உணர்வுக்கு ஒரு மறுப்பு
மறைந்த தமிழக முதல்வரின் மரணத்தில் மர்மம் ஏதும் இல்லை அது இயற்கையாக நோய்வாய் பட்டு இறந்ததுதான் .அதில் திருமதி சசிகலாவுக்கோ அல்லது வேறு யாருக்குமோ ஏதும் பங்கு இருக்க முடியாது.மற்றபடி அதற்க்கு பின் நடந்த அத்தனை சம்பவங்களும் யதார்த்தமானதுதான்.இப்படி ஒரு சில ஊடகங்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றன.நாம் இங்கு தெரிவிக்கும் அபிப்பிராயம் அதற்க்கு நேர் மாறாகவே இருக்கும்.ஆனால் நாம் யாருடைய சார்பிலும் இல்லை.யாருக்கும் எதிராகவும் இல்லை.
சமீபத்தில் வெளிவந்த உணர்வு பத்திரிகையில் ஜனாப் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் ஜெயலலிதாவின் மரணம் எதார்த்தமானதுதான் அதில் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை என்று சில விவரங்களை தந்திருக்கிறார் அதோடு அதில் நாம் திருப்தி பட்டால் சரி இல்லை என்றால் மவ்னம் காக்கவும் என்று எழுதி இருக்கிறார் அது ஏன் என்று புரியவில்லை.ஒரு வேளை உண்மையை கூறினால் ஆபத்து என்ற எச்சரிக்கையா என்னவோ தெரியாது.எனவே அவர் கூட சரியான நிலையை எடுக்க தயங்கி இருப்பார் போலும்.ஆனால் மர்மத்தை கண்டு நாம் தலை குனிந்து மவுனியாக இருக்க முடியாது.
முதலாவது ஜெயலலிதா ஒரு நடிகை சும்மா வீட்டில் இருக்கும் போதே நவநாகரீக மேக்கப்புடன் ஜொலித்துக்கொண்டிருப்பார்.எனவே நீண்ட நாள் ஆஸ்பத்திரி சிகிச்சையில் வாடி வதங்கிப்போன தன் உடலை விளம்பரப்படுத்த அவர் விரும்ப மாட்டார் இந்த எண்ணத்தில் ஒரு வேளை அவரை சசிகலாவை தவிர வேறு யாரும் பார்க்கவோ பேசவோ அல்லது காட்சிகளாக வெளிப்படுத்தவோ தயங்கி இருக்கலாம் என்று பிஜே அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.இது அவரது யூகம் .ஆனால் அவரது யூகம் எவ்வளவு பெரிய தவறு என்பதை ஜெயலலிதா சந்தனப்பேழையில் சவமாக தளதள மினு மினு ஜொலிப்புடன் எந்த வாட்டமும் மெலிவும் இல்லாத பொலிவுடன் வெளிப்பட்டதை அவர் ஊடகங்களில் காண வில்லையா?
அவர் நோய் வாய் பட்ட மாதிரியோ அல்லது அசதி களைப்பு மெலிவு வாட்டம் என்ற எந்த நிலையிலும் அவரது மேனி காட்சி தரவில்லையே..வாய் மட்டும் மூட முடியாத நிலையில் இருந்ததே ஏன்?எதை கண்டு வாய் பிளந்தார்?அல்லது என்ன செய்து வாய் பிளக்கப்பட்டது?
லண்டன் டாக்டர்களாக இருக்கட்டும் எய்ம்ஸ் டாக்டர்களாக இருக்கட்டும் அவர்களும் ஆசா பாசங்கள் நிறைந்த மனிதர்கள் தானே அப்போலோ நிர்வாகியும் மருத்துவருமான டாக்டர் பிரதாப் ரெட்டியே நம்பகத்தன்மை இல்லாது முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளை தந்தந்தை நாம் காண்கிறோமே?டெல்லி அப்பல்லோ ஆஸ்பத்திரி தவறான பிரசவ அறுவை சிகிச்சை செய்து ஒரு பெண்ணின் இறப்புக்கு காரணமாகி கோர்ட்டில் ஒரு கோடி ரூபாயை அபராதமாக வாங்கி கட்டிக்கொண்டதுதானே இவர்களை நம்பச்சொல்கிறீர்களா?
சரி ஒரு பேச்சுக்கு வைப்போம் லண்டன் டாக்டரும் எய்ம்ஸ் டாக்டர்களும் சுத்தமான ஜென்மங்கள் என்றே வைப்போம்.ஆனால் அவர்கள் வந்தது பார்த்தது எல்லாம் மரணம் நிகழ்வதற்கு ஒரு நீண்ட நாட்களுக்கு முற்பட்டவை ஆகும் .பிறகு நிகழ்ந்தது என்ன?
அவர் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன.,சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைக்கிறார் திட உணவுகளை சாப்பிடுகிறார். சுய நினைவுடன் இருக்கிறார் நான் மறு பிறவி எடுத்திருக்கிறேன் என்றார் இந்த நிலையில் தான் இடைத்தேர்தல் வருகிறது ஆனால் தேர்தல் விண்ணப்பங்களில் அவர் கை ரேகை இட்டதேன்?நன்றாக பேசும் அளவு திடமிருக்கும் போது கையெழுத்து போடலாமே?
75 நாட்களில் சசி கலா வைத்தவிர ஒருவரையும் பார்க்க அனுமதிக்காதது ஏன்?சசிகலா என்ன டாக்டரா அல்லது ரத்த உறவா?
ஜெயலலிதா சசிகலா கூட்டத்திற்கு ஒரு பொன் முட்டை இடும் வாத்து எனவே அவர்கள் அவரை கொல்லும் அளவிற்கு போக மாட்டார்கள் என்று ஜனாப் பிஜே அவர்கள் யூகித்திருக்கிறார்கள்
ஒன்று சொல்கிறேன்.ஜெயலலிதா ஒரு பொன் முட்டை போடும் வாத்தாக இருந்திருக்கலாம்.ஆனால் அவர் பொன் முட்டை இட்டது சசிகலாவை தன் வசதிக்கு பயன் படுத்திக்கொள்ளலாம் என்றுதான்.ஆனால் சசிகலாவின் பின்பலத்தை ஜெயலலிதா சரியாக கணக்கிடவில்லை.தன் விருப்பத்திற்கு அவரை வெளியேற்றலாம் அல்லது சேர்த்துக்கொள்ளலாம் என்று தப்புக்கணக்கு போட்டிருக்கிறார்.
ஒரு முறை சசிகலாவை வெளியேற்றியும் இருக்கிறார்.அதாவது ஒரு முறை வாத்து என்னால் கூமுட்டையும் தர முடியும் என்று காட்டி இருக்கிறது.அந்த தடவை சசிகலா சரியான முன் தயாரிப்புடன் இருந்திருக்க மாட்டார்.வெளியேறி இருப்பார்.பிறகு ஜெயலலிதாவின் மனமறிந்து ஒரு நாடகமாடி அழுது மன்னிப்புக்கடிதம் தந்து சரியான பின் பலத்துடன் சரியான தருணத்தை எதிர்பார்த்து மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்திருக்கிறார்.
2011 -இல் வெளியேற்றப்பட்டார்.அதே ஆண்டு மீண்டும் உள்ளே வந்தார்.2012 இல் சசிகலா ஜெயலலிதாவிற்கு மெல்ல கொல்லும் விஷம் தந்ததாக தெஹல்காவில் ஒரு செய்தி.வெறும் யூகம் தான் ஆதாரம் இல்லை ஆனால் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு சசிகலாவின் அசைவுகள் அந்த யூகத்தை ஊர்ஜிதப்படுத்துகிற மாதிரி உள்ளனவே
இரவு பதினோரு மணிக்கு மரணச்செய்தி வெளிவருமுன் அதே 5-12-16 மாலை மூன்று மணிக்கு அவசர அவசரமாக அதிமுக பொது குழு கூடுகிறது மாலை 5.30க்கு இன்னார் இன்னார் மந்திரிகள் என்று முடிவெடுக்கப்படுகிறது மறுநாள் பன்னீர் எந்த துக்கமும் இல்லாமல் முதல்வராக முடி சூட்டிக்கொள்கிறார் இன்று சசிகலா அதிமுகவின் தலைமை பொறுப்புக்கும் வந்து நிற்கிறார் ஜெயலலிதாவின் வாரிசுகள் உயிருடன் இருக்க ஜெயலலிதாவின் அம்மா வாங்கிய நிலத்தில் ஜெயலலிதா சினிமா நடிகையாக உழைத்து சம்பாதித்த அவரது வீட்டை இரத்த சம்பந்தமில்லாத யாரோ ஒரு சசிகலா சொந்தமாக்கிக்கொண்டாரே.இது ஒன்று போதாதா ஜெயலலிதாவின் சாவு மர்மம் நிறைந்ததுதான் என்று சொல்ல.
மேலும் 5-12-16 பின்னேரம் இரவு 11.30 க்கு இறந்ததாக அறிவிக்கிறார்கள்.மறுநாள் 6-12-16 மாலை 4.30 க்கு அடக்கம் பண்ணிவிட்டார்கள் ஒரு 12 மணிநேரம் கூட முழுசாக இல்லையே.பின்னே எதற்கு வருடக்கணக்கில் பிரேதத்தை கெடாமல் காக்கும் EMBALMING செய்து அவரது உடலை பத்திரப்படுத்த வேண்டும்.யாருக்காக ஜெயலலிதாவின் ஜொலிக்கும் அழகை பக்கத்திலே படுத்திருக்கும் எம்ஜியார் பார்த்து பூரிக்கவா?
ஜெயலலிதாவின் சாவுக்கு விடை சசிகலாவின் முகத்திலும் நடராஜனின் கண்களிலும் எழுதி அப்பி ஒட்டப்பட்டு இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக