புதன், 1 பிப்ரவரி, 2017

STAPHYLOCOCCUS AUREUS தொற்று

வீரியம் கொண்ட STAPHYLOCOCCUS AUREUS தொற்று 

மேலே தலைப்பிடப்பட்ட S.Aureus என்ற கிருமி சாதாரணமாக எல்லோரிடமும் காணப்படும் ஒரு கிருமி ஆகும்.ஆனால் இது ஒரு மனிதனின் நோய்  எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக இருக்கும் நிலையில் அவர்களை ஒன்றும் செய்வதில்லை.மேலும் சாதாரண எதிர்ப்பு சக்தி உடைய ஒருவரை இது இலேசான பாதிப்புகளுடன் தாக்கும்.தோலில் இலேசான கட்டி,அல்லது மூக்கில் SINUSITIS போன்றவை உண்டாகும்.
ஆனால் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நிலையில் இது ஒருவரை பல கோணங்களில் அபாயகரமாக தாக்கும் வல்லமை படைத்தது.தோலில் கட்டி என்று ஆரம்பித்து அது வீங்கி சீழ் பிடித்து அதன் வழியாக ரத்த நாளங்களினூடே சென்று இதயம் கல்லீரல் சிறுநீரகம் நுரையீரல் என்று எதிர்ப்பட்ட அத்தனை உறுப்புகளையும் தாக்கி சேதப்படுத்திவிடும்.
நீரிழிவு நோயாளிகள்,AIDS நோயாளிகள்,மேலும் அடிக்கடி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த படுபவர்கள் பெண்கள் குழந்தைகள் இவையே இக்கிருமிகளின் TARGET கள்  ஆவார்கள்.
மூக்கு சிந்தும்போது தும்மும் போது மூக்கு சளியை தொடும்போது இக்கிருமி தொற்றும் வாய்ப்புகள் அதிகம் 
இக்கிருமி Methicillin என்ற penicillin வகை கிருமி எதிர்ப்பங்களுக்கு (Antibiotics) கட்டுப்பட்டவை ஆக இருந்தன.
ஆனால் இம்மருந்துகளை சரியான முறையில் எடுக்காததாலும்,மருத்துவ வழிகாட்டுதல் இல்லாமல் இந்த ஆண்டிபையாட்டிக்குகளை தவறுதலான முறையில் பயன் படுத்தியதால் இக்கிருமிகள் இப்பொழுது புதிய வீறுகொண்ட வடிவத்துடன் உலக முழுவதும் பரவுகின்றன.இனி இவற்றை methicillin கொண்டு குணப்படுத்த முடியாததால் இவற்றிற்கு Community Acquired -Methicillin Resistant S.Aureus (CA-MRSA) என்கிறார்கள்.
இவை பற்றிய ஒரு சமீபத்திய ஆய்வு ஒரு புதிய தெளிவை வெளிப்படுத்தி உள்ளது.
அதாவது இக்கிருமிகளின் தோலில் அதிக அளவு சர்க்கரை Polymer ஆன Lipoteichoic acid என்ற அமிலம் இருப்பதால்தான் இந்த எதிர்ப்புசக்தி உண்டாகிறது என்று ஒரு புதிய ஆய்வு அறிக்கை கூறுகிறது.இந்த  அமிலம் ஒரு நீரில் கரையக்கூடிய பாஸ்பாரிக் அமிலம் ஆகும்.இது கொழுப்பில் கரையக்கூடிய ஒரு சர்க்கரை சத்துடன் சேர்ந்து(Glycolipid) இந்த பாக்டீரியாவின் தோல்பகுதியை எந்த ஆன்டிபயோட்டிக்கும் தாக்காதவாறு அந்த கிருமிக்கு அபாரமான எதிர்ப்பு சக்தியை தருவதாக கூறும் இந்த புதிய ஆய்வு எதிர்காலத்தில் இந்த வகை கிருமிகளுக்கு நல்லதொரு தீர்வை காண வழிவகை செய்து இருக்கிறது.
இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் ஜெர்மனி சேர்ந்த Tubingen என்ற நகரிலுள்ள Interfaculty Institute Of Microbiology And Infection Medicine,மற்றும் German Center For Infection Research -ஐ சேர்ந்த விஞ்ஞானிகள்.
சாதாரணமாக எதிர்ப்புஇல்லாத S.aureus,
Methicillin,naficillin,oxacillin போன்ற பென்சிலின் வகை கிருமி எதிர்ப் பான்களுக்கும் மற்றும் Cephalosporin களுக்கும் கட்டுப்படும்.ஆனால் CA -MRSA எனப்படும் இந்த புதுவகை கிருமி மேற்கூறிய எந்த மருந்திற்கும் கட்டுப்படாது.
காரணிகள்:-
1.சுத்தம் இல்லாத இடங்கள்.
2.சுகாதாரம் பேணப்படாத கழிவறைகள் 
3.ஆஸ்பத்திரியில் சுகாதாரம் பேணப்படாமை 
4.சிறைச்சாலைகள் 
5.ரோட்டிலும் பிளாட்பாரத்தில் தங்குவார்கள்
6.மிலிட்டரி கேம்புகள் .

கருத்துகள் இல்லை:

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...