சனி, 8 ஆகஸ்ட், 2020

தேனின் அற்புதங்கள்

நீரிழிவு நோயாளி தேன் சாப்பிடும் அளவு 



தேன் ஒரு அற்புதமான பொருள் மட்டுமல்ல தேனீயின் வாழ்க்கையும் அது தேனை உருவாக்கும் விதமும் கூட மிகவும் அற்புதமாக இருக்கிறது.
அது பற்றி விரிவாக பார்ப்பது இக் கட்டுரையின் நோக்கமல்ல.அதை ராயல் ஜெல்லி என்ற தலைப்பின் கீழ் பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த கட்டுரையில் தேனை பற்றிய பொது விவரங்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றி மட்டும் பார்க்கலாம் 
தேன் ஒரு கெட்டியான வழுவழுப்பான தன்மை கொண்ட பழுப்பு நிற திரவமாக 
Apis mellifera என்ற தேனீக்களால் தேன் கூடுகளில் சுரக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுகிறது.
தேனை சேகரிப்பதற்காக ஒரு வேலையாள் தேனீ தன் கூட்டிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர்  வரை பிரயாணிக்கிறது.
வழியில் மலர்களினால் அது கவரப்படும் போது மலரின் சூலகங்களில் இருந்து அது மதுவை உறிஞ்சுகிறது.அத்துடன் மலரின் மகரந்தங்களும் ஒட்டிக்கொள்கின்றன.இந்த மகரந்தங்கள் மலர் மது தேனாக மாறும்பொழுது அதற்கு புரதச்சத்தை அளிக்கின்றன. ஒரு தேனீ தன் வாழ்நாளில்  ஒரு தேக்கரண்டியில் (5மில்லி) பன்னிரண்டில் ஒரு பங்குத்தேனை கொண்டுவந்து தேனடையில் சேமிக்கிறது.
உண்ணப்படும் மலர் மது தேனீயின் வயிற்றின் ஒரு பகுதியில் உணவாக செரிமானம் அடைகிறது இன்னொரு பகுதியில் தேனாக மாறுகிறது 
தேனீ மலர் மதுவெடுத்து  கூட்டுக்கு திரும்ப தொடங்கும்பொழுதே அதன் வயிற்றில் மதுவை தேனாக மாற்றும் தொழில் நுட்பம் ஆரம்பமாகிறது.
அதாவது அதனுடன் ஏராளமான பொருட்கள் அதாவது நொதிகள்,வைட்டமின்கள்,தாது உப்புகள் ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் (ANTIOXIDANTS),போன்றவை சேர்க்கப்பட்டு ஏறக்குறைய 18% நீர்ச்சத்தில் 80% பொருட்கள் அற்புதமாக கரைக்கப்பட்டு ஒரு அதிசய அடர் கரைசலாக அது மாறுகிறது.
இந்த அடர் கரைசல் வேலையாள் தேனீயின் வாய் மூலமாக கூட்டு தேனீயின் வாய்க்கு மாற்றப்பட்டு தேனடையில் வைக்கப்படுகிறது. கூட்டுத் தேனீயானது தன் சிறகை தேனின் மீது விசிறி போல் விசிறி தேன் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி 18% ஆக இருக்கும் நீர்ச்சத்தை 36%அதிகரிக்கச்செய்கிறது .பிறகு அந்த தேனுக்கு மேல் மெழுகை பூசி மேலும் காற்று உட்புக முடியாமல் அடைத்து விடுகிறது.
தேனை நீரிழிவு நோயாளி கையாளும் முறை :-
(சுத்தீகரிக்கப்படாத கச்சா தேன்)
100 கிராம் தேன் :-
மொத்த சர்க்கரை பொருள் =80கி (80%)
பழ சர்க்கரை   (FRUCTOSE)  =40கி 
க்ளூகோஸ்    (GLUCOSE)     =35கி 
சுக்ரோஸ்   (SUCROSE)          =5கி 
க்ளுகோஸ் (சுக்ரோஸிலிருந்து)=3கி
மொத்த க்ளூகோஸ் (n)  35+3     =38  கி 
GI   (தேன்)                                         =55
எனவே தேனின் GL (100gm)       =[nxGI]/100
                                 =[38x55]/100    =20.9❌            100gm தேனின் GL                        =20.9
ஃ 40gm தேனின் GL  = [20.9/100]x40=9✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி சுத்தமான கச்சா தேனை ஒருநாளைக்கு 40கிராம் வரை சாப்பிடலாம்.
அதாவது ஒரு மேஜை கரண்டி (10மில்லி)வீதம் ஒரு நாளைக்கு நான்கு முறை சாப்பிடலாம் 

தேன் மூன்று வகைகளாக கடைகளில் கிடைக்கிறது.
கச்சா தேன் வடிகட்டப்படாத 100% சுத்தமான தேன்.இதில் மலர் மகரந்தம் மேலும் தேன் பாகு அழுக்குகள் போல் மிதக்கும்.இதில் இயற்கை பழச்சர்க்கரையும் க்ளுகோஸும் (NATURAL FRUCTOSE & GLUCOSE)சேர்ந்து மொத்தம் 80% இருக்கும்.கரும்பு சர்க்கரை(SUCROSE) 5% இருக்கும்.இவைகளுடன் வைட்டமின்கள்,தாது உப்புகள்,அமினோஅமிலங்கள் நொதிகள் என்று ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கும்.நீர்ச்சத்து 35% இருக்கும்.தேனை திறந்து வைத்தால் அது காற்றிலிருந்து நீரை உறிந்து நீர்த்து போகும்.இந்த வகை தேனின் GI மதிப்பு 35-55 வரை இருக்கும்..எனவே ஒரு நீரிழிவு நோயாளி இதை அளவுடன் (40கிராம்) தினசரி சாப்பிடலாம்.
வடிகட்டப்பட்ட கலப்படத்தேன் 
இந்த வகை தேனில் பழச்சர்க்கரை அதிகம் கலக்கப்பட்ட (HIGH FRUCTOSE CORN SYRUP)கார்ன் சிரப் மற்றும் க்ளூகோஸ் அல்லது இரண்டில் ஏதோ ஒன்று சேர்த்திருப்பார்கள்.இது தெளிவான வெளிறிய நிறத்தில் இருக்கும்.அதிக இனிப்பு  இருக்கும்.இதிலிருந்து தேன் பாகை(MOLASSES) வடிகட்டி நீக்கி இருப்பார்கள்.அதோடு ஏராளமான சத்துக்களும் நீங்கி இருக்கும்.இது நீரிழிவு நோயாளிக்கு நல்லதல்ல.
பாஸ்டியுரைஸ் பண்ணப்பட்ட தேன் 
இதை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.இருப்பினும் ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைக்கு கொடுக்கக்கூடாது.
இது கச்சா தேனாக இருந்தால் இதில் சத்துக்கள் குறைவாக இருக்கும் 
மற்ற தேனாக இருந்தால் அதில் சத்துக்களே இருக்காது.
பொதுவாக தேனில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் (A,D,E & K) என்று எதுவும் கிடையாது.
தேனை கடைகளில் வாங்கும் போது அதன் தோற்றத்தை கவனிக்கவும்.
அதன் லேபிளில் உள்ள சத்துக்கள் அட்டவணையை கவனிக்கவும்.மொத்த சர்க்கரை அளவு 70-80%வரை இருக்கிறதா என்று கவனிக்கவும்.80%மேலிருந்தால் அதில் வெளிசர்க்கரைகளை (ADDED SUGARS) சேர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.
புரதங்கள் வைட்டமின்கள் தாது உப்புகள் நொதிகள் இவை எதுவுமே அட்டவணையில் குறிக்கப்படவில்லை என்றால் அந்த தேன்  சுத்தமான தேன் அல்ல என்று அர்த்தம்.
பொதுவாக தேனை சூடான பானங்களில் கலக்கும் போது 130டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் சூடு போகக்கூடாது.72டிகிரி செல்ஸியஸ்க்கு மேல்  (130 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் ) சூடாக்கும்போது பொதுவாக பெரும்பாலான நுண்கிருமிகள் அதில் இறந்துவிடலாம்.ஆனால் முக்கியமான நொதிகளும் சிதைந்து விடலாம்.தேனின்.அதிக அமிலத்தன்மை உள்ள எந்த பொருளையும் பாஸ்டியுரைஸ் செய்யும் பொழுது 130 டிகிரிக்கு பாரன்ஹீட்டுக்கு கீழ் சூடாக்கினால் போதும்.தேன் அதிக அமிலத்தன்மை உடையது.எனவே அதை உயர் வெப்பங்களில் அதிக நேரம் சூடாக்கத்தேவையில்லை. மேலும் தேனை நேரடியாக நெருப்பில் வைத்து சூடாக்காமல் நீரிலோ அல்லது நீராவியிலோ வைத்து சூடாக்க வேண்டும்.
பாஸ்டியுரைஸ் செய்யப்பட்ட தேன் நல்லதுதான் ஆனால் கச்சா தேனாக இருக்கவேண்டும்.
தேனை கொண்டு சில சிகிச்சைகள் 
1.உடற்கொழுப்பை கரைக்க :-
இளம் சூட்டில் வெந்நீர் (40degC) =1கப் 
சுத்தமான தேன்                         =2டீஸ்பூன்
கலந்து காலையில் வெறும் வயிற்றில் தினசரி அருந்தவும்  
2.இருமல் & தும்மல் 
இளசூடான தேநீர் டிகாக்க்ஷன் =1கப் 
சுத்தமான தேன்            =1டேபிள்ஸ்பூன் 
லெமன் ஜூஸ்              =2   ,,    ,,
இஞ்சி சாறு                     =2  ,,    ,,
கலந்து தினமும் இரவு படுக்கும் போது  அருந்தவும் 
தோல் அரிப்பு,வெடிப்பு காயம் மற்றும் பரு போன்றவற்றிற்கும் தேனை பயன்படுத்தலாம்.காரணம் தேனிலிருக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஒரு கிருமி நாசினி ஆகும்.
தேனை தோல் ஈரப்பத்திற்காகவும் (Skin moisturizer) பயன்படுத்தலாம்.
தேன் ஒரு சிறந்த நுண்ணுயிர் எதிர்ப்பான் (Antibacterial) ஆகும்.
இதை உணவுப்பாதுகாப்பானாகவும் (Preservative) ஆகவும் பயன்படுத்தலாம்.
தேனின்  குறைபாடுகள் 
1.எல்லா பொருட்களிலுமே நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும் இது இயற்கையின் விதி.எந்த ஒரு பொருளையும் கணக்காக பயன்படுத்தினால் அதில் நன்மைகள்  உண்டு. கணக்குக்கு மீறினால் அதில் தீமைகளும் உண்டு.தேனும் அதற்கு விதி விலக்கல்ல.
சுத்தமான கச்சா தேனை 1 வயதுக்கு  கீழ்ப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. காரணம் அதில் க்ளஸ்டரிடியம் போடூலினம் (C.Botulinum) என்ற கிருமி அசுத்தமாக இருக்கலாம் .இது 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்திவிடாது எனினும் 1 வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளை கீழ் கண்டவாறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம் :-
1.மலச்சிக்கல் (முதல் அறிகுறி)
2.அழ முடியாமல் பலவீனம் அடைதல் .பரிதவித்தல் 
3.சதை பலவீனம் (தவழ முடியாமை)
4.கட்டுப்படுத்தமுடியாமல் தலை ஆடுதல் 
5.எரிச்சல்,கோபம்,நிலை கொள்ளாமை 
6.அதிக எச்சில் அல்லது கோழை வடிதல்  (Drooling)
7.கண் மேல் இமை கீழ்நோக்கி கவிழ்தல் (Drooping Eye lids)
2.பதப்படுத்தப்பட்ட (Artificially Processed) தேனிலிருந்து அதன் பாகுத்தன்மையை (Molasses)வடிகட்டி நீக்கிவிடுவார்கள்.அதோடு அந்த தேனின் மற்ற நன்மைகளும்,வைட்டமின்கள் தாதுக்கள்,நொதிகள் புரதங்கள்,பைட்டோகெமிக்கல்கள் இவை எல்லாமே அதோடு நீங்கிவிடும்.மேலும் கார்ன் சிரப் போன்ற கூடுதல் சர்க்கரை வகைகளை சேர்ப்பார்கள்.அசல் தேனை விட இது தெளியாகவும் அழகாகவும் சுவையாகவும் இருந்தாலும் இதில் தேனின் பலன் கிடையாது.
சாதாரணமாக பதப்படுத்தாத தேனில் 21கிராமுக்கு 17கிராம் மொத்த சர்க்கரை இருக்கும்.அதாவது 80%.இதற்கு கூடுதலாக இருந்தால் அந்த தேன்  பதப்படுத்தப்பட்டதாகும்.
3.தேன் தோல் மற்றும் தலை மயிருக்கு ஈரப்பதம் தருவதில் மிகவும் சிறந்தது ஆனால் தேனை தலையில் தடவிக்கொண்டு வெய்யில் படும்படி நின்றால் தலை முடி நரைத்துவிடும்.காரணம் தேனிலிருக்கும் க்ளூகோஸ் ஆக்சிடேஸ் என்ற நொதி க்ளூகோஸை ஹைட்ரஜன் பெராக்சைடாக மாற்றுவதால் இந்த விளைவு ஏற்படும்.
எனவே தேனை பயன்படுத்த தெரிந்த முறையில் பயன்படுத்தினால் அதில் நன்மை நிச்சயம் உண்டு .
                                    👪 



சனி, 1 ஆகஸ்ட், 2020

சாப்பிடவேண்டிய இனிப்பின் அளவை கணக்கீடு செய்யும் முறை

GI - GL  அட்டவணையைக்கொண்டு சாப்பிடவேண்டிய இனிப்பின் அளவை கணக்கீடு செய்யும் முறை 

சில சமயங்களில்  GL -GI அட்டவணைகளில் GL -GI தரப்பட்டிருக்குமே தவிர அந்த இனிப்பின் அளவு இத்தனை கிராம் என்ற குறிப்பு  இருக்காது .அதை நாமே தரப்பட்டிருக்கும் GI -GL மதிப்பீடுகளை வைத்து சூத்திரமுறையில் கீழ்கண்ட மாதிரியில் கண்டிருப்பதைப்போல் கணக்கீடு செய்துகொள்ளலாம்.
பொதுவாக கீழ்கண்டவாறு நாம் அளவீடுகளை வரையறுப்போம் 
சர்க்கரை குறியீட்டு எண்      =GI 
சர்க்கரை ஏற்று திறன்            =GL 
செயல்படும் சர்க்கரை (n)      =?
              சூத்திரம்               n      =[GL /GI ]x 100
மாதிரி -மாம்பழம் (மீடியம் ):-
GI                                                          =56
GL                                                         =18.9
மீடியம் சைஸ் மாம்பழம் என்பதை எந்த அளவீட்டில் கணிப்பது?அதை கணித்தால்தான் GL -18.9 என்பதை பத்துக்கு கீழ் (<10) கொண்டுவர முடியும்.
அதற்கு கீழ்கண்ட முறையை பயன்படுத்தலாம் 
செயலில் உள்ள சர்க்கரை அளவு 
                                n    =[GL /GI ]x 100
                                n    =[18.9/56] x 100
                                n    = 33.75gm 
இனி கூகுள் தேடுதலில் கீழ்கண்டவாறு தேடவும் 
33.75gm செயலில் உள்ள சர்க்கரை 
(ACTIVE CARBS)இருக்கும் மொத்த மாம்பழத்தின் அளவு               =225gm  (கூகுள் தேடுதல்)                 
எனவே GL18.9  க்கு                   225gm 
ஃ GL9 க்கு  [225/18.9]x 9              107gm 
ஆகவே ஒருநீரிழிவு நோயாளி மாம்பழத்தை 100-107gm  வரை சாப்பிடலாம் (2நாட்களுக்கு ஒருமுறை) 

வெள்ளி, 24 ஜூலை, 2020

வெள்ளை சர்க்கரை யும் இனிப்பு பண்டங்களும்

வெள்ளை சர்க்கரையும் இனிப்பு பண்டங்களுக்கு GL கணக்கிடுதலும் 

வெள்ளை சர்க்கரை :-
GI                                                        = 63
GL (ஒரு டேபிள் கரண்டி-10gm) =06
மேலே உள்ள அளவீட்டின்படி வீட்டில் தேநீருக்கு உபயோகிக்கும் வெள்ளை சர்க்கரையை (Table Sugar) தினசரி ஒரு நீரிழிவு நோயாளி ஒரு மேஜை கரண்டி வரை பாதுகாப்பாகசாப்பிடலாம்.காரணம். இதன் GI மதிப்பீடு 63 (மத்திமம்)  தான். அதாவது இரத்தத்தில் 50gm சுத்தமான க்ளூகோஸ் எந்த அளவு சர்க்கரையை உயர்த்துமோ அதில் 63%தான் 50gm வெள்ளை சர்க்கரை உயர்த்தும்.அதேபோல் நாம் உபயோகிக்கும் 10gm (one table spoon)வெறும் 6%தான் உயர்த்தும்.எனவே தான் இதன் கிளைசீமிக் லோடு(GL) வெறும் 6ஆகும் அதாவது 10க்கு கீழ் இருப்பதால் பாதுகாப்பானது.வெள்ளை சர்க்கரை க்ளூகோஸை விட இனிப்பானது எனினும் அதற்கு அவ்வளவு இனிப்பு கொடுப்பது அதிலிருக்கும் பழச்சர்க்கரை (FRUCTOSE) ஆகும்.
இப்போது நாம் பார்க்கப்போவது கூகிள் தேடுதலில் கிடைக்காத ரசகுல்லா குலாப்ஜாமூன்,கோதுமை அல்வா போன்ற பண்டங்களின் சர்க்கரை ஏற்று திறனை (GL) எப்படி கணக்கிடுவது என்பது.இதற்கு அந்த பண்டங்களின் கலவை பொருட்களில் உள்ள 
மாவுப்பொருட்களுக்கு மட்டும் தனித்தனியாக GL -ஐ கணக்கிட்டு அதை கூட்டிவரும் விடைதான் அந்த பண்டத்தின் GL ஆகும். 
உதாரணங்கள் :-
ரசகுல்லா :(50gm)
ரசகுல்லாவின் மூலப் பொருட்களில்  முக்கிய சர்க்கரை பகுதிகள் இரண்டு.
1.பாற்கட்டி (பன்னீர் அல்லது கெட்டியாக்கப்பட்ட தயிர் )
2.வெள்ளை சர்க்கரை 
இவற்றின் GL காலை மட்டும் தனித்தனியாக கணக்கிட்டு அவற்றை கூட்டினால் கிடைக்கும் விடையே ரசகுல்லாவின் அந்த குறிப்பிட்ட எடையின் GL ஆகும்.
1.பாற்கட்டி (Chhena)                           ....50gm
மொத்த மாவுச்சத்து                        ....15gm
நார்ச்சத்து                                            =0
மீதி மாவுச்சத்து  (n)   15-0               =15gm 
GI                                                              ....27
GL=[nxGI]/100=[27x15]/100                    = 4.05
2.வெள்ளை சர்க்கரை                      ....10gm 
 மொத்த மாவுப்பொருள்                =10gm 
நார்ச்சத்து                                           =0gm 
மீதி மாவுப்பொருள்(n)  10-0          =10gm 
GI                                                            =63
GL =[nxGI]/100= [10x63]/100               =6.3
எனவே ரசகுல்லாவின் GL 
                           =4.05 + 6.3                 =10.35✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி எப்போதாவது விசேஷங்களில் 50gm வரை ரசகுல்லாவை சுவைக்கலாம்.
குலாப் ஜாமூன்  (50gm)
1.வெள்ளை சர்க்கரை =20gm
மொத்த கார்போஹைட்ரேட் =20gm 
நார்ச்சத்து                                       =0
மீதி கார்போஹட்ரேட் (n) 20-0=20gm 
GI   (வெள்ளை சர்க்கரை)            =63                                                 
GL =[nxGI]/100=[20x63]/100            =12.6
2.பால்பொடி 
மொத்த மாவுச்சத்து(பால்பொடி)=20gm 
நார்ச்சத்து                                             =0gm
மீதி மாவுச்சத்து (n)             20-0        =20gm 
GI (பால்பொடி)                                      =45
GL =[nxGI]/100=[20x45]/100                    =9
GL (sugarpart)+GI (milkpart)   12.6+9      =21.5
50கிராமுக்கு GL                                    =21.5
ஃ20கிராமுக்கு      [21.5/50]x 20            =8.6✔️
ஒரு நீரிழிவு நோயாளி குலாப் ஜாமூனை 20gm வரை விசேஷங்களில் சாப்பிடலாம் 
கோதுமை அல்வா (100gm )
மொத்த மாவுச்சத்து               =28gm 
சர்க்கரை                                     =20gm 
நார்ச்சத்து                                   =0
மீதி மாவுச்சத்து     28-20-0     =08gm 
1.வெள்ளை சர்க்கரை :-
GL  (20gm க்கு)                              =12.6
(ரசகுல்லாவில் கணக்கிடப்பட்டது.அதை அப்படியே இங்கு எடுத்துக்கொள்ளலாம்)
2.கோதுமை  (08gm)
மாவுச்சத்து  (n)                              =8gm 
GI                                                         =54
ஃGL (8கிராமுக்கு)=[nxGI]/100=[8x54]/100=4.32
எனவே மொத்த ஹல்வாவிற்கும் GL 
              =12.6+4.32                             =16.92
100கிராமுக்கு GL                           ≃17
ஃ50கிராமுக்கு                                ≃8.5✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி ஏதாவதொரு விசேஷ நாளில் 50கிராம் வரை கோதுமை அல்வாவை உண்ணலாம் 
இதில் கோதுமைக்கு பதில் மைதா (வெள்ளை மாவு)சேர்த்திருந்தால் ,
GI                                                      =71
GL =[nxGI]/100 =[8x71]100            =5.6
மொத்த GL  =12.6+5.6                  =18.6
100கிராமுக்கு  GL                        =18.6
ஃ  50கிராமுக்கு       18.6/2           =9.3✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி விசேஷ நாட்களில் மைதா அல்வாவை 50கிராம் வரை சாப்பிடலாம்.
மேல் கண்ட உதாரணங்களிலிருந்து நீங்கள் தயாரிக்கும் எந்த ஒரு இனிப்பு பண்டத்திற்கும் GL கணக்கிடுவதற்கு  அதன் மூலப்பொருட்களில் உள்ள மாவுப்பொருட்கள் மற்றும் சர்க்கரை அல்லது தேன் போன்ற எந்த ஒரு சர்க்கரை பொருளுக்கும் தனித்தனியாக GL கணக்கிட்டு பிறகு அவற்றை கூட்டிவரும் கூட்டுத்தொகையே அந்த பண்டத்தின் GL ஆகும்
இனிப்பு பண்டங்களின் GI பட்டியலுக்கு இங்கே க்ளிக் செய்யவும் 

                             




செவ்வாய், 21 ஜூலை, 2020

நீரிழிவு நோயாளி இனிப்பு பண்டங்களை கையாளும் முறைகள்-(3.பாலும் பால் பண்டங்களும்)

GL சூத்திரர்களின்படி பால் மற்றும் பால் பண்டங்களை கையாளும் முறைகள் 

எந்த ஒரு நீரிழிவு நோயாளியும் பால் பண்டங்களின் சர்க்கரை குறியீட்டு எண் (GI) மற்றும் சர்க்கரை ஏற்று திறன்
ஆகியவற்றின் அடிப்படைகளை தெரிந்துகொண்டால் பால் மற்றும் பால் இனிப்புகளான பால்கோவா பால் அல்வா ஐஸ்க்ரீம் என்று அஞ்சாமல் தினசரி சாப்பிடலாம் 
பால் பண்டங்களில் நார்ச்சத்து இல்லை என்றாலும் அவற்றையும் அளவுடன் GL சூத்திர முறையில் தினசரி பயமில்லாமல் சாப்பிடலாம் 
1.பால் (முழு ஆடையுடன் (250ml )
மொத்த மாவுச்சத்து                     =11.65
நார்ச்சத்து                                         =0
மீதி மாவுச்சத்து (n)   11.65-0        =11.65
GI                                                          =41
GL=[nxGI]/100=[11.45x41]/100          =4.8✔️

எனவே ஒரு நீரிழிவு நோயாளி முழுகொழுப்புள்ள பாலை 250-300மிலி வரை அருந்தலாம் 
ஐஸ் க்ரீம் (ரெகுலர் 50மிலி )
மொத்த மாவுச்சத்து                   =15gm 
நார்ச்சத்து                                       =0gm 
மீதி நார்ச்சத்து (n) 15-0                 =15gm 
GI                                                         =57
GL =[nxGI]/100  =[15x57]/100           =8.55✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 50மிலி வரை சாப்பிடலாம் 
ஆடை நீக்கப்பட்ட பால் (250மிலி )
மொத்த மாவுச்சத்து                   =12.25gm 
நார்ச்சத்து                                       =0
மீதி மாவுச்சத்து (n) 12.25-0        =12.25gm 
GI                                                        =32
GL =[nxGI]/100=[12.25x32]/100      =3.92✔️
எனவே ஆடை நீக்கப்பட்ட பாலை தினமும் 250மிலி-500மிலி வரை அருந்தலாம் 
ஐஸ்க்ரீம் பிரீமியம் (50மிலி):
மொத்த மாவுச்சத்து             =11gm 
நார்ச்சத்து                                 =0
மீதி மாவுச்சத்து (n) 11-0       =11gm 
GI                                                  =38
GL=[nxGI]/100=[11x38]/100       ≃4.2✔️
எனவே பிரீமியம் ஐஸ்க்ரீமை ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 100மிலி வரை சாப்பிடலாம்.
கொழுப்பு குறைந்த பழயோகர்ட்-200மிலி :-
மொத்த மாவுச்சத்து                =18gm 
நார்ச்சத்து                                    =0
மீதி மாவுச்சத்து (n)  18-0         =18
GI                                                     =33
GL=[nxGI]/100=[18x33]/100          =06✔️
  எனவே இந்த யோகர்டை 200-300மிலி வரை தினசரி எடுத்துக்கொள்ளலாம்        சில இனிப்பு பண்டங்களுக்கு (ரசகுல்லா) சர்க்கரை குறியீட்டு எண் (GI) கூகுள் தேடுதலில் கிடைக்கவில்லை. அது கிடைத்தால்தான் சர்க்கரை ஏற்றுத்திறனை (GL)கணக்கிடமுடியும். இந்த சந்தர்ப்பங்களில் மொத்த கார்போஹைட்ரேட்டுகளையும் அதனுடன் சேர்ந்து இருக்கும் புரதங்கள் மற்றும் கொழுப்புகளை வைத்தும் கணிக்கலாம் 
உதாரணமாக 50gm ரசகுல்லாவில் 57gm மொத்த கார்போஹைட்ரேட்டுகள் இருக்கின்றன. மேலும் அதனுடன் 5gm புரதமும் 10gm கொழுப்பும்  இருக்கிறது.   
புரதம் சர்க்கரையை குடல் உறிஞ்சுவதை கட்டுப்படுத்தாவிட்டாலும் இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது.கொழுப்பு சர்க்கரையை குடல் உறிஞ்சுவதையும் அவ்வளவாக கட்டுப்படுத்தாது மற்றும் இன்சுலின் சுரப்பையும் தூண்டாது.
எனவே இது மாதிரி இனிப்பு சாப்பிடுப்பார்கள் மொத்த கார்போஹைட்ரேட்டுகளை கணக்கில் எடுக்கவும்.
ரசகுல்லாவில் அதிக மொத்த கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதாலும் அதன் சர்க்கரை குறியீட்டு எண்  கிடைக்காததாலும் அதை நீரிழிவு நோயாளிகள் தவிர்த்துக்கொள்வது நன்மை              


ஞாயிறு, 19 ஜூலை, 2020

நீரிழிவு நோயாளி இனிப்பு பண்டங்களை கையாளும் முறைகள்-(2.உணவு தானியங்கள் )

                       நீரிழிவு நோயாளிகள் உணவு தானியங்களை கையாளும் முறைகள் 

பழங்களை தொடர்ந்து நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை குறியீட்டு எண் (GLYCEMIC INDEX-GI) மற்றும் சர்க்கரை ஏற்று திறன்(GLYCEMIC LOAD-GL) ஆகியவற்றை பயன்படுத்தி சர்க்கரை சத்து உயர்ந்துள்ள (HIGH GI) உணவு தானியங்களை (FOOD GRAINS)எப்படி எந்த அளவு சாப்பிடலாம் என்று இங்கே பார்க்கலாம்.
GI-ன் வரம்புகள் :-
GI -77க்கு மேல்                    -அதிகம் 
GI -   (77-55)                              -நடுத்தரம்       GI -55க்கு கீழ்                          -பாதுகாப்பு <55 nbsp="" span="">
GL -ன் வரம்புகள் 
GL -  20க்கு மேல் (>20)    -அதிகம் 
GL  - 20-10                             -நடுத்தரம் 
GL  -10க்கு கீழ் (<10 10="" nbsp="" span="">
உணவு தானியங்களை பொறுத்தவரை பெரும்பாலும் அவற்றை நாம் பழங்களை போல் அப்படியே உண்பதில்லை 
அவற்றை நாம் பலவாறு பயன்படுத்துகிறோம்.அதாவது பச்சையாக, முழுதாக, உடைத்து, மாவாக்கி,வேகவைத்து, குழம்பு வைத்து, வறுத்து, பொரித்து பட்டைதீட்டி புழுங்க வைத்து இப்படி பலவாறாக நாம் அவற்றை பயன்படுத்துகிறோம். அதே போல அவற்றின் வகைகள் உதாரணமாக கருத்தரிசி, வெள்ளரிசி,பழுப்பரிசி,சிவப்பரிசி என்று அரிசியிலேயே பல வகைகள் இருக்கின்றன.இவை ஒவ்வொன்றும் வேறு வேறு மாவுச்சத்து நார்ச்சத்து மற்றும் சர்க்கரை குறியீட்டு எண்களை கொண்டதாக இருக்கும் 
 அவை அனைத்தும் கூகுள் தேடுதலில் கிடைக்கும் 
உதாரணமாக பார்லியை எடுத்துக்கொண்டால் கீழ்கண்டவாறு அதன் வகைகள் கிடைக்கின்றன.
For cooked barley the GI              =35-low(<55 55="" i="">
For cracked barley the GI             =50-low(<55 55="" i="">
For barley flakes the GI                =60-med(55-77)
அதற்கு தகுந்த மாதிரி நாம் சர்க்கரை ஏற்று திறனை (GL) கணக்கீடு செய்யவேண்டும்.
கீழே நாம் மேலிட்டாற்போல் GL கணக்கீடுகளை எப்படி செய்யவேண்டும் என்று சில உதாரணங்களுடன் விளக்கி இருக்கிறோம்.
கருத்தரிசி (100gm):-
மொத்த மாவுச்சத்து                =34gm 
நார்ச்சத்து                                  =01gm 
மீதி மாவுச்சத்து(n)    34-01     =33gm
GI                                                  =50
GL= [n x GI]/100 =[33 x 50]/100 =16.5(>10)
100gm க்கு GL அளவு              =16.5
ஃ60gm க்கு [16.5/100]x60         =9.6✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி 60கிராம் வரை கருத்தரிசி சாப்பிடலாம்.
வெள்ளரிசி (100gm நீண்டது,சமைத்தது):-
மொத்த மாவுச்சத்து                     =28gm 
நார்ச்சத்து                                       =0.4gm 
மீதி மாவுச்சத்து (n)      28-0.4       =27.6gm
GI                                                      =89
GL =[n x GI]/100= [27.6x89]/100      =25
100gm க்கு GL அளவு                    =25gm 
ஃ 40gm க்கு [25/100]x40                 =10✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி 40கிராம் வரை வெள்ளரிசி சாதம் சாப்பிடலாம் 
பழுப்பரிசி (100gm):-
மொத்த மாவுச்சத்து                =23gm 
நார்ச்சத்து                                  =1.8gm 
மீதி மாவுச்சத்து (n) 23-1.8      =21.2gm 
GI                                                 =68
GL =[n x GI]/100=[21.2x68]/100  =14.42
100gm க்கு GL அளவு                =14.42
ஃ70gm க்கு [14.42/100]x70         ≃10
முழு கோதுமை மணிகள் (50gm)
மொத்த மாவுச்சத்து                =44gm 
நார்ச்சத்து                                  =7gm 
மீதி மாவுச்சத்து(n) 44-07         =37gm 
GI                                                  =30
GL=[n x GI]/100=[37 x 30]/100=11.01(>10)
50கிராமுக்கு GL அளவு       =11.01
ஃ45 கிராமுக்கு [11.01/50]x45 =10(=10)✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி 45கிராம் வரை முழு கோதுமை மணிகளை சாப்பிடலாம் 
காம்புடன் கூடிய இனிப்பு சோளம் (150gm):-
மொத்த மாவுச்சத்து                  =41gm 
நார்ச்சத்து                                    =4gm 
மீதி மாவுச்சத்து (n)  41-4           =37gm 
GI                                                    =60gm 
GL =[nxGI]/100=[37x60]/100     =22.2(>10)
150 கிராமுக்கு GL அளவு     =22.2
ஃ70கிராமுக்கு [22.2/150]x70  =10.3✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி இனிப்பூட்டப்பட்ட காம்பு சோளத்தை ஒரு நாளைக்கு 70கிராம் வரை பாதுகாப்பாக சாப்பிடலாம் 
பார்லி மணிகள் (100கிராம்):-
மொத்த மாவுச்சத்து                 =77.7gm 
நார்ச்சத்து                                    =15.6gm 
மீதி மாவுச்சத்து (n)  77.7-16.6   =62.1
GI                                                    =28
GL=[nxGI]/100 =[62.1x28]/100  =17=(>10)
100கிராமுக்கு GL அளவு      =17
ஃ55கிராமுக்கு [17/100]x55   =9.35(<10 10="" color="#00ff00" font="">✔️
எனவே ஒரு நீரிழிவு காரர் பார்லிமணிகளை 55கிராம் வரை ஒருநாளைக்கு பாதுகாப்பாக சாப்பிடலாம்
உமி நீக்கப்பட்ட முழு பார்லி (100gm):
மொத்த மாவுச்சத்து                   =73.5gm 
நார்ச்சத்து                                      =17.3gm 
மீதி மாவுப்பொருள்(n)=73.5-17.3= 56.2gm
GI                                                      =22
GL=[nxGI]/100=[56.2x22]/100           =12.4
100கிராமுக்கு GL அளவு              =12.5
ஃ78கிராமுக்கு [12.5/100]x78   =9.7(<10 color="#00ff00" font="">✔️
கேழ்வரகு (ராகி -100gm):-
மொத்த மாவுச்சத்து                 =30gm 
நார்ச்சத்து                                    =1.7gm 
மீதி மாவுச்சத்து(n) =30-1.7       =28.3gm 
GI                                                   =100
GL =[nxGI]/100=[28.3x100]/100     =28.3
100கிராமுக்கு GL மதிப்பு    =28.3(>10)
ஃ30கிராமுக்கு=[28.3/100]x30≃9(<10 color="#00ff00" font="">✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினசரி ராகியை 30கிராம் வரை சாப்பிடலாம்.
ஆனால் ராகியில் பல வகைகள் இருக்கின்றன அவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி GI இருப்பதால் அவற்றை கூகுள் தேடுதலில் நாமே தெரிந்துகொண்டு அதற்கான GL மதிப்பையும் சாப்பிடும் வரம்புகளை கணக்கிடலாம்.
பொதுவாக பழங்களை போல் அல்லாமல் உணவு தானியங்களை பெரும்பாலும் நாம் பச்சையாக அல்லது அப்படியே சாப்பிடுவதில்லை.மாறாக அவற்றை நாம் பல செயல்முறைகளுக்கு உள்ளாக்குகிறோம்.எனவே அவற்றிக்கு ஏற்றாற்போல் அளவீடுகளை கூகுள் தேடுதலில் சென்று குறித்துக்கொண்டு பிறகு அவற்றின் GL மதிப்புகளை நாமே கணக்கிட்டு அவற்றை தினசரி சாப்பிடும் வரம்புகளை கணக்கிடலாம்
1.GI ,GL பற்றிய தெளிவு பெற இங்கே க்ளிக் செய்யவும்  
2.சில பண்டங்களின் GI மற்றும் GL அட்டவணைக்கு இங்கு க்ளிக் செய்யவும் 






ஞாயிறு, 12 ஜூலை, 2020

நீரிழிவு நோயாளி இனிப்பு பண்டங்களை கையாளும் முறைகள்-(1.பழங்கள்)

 நீரிழிவு நோயாளிகள் இனிப்பு பழவகைகளை ருசிப்பது எப்படி ?

இனிப்புகள் என்றாலே நீரிழிவு நோயாளிகள் தயங்குவது இயல்பு. மாம்பழம், வாழைப்பழம்,சப்போட்டா பழம் மற்றும் இனிப்பு பண்டங்களான ஹல்வா, ஜிலேபி லட்டு போன்றவைகளை அவர்கள் ஆதங்கத்துடன் ஒதுக்கிவிடுவார்கள் 
இனி அவ்வாறு ஒதுக்க வேண்டியதில்லை.
நவீன நீரிழிவு மருத்துவம் எந்த இனிப்பு பொருளையும் ஒரு அளவுக்குள் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம் என்று கூறுகிறது. அந்த அளவுகளை கணக்கிடுவதற்கு சில அளவுகோல்களையும் அதன் அடிப்படையில் சில சூத்திரங்களையும் நவீன நீரிழிவு இயல் நமக்கு வகுத்து தந்திருப்பது ஒரு மிகப்பெரும் அனுகூலமாகும்.
அந்த பகுதி அல்லது அந்த அளவை யை எடை போடுவதற்கு நாம் ஒரு சூத்திரத்தை  தெரிந்துகொள்வோம். அந்த சூத்திரத்தை பயன்படுத்த கீழ்கண்ட சில அளவுருக்கள் (PARAMETERS) தேவை.
1.அந்த இனிப்பின் ஒரு குறிப்பிட்ட எடையுள்ள பகுதியில் மொத்த மாவு சத்தின் அளவு (Total Carbohydrates)(கூகுளில் தேடவும்) 
2.நார்ச்சத்த்தின் அளவு -FIBERS -கூகுளில் தேடவும் 
3.சர்க்கரை குறியீட்டு எண் (GI) -கூகுளில் தேடவும்  
கணக்கீடுகள் :-
கிடைக்கும் மாவு சத்து=மொத்த மாவு சத்து - நார்ச்சத்து  ;
சர்க்கரை குறியீட்டு எண் =GI 
சர்க்கரை ஏற்றும் திறன்(GL)  சூத்திரம்:-  
               GL       = (n x GI)/100
   [ n= கிடைக்கும் மாவுச்சத்து ] 
சர்க்கரை ஏற்றும் திறன் அளவுகோல் 
10 க்கு கீழ் - பாதுகாப்பு 
10-20           - நடுநிலை 
20க்கு மேல் -தீமை 
எனவே எந்த ஒரு இனிப்பாக இருந்தாலும் அதன் ஒரு குறிப்பிட்ட பகுதியின் சர்க்கரை ஏற்றும் திறனை(GL) கணக்கிட்டு அது பத்துக்குள் இருக்கும் பட்சத்தில் அந்த பகுதி வரை அந்த இனிப்பை உண்ணலாம்.
ஒருவேளை நீங்கள் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொண்ட பகுதி இனிப்பின் GL பத்துக்கு மேல் இருந்தால் அந்த பகுதி இனிப்பை மேலும் குறைத்து GL பத்துக்குள் அமையும்படியாக செய்து அந்த பகுதி அளவு வரை அந்த இனிப்பை நீங்கள் சாப்பிடலாம்.
இதை கீழே உள்ள 15 உதாரணங்கள் மூலம் விளங்கலாம்.
[நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு கட்டுப்பாடு அளவுக்குள் இனிப்பு சாப்பிடுவதால் அவர்களது இன்சுலின் சுரப்பு நிவர்த்தி அடையும் வாய்ப்புகள் உண்டு.]

1.மாம்பழம் (170 gm ):-

மொத்த மாவு பொருள்               -28gm 
நார்ச்சத்து                                        -6gm 
மீதி மாவுப்பொருள் =28-6          =22gm 
GI                                                        =56
GL (170gm)மாம்பழத்திற்கு :-
     GL =(n x GI)/100 =(22 x 56)/100=12.32
12.32 GL க்கு பரிமாறும் அளவு =170gm 
∴10 GL க்கு             [170/12.32] x 10=138gm✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி ஒரு நாளைக்கு 100-138gm க்குள் மாம்பழத்தை பாதுகாப்பாக சாப்பிடலாம்.

2.தர்ப்பூசணி (120gm):-

மொத்த மாவுப்பொருள்              =8gm 
நார்ச்சத்து                                         = 0.4gm 
மீதி மாவுப்பொருள் 8-0.4             =7.6gm 
GI                                                           =72
GL (120gm) [nxGI]/100=[7.6x72]/100=5.5✔️
எனவே 100-200gm வரை சாப்பிடலாம் 
3.வாழைப்பழம் (100gm)

மொத்த மாவுப்பொருள்             =23gm
 நார்ச்சத்து                                        =2.6gm 
கிடைக்கும் மாவுப்பொருள்-n] 
                                          (23 - 2.6) ]  ≈ 20 approx
Glycemic Index- GI                             =62
Glycemic Load-GL=(nxGI)/100 }
                            =(20 x 62)/100} = 12.40            

12.4 க்கு பரிமாறும் அளவு=100 gm 
GL 10 க்கு             ,,      =(100/12.6) x 10
                                                       ≈   80 gm
எனவே ஒரு நீரிழிவு நோயாளி ஒரு நாளைக்கு 80 gm வரை வாழைப்பழம் சாப்பிடலாம்.       

4.பேரிச்சை (100gm):-

100gm பேரீச்சையில் மொத்த மாவு சத்து                                                      =100gm 
நார்ச்சத்து                                           =0gm 
கிடைக்கும் மாவுச்சத்து 100-0     =100gm 
GI (சர்க்கரை குறியீட்டு எண்)    =42
GL (சர்க்கரை ஏற்று திறன்/100gm)
       (nxGI)/100   = (100x42)/100 =42
  GL 42க்கு பரிமாறும் அளவு =100gm 
ஃ GL 10க்கு      ,,         (100/42)x 10= 23gm 
எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 23gm வரை சாப்பிடலாம்   

5.திராட்சை (100gm):-

மொத்த   மாவுப்பொருள்                  =17gm 
நார்ச்சத்து                                              =01gm 
கிடைக்கும் மாவுப்பொருள்17-01  = 16gm 
GI                                                             =   59gm 
GL (100 கிராமுக்கு) (nxGI)/100]
              =  (16 x 59)/100                 ]     = 9.44✔️
  எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 100gm வரை சாப்பிடலாம் 
6.கிசுமிசு (100gm):-
மொத்த மாவுப்பொருள்         =79gm 
நார்ச்சத்து                                    =3.7gm 
கிடைக்கும் மாவுப்பொருள்] 
                                       n  =79-3.7]  =75.3gm 
GI                                                       =64
GL = (75.3x64)/100                          = 48.2❌    
GL 48.2க்கு பரிமாறும் அளவு =100gm 
ஃ GL 10க்கு    ,,        [100/48.2]x10=20gm✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி நார்ச்சத்து இல்லாததால் இரண்டு நாளைக்கு ஒரு முறை 20gm கிசுமிசு (உலர் திராட்சை) எடுத்துக்கொள்ளலாம்   
7.பலா (165gm)
மொத்த மாவுப்பொருள்                =38gm 
நார்ச்சத்து                                          =2.5gm 
கிடைக்கும் மாவுப்பொருள்(n)] 
                                            38-2.5      ]  =35.5gm 
GI                                                           =75
GL (165gm க்கு)=(nxGI)/100=(35.5x75)/100
                                                              =26.6
GL 26.6க்கு பரிமாறும் அளவு  =165gm 
ஃGL 10 க்கு    ,,    [165/26.6]/10      =62gm✔️ 
எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 60gm பலாப்பழம் சாப்பிடலாம்.
8.சப்போட்டா பழம் (100gm):-
மொத்த மாவுப்பொருள்               =20gm 
நார்ச்சத்து                                          =5gm 
கிடைக்கும் மாவுப்பொருள்20-5 =15gm(n) 
GI                                                            =57
GL (100gm)  (nx57)/100=(15x57)/100  =8.55

9.சீத்தாப்பழம் (100gm):-
மொத்த மாவுப்பொருள்               =26gm 
நார்ச்சத்து                                          =05gm 
மீதி மாவுப்பொருள்  26-5             =21gm 
GI                                                           =54
GL (100gm) =(nxGI)/100 =[21x54]/100 =11.3
ஃ GL (85gm)     =[11.3/100]x85           =9.6✔️
எனவே ஒரு நீரிழிவு நோயாளி தினமும் 85gm வரை சாப்பிடலாம்.
10.மாதுளை (100gm):-
மொத்த மாவுப்பொருள்               =19gm 
நார்ச்சத்து                                         =04gm 
கிடைக்கும் மாவுப்பொருள்19-04=15gm 
GI                                                             =53
GL (100gm)  =[nxGI]/100=[15x53]/100=7.95✔️
தினமும் 100gm வரை சாப்பிடலாம்.
11.கொய்யா (100gm)
மொத்த மாவுப்பொருள்                    =14gm 
நார்ச்சத்து                                               = 5gm 
மீதி மாவுப்பொருள் (n)   14-5            =09gm 
GI                                                                =65
GL (100gm) =[nxGI]/100  =[9x65]/100     =5.85✔️
தினமும் 100-150gm வரை சாப்பிடலாம் 
12.பப்பாளி (100gm):-
மொத்த மாவுப்பொருள்              =11gm 
நார்ச்சத்து                                        =02gm 
மீதி மாவுச்சத்து (n)          11-02   =09gm
GI                                                          =60
GL (100gm)  [nxGI]/100=[09x60]/100=5.4✔️
தினமும் 100-200gm வரை சாப்பிடலாம் 
13.ஆரஞ்சு (100gm):-
மொத்த மாவுச்சத்து                        =12gm 
நார்ச்சத்து                                            =2.5gm 
மீதி மாவுச்சத்து (n)        12-2.5        =09.5gm
GI                                                             =40
GL (100gm) =[nxGI]/100=[9.5x40]/100 =3.8✔️
தினமும் 100-150gm வரை சாப்பிடலாம் 
14.எலுமிச்சை (100gm):-
மொத்த மாவுச்சத்து                         =09gm 
நார்ச்சத்து                                             =2.5gm 
மீதி மாவுச்சத்து (n)       09-2.5         =6.5gm
GI                                                             =20
GL (100gm) =[nxGI]/100 =[6.5x20]/100=1.3✔️
தினமும் 800gm வரை சாப்பிடலாம் 
15.நாவற்பழம் (100gm):-
மொத்த மாவுச்சத்து                        =14gm 
நார்ச்சத்து                                            =01gm 
மீதி மாவுச்சத்து (n)      14-01           =13gm
GI                                                             = 25
GL (100gm) =[nxGI]/100 =[13x25]/100  =3.25✔️
தினமும் 100-300gm வரை சாப்பிடலாம் 
 தொகுப்பு (SUMMARY ):- மேலேயுள்ள கணக்கீடுகள் மூலம் நமக்கு சில உண்மைகள் விளங்கும்.நார்ச்சத்து என்பது ஒரு மாவுப்பொருளாக இருந்தாலும் அது சீக்கிரம் ஜீரணம் ஆகாது.மேலும் அது குடலில் உறிஞ்சப்படாதுஎனவே தான் இதை நாம் GL கணக்கீட்டின் போது மொத்த மாவுச்சத்திலிருந்து கழித்து விடுகிறோம்.மேலும் ஒரு இனிப்பில் எவ்வளவுக்கு எவ்வளவு நார்ச்சத்து இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது நன்மை பயக்கும்.காரணம் இந்த நார்ச்சத்து குடலின் மூலம் சர்க்கரை உடனுக்குடன் உறியப்படுவதை தடுத்து இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனுக்குடன் திடீரென்று உயராமல் பாதுகாக்கிறது.
அதேபோல் எந்த இனிப்பு பண்டத்தையும் அதன் சர்க்கரை ஏற்றும் திறன் (GL)பத்துக்குள் இருப்பது போன்ற ஒரு அளவீட்டுடன் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை திடீரென்று உயர்வது கட்டுப்படுத்தப்படும்.
இன்னும் ஒருபொருளின் சர்க்கரை குறியீட்டு எண் (GI)அதிகம் இருந்தாலும் அதன் ஒரு பகுதியை சர்க்கரை ஏற்றும் திறன் பத்துக்குள் இருப்பது மாதிரி குறைத்து சாப்பிடலாம். [உ-ம்]  மாம்பழம்,தர்பூசணி,பேரீச்சை,சப்போட்டா போன்றவை 
               
     
          

வெள்ளி, 12 ஜூன், 2020

கோவிட் 19ம் இதய இரத்த கோளாறுகளும்

கோவிட் 19 தொற்றினால் இதயம் மற்றும் இரத்த அழுத்த பாதிப்புகள்

படம்-1

கோவிட் 19 நோய் தொற்று சுவாச பகுதியை மட்டுமல்லாமல் நம் உடலின் மற்ற பகுதிகளையும் தாக்க வல்லது.நம் உடலில் உள்ள சில வசதிகள்தான் அதற்கு காரணம்.அதில் முக்கியமானது இந்த வைரஸ் நம் உடல் செல்களை தாக்குவதற்கு பயன்படுத்தி கொள்ளும் ACE 2 என்ற ஏற்பி தான்.
இந்த ஏற்பி நம் உடலின் பல அமைப்புகளிலும் பரந்து இருக்கிறது இந்த ஏற்பி எங்கெங்கெல்லாம் பரவி இருக்கிறதோ அங்கங்கெல்லாம் இந்த வைரஸும் தாக்கும்.
முதன் முதலாக தாக்கப்படுவது நம் சுவாசப்பகுதிதான்.அதிலும் தொண்டைக்கு கீழுள்ள சுவாசப்பகுதிதான்.அங்குதான் இந்த ACE 2 ஏற்பி அடர்த்தியாக உள்ளது.உதாரணமாக தொண்டை அதற்கு கீழுள்ள தொண்டை குழாய் நுரையீரல் காற்றறைகள் ஆகியவற்றின் EPITHELIAL LAYERS எனப்படும் மேலடுக்கு சுவர்களின்  ஒவ்வொரு செல்களிலும் இந்த ஏற்பிகள் மிக தெளிவாக தம்மை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றன.எனவே இந்த பகுதியை இந்த புதிய கொரோனா வைரஸ் மிக எளிதாக தாக்கி சேதப்படுத்துகிறது.
இதற்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பது நம்முடைய இதய மற்றும் இரத்த குழாய் பகுதிகள்.
இதயத்தின் தசைகளில் இருக்கும் மையோசைட்டுகள்,இரத்தக்குழாய்கள் மற்றும் தந்துகிகளின் ENDOTHELIUM எனப்படும் உட் சுவர்கள், ஆகியவற்றில் வெளிப்படையாக மற்றும் தெளிவாக பொதியப்பட்டிருக்கும் இந்த ACE 2 ஏற்பிகள் வைரசை அங்கும் வந்து தாக்குவதற்கு வசதி பண்ணி கொடுக்கின்றன.
உலக அளவில் ஆஸ்பத்திரியில் இந்த வைரஸால் தாக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் 80% பேர் இதய மற்றும் இரத்த அழுத்த நோயாளிகள்தான்.அதிலும் 40%உயர் இரத்த அழுத்தம்,36%உடல் பருமன்,12% மற்ற இதய கோளாறுகள் மீதி உள்ளது சர்க்கரை நோயாளிகள்.
இது தவிர வயதான பலகீனமான எதிர்ப்பு சக்தி குறைத்த ஆண் பெண்களை இது கடுமையாக பாதிக்கிறது.பெண்களில் மாதவிடாய் நின்ற அல்லது ஏதோ சில காரணங்களுக்காக சினைகள் நீக்கப்பட்ட (OVARIECTOMY)பெண்களை மட்டுமே இது கடுமையாக தாக்குகிறது.அது ஏன் என்பதை இந்த கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.
ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை இது கடுமையாக பாதிப்பதில்லை.இதன் காரணங்கள் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை.
20 யிலிருந்து 40% வரை ஆஸ்பத்திரியில் கோவிட் 19 நோய்க்காக சேர்க்கப்பட்ட இதய நோயாளிகளுக்கு நெஞ்சு வலி,இதய செயலிழப்பு ஒழுங்கற்ற இதய துடிப்புகள் மற்றும் மாரடைப்பு போன்ற அறிகுறிகள் இருந்தன. 
50 வயதிற்கு உட்பட்ட எதிர்ப்பு சக்தி உள்ள இளைஞர்கள் யுவதிகள் ஆகியோருக்கு சாதாரண ஜலதோஷம்  மெல்லிய காய்ச்சல் அல்லது தலைவலி இவற்றுடன் இது குணமாகிவிடும்.
ஆனால் அதே சமயம் எதிர்ப்பு சக்தி இல்லாத வயதான பலகீனமானவர்களுக்கு இந்த நோய் தொற்று  கடுமையான பின்விளைவுகளை அதாவது அவர்களுக்கு இதற்கு முன் இல்லாத உயர் இரத்த அழுத்தம்,இதய கோளாறு நீரிழிவு நரம்பு கோளாறுகளை உண்டாக்கிவிடலாம்.அதுபற்றி நாம் இப்பொது பார்க்கலாம். 
முதலில் நம் உடல் இரத்த அழுத்தத்தை எப்படி சீராக வைக்கிறது என்று பார்க்கலாம்.
RAAAS மற்றும் AAAA அமைப்புகள் 
படம் -2

நம் உடலில் இதற்காக இரண்டு அமைப்புகள் இருக்கின்றன .முதலாவது இரத்த அழுத்தத்தை உயத்துவதற்கு ஒரு அமைப்பு.அதற்கு RAAAS (Renin-Angiotensin-II-Aldosterone-Anti-Diuretic-Hormone System) ஆகும்.இதை இன்னும் சுருக்கமாக RAS என்றும் அழைக்கலாம்.காரணம் அதிலுள்ள ஆன்ஜியோடென்ஸின்-II  மற்ற இரண்டு A-A க்கும் காரணமாக அமைகிறது.
இரண்டாவது இரத்த அழுத்தத்தை தணிப்பதற்கு என்று ஒரு அமைப்பு அதற்கு AAAA (ACE2-Angiotensin1-7-Angiotensin1-9-ATR2)என்று பெயர். (பார்க்க படம்-2)
RAAAS:-
நம்முடைய இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்வதில் சிறுநீரகத்திற்கும் கல்லீரலுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு.ஏனென்றால் இரண்டுமே இரத்தத்தை சுத்தீகரிக்கின்றன.
சிறுநீரகம் இரத்தத்திலுள்ள நீரை அதன் சத்துக்களுடன் முதல் நிலையில் அதன் வடிப்பான்கள் (NEPHRONS) மூலம் வடிக்கும் பொழுதே அந்த நெப்ரான்களின் தலைப்பகுதியில் இருக்கக்கூடிய சில செல்கள்  (JUXTAGLOMERULAR APPARATUS) இரத்த அளவும் அழுத்தமும் குறையவிருப்பதை உணர்ந்து  ரெனின் என்ற புரத ஹார்மோனை சுரக்கிறது.
இந்த ரெனின் கல்லீரலிலிருந்து சுரக்கப்படும் ஆன்ஜியோடென்சினோஜன் என்ற புரதத்தை ஆன்ஜியோடென்ஸின்-I என்ற புரத ஹார்மோனாக மாற்றுகிறது.இதை ACE 1 என்ற என்ஜைம் ஆன்ஜியோடென்ஸின்-II ஆக மாற்றுகிறது.இதுதான் RAAAS அமைப்பினுடைய முக்கிய ஹார்மோன்.
ஆன்ஜியோடென்ஸின்-II ஹார்மோன் அதன் ஏற்பி (ATR -1)யில் கிரியை செய்து கீழ்கண்ட விளைவுகளை உண்டாக்குகிறது:-
1.முதலில் இரத்த குழாய்களை குறுக்குகிறது -இரத்த அழுத்தம் உயர்வு 
2.அட்ரீனல் சுரப்பியின் கார்ட்டக்ஸ் பகுதியில் இருந்து ஆல்டோஸ்டீரோன் என்ற ஹார்மோனை சுரக்க வைக்கிறது.
3.ஆல்டோஸ்ட்டிரோன் சிறுநீரக வடிப்பானின்(NEPHRON) வால் பகுதியில் உள்ள distal tubule (DCT) பகுதியில் சோடியத்தையும் நீரையும் மீண்டும் உறிஞ்சி இரத்தத்தில் சேர்க்கிறது.இதற்கு பகரமாக 2%பொட்டாசியம் வெளியேறுகிறது.2% பொட்டாசியம் வெளியேறும் அளவுவரைதான் ஆல்டோஸ்டீரோன் வேலை செய்யும்.மீதமுள்ள நீர் DCT ஐ தாண்டி சிறுநீர் சேகரிப்பு குழாய்க்கு சென்றுவிடும்.
4.உடனே ஆஞ்சியோடென்ஸின்-II மூளை பகுதியில் உள்ள கீழ் பிட்டியூட்டரியை தூண்டி சிறுநீர் அடர் இயக்குநீர் (ANTIDIURETIC HORMONE-ADH ) என்ற ஹார்மோனை சுரக்க வைக்கிறது.
5.இந்த ADH சிறுநீர் சேகரிப்பு குழாயை நீரை மட்டும் உறிஞ்சி மீண்டும் இரத்தத்தில் சேர்க்கும்படி பணிக்கிறது.ஒரு நிமிடத்திற்கு ஏறக்குறைய ஒரு லிட்டர் அளவு சிறுநீரக வடிகுழாய்களில் வடிக்கப்படும் வடிநீர் இறுதியில் இரண்டு அல்லது மூன்று மில்லி லிட்டர் அளவே சிறுநீராக மாறி சிறுநீர்ப்பையை அடைகிறது.இவ்வாறு நம் இரத்தத்தின் நீர் சத்து முழுவதும் வெளியேறி விடாமலும் இரத்தத்தின் அளவும் அதனால் இரத்த அழுத்தமும் குறைந்துவிடாமலும்  பாதுகாப்பது இந்த RAAAS அமைப்பே ஆகும்.
இதற்கு எதிராக செயல்படும் அமைப்புதான் AAAA ஆகும்.இதன் முக்கிய என்ஜைம் ACE 2 ஆகும் (பார்க்க படம் -2.).
இந்த ACE 2 ஆஞ்சியோடென்ஸின்-II ஐ 
ஆஞ்சியோடென்ஸின் 1-7 ஆகவும் ஆஞ்சியோடென்ஸின் -I ஐ ஆஞ்சியோடென்ஸின்-1-9 ஆகவும் மாற்றுகிறது.
அதே போல் ஆன்ஜியோடென்ஸின்-II ,ATR-2 இல் கிரியை செய்து இரத்தக்குழாய்களை விரிவடைய செய்கிறது.எனவே இந்த அமைப்பில் இருக்கக்கூடிய நான்கு AAAA களும் இரத்த குழாயை விரிவடைய செய்து அதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைகின்றன.
இனி இந்த கோவிட் -19 வைரஸிற்கும் இந்த அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு என்பதை பார்க்கலாம்.
இந்த புதிய கொரோன வைரஸ்-19 நம் உடலில் உள்ள செல்களை ACE 2 ஏற்பி மூலமாகவே தாக்குகிறது என்பதை நாம் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம்.
ACE 2 ஏற்பிகளை இந்த வைரஸ் அதிகமாக பயற்படுத்துவதால் இந்த ACE2 ஏற்பிகள், உடல் தேவைக்கு பயன்படமுடியாமல் தட்டுப்பாடாகிவிடுகிறது. 
இதனால் நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி இரத்த அழுத்தத்தை குறைக்கக்கூடிய AAAA அமைப்பு பலஹீனமாகி விடுகிறது.அதன் எதிரணி அமைப்பு (RAAAS) பலம் பெற்று இரத்த அழுத்தத்தை உயர்த்திவிடுகிறது.
இரத்த அழுத்தம் அபரிமிதமாக உயர்வதால் இதயத்தின் சுமை அதிகமாகி இதய செயலிழப்பு ஏற்படலாம்.
வீக்கத்தை உண்டாக்கும் சுரப்புகளான சைடோகைன்கள் (cytokines),கிரியாட்டின் கைனேஸ் போன்றவை அதிகமாக சுரந்து நிமோனியா,நுரையீரல் இரத்த ஓட்டத்தில் சிறு சிறு இரத்த கட்டிகள் (PULMONARY EMBOLISM),மூளைக்கு இரத்த ஓட்டம் தடைப்படல்,வயிற்று போக்கு ஆகியவை ஏற்படலாம்.
எனவே இறுதியாக இந்த கோவிட்-19 வியாதி இதய மற்றும் இரத்த ஓட்டம் ஆகியவற்றை பாதிப்பதால் இந்த மாதிரி பாதிப்பு உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன்கள் பாதுகாப்பு அளிக்கின்றன.விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும் 




 

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...