திங்கள், 13 மே, 2019

போதை வஸ்துக்களை விட்டால் வரும் நன்மைகள்

 போதையை விட்டால் 10 நன்மைகள் 


போதை வஸ்துக்களான ஆல்கஹால் கஞ்சா அபின் போன்ற வஸ்துக்களை தவிர்த்தால் குறைந்தது பத்து நன்மைகளாவது நமக்கு கிட்டும் அவை :-
1.தினமும் ஆல்கஹால் குடிப்பது ஆரோக்கியம் என்று கருதுவது  ஒரு பேதைமை 
ஒரு ட்ரின்க் ஒருநாளைக்கு என்று கருதினால் கூட அத்துடன் நின்றுவிடாது தொடரக்கூடும் 
ஆனால் இதை தவிர்ப்பதால் 
1.நம் இதயத்துடிப்பு ஆரோக்கியமாக இருக்கும் இரத்த அழுத்தம் நேர்த்தியாக இருக்கும் 
2.கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும் 
3.மூளையும் நரம்பு மண்டலங்களும் பாதுகாப்பாக இருக்கும் 
4.ஜீரண மண்டலம் வலுப்பெறும் 
5.தூக்கமின்மை ஒழுங்கற்ற தூக்கம் இவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும் 
6.சமூக உறவுகள் சுமுகமாக இருக்கும் 
7.விபத்துகளுக்கு ஆளாகாமல் தவிர்த்துக்கொள்ளலாம் 
8.உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.காரணம் ஒரு கிளாஸ் பீரில் 150 கலோரியும் ஒரு கிளாஸ் ஒயினில் 130 கலோரியும் இருக்கிறது அது மட்டுமல்லாமல் ஆல்கஹால் பசியை தூண்டிவிட்டு இன்னும் அதிக கலோரிகளை விழுங்க வைக்கும் 
9.புற்று நோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் 
10.குடும்ப உறவுகள் மற்றும் கணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவுகள் சீராகும் 

வியாழன், 25 ஏப்ரல், 2019

ரத்தத்தில் உயர் நிலை பொட்டாசியம்

இரத்தத்தில் உயர் நிலை  பொட்டாசியம்     

  

        பொட்டாசியம் என்பது காரத்தன்மை நிறைந்த எளிதில் உடையக்கூடிய ஒரு மெது உலோகமாகும் 
இந்த வகையில் சோடியத்திற்கு அடுத்த நிலையில் இது இருக்கிறது வேதியியலில் பொட்டாசியம் மற்ற மூலகங்களுடன்  கூடும்போது தனது அணுவிலிருந்து ஒரு மின்துகளை (ELECTRON) இழந்து நேர்மின் அயனி ஆகிறது இதன் இரசாயன வலு எண்(VALENCY) ஒன்று ஆகும்.எனவே இதன் ஒவ்வொரு அயனியும் தன தலையில் ஒரே ஒரு நேர்மின் அடையாளத்தை சுமந்து கொண்டு இருக்கும்.இதன் அர்த்தம் இந்த அயனிக்குள்  ஒரு புரோட்டான் (நேர் மின் துகள்) மிகையாக இருக்கிறது அதனை எதிர்கொள்ள ஒரே ஒரு எலெக்ட்ரான்(எதிர் மின் துகள் )தேவை என்பதாகும் 
பொட்டாசியம் அயனியின் அமைப்பு கீழே தரப்பட்டு இருக்கிறது 
   

நமது உடலில் பொட்டாசியம் பெரும்பாலும் க்ளோரைடு அல்லது பைகார்போனேட் உப்புக்களாகவே இருக்கிறது 
நமது திசு செல்களுக்குள் இருக்கும் திரவம் பெரும்பாலும் நேர் மின்  பொட்டாசியம் அயனிகளை கொண்டிருக்கும் அதேவேளை செல்களுக்கு வெளியே அல்லது இடையே உள்ள திரவத்தில் பெரும்பாலும் நேர் மின்  சோடியம் அயனிகள் நிறைந்திருக்கும் 
இரண்டு திரவங்களிலும் எதிர் மின் துகள் கொண்ட  குளோரைடு அயனிகள்  ஏற்ற தாழ்வுகளுடன் இருக்கும் 
இப்பொது ஒரு செல் துடிப்பு அடைய வேண்டுமென்றால் முதலில் அது முனைவு நீக்கம் (DEPOLARIZATION)அடைய வேண்டும் 
ஒரு செல்லை மின் முனைவு நீக்குவதில் சோடியம் மிக வீரியம் கொண்டது ஆகும்  .மிகவும் பலஹீனமானது குளோரைடு அயனி ஆகும் 
இதை கீழ்கண்டவாறு  உணரலாம் 

Na+  > > Ca++ >> K+ >>> Cl--

          Na+  ---- sodium ion
       Ca++ --- Calcium ion
       K+   ---- Potassium ion
       Cl--   = = Chloride ion
எனவே மேலேயுள்ள வரிசைப்படி நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் ஒரு செல் உசுப்பப்பட அல்லது துடிக்கவேண்டுமென்றால் சோடியம் அதற்குள் பாய வேண்டும் அதே அளவு பொட்டாசியம் வெளியேற வேண்டும் 
இப்பொது செல் துடித்து செயல்படும் செயல் பாடு முடிந்து அது நிதானம் அடையும் போது மீண்டும் மின் முனைவு   ஆக்கம் (REPOLARIZATION) நடைபெறும் இப்பொது மீண்டும் இடம் மாறிய அயனிகள் மீண்டும் பழைய நிலைகளுக்கு திரும்பும்.மேல் கூறிய கோட்பாட்டிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது ஒரு தசை இயங்கவேண்டும் என்றால் அதன் திசுமண்டலத்திலுள்ள செல்களுக்குள் சோடியம் பாய வேண்டும் பொட்டாசியம் நீங்க வேண்டும் எனவே சோடியம் ஒரு உந்து (EXCITATORY ) அயனி ஆகும் பொட்டாசியம் ஒரு தடுக்கும் (INHIBITORY) அயனி ஆகும் 
 இதுதான் ஒரு பொதுவான கோட்பாடு இதையே எல்லா தானியங்கி அல்லது நாம் இயக்கும்  தசைகளும் பின்பற்றுகின்றன 
இப்பொது நாம் தலைப்பிற்கு வருவோம் 
நம் இரத்தத்தில் பொட்டாசியம்   அளவு பொதுவாக 3 இலிருந்து 5 மில்லி மோல்  இருந்தால்  போதும் 
இதுவே 7 மில்லி மோலுக்கு  மேல் அதிகரித்தால் அந்த நிலைக்கு உயர்   நிலை பொட்டாசியம் என்பர் இதை  மருத்துவ மொழியில் HYPERKALEMIA என்பர் 
பொதுவாக இதன் ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரியாது முற்றிய நிலையில்தான் இது கீழ்கண்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும் 

அறிகுறிகள் :-

1.தசை பலஹீனம் 
2.களைப்பு 
3.குமட்டல்  வாந்தி 
4.சதை பிடிப்பு ,வலி 
5.மூச்சு திணறல் 
6.ஒழுங்கற்ற இதய துடிப்பு 
7.நெஞ்சு வலி 
காரணிகள் :-
1.நாட்பட்ட சிறுநீரக கோளாறு (ESKD )
2. கட்டுப்படுத்தப்படாத உயர்  சர்க்கரை நிலை(HYPERGLYCEMIA ) ,நீரிழிவு 
3.கீழ்கண்ட சிலவகை மருத்துகள் :-
A .வலி மருந்துகள் 
B.ட்ரிமேதோப்ரிம் (சல்பா  ஆண்டிபயாடிக்)
C.கேன்சர் மருந்துகள் (சைக்ளோஸ்போரின்)
D.ரத்த கொதிப்பு மருந்துகள்:- (--PRIL மருந்துகள்  ,--lol மருந்துகள் )
E.அமிலோடிப்பின், நிபிடிப்பின்,வெரப்பாமில் டில்டியாஜிம்  போன்ற கால்சியம் அயனி அடைப்பான் மருந்துகள் 
F.சக்சினில்கோலின் 
G.ஹெப்பாரின் 
H.டிகாக்சின் 
I .மன்னிட்டால் 
4.சிறுநீரக கோளாறு 
5.உடலில் ஏற்படும் காயங்கள் 
6.ஆல்டோஸ்ட்டிரோன் ஹார்மோன் குறைபாடு 

பொட்டாசியம்  அதிகம் உள்ள பண்டங்கள் :-

1.சர்க்கரை வள்ளி கிழங்கு 
2.டின்னில் அடைக்கப்பட்ட தக்காளி பண்டங்கள் 
3.உருளைக்கிழங்கு 
4.புரதங்கள் :-பீன்ஸ்,கொடுவா மற்றும் டூனா மீன்கள்
5.தோலுரிக்கப்படாத ,காய்கறிகள் பழங்கள் 
6.தயிர் 
7.காரட் ஜூஸ் 
8.உலர்த்திய பிளம் (PRUNE)  மற்றும் அதன் ஜூஸ் 
9. உலர்த்திய ஆப்ரிகாட் மற்றும் பீச் பழம்   
10. பீட் ரூட்டின் பசும் இலைகள் 

பரிசோதனைகள் :-

1.முதலில் டாக்டர் சிறுநீரகத்தை பரிசோதிப்பார் 
2. இதய பரிசோதனைகள் 
3.நீர்ச்சத்தின்  அளவு    பரிசோதனைகள் 

சிகிச்சை முறை :-

1.இறுதிக்கட்ட சிறுநீரக நோயாளிகள் (ESKD) டயாலிசிஸ் செய்துகொள்வது அவசியம் 
2.குறுகிய சிறுநீரக நோயாளிகளுக்கு கீழ்கண்ட சிகிச்சைகள் அளிக்கலாம் :-
a)கால்சியம் ஊசி (IV )
b)இன்சுலின் ஊசி (IV)10 யூனிட் அதை தொடர்ந்து 25கிராம் க்ளுகோஸ் IV ஊசி 
c)albuteral இது ஒரு ஆஸ்துமா மருந்து ஆகும் .சிலருக்கு இதை உபயோகிக்கலாம் 
                
   



வியாழன், 31 ஜனவரி, 2019

முக்கிய மருத்துவ குறிப்புகள்

மிக முக்கிய சில ஆரோக்கிய  குறிப்புகள் 

1.அந்த 7 இடர் காரணிகள் :-

 இதய நோய்க்கான அந்த ஏழு இடர் காரணிகளையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இதய நோய் மட்டுமல்லாமல் சர்க்கரை நோயையும் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் 
அவை 
1.உடற்பயிற்சி 
2.எடை 
3.உணவு 
4.இரத்த சர்க்கரை அளவு 
5.இரத்த கொலஸ்ட்ரால் அளவு 
6.புகைப்பழக்கம் 
7.இரத்த அழுத்தம் 

2.அல்ஜெய்மர் கோளாறு 

 மனக்கோளாறுகளில் மிக கொடுமையானது அல்ஜெய்மர் நோய் ஆகும் 
இது மூளை செல்களை பீட்டா அமைலாய்டு என்ற புரதம் கட்டுக்கோப்பு இல்லாமல் குவிந்து அழிப்பதனால் ஏற்படுவது 
பொதுவாக பீட்டா அமைலாய்டு எல்லா ஆரோக்கியமான மூளை செல்களில் இருக்கும் .சில நேரங்களில் அதிக மனஉளைச்சல் ஏற்படும்போது இது ஒழுங்கற்ற முறையில் மூளையின் சில இடங்களில் குவிந்து அந்த செல்களை அரித்து விடும் இதுவே அல்ஜெய்மர் நோய் காரணியாகும் 
இதை தடுப்பதற்கு விஞ்ஞானிகள் வேறு ஒரு புரதத்தை பயன்படுத்த ஆய்வு மேற்கொண்டு உள்ளனர் 
அதன் பெயர் 3K3A-APC என்பதாகும்.இது ஒரு மாற்றியமைக்கப்பட்ட C-புரதம் ஆகும் 
இது அவ்வளவு எளிதாக உறையாது எனவே இது இப்பொது அல்ஜெய்மர் நோயை வராமல் தடுக்க கூடிய ஒரு செல் பாதுகாப்பு காரணியாக பயன்படுத்தப்படலாம் 
நீண்ட நாட்கள் ஆழ்ந்த நித்திரை இல்லை என்றால் அது அல்ஜெய்மர் நோயின் அறிகுறியாக இருக்கலாம் 
கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் Sabreena Islamoska என்பவரின் ஆய்வின்படி நாட்பட்ட மனஉளைச்சல் அல்ஜெய்மர் நோய்க்கான ஒரு காரணியாகும் என்று கண்டறியப்பட்டு உள்ளது

3.எலும்பு சூப் 

ஒரு சமீபத்திய ஆய்வின்படி எலும்பு சூப் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கண்டறியப்பட்டு இருக்கிறது 
குறிப்பாக எலும்பு சூப் இதயத்திற்கு வலு ஊட்டுகிறதாம் 
எலும்பை நீரில் நிதானமான நெருப்பில் காய்ச்சும்போது அதில் சிறிது வினீகரை சேர்க்கவேண்டும் அப்போதுதான் எலும்பின் சத்து  முழுவதும் சூப்பில் ஏறும் 

4.போரக்ஸ் (Borax )

இது இயற்கையில் கிடைக்கும் ஒரு தாது உப்பு ஆகும் இதன் இரசாயனப் பெயர் சோடியம் டெட்ரா போரேட் 
இது பொதுவாக வீடுகளீல் ஒரு கிளீனிங் பவுடர் ஆக பயன் ஆகிறது 
மேலும் இது டிடர்ஜண்ட் சோப்புகளிலும் டால்கம் பவுடர்களிலும் காஸ்மெடிக்ஸ் ஆக பயன்படுத்தப்படுகிறது 
சில  வீடுகளில் இதன் ஆபத்தை அறியாமல் குழந்தைகள் பொம்மை செய்து விளையாடும் களிகளாக (CLAY,SMILE) குழந்தைகளின் கைகளில் கொடுக்கிறார்கள் 
இது முறையல்ல ஏனென்றால் குழந்தைகள் இதை தெரியாமல் தின்று விட்டால் கீழ்கண்ட பக்க விளைவுகள் ஏற்படும் 
1.வயிற்று போக்கு 
2.ஷாக் 
3.வாந்தி 
4.மரணம் 

5.குடலில் இருக்கும் நல்ல கிருமிகள் 

நம் குடலின் மொத்த மேற்பரப்பு (surface area ) சுமார் 300 இலிருந்து  400 சதுர மீட்டர் ஆகும் 
அதாவது நம் உடலுக்கும் நம் உடலின் உட்சுற்று சூழலுக்கும் இடையே இது ஒரு மிகப்பெரும் இடை முகம் (INTERFACE ) ஆகும் 
ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலத்தில் சுமார் 50 மெட்ரிக் டன் உணவு இதன் வழியே பயணிக்கிறது .இந்த உணவுடன் ஒரு மிகப்பெரும் அளவில் கிருமிகளும் குடலினூடே பயணிக்கின்றன 
இந்த கிருமிகளில் உயிருக்கே உலைவைக்கும் கிருமிகளும் உண்டு அதே சமயம் நல்லவையும் உண்டு 
சில ஆரோக்கியமான குழந்தைகளின் குடலில் இருக்கும் நல்ல கிருமி கொத்து (GOOD BACTERIAL FLORA) அந்த குழந்தைக்கு உணவில் ஒவ்வாமை வராமல் காக்கிறது 
டாக்டர்.நாகர் மற்றும் குழுவினரின் ஒரு ஆய்வின் படி closteridium வகையை சேர்ந்த caccae என்ற கிருமிகள் சிலவகை nuts களின் மூலம் ஒவ்வாமை ஏற்படுவதை தடுக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது 
இதிலிருந்து சில கிருமிகளின் metabolic கழிவுகளில் இருந்து மருந்து ஒவ்வாமைக்கான மருந்துகளை தயாரிக்க முடியும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கின்றனர் 
6.ஹைட்ரஜன் சல்பய்டும் வயது முதிர்வும் 
முதுமையை பற்றி ஒரு சுவாரஸ்யமான ஆய்வு பிரிட்டனில் உள்ள எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது 
இந்த ஆய்வு முதுமை எப்படி ஏற்படுகிறது என்பது பற்றிய உண்மையை நோக்கி  மேலும் ஒரு அங்குல நெருக்கத்தை உண்டாக்கி இருக்கிறது 
இந்த ஆய்வில் ஹைட்ரஜன் சல்பய்டு வாயு செல்கள்கள் முதிர்வடைவதை தடுப்பதாக ஒரு அதிசய முடிவுக்கு வந்திருக்கிறார்கள் 
பொதுவாக நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் (MITOCHONDRIA )என்று சில அமைப்புகள் உண்டு இவை நீள் வட்டத்தில் rods போல் இருக்கும் இவை  ORGANELLES என்ற நூல் பின்னல்கள் போல்  இருக்கும் ஒரு செல்லுக்குள் சுமார் 2000 இலிருந்து 4000வரை MITOCHONDRIA இருக்கும் 
ஈரல் செல்களில்தான் அதிகபட்சம் இருக்கும் 
இவை அடினோசின் திரி பாஸ்பேட் என்ற இராசயனியை உடைத்து அதிலிருந்து சக்தியை வெளியாக்கி செல்களுக்கு தருகிறது 
வயது முதிர முதிர இந்த MITOCHONDRIA பலஹீனப்படுவதால் செல்களும் முதிர்வடைகின்றன இப்படி முதிர்வடைவதற்கு மருத்துவ மொழியில் SENESCENCE என்பர் இப்படி முதிர்வடைத செல்களுக்கு SENESCENT செல்கள் என்பர் 
ஆய்வில் இரண்டு புரதங்கள் SRSF2,மற்றும் HNRNPD என்ற பெயரில் MITOCHONDRIA வில் கண்டுபிடித்து உள்ளனர் இவைதான் வயது முதிர்வின் போது செல்களில் மாற்றங்கள் உண்டாக்குவதாகவும் கண்டுபிடித்து உள்ளனர் 
இவைதான் MITOCHONDRIA வின் உந்து சக்திகள் ஆகும் 
வயது முதிர்வின் போது இந்த உந்து சக்திகள் பின்னடைவு ஆகின்றன 
எனவே விஞ்ஞானிகள் இரண்டு இரசாயனிகளை (AP 39,AP 123) உண்டாக்கி இருக்கிறார்கள் 
இவற்றை எலிகளில் கொடுத்து ஆய்வு செய்யும்போது இவை செல்களில் இருக்கும் MITOCHONDRIA விற்கு மிக சொற்ப (MINUTE) அளவில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் வாயுவை செலுத்தி அதிலுள்ள சக்தி ஊக்கிகளை உசுப்பி விட்டு செல்கள்கள் முதிர்வடையாமல் செய்கின்றன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் 
இதற்காக ஹைட்ரஜன் பெராக்ஸைடு வாயுவை உட்கொள்ளலாமா என்று நினைக்காதீர்கள் 
அது ஒரு விஷ வாயு ஆகும் 

7.மார்பக புற்று 

ஸ்விஸ் நாட்டிலுள்ள பேசல் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில் மார்பக புற்றின் போது புற்று நோய் செல்கள் மேலும் பரவாமல் இருக்க அவற்றை கொழுப்பு செல்களாக மாற்றி தடுத்து சாதனை புரிந்திருக்கிறார்கள் இதற்கு அவர்கள் பயன்படுத்திய மருந்து கூட்டு நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தும் ROSIGLITAZONE உம் புற்றுநோய் மருந்தான ARCITGENIN என்ற மருந்தும் ஆகும்

8.உடற்பயிற்சி 

 ஐரோப்பியன் ஹார்ட் ஜர்னலில் பிரசுரமான ஒரு ஆய்வு அறிக்கையில் ஒழுங்கான தினசரி உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மைபயப்பதாகவும் ,குறிப்பாக இதயம் கணையம் கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகள் பாதுகாக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது 
மிக முக்கியமாக தினசரி நடைப்பயிற்சி திசுக்களில் இன்சுலின் நன்றாக பயன்படுத்தப்பட உதவுகிறதாம் இதனால் திசுக்களில் இன்சுலின் எதிர்ப்பு நிலை தவிர்க்கப்படுகிறதாம் 

9.பல் நாடா (DENTAL FLOSS)

 தினசரி பல் நாடாவைக் கொண்டு பல் இடுக்குகளை சுத்தம் செய்வதால் நம் உடம்பில் தேவையில்லாத விஷ வேதிப்பொருள்கள் சேரும் அபாயம் உண்டு என்று  ஒரு ஆய்வு கூறுகிறது காரணம் 90% பல் நாடாக்கள் பாலி புளோரோ அல்கயில் என்ற விஷப்பொருள்களாலேயே நெய்யப்படுகின்றன என்று ENVIRONMENTAL  PROTECTION AGENCY என்ற ஒரு அமைப்பின் செய்தி குறிப்பு கூறுகிறது 
எனவே இந்த பல் நாடாக்களை அதிகம் பயன்படுத்தாதீர்கள் 

10.விரதம் 

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வில் அடிக்கடி விரதம் இருப்பதால் நம் உடல் நன்றாக இயங்குகிறது என்றும் அதன் சிர்க்காடின் துடிப்பு (Circadian Rhythm)மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கண்டிருக்கிறார்கள் 
 





சனி, 10 நவம்பர், 2018

மருந்தே விஷம் -5

விஷமாகும் மருந்துகள்-வலி நிவாரணிகள்-COX-2 என்சைம் முடக்கிகள் 

இவ்வகை மருத்துகள் ஆஸ்பிரின் Brufen ,மற்றும் Voltaran -ஐ போல் வயிற்று உபாதைகளை உண்டாக்குவதில்லை என்ற விளம்பரத்துடன் வருகின்றன 
இவை மிக நவீனமானவை பிறகென்ன அல்சர் நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்தானே.அவர்கள் உடல்வலி தலைவலி காய்ச்சல் என்றுவந்தால் இதை மிட்டாய் மாதிரி வாங்கி விழுங்காலாமில்லையோ பத்தியம் கிடையாதுதானே என்று கன்னா பின்னா வென்று உங்கள் இஷ்டம்போல் கற்பனை செய்வீர்களேயானால் அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இனி பார்க்கலாம் 
இவ்வகை மருந்துகளை டாக்டர்களும் பார்மசிஸ்ட்டுகளும் COXIB மருந்துகள் என்று செல்லமாக அழைப்பார்கள் காரணம் அவற்றின் இரசாயன பெயர்கள்தான் 
CELECOXIB (CELEBREX ),ETORICOXIB(ARCOXIA),ROFECOXIB (VOIOXX ),மற்றும் VALDECOXIB என்று பட்டியல் நீளும்
நாம் ஏற்கனவே போன கட்டுரையில் COX-2 என்சைம் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம்
இந்த என்சைம் சாதாரணமாக  ஆரோக்கிய  உடல் நிலையில் இயங்காது அதாவது ஆக்டிவ் ஆக இருக்காது  ஆனால் இது நம் உடலின் தோல் உட்பட அனைத்து பகுதிகளிலும் இருக்கும்
ஆனால் உடலில் பாதிப்பு ஏற்படும் போது அந்த பகுதியில் மட்டும் இது ஆக்டிவ் ஆகி ப்ரோஸ்டாக்ளான்டினை உற்பத்தி செய்யும் எனவே அந்த பகுதியில் வலியும் எரியும் சிவத்தலும் வீக்கமும் உண்டாகும்
ஆனால் ஒன்று இந்த COX-2 ப்ரோஸ்டாசைகிளின் என்ற இரத்தம் உறையாமல் தடுத்து இரத்த ஓட்டத்தை சீராக பாதுகாக்கும் புரதமும் உற்பத்தியாக காரணி ஆகிறது என்பதை மறந்து விடக்கூடாது
இப்போது இந்த என்சைமை மாத்திரம் முடக்குவதால் நிச்சயம் உடல் வலி வேதனை,வீக்கம்,எரிவு போன்றவற்றிலிருந்து சுகம் அடைகிறது என்பது உண்மைதான் எனினும் இதை தவறாக அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் நிச்சயம் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படலாம் உயர் ரத்த கொதிப்பினால் பாதிப்பு உண்டாகலாம்
அளவு மீறி இதை உட்கொள்ளும்போது இது COX-1 என்ஸைமையும் முடக்கி வயிற்று கோளாறுகள் அல்சர் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும்
பொதுவாக செப்டறான் போன்ற சல்பா மருந்து அலர்ஜி உள்ளவர்கள் COX முடக்கிகளை எடுக்கக்கூடாது இதுவும் அலர்ஜி உண்டாக்கும்
தலை சுற்றல் வாந்தி குமட்டல் தூக்கமின்மை தருமன் சைனஸ் போன்ற இதர பிரச்சினைகளும் இந்த மருந்துகளை தவறாக எடுத்துக்கொள்வதால் உண்டாகலாம்
எனவே முடிவாக எந்த மருந்தாக இருந்தாலும் வயதான காலத்தில் சுய மருத்துவத்தில் ஈடுபடாதீர்கள்


வியாழன், 8 நவம்பர், 2018

மருந்தே விஷம்-4

விஷமாகும் மருந்துகள்-ஸ்டிராய்டு அல்லாத வாத மற்றும் எரிவு மருந்துகள் 

இந்த வகை மருந்துகளை மருத்துவர்கள் NSAIDs (NON STEROIDAL ANTI INFLAMMATORY DRUGS ) என்று ஆங்கிலத்தில் டெக்னீக்கல் ஆக கூறுவார்கள் 
காரணம் பொதுவாக எரிவுகளுக்கு (INFLAMMATIONS) ஸ்டிராய்டுகளே பொருத்தமான மருந்துகளானாலும் அது ஒத்து கொள்ளாதவர்களுக்கு பகரமாக இந்த வகை மருந்துகளை தருவார்கள் 
இவை IBUPROFEN (BRUFEN),NAPROXEN(PROXEN),KETOPOPROFEN (KETOFEN)INDO METHACIN  (இண்டோஸிட் ),DICLOFENAC (VOLTAREN),ACECLOFENAC (ACEBLAC),PIROXICAM (FELDENE )இப்படி ஒரு பட்டியல் நீண்டு கொண்டே போகும் 
உண்மையில் ஆஸ்பிரினும்,பாராசிட்டமாலும் இவ்வகையை சேர்ந்தவைதான் எனினும் நாம் அவற்றை சில காரணங்களுக்காக தனித்தனியாக பிரித்து விட்டோம்.
மேல் சொன்ன மருந்துகள் அனைத்துமே அபாயகரமானவை
எப்போதாவது ஒரு முறை எடுத்துக்கொண்டால் பரவாயில்லை
ஆனால் அடிக்கடி அல்லது தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது கண்டிப்பாக டாக்டரின் மேற்பார்வை அவசியம்
சைக்ளோ ஆக்சிஜனேஸ் -1,மற்றும் -2 என்று இரு வகை என்சய்ம்கள் நம் உடலுக்குள் இருக்கின்றன .
இவற்றை COX-1, COX-2 என்பர்
இவை இரண்டுமே ப்ராஸ்டாகிளான்டின் மற்றும் ப்ரோஸ்டாசைக்ளின் போன்ற உடல் இயக்கு புரதங்களை சுரக்க வகை செய்கின்றன
அராக்கிடோனிக் அமிலம் என்றோரு ஒமேகா -3 கொழுப்பு அமிலத்திலிருந்துதான் ப்ரோஸ்டாக்ளான்டின் உற்பத்தி ஆகிறது இதற்கு டெக்கனிகலாக Ecosa Tetranoic Acid என்பார்கள்

இவ்வகை ஒமேகா -3 கொழுப்பு அமிலம் மிருக வகைகளில் மனித உடலில் மட்டும்தான் சுரக்கிறது என்பது தனிச்சிறப்பு இந்த அமிலம்தான் ப்ரோஸ்டாக்க்ளான்டின் உற்பத்தியின் மூலப்பொருள்
இப்போது பாராசிட்டமால் -ஐ தவிர்த்து மேலே கூறப்பட்ட அனைத்து  வலிநிவாரணிகளும் இந்த COX-1 ,COX-2 என்சைம்களை முடக்கி ப்ரோஸ்டாக்ளான்டின் சுரப்பை நிறுத்துகின்றன
COX-1 மூலம் சுரக்கப்படும் ப்ரோஸ்டாக்ளான்டின் நிரந்தரமானது இது நம் உடல் சீராக இயங்குவதற்கு துணை புரிகிறது.மேலும் வயிற்றின் உட்புற சுவர் அமிலத்தினால் அரிக்கப்படாமல் காக்கும் ஒருவித பிசுபிசுப்பான மியூகஸ் திரவம் சுரப்பதற்கும் சிறுநீரகம் கல்லீரல் போன்ற  முக்கிய உறுப்புகள் சீராக இயங்குவதற்கும் இந்த COX-1 மூலம் சுரக்கப்படும் புரோஸ்டாக்ளான்டினே காரணம் ஆகும்
ஆனால் COX-2 மூலம் சுரக்கப்படும் ப்ரோஸ்டாக்ளான்டின் உடலில் ஏதேனும் ஒரு பகுதி பாதிப்புக்கு ஆளாகும்போது உடல் அந்த பாதிப்பை வேதனை எரிவு ஒவ்வாமை போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்த இந்த ப்ரோஸ்டாக்ளான்டின்  உதவு கிறது.அதோடு இந்த COX-2 என்ஜைமும் பாதிப்பு நேரங்களில் மட்டுமே இயங்குகிறது
ஆனால் மேலே கூறப்பட்ட  இந்த வலி நிவாரணிகள் அனைத்தும் COX-1,மற்றும் COX-2 ஆகிய இரண்டு என்சய்ம்களையும் முடக்குவதால் வலியும் வாதமும் குணமானாலும் இவை வயிற்றின் உட்சுவற்றையும் சிறுநீரகம் கல்லீரல் மண்ணீரல்  போன்ற முக்கிய உறுப்புகளையும் பாதுகாப்பற்றவையாக்கிவிடுகின்றன காரணம் அவற்றை பாதுகாக்கும் COX-1 என்சய்மும் முடங்குவதால்.
COX-1 என்சைமை முடக்காமல் COX-2 என்சைமை மட்டும் முடக்க கூடிய வலி நிவாரணிகளை நாம் பின்னால் பார்க்க இருக்கிறோம்
இந்த வலி மருந்துகளில் புரூபென் சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த வலிமருந்து ஆகும் இதன் அதிக பட்ச டோஸ் அளவு ஒரு நாளைக்கு 2400 மிகி -3200 மிகி ஆகும் இப்பொது புரூபன்  200 மிகி -800மிகி வரை மாத்திரைகளாக கிடைக்கிறது
இதை இதய நோயாளிகள்,கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மிக கவனமாக டாக்டரின் ஆலோசனையின் பேரில் கையாள வேண்டும்
இந்த மருந்துகளை ஆல்கஹாலுடன் சாப்பிடக்கூடாது சாப்பிட்டால் ஈரல் சிறுநீரகம் ஆகியவை பாதிப்புக்கு ஆளாகும்
வயிற்றில் இரத்த கசிவு அல்லது இரத்த போக்கு உண்டாக்குவதில் INDOMETHACIN DICLOFENAC ,மற்றும் ACECLOFENAC  ஆகியவை மிகவும் தீவிரமானவை
கீழேயுள்ள ஒரு சிறு பட்டியலில் சிலவற்றின் அதிக பட்ச டோஸ்களை பதிந்துள்ளேன்
DICLOFENAC டோஸ் அளவு        75 மிகி முதல்      150 மிகி வரை
INDOMETHACIN டோஸ் அளவு 50 மிகி  முதல்      150 மிகி வரை
IBUPROFEN டோஸ் அளவு          1200 மிகி முதல்  1800 மிகி வரை
NAPROXEN  டோஸ் அளவு          500 மிகி முதல்    1000 மிகி  வரை
PIROXICAM  டோஸ் அளவு          10 மிகி  முதல்     20 மிகி    வரை
மேலே குறிப்பிட்ட டோஸ் அளவு அனைத்தும் பெரியவர்களுக்கானதாகும்
10 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு டாக்டர்கள்தான் சிபாரிசு செய்யவேண்டும்
மேலே குறிப்பிட்ட டோஸ் அளவுகள் அனைத்தும் வெறும் கோட்பாட்டு அளவுகள்தான்
நடைமுறையில் இந்த அளவுகள் நோயாளிகளின் உடலமைப்புகளுக்கு மற்றும் தேவைக்கு ஏற்ப மாறும் அனாலும் மேல் குறிப்பிட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும்
டாக்டரின் சிபாரிசு இல்லாமல் எப்போதாவது சாப்பிடுபவர்கள் எப்போதும் குறைந்த பட்ச டோஸ்களையே எடுக்க வேண்டும்
இந்த மருந்துகள் அனைத்தும் கவனமாக கையாளப்படவேண்டும்
இவற்றை தவறான  முறையில் பயன்படுத்தினால் அது கொலை அல்லது தற்கொலைக்கு சமம்
இவை அனைத்துமே கல்லீரல்,,இதயம் சிறுநீரகம் வயிறு ஆகியவற்றை பாதிக்க கூடியவை
பெரும்பாலும் இவை வெறும் வயிற்றில் நன்றாக பலன் கொடுக்கும் ஆயினும் வயிற்றுக்கு கெடுதல் செய்யும்
எனவே இவற்றை சாப்பிட ஒரு பத்து நிமிடங்களுக்கு முன் எடுத்துக்கொண்டு நிறைய நீர் அருந்த வேண்டும் கூடவே ஒன்றிரண்டு பிஸ்கட்டுகள் சாப்பிடலாம்
பத்து நிமிடங்களில் நன்றாக ஆகாரம் எடுத்து கொள்ளலாம்

திங்கள், 29 அக்டோபர், 2018

மருந்தே விஷம் -3

விஷமாகும் மருந்துகள் -ஆஸ்பிரின் 

வலி நிவாரணம் வாத உளைச்சல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு ஆஸ்பிரின் ஒரு அற்புதமான நிவாரணி 
ஒரு காலத்தில் இது குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் தெரிந்து வைத்த ஒரு மருந்து 
தலைவலியா ஒரு ஆஸ்ப்ரோ சாப்பிடுங்கள் தலைவலி மாயமாக நீங்கி விடும் என்று பட்டி தொட்டிகளிலெல்லாம் விளம்பர படுத்தப்பட்டு  பெட்டி கடைகளில் கூட கிடைக்கப்பட்ட மருந்து 
ஆஸ்பிரின்,ஆஸ்ப்ரோ,டிஸ்பிரின்,டிஸ்பிரில் என்றெல்லாம் விளம்பரப்படுத்த பட்டாலும் இதன் இரசாயன பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம் என்பதாகும் 
பாராசிட்டமால் மாதிரி  இல்லாமல் இது ஒரு அமிலம் ஆகும் 
இது ஒரு பலவீனமான அமிலம் தான் என்றாலும் இதன் வீரியம் வயிற்றின் உட்புற மெல்லிய தோலை அரித்தெடுக்க போதுமானது 
இது இரத்தம் உறைவதையும் கட்டுவதையும் தடுத்து இரத்தத்தை நீர்த்து போக செய்யும் ஆற்றலுடையது  எனவே ஓவர் டோஸ் எடுத்து கொண்டால் வயிற்றில் புண் உண்டாவதோடு உள் இரத்த போக்கையும் (INTERNAL BLEEDING ) ஏற்படுத்தும்.மேலும் இதை தினசரி சாப்பிடக்கூடிய  இதய நோயாளிகள் மற்றும் பிரஷர் நோயாளிகள் உடலில் பலத்த காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஏனென்றால் இரத்தம் உறைவதை குறைக்கும் இந்த மருந்து பலத்த காயங்களிலிருந்து அதிக இரத்தப்போக்கை (EXTERNAL BLEEDING) உண்டாக்கும்.
பல் ஈறுகளில் இரத்தம் கசிவு இருந்தால் ஆஸ்பிரினை  டாக்டரின் ஆலோசனையுடன் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும் 
மேலும் மூட்டு வலி உடையவர்கள் ஆஸ்பிரினை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் ஆஸ்பிரின் யூரிக் அமிலம் சிறுநீரில் வெளியேறுவதை தடுக்க கூடியது இது ஒரு ANTI URICOSURIC  ஆகும் 
எனவே மூட்டு இடுக்குகளில் அதிகமான யூரேட் உப்புக்கள் தேங்கி வலியை அதிகரிக்கும் இவர்கள் மற்ற வலி நிவாரணிகளை குறிப்பாக ப்ரூபன், ,நெப்ரோக்ஸன், இன்டோஸிட் போன்றவற்றையோ  அல்லது ஸ்டெராய்டுகளையோ டாக்டரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.
இப்போதெல்லாம் ஆஸ்பிரினை குழந்தைகளுக்கு அதுவும் ஐந்து வயதிற்கு கீழ் பட்ட குழந்தைகளுக்கு டாக்டர்கள் எழுதுவதில்லை 
காரணம் GRAY BABY எனப்படும் RYE'S SYNDROM என்ற கொடிய வியாதி இது ஒரு RARE SYNDROM தான் என்றாலும் இது ஒரு கொடிய வியாதி ஆகும் குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் ஏற்படுத்தும் இந்த கொடிய வியாதியால் குழந்தைகள் இறந்து விடும் 
எனவே பேபி ஆஸ்பிரின் என்ற பெயரில் இப்பொது ஆஸ்பிரின் மார்க்கெட்டில் இல்லை ஆனால் அதே பேபி ஆஸ்பிரின் 75கிராம் 80 கிராம்களில் இதய நோயாளிகளுக்கு மாத்திரைகளாக வருகின்றது 
பிரசவ காலங்கள் முழுவதும் ஆஸ்பிரினை எடுக்காமல் இருக்க வேண்டும் 
குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் ஆஸ்பிரின் எடுத்து கொண்டால் குறை பிரசவம் ஏற்படும் 
நஞ்சு உண்டாவதில் பிரச்சினை ஏற்படும் உள் இரத்தப்போக்கு ஏற்படலாம் குழந்தைக்கும் பாதிப்புகளை உண்டாக்கும்
ஆஸ்பிரின் ஜாக்கிரதை
பொதுவாகவே எந்த மருந்தாக இருந்தாலும் அதை மருந்தாகவே பாருங்கள்
அது வைட்டமின் மாதிரியாகவே இருக்கட்டும்
வைட்டமின் மாத்திரைகளை கூட அஜாக்கிரதையாக பயன்படுத்தினால் அதுவும் விஷமாகவே முடியும் இது பற்றி நாம் பின்னால் பார்க்கலாம்


வியாழன், 25 அக்டோபர், 2018

மருந்தே விஷம் -2

விஷமாகும் மருந்துகள் -வலிநிவாரணிகள் 

1.பாராசிட்டமால் :-

இந்த மருந்து யு எஸ்ஸில் Acetaminophen என்றும் இந்தியா போன்ற நாடுகளில் Paracetamol  என்றும் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது 
தலைவலி காய்ச்சல் மற்றும் உடல்வலி போன்ற உபாதைகளுக்கு இது ஒரு அற்புதமான வலிநிவாரணி 
இதை சிறுவர் முதல் பெரியவர் வரை குறிப்பாக வயிற்று கோளாறு வாய்வு பிரச்சினை அல்சர் நோயாளிகள் என்று யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் 
இது வாத உளைச்சல் சிவப்பேறுதல்  (INFLAMMATION )போன்ற உபாதைகளுக்கு பயன்படுத்த கூடாது ஏனென்றால் பிரயோஜனம் இல்லை

 இது வலி மற்றும் காய்ச்சல் உஷ்ணத்தை குறைப்பதே அலாதியானது
இது மற்ற வலிநிவாரணிகள்  போல் செயல்படுவதில்லை
வயிற்று கோளாறுகளை உண்டாக்குவதில்லை
ஆனால் மத்திய நரம்பு மண்டலத்தின் மூலமாகத்தான் இது வேலை செய்கிறது மூளையில் உள்ள Hypothalamus பகுதியில் உஷ்ணத்தை சமன்படுத்தும் thermostat அமைப்பு உண்டு இது நம் உடம்பில் உஷ்ணம் அதிகரிக்கும் போது வியர்வை சுரப்பிகளை தூண்டிவிட்டு உஷ்ணத்தை கட்டுப்படுத்தும்.ஆனால் காய்ச்சலின் போது இந்த அமைப்பு உடலில் உண்டாகும்  pyrogen  புரதத்தினால்  அதிகப்படியான prostaglandin என்ற புரதத்தை சுரந்து உடல் உஷ்ணத்தை கூட்டும்  பாராசிட்டமால் இந்த thermostat அமைப்பை தூண்டி விட்டு அதிக வியர்வை மூலம் காய்ச்சலை கட்டுப்படுத்துகிறது .
இதே முறையில் இது வலியையும் கட்டுப்படுத்தும்
பாராசிட்டமால் இப்படி மத்திய நரம்பு மண்டலத்தின் மூலம் hypothalamus அமைப்பை மட்டுமே கட்டுப்படுத்துவதால் வயிற்று கோளாறுகளை உண்டாக்குவதில்லை
ஆனாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்ற கதைதான் இம்மருந்தை நம் இஷ்டத்திற்கும் எடுத்து கொண்டால்
இது panadol,Dolo என்ற பல பெயர்களில் 250 மி.கி ,500 மி .கி ,மற்றும் 600 மி.கி என்ற அளவுகளில் கிடைக்கிறது
குழந்தைகளுக்கு ரோஸ் மில்க் போன்ற கலரில் 125 மி.கி ஸிரப் பும் கிடைக்கிறது
இதற்கான கவர்ச்சிகரமான விளம்பரங்களும் மீடியாக்களில் பட்டி தொட்டியெல்லாம் காட்சியாகின்றன
மருந்துகளை விளம்பரம் செய்யும் போது அதன் அனுகூலங்களை மட்டும் ஹைலைட் பண்ணிவிட்டு பிரதிகூலங்களை மறைத்து விடுவார்கள்
இது எல்லா மருந்துகளுக்கும் குறிப்பாக இதய நோய் ,ரத்த அழுத்தம்,தைராய்டு ,வாத நோய் மருந்துகளுக்கும் இப்படித்தான் விளம்பரங்கள் செய்கிறார்கள்
சிகரெட் விளம்பரத்திற்கு கூட "சிகரெட் புகைப்பது உடலுக்கு கேடு என்று ஒரு சிறு குறிப்பு போடுவார்கள்
ஆனால் இந்த நச்சு விளம்பரங்களில் வெறும் வியாபார நோக்குதான் இருக்குமே தவிர ஒரு சிறு எச்சரிக்கை குறிப்பு கூட இருக்காது
இப்பொது வருவோம் பாராசிட்டமால் ஒரு அற்புதமான காய்ச்சல் நிவாரணிதான்
டாக்டர் எப்போதோ சிபாரிசு செய்தார் என்பதற்காக காய்ச்சல் வரும்போதெல்லாம் வைட்டமின் டானிக் மாதிரி குழந்தைக்கு பாரசிட்டமால் ஸிரப்பை  கொடுக்கலாமா?என்ன செய்ய குழந்தைக்கு மேலசூடு சும்மா நச் நச் என்று அழுதுகிட்டே இருக்கிறான் ஒரு வேலையும் செய்யமுடியவில்லை இதை ஒரு டோஸ் ஊற்றிவிட்டால் கொஞ்ச நேரமாவது தொல்லை இருக்காது காய்ச்சல் குறைந்து பிள்ளை தூங்கி விடுவான் நிம்மதியாக மற்ற வீட்டு வேலைகளை கவனிக்கலாம் மீண்டும் காய்ச்சல் ஏறினால்  இன்னொரு டோஸ் கொடுத்து தூங்க வைத்துவிடுவேன் ரோஸ் மில்க் மாதிரி டேஸ்ட்டாக இருப்பதால் இடக்கு பண்ணாமல் பிள்ளை குடித்துவிடுவான்
இது சில தாய் மார்களின் அங்கலாய்ப்பு ஆஹா என்ன ஒரு அறிவு ஜீவிகள்
ஏனென்றால் இது செல் போன் யுகம் அஞ்சறை பெட்டியும் பாட்டி  காலத்து இஞ்சி கஷாயமும் தாழ்ந்து போய்விட்டன அந்த காலத்து கிழவிகள் மாதிரி பிள்ளையை துரத்தி பிடித்து காலுக்குள் சிக்கவைத்து சங்கிலே இஞ்சி சாறை குழந்தையின் வாயில் திமிர திமிர ஊற்றுவதற்கு இந்த காலத்தில் யாருக்கு இயலும் காரணம் அந்த காலத்து கிழவிகள் மாதிரி இந்த காலத்தில் யாருக்கும் ஆரோக்கியமும் இல்லை நாட்டு மருத்துவ அறிவும் இல்லை
அதனால்தான் ஷாப் மருந்து வியாபாரிகளுக்கு அடித்தது யோகம்
பிள்ளைகளின் உடல் நலனுக்கு தோஷம்
பெரியவர்கள் கூட இந்த மருந்தை மாத்திரைகளாக தலைவலி காய்ச்சல் வரும்போது வாங்கி விழுங்குகிறார்கள்
எப்போதாவது சாப்பிடுவதில் பிரச்சினை இல்லை ஆனால் அடிக்கடி சாப்பிடும்போது ஓவர் டோஸ் ஆவதற்கு வாய்ப்பு உண்டு
பாராசிட்டமால் ஓவர் டோஸ் பக்க விளைவுகள் கொடுமையானவை
1.தலை சுற்றல்
2.வாந்தி
3.தோல் அரிப்பு
4.மயக்கம்
5.அல்சர்
6.குடல் பாதிப்பு
7.சோகை நோய்
8.உதடுகள் சிவத்தல்
மேலே கண்ட அத்தனை பக்க விளைவுகளும் ஈரல் பாதிப்பின் அறிகுறிகள்
ஆம் பாராசிட்டமால் ஒரு ஈரலை பாதிக்கும் கொடிய விஷம் ஆகும்
சாதாரணமாக நாம் சாப்பிடும் பாராசிட்டமால் ஈரலில்தான் சிதைக்கப்படுகிறது
அப்படி சிதையும் பொழுது 10% பாரசிட்டமால்  N -Acetyl p-Benzo Quinone Imine (NAPBQI )என்ற  நச்சாக மாறுகிறது இதை நம் ஈரல் தன்னிடமுள்ள Glutothione என்ற ஆஸீகரண எதிர்ப்பான (ANTIOXIDANT) மூலம் செயலற்றதாகிவிடும் ஆனால் இதுவே பாராசிட்டமால் ஓவர் டோஸ் ஆகும் பொழுது இந்த விஷத்தை முறிக்கும் அளவு க்ளூடோத்தியோனை ஈரலினால்
உற்பத்தி செய்யமுடியாமல் போய் அந்த NAPBOI விஷம் ஈரல் செல்களை தாக்கி அரித்துவிடும் பெரியவர்களுக்கே இப்படி என்றால் குழந்தைகளுக்கு கேட்க வேண்டியதே இல்லை
பெரியவர்கள் ஒருநாளைக்கு ஒரு வேளை 500 மி.கி.யிலிருந்து 1000 மி.கி வீதம் 4000 மி.கி.வரை எடுத்து கொள்ளலாம் எனினும் நிதானம் வேண்டும்
இரண்டு வயதுக்கு கீழ் பட்ட குழந்தைகளுக்கு டாக்டரின் கண்காணிப்பு இல்லாமல் இதை கொடுக்காதீர்கள்
மாத தீட்டு வலிக்கு இதை சாப்பிடலாம் ஆனால் கர்ப்பம் உண்டாகி விட்டால் இதை சாப்பிடக்கூடாது
இதை சாப்பிட்ட பிறகு அரிப்பு போன்ற அலர்ஜி ஏற்பட்டால் நிறுத்தி விடவும்
சிறுநீரகம் ஈரல் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடவேண்டாம்
நீரிழிவு நோயாளிகள் டாக்டரின் ஆலோசனையின் பெயரில் இதை சாப்பிடலாம்
மது வருந்தும்போது மற்றும் புகைக்கும் போது இதை  சாப்பிட்டால் புற்று நோய் வர வாய்ப்பு உண்டு



புதன், 10 அக்டோபர், 2018

மருந்தே விஷம் -1

விஷமாகும் மருந்துகள் -1

சமீபத்தில் ஒரு பெண் சென்னையில் தன் கள்ளக்காதலுக்கு இடையூறு என்று கருதி தன் குடும்பத்தையே கொலை செய்ய முயன்றாள்  அதில் அவள் கணவன் தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டான்.ஆனால் அவள் இரண்டு குழந்தைகளும் மாண்டன.இந்த செய்தியின் முழு விபரம் இந்த தலைப்புக்கு அவசியம் இல்லை என்றாலும் அதில் அவள் கொலை செய்ய பயன்படுத்திய அந்த மருந்து மிக முக்கியம் ஏனென்றால் அது தூக்க மாத்திரையோ அல்லது மூட்டை பூச்சி மருந்தோ இல்லை வெறும் கர்ப்பத்தடை மாத்திரை தான்.
இந்த டெக்கினிக்கை அவளுக்கு கூறியது அவளது கள்ள காதலன்தான் அவன் மருந்து கடை சட்டங்களை ஓரளவு தெரிந்தே வைத்திருக்கிறான் 
ஆம் தூக்க மாத்திரையோ பூச்சி மருந்துகளோ வாங்க வேண்டும் என்றால் மருந்தாளுனரிடம் டாக்டர் சீட்டை காட்டவேண்டும் அல்லது அதற்கான சில விவரங்களை காட்டவேண்டும் அப்படியே இல்லாமல் தெரிந்தவர் மூலம் அதை வாங்கினாலும் அது மிகப்பெரும் சிக்கலை பின்னால் பார்மஸிக்கும் வாங்கியவருக்கு உண்டாகலாம் 
இதனால் அவன் மூளை கருத்தடை மாத்திரைக்கு திரும்பி இருக்கிறது 
சாதாரண அல்லது டாக்டரின் வழிகாட்டுதலின் பெயரில் இந்த மாத்திரைகளை யாரும் பயன்படுத்தலாம் எந்த பிரச்சினையும் இல்லை பார்மஸியில் இதை OTC யில் டாக்டர் சீட்டு இல்லாமலே தருவார்கள் இதனால் எந்த சந்தேகமும் வராது 
ஆனால் ஒன்றை மறந்து விடக்கூடாது 
அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷமாகும் 
விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான் 
அதன் அர்த்தம் அளவுக்கு மீறி விருந்து சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு கேடோ அது போல்தான் அளவுக்கு மீறி எடுக்கப்படும் மருந்தும் உடலுக்கு கேடே 
மேலே கண்ட அந்த கொலை செய்தியில் கொலைகாரி தன் ஐந்து வயது குழந்தையை கொல்ல  ஐந்து மாத்திரைகளை பாலில் போட்டு கொடுத்தவளுக்கு பத்து வயது இன்னொரு குழந்தையை கொல்ல பத்து மாத்திரைகள் தேவைப்பட்டு இருக்கிறது 
ஒரு கருத்தடை மாத்திரை பேக்கில் 21 மாத்திரைகள் இருக்கும் 
இந்த மாத்திரைகளை ஒவ்வொரு மாதவிடாய் காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும் 21 நாட்கள் இவ்வாறு சாப்பிட்ட பின் 7 நாட்கள் இரத்த போக்கு இருக்கும் வரை மாத்திரை ஏதும் சாப்பிட வேண்டாம் .அந்த 7 நாட்கள் மாத விடாய் நின்ற பிறகு மீண்டும் அடுத்த மாதவிடாய் கால ஆரம்பத்தில் மீண்டும் தொடர வேண்டும் இதுதான் அதன் நியதி 
சரி இப்போது அந்த மாத்திரைகளில் என்னதான் மருந்துகள் இருக்கிறதென்று விபரமாக பாப்போம் 
இவற்றில் பெரும்பாலும் இரண்டு வகையான ஹார்மோன்கள் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருக்கும் 
அவை ப்ரோஜெஸ்டின் மற்றும் ஈஸ்ட்ரோஜென் வகை ஹார்மோன்களாகும் 
இவை பெரும்பாலும் செயற்கையாக (SYNTHETIC) உருவாக்கப்பட்டவை ஆகும் இவை இயற்கை ஹார்மோன்களை விட வீரியம் குறைந்தவை என்றாலும் தவறுதலாக பயன்படுத்தினால் ஆபத்தை விளைவிக்கும் 
பொதுவாக கர்ப்பத்தடை மாத்திரைகளில் ஏராளமான பக்க விளைவுகள் இருந்தாலும் அதில் மிக முக்கியமானவை 1.இரத்தம் குழாய்க்குள் உறைந்து சிறு சிறு உறைவுகளாக (CLOTS) மாறி அங்கங்கே இரத்தக்குழாய்களை அடைத்துக்கொள்ளுதல் இதில் முக்கியமானது நுரையீரல் இரத்தக்குழாய் அடைப்பு.இதற்கு PULMONARY  EMBOLISM என்பார்கள் மூச்சு முட்டி மரணம் சம்பவிக்கும் 
2.ஹார்ட் அட்டாக் 
3.ஈரல் வீக்கம் 
4.இரத்த கொதிப்பு 
சிறுவர்கள், சிகரெட் புகைப்பவர்கள் ,இதய நோயாளிகள் ,இன்னும் புற்று நோயாளிகள் இந்த மாத்திரைகளை கண்டிப்பாக எடுத்து கொள்ள கூடாது 

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

பருப்பு வகைகள் (மேவா)-1

பிஸ்தா 

பிஸ்தா பருப்பு மரங்களிலிருந்து பெறப்படும் போஷாக்கு நிறைந்த மேவா பருப்பு ஆகும்.வேறு எந்த பருப்பு வகையையும் விட அதிகம் புரத சத்து உடையது.ஒரு அவுன்ஸ் பிஸ்தாவில் சுமார் 6 கிராம் புரதம் இருப்பதால் சைவ உணவு பிரியர்களுக்கு இது ஒரு அமிர்தம் ஆகும் 
மேலும் பிஸ்தாவில் ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் மற்றும் நார் சத்தும் இன்னும் விட்டமின்களும் அபரிமிதமாக உள்ளன 
1 அவுன்ஸ் (28.35 கிராம்) பிஸ்தாவில் American Agricultural Department விகிதப்படி கீழ்கண்டவாறு அதன் சத்துக்கள் அமைந்துள்ளன:-
1.கலோரி                                                          --- 159
2.புரதம்                                                              ---  5.72 gm 
3.கொழுப்பு                                                       --- 12.85 gm 
4.கார்போஹைடிரேட்                                 ---  7.75 gm 
5.நார் சத்து                                                       ---  3 gm 
6.சர்க்கரை                                                        --- 2.72 gm 
தாது உப்புகள் & வைட்டமின்கள்
7.மக்னேசியம்                                                 --- 34 mgm 
8.பொட்டாசியம்                                             --- 291 mgm 
9.பாஸ்பரஸ்                                                     --- 139 mgm 
10.வைட்டமின் பி -6 (பைரிடாக்சின்)                                      --- 0.480 gm 
11.வைட்டமின் பி-1 (தயாமின்)

சக்தி :-

மற்ற பருப்புகளை விடவும் பிஸ்தாவில் மிகக்குறைந்த அளவே கலோரி (159) இருக்கிறது எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை தைரியமாக சாப்பிடலாம் ஒப்புமையாக மகடாமியா பருப்பில் 202 கலோரியும்,குவையானா (பேக்கன்)பருப்பில் 192 கலோரியும் இருக்க பிஸ்தாவில் மிக குறைந்த கலோரியே  இருக்கிறது 

ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் (Antioxidant)

ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் உடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பாக இதயம் பலப்படுவதற்கும் தேவையற்ற ஆக்ஸீகரண கழிவுகள் தேங்கி உடலில் புற்று நோய் உண்டாகாமல் தடுப்பதற்கும் அத்தியாவசியமானவை.வாதுமை மற்றும் முந்திரி பருப்புகளை விடவும் பிஸ்தாவில் இவை அபரிமிதமாக இருக்கின்றன.
உதாரணமாக பிஸ்தாவில் அடங்கி இருக்கும் ஆக்சிசீகரண எதிர்ப்பான்கள் :-
1.ஆல்பா டோக்கோபெரால் (வைட்டமின் -இ )
2.பைட்டோ ஸ்டெரால்கள் 
3.சாந்தோப்பில் கரோட்டினாய்டுகள் (கண்கள் ஆரோக்கியத்திற்கு )
28 பேர்கள் மாதிரிகளாக அடங்கிய ஒரு சிறு ஆய்வில் அவர்களுக்கு 1 அல்லது 2 சர்வீஸ் (1 அல்லது 2 கை  பிடி) பிஸ்தா பருப்பு ஒரு மாதம் சாப்பிட கொடுத்ததில் அவர்களுக்கு மற்ற எவரையும் விட தேவையான அளவு ஆக்ஸீகரான எதிர்ப்பான்கள் (லுடீன்,ஸீ சாந்தின்,ஆல்பா-கரோட்டின்,மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை உடலில் கூடி இருப்பது தெரிய வந்தது 
American Ophthalmic Assocition சிபார்சுபடி லூடின் மற்றும் சீசாந்தின் போன்ற ஆக்ஸீகரண எதிர்ப்பான்கள் முதுமையில் உண்டாகும் பார்வை கோளாறுகளுக்கு மிகவும் சிறந்தவை ஆகும் 

ஜீரண மண்டலம் :-

பிஸ்தாவில் இருக்கும் அதிக நார்சத்து குடலினுள் உணவை மிக எளிதாக இறங்க செய்வதால் மலச்சிக்கலுக்கு பிஸ்தா மிகவும் உகந்த தாக்கும் 
மேலும் பிஸ்தாவில் இருக்கும் பிரி பையாட்டிக்குகள் குடலில் நல்ல நுண்கிருமிகள் உண்டாக்கி செரிமான சக்தியை அதிகரிக்கும் 
 

புதன், 22 ஆகஸ்ட், 2018

அன்னமிட்ட வீட்டில் கன்னமிட்ட கதை

கேரளாவின் இந்த சோகம் இந்தியாவின் ஒருமைப்பாட்டு நிலைக்கு சில பாடங்களை தந்திருக்கிறது
கேரளாவின் இந்த நிலைக்கு இனம் மதம் மொழி பிராந்தியம் அத்தனையையும் தாண்டி அனைத்து மாநிலங்களும் போட்டி போட்டுகொண்டு உதவிக்கரம் நீட்டுகின்றன
ஆம் வேற்றுமையிலும் ஒற்றுமை இனம் வேறு மொழி வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதர்களே என்ற மெய்சிலிற்கவைக்கும் பாடங்கள் அழகான பாடம்
ஆனாலும் இந்த பாடத்தை கேரளத்தில் உள்ள சிலர் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டார்கள் பாப்போம்
அடுத்தவரின் உதவி மிகவும் கேரளாவுக்கு தேவைப்படும் இந்த நேரத்தில் இன்னமும் அவர்கள் தங்களது இன மொழி   பிராந்திய துவேஷங்களை  விட்டுக்கொடுக்கவில்லை என்பது போல் தான் தெரிகிறது
குறிப்பாக அண்டை மாநிலமான தமிழகம் அரசாங்க ரீதியாக 10 கோடி ரூபாயை தந்ததோடு அதன் மக்களும் தங்கள் சகோதர மலையாளிகள் படும் அவஸ்தைகளை ஊடகங்கள் மூலம் அறிந்து பணமாகவும் உணவுகளாகவும் உடைகளாகவும் மருந்துகளாகவும் தனிப்பட்ட முறையில் லாரிகளில் வேன்களிலும் கண்டைனர்களிலும் அனுப்பி வைக்கும் காட்சிகளை காணும் போது தமிழரின் இந்த ஈகை இரக்க குணம் கண்டு ஒவ்வொரு தமிழனும் பெருமை பட வேண்டும்  
இந்த நிலையிலும் இன்று பக்ரீத் பெருநாளும் அதுவுமா கேரளாவிலிருந்து கன்னியாகுமரிக்கு இரவில் வந்த ஒரு லாரியில் நிறைய கோழி கழிவுகளை வழமை போல் தமிழ்நாட்டை குப்பை தொட்டியாக எண்ணி கொட்டுவந்த நிலையில் பொது மக்கள் மூலம் தகவலறிந்த போலீசார் மடக்கி பிடித்திருக்கின்றனர் 
இது மட்டுமல்ல இடுக்கி அணை நிரம்பி வழிந்து முற்றிலும் திறந்து விடப்பட்டு இடுக்கி மாவட்டம் முழுதும் வெள்ளக்காடான நிலையில் முல்லை பெரியார் அணை யில் தேங்கியுள்ள 142 அடி நீர் எங்களை பயமுறுத்துகிறது எனவே அதை 139 அடியாக குறைக்க வேண்டும் என்று ரசூல் ராய் என்பவர்  சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு வேண்டாத அரசியல் செய்திருக்கிறார் இதையே கேரளா முதல்வரும் தமிழக முதல்வருக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார்
இவர்களுக்கு மன சாட்சி மட்டுமல்ல முல்லைப்பெரியாறு அணையை திறந்துவிட்டால் அந்த நீரும் ஏற்கனவே வெள்ளக்காடாக மிதக்கும் இடுக்கியை நோக்கித்தானே பாயும் என்ற சிற்றறிவு கூட இல்லையே
அன்னமிட்ட வீட்டில் கன்னமிட்ட கதை தானே இது
 

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

கீழ்ப்பாக்கமும் தமிழகமும்

இந்த மாநில அரசியலில் ஓரளவு மாநில அக்கறையுடன் இருப்பவர்கள் என்று பார்த்தால் அது திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி இந்த நாலு கட்சிகளையும் தவிர்த்து மற்ற கட்சிகளில்தான் இருக்கிறார்கள் போல் தெரிகிறது
அவர்களின் தினசரி அறிக்கைகள் தொலை காட்சி பேட்டிகள் தன்னிலை விளக்கங்களை கேட்கும் போதும் பார்க்கும் போதும் அப்படிதான் தோன்றுகிறது அதில் உண்மை இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்
ஆனால் நிச்சயமாக மேலே குறிப்பிட்ட அந்த நாலு கட்சிகளுக்கும் ஆட்சியையும் அதிகாரத்தையும் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தை தவிர சுத்தமாக மாநில அக்கறை என்பது கிஞ்சிற்றும் கிடையாது
ஒரு பக்கம் திமுகவும் அதிமுகவும் கூட்டு களவாணிகள் என்றால் மறு பக்கம் காங்கிரசும் பிஜேபியும் கூட்டு களவாணிகள்
இவர்கள் தங்களுக்குள் திட்டுவதும் சண்டை போடுவதும் ஏதோ ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் Professional-Agreement-
மற்றபடி நான் அடிப்பதை போல் அடிப்பேன் நீ அழுவதைபோல் அழு கொஞ்சம் உனக்கு கொஞ்சம் எனக்கு என்ற அடிப்படைதான்
பிஜேபிக்காரன் மசூதியை உடைதான் காங்கிரஸ்காரன் அதை கட்டி தரவே இல்லை
அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆட்சி செய்தார்கள் ஏரிகள் குளங்கள் என்று சமமாகவே பங்கு போட்டார்கள் கட்டுமானங்களும் அடுக்கு மாடிகளும் கட்டினார்கள் ஆனால் செப்பனிடவில்லை தூர்வாரவில்லை
மெரினா பீச்சை தங்கள் தலைவர்களின் நினைவிடங்களுக்காக பங்கு போட்டுக்கொண்டார்கள்
ஸ்டெரிலைட்டை நீதான் கொண்டு வந்தாய் இல்லை நீதான் என்று சிண்டைபிடித்து கொண்டார்கள் கடைசியில் இரண்டு பேரும் சேர்ந்துதான் என்ற உண்மை வெளியாயிற்று
ஸ்டெரிலைட்டுக்கு ஜெயலலிதா என்றால் கூடன்குளத்திற்கு ஒரு கருணாநிதி
குடி என்ற பிள்ளையை திமுகதான் பெற்றது என்றால் அதை வளர்த்து ஆளாக்கி டாஸ்மாக்கில் குடிவைத்தது அதிமுகத்தானே
இப்படித்தான் போகிறது அந்த நாலு களவாணிகளின் சேட்டைகளும்
ஆகவே தமிழர்களே 1967-இல் ஒரு நாற்பது வருட நல்லாட்சிக்கே சலிப்படைந்த நீங்கள் இந்த ஐம்பது வருட திராவிட ஆட்சியில் சலிப்படையாதது ஏன்?
அன்று காமராஜரோ பக்தவச்சலமோ உங்கள் நலன்களையும் செல்வங்களையும் கொள்ளை அடிக்கவில்லை ஆனால் நீங்கள் சலிப்படைந்தீர்கள் 
ஆனால் இன்று இந்த திராவிட ஆட்சியில் மணல் கொள்ளை மட்டுமல்ல ஒட்டு மொத்த மாநிலமே கொள்ளை போகிறது ஆனால் நீங்கள் சலிப்படையவில்லையே ஏன்?
கீழ்ப்பாக்கத்தில் இருப்பது ஒரு மெண்டல் ஹாஸ்ப்பிட்டால்தான் மொத்த மாநில மக்களையும் அங்கு கொண்டு பொய் அடைப்பது கஷ்டமே

அலோபதி மருத்துவம் -எச்சரிக்கை

ஆங்கில மருந்துகள் -கவனிக்க வேண்டியவை  அலோபதி மருத்துவத்தில் உள்ள வரம்புகள் என்ன? அலோபதி மருத்துவத்தின் அபாயங்கள் 1.தீங்கு விளைவிக்கும் இடைவி...