகாப்பவன் ரட்ஷிப்பவன் என்று அரபியில் ரப்பு என்றும் அர்த்தம் தரக்கொடியதுதான் விஷ்ணு என்பது
மேலும் தமிழில் படைப்பவன் என்றும் அரபியில் ஹாலிக் என்றும் பொருள் படுவதுதான் பிரம்மா என்பது/
எனவே அந்த பெயர்களை கொண்டு ஏன் இறைவனை அழைக்க கூடாது என்று கேட்டால் ஒரு முஸ்லிம் என்ன பதில் சொல்லவேண்டும்?
ஒரே பதில்தான் நல்ல அர்த்தங்களை அந்த வார்த்தைகள் தந்தாலும்,அந்த சம்ஸ்கிருத வார்த்தைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன,பிரம்மா என்ற படைப்பவன் நான்கு முகம் கொண்டவன்,பிரம்மலோகத்தில் இருப்பவன்,சரஸ்வதி இவரது மனைவி என்று தனி உருவகபடுத்த படுகிறான் இவ்வாறு விஷ்ணு,நீல நிறத்தவனாகவும் சிவன் சிவப்பு நிறத்தவனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள்
இப்படி இவர்கள் தனி தனி உருவகமுள்ள தெய்வங்களாக உருவகப்படுத்த படுவதால் ஒரு முஸ்லிமால் அந்த பெயர்களை இறைவனுக்கு பயன் படுத்த முடியவில்லை.

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...