பீட்டா ஏற்பி அடைப்பான்கள் & கால்ஷியம் சேனல் அடைப்பான்கள்
![]() |
படம் 1 |
A.அடேனோலோல் (Atenolol)(டெனோர்மின்,அட்டன் Tenormin,Aten)ப்ரோபிரானோலோல்(Propranolol,இன்டெரால்,Inderal) மற்றும் மெடோபிரலால்,(Metoprolol,லோபிரசர்,Lopressor)
மேலே கூறப்பட்ட அத்தனை மருந்துகளும் பீட்டா ஏற்பி அடைப்பான்கள் (Beta Receptor Blockers) வகையை சேர்ந்தவை.இவை தானியங்கி நரம்பு மண்டலத்தில் (Autonomic Nervous System) அட்ரீனலின் நரம்பு பிரிவில் உள்ள பீட்டா ஏற்பிகளை அடைத்து நாரெட்ரீனலின் ஹார்மோனை செயலிழக்க செய்பவை.இதன் மூலம் இரத்தக்குழாய்களை விரிவடைய செய்து, இதய துடிப்பின் வேகத்தையும் குறைத்து இரத்த அழுத்தம் உயராமல் பார்த்துக்கொள்ளும்
B.அமிலோடிப்பின்,(Amlodipin)(நொர்வாஸ்க்,Norvasc),வேரபாமில்,(Verapamil)(ஐசாப்ட்டின்,Isoptin),நிபிடிப்பின்(Nifedipin)(ப்ரொகார்டியா,Procardia)-இவை அனைத்தும் கால்ஷியம் சேனல் அடைப்பான் வகையை சேர்ந்த மருந்துகளாகும்.
மேலே குறிப்பிட்ட இரண்டு வகை மருந்துகளும் பெரும்பாலும் இசிஜியில் ஒரே மாதிரியான தாக்கத்தையே உண்டாக்குகின்றன.
மேலே படம் 1 இல் ஒரு நார்மல் இதயத்துடிப்பின் இசிஜி காட்டப்பட்டுள்ளது.அதில் P,Q,R,S மற்றும் T -அலைகள் தெளிவாக உள்ளன.
![]() |
படம் 2A |
மேலே படம் 2-இல் பீட்டா அடைப்பான்கள் மற்றும் கால்ஷியம் சேனல் அடைப்பான்கள் ஆகியவற்றின் இசிஜி தாக்கம் எப்படி இருக்கும் என்பது பதிவாகியுள்ளது
முக்கியமாக மின்முனை II இல் ST பகுதி தாழ்ந்து,உள்ளது.S-அலை மிக கீழ்நோக்கி தணிந்து இருக்கிறது.Q -அலை மறைந்து இருக்கிறது.T -அலை மேலே குவிந்து கூம்பு போல் இருக்கிறது.இவை அனைத்தும் ஒரு சிறு சிகப்பு வட்டத்திற்குள் குறிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்
மின் முனை aVL -ன் பதிவில் P -அலை இல்லை R -R-இடைவெளி மிக நீண்டு இருக்கிறது.(சிவப்பு நீள் சதுரம்)
இவை அனைத்தும் இதயம் குறைந்த வேகத்திலும் அழுத்தத்தாலும் துடிக்கிறது என்பதை காட்டுகிறது.
மேலே உள்ள படம் 2B,மற்றும் 2C இரு இசிஜி மாடல்களிலும் வெரபாமில் (Verapamil)என்ற கால்ஷியம் சேனல் அடைப்பானின் இசிஜி தாக்கம் காட்டப்பட்டுள்ளது
படம் 2B உருவகப்படுத்தப்பட்ட (Simulated)கணிப்பு வரைபடமாகும்.அதில் Phase -0 என்ற அமைப்பு வலது புறமாக கூடுதலாக சாய்ந்து விட்டது.இது புள்ளிக்கோடுகள் மூலம் குறிக்கப்பட்டுள்ளது.இது வலது புறம் சாய்ந்துவிட்டதால் Phase 2 கொஞ்சம் குறுகிவிட்டது (கால்ஷிய அயனிகளின் நுழைவு அடைக்கப்பட்டதால்).இது படம் 2C இசிஜி மாதிரியில் தெளிவாகிறது.
மின்முனை II யின் பதிவில் (நீல செவ்வகம்) P-அலை மறைந்துள்ளது
R -R இடைவெளி அதிகரித்து உள்ளது
மின்முனை aVL இல் QRS கூட்டமைப்பு குட்டையாகவும் விரிந்தும் இருக்கிறது
இவை அனைத்தும் இதயம் மெல்ல மெல்ல தன் செயல்பாட்டை இழந்துகொண்டு இருக்கிறது என்பதை
காட்டுகிறது
முடிவாக மேலே கூறப்பட்ட மருந்துகள் டெனோர்மின் (TENOMIN,ATEN ), ஐஸோப்ட்டின்(ISOPTIN ) ,நோர்வோஸ்க்(NORVASC ),அட்டன்(Aten),ப்ரொகார்டியா (Procardia )போன்ற மருந்துகள் அளவு மீறியோ அல்லது டாக்டரின் ஆலோசனை இல்லாமலோ எடுத்துக்கொண்டால் இதய செயலிழப்பில் (CHF) என்ற கொடிய நிலையில் கொண்டுவிடும் என்பது தெளிவு.

படம் 2B |
![]() |
படம் 2C |

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக